உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Tuesday, January 15, 2008

விர்சுவல் லேப்கள்

இணைய இணைப்புப் பட்டையானது (Bandwidth)நம்மிடையே தடிமனாக தடிமனாக முன்பு சாத்தியமில்லாதன வெல்லாம் இன்று சாத்தியகிக் கொண்டிருக்கின்றன. மெல்லிய டயலப் கனெக்ஸனை வைத்துக்கொண்டு மோடம் வழி டயல் செய்து அது தான்பாட்டுக்கு ஒரு பாட்டுப்பாடிக் கொண்டு விஎஸ்என்எல்லோடு இணைய, சில நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். பின் சிறிது நேரத்தில் இணையஇணைப்பு பட்டென கட்டாகிவிடும். படு பேஜாரா போய்விடும். அந்த இனிய மோடம் பாடும் குரலை கேட்டு ரொம்பநாளாகி விட்டது. சமீபத்தில் "காதலர் தின"த்தில் வரும் "ஓ மரியா" பாடலில் அந்த மோடம் பாடும் பாடலை கேட்க நேரிட்டது. ஆச்சர்யமாய் இருந்தது.எவ்வளவு வேகமாய் போய் கொண்டிருக்கிறோம்.

அகலப்பட்டையானது (Broadband) உலகத்தை சுருக்கிப்போட்டு விட்டது. அவுட் சோர்சிங் ஆகட்டும், வொர்க் ப்ரம் ஹோம் ஆகட்டும், VoIP ஆகட்டும், ஆன்லைன் படிப்புகள் ஆகட்டும், வெப்காஸ்டிங் ஆகட்டும் எல்லாமே இன்று கூடிக்கொண்டிருக்கும் பாண்ட்விட்த்தால் சாத்தியமாகிற்று. அந்த வரிசையில் தான் இந்த விர்சுவல் லேப்களும் வரும்.

நல்ல பாண்விட்த்தோடு கூடிய இணைய இணைப்பு உங்களிடம் இருக்கின்றதா? மைக்ரோசாப்டின் அநேக தொழில் நுட்பங்களை நீங்கள் வீட்டிலிருந்த படியே பயிலலாம். செய்துபார்க்கலாம். பெரிய பெரிய செர்வர்கள், தேவையான மென்பொருள்கள், ஆப்பரேட்டிங் சிஸ்டம்கள், மற்றும் பிற உபரிகள் என எதுவும் பற்றி கவலைப்படத் தேவையில்லை.எங்கும் போக வேண்டிய அவசியமும் இல்லை. எல்லாம் சரியாக அமைக்கப்பட்ட விர்சுவல் லேப்கள் உங்களுக்காக தயாராக உள்ளன. நீங்கள் அந்த தூரத்து மைக்ரோசாப்டின் கணிணிகளின் உட்புகுந்து கற்க்கலாம்,கலக்கலாம்.எல்லாம் இலவசமாக.

இங்கே அதற்கான சுட்டிகளை கொடுத்துள்ளேன். யாருக்காவது அது உதவலாம் என்ற எண்ணத்தில்.

Microsoft Virtual Labs Home

Developer Virtual Labs.
To quickly evaluate the latest Microsoft technologies for developers, such as VSTS, BizTalk Server, and .NET Framework 3.0 with these featured labs.
MSDN Virtual Labs

IT Professional Virtual Labs.
Experiment with the newest features of Microsoft server products such as 2007 Microsoft Office system, Exchange 2007, and Windows Vista in these featured
TechNet Virtual Labs


"மகிழ்ச்சிக்கு வழி" மென்புத்தகம் Mahilchikku Vazhi Tamil e book Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



5 comments:

வடுவூர் குமார் said...

இலவசமாக மென் புத்தகங்கள் மட்டும் தான் கிடைக்கும் என்று நினைத்திருந்தேன்..கணினியே கிடைக்குமா? புகுந்து புறப்பட்டுவிட வேண்டியது தான்.
நன்றி

Tech Shankar said...

தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் குரலோவியம்.

மொத்தம் 6 பகுதிகளாக உள்ளது.


http://www.esnips.com/web/Thenkachi

Tech Shankar said...

Indru Oru Thagaval 6 Parts download link

http://www.4shared.com/dir/5346509/674df4d9/Indru_Oru_Thagaval.html

Tech Shankar said...

எவனோ ஒருவன் - தமிழ் பட்டிமன்றம் - பாட்காஸ்ட் பதிவு

எம்பி3 வடிவில் சத்யராஜ், மாதவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

http://www.4shared.com/file/35083659/afae7e4d/Evano_Oruvan_Tamil_Pattimantram_Part_1.html

http://www.esnips.com/doc/a86e052d-b51b-4756-a6d0-cc0d1875850d/Evano-Oruvan-Tamil-Pattimantram-Part-1


http://www.4shared.com/file/35083733/18e35ae2/Evano_Oruvan_Tamil_Pattimantram_Part_2.html

http://www.esnips.com/doc/71fa2029-aaa0-4021-89b8-deb1c61dcd91/Evano-Oruvan-Tamil-Pattimantram-Part-2

வடுவூர் குமார் said...

இவை அனைத்தும் நீங்கள் அதில் பதிந்துகொள்ள வேண்டும் அதுவும் 90 நிமிட கால அவகாசம் மட்டும் தான்.
ஹி.. ஹி.. நான் மென்பொருள் ஆசாமி அல்ல, சும்மா போய் பார்த்தேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்