உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Tuesday, November 25, 2008

ஒன்றக்க ரண்டாக்க

வாங்கும் போது 160Gig ஹார்டிரைவ் உள்ள மடிக்கணினி என்று விளம்பரப் படுத்தியிருந்தார்கள். வாங்கி விண்டோசில் நுழைந்து பார்த்தால் அது 149Gig ஹார்டிரைவ் என்று காட்டியது.மிச்ச 11Gig எங்கே போனது? எல்லாம் மார்க்கெட்டிங் உத்தி தான். டெக்னிக்கலி 1MB=1,048,576 bytes. ஆனால் இந்த வியாபார பயில்வான்கள் அந்த கணக்கை 1MB=1,000,000 bytes என மாற்றி விட்டார்கள். இப்படித்தான் அந்த 11Gig காணாமல் போனது. 11Gig-க்கான காசு மட்டும் லபக்.

மொத்த 160Gig-கையும் C-டிரைவாக ஒரே பார்டிசியனில் போட்டு இருந்தார்கள். விலைமதிப்பற்ற படங்களையும் வீடியோக்களையும் இன்னொரு டிரைவில் போட்டு வைப்பது தான் உத்தமம் என்று நினைத்த கோபால் அந்த 160Gig-கையும் C மற்றும் D டிரைவாக பிளந்து கேட்டான். ஃபார்மேட் செய்யாமல், விண்டோசை திரும்ப நிறுவாமல், கோப்புகள் எதையும் இழக்காமல் அப்படியே கேக் வெட்டுவதுபோல ஒரு பார்டிசியனை இரண்டாக வெட்ட முன்பு Norton PartitionMagic-கை பயன்படுத்தியதுண்டு. இப்போது அதற்கு விலைகுறித்து விட்டதால் இலவச மென்பொருளான EASEUS Partition Manager Home Edition -ஐ பயன்படுத்தினோம். இது கொண்டு எளிதாக எல்லாவிதமான Partitioning வேலைகளையும் செய்யமுடிகின்றது. என்னோட ஃபேவரைட்டான Hide Partition கூட இதன் மூலம் செய்யலாம். கணிணி பார்டிசியன் ஒன்றை இரண்டாக்க விஸ்டாவின் Disk Management-ல் Shrink என்று ஒரு வசதி இருக்கின்றதாம். பெரும் தலைவலி என கேள்விப்பட்டேன்.

EASEUS Partition Manager Download Page
http://www.partition-tool.com/download.htm

Direct Download Link
http://www.easeus-software.com/download/epm.exe

இன்னொறு Partition Manager 9.0 Express
http://www.paragon-software.com/home/pm-express/download.html

லினக்சில் இதுமாதிரியான வேலைகளை செய்ய GParted அதாவது Gnome Partition Editor பயன்படுத்தலாம்.
http://gparted.sourceforge.net/



மனிதனின் மனசாட்சி
தெய்வத்தின் குரல்
-பைரன்

ரமணிச்சந்திரன் புதினம் "லாவண்யா" இங்கே தமிழில் மென் புத்தகமாக. Ramanichandran Laavanyaa Novel in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Saturday, November 22, 2008

அபிமான ஐபோன் பயன்பாடுகள்

ஐபோன்களின் ஊடுருவல் இந்தியாவில் கம்மி என கேள்விப் பட்டேன். ஆனால் இங்கு அது ஒரு "ஸ்டேன்டர்டு" போலாகிவிட்டது. வேலை இடத்திலும் சரி விமானப் பயணத்திலும் சரி அக்கம் பக்கம் எதிரே தூரே எல்லாம் ஐபோன் தான் தெரிகின்றது.அதிலும் அவ்வப்போது வெளியாகும் சில சூடான இலவச ஐபோன் பயன்பாடுகள் ஐபோன் பயனாளர்களை பரவசப்படுத்தி விடுவதுண்டு. Google mobile app சமீபத்திய உதாரணம் .கூகிளில் தேட வார்த்தைகளை நாம் டைப்ப வேண்டியதில்லை. வாயால் நாம் சொன்னாலே போதும்.அது நம் குரலை கேட்டு நமக்காக டைப்பிவிடுகின்றது.மேலும் சில உதாரணங்களை இங்கே கொடுத்துள்ளேன்.புதிதாக வந்திருக்கும் BlackBerry Storm டச் ஸ்கிரீனோடு வந்திருக்கின்றது.நல்ல போட்டியாக தெரிகின்றது.ஆனாலும் இது மாதிரியான பல நல்ல சுவாரஸ்யமான பயன்பாடுகளை அதில் நிறுவமுடியுமாவென தெரியவில்லை.

