ஐபோன் கைக்கு வந்து இன்றைக்கு ஒரு வாரம் ஆகிவிட்டது. ரொம்ப விளையாடவில்லை. USB கேபிள் கொடுத்திருக்கின்றார்கள்.எனினும் இதுவரை அதை கணிணியோடு இணைக்க வில்லை.வைரஸ் ஏதாவது வந்துவிடப்போகின்றது என்றாள் நேகா. எங்கிருந்தாலும் மெய்மறந்து யூடியூப் பார்ப்பதிலேயே சமயம் போகின்றது.3G அலைவரிசை உள்ள இடங்களில் வசிப்போருக்கு கொண்டாட்டம்தான்.(USA-ல் 3G வசதி உள்ள இடங்கள் Map இதோ).அதாவது எங்குபோயினும் அகலப்பட்டை வேகம் உங்கள் ஐபோனில் இருக்கும். 3G இல்லா இடங்களில் EDGE அலைவரிசை கிடைக்கலாம்.அது கொஞ்சம் வேகம் குறைவாய் இருக்கும். இருந்தாலும் அவ்வளவு மோசமாய் இல்லை.அப்பார்ட்மென்டில் இருக்கும் போது வீட்டு Wi-Fi-யை அது பிடித்துக்கொள்ளும். அப்படித்தான் நியூஜெர்சி மொகுலில் டின்னருக்காக போகும்போது காரின் சிடிகொத்தை மறந்துவிட்டோம். தமிழிசை இன்றி போரடித்தது. கோபாலுக்கு பட்டென ஒரு யோசனை. காரின் Ipod அடாப்டரிலேயே iPhone -ஐ செருகி நாங்கள் விரும்பி கேட்கும் தமிழ் பாடல்களை யூடியுபில் லைவாக ஓடவிட்டு DJ ஆனாள் நேகா. ஆமாம் விரல் நுனியில் உலகம்.
3G தொழில் நுட்பம் நம்மை பெரிதும் மாற்றிவிடும் போலிருக்கின்றது. இந்தியாவில் அடுத்த மாதம் வோடாபோனும் ஏர்டெல்லும் ஐபோனை அறிமுகப்படுத்துகின்றதாம். ஆனால் முக்கியமான அந்த 3G அலைவரிசை இந்தியாவில் வர இன்னும் கொஞ்ச நாள்பிடிக்கும். எப்போதோ வந்திருக்க வேண்டியது. பாதுகாப்பு அது இதுவென கூறி நம் அமைச்சர்கள் அதை தள்ளிப் போட்டுக்கொண்டே வந்திருக்கின்றார்கள்.
ஐபோன் 3G சில நிறைவுகளும் குறைபாடுகளும்.
நிறைவுகள்.
- மட மட வென அதிவேக இணையம்.
- யூடியூப் வீடியோக்கள் அட்டகாசமாய் ஓடுகின்றன.
- விரல் நுனியில் பங்கு நிலவரங்கள் மற்றும் வானிலை நிலவரங்கள்.
- Pdf கோப்புகளை படிக்க முடிகின்றது.
- Word Doc கோப்புகளை படிக்க முடிகின்றது.
- கேமரா உதவியால் நல்ல துல்லிபமான டிஜிட்டல் படங்களை எடுக்கமுடிகின்றது.அப்படியே ஆன் த ஸ்பாட்டில் மின்னஞ்சலும் செய்துவிடலாம்.
- விமானம் ஏறியதும் வயர்லெஸ் வசதியை மட்டும் அணைக்கும் வசதி.
- ஸ்கிரீன் ஷாட் எடுக்கும் வசதி.
- கான்ஃபெரன்ஸ் கால் செய்யும் வசதி.
- புளூடூத் மற்றும் விபிஎன் வசதிகள்.
- எரிச்சலூட்டும் No booting time, No logon time
- அதனால் Instant email checkup, Instant Browsing, Instant Youtube
- பல்வேறு பலரும் உருவாக்கிய இலவச ஐபோன் பயன்பாடுகள் (Updated)
- தமிழ் யூனிக்கோடு எழுத்துருக்கள் உடைந்து உடைந்து தெரிகின்றன(படம்).Safari உலாவியிலிருக்கும் Iphone emulator பொய் சொல்லுகின்றது நெஜமாலுமே.
- கேமராவில் ஸூம் வசதியில்லை (ரொம்பவும் ஆசைதான்).
- அவுட் ஆப் பாக்ஸ் ஐபோனில் வீடியோ பதிவு செய்யும் வசதியில்லை. ஆனால் அது ஏற்கனவே ஹேக்கப்பட்டு ஐபோனுக்கான வீடியோ ரெக்கார்டிங் மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கின்றன.
- GPS நீங்கள் இருக்கும் இடத்தை காட்டுகின்றது, போக வேண்டிய இடத்துக்கான turn by turn direction-ம் கொடுக்கின்றது. ஆனால் சாதாரண ஜிபிஎஸ் போல் குரல் வழி வழிநடத்தும் வசதியில்லை. இதுவும் மென்பொருள் சமாச்சாரமாகையால் எளிதில் மாற்றப்பட்டுவிடலாம்.
- கூகிள் வீடியோக்களை பார்க்க சில தந்திரங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது.
- AT&T-யை பொறுத்தவரை, ஐபோனை மோடமாக பயன்படுத்தி லேப்டாப்பில் இணையம் மேய முடிந்தால் கூட நாம் அதை செய்யக் கூடாதாம்.
- Flash நுட்ப வசதியில்லை.(Updated)
கையடக்க இந்த ஐபோன் பலருக்கும் ஒரு கியூட் கேட்ஜெட். இதுவே சற்று பெரிதாக சிறு புத்தக வடிவில் கீபோர்டு டைப்ப ரொம்ப கஷ்டப்படாத வகையில் ஒரு கேட்ஜெட் வந்தால் நன்றாயிருக்கும் என்பது பலரின் அவா. அதாவது சற்று பெரிய தட்டையான ஐபோன். ஆப்பிள் நிறுவனம் ரகசியமாய் அதற்கான புரோட்டோடைப்பில் ஈடுபட்டிருப்பது போல் தெரிகின்றது. ஐடேப்ளட் (iTablet) என்றோ அல்லது வேறெதாவது பெயரிலோ இந்த வருட இறுதிக்குள் அது சந்தைக்கு வரலாம்.
ஆப்பிள் காட்டில் மழைதான்.
குரான் தமிழ் மொழிபெயர்ப்பு இங்கே சிறு மென் புத்தகமாக. Quran Tamil Translation pdf ebook Download. Right click and Save.Download
Download this post as PDF