வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்று நம்மூரில் ஓர் பேச்சுண்டு. ஆரம்பகாலத்தில் கூகிள் மேப்பும் சரி அப்புறமாய் காசு கொடுத்து Keyhole- 
யிடம் இருந்து வாங்கிய கூகிள் எர்த்தும் சரி இலவசமாகவே கூகிளால் இணைய சமுதாயத்துக்கு வழங்கப்பட்டு வருகின்றது.(உச்ச பதிப்புகள் தவிர).
இலவசமாய் இப்படி மேப்பும், பூமியும் வழங்கினால் கூகிளுக்கு காசு எப்படி வரும்,அடிக்கடி யோசித்ததுண்டு.
இங்கே பாருங்கள் புல்லையும் ஆயுதமாக்கும் கூகிளின் இன்னோவேசன் வித்தைகள்.கூகிள் மேப்பில் ஓட்டல் தேடினால் அருகாமையில் அமைந்திருக்கும் ஓட்டல்களை கூகிள் மேப் விளம்பரங்கள் காட்டுகின்றன.
அதுபோல கூகிள் எர்த்தையும் வைத்து இப்போதெல்லாம் விளம்பரங்கள் தயாரிக்கப்படுகின்றன.
Saturn கார் நிறுவனத்தின் முயற்சியை இங்கு காணலாம்.
http://www.saturn.com/saturn/detour/googleearth/index.jsp
விளம்பர Video
 இன்னோவேசனாலேயே கலக்கும்/பிழைக்கும் கூகிளுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம்.
போகிற போக்கில் Chief Information Officers எல்லாம் Chief Innovation Officers ஆகியே ஆகவேண்டும் போலும்.
அப்படியே உங்கள் வீட்டு மொட்டை மாடியோ அல்லது அகன்ற மைதானமோ காலியாக இருந்தால் பொறுத்திருங்கள்.படத்தில் Target 
 போல நீங்களும் கூகிள் எர்த்தில் விளம்பரம் செய்யலாம். :)
Download this post as PDF



 நம்மில் பலர் அன்று கணிணி காலத்தை தொடக்கியபோது, அக்காலத்திலேயே புகழ்பெற்றிருந்தவை மென்பொருள்கள் வோர்ட் ஸ்டாரும் (WordStar), லோட்டஸ் 123 யும்(Lotus123)
. இப்போது ஆபீஸ் வோர்ட், எக்ஸெல் என்று எங்கோ போயிருந்தாலும் பழையன எளிதில் மறக்கப்படுவதில்லை. இதில் லோட்டஸ்123யும் ஒன்று-அது பற்றிய சுவாரஸ்ய கதை ஒன்று இங்கே. இதை உருவாக்கிய லோட்டஸ் நிறுவன நிறுவனர் மிட்ச் கபூர் (Mitch Kapor) இந்தியாவை சேர்ந்த மகரிஷி மகேஷ் யோகியின் (Maharishi Mahesh Yogi) தீவிர தொண்டராம்.Transcendental Meditation எனும் தியானக் கலையை போதிக்கும் அளவு தேர்ச்சி பெற்றிருந்த மிட்ச் கபூர் தான் உருவாக்கிய மென்பொருள் நிறுவனத்துக்கு பெயரிட முனைந்தபோது யோகாசன தியான நிலையில் ஒன்றான பத்மாசனத்தை (Padmasana) குறிக்கும் தாமரையை அதாவது லோட்டஸ் 
 எனும் பெயரை தெரிந்தெடுத்தாராம்.பிற்பாடு லோட்டஸ் 123,லோட்டஸ் டாமினோ,லோட்டஸ் நோட்ஸ் என அநேக மென்பொருள்களை வெளியிட்ட இந்நிறுவனம் 1995-ல் 











 Blue Screen of Death அல்லது bluescreen அல்லது stop error அல்லது BSD error என்பது விண்டோஸ் உலகில் அறியாதோர் இருக்க முடியாது.கணிணி வல்லுனர்களை திகிலூட்டும் இந்த "Blue Screen of Death - நீலத்திரை மரண பழு" என்ற சொற்றொடர் 1991-யிலேயே Erik Noyes என்பவரால் உருவாக்கப்பட்டது.Charles Schwab and Co என்ற நிதி நிறுவனத்தில் அவர் பணியாற்றும்போது தனது வாடிக்கையாளர்களிடையே இந்த விண்டோஸ் பழுதை Blue Screen of Death என்று கூறினார்.அது அப்புறமாய் மிக பிரபல வார்த்தையாகிவிட்டது.1998-ல் COMDEX எனும் மாபெரும் விழாவில் Windows98 ஆப்பரேடிங் சிஸ்டத்தை விண்டோஸ் பயில்வான் பில்கேட்ஸ் உலகுக்கு அறிமுகப்படுத்தும் போது அவர் கண்ணெதிரே மாபெரும் திரையில் Blue Screen வந்து அவர் மானத்தை வாங்கியது.அப்போது "That must be why we're not shipping Windows 98 yet"எனக் கூறி சம்மாளித்தார்.இது போல ஒரு நாளைக்கு 25 மில்லியன் தடவை விண்டோஸ் உலகெங்கும் கிராஷ் ஆகிறதாம்.Blue Screen of Death இருக்கட்டும் Red Screen of Death கேள்விபட்டிருக்கிறீர்களா?





 காத்திருத்தல் அன்றாட வழக்கமாகிவிட்டது.காலை மாலை பேருந்துக்கு, ட்ரெயினுக்கு காத்திருத்தல், பஸ்ஸிலேறி அப்புறமாய் பயணத்தில் காத்திருத்தல், ஒரு மணி நேர தின பயணமெல்லாம் இப்போது மிக சகஜம்.ரொம்ப தூரம் பயணம், அநாவசியமாய் எங்கேயோ யாருக்காகவோ காத்திருத்தல் முடிவில் இத்தனை மணிநேரம் வீணாய் போனதே என வேதனை.
 இரத்தம்,அது யாருக்கு எப்போது தேவைப்படும்? தெரியாது.தேவைப்படும் போது தேடித் திணறிப்போவது உண்டு.கண்காணா சக மனிதருக்கு இரத்தம் வழங்க காத்திருக்கும் ஈரநெஞ்சுடையோர் இன்றும் இருக்கின்றனர். அவர்களை எளிதாய் கண்டுபிடிக்க,ஆபத்தில் அவசரமாய் தேட இங்கே ஒரு இரத்தம் வழங்கும் நண்பர்களின் டேட்டா பேஸ்.ஆச்சர்யம் என்னவென்றால் இந்திய அளவிலும் அதிலும் தமிழக அளவிலும் அநேக நண்பர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். ஆர்வமுள்ளவராயின் நீங்களும் உங்கள் பெயரை பதிவு செய்யலாம்.உதவலாம்.அல்லது குறைந்தது தேவையிலுள்ளோர்க்கு இந்த சுட்டியை காண்பித்து உயிர் காக்கும் சேவை செய்யலாம்.

க்கு சரி சம போட்டியாய் எழும்பி வருவது தான் வளைகுடா நாடான கத்தாரின் தலைநகர் தோஹா-வை மையமாக கொண்டு இயங்கும் Qatar airways. 
 இருபத்தோராம் நூற்றாண்டின் போட்டிகளை சம்மாளிக்க ,அரேபிய பகுதியின் மையமாய் திகழ இப்போதே மிகப்பெரிய திட்டத்தோடு மாபெரும் புத்தம் புது விமான நிலைய பணிகளை தொடக்கியிருக்கிறார்கள்.




