  • NYtimes மூலம் சுட சுட நியூயார்க் டைம்ஸ் படிக்க முடிகின்றது.
  • Stitcher மூலம் பிபிசி முதலான ரேடியோ பாட்காஸ்ட்களை எப்போவேண்டுமானாலும் கேட்க முடிகின்றது.
  • Coolris மூலம் இணையத்திலிருக்கும் படங்களை யூடியூப் வீடியோக்களை 3டி எபக்டில் திகட்ட திகட்ட முழு ஸ்கிரீனில் பார்க்கமுடிகின்றது.
  • NetNewswire மூலம் பல செய்தி ஓடைகளை(RSS) படிக்க உதவுகின்றது.
  • Dictionaire மூலம் தெரியாத பல வார்த்தைகளுக்கு அர்த்தம் காண முடிகின்றது.
  • Units மூலம் தெரியாத பல அளவீடுகளை தெரிந்த அளவுகளாக மாற்ற முடிகின்றது.
  • Wikipanion மூலம் விக்கிபீடியாவை எளிதாக படிக்க முடிகின்றது.
  • Airsharing மூலம் கணிணியிலிருக்கும் கோப்புகளை ஐபோனுக்கு கொண்டுவர முடிகின்றது.
  • Box.net மூலம் இணையத்தில் சேமித்து வைத்திருக்கும் கோப்புகளை பார்வையிட முடிகின்றது.
  • Fring மூலம் இலவச அல்லது குறைந்த விலையில் சர்வதேச போன்கால்கள் செய்ய முடிகின்றது.
  • Flashlight மூலம் இருட்டில் வெளிச்சம் கிடைக்கின்றது.
  • Voicenotes மூலம் நம் குரலை எளிதாக பதிவு செய்ய முடிகின்றது.
  • Google mobile app-பிடம் சொன்னாலே போதும்.அது தேடி தருகின்றது.
  • Google earth ஒரு அமேசிங் எக்ஸ்பீரியன்ஸ்.Google Map-ல் இப்போது Streetview-ம் தெரிகின்றது.
  • புதிதாக வந்திருக்கும் The weather Channel தி அல்டிமேட்.




ஒரே சமயத்தில் இரண்டு
வேலை செய்ய
நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில்
ஒரே ஒரு வேலை
செய்வதுதான் கடினமானது.
- மெக்லாலின்.

சுஜாதா "டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு" மேடைநாடகம் இங்கே தமிழில் மென் புத்தகமாக. Sujatha Dr.Narendiranin Vinotha Vazakku Stage Drama in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Wednesday, November 19, 2008

TNO

இணையம் மற்றும் கணிணியை வெகுவாகப் பயன்படுத்தும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு மந்திரம் TNO அதாவது Trust no one. சினிமா பார்த்தல், ரம்மி போடுதல், கார் ரேஸ் ஓட்டுதல் இதையெல்லாம் தாண்டி இன்றைக்கு மிகவும் சென்சிட்டிவான விஷயங்களையும் கணிணியில் கையாளத் தொடங்கியுள்ளோம். ஒரே கிளிக்கில் ஆயிரமாயிரம் டாலர்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றமுடிகின்றது. சாதாரண பேட்டரி சார்ஜர் முதல் ஆப்பிள் நிறுவன ஸ்டாக்குகளை வரை வாங்க, விற்க ஆன்லைனை நாடுகின்றோம். இத்தகைய தருணத்தில் நாம் கணிணியில் செய்யும் ஒவ்வொரு கிளிக்கையும் மிகக் கவனமாகக் கிளிக்கவேண்டியுள்ளது. அது போலத்தான் நாம் போகும் தளங்கள், நாம் நிறுவும் மென்பொருள்கள், இணைய உலகில் நாம் பழகும் நண்பர்கள் எல்லாம் மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். நிஜ உலகுக்கும் ஆன்லைன் உலகுக்கும் ரொம்ப ஒன்றும் வித்தியாசமில்லை. மதுரை நகரப் பேருந்தில் ஜேப்படிகளுக்கு எத்தனை உசாராய் இருப்போமோ அதே போலத்தான் ஆர்குட்டிலும் உஷாராய் இருத்தல் வேண்டும். வழியில் ஹாய் சொன்ன ஒரு மர்ம நபரிடம் எப்படி உங்கள் வீட்டு விலாசத்தை கொடுக்க மாட்டீர்களோ அது போலத்தான் போகும் தளமெல்லாம் உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கைப்பேசி எண்களையும் இட்டுச்செல்லல் அத்தனை நல்ல பழக்கமன்று.

TNO-க்கு வருவோம். மைக்ரோசாப்டின் விண்டோஸ் செர்வர் செயலியை ஐரோப்பிய நாடுகளின் அதிமுக்கிய ரகசிய கணிணிகளில் பயன்படுத்த மாட்டார்கள். அது போலத்தான் சில அரபுநாடுகளும். முற்றிலும் மூடப்பட்ட நிரல் மூலம் கொண்ட ஒரு செயலிக்குள் அதாவது விண்டோசுக்குள் எதாவது ஒரு ரகசிய சுரங்கப்பாதை அமெரிக்காவுக்கு இருக்குமோ என்ற கவலைதான் அதற்கு காரணம். பாருங்கள் உலகின் நம்பர் ஒன் மைக்ரோசாப்டை கூட அவர்கள் நம்புவதில்லை. திறந்த நிரல் மூலம் கொண்ட லினக்ஸ் தான் அவர்கள் தெரிவு. Trust no one. கலியுகத்தில் யாரையும் நம்பக்கூடாதாம்.

