உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Sunday, January 07, 2007

சிவப்பதிகாரம் Mannarkudi Kalakalaka Lyrics


திரைப்படம் : சிவப்பதிகாரம் (2006)
இசை : வித்யாசாகர்
இயக்கம் : கரு பழனியப்பன்
பாடியவர்கள் : மாணிக்கவிநாயகம,ராஜலஷ்மி சின்னப்பொண்ணு
நடிப்பு : விஷால்,மம்தா மோகன்தாஸ்
இயற்றியவர் : பா.விஜய்

வரிகள்:

ஆண்
ஆடாதவண்டியில அதிராத கொண்டையில .......
பூவான பூ முடிஞ்சு அமுசவள்ளி வந்திருக்கா
ஊரு ஆம்பளைங்க பத்திரம்யா

பெண்
மன்னார்குடி கலகலக்க மதுரஜில்லா மணமணக்க
ஆண்டிபட்டி சிலுசிலுக்க அரசம்பட்டி கமகமக்க

ஆண்
ஏ தேனியெல்லாம் தகதகக்க வீரபாண்டி கிறுகிறுக்க
சின்னமனுர் சிறுசிறுக்க கம்பமெல்லாம் கதகதக்க

பெண்
போடியுந்தான் பொசபொசக்க பெரியகுளம் கிசுகிசுக்க

ஆண்
ஏ வத்தல் குண்டு வெட வெடக்க வாடிப்பட்டி படபடக்க

பெண்
ஏ உசிலம்பட்டி உச்சுக்கொட்ட சேடப்பட்டி நச்சுக்கொட்ட

ஆண்
கலிங்கப்பட்டி கரிச்சுக்கொட்ட கரியப்பட்டி
வேர்த்துக் கொட்ட

பெண்
திருபுவனம் சொக்கி நிக்க சிவகங் திக்கி நிக்க

ஆண்
அட வருசநாடு சாய வழி வாழையூத்தும் சரிய
புளிச்சம்பட்டி காய அந்த புசலுரு கருக

பெண்
சும்மா ஆடி வந்தேன் ஆடிவந்தேன் ஆட்டம்
என் மேல பல மைனருக்கு நோட்டம்
சும்மா ஆடிவந்தேன் ஆடிவந்தேன் ஆட்டம்
இது குத்தகைக்கு குடுக்காத தோட்டம்

பெண்
ஊதா சட்ட போட்ட பய ஊர் ஊரா திரிஞ்ச பய
உச்சுக்கொட்டி பார்த்த பய ஊதாரியாநின்ன பய
கூரை எட்டி பார்த்த பய குப்புறத்தான் விழுந்த பய
ரெண்டாம் ஆட்டம் போனபய ரொம்பவுந்தான்பயந்த பய
ஆடா தின்னு வளர்ந்த பய ஆடாமலே கவுந்தபய
வேட்டி கட்ட விட்ட பய விந்தி விந்தி நடந்த பய
ஒத்த செருப்பு போட்ட பய ஒரசி ஒரசி தேஞ்ச பய
விசிலடிச்சு கிழிச்ச பய வீணாகத்தான் போன பய
சந்தைக்குத்தான் வந்த பய சங்கதிக்கு நின்னபய
அட வெடலபய ஒருத்தன் சும்மா வெட்டி பய ஒருத்தன்
தெருவில் கெடந்த பய ஒருத்தன் தன்ன மறந்த பய ஒருத்தன்
இது கடைத்தெருவே காணாத தங்கம்
இத களவாடப் போறதெந்த சிங்கம்
இது கடைத்தெருவே காணாத தங்கம்
இத களவாடப் போறதிந்த சிங்கம்

பெண்
அம்மிக்கல்லா நானிருந்தேன்
மஞ்சள் அரைக்க நீ வாரியா
நஞ்ச வெளியா நானிருந்தேன் நாத்து நட நீ வாரியா
திருவிழாவா நானிருந்தேன் உறியடிக்க நீ வாரியா
வாய்க்காலா நானிருந்தேன் வழிமறிக்க நீ வாரியா

பனைமரமா நானியிருந்தேன் கள்ளெடுக்க நீ வாரியாயா
பந்தக்காலா நானியிருந்தேன் கூரை பின்ன நீ வாரியா
கரைமேடா நானியிருந்தேன் செலம்பு சுத்த நீ வாரியா
பஞ்சாரமா நானிருந்தேன் கோழி புடிக்க நீ வாரியா
முந்திரியா காடா நானியிருந்தேன் நாவெரட்ட நீ வாரியா
நான் ராக்கு முத்து ராக்கு என்ன தொட்டுக்கத்தான் சாக்கு
அட நாக்கு முழிமூக்கு எல்லாம் நல்ல நல்ல சோக்கு
அது ஆம்பளையே பாக்காத காத்து
என்ன அப்படியே அள்ளியெடுத்து போர்த்து .............

Watch Sivapathigaaram Video Songs Here

Download Sivapadhikaaram Mp3 Here

Sivapathikaaram Movie

Mannaar Kudi Kalakalakka Mannarkudi Kalakalaka Chinnaponnu, Manicka Vinayagam, Rajalakshmi Sivapathikaaram Sivapadikaaram Lyrics Sivapathikaram Sivappathikaram Vidyasagar Vishal Mamta Mohandas Raguvaran Manivannan Kanja Karupan Mathu Balakirushnan Sujatha P.vijay


Email PostDownload this post as PDF

Related Posts by CategoriesNo comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்