உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Monday, March 31, 2008

வைரஸை படைத்து...

புதிதாய் ஒரு ஆண்டி வைரஸ் ஸ்கானெரை யாரோ உங்களுக்கு அறிமுகப்படுத்தியதால் அதை இப்போதுதான் உங்கள் கணிணியில் நிறுவியிருக்கின்றீர்கள் என வைத்துக்கொள்வோம் அல்லது ஏதோ ஒரு ஆன்டி வைரஸ் ஸ்கேனர் ஏற்கனவே உங்கள் கணிணியில் ஓடிக்கொண்டிருக்கிறதென வைத்துக் கொள்வோம்.

இந்த வைரஸ் ஸ்கேனர்கள் நெஜமாலுமே உருப்படியாய் வேலை செய்கின்றனவாவென எப்படி சோதித்து பார்ப்பது?.

அதற்காக எங்காவது இலவசமாய் வைரஸ்கள் இறக்கத்துக்கு கிடைக்குதாவென்று தேடவாவேண்டும்? இல்லை.இல்லவே இல்லை.

இங்கே இருக்கின்றது அதற்கொரு தீர்வு.ஆமாம் நீங்களே ஒரு சாம்பிள் வைரசை படைத்து உங்கள் கணிணியில் இட்டு உங்கள் ஆன்டி வைரசு ஸ்கானர் நன்றாக வேலை செய்கின்றதாவென ஒரு "பிட்மஸ்" சோதனை செய்து அறியலாம்.

நீங்கள் செய்ய வேண்டியதென்ன? கீழ்க்கண்ட "சுத்தமா நமக்கு ஒன்றுமே புரியாத" எழுத்துவரிசையை நோட்பேடால் புதிதாய் ஒரு டெக்ஸ்ட் கோப்பை திறந்து அதில் சேமியுங்கள்.அவ்ளோ தான்.

X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

உங்கள் ஆன்டி வைரசு ஸ்கானர் "ரியல்டைம்" ஸ்கேனிங்கில் வல்லதுவெனில் உடனே இக்கோப்பை கண்டறிந்து உங்களை உசார்படுத்துவதோடு அதை அழித்தும்விடும். இன்னபிற ஸ்கானர்கள் கொஞ்ச நேரம் கழித்து ஸ்கான்பண்ணி வரும்வழியில் இக்கோப்பை கண்டால் "வைரசு இருக்கு டோய்"-னு அலறிவிடும்.

உண்மையில் இந்த Code வைரசோ அல்லது வேறெந்த பயப்படும் படியான விஷயமோ இல்லை.இந்த மாதிரி ஆண்டிவைரஸ் ஸ்கானர்களின் செயல்பாட்டை ஊர்ஜிதம் செய்ய அனைத்து ஆன்டிவைரசு ஸ்கானர் தயாரிப்பாளர்களும் இதை வைரசு போல பாவிக்க தங்களிடையே உடன்பாடு செய்திருக்கின்றார்களாம். மற்றபடி நான் ஒன்றும் ஹாக்கர் இல்லீங்கோ.

இந்த சாம்பிள் வைரசை கீழ்கண்ட சுட்டியிலிருந்தும் இறக்கம் செய்து கொள்ளலாம்.Try at your own risk.
http://www.eicar.org/anti_virus_test_file.htm

My 2 cents..thats all.
:)

அனார் "ஓவியம் வரையாத தூரிகை" தமிழில் கவிதை தொகுப்பு மென்புத்தகம் Anar Oviyam Varaiyadha Thoorigai Tamil kavithai thokuppu e-book Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Thursday, March 27, 2008

உலக கரன்சிகளில் தமிழ்

இந்தியா தவிர இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மொரிஷியஸ் நாட்டு கரன்சிகளிலும் தமிழ் எழுத்துக்கள் இருக்கின்றனவாம்.
இங்கே உங்கள் பார்வைக்காக அவற்றின் அணிவகுப்பு.

மேலே நீங்கள் காண்பது இலங்கை காசுவில் தமிழ்

மேலே நீங்கள் காண்பது சிங்கப்பூர் காசுவில் தமிழ்

மேலே நீங்கள் காண்பது இந்திய பணத்தில் தமிழ்

மேலே நீங்கள் காண்பது இலங்கை பணத்தில் தமிழ்

மேலே நீங்கள் காண்பது சிங்கப்பூர் பணத்தில் தமிழ்

மேலே நீங்கள் காண்பது மொரிஷியஸ் பணத்தில் தமிழ்
Tamil script in World Currencies

பாக்கியநாதன் "எளிய தமிழில் ஜாவா" ஒரு தொழில்நுட்பப் பாட நூல் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Bakiyanathan "Eliya Tamilil Java" Programming text ebook in Tamil pdf format Download. Right click and Save.Download(Oops...again link fixed


Email PostDownload this post as PDF

Wednesday, March 26, 2008

மறைத்து வாழ வேண்டும்

மனிதமென்றாலே அது கடவுளும் சாத்தானும் சேர்ந்த கலவை தானே.அதனால் தானோ என்னவோ தனது "டிஸ்கவரி ஆப் இந்தியா" புத்தகத்தில் நேரு இப்படியாகச் சொன்னார். "இயற்கையின் வலிமையான விளையாட்டுக் கருவியாகவும், இந்தப் பெரிய அண்டங்களில் ஒரு பூமி உருண்டையில் ஒரு தூசை விட அணுவை விட சிறியவனாக இருந்த போதிலும் மனிதன் இயற்கையின் வலிய ஆற்றலை வெற்றிக் கொண்டு அறிவினால் புரட்சிகளினால் அவற்றை அடிமைப்படுத்தினான். அங்கங்கே கடவுள்கள் இருந்தாலும்- இருப்பதாக வைத்துக் கொண்டாலும், மனிதனுக்குள் கடவுளைப்போல ஒன்று இருக்கின்றது. அவனுக்குள்ளே ஒருவகைச் சாத்தானும் இருக்கின்றது" எவ்வளவு சரியான வார்த்தைகள் அவை.

உதாரணத்திற்கு சிவப்பு விளக்கு எரிகிறதென வைத்துக்கொள்வோம். அதிகம் டிராபிக் இல்லாத நேரம். சிவப்பு விளக்கை மீறிச்செல்ல மனம் ஒத்துக்கொள்வதில்லையா?

என்ன...? சிலர் கொஞ்சம் அதிகமாய் கடவுளாகிவிடுகின்றனர். சிலர் கொஞ்சம் அதிகமாய் சாத்தானாகி விடுகின்றோம்.

தினமும் அழுக்காகின்றோம். அதனால் தானே தினமும் குளிக்க வேண்டியிருக்கின்றது.வேறு வழி?.

மறைக்கவேண்டிவற்றை மறைத்து காட்டவேண்டியதை மட்டும் காட்டினால் மனிதன் எப்போதுமே இப்போதும் போல் சமூக மிருகமாகவே இருப்பான்.

