முன்பெல்லாம் பெரிது பெரிதாய் மொத்த மேஜையையும் ஆக்கிரமிக்கும் CRT மானிட்டர்களோடு கூடிய பெருத்த மண்டை கணிணிகள் வந்து கொண்டிருந்தன. இன்று எல்லாமே உலக அழகி கணக்காலும் ஸ்லிம்மாகி விட்டன. கார்ப்பரேட் கியூப்களிலும் சரி அல்லது வீட்டு வரவேற்ப்பறைகளிலும் சரி தட்டை திரை (Flat Screen) கணிணிகள் அணியாய் அணியாய் அலங்கரிக்கின்றன. மேஜையிலும் தாராளமாய் இடம் கிடைக்கின்றது. மடிக்கணிகளும் இது போலவே LCD தட்டை திரைகளை கொண்டிருக்கின்றன.
நீங்கள் மடிக்கணிணி அல்லது தட்டை திரை கணிணி வைத்திருக்கின்றீர்களா? உங்கள் OS வின்டோஸ் XP-யா? அப்போ கீழ்கண்ட தகவல் உங்களுக்கு உதவியாய் இருக்கும்.
பொதுவாய் மடிக்கணிணியில் அல்லது ப்ளாட் ஸ்கிரீன் கணிணியில் வின்டோஸ் XP வைத்திருப்போர், தங்கள் திரையில் கீழ்கண்ட படத்தின் இடது புறத்தில் உள்ளவாறு எழுத்துகள் ஒல்லிக்குச்சியாய் தெளிவாய் தெரிவதில்லை. அதை வலப்பக்கத்திலுள்ள எழுத்துக்கள் போல் தெளிவாய் மாற்ற நீங்கள் உங்கள் வின்டோஸ் XP-யில் ClearType தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். இதனால் எழுத்துகள் மடிக்கணிணியில் அல்லது ப்ளாட் ஸ்கிரீனில் தெளிவாய் கூலாய் தெரிவதோடு உங்களின் வாசிக்கும் வேகமும் வசதியும் அதிகமாகுமாம்.
ClearType தொழில்நுட்பத்தை எப்படி கொண்டுவருவது.
இரண்டு வழிகள்
1.இணையத்தில் நீங்கள் இணைந்திருக்கும் போது ஆன்லைனிலேயே ஆக்டிவேட் செய்யலாம்.அதற்கு கீழ்கண்ட சுட்டியை சொடுக்கவும்.
http://www.microsoft.com/typography/cleartype/tuner/1.htm
அது வேலைக்காகா விட்டால் கீழ்கண்ட சுட்டியிலிருந்து ClearType Tuner PowerToy-யை இறக்கம் செய்து அதை நிறுவி கன்ட்ரோல் பேனல் ClearType ஐகானை சொடுக்கி Wizard வழி ஆக்டிவேட் செய்யலாம்.
http://www.microsoft.com/typography/ClearTypePowerToy.mspx
ரொம்ப எளிது. கணிணியே கதியென எட்டு மணிநேரமாய் தட்டைதிரை முன் இருப்போர்க்கு நிச்சயமாய் இது உதவும்.
ஜே.பெருமாள் "Windows XP துவக்க வழிகாட்டி" தமிழில் மென்புத்தகம் J.Perumal Windows XP Guide in Tamil e book Download. Right click and Save.Download
Download this post as PDF
15 comments:
நல்ல உபயோகமான தகவல். இப்பொழுது நன்றாக படிக்க முடிகிறது.
நேரடியாக நெருப்பு நரி வழியாக முயன்றேன் முடியவில்லை. பின் IE வழியாக முயன்றேன். அப்பொழுதும் பாதியில் நின்றுவிட்டது. அதற்குப் பிறகு தரவிறக்கி முயன்றேன். அது சரியாக வந்தது.
முயலும் மற்றவர்களுக்காக இதனை பகிர்ந்து கொள்கிறேன்.
BarahaIME என்னும் மென்பொருளை அறிமுகப்படுத்திய நண்பருக்கு மிக்க நன்றி. இதன் முலம் என் போன்றவர்களும் எளிதில் தமிழில் இனி எழுத முடியும்.
பிகேபி அவர்களுக்கும் எனது நன்றி.
நல்ல தகவம் பிகேபி ஸார். இறக்கிப் பார்த்தேன். மிக அருமையாக இருக்கிறது. IEல் நன்றாக இருக்கிறது. ஆனால் நெருப்பு நரியில் பிசிறு தட்டுவதுபோல் தெரிகிறது. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
ஆம் மிக நல்ல தகவல்.மிக்க நன்றி.மேலும் இந்த மாதிரி தகவல்கள் இருந்தால் தாருங்கள் எல்லோருக்கும் உதவியாக இருக்கும்.
எனக்கு பயர்பாக்ஸில் நன்றாகவே தெரிகிறது.
மிக்க நன்றி.
P.K.P சார் தகவல்களுக்கு நன்றி.மேலும் ஒரு டவுட் சார்.Windows XP,Windows 2003server ஆகியவற்றில் Administrator ன் பாஸ்வேர்ட் தவறிவிட்டால் வேறு ஏதாவது வழி உண்டா சார்?
நன்றி பிகேபி ஸார்...
ஆனால், கன்ட்ரோல் கீ-யை பிடிச்சிக்கிட்டு மவுஸின் ஸ்க்ரோல் பட்டனை ஃபார்வேர்டில் சுற்றினால் ஸ்க்ரீனில் உள்ள உலாவி ஜன்னலின் எழுத்துக்கள் பெருசாகவும், பேக்வேர்டில் சுற்றினால் சின்னதாகவும் தெரியுமே... அதுக்காக ஒரு ஸாஃப்ட்வேர் இன்ஸ்டால் செய்யணுமா? - சுல்தான்.
பயனுள்ள தகவல்கள்.
நல்லெண்ணத்துடன் தொடரும் உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்.
நன்றி.
It is very useful.. Thanks PKP
http://www.esnips.com/nsdoc/e05a54d1-645d-487e-8447-4f01c417d3ec
summaavaa sonnaanga - Tamil E-Book
This can also be done by
1.Right-click on a blank area of the Desktop and choose Properties.
2.Click on the Appearance tab; click effects.
3.Check the box: Use the following method to smooth edges of screen fonts.
4.In the drop down box select: Clear Type.
http://www.4shared.com/dir/5398222/dfa9ead4/Anantha_Vikatan.html
my Anantha Vikatan collections are there..
தமிழர்களின் பண்பாடு இப்போது பின்பற்றப்படுகிறதா? இல்லையா?
திண்டுக்கல் லியோனியாரின் பொங்கல் சிறப்புப் பட்டிமன்றத்தின் பாட்காஸ்ட் பதிவு
http://www.4shared.com/dir/5258111/61676850/Tamil_Pattimantrangal.html
http://www.esnips.com/web/LeonyPattimantram
enjoy the world with full of happiness
எம் சி ஐ டி பி .. அப்படின்னா என்ன?
தரவுத்தளத்தினை மேலாண்மை செய்வது என்று பொருள்.
எம் சி ஐ டி பி - குறித்த மென்னூல் விரும்புவோர் இங்கே நாடவும்
http://www.4shared.com/dir/5410470/a09c5099/MCITP.html
http://www.esnips.com/web/MCITP-MCTS
ஈழத்தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் கைவண்ணத்தில் வெளிவந்த சில மென்னூல்கள் இங்கே
http://www.esnips.com/web/TamizhEelam
Post a Comment