பொதுவான மற்றும் தனிநபர் குடும்ப வீடியோக்களை வலை ஏற்றம் செய்வது ஒன்றும் இப்போதெல்லாம் புதிதல்ல. பலரும் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள். தனிப்பட்ட அல்லது குடும்ப சம்பந்த பட்ட வீடியோக்களுக்கு கூடுதல் கவனம்
செலுத்துதல் நலம். அவற்றை உங்களுக்கு தெரிந்த நண்பர்களிடையே அல்லது உறவினர்களிடையே மட்டும் பகிர்ந்து கொள்ள வசதிகள் இது மாதிரி வீடியோ ஷேரிங் சைட்களில் உள்ளன. உங்கள் அப்லோடட் வீடியோக்களை Public ஆக்காமல் Unlisted அல்லது Private ஆக்கலாம். இதனால் கண்டவர்களும் உங்கள் வீடியோக்களை காணமாட்டார்கள். நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மட்டும் அந்த சுட்டியை மெயில் பண்ணலாம் அல்லது உங்கள் குடும்ப வெப்சைட்டில் மட்டும் அதை ஓடவிடலாம். மன்னிக்கவும்.இத்தகவல்கள் பிரைவசி விரும்பிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
5 நிமிட 10 நிமிட வீடியோக்களுக்கு தான் Youtube சரிப்பட்டு வரும். அரை மணிநேர அல்லது ஒன்று, இரண்டு மணிநேர நெடு நெடிய வீடியோக்களை வலை ஏற்றம் செய்ய Google Video-வை பயன் படுத்துங்கள். வீணாக வீடியோவை வெட்டிக் கொண்டிருந்து நேரத்தை விரயமாக்க வேண்டாம்.
நண்பர் ராஜசேகரன் கேட்டிருந்தார்.Windows Movie maker-ல் டிஜிட்டல் இமேஜ் களை mpeg file முறையில் ஸ்டோர் செய்ய முடியதலால் CD யில் write செய்து மற்றும் CD பிளேயர் - ல் PLAY செய்து பார்கமுடிவதில்லை. போட்டோ ஸ்டோரி இதே மாதிரி தான்.இதற்கு தங்களின் தீர்வு?
சரியாய் சொன்னீர்கள். இவை உங்களுக்கு .wmv எனும் ஃபார்மேட்டில் தான் வீடியோக்களை தரும். இந்த .wmv -யை எளிதாய் .mpg -க்கு மாற்றலாம். இதற்கு இலவச சூப்பர் மென்பொருள் ஒன்று உள்ளது.அதன் பெயரே Super தான்.
இம்மென்பொருளை கீழ் கண்ட தளத்திலிருந்து இறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது எனது நேரடி இறக்க சுட்டியை சொடுக்கவும். இதை நிறுவி ஓடவிட்டால் எதோ ஒரு காம்ளிகேட்டட் மென்பொருள் ஓட்டுவது போல தான் உணர்வீர்கள். ஆனால் உண்மையில் இது மிக எளிதான மென்பொருள். எந்த வீடியோ/ஆடியோ வகைகளையும் எந்த வீடியோ/ஆடியோ வகைகளுக்கும் மாற்றலாம்.
1.Select the Output container -ல் என்ன ஃபார்மேட் ஆக்க வேண்டும் என தெரிவுசெய்ய வேண்டும்.இங்கே உங்கள் சூழலுக்கு mpg VCD Compliant தெரிவுசெய்ய வேண்டும். வேறெந்த எண்களையும் மாற்ற வேண்டாம்.
2.பின் வலது கிளிக் செய்து Add Multimedia file(s) -கிளிக்கி உங்கள் .wmv கோப்பை காண்பியுங்கள்.
3.Output File Saving Management-ல் மாற்றப்பட்ட .mpg எங்கே வைக்கப்படவேண்டும் என சொல்லலாம்.
4.இம்மூன்றும் பண்ணிவிட்டு Encode (Active Files)-ஐ கிளிக்குங்கள்.
சூப்பர் வேகமாய் இந்த கன்வெர்சன் முடிந்து விடும்.
Super Video/Audio Converter Homepage
http://www.erightsoft.com/SUPER.html
Direct download Link
Super Converter
நண்பர் இளைய கவி கேட்டிருந்தார்.எனக்கு விஜய் டிவியில் வரும் மதுரை நெடுந்தொடரின் தலைப்பு பாடலும் அதில் வரும் HUMMING கும் MP3 கோப்பு வடிவில் கிடைக்குமா? பதில் அறிய மிக்க ஆவலாய் உள்ளேன்.நன்றிகள் பல.
இதோ
Madurai Vijay TV Serial MP3 Song Download

நண்பர் சுதாகர் கேட்டிருந்தார். இளையராஜாவின் வெளியீடான how to name it மற்றும் nothing but wind ஆல்பம்களை எங்கே download செய்வது? தயவுசெய்து link கொடுக்கவும்.
இதோ
HTNI
NBW
மீடியா ஸ்பெஷல் பதிவையொட்டி இங்கே மல்டிமீடியா வடிவிலமைந்த படம், குரல், வரி்களோடுகூடிய கண்கவர் ஆத்திச்சூடி புத்தகம் பிளாஷ் வடிவில். Aathichudi Tamil Poem in Flash Format with Pictures, Voice and Caption.Download. Right click and Save.Download
Download this post as PDF


நூற்றுக்கணக்கான தமிழ் எழுத்துருக்களை வைத்துக்கொண்டு தளத்துக்கு ஒரு எழுத்துருவென கணிணியில் நிறுவி கஷ்டப்பட்டு வந்தது அந்தக்காலம். இப்போது யூனிக்கோடு (Unicode) அல்லது ஒருங்கெழுத்து எனப்படும் தமிழ் எழுத்துரு பரவலாக எல்லா இணையதளங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. விகடன் போன்ற விஐபி வெப்தளங்களும் கடைசியாக இந்த எழுத்துருவின் பக்கம் வந்து விட்டன. இன்னும் சில விஐபி வெப்தளங்களும் சரியான சமயத்துக்காக காத்து இருக்கின்றார்கள்.யூனிக்கோடு வந்தாலும் வந்தது தமிழ் எழுத்துக்கள் இணையத்தில் நெருப்புபோல் பரவிவிட்டது.அது ஒளியும் கொடுக்கின்றது, கூடவே புகையும் வருகின்றது.
கொஞ்ச நாட்களாகவே யாரோ என்னை கண்காணிப்பது போலவும்,நோட்டம் விடுவது போலவும் தோன்றிக் கொண்டே யிருந்தது. இன்றைக்கேனும் எப்படியும் எல்லார் கண்ணிலும் மண்ணை தூவிவிட்டு யாருக்கும் தெரியாத கண்காணாத பிரதேசத்திற்கு போய்விடவேண்டும் என தோன்றியது.அதற்கான முயற்சியிலும் இறங்கிவிட்டேன்.
இணைய இணைப்புப் பட்டையானது (Bandwidth)நம்மிடையே தடிமனாக தடிமனாக முன்பு சாத்தியமில்லாதன வெல்லாம் இன்று சாத்தியகிக் கொண்டிருக்கின்றன. மெல்லிய டயலப் கனெக்ஸனை வைத்துக்கொண்டு மோடம் வழி டயல் செய்து அது தான்பாட்டுக்கு ஒரு பாட்டுப்பாடிக் கொண்டு விஎஸ்என்எல்லோடு இணைய, சில நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். பின் சிறிது நேரத்தில் இணையஇணைப்பு பட்டென கட்டாகிவிடும். படு பேஜாரா போய்விடும். அந்த இனிய மோடம் பாடும் குரலை கேட்டு ரொம்பநாளாகி விட்டது. சமீபத்தில் "காதலர் தின"த்தில் வரும் "ஓ மரியா" பாடலில் அந்த மோடம் பாடும் பாடலை கேட்க நேரிட்டது. ஆச்சர்யமாய் இருந்தது.எவ்வளவு வேகமாய் போய் கொண்டிருக்கிறோம்.
புராதன மன்னர்கள் காலங்களில் பொற்காசுகள் (தங்க காசுகள்) மற்றும் வெள்ளி காசுகள் புழங்கி வந்தன என்பார்கள்.இதுமாதிரியான பூமியின் அபூர்வ உலோகங்களில் இருந்து காசுகள் செய்ததால் அக்காசுகள் தானே தனக்கென ஒரு மதிப்பை தாங்கி உருக்காலைகளை விட்டு வெளிவந்தன. இன்றும் தங்கம் மற்றும் வெள்ளிகளின் மதிப்பு நீடித்திருக்கின்றது. கடவுள் மனிதனுக்கென அளித்த பணம் இது தானோ என்னவோ?.
இப்படியாக எப்போதாவது Microsoft-டிடமிருந்தோ அல்லது Yahoo போன்ற பிரபல கம்பெனிகளிடமிருந்தோ உங்களுக்கு மெயில் வந்திருக்கின்றதா?
வித விதமாக பயனுள்ள மற்றும் குப்பை வீடியோக்களால் நிரப்பபட்டுள்ள Youtube.com தளத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் போது எதேச்சையாக கண்ணில் பட்டது Baa Baa Black Sheep வீடியோ பாடல். அழகான வண்ணமயமான கார்டூன் கிராபிக்ஸில் இன்னிசை மற்றும் பாடல் வரிகளோடு நம் எஞ்சினியர்கள் அதை படைத்திருக்கின்றார்கள். இது போல Rain Rain go away யிலிருந்து Hot cross bun வழி Solomon Grundy வரைக்கும் குழந்தைகளின் அனைத்து நர்சரி பாடல்களும் ஒலி/ஒளி வடிவில் இந்த யூடியூப் தளத்திலுள்ளது.என்ன கொஞ்சம் தேட வேண்டும்.