இப்போது கணிணியில் நாம் மறைக்க வேண்டியவற்றை பற்றி பார்ப்போம். :)

எதோ ஒரு தளத்திலிருந்து பல அரிய(?) தகவல்களை இறக்கம் செய்து வைத்திருக்கின்றீர்கள் என வைத்துக்கொள்வோம். அதை ஒரு ஃபோல்டரில் போட்டு வைத்துள்ளீர்கள். இப்போது யாரும் அந்த போல்டரை பார்த்து விடுவார்களோ என பயமாய் இருக்கின்றது. பிறருக்கு தெரியாமல் அந்த டைரக்டரியை எப்படி மறைப்பது?

இது தானே உங்கள் கவலை.விடுங்கள் இதோ இருக்கின்றது ஒரு தீர்வு.

இதை தான் நண்பர் மு.பா.நாகராஜனும் முன்பொரு முறை கேட்டிருந்தார்.

அன்புள்ள பிகேபி ஐயா,
Converting VCD to DVD குறித்த தங்கள் தகவலுக்கு நன்றிகள் பல. மேலும் ஓரு தகவல் அறிய ஆவல். நான் XP பயன்படுத்துகிறேன். என் பெயரில் உள்ள Drive or Folder முழுவதையும் Paasword கொண்டு மறைக்க அல்லது மூட ஆசை. ( I dont want to encrypt the files one by one, I just want to secure my drive or folder by the way of giving a passward. This is purely for maintaining privacy. I know there is an option in Tools/Folder optios/View/Do not show hidden files and folders. But this can easily be changed and my drive/folder can easily be viewed by othes who knows this option. Thats why I need password solution.)
முடியுமா...?


Free Hide Folder-எனும் இலவச மென்பொருள் கீழ்கண்ட சுட்டியில் கிடைக்கின்றது.அதை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவிக்கொள்ளுங்கள். பின் இம்மென்பொருள் வழி எந்த எந்த Folder-களையெல்லாம் மறைக்க வேண்டுமோ அவற்றையெல்லாம் ஒரு பாஸ்வேர்ட் கொண்டு எளிதாய் மறைத்து விடலாம்.அப்புறமென்ன எஞ்சாய்!!

Download Free Hide Folder
Product Home Page
நண்பர் KVR இப்படியாக கேட்டிருந்தார் Dear pkp, i am regular reader of your site. please more more aval vikatan recipes give me. thanking you.இதோ உங்களுக்காக சில சமையல் குறிப்புகள் தமிழில் சிறு ஈபுத்தகமாக. Samayal Kurippukal in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Tuesday, March 25, 2008

மின்புத்தகங்கள் பற்றி

இணையம் இந்த சமூகத்தில் செய்த இன்னொரு மாயாஜாலம் எங்கோ ஏதோ ஒரு மூலையில் கிடந்த ஒரு சாதாரண கலைஞனையும் ஊர் தெரிய சந்திக்கு கொண்டு வந்தது தாம்.ஏற்கனவே புகழ் பெற்று உச்சியிலிருப்போர் காப்பிரைட் பற்றி கவலைப்பட சாதாரண கலைஞனுக்கு காப்பிரைட் பெரிதாய் படவில்லை. அடையவேண்டும் என் கைங் காரியங்கள் உலகமுழுக்க அடைய வேண்டுமென ஆசைபட்டான்.

எழுதுவோன் பிலாகில் எழுதித்தள்ளினான்.
நடிப்போன் யூடியூபில் நடித்துக்காட்டினான்.
பாடுவோன் பாட்காஸ்டாக பாடித் தள்ளினான்.

அநேக புள்ளிகள் இரவோடிரவாய் பிரபலமாயினர்.காப்பிரைட் பற்றி கவலைப்பட இது தருணமில்லை என அவர்களுக்கு தெரிந்தது. போகும் போக்கில் போக விட்டு ஒரு வீச்சை அடைந்த பின் கொக்கிபிடி போட அவர்கள் காத்திருக்கின்றனர். அது தான் சரியான தருணம் என அவர்களுக்கு தெரியும். அதுவே காசாக்கும் நிமிடமும் கூட.

இங்கு நாம் வெளியிடும் ஈபுத்தகங்களின் பிண்ணணியும் அது தான்.

யாரும் இங்கு வெளியாகும் ஈபுத்தகங்களை மணிக்கூர்கணக்கில் மானிட்டர் முன் உட்கார்ந்து படிக்க மாட்டார்கள் என்பது என் எண்ணம்.

அப்படியே புத்தக ஆர்வலர்கள் முதல் பத்து பக்கங்களை படித்ததும் ஆர்வம் மிஞ்சினால் அதை காகித புத்தகமாக வாங்கிப் படிக்கவே விரும்புவரே ஒழிய எத்தனை தமிழர்கள் இன்றைய நிலையில் சோனி ஈபுக்ரீடரோ அல்லது அமேசானின் கிண்டிலோவைத்துக்கொண்டு வலம் வருகின்றார்கள்?

ஆக இங்கு கொடுக்கப்படும் புத்தகங்கள் இணைய நண்பர்களுக்கு ஒரு அறிமுகமாக கொடுக்கப்படுகின்றதே ஒழிய பிறரின் காப்பிரைட்டை திருடவல்ல.

இதை உணர்ந்து "பாரா"முகமாய் இருப்பவர் பலர்.சிலர் வருத்தப்பட்டு தங்கள் புத்தகங்களை எனது தளத்திலிருந்து நீக்கவும் கேட்கின்றனர்.அவர்களின் மென்புத்தகங்களை உடனடியாய் நீக்கவும் செய்து விடுகின்றேன்.

இனிமேலும் யாராவது தனது புத்தகங்களை நீக்ககோரினால் உடனடியாக நீக்கம் செய்துவிடுவேன்.

இங்கு பாருங்கள்
திரு.கே.செல்வப்பெருமாள் போன்ற எழுத்தாளர்கள் என்ன சொல்கின்றார்கள் பாருங்கள்.
அவரது வார்த்தைகள் இதோ.

"அன்புள்ள பி.கே.பி.
என்னுடைய இ-புத்தகமான மே தினத்தை தங்களது தளத்தில் கொடுத்துள்ளமைக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புத்தகம் குறித்த கருத்துக்கள் ஏதாவது வந்தால் எனக்கு அதனை மெயில் செய்து உதவிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
கே. செல்வப்பெருமாள்
http://santhipu.blogspot.com
email: ksperumal@gmail.com, ksp_chennai@yahoo.co.in"


நன்றி செல்வப்பெருமாள் சார். உங்கள் "மேதினம்" புத்தகம் நிச்சயம் அநேகருக்கு உணர்வூட்டுதலாய் இருந்திருக்கும் என நம்புகின்றேன்.

சிலர் என்னிடம் கேட்டிருந்தார்கள்."நீங்கள் எப்படி இப்புத்தகங்களை PDF-ஆக மாற்றுகின்றீர்கள்?"

நான் இதுவரை எந்த ஒரு புத்தகத்தையும் ஈபுத்தகமாக ஸ்கான் செய்ததில்லை.அதற்கு சமயம் கிடைப்பதுவும் இல்லை.ஆங்காங்கே இணையத்தில் கிடைப்பவற்றை இங்கே தொகுத்தளிக்கின்றேன். அவ்வளவே.(இதில் நண்பர் தமிழ்நெஞ்சம் அவர்கள் இணையத்தில் அங்குலம் விடாமல் தேடி கண்டுபிடித்தவைகளும் அதிகம் உண்டு.இந்நேரத்தில் அவருக்கும் என் நன்றிகளை சொல்ல கடமைபட்டுள்ளேன்.)

