உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, January 23, 2008

பறிபோகும் பிரைவசி

கொஞ்ச நாட்களாகவே யாரோ என்னை கண்காணிப்பது போலவும்,நோட்டம் விடுவது போலவும் தோன்றிக் கொண்டே யிருந்தது. இன்றைக்கேனும் எப்படியும் எல்லார் கண்ணிலும் மண்ணை தூவிவிட்டு யாருக்கும் தெரியாத கண்காணாத பிரதேசத்திற்கு போய்விடவேண்டும் என தோன்றியது.அதற்கான முயற்சியிலும் இறங்கிவிட்டேன்.

கையில் செல்போனை வைத்திருந்தால் என் செல்போன் தொடர்பு கொள்ளும் டவரை வைத்து எளிதாய் என் இருப்பிடத்தை யாரும் தெரிந்து கொள்ளலாம். ஆதலால் அவசரத்துக்கு உதவும் மொபைல்போனை கூட வீட்டில் விட்டு விட்டு செல்ல தீர்மானித்தேன்.

கார் திருடுபோனாலோ,வழிதப்பிப்போனாலோ அல்லது விபத்து நேரிட்டாலோ உதவும் என்ற நோக்கில் வாகனத்தின் அசைவுகளை நோட்டமிட்டுக் கொண்டேயிருக்கும் ஆன்ஸ்டார்(On Star) பொருத்தப்பட்ட எனது GM-காரில் செல்ல வேண்டாம் என முடிவெடுத்தேன். ஆன்ஸ்டார் வழி GM-க்கு நான் எங்கிருக்கிறேன் என தெரிந்துவிடும் அல்லவா?

அதனால் எனது சாதாரண ஹாண்டா அக்கார்டை இயக்கி ஆகா விடுதலை என்ற சந்தோசத்தில் சில மைல்கள் தான் சென்றிருப்பேன்.வந்தது சுங்கசாவடி. இப்போது காரிலிருந்த Easypass-க்கு தெரிந்து விட்டது நான் எங்கிருக்கிறேன் என்று. இவன் இப்போது இந்த இரு குறிப்பிட்ட டோல் பூத்துகளுக்கு இடையே தான் இருக்கிறான் என அது அடித்து சொல்லிற்று.

ஒரு வழியாய் ஒரு ஷாப்பிங்மால் வந்தடைந்தேன்.இங்கு நான் ஷாப்பிங் செய்ததையாவது யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் வச்சுக்கலாமென நினைத்திருந்தேன். ஆனால் நான் தேய்க்க கொடுக்கவிருக்கும் கிரெடிட் கார்டு நான் ஷாப்பிங்செய்ததை இடம் புள்ளி விடாமல் தெளிவாய் எடுத்துரைத்து விடுமே? பயம் வந்து விட்டது.

அதனால் கிரெடிட் அட்டையை பாக்கெட்டில் வைத்துவிட்டு பணமாய் கொடுத்துவிடலாமென நினைத்தேன்.ATM ஒன்றைத் தேடிப்பிடித்து பணம் எடுத்தேன். அந்த ATM மெசின் தெளிவாய் எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்தது.இந்தாள் இந்தநாள் இன்னநேரத்தில் இவ்விடத்திலிருந்து இவ்வளவு பணம் எடுத்தான் என்று.

தலை சுற்றிக்கொண்டு வந்தது. யாரோ என்னை பார்த்துக்கொண்டே இருப்பது போல் தோன்றிற்று. வாலட்டை திறந்தேன். ஒரு டாலர் நோட்டு. அதில் அந்த கண்.அட அதே கண்.அங்கிள் சாமின் கண்.என்னை பார்த்துக்கொண்டே இருந்தது.
உங்களையும் தான்.


பட்டாபியின் "சும்மாவா சொன்னாங்க பெரியவங்க" துறுதுறு தாத்தாவின் ஆச்சரிய அனுபவங்கள் மென்புத்தகம் Pattaapi "Summaavaa Sonnaanga Periyavanga" Tamil ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



8 comments:

ILA (a) இளா said...

நன்றி!

கவி ரூபன் said...

P.K.P சார், ரொம்பத் தான் பயமுறுத்துது... எதுக்கும் ஒருக்கா சுத்திப் போடச் சொல்லுங்க... (எதை என்று கேட்டால் எப்படி?)

வடுவூர் குமார் said...

ஹா!ஹா!
இப்படி எழுதி உங்களையும் கவனிக்க வைத்துவிட்டீர்களே!!

Tech Shankar said...

உங்கள் எழுத்தின் வீச்சு அசத்துகிறது.. மிக மிக வேகமான நடை. அருமை. தொடருங்கள் பி.கே.பி. அவர்களே.. வாழ்த்துக்கள்

Anonymous said...

nalla post thalaivaa..
thamizhil oru puthagam
"kankaanipin arasiyal" endru ninaikiRen..intha maathiri..torchure-in arasiyal patriyathu..

Tech Shankar said...

http://www.esnips.com/nsdoc/45cbc14e-98a1-46b1-9737-e1767bc2ea03

பிரகாஷ் ராஜ் எழுத்தில் விளைந்த முத்தான 'சொல்லாததும் உண்மை' மென்னூல் இங்கே

http://www.esnips.com/nsdoc/45cbc14e-98a1-46b1-9737-e1767bc2ea03

http://www.scribd.com/doc/1454538/Solladhadhum-Unmai

vijayprasanna said...

உங்கள் பதிவுகள் எப்பொழுதும் அருமைதான் ,ஆனால் ஏன் நீண்ட நாளாக! அங்கிலத்தில் எழுதுவதில்லை ?

இளைய கவி said...

தாங்கள் சொல்வது மிக்க சரிதான் ஆனாலும் நமது பாதுகாப்புக்காகத்தான் இவ்வளவும். எனவே சகித்து கொள்ளத்தான் வேண்டிஇருக்கு.

என்றும் அன்புடன்
இளையகவி

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்