பல்வேறு பேங்க் அக்கவுண்டு கணக்குகளையும் ஒரே திரையில் இழுத்து வந்து காட்ட பல மென்பொருள்களும், இணையதளங்களும் இருக்கின்றன.யாரையும் நம்பியதில்லை.உங்கள் பாஸ்வேர்டுகளை பத்திரமாக ஸ்டோர் செய்து வைக்கவென தனியாக வரும் குட்டியூண்டு புரோகிராம்களையும் நான் நம்புகிறதில்லை. நமது பாஸ்வேர்டுகளை அது அதை டெவலப்செய்தவர்களுக்கு ஈமெயில் செய்துகொண்டிருக்கலாம் யாருக்கு தெரியும்? அமேசான் S3-யிலோ அல்லது JungleDisk-கிலோ நீங்கள் அப்லோடு செய்துவைத்திருக்கும் உங்கள் ரகசிய கோப்புகள் உண்மையிலேயே அவை யாரும் ஆக்செஸ் செய்யமுடியாத அளவுக்கு பாதுகாப்பானவையா?. உறுதியாகச் சொல்லமுடியாதே. Again Trust no one.

கடந்த பதிவில் ஜிமெயில் பேக்கப் மென்பொருள் பற்றி எழுதியிருந்தேன். அதிலும் உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுசொல்கொடுத்தால்தான் அதுவால் உங்கள் ஜிமெயிலை பேக்கப்செய்ய இயலும்.ஆனால் அது விசுவாசமாய் அதை உருவாக்கிய டெவலப்பருக்கே உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுசொல்லை கொண்டுபோய் கொடுக்குமாவென்றால் தெரியாது. அது ஓப்பன் சோர்ஸ் இல்லாததால் அதை கணிப்பது மிகவும் கடினம். நமது நண்பர் "மாஸ்டர்" சுட்டிகாட்டியதால் இங்கு இதை தெரிவித்தேன்.அவர் போன்ற நாலும்தெரிந்த நண்பர்கள் இவ்வலைப்பூவுக்கு வந்து செலல், தங்கள் கருத்துக்களை சொலல் எனக்கெல்லாம் மிகவும் பெருமை. எளிதாய் இருக்கின்றதேவென்றுதான் அம்மென்பொருளை முன்கொணர்ந்தேன். ஒரு எச்சரிக்கையையும் செய்திருக்கலாம்.

Trust no one என நாமெல்லாரும் கெம்பீரமாய்ச் சொன்னாலும் சில விசயங்களில் நாம் சிலரை அல்லது சிலவற்றை நம்பித்தான் ஆகவேண்டியிருக்கின்றது. வாழ்க்கையே நம்பிக்கையில் தானே ஓடுகின்றது. கவிஞர் வைரமுத்துவின் "நம்பிக்கை" சின்னத்திரைப்பாடல் என்னோட ஃபேவரைட்.


நட்பு என்பதும் நம்பிக்கை
கற்பு என்பதும் நம்பிக்கை
முயற்சி என்பதும் நம்பிக்கை
நாம் மூச்சு விடுவதும் நம்பிக்கை
-கவிஞர் வைரமுத்து

விடுதலை க.இராசேந்திரன் "ஈழப்பிரச்சனையில்" மென்புத்தகம் இங்கே தமிழில்.Viduthalai Ka.Rajeendran Eela Pirachanaiyil in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Monday, November 17, 2008

ஜிமெயில் பேக்-அப்

இணையத்தில் காணக்கிடைக்கும் பல இலவச மெயில் சேவைகளில் "ஜிமெயில்" இன்றைக்கு நம்மில் பலருக்கும் பிரதான மெயிலாசனமாகிவிட்டது. ஒரே பயனர் கணக்கில் மெயில் அக்கவுண்ட், ஐகூகிள், பிக்காசா, அட்சென்ஸ், ஆர்குட் என்று பலவசதிகள் வைத்துக் கொள்ளலாம் என்பது அதற்கான இன்னொரு காரணம்.அப்படியே மைக்ரோசாப்ட் வழங்கும் ஸ்கைடிரைவ்(5 GB) போல கூகிளும் சீக்கிரம் ஜிடிரைவ் வழங்கினால் நன்னா இருக்கும்.

உங்கள் ஜிமெயிலிலிருக்கும் மின்னஞ்சல்களையெல்லாம் இறக்கம் செய்து உங்கள் கணிணியின் ஹார்ட் டிரைவில் பாதுகாப்பாக சேமித்துவைத்துக்கொள்ள வேண்டுமா?
பின்பு நேரம்கிடைக்கும் போதெல்லாம் இணைய இணைப்பில்லாத போதும் அம்மெயில்களை அட்டாச்மெண்ட்களோடு திறந்து படிக்கவேண்டுமா? பழையதொரு ஜிமெயில் அக்கவுண்டிலிருக்கும் உங்கள் மின்னஞ்சல்களையெல்லாம் புதியதொரு உங்கள் ஜிமெயில் அக்கவுண்டுக்கு மாற்றவேண்டுமா? இரு வேறு உங்கள் ஜிமெயில் அக்கவுண்டுகளை ஒன்றிணைக்க வேண்டுமா?