ரொம்ப ஆர்வமாய் நான் உருவாக்கிய ஒரே சிறு மென்புத்தகம் சிறுவர்களுக்கான தமிழ் ரைம்ஸ் மென்புத்தகம் மட்டுமே.

பல புத்தக காதலர்களும் அவற்றின் மேலுள்ள அளவுகடந்த ஆர்வத்தாலும் வெறியாலும் காலப்போக்கில் அழிந்து போகாதிருக்க ஒருவேளை அவற்றை ஸ்கான் செய்கின்றார்கள் போலும். இதனால் பிற நூல்விரும்பிகளும் பயனடைகின்றார்கள்.

"எனது முதல் கதை வெளியான அந்த சிவாஜி பத்திரிகையின் காப்பியை யாராவது ஒருவர் கொண்டு வந்து தந்தால் என் சொத்து முழுவதையுமே எழுதிகொடுப்பேன்" என ஓரு முறை எழுத்தாளர் சுஜாதா அவர்கள் சொன்னதாக எங்கோ படித்தேன்.

ஒருவேளை கணிணி அக்காலங்களில் இருந்திருந்தால் அப்பத்திரிகை ஸ்கேனாகி எங்காவது இருந்திருக்குமோ?

கொஞ்சம் சீரியசான பதிவு.அதனால் மேலே படங்கள் எல்லாம் ஒரு ரிலாக்ஸேசனுக்காக ஜோக்குகளாகிப் போயின.

இந்திய தேசிய கீதமான "ஜன கன மன" இங்கே Mp3 வடிவில உங்களுக்காக. Indian National Anthem Jana gana mana in Mp3 format. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Sunday, March 23, 2008

மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ்

என்னிடம் அவ்வப்போது கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று "எப்படி சார் மைக்ரோசாப்ட் Word டாக்குமென்டில் தமிழில் எழுதறது? தமிழில் எழுதினாலோ அல்லது வேறெங்காவதிருந்து காப்பி பேஸ்ட் பண்ணிணாலோ ஒரு மாதிரி எழுத்துக்கள் கட்டம் கட்டமாய் வருகின்றதே.இதற்கு ஒரு வழி சொல்லுங்கள் என்பதாகும்."

சமீபத்தில் இது பற்றி நண்பர் Purushothaman.M.S. என்னிடம் விசாரித்திருந்தார்.
"வணக்கம், விகடனில் தற்போது UNICODE முறையில் மாற்றம் செய்துள்ளனர். அதனால் தற்சமயம் கட்டுரைகளை MSWORD ல் COPY செய்தால் சரியாக தெரியவில்லை. Find the Attachment File and Give me the Solutions."

மேலே படத்தில் நீங்கள் காண்பது போல தமிழ் எழுத்துக்கள் Microsoft Office Word-ல் அவருக்கு கட்டம் கட்டமாய் தெரிந்தது.உங்களுக்கும் இதே பிரச்சனை இருந்தால் இதோ தீர்வு.

இங்கு உங்களுக்கு தேவை மைக்ரோசாப்டின் இலவச மென்பொருளான Tamil Indic IME.இதை நீங்கள் கீழ்க்கண்ட சுட்டியிலிருந்து இறக்கம் செய்து கொள்ளலாம்.இதை நிறுவியவுடன் தமிழ் தமிழாய் Office Word-ல் உங்களுக்கு தெரிந்து உங்களை நிச்சயம் களிப்பூட்டும்.

Download Tamil Indic IME


இந்த மென்பொருளின் இன்னொரு சிறப்பு இது தன்னகத்தே கொண்டிருக்கும் தமிழ் விசைபலகைகள் தாம்.
இம்மென்பொருள்
Tamil Transliteration
Tamil 99 Keyboard
Inscript Keyboard
போன்ற மூவகை கீபோர்டுகளை கொண்டுள்ளது.

அதை நீங்கள் பெற கீழ்கண்டதை செய்ய வேண்டும்.
Click Start->Settings-> Control Panel->Regional and Language Options-> Languages-> Details-> Add-> Tamil


மேற்கண்ட படியை நீங்கள் செய்து முடித்ததும் படத்தில் நீங்கள் காண்பது போல் உங்கள் மானிட்டரின் வலதுகீழ் பகுதியில் EN-English அல்லது TA-Tamil ஒரு தெரிவு இருக்கும்.அதில் தமிழை தெரிவு செய்ததும் கீழே படத்தில் காண்பது போல் ஒரு மினி கீபொர்டு படம் ஒன்று தோன்றும்.



அதை கிளிக்கி மேல்மூன்றில் ஒரு தமிழ் கீபோர்டை தெரிவுசெய்து கொள்ளலாம்.தமிழில் டைப்பி மகிழலாம்.

Tamil 99 Keyboard மற்றும் Inscript Keyboard போன்றவை ஆன்ஸ்கிரீன் கீபோர்டும் இங்கு கொண்டுள்ளது நிச்சயம் நண்பர் சுந்தரராஜன்,நெய்வேலி போன்றோர்களை மகிழ்ச்சி படுத்தும்.


ரமணி ராமச்சந்திரன் நாவல் "பார்க்கும் விழி நான் உனக்கு" இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Ramani Chandran Paarkum Vizhi Naan Unnakku Novel in Tamil pdf ebook Download. Right click and Save.Updated with a complete version.Download


Email PostDownload this post as PDF

Saturday, March 22, 2008

அருமை காளையே

நியூயார்க், நியூஜெர்சி பகுதிகளில் மட்டும் சஞ்சரித்துக் கொண்டிருந்தேன். ஒரேயடியாய் 750 மைல்கள் தொலைவிலுள்ள மிச்சிகனில் கடாசிவிட்டார்கள். 12 மணிநேர சாலை பயணம். பெரிதாய் களைப்பு ஒன்றும் இல்லை.வந்து சேர்ந்தாயிற்று.

இன்னும் கொஞ்ச நாளைக்கு இங்கு தான். மிச்சிகன் ஏரி கடல் போல் கிடப்பது பிரம்மிப்பாய் இருக்கின்றது. அமெரிக்காவை பற்றி ஏழுதி ரொம்ப நாளாகி விட்டது.ஆரம்ப காலங்களில் "அமெரிக்கா போறீங்களா?"என்கின்ற தலைப்பில் தொடர்வாய் பல பதிவுகள் எழுதினது நினைவுக்கு வந்தது.எவ்வளவாய் மாறி இருக்கின்றேன்.

"Made in China" சாதனங்களில் ஈய விஷமிருக்குமென அமெரிக்கர்கள் பயந்து போனதாலோ என்னவோ இப்போதெல்லாம் கடைகளின் பிளாஸ்டிக் சாதனங்களில் "Made in Mexico"-ன்னு பெரிதாய் போட்டு பின் "Some parts Made in China"-ன்னு சிறிதாய் லேபல் போடுகின்றார்கள்.திரைக்கு பின்னால் நடப்பது ஆள்றவனுக்குதான் தெரியும்.

