உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, January 17, 2007

கத்தியின்றி இரத்தமின்றி FM Radio-வை MP3 Player-ஆக்கலாம்


காரில் FM Radio மட்டும் உள்ளோர் MP3-யை நினைத்துக்கூட பார்க்கமுடியாது.காரில் FM Radio மற்றும்
Audio CD Player உள்ளோர் தினம் புதுசு புதுசா CD எழுதிகொண்டேயிருக்க வேண்டியது தான்.நேர விரயம்.காரில் FM Radio மற்றும் MP3,Audio CD Player உள்ளோர் கூட அடிக்கடி CD எரிக்க வேண்டியுள்ளது.கூடவே டன் டன்னாய் CD களை வைத்திருக்க வேண்டும்.உராய்வுகளிலிருந்து அவைதனை பாதுகாக்க வேண்டும்.இதிலிருந்தெல்லாம் தப்பிக்க ஒரு வழி.ஸ்க்ருடிரைவரின்றி எதையும் திறக்காமல் பிளக்காமல் உங்கள் கார் FM Radio-வை MP3 Player-ஆக்கலாம்.எப்படி? தேவையானவை ஒரு ஐபாட் Ipod ($99 முதல் $250வரை) மற்றும் ஒரு FM Transmitter ($15 முதல் $85 வரை).MP3 பாடல்கள்,பாட்காஸ்ட்கள்,உரைகளை அப்பப்போ ஐபாடில் காப்பி பண்ணி காரில் ஓடவிடலாம்.ஐபாட் பாடும் பாடலை FM Transmitter-ஆனது வயர்லெஸ் வழியாக கார் FM Radio வுக்குஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் செலுத்திகொண்டேயிருக்கும்.அதாவது ஐபாடு பாடும் பாடலை FM Radio-வில் கேட்கலாம்.CD தொல்லைகள் இனி இல்லை.வீட்டிலுள்ள FM Radio-வில் கூட இந்நுட்பத்தை பயன்படுத்தலாம். ஒரு தொழில்நுட்பத்தை இன்னொரு தொழில் நுட்பம் விழுங்குவதைப் பாருங்கள்.நிற்காமல் ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும்.


Email PostDownload this post as PDF

Related Posts by Categories6 comments:

வடுவூர் குமார் said...

இதே மாதிரி ஆனால் 3 வருடங்களுக்கு முன்பு "பெல்கின்" அறிமுகப்படுத்தியது.அதில் MP3 கிடையாது.இதில் IPOD சேர்ந்திருக்கிறது.

PKP said...

தகவலுக்கு நன்றி வ.கு!!

Anonymous said...

பரவாயில்லை குமார் அவர்களே, கே.பி. அவர்கள் சொல்வதை என்னைப் போன்ற புதிதாகக் கேட்பவர்கள் அறிந்து கொள்ளட்டுமே...

கே.பி. அவர்களின் தகவலுக்கு நன்றி!

பொன்னு. கணேஷ் குமார்.
http://www.technicalganesh.com

supersubra said...

FM TRANSMITTERபெங்களூரில் சென்னையில் எலெக்ட்ரானிக்ஸ் சந்தையில் வெவ்வேறு திறனுடன் கிடைக்கிறது. விலை சுமார் 600 லிருந்து 2000 ரூபாய் வரை. பெரும்பாலும் சீன தயாரிப்புகள். இதை TV யின் ஆடியோ ஔட்டில் இணைத்து பின் fm உள்ள HEADPHONE மூலம் மற்றவர்களுக்கு தொந்தரவில்லாமல் தொலைக்காட்சியின் சப்தத்தை முற்றிலும் குறைத்துவிட்டு தனியாக கேட்டு மகிழலாம். எங்கள் வீட்டில் இதை WORLD SPACE SATELLITE RADIO உடன் இணைத்து இருக்கிறேன். வீட்டில் எல்லா அறைகளிலும் fm உள்ள SPEAKER RADIOமூலம் வீடு முழுவதும் இசைதவழ்கின்றது.

PKP said...

பொன்னு. கணேஷ் சார்!
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

கூடுதலாக பின்னூட்டத்தில் தகவல் சொல்வதில் தவறேதுமில்லை என நினைக்கின்றேன்.அந்த வகையில் சூப்பர்சுப்ராக்கு நன்றிகள் பல.

Nathan said...

http://www.meritline.com/car-fm-mp3-player---p-27263.aspx

Try this just car fm transmiter with usb,sd card.
Just $ 6.99

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்