எளிய இலவச Gmail-Backup டூல் மேற்கண்ட சூழ்ச்சிகளையெல்லாம் உங்களுக்கு செய்கின்றது. ஒரே கண்டிசன். உங்கள் ஜிமெயிலில் IMAP-ஆனது enable செய்யப்பட்டிருக்க வேண்டும்.
விண்டோசில் மட்டுமல்லாது லினக்சிலும் இந்த பயன்பாட்டை பயன்படுத்தலாம் என்பது கூடுதல் விசேசம்.

Download from here

http://www.gmail-backup.com




எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்;
எதிர்பார்த்தால் இறுதிவரை
எதையும் சாதிக்காமலே போய் விடுவீர்கள்!
-எட்மண்ட் பர்சி

எழிலன் "இருவரி முத்துக்கள்" கவிதைகள் நூல் பகுதி1 இங்கே தமிழில் மென் புத்தகமாக. Ezhilan Iruvari Muthukal Part1 kavithaikal in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Friday, November 14, 2008

மேற்கே உதிக்கும் சூரியன்

இஸ்லாமிய மத நம்பிக்கைகளின் படி இந்த யுகத்தின் முடிவு நாள் நெருங்குவதை "மேற்கே உதிக்கும் சூரியனை" அடையாளமாக வைத்து கண்டுகொள்ளலாம் என்பார்கள். "மேற்கிலிருந்து சூரியன் உதயமாகாத வரை மறுமை நாள் வராது. அவ்வாறு அது மேற்கிலிருந்து உதயமாகும்போது அதைப் பார்த்துவிட்டு மக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக இறைநம்பிக்கை கொள்வார்கள்." என்று ஒரு வாக்கியம் இருக்கின்றது. இப்படி எழுத்தின்படியேயாக நிஜ சூரியன் மேற்கே இருந்து உதித்து வருவது என்பது சாத்தியமா என்பது பற்றி பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. அவ்வாறாக சூரியன் மேற்கே உதிக்க வேண்டுமானால் பூமி தன் சுழலும் திசையை மாற்றி எதிர்புறமாக சுற்ற வேண்டும். ஆனால் அதற்கான சாத்தியங்கள் மிகமிகக் குறைவு. அதுவே இன்னொரு யூகத்தின் படி அது தன் புலத்தை தலைகீழாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக நம்பப்படுகின்றது. இதனால் வட தென் துருவங்கள் இடம்மாறி சூரியன் நமக்கு மேற்கே உதிப்பதாய் தோன்றும் எனவும் சிலர் கருத்து கூறுகின்றனர். ஒரு சில ஆய்வுகள் பூமியின் வட்டப்பாதையை கூர்ந்து நோக்கும் போது இச் சம்பவம் 2012 முதல் 2016 க்குள் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றன.ஒரு காந்தத்தின் எதிர்புலத்தைக் கண்ட இன்னொரு காந்தத்தின் எதிர்புலமானது வெட்கப்பட்டு சுழன்று நகர்வது போல ஒரு மென்மையான தலைகீழ் சுழற்சியாய் இது இருக்கும் என நம்பப்படுகின்றது. இதையேத் தான் நாஸ்ரடாமஸ் தாத்தா "Great shift on Earth"என சொல்கின்றாராம்.

இது இப்படியிருக்க இஸ்லாமிய வேர்களைக்கொண்ட ஒரு எளிய மனிதர் மேற்கே பலம்பொருந்திய நாடு ஒன்றுக்கு அதிபராகும் வாய்ப்பு இப்பொழுது கிட்டியிருகின்றது. மேற்கே இப்படியான ஒரு நபர் உதிக்கப்போவதைத்தான் அவ்வாக்கியம் குறிக்கின்றது என இன்னொரு சாரார் இதற்கு விளக்கம் கொடுக்க முயல்கின்றார்கள். அதாவது அந்த தீர்க்கதரிசனம் லிட்டரலாக நிறைவேறாமல் இது போன்ற ஒரு அரசியல் சம்பவமாகக் கூட அது நிறைவேறலாம் என்பது அவர்கள் வியாக்கியானம். போதாக்குறைக்கு அவரின் சின்னமும் Rising Sun-னாக இருப்பது சரியான கோயின்சிடன்ஸ்.

தினமும் நடக்கும் அசாதாரண செய்திகளை பார்க்கும் போதும் கேட்கும் போதும் இன்றைய உலக சூழலில் ஒரு Great shift அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் உலகுக்கு அவசியம் என்றே தோன்றுகின்றது.ஆனால் அதற்காக பூமியே தன் திசைகளை மாற்றிக்கொள்ளுமா என்பது தெரியாது.