தெருவுக்கு தெரு சாரைசாரையாய் வீடுகள் விலைக்கு கிடக்கின்றன.ஆனால் வாங்கத்தான் யாரும் இல்லை. சமீபத்தில் புதுவீடுகளால் உருவாக்கப்பட்ட அநேக புறநகர் நகர்கள் மனித சஞ்சாரமற்று போய் பேய்நகர்களாகிப் போயின.தேர்தலுக்கு பின் இந்த வீட்டின் விலைகள் ராக்கெட்டில் ஏறலாம்.

வீடுகள் மட்டுமே ஒப்பிட்டு பார்க்கும் போது இப்போது சீப்பாய் கிடைக்கின்றன.மற்றவை எதை தொட்டாலும் விலைவாசி ஷாக் அடிக்குது நம்மூர் போலவே.

வேலை வாய்ப்புகள் குறைந்து வருகின்றதாம்.ஆடம்பர, ஆத்திர அவசியமில்லாத புராஜெக்ட்கள் தற்காலிகமாய் நிறுத்திவைக்கப்படுள்ளன.

டிவியில் சிக்கனமாய் செலவு செய்வது எப்படி-னு வகுப்பு எடுக்கின்றார்கள்.அப்படி தான் இலவச சர்வதேச போன்கால்கள் செய்ய http://www.talkster.com பற்றி தெரிந்து கொண்டேன்.

இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை எதிர்த்து சண்டை போட்ட முன்னாள் ராணுவவீரன் கூட டொயோட்டா அல்லது ஹாண்டா பக்கமே சாய்கின்றான் என்றால் பார்த்துகொள்ளுங்கள்.நல்ல மைலேஜ் மற்றும் நோ பிராப்ளம் பிராண்ட்களாம்.

அகிம்சை வழியே எங்கள் தீர்வு என்பவர்கள் கிளின்டன்/ஒபாமா டெமாக்ரடிக்-காரர்கள்-கழுதை!
இம்சை வழியே எங்கள் தேர்வு என்பவர்கள் புஷ்/மெக்கெயின் ரிபப்ளிகன் -காரர்கள்-யானை!!
அடுத்து வருவது அகிம்சையோ இம்சையோ?

Fed இரவு பகல் பாராமல் வார நாள் வீக்கெண்ட் பாராமல் கலக்கத்தில் இருக்கின்றார்கள். ஒன்றை கஷ்டப்பட்டு சம்மாளித்து வரும் போது இன்னொன்று இடிக்கின்றது. ஸ்டாக்மார்க்கெட்டை தக்க வைக்க தினமும் எதாவது செய்து கொண்டே இருக்க வேண்டியிருக்கின்றது. கடந்த வீக்கெண்ட் ஸ்பெஷல் பியர்ஸ்டெர்ன் ஹாரரை இப்போதைக்கு அவர்களால் மறக்க முடியாது.

வல்லரசு கழுகு ஒன்று உண்மையிலேயே விழி பிதுங்கி நிற்கின்றது. நிலைமை இன்னும் மோசமாகாமல் இருக்க எல்லாருமே இறைவனை வேண்டுகின்றார்கள்.

தத்தக்க பித்தக்க வென தள்ளாடி நிற்கும் கரடியே போ போ .
எக்கனாமியை இழுத்து செல்ல அருமை காளையே வா வா .

இது தான் வால் ஸ்டிரீட் வியாபாரிகளின் முனங்கல்.
மும்பையிலும் அதுதான் கேட்கின்றது.


மைதிலியின் கவிதைகள் "இரவில் சலனமற்று கரையும் மனிதர்கள்" தமிழில் மென்புத்தகம் Maithily Iravil salanamatru karaium manithargal Tamil Kavithaikal e-book Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Wednesday, March 19, 2008

ட்ரோஜன் குதிரை பற்றிய கதை தெரியுமோ?

ஹாயாக இணையத்தை ஒரு சுற்று மேய்ந்து விட்டு, சில பல தெரிந்த தெரியாத மென்பொருள்களை விளையாட்டாக இறக்கம் செய்து இயக்கிவிட்டு தூங்கிப்போனீர்கள். திடீரென விழித்து பார்த்தால் உங்கள் கணிணி ஹார்ட்டிரைவ் லைட் மின்னி மின்னி பிஸியாக இருக்கின்றது.மோடம் லைட்டுகள் பலவாறாக மின்னிக் கொண்டே இருக்கின்றன. ஏதோ மர்மம் அங்கு நடப்பது போல் காட்டுகின்றது. நீங்கள் நினைப்பது போல் இது ஒரு சாதாரண விசயமில்லை. உங்கள் கணிணியில் என்னமோ அசாதாரணம் நடப்பதையே இது காட்டுகின்றது.உசாராக வேண்டிய தருணம் இது.Trojan Horse அல்லது மால்வேர் எனப்படும் மர்மமென்பொருள்கள் உங்கள் கணிணியிலிருந்து கொண்டே உங்களை பற்றிய தகவல்களை யாருக்கோ வழங்கி உங்கள் காலை வாரிக்கொண்டிருக்கலாம். எனவே இணைய இணைப்பை உடனே துண்டித்து நீங்கள் உங்கள் கணிணியை வைரஸ் ஸ்கேன் செய்தாக வேண்டும்.

அது சரி, இது மாதிரியான நமது கணிணியின் உள்ளிருந்தே நமக்கு உலைவைக்கும் மென்பொருள்களுக்கு ட்ரோஜன் ஹார்ஸ் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா? அதற்கு சுவையான கதை ஒன்று உள்ளது.

கிரேக்க இதிகாசக் கதை ஒன்றின் படி, கிரேக்க தேசத்து அழகியான கெலனையும் அந்நாட்டின் செல்வங்களையும் ப்ரயம் மன்னனின் மகனான பாரீஸ் என்னும் இளவரசன் தன் ட்ரோஜன் நகருக்குக் கடத்திச் சென்றுவிட்டான். இதனால் கிரேக்கர்களுக்கும் ட்ரோஜனியர்களுக்கும் இடையே கடும் யுத்தம் வந்தது. 12 வருடங்கள் நீடித்த இப்போரை வெல்வதற்கு
கிரேக்கர்கள் ஓர் தந்திரத்தைக் கையாண்டனர். அடியில் சக்கரம் வைக்கப்பட்ட ஓர் பிரமாண்டமான மரக்குதிரையைச் செய்து அதன் வயிற்றுக்குள் போர்வீரர்களை நிறைத்து வைத்து அதைபோர்க்களத்துக்கு இழுத்துச் சென்றனராம். போர் நடந்து கொண்டிருந்தபோது கிரேக்கர், குதிரையைக் போர்களத்திலேயே விட்டு விட்டு தோற்றுப் போனவர்கள் போல் ஓடிவிட்டனர்.இதனைக்கண்ட ட்ரோஜன் வீரர்கள், கிரேக்கர்கள் தோற்றுப்போய்விட்டதாக நினைத்து குதிரையை தமது பாதுகாக்கப்பட்ட நகருக்குள் இழுத்துச் சென்று தமது வெற்றியை விமர்ச்சையாக கொண்டாடினர்.ஒரேயொரு குருட்டு மதகுரு மட்டும் அதன் உள்ளே ஆபத்து ஒளிந்திருக்கிறது என்று கத்தினானாம். யாரும் அவன் பேச்சைச் சட்டை பண்ணவில்லை. குடியும் கூத்துமாக இரவு முழுவதுமாக கொண்டாடிய அவர்கள் தூக்கத்தில் வீழ்கையில் கிரேக்க வீரர்கள் குதிரையின் வயிற்றை விட்டு வெளியே வந்து ட்ரோஜன் வீரர்கள் அனைவரையும் கொன்று அந்நகரைத் தீவைத்து எரித்தனராம். கெலன் மீட்கப்பட்டு அவள் கணவன் மெனலசிடம் கொண்டு செல்லப்பட்டாள் என கதை செல்கின்றது.

