உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Tuesday, January 29, 2008

இன்னா எழுத்துரு இது?

நூற்றுக்கணக்கான தமிழ் எழுத்துருக்களை வைத்துக்கொண்டு தளத்துக்கு ஒரு எழுத்துருவென கணிணியில் நிறுவி கஷ்டப்பட்டு வந்தது அந்தக்காலம். இப்போது யூனிக்கோடு (Unicode) அல்லது ஒருங்கெழுத்து எனப்படும் தமிழ் எழுத்துரு பரவலாக எல்லா இணையதளங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. விகடன் போன்ற விஐபி வெப்தளங்களும் கடைசியாக இந்த எழுத்துருவின் பக்கம் வந்து விட்டன. இன்னும் சில விஐபி வெப்தளங்களும் சரியான சமயத்துக்காக காத்து இருக்கின்றார்கள்.யூனிக்கோடு வந்தாலும் வந்தது தமிழ் எழுத்துக்கள் இணையத்தில் நெருப்புபோல் பரவிவிட்டது.அது ஒளியும் கொடுக்கின்றது, கூடவே புகையும் வருகின்றது.

ஆனாலும் இன்னும் சில தளங்களில் பழைய ஏதாவதொரு எழுத்துருவை பயன்படுத்தி வருகின்றார்கள் (Like Bamini,Anjal etc). அப்படிப்பட்ட தளம் பக்கம் நீங்கள் வந்தால் அத்தள எழுத்துக்கள் உங்களுக்கு கோணக்க மாணக்க வென மேற்கண்ட படத்திலுள்ளது போல் தோன்றும். அச்சமயத்தில் இரு தீர்வுகள் உள்ளன்.

ஒன்று -அத்தளத்தில் பரிந்துரை செய்யப்பட்ட குறிப்பிட்ட தமிழ் எழுத்துரு-வை நீங்கள் உங்கள் கணிணியில் இறக்கம் செய்து நிறுவ வேண்டும். இதன் மூலம் அந்த முழு தளத்தையும் தமிழில் படிக்கலாம்.என்ன கொஞ்சம் மெனக்கெட வேண்டும்.

அல்லது அவசரத்துக்காக அப்பக்கத்தை மட்டும் தமிழில் படிக்க அந்த மொத்த பக்கத்தையும் காப்பி செய்து அப்புறமாய் அதை கீழ்கண்ட எழுத்துரு மாற்றியில் பேஸ்ட் செய்து படிக்கலாம். ஒருவேளை படிக்க இயலாவிட்டால் ஒவ்வொரு எழுத்துருவாய் முயன்று பாருங்கள். அந்த படிக்க இயலா கோணல் எழுத்துரு அழகாய் படிக்க இயலும் யூனிக்கோடு எழுத்துருவாய் உங்களுக்கு இங்கு மாற்றி தரப்படும்.அத்தளத்தில் எந்த குறிப்பிட்ட எழுத்துரு பயன் படுத்துகிறார்கள் எனவும் இதன் வழி அறிந்து கொள்ளலாம்.

Tamil Font Converters
http://www.suratha.com/reader.htm

http://sarma.co.in/FConversion/

"ஞானி்" கிருட்டிண மூர்த்தியின் தத்துவகதை தொகுப்பு மென்புத்தகம் Mohan Krishnamoorthy "Nyani" Collection of Philosophical Stories in Tamil pdf e-book Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories6 comments:

Tech Shankar said...

இந்தத் தொடுப்புகளைக் கொடுத்த அறிஞர் பி.கே.பி அவர்களுக்கு இன்றைய இணைய இளைஞர்கள் சார்பாக 'இணையத் தளபதி' பட்டம் வழங்கப்படுகிறது.

ஒப்பம்

தமிழ்நெஞ்சம்

Anonymous said...

தகவல் களஞ்சியம் பி.கே.பி. தளம் என்றால் மிகையாகாது. பி.கே.பி சார் Windows Administrator க்கு உரிய Windows 2003 முழுமையான கைடு(ஆங்கில வடிவில்)மென்புத்தகம் ஏதாவது இருந்தால் வெளியிடுங்கள் சார் .

வால்பையன் said...

என்னுடைய நண்பர்களுக்கு நான் யூனிகோடை பயன்படுத்தி எழுதுவது தெரியவில்லை (படிக்க முடியவில்லை ),
அது தெரிய அவர்கள் கணினியில் எதாவது தரவிறக்கம் செய்ய வேண்டுமா,
அல்லது இதற்காக எதாவது font இருக்கிறதா?

தமிழில் எழுத நான் உபயோகபடுதுவது இதை தான்.
http://www.google.com/transliterate/indic/Tamil#

வால்பையன்

cheena (சீனா) said...

நண்பரே !! நல்லதொரு பதிவு - பயனுள்ள ஆலோசனைகளுக்கு நன்றி

Anonymous said...

Hi PKP, your posts are really great. am really wondering abt the ebook collection you have. If you have gnani's "O pakkangal" please share with us.

Ungal Pani Thodarattum,

Regds,

Raajesh

Anonymous said...

¿ñÀ§Ã ±ÉìÌ pdf ¨À¨Ä video ¬¸ Á¡üÈ¢ dvd player

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்