அதுவெல்லாம் இருக்கட்டும்.அப்படியானால் அந்த மனிதனைப்போலவே பேசும் அதிசயப் பிராணி ஒன்றும் உலகத்தில் தோன்றும் எனவும் சொல்லப்பட்டுள்ளதே என கேட்கின்றீர்களா? அது தான் மனிதனைப்போலவே பேச ரோபாட்டுகள் வந்துவிட்டனவே.



மரியாதைக்கு விலை கிடையாது.
ஆனால் அது அநேகரை விலைக்கு வாங்கும்
-மாண்டேகு

இராமலிங்க அடிகள் வரலாறு இங்கே தமிழில் மென் புத்தகமாக. History of Thiru Arutprakaasa Vallalar in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Tuesday, November 11, 2008

டாரண்ட் உலகம்

This summary is not available. Please click here to view the post.


Email PostDownload this post as PDF

Saturday, November 08, 2008

ஆயில் கிரகணம்

பல சந்ததிகளுக்கொருமுறை வரும் முழு சூரியகிரகணத்தை பார்ப்பதுபோல அந்த கேஸ் ஸ்டேசனின் விலைப் பலகையையே பார்த்துக் கொண்டிருந்தேன். கேலன் பெட்ரோல் விலை $1.97 என்று எழுதி இருந்தது.இனிமேல் இந்த ரேஞ்சில் பெட்ரோல் விலையை என் வாழ்நாளில் நான் பார்ப்பேனோ தெரியாது.முடிந்தால் ஒரு போட்டோ எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக்கச் சொன்னேன் கோபாலிடம்.நம் குழந்தைகளிடம் காட்டலாமே என்றேன்.நிஜ உலகின் கேலன் பெட்ரோல் விலை $4.01 தான்.பொருளாதார மந்தம் காரணமாக இவாள் கீழே இறங்கி வந்திருக்கிறார்கள். Dow,Sensex,Nikkei-காரர்கள் எல்லாம் அவர்களின் கரடி போக்கை விட்டு விட்டு மீண்டும் காளை ஓட்டத்துக்கு வரும் போது பெட்ரோல் விலையும் விண்ணை தொட்டுவிடும் என்கின்றேன் என்றேன். ஆனால் வழக்கம் போல கோபால் இந்த என் கருத்துக்கும் உடன்பட மறுத்துவிட்டான்.

முழு மின்சாரக் கார்களை இன்னும் ஏனோ ஆராய்ச்சிக் கட்டுரைகளில் மட்டுமே பார்க்கமுடிகின்றது. ஷோரூமில் என்றைக்கு பார்க்கப்போகின்றோமோ? சிக்காகோவிலிருந்து நியூயார்க்கு தரைவழி செல்லும் போது குறைந்தது மூன்று முறையாவது பெட்ரோல் டாங்கை நிரப்பவேண்டும்.இதுவே மின்சாரக்கார் எனில் ஐந்து முறை வழியில் காரை நிறுத்தி கார் பேட்டரியை சார்ஜ்செய்ய வேண்டும். ஒரு முறை சார்ஜ் செய்ய அரை மணிநேரம் என எடுத்துக்கொண்டாலும் இரண்டரைமணிநேரம் பயணத்தில் வேஸ்ட். இதுவே பெட்ரோல் காரானால் நிமிடத்தில் பில்அப் செய்துகொண்டு போய்கொண்டே இருக்கலாம். இந்த சிக்கலை போக்க Better Place எனும் நிறுவனம் தானியங்கி "பேட்டரி மாற்றுமிடங்களை" அங்காங்கே நிறுவும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் படி நூறு மைல்கள் நீங்கள் காரோட்டியவுடன் வழியில் வரும் அடுத்த "Battery switching station"-ல் போய் நீங்கள் எளிதாக உங்கள் வாகனத்தின் மின்கலத்தை மாற்றிகொள்ளலாம்.எல்லாமே தானியங்கி.கார் வாஷ் நிலையங்கள் போலவே நீங்கள் காரைவிட்டு இறங்கத் தேவையில்லை.அதுவே உங்கள் காரின் பேட்டரியை மாற்றித் தந்துவிடும்.இதனால் பேட்டரியை சார்ஜ் செய்யும் தொல்லை இல்லை.விலையும் மலிவு.சுற்று சூழலும் சுத்தமாகும் என்பது அவர்களின் கணக்கு.

ஏற்கனவே இஸ்ரேல் மற்றும் டென்மார்க்கில் இதுமாதிரியான Electric Recharge Grid-கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.இந்த வரிசையில் ஆஸ்திரேலியாவும் சமீபத்தில் இணைந்துள்ளது. (அமெரிக்காவில் இன்னும் வரவில்லை. ) பெட்ரோலுக்கு மாற்றாக பார்க்கப்படும் இந்த பார்வை சற்று சுவாரஸ்யமாகவே இருக்கின்றது. எனினும் ஆயிலை மட்டுமே நம்பி வாழும் பல நாடுகளுக்கு இது நற்செய்தியில்லாததால் பல அரசியல் இடையூறுகளை இது கடக்கவேண்டி வரும்.