ஆக கரு என்னவென்றால் நம் ஆன்டிவைரஸ் மென்பொருள்கள் "உள்ளே ஆபத்து ஒளிந்திருக்கிறது" என்று எப்பவாவது கத்தினால் உடனே நாம் உசாராக வேண்டுமாக்கும்.

மவுனம் வெல்லும் "நேரம் வரும்; அப்பொழுது, எங்களது மௌனம் மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். இன்‹று, நீங்கள்Ÿ எங்கŸள் குரலை நெறிப்பதை விட" என அட்டகாசமாய் ஆரம்பிக்கிறது இந்த புத்தகம் கே.செல்வப்பெருமாள் "மேதினம்" நூல். இங்கே தமிழில் அந்நூல் சிறு மென் புத்தகமாக. K.Selvaperumal - May Day Dinam in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Thursday, March 13, 2008

பாட்டியின் கணக்கு

"எப்பாவூ! என்ன நகநட்டா வாங்கப் போற,இப்ப வாங்காத, பொங்கலு கழிஞ்சு வாங்கு.கூடுன வெல அப்ப கொறஞ்சு வரும்.இந்த கெழடு அனுபவஸ்தி சொல்றேன் கேளூ"-ன்னு அந்த வயதான பாட்டி அப்போது சொன்னது ஒன்றும் தப்பாய் தெரியவில்லை. அவளை பொறுத்தவரை அவள் காலத்திலெல்லாம் அப்படிதான் இருந்து வந்திருக்கின்றது. பொங்கல் தீபாவளி வந்தால் கல்யாணகாலங்கள் வந்தால் சில சரக்குகளின் விலை கூடுவதும் அப்புறம் குறைவதும் நடந்து வந்திருக்கின்றது.

இன்றைக்கோ நிலைமை வேறு.நம்மூர் நிலவரங்களால் மட்டுமல்ல பூமியின் கடைகோடியில் எங்கோ யாரோ ஒருவர் கூட்டம் போட்டாலும் தங்கம் விலை ஏறுகின்றது.
கச்சா எண்ணை விலை ஏறுதாம். அதற்கு தங்கம் என்ன செய்ததாம்.

நம்மூர் அரசியல் நிலவரங்கள் மும்பை பங்கு சந்தையை சிறிதாய் ஆட்டுகின்றது என்பது உண்மையே.என்றாலும் அசலூர் சந்தை நடப்புகள் இன்னும் பெரிதாய் ஆட்டுவிக்கின்றது.

எக்கனாமியை உசுப்பேத்த,இந்த வருடம் வரி செலுத்தும் அமெரிக்க வாழ் மக்களுக்களுக்கெல்லாம் 600 டாலர்களை அமெரிக்க அரசு இலவசமாய் கொடுக்கின்றது. கணவன் மனைவி வேலைபார்த்து அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருந்தால் 1500 டாலர்கள் வரை அது வழங்குகின்றது

மேலும் எக்கனாமியை உசுப்பேத்த அமெரிக்கா நேற்று $200 பில்லியன் டாலர்களை வங்கிகளில் விடுவதாக (அதாவது அச்சடிப்பதாக) அறிவித்தது. அதனால் நேற்று புசுபுசுவென ஏறிய Dow இன்று பிசுபிசுக்கின்றது.

இதுமாதிரியான தற்காலிக பொருளாதார உசுப்பேற்ற தீர்வுகள் எங்கு போய்விடுமென யாரும் கவலைப்படுவதாய் தெரியவில்லை.

நம்மூரின் பணவீக்கம் 5 சதவீதம்.

பொறாமைநாடுகளின் சதியால் ஆயிரம் ஆயிரம் கோடி போலி இந்திய பணங்கள் அசல்போலவே அச்சடிக்கப்பட்டு இந்தியா வந்தால் அது இன்னும் கூடும்.

அமெரிக்கா பண்ணுவது போல் இஷ்டத்துக்கும் டாலர் அச்சிட்டால் அது ஜிம்பாவேயின் இன்றைய நிலை போல் பணவீக்கம் அதாவது Inflation 100,580 சதவீதம் ஆனாலும் ஆகும்.

அப்போது ஒரு சீப்பு வாழைப்பழம் வாங்க நீங்கள் மேலே படத்தில் காண்பது போல் ஆயிரம் ஆயிரம் நோட்டுகள் எண்ண வேண்டி வரும்.

பொங்கலுக்கு பின் பாட்டி சொன்னது போல் கடைசியில் தங்கம் விலை குறையவில்லை. காலம் மாறிப்போச்சி பாட்டி-ன்னு பாட்டியிடம் சொன்னால் பாட்டிக்கு கோபம் வருகின்றது.


தமிழில் நகைச்சுவை தினமலர் ஜோக்ஸ் இங்கே சிறு மென் புத்தகமாக. Dinamalar Jokes in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Wednesday, March 12, 2008

நமக்குள்

இங்கே பக்கத்தில் நீங்கள் படங்களில் காணும் அபார அனிமேசன் அசைவுகள் GIF கோப்புகளுக்கேயுரியன.
நண்பர் வால்பையன் கேட்டிருந்தார்.
GIF பைலை JPEG ஆக மற்ற முடியுமா?


இது பெரிய காரியமல்லவே.எல்லா கணிணியிலும் இருக்கும் Paint எனும் மென்பொருளால் நீங்கள் குறிப்பிட்ட GIF பைலை திறந்து Save as JPEG-னு கொடுத்தால் முடிஞ்சுபோச். அல்லது நண்பர் Jafar Safamarva சொன்னவழியிலும் முயலலாம்.அவர் தீர்வு இதோ"GIF பைலை JPEG ஆக மாற்றுவதற்கு தங்களிடம் Microsoft office Picture Manager இருப்பின் அதில் file+Export+Export With theis file format என்பதை முயற்சிக்கவும்."
நன்றி Jafar Safamarva.

ஆனால் ஒன்று, மேலே நீங்கள் காணும் கூலான, GIF கோப்புகளுக்கே உரித்தான அனிமேஷன் அசைவுகளை இழக்க நேரிடும். பல படங்களை அடுக்கிவைத்துதானே இம்மாதிரியான GIF கோப்புகளை உருவாக்குகின்றார்கள்.ஒரு JPEG கோப்பால் ஒரு படம் மட்டும் தான் காட்ட முடியும்.அதுவால் Gif கோப்புபோல் பல படம் ஓட்டி மாயாஜாலம் செய்ய முடியாது.

நண்பர் arstudio120 கேட்டிருந்தார்
How to free download e-books in google books website....any illegal software here?...

