உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, January 24, 2008

உங்கள் கேள்விகள்

நண்பர் உடன்பிறப்பு கேட்டிருந்தார்.
இந்த நர்சரி பாடல்கள் mp3 வடிவில் கிடைக்குமா? கிடைத்தால் பகிர்ந்து கொள்ளவும், நன்றி

இதோ இங்கே சுட்டி கொடுத்துள்ளேன்.
Download Nursery Rhymes in Mp3 format.

நண்பர் Nijam கேட்டிருந்தார்.
P.K.P சார் தகவல்களுக்கு நன்றி.மேலும் ஒரு டவுட் சார்.Windows XP,Windows 2003 server ஆகியவற்றில் Administrator-ன் பாஸ்வேர்ட் தவறிவிட்டால் வேறு ஏதாவது வழி உண்டா சார்?

உங்களுக்கு கீழ்கண்ட எனது முந்தைய பதிவுகள் உதவலாம்.
அட்மின் பாஸ்வேர்ட் மறந்து போனால்
பாஸ்வேர்ட் மறந்துபோச்சா

நண்பர் சேஷகிரி கேட்டிருந்தார்.
அன்புள்ள திரு.பிகேபி,
என்னிடம் நண்பர் ஒருவர் Pen Drive கொடுத்துள்ளார். நண்பர் அதைத் திறக்கும் கடவுச்சொல்லை மறந்துவிட்டார். அதனைத் திறக்க எதேனும் வழி உள்ளதா? LOCK MFC APPLICATION. FILE VERSION 3.0.2.0 என்று ஒரு கோப்பு உள்ளது. FORMAT MFC APPLICATION . FILE VERSION 3.0.2.3 என்று இன்னொரு கோப்பு உள்ளது. எதேனும் வழி இருப்பின் சொல்லுங்களேன்.

அந்த கடவுசொல்லை மீட்க இப்போதைக்கு வழி இருப்பதாய் தெரியவில்லை. முக்கியமான கோப்பு எதுவும் அதில் இல்லை எனில் அந்த Pen Drive-வை Format செய்து மீண்டும் பயன்படுத்தலாம்.

நண்பர் Valliammai Solaiappan கேட்டிருந்தார்.
Sir I cannot directly type in tamil.I want to type in tamil directly in gmail or yahoo mail.What can I do? pls.......

நண்பர் Arun அவர்களின் பின்னூட்டத்தையே இங்கு என் பதிலாக அளிக்கின்றேன். அவர் இவ்வாறாக கூறியிருந்தார்."நான் தமிழில் type செய்ய Baraha IME எனும் மென்பொருளை உபயோகிக்கின்றேன். இதில் type செய்ய மிகவும் எளிதாக உள்ளது. வெறும் 1.16 MB அளவே உள்ள இந்த மென்பொருள் அருமையாக உள்ளது. இதன் மூலம் தமிழ், ஹிந்தி, மலையாளம் ,கன்னடம் உள்பட 13 மொழிகளில் type செய்ய முடிகிறது."

நான் தமிழில் எழுதுவது எப்படி என இங்கே விளக்கியுள்ளேன்.

நண்பர் நிலா கேட்டிருந்தார்.
ஒவ்வொன்றும் 8 தொடக்கம் 10 MB கொண்ட மேலதிகமான PDF Fileளின்
கொள்ளவைக் குறைப்பது எப்படி? உதாரணத்திற்கு: Printஇற்கு அனுப்புவதற்காகச் செய்யப்பட் PDFஐ இன்னுமொருவர் வாசிப்பதற்கு மாத்திரம் பாவிப்பதற்குப் போதுமானதாகக் குறைப்பது எப்படி?
நன்றி

நிலா இது ஒரு நல்ல கேள்வி. இணையத்தில் ஆங்காங்கே கிடைக்கும் இலவச PDF compressor-கள் எல்லாமே சுத்த வேஸ்ட். காசு கொடுத்து வாங்கவேண்டும் போலிருக்கிறது. அல்லது Adobe® Acrobat® 8 Professional பயன்படுத்தி் அதின் PDF Optimizer-ரை கிளிக்க வேண்டும்.

நண்பர் சுல்தான் கேட்டிருந்தார்.
பிகேபி ஸார்...
கன்ட்ரோல் கீ-யை பிடிச்சிக்கிட்டு மவுஸின் ஸ்க்ரோல் பட்டனை ஃபார்வேர்டில் சுற்றினால் ஸ்க்ரீனில் உள்ள உலாவி ஜன்னலின் எழுத்துக்கள் பெருசாகவும், பேக்வேர்டில் சுற்றினால் சின்னதாகவும் தெரியுமே... அதுக்காக ஒரு ஸாஃப்ட்வேர் இன்ஸ்டால் செய்யணுமா?