“ஊக்குவிக்க ஆளிருந்தால்
ஊக்கு விற்கும் ஆள் கூடத்
தேக்கு விற்பான்!”
-கவிஞர் வாலி

ரோடுசைட் ரோமியோ தமிழ் காமிக்ஸ் படக்கதை இங்கே தமிழில் மென் புத்தகமாக. Roadside Romeo Tamil Comics pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Thursday, November 06, 2008

வரும் யுட்டிலிட்டி கம்ப்யூட்டிங்

நோட்புக்குகள் என அறியப்பட்ட மடிக்கணிணிகள் இப்போது இன்னும் எடைகுறைந்து / வசதிகள் குறைந்து / விலைகுறைந்து நெட்புக்குகள் (netbooks) எனும் பெயரில் சந்தைகளில் வந்திருக்கின்றன.சிலர் இதை மினி நோட்புக் என்கின்றனர். இன்னும் சிலரோ இதை UMPC அதாவது Ultra-Mobile PC என்கின்றனர். விலை 300 டாலர் அளவில் இருக்கும்.பள்ளி பொடிசுகளுக்கு் படம் வரைய புரோகிராம் போடவென வாங்கிக் கொடுக்கலாம். அதில் DVD டிரைவையெல்லாம் எதிர்பார்க்கக்கூடாது. 400 பக்க நோட்டுப்புத்தகம் ஒன்றை விரலிடுக்கில் தூக்கித்திரியும் கல்லூரி இளைஞன் போல தூக்கித் திரியலாம். சிலதுகளின் ஹார்டிரைவுகள் SSD அதாவது Solid-state டிரைவுகள் கொண்டிருக்கும். சராசரி ஹார்டிரைவ் போல் இதில் டிஸ்க், ஸ்பிண்டில், ஹெட் எல்லாம் இருக்காது. வெறும் சிப் தான் டிரைவ். அதனால் நம் ஆசாமிகளின் குலுக்கல்களுக்கெல்லாம் இந்த நெட்புக்குகள் தாக்கு பிடிக்கும். பூட்டிங்கும் வேகமாக இருக்கும் என்கின்றார்கள். கூடவே இந்த நெட்புக்குகள் அதிக நேரம் மின்னிணைப்பின்றி ஓடும் சக்தி வாய்ந்தனவாம். கண்டிப்பாக வயர்லெஸ் கார்டுவசதி கொண்டிருக்கும்.

பெரும்பாலான வேலைகளை ஆன்லைனிலேயே செய்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.அதனால் தான் அதன் பெயர் நெட்புக். வலைமேயலாம் மின்னஞ்சல் பார்க்கலாம்.மைக்ரோசாப்ட் ஆபீஸூக்கு பதில் ஆன்லைனிலேயே இருக்கும் இலவச Google Docs-ன் word processor அல்லது spreadsheet-ஐ பயன்படுத்தலாம். உங்கள் நெட்புக்கில் எல்லா மென்பொருள்களையும் நிறுவியிருக்க எதிர்பார்க்கக்கூடாது.

இது அப்படியே நம்மை சீக்கிரத்தில் யுட்டிலிட்டி கம்ப்யூட்டிங் அல்லது கிளவுட் கம்ப்யூட்டிங்கில் (Cloud computing) கொண்டு போய் விடும். மாதம் ஒன்றாம் தியதி ஆனால் மின்சாரபில், தண்ணீர்பில், தொலைபேசிபில் கட்டுவது போல எதிர்காலத்தில் மைக்ரோசாப்டுக்கோ அல்லது கூகிளுக்கோ மாதம் கொஞ்சம் காசு கட்டுவீர்கள்.அவர்களின் எல்லா மென்பொருள்களும் உங்களுக்கு ஆன்லைனிலே தயாராக இருக்கும்.உங்கள் போட்டோக்கள் பாடல்கள் வீடியோக்கள் இன்னும் பிற கோப்புகள் எல்லாம் உங்கள் நெட்புக்கிலிராமல் எங்கோ ஒரு செர்வரில் சேமிக்கப்பட்டிருக்கும். தேவைப்பட்டதும் நொடியில் கிளிக்கி உங்கள் நெட்புக்கில் கொண்டுவரலாம். ரசித்துக்கொள்ளலாம். உங்கள் சி டிரைவ் எப்போதுமே காலியாக இருக்கும்.எப்படி இருக்குது கதை.

அமெரிக்கா வாழ் நண்பர்களுக்கு ஒரு டீல் சேதி. இந்த சனிக்கிழமை வால்மார்ட்டில் சேல் போட்டிருக்கிறார்கள். ஒரு Compaq மடிக்கணிணியின் விலை $298. மாடல் விவரங்கள் Compaq CQ50-139WM 15.4" laptop WITH 2GB RAM and 160GB HD.ஊருக்கு கொண்டு போக கிப்ட் ஆச்சுது.



ஓடத் தொடங்குமுன்
நடக்க பழகிக்கொள்வோம்.

முனிசாமி "மூலிகை மர்மம்" தமிழ் மருத்துவ நூல் இங்கே தமிழில் மென் புத்தக வடிவில். Munisami Mooligai Marmam Medicine in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

ரட்சகன்

கிடுகிடுவென நடுங்கும் குளிரில் காலை ஏழு மணிக்கெல்லாம் குளிர் குல்லாவையும் குட்டைப்பாவாடை சீருடைகளையும் அணிந்து கொண்டு மஞ்சள் வண்ண பள்ளிப் பேருந்துக்காக காத்திருக்கும் சிறார்களை பார்க்கும் போது பாவமாய் தான் இருக்கும்.சாளர சிட்டுக்குருவிகளின் கீச்சுகளோடு விடியலில் இவர்களின் கலகலபேச்சும் என்னை எழுப்பிவிடும். இன்னும் தூங்கிக்கொண்டிருப்பேன்.பாவம் அவர்களின் பெற்றோர்கள்.எனக்கும் ஒருவன் இருக்கின்றான்.

கதவை தட்டி என்னை எழுப்பி "அங்கிள் நான் சொல்லலை.அவர் ஜெயிச்சுட்டார்"-னு ஓவென உற்சாகம் பொங்க சொல்லி விட்டு பள்ளிக்கு பறந்து போனான் பக்கத்துவீட்டு சிட்டு.ஒன்பது வயது நண்பன்.பாதி கழுதை வயதாகின்றது எனக்கு.அரசியல் பேச ரொம்பவும் யோசிக்கின்றேன்.

நியூஸ்வீக் "The World Hopes for Its First President" என்று தலைப்பிட்டிருந்தது. உலகத்தின் முதன் அதிபர் என அவரை பிரகடனபடுத்தியிருந்தது.அவ்வளவு விறுவிறுப்பு உற்சாகம் எதிர்பார்ப்பு உலகமெங்கும்.எந்த பேதமும் இன்றி எல்லோரும் விரும்பும் தலைவராய் அவர் தெரிகின்றார். அதற்கேற்றாப்போல் அவரும் வெற்றியுரையாற்றும் போது எல்லைகளை கடந்து எல்லா மக்களையும் நினைவுகூர்ந்து "மாற்றத்துக்காக" விளித்திருந்தார். மக்கள் பெரும் சிக்கல்களில் தவிக்கும் போதெல்லாம் அதிலிருந்து தங்களை காப்பாற்ற கடவுள் அவதாரமாக தோன்றுவார் என்பார்கள். உலகமே இவர் மேல் "நம்பிக்கை" வைத்திருக்கின்றது.

ஐரோப்பிய ஐரிஷ் பிண்ணனி கொண்ட அமெரிக்க அம்மா வெள்ளை நிறத்தவர், ஆப்ரிக்க அப்பா கருப்பு நிறத்தவ்ர், பிறந்தது ஹவாய், வளர்ந்தது ஆசிய இந்தோனேசியா. இஸ்லாமிய சூழலில் பிறந்துவளர்ந்து கிறித்தவ சூழலில் வாழ்ந்து கொண்டிருப்பவர். கையில் எப்போதும் ஒரு ஹனுமன் சிலை இருக்கும் என கேள்விப்பட்டேன்.இப்படி இவரில் உலகம் முழுக்கவும் கலந்திருக்கின்றது.

ரோலர்கோஸ்டர்களில் போகும் முன் "Buckle UP" என்போம்.உற்சாகத்திலும் கத்துவார்கள். பயத்திலும் கத்துவார்கள்.முழுசுற்றும் முடியும் வரை நம்மால் எதுவும் செய்யமுடியாது. கத்திக்கொண்டே இருப்போம் காரணம் தெரியாமல்.



ஒரு விளக்கு
இன்னொரு விளக்கை
ஏற்றுவதால் அதற்கு இழப்பு ஒன்றும் இல்லை.

10ம் வகுப்பு சிறுகதைகள் தொகுப்பு இங்கே தமிழில் மென் புத்தகமாக. 10th Stnadard Short Stories in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Monday, November 03, 2008

உன் மொழி

தலைகீழாக ஆங்கில எழுத்துக்களை கவிழ்த்து வைத்து எழுதியிருக்கும் மொழி தெரியாத வலைபக்கம் ஒன்றுக்குள் அகப்பட்டுக் கொண்டாலும் ஒரு நம்பிக்கை இருப்பதுண்டு. கூகிளும் யாகூவும் எப்படியாவது கை கொடுக்கும் என்று. அதன் இலவச மொழிபெயர்ப்பு சேவைகள் நமக்கு அவற்றை மொழிபெயர்த்து தருமே.

கூகிளின் மொழிபெயர்ப்பு சேவை ஏறத்தாழ 34 மொழிகளை நமக்கு புரியவைக்கிறது.
http://translate.google.com/translate_t#

அது போலத்தான் யாகூவின் பாபேல்பிஷ் சேவையும்.
http://babelfish.yahoo.com/

நேற்று இப்படித்தான் கூகிள் கண்கட்டி என்னை ஒரு இணையதளத்துக்கு இழுத்து சென்றிருந்தான்.ஆங்கில abcd-கள் வைத்து தான் எழுதியிருந்தார்கள்.ஆனால் என்ன மொழி என கொஞ்சமும் புரியவில்லை.எங்கும் அது பற்றிய தகவல்களையும் கொடுக்கவில்லை. குறைந்தது அந்த மொழி என்ன மொழி என தெரிந்தாலாவது மேலே நான் சொன்ன மொழிபெயர்ப்பு சேவைகளை பயன்படுத்தலாம்.அது என்ன பாஷை என தெரியாமல் அந்த மொழி பெயர்ப்பு சேவையை எப்படி நாம் பயன்படுத்துவதாம்.அப்போது தேடியபோது கிட்டிய சேவை தான் language identifier அல்லது language detector.தலைகால் புரியாத அந்த உரைநடையை கொஞ்சம் காப்பி/பேஸ்ட் செய்தால் இச்சேவை அது என்ன மொழி என கண்டு பிடித்து கொடுக்கின்றது.

http://ruphus.com/identify/

மகிழ்ச்சியாய் இருந்தது. அதனால் பதிவாக்கிட்டேன்.



ஒருவன் கற்பிக்கும் போது
இருவர் கற்றுக்கொள்கின்றனர்.
-ராபர்ட் ஹாஃப்

ஆங்கிலம் வழி தமிழ் கற்க மென்புத்தகம் Colloquial Tamil - The Complete Course for Beginners - Learn Tamil through English pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Sunday, November 02, 2008

ஐந்து பென்டிரைவ் பாதுகாப்பு மென்பொருள்கள்

முன்பெல்லாம் கணிணி வைரஸ்கள் ஃப்ளாப்பி தட்டுகள் வழியே பரவின. பின்பு அவை பரவ கணிணி நெட்வொர்க்கை தேர்ந்தெடுத்தன. இப்போதெல்லாம் கணிணி வைரஸ்கள் பெரும்பாலும் ஜம்ப் டிரைவுகள் அல்லது பென்டிரைவுகள் எனப்படும் USB டிரைவுகள் வழியே பரவுகின்றன.அலுவலக வளாகத்தில் இலவசமாக கீழே கண்டெடுத்த USB டிரைவை அப்படியேக் கொண்டு தைரியமாக கணிணியில் செருகக் கூடாது. அதன் Autoplay வசதி உங்கள் கணிணியில் வினையை விதைத்துவிடலாம்.

USB டிரைவுகள் வழியே பரவும் வைரஸ்களிலிருந்து தப்பித்துக்கொள்ள இங்கே சில யோசனைகள்:

1.உங்கள் கணிணியில் இலவச USB Firewall ஒன்றை நிறுவிக்கொள்ளலாம். எப்போதெல்லாம் ஒரு பென்டிரைவை உங்கள் கணிணியில் செருகுகின்றீர்களோ அப்போதெல்லாம் அது ஒரு சோதனை செய்து வைரஸ்மாதிரியான கோப்புகள் தென்பட்டால் அது உடனே உங்களை உஷார்படுத்தும்.
USB Firewall Download Link

2.Tweak UI எனும் மைக்ரோசாப்டின் இலவச மென்பொருளை பயன்படுத்தி இது போன்ற removable driveகள் உங்கள் கணிணியில் Autoplay ஆவதை தடுக்கலாம். அதனால் தானே ஏகப்பட்ட பிரச்சனைகள்.
Tweak UI Download Link

3.ClamWin எனப்படும் இலவச Portable ஆன்டிவைரஸ் மென்பொருளை உங்கள் பென்டிரைவில் வைத்துக்கொள்ளலாம். அவ்வப்போது அவசரத்துக்கு ஸ்கேன் செய்துகொள்ள உதவும்.
ClamWin Download Link

4.உங்கள் கணிணியின் USB டிரைவை அப்பப்போ enable அல்லது disable செய்துகொள்ள USB Drive Disabler எனும் இலவச மென்பொருளை பயன்படுத்தலாம்.
USB Drive Disabler Download Link

5.சில பிரபல ஃப்ளாஷ் டிரைவ் வைரஸ்களை,வார்ம்களை ஒழிக்க Flash Disinfector உங்களுக்கு உதவலாம்.
Flash Disinfector Download Link



புற்கள் தாக்குபிடிக்கும்
புயலில் புன்னைமரங்கள் வீழ்ந்துவிடுகின்றன.

பெரியாரின் "பெண் ஏன் அடிமையானாள்" மென்புத்தகம் இங்கே தமிழில். Periyar Pen Yeaan Adimaiyaanaal in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்