கூகிளின் புக்ஸ் தளம் http://books.google.com/ லட்சக்கணக்கான ஸ்கேன் செய்யப்பட்ட புத்தகங்களைக் கொண்டது. தினமும் புதிது புதிதாய் ஸ்கான் செய்து இணைஏற்றம் செய்து கொண்டே இருக்கின்றார்கள். அங்கு பெரும்பாலான புத்தகங்களும் பழைய காப்புரிமை காலம் தாண்டியவையே அல்லது யாரும் உரிமைகொண்டாடாத புத்தகங்கள் தாம். இவற்றை நாம் அங்கிருந்து இறக்கமும் செய்துகொள்ளலாம்.முன்பு ஒருமுறை நான் இப்பதிவுகளில் அறிமுகப்படுத்திய P Percival 6000 Tamil Proverbs with English Translation .pdf என்ற பழமையான தமிழ் நூல் இங்கிருந்தே சுடப்பட்டது.மற்றபடி பதிப்புரிமை பெற்ற புத்தகங்கள் சில பக்கங்களே சாம்பிளுக்கு கொடுத்திருப்பார்கள். வாங்கி படிக்க வேண்டுமாக்கும். எனினும் இந்த புராஜெக்ட் கூகிளின் விவாதத்துக்குரிய புராஜெக்ட்களில் ஒன்றே.

நண்பர் மணிவண்ணன் கேட்டிருந்தார்
hi PKP
i want to change old black and white image to color any easy and freeware tools on web? if not how to convert in photoshop.


அதென்னமோ இதுவரைக்கும் கணிணியில் வண்ணப்படங்களை கருப்பு வெள்ளையாக்குதல் மட்டுமே ரொம்ப சுலபமாய் இருந்து வந்திருக்கின்றது. பழைய கருப்பு வெள்ளை போட்டோக்களை கலர் போட்டோக்களாக மாற்ற ஒற்றை சொடுக்கு மென்பொருள்கள் இன்னும் சந்தையில் வரவில்லவே.கொஞ்சம் வியர்வை சிந்த வேண்டி இருக்கின்றது.போட்டோஷாப்பில் மெனக்கெட சமயமிருந்தால் எல்லாமே முடியும்.கீழே அதற்கான வழி வீடியோ டெமோ வாக.

போட்டொஷாப் வாங்க காசில்லையா? விடுங்க இலவசமாய் கிடைக்குது GIMP.(GNU Image Manipulation Program) இதைவைத்தும் சூப்பராய் படங்களில் புகுந்து விளையாடலாம்.
வண்ணமயமான பூமியை பார்க்கும் போது கடவுளும் அதை படைக்க போட்டொஷாப் தான் பயன்படுத்தியிருப்பார் போலிருக்கின்றது.


Photoshop: Black And White To Color




நண்பர் Nijam கேட்டிருந்தார்
தகவல் களஞ்சியம் பி.கே.பி. தளம் என்றால் மிகையாகாது. பி.கே.பி சார் Windows Administrator க்கு உரிய Windows 2003 முழுமையான கைடு(ஆங்கில வடிவில்)மென்புத்தகம் ஏதாவது இருந்தால் வெளியிடுங்கள் சார் .


இதோ (MCSE) - Mastering Windows Server 2003.pdf

நண்பர் MuPa.Nagarajan கேட்டிருந்தார்
Is there any freeware available for converting vcd to dvd...

ஓ இருக்கே,
முதலாவது உங்கள் VCD யிலுள்ள .dat கோப்புகளை Super எனும் மென்பொருளால் .Mpeg-க்கு மாற்றவேண்டும்.

பின் கீழ்கண்ட DVD Flick எனும் இலவச DVD உருவாக்குவோனை பயன்படுத்தி உங்கள் .mpeg-யை டிவிடி-யாக எரிக்கலாம்.ரொம்ப சிம்பிள்.
Download DVD Flick
DVD Flick-கை பயன் படுத்துவது எப்படி என இங்கே ஒரு அருமையான கையேடு படிப்படியாக படத்துடன்.
DVD Flick Guide

ரமணி சந்திரன் நாவல் "தண்ணீர் தணல் போல் தெரியும்" இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Ramani Chandran Thannir Thanal Pol Therium Tamil Novel pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Sunday, March 09, 2008

நான்கு ஆண்டுகள்

வாய்க்காகவும் வயிற்றுக்காகவும் செய்யப்படும் அன்றாட வேலைகளுக்கும் அப்பாற்பட்டு நாம் ஒவ்வொருவருக்கும் மனதை நிறைவுபடுத்தும் ஒரு பொழுது போக்கு கண்டிப்பாய் இருக்கவேண்டும் என ஒரு பெரியவர் ஒருமுறை சொன்னது நெஞ்சில் அப்படியே ஆணி அடித்தாற் போல் பதிந்து போனது.அவர் அதற்கு சொன்ன காரணம் தினசரி சிக்கல்களிலிருந்து மனது சிறிது திரும்பி இலகுவாய் இருக்கவும், ஓய்வூர்தியம் வாங்கும் காலத்திலும் நொடிந்து உட்காரவிடாமல் சுறுசுறுப்பாய் வைத்திருக்கவும் அது உதவும் என்றார்.

கால்ச்சட்டை போட்டிருந்த காலத்திலேயே தபால் தலை சேகரித்தல், நாணயங்கள் சேகரித்தல் என பல பண்ணியிருப்போம். இன்று அது ஒரு வேளை நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மைல்களுக்கங்கே ஒரு பரணில் இருந்தாலும் இருக்கலாம்.இல்லாமலும் போயிருக்கலாம்.

அப்படியே தான் பலரின் தமிழ் ஆர்வமும். யாருமே வாசிக்கப்போகாவிட்டாலும் எழுதும் ஆர்வத்தில் டைரிகளிலும் நோட்டுபுத்தகங்களிலும் எழுதி எழுதித் தள்ளி, ஊருக்கு ஊர் பழைய அட்டைப்பெட்டிகளில் சிலந்தி பின்னல்களுக்கிடையே புதைந்து போன கதைகளும் கவிதைகளும்,கட்டுரைகளும் காவியங்களும் ஆயிரமாயிரம் இருக்கும்.

இன்றைக்கு நீங்கள் சிக்கியிருக்கும் இந்த நவீன சிலந்திப் பின்னல் (Web)அநேகருக்கு ஒரு வடிகால். வலது இடதுவென வசமுள்ளோரெல்லாம் எழுதிக்குவிக்கின்றார்கள்.

நானும் அப்படித்தான்.இன்றைக்கு சரியாய் நாலாண்டுகள் ஆயிற்று.

தட்டி கொடுத்த நண்பர்கள் சிலர்.சத்தமின்றி தள்ளி நின்று பார்த்து விட்டு செல்வோர் அநேகர்.இருசாராரும் பெரிதாய் உற்சாகமூட்டுகின்றனர்,ஊக்கமளிக்கின்றனர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன் எனது முதல் பதிவையே "தமிழ் கலாசுகிறது"வென தலைப்பிட்டிருந்தேன்.தமிழ் இன்னும் ஆக்கப்பூர்வமாய் இணையத்தில் கலாச வேண்டுமென அவா.

இன்னும் ரொம்ப தூரம் போக வேண்டியிருக்கிறது.