செய்யவேண்டாம். எல்லார் கணிணியிலும் இவ்வசதி இலவசமாகவே உண்டு. புதியவர்களுக்காக கொஞ்சம் விளக்கமாய் கீழே.
If you have a scroll wheel on your mouse, just do this to change the displayed text size in Web pages.

1. Press and hold down the Control (ctrl) Key.
2. While still pressing and holding the Control Key, scroll up or down with the scroll wheel on your mouse. As you do this, the font size should get bigger or smaller. Stop scrolling when you find a size that works.
It's just that simple. :)

நண்பர் Sivaramakrishnan.N கேட்டிருந்தார்.
உங்கள் வலைப்பக்கத்தை ரசிக்க புதிதாய் வந்திருக்கும் ரசிகன் நான். நான் ஒரு இசை வலைப்பக்கத்தில் இருந்து இசையை இறக்கினேன். அது JPG ஃபயில் ஆக தரையிறக்கம் ஆகியது. அந்த வலைப்பக்கத்தில், பாடலை தரையிறக்கம் செய்தபின் அந்த ஃபயிலின் extension சென்று JPG வகையை MP3 வகையாக பெயர் மாற்றம் செய்துகொள்ளவும் என்று எழுதியிருந்தது. அதை எவ்வாறு செய்வது என்று தெரியாமல் முழிக்கின்ரேன். உதவிட வேண்டுகின்ரேன். நன்றி.

It should be easy. Copy that file on your desktop and could you see the file name like xyz.jpg? I mean with .jpg extension.

If not do this
- select Start | Settings | Control Panels | Folder Options
- select the View tab
- UNcheck "hide file extensions for known file types"
- Click OK to finish

Now you should see the .jpg extension.
Right click the file and look for the option "Rename"
Replace jpg with mp3.Thats all.


நடிகர் பிரகாஷ்ராஜின் "சொல்லாததும் உண்மை" தமிழில் மென்புத்தகம் Actor Prakashraj Solladhadhum Unmai pdf Tamil ebook Download. Right click and Save.Download
Thanks Tamilnenjam!!


Email PostDownload this post as PDF

Related Posts by Categories7 comments:

உடன்பிறப்பு said...

பாலர் பாடல்களை mp3 வடிவில் பகிர்ந்தமைக்கு நன்றி. மேலும் பல தமிழ் பாலர் பாடல்கள் கிடைக்கப் பெற்றால் தயை கூர்ந்து பகிர்ந்து கொள்ளவும். இணையம் மூலம் தமிழ் வளர்க்கும் உங்களுக்கு எங்களது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்

வடுவூர் குமார் said...

கேள்வி:
பதில்:
மாதிரி இருக்கு.
தமிழில் எழுத இப்போது ஒரு நல்ல மென்பொருளை “எண்னங்கள்”- பத்ரி வெளியிட்டுள்ளார்.இது IE & Firefox யில் அருமையாக வேலை செய்கிறது.
இது கூட அதை உபயோகித்துதான் தட்டச்சு செய்கிறேன்.
NHM writter

vj said...

how to find a person where is he present and which area by using of cell phone tower signal?

இளைய கவி said...

வணக்கம் P.K.P அவர்களே,

உங்களின் பதிப்புகளுக்கு பின்னூட்டம் போட்டு சில நாட்கள் ஆகிவிட்டது. எனக்கு விஜய் டிவியில் வரும் மதுரை நெடுந்தொடரின் தலைப்பு பாடலும் அதில் வரும் HUMMING கும் MP3 கோப்பு வடிவில் கிடைக்குமா? பதில் அறிய மிக்க ஆவலாய் உள்ளேன். தங்களின் உதவியால் எனது http://dailycoffe.blogspot.com 100 வது பதிவையும் தாண்டி போய்க்கொண்டிருக்கிறது. நண்றிகள் பல.

என்றும் கடமைப்பட்டவனாய்
இளையகவி

Anonymous said...

Hi PKP,

All your posts are great and very useful...
Am reading them regularly...
And when i try to download the Rhymes, it is giving the following error...

Error in count on line 315.
./mydrive/Tamil Patimantram/Leoni Patimantram Panama Gunama Part2.mp3 is already defined.

Please rectify,

Thanks,
...Dalai...

Unknown said...

//"நான் தமிழில் type செய்ய Baraha IME எனும் மென்பொருளை உபயோகிக்கின்றேன். இதில் type செய்ய மிகவும் எளிதாக உள்ளது.//

PKP ஸார்,

இதில் ழ், ங், ஞ் போன்ற எழுத்துக்களும், இன்னும் சில எழுத்துக்களும் வரமாட்டேங்குதே என்ன செய்யிறது?

arstudio120 said...

how to free download to e-books in google books website....any illegal software here?...

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்