இப்பதிவுகளை அல்லது மின்னஞ்சல்களை அவ்வப்போது படிக்கும் நண்பர்கள் தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் பின்னூட்டங்கள் வழி அல்லது ஈமெயில்கள் வழி கேட்டவண்ணம் இருக்கின்றார்கள். அவர்களுக்கான பதில்களையும் விளக்கங்களையும் என்னால் முடிந்த அளவுக்கு சீக்கிரமாய்,தெரிந்த அளவுக்கு விளக்கமாய் பதிவிக்க
முயற்சிக்கின்றேன்.சிலரின் குறிப்பிட்ட தேவைகள் பலருக்கும் உதவும் என்பது நம் எண்ணம். கண்டிப்பாய் விரைவில் உங்கள் கேள்வியும் இவ்வரிசையில் உள்ளாகும் என்பது திண்ணம்.
இன்று நண்பர் Shanraj-ன் வினா.Tamil audio stories for Kids கிடைக்குமாவென கேட்டிருந்தார்.கீழ்க் கண்ட யூடியூப் வீடியோக்கள் சிறுவர்களுக்கான தமிழ் கதைகளை கொண்டுள்ளன.ஏறக்குறைய ஒரு மணி நேரம் ஓடும் இவற்றை எளிதாய் VCD-யாக்கலாம். இதற்கான செய்முறையை யூடியூப் வீடியோக்களை VCD-யாக்கலாம் என்ற பதிவில் நாம் ஏற்கனவே இங்கு பேசியுள்ளோம்.
நண்பர் வடுவூர் குமார் FLV to MPG-க்கு மாற்றினால் வீடியோவின் தரம் குறையாதா? வென கேட்டிருந்தார். நமது அனுபவபடி யூடியூபில் என்ன தரத்தில் நீங்கள் பார்க்கின்றீர்களோ அதே தரத்தில் தான் எரிக்கப்படும் VCD-யும் கிடைக்கின்றது.
இக்கதைகளை MP3 வடிவில் இங்கே இறக்கம் செய்து கொள்ளலாம்.
Tamil Audio Stories for kids
மின்னஞ்சலில் கீழ்வரும் வீடியோக்கள் தெரியாதோர் கீழ்க் கண்ட சுட்டியை சொடுக்கி வீடியோக்களை காணலாம்.
Tamil Video Stories for Kids
பகுதி 1

4 comments:
Bhagavath Geethai - Sukhi Sivam MP3 link available at
denasridhar.blogspot.com
என்னுடைய புரிதல் கீழ்கண்டவாறு
vcd- வீடியோ அளவு 380x252,ஆனால் யூடூபில் பார்க்கும் வீடியோவின் அளவு மிகச்சிறியது.
அந்த சிறிய படத்தை மென்பொருள் மூலம் பெரிதாக்கி டிவி யில் பார்க்கும் போது பெறும் பகுதி பிக்ஸலேட்டாக மாறியிருக்கும்.இது என்னுடைய அனுமானம் மட்டுமே.
முயற்சி செய்தவர்கள் சொன்னால் பலரும் பயனடைவார்கள்.
Mikka nandri Nanbar PKP avarkaley,
But the PKP drive is not accessible. Please check.
This week's Aa.Vi.
http://www.esnips.com/nsdoc/6eef6147-e3de-4ccd-bfdb-52527c18a8a0
Post a Comment