ப்ரியன் "ஒரு நிலவில் சில நட்சத்திரங்கள்" கவிதை தொகுப்பு இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Priyan "Oru Nilavil Sila Natchathirangal" pdf Tamil poems ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Thursday, March 06, 2008

எத்தனை திறவுசொல்கள் வைத்தாய் இறைவா

அடப்பாவமே! இந்த நவீன மின்னணு உலகில் எத்தனை கடவுசொல்கள் தான் நினைவில் வைத்திருப்பதோ? வங்கி ஏடிஎம் போனால் அங்கு ஒரு கடவு சொல்.ஆன்லைன் பாங்கிங்கில் நுழைந்தால் அங்கு ஒரு கடவு சொல். கிரெடிட்கார்டு கணக்குக்குள் நுழைய இன்னொன்று.ஜிமெயில் பார்க்க இன்னொன்று.அப்பப்போ கவுந்து வயிற்றை கலக்கும் பங்கு சந்தையில் பரிமாற்றம் செய்ய இன்னொரு பாஸ்வேர்ட்.

இப்படி ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு பாஸ்வேர்ட்கள் வைத்து மறு நிமிடமே மறந்து தத்தளித்த நம்மாட்கள் அத்தனைக்கும் ஒரே பாஸ்வேர்ட் வைக்க தொடங்கினர்.அதுவும் அதிகம் போனால் குழந்தையின் பெயர், செல்ல நாயின் பெயர், காதலரின் பெயர், பிறந்த நாள், பிறந்த இடம், செல்போன் நம்பர் இதில் ஏதாவதொன்றில் நிற்கும்.

அனைத்துக்கும் ஒரே பாஸ்வேர்ட் வைத்தல் எப்போதுமே ஆபத்து தான்.எங்கோ உங்கள் திறவுசொல் தவறி கயவன் கையில் கிடைத்தால் அத்தனைக்குள்ளும் நுழைந்து கைவரிசையை காட்டி விடுவான் அவன்.

வேறென்ன தான் செய்ய?
இங்கே ஒரு தீர்வு.
சாதாரண டெக்ஸ்ட் கோப்பு ஒன்றில் அனைத்து வெவ்வேறு பாஸ்வேர்ட்களையும் எழுதி வைத்து அக்கோப்பை கீழ்க்கண்ட மென்பொருளைக்கொண்டு என்கிரிப்ட் செய்து வைத்துக் கொள்ளல் ஒரு எளிய தீர்வு.

Download Omziff

Omziff Homepage

இந்த ஓம்சிப் (Omziff) மென்பொருள் 336kb அளவே உடையதால் USB டிரைவிலும் நீங்கள் வைத்துக்கொள்ளலாம். விருப்பமான ஹைடெக் என்கிரிப்ஷன் அல்காரிதம் ஒன்றை தெரிவு செய்து கொண்டு பாஸ்வேர்ட் ஒன்றையும் கொடுக்கலாம்.

என்கிரிப்ட் செய்யப்பட்ட இந்த டெக்ஸ்ட் கோப்பை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். உங்களை தவிர வேறுயாரும் அதை திறந்து படிக்க இயலாது.

பொதுவாக இதுமாதிரி பாஸ்வேர்ட்களை ஒரு காகிதத்தில் எழுதியோ அல்லது கணிணியில் ஒரு டெக்ஸ்ட் கோப்பாகவோ தட்டி வைத்திருத்தல் எப்போதுமே நல்ல பழக்கம் இல்லை. ஆகவே கவனம் தேவை.

ஒன்றுக்கு இரண்டு முறை மேற்சொன்ன கடவுசொல்கள் அடங்கிய சாதாரண டெக்ஸ்ட் கோப்பை என்கிரிப்ட் செய்து,நிஜமாகவே என்கிரிப்ட் ஆகியிருக்கிறதாவென சோதனை செய்து சரிபார்த்த பிறகே இம்முறையை நடைமுறை படுத்தவும்.

ரமணி சந்திரன் நாவல் "தந்துவிட்டேன் என்னை" இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Ramani Chandran Thanthu Vittane Ennai Tamil Novel pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Wednesday, March 05, 2008

ஒரு என்னிலை விளக்கம்

சமீபத்தில் நான் பார்த்து மிகவும் ரசித்த படம் தான் நீங்கள் பக்கத்தில் பார்ப்பது.It says "Never Give Up" அதன் பொருள் "விடா முயற்சியை ஒரு போதும் விடாதீர்" என்பதே. இப்படத்தை அப்படி ரசிக்க ஒரு காரணமும் உண்டு.கீழே வாருங்கள்.

நான் அறிய வந்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கு அவ்வப்போது பதிவுகளாக அளிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். காரணம் "I`m learning a lot."

:)

சொல்லவரும் விஷயங்கள் பலவற்றையும் வரி வரியாக, விளக்கம் விளக்கமாக சாதகம் பாதகம் ஆய்ந்து எழுதுவதில்லை. காரணம் சமயம் இருப்பதில்லை. நாலுவரிகளில் சொல்லவந்ததை மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்து கொண்டே இருக்கின்றேன்.அந்த நாலுவரிகளில் மொத்தத்தையும் விளக்குதல் என்பது மிகக் கடினம். அந்த நாலுவரிகளையும் நாற்பது வரிகளாக்க நானூறுவரிகளாக்க உங்களுக்கு இணையம் இருக்கின்றது, கூகிள் இருக்கின்றான்.
"Please do some research by yourself."

உதாரணத்துக்கு பல இலவச மென்பொருள்களை பற்றிய அறிமுகம் முந்தைய பதிவுகளில் எழுதியுள்ளேன்.அதை எப்படி பயன்படுத்தவேண்டும் முதலான சகல விவரங்களும் இணையத்தில் தேடக் கிடைக்கின்றதே.

இங்கே கார்த்திக் என்ற ஒரு நண்பரின் கடிதத்தை பாருங்கள்.
"வணக்கம் பிகேபி அவர்களே நான் தங்களின் ஒரு பதிவை கூட விடாமல் வாசித்து விட வேண்டும் என்பதால் தான் மின்னஞ்சல் வாயிலாக பெறுகிறேன்.என்போன்ற படிக்காதவர்கள் நெறைய பேர்.தங்களின் பின்னுட்டத்தில் அடிக்கடி ஆங்கிலத்தில் எழுத வலியுறுத்துகிறார்கள்.
அப்படி ஆங்கிலத்தில் எழுதினாலும் தமிழில் எழுதுவதையும் தொடருங்கள்.நிறுத்திவிடாதீர்கள்"

இப்படிப்பட்ட என்னைப்போன்ற பட்டதாரியில்லாத சாதாரண கணிணி பயனாளர்களுக்கே இப்பதிவுகள்.

"புத்திசாலித்தனமாய்" யோசிப்பவர்கள் எடக்கு முடக்காய் கேள்விகளை எழுப்ப கணிணி வல்லுனர்களை தயவு செய்து அணுகவும்.

"kindly clarify"-என்று எனக்கு வந்த கீழ்கண்ட முகமறியாதவரின் வார்த்தைகள் தான் என்னை இங்கு இப்படி எழுத வைத்தது.இது கடந்த பதிவில் வந்த ஒரு பின்னூட்டம்.

"Every thing is ok. But what will happen if I click "no" when opening such mails that requests for "confirmation of reading the mail.kindly clarify"

எனது பதில் "Every thing has its own limitations.Isn`t it sir?"

ரொம்ப நாளைக்கப்புறமாய் இப்படி ஒரு குப்பை பதிவு.வருத்தமாய் இருக்கின்றது.

"விரல் நுனியில் குறள்" திருவள்ளுவரின் திருக்குறள் இங்கே சிறு மென்பொருளாக ஆங்கிலம் மற்றும் தமிழில். நன்றி-இளங்கோ சம்பந்தம் அவர்களின் www.suvadi.com. "Viral Nuniyil Kural" Thirukural as a small application by Elango Sampandam in Tamil and English. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Monday, March 03, 2008

இனி மறுக்க முடியாதே

கத்துக்குட்டி நண்பர் ஒருவருக்கு முக்கிய மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி இருந்தேன்.அந்த மின்னஞ்சல் கிடைக்கவேயில்லை-னு அய்யா புரூடா விட்டார்.ஆனால் அவர் அந்த மின்னஞ்சலை படித்தார் என்பதற்கு என்னிடம் சரியான ஆதாரம் உள்ளது.எப்படி?

பாஸிடம் ஒரு அனுமதிகேட்டு மின்னஞ்சலிட்டேன். படித்துவிட்டும் அவர் "ஸாரிப்பா படிக்கவில்லை"-ங்கிறார்.எனக்கே டிமிக்கியானு கேட்கலாம் போலிருந்தது.ஆமாம் அவர் படித்ததற்கான ஆதாரம் இப்போது என்னிடம் இருக்கின்றது. அது எப்படி?

வேலை வேண்டி விண்ணப்பம் ஒன்றை மின்னஞ்சல் வழி அனுப்பியிருந்தேன்.அந்த மின்கடிதம் எவராலும் படிக்கப்பட்டதும் உடனே தெரிஞ்சுக்க ஆசை. தெரிஞ்சுகிட்டேன். யாரோ இன்னைக்கு காலை சரியா 9.48 க்கு குறிப்பிட்ட IP Address-யிலிருந்து படித்திருக்கின்றார்கள்.எப்படி தெரிந்து கொண்டேன் அதை?

இதுமாதிரி மறுமுனை ஆள் உங்கள் மின்னஞ்சலை படித்ததும் நீங்கள் தெரிஞ்சுக்க ஆசையா? இதை Read Receipt Notification என்கின்றார்கள்.அதாவது மறுமுனை நபர் உங்கள் மின்னஞ்சலை படித்தவுடன் உங்களுக்கு மின்னஞ்சல் வழி தெரிவிக்கப்படும். அதை முயல இதோ சில வழிகள்.

நீங்கள் Outlook Express பயன்படுத்துபவராயின்
Go to Tools -> Options -> Receipts tab & then click on Request a read receipt for all sent messages.

நீங்கள் Thunderbird பயன்படுத்துபவராயின்
Go to Tools -> Options -> Advanced tab -> Return Receipts button -> tick When sending messages, always request a return receipt.

நீங்கள் Outlook பயன்படுத்துபவராயின்
1. Configure Read Receipt for all Mails:
Go to Tools->Options->Select Preferences Tab. Here you can find a button named Email Options. In the Email Option window, select Tracking Options.

2. Configure Read Receipt for Individual Mails:
To add a read receipt to individual mail, Select a new mail to compose. Click on the Options button.Check the option-Request a read receipt for this message. You can also activate "delivery report" for a single mail.

அதெல்லாம் சரி சார்.நான Outlook Express-சோ அல்லது Outlook-கோ அல்லது Thunderbird-டோ பயன் படுத்தவில்லை.இலவச Webmail ஒன்றை தான் பயன்படுத்துகின்றேன். எப்படி வசதி என்று கேட்கின்றீர்களா? அங்கும் இது முடியும்.எப்படி?

Hotmail, Gmail, Yahoo mail-போன்ற வெப்மெயில்களிலெல்லாம் மேற்சொன்ன சேவை கொடுக்கப்படுவதில்லை. ஆனாலும் இதற்கொரு வழி உள்ளது.அதுதான் http://www.spypig.com/ அந்த தளம் போய் அவர்களின் இலவச சேவையை பயன் படுத்திப்பாருங்கள்.ஒன்றுமில்லை அது ரொம்பவும் எளிது.அவர்கள் கொடுக்கும் படம் ஒன்றை உங்கள் மின்கடிதத்தில் காப்பி பேஸ்ட் செய்யவேண்டும்.அம்புடுதான்.

கலக்குங்க போங்க.


சுஜாதாவின் "ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து" புத்தகம் இங்கே மென் புத்தகமாக. Sujatha Oru Vingyana PaarvailIrundhu Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

நாமும் ஓர் பயணி

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் தனது கடைசிநாட்களில் இப்படிச் சொன்னதாய்ச் சொல்வார்கள். கண் கலங்கி தன்னை பார்க்க வருபவர்களை பார்த்து "எல்லாத்துக்கும் கண்டிப்பா ஒரு முடிவு வந்து தானே ஆகனும். முடிவே இல்லாத ஒரு கிரிக்கெட் ஆட்டம் சுவாரஸ்யமாய் இருக்குமா என்ன?"ன்னு சொல்லி சிரிப்பாராம். எவ்வளவு சரியாய்ச் சொன்னார் பாருங்கள். எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வந்துவிடுகின்றதே.சாமானியர்களுக்கும் சரி, சாம்ராஜ்யங்களுக்கும் சரி.

இரபீந்திரநாத் தாகூர் அவர்கள் அழகாய் இப்படிச் சொன்னார்.
"எனது பூமியே!
நான் உனது கரையில் ஒரு அந்நியனாகவே வந்து
உனது வீட்டில் ஒரு விருந்தாளியாக வாழ்ந்து
ஒரு நண்பனாகவே உன் இல்லத்தை விட்டு வெளியேறுகிறேன் "

இன்றைக்கு நாம் பலரையும் வழி அனுப்பி வைக்கின்றோம்,
நாளைக்கு
நாமும் அங்கே ஓர் பயணி தான்.எங்கே போகின்றோம்? அதில் தானே மொத்த குழப்பமும்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு நான் இல்லை.நூறு ஆண்டுகளுக்கு அப்புறமாய் நான் இருக்கப் போவதும் இல்லை. இடைப்பட்ட காலத்தில் தான் எத்தனை போராட்டம்.எத்தனை சம்பவம்.

"கடவுள் எழுதிய சிறுகதைதான் ஒவ்வொரு மனிதனின் வாழ்வும்" என்ற ஆண்டர்சனின் வைர வரிகள் உண்மையாய் தெரிகின்றது.

நாமிருக்கும் வாழ்வே சிலகாலம் தான்.அதுவும் உறவோடு வாழ்ந்தால் பூக்கோலம் தான்னு யாரோ சொன்ன கவிதை வரிகளும் கூடவே நினைவுக்கு வந்து செல்கின்றது.


ரமணி சந்திரன் நாவல் "என்னுயிர் நீ தானே" இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Ramani Chandran En Uyir Neethane Tamil Novel pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்