உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, January 31, 2007

தடயங்களை அழிக்கலாம்!!

CCleaner கணிணியில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயல்களும் எங்கேயோ ஓரிடத்தில் பதிவு பண்ணப்படுகிறது என்றால் அது மிகையில்லை.நீங்கள் சமீபத்தில் போன இணையதளமாகட்டும் அல்லது நீங்கள் சமீபத்தில் கேட்ட பாடல், நீங்கள் சமீபத்தில் பார்த்த வீடியோ, திறந்த கோப்புகள், படங்கள் எல்லாம் எங்கோ ஓரிடத்தில் தடயங்களை விட்டுச் செல்கின்றன.கில்லாடி ஒருவர் கொஞ்சம் தேடினால் உங்கள் கணிணி உங்களை பற்றிய அனைத்து விவரங்களையும் பிட்டு பிட்டு வைத்து விடும்.இதை தவிர்க்க அதாவது நீங்கள் உங்கள் கணிணியில் விடும் தடயங்களை அழிக்க இதோ இரு மென்பொருள்கள்.சமீபத்திய உங்கள் அனைத்து செயல்களையும் நொடியில் அழித்து விடும்.அவையாவன Temporary files Cache, URL history, cookies, Autocomplete form history, Hidden index.dat files. Recycle Bin, Recent Documents, Temporary files and Log files, Registry cleaner,Last download file location etc.


CCleaner

Product Page
http://www.ccleaner.com/

Direct Download Link
http://download.piriform.com/ccsetup136.exe


MRUblaster (Most Recently Used)

Product Page
http://www.javacoolsoftware.com/mrublaster.html

Direct Download Link
http://www.javacoolsoftware.net/downloads/mrublastersetup.exe


Email PostDownload this post as PDF

சொல்லித்தரவா Aalvar Lyrics


திரைப்படம் : ஆழ்வார் (2006)
இசை : ஸ்ரிகாந்த் தேவா
இயக்கம் : செல்லா
பாடியவர்கள் : முகமது சலமது,சாதனா சர்கம்
நடிப்பு : அஜித்,அஸின்

வரிகள்:

பெண்
சொல்லித்தரவா சொல்லித்தரவா சொல்லித்தரவா
ஒண்ணு ஒண்ணா ஒண்ணு ஒண்ணா சொல்லித் தரவா

ஆண்
ஏய் சொல்லிக் கொடுத்தா கத்துக் கொள்ளுற கத்துக்குட்டி நான்
தங்க மீனுக்கே தேவப்படுதே தண்ணித் தொட்டிதான்

பெண்
ஒண்ணுந் தொpயாத கெட்டபையன் நீ தான்
ஏய் எல்லாம் தெரிஞ்ச நல்ல பொண்ணு நான் தான்

ஆண்
ஏ செல செல செல செல நீ தானே செப்பு செல
மல மல மல மல கூத்தாடும் கொல்லி மல

பெண்
அல அல அல அல ஒயாது உந்தன் அல
தல தல தல தல தாழாது உந்தன் தல (சொல்லி)

பெண்
நான் தொட்டதும் பட்டதும் சொட்டிடும் கொட்டிடும்
சக்கரப் பந்தலில் தேன் மாறி

ஆண்
நான் நச்சுன்னு பச்சுன்னு இச்சொன்னு வெச்சதும்
பிச்சுக்கும் பாரு நம்கச்சேரி

பெண்
ஏய் என் கிட்ட உள்ளதெல்லாம்
உன் கிட்ட நான் தந்து விட்டேன்

ஆண்
தந்ததே கொஞ்சமின்னு சுந்தரி நான் கண்டுக்கிட்டேன்

பெண்
பொத்தியே வெச்சாக்கூட பொத்துக்கும் வேளையிது

ஆண்
கொடி கொடி கொடி கொடி நீ காட்டு பச்சக்கொடி
வெடி வெடி வெடி வெடி நான் வெப்பேன் ஒத்த வெடி

பெண்
படி படி படி படி எல்லாந்தான் அத்துப்படி
பிடி பிடி பிடி பிடி என்னெத்தான் விட்டுப்பிடி (சொல்லி)

ஆண்
ஏய் அப்பவும் இப்பவும் எப்பவும் இப்படி
என்னையே சுத்துற பின்னாலே

பெண்
அட நித்தமும் பூத்திhp ஏத்துற ராத்திரி
நித்திரை கெட்டது உன்னாலே

ஆண்
நீ எப்பவும் ஒத்துழைச்சா
எங்கையோ நான் கொண்டு போவேன்

பெண்
மெத்தையில் முன்னும் பின்னும்
குத்துகிற முள்ளை எடு

ஆண்
குத்தினா குத்தட்டுமே காதல் வலி முத்தட்டுமே

பெண்
எட எட எட எட என்னாகும் சின்ன எட
தொட தொட தொட தொட கண்ணீரைக் கொஞ்சம் தொட

ஆண்
நட நட நட நட தள்ளாடும் வஞ்சி நட
தட தட தட தட நான் தாங்க என்ன தட (சொல்லி)

Watch Aalwar Video Songs Here

Aalwar Movie

Tamil Movie lyrics aalwar aalvar aalvaar aalwaar alwar alvar Solli Tharava Solli Soli Tharavaa Soli Sadhana Sargam, Muhamad Salamad Ajith, Asin Chella Srikanth Deva Mohan Natrajan


Email PostDownload this post as PDF

டோலு டோலு Pokiri Lyrics


திரைப்படம் : போக்கிரி (2006)
இசை : மணி சர்மா
இயக்கம் : பிரபு தேவா
பாடியவர்கள் : ரஞ்சித்,சுசித்ரா
நடிப்பு : விஜய்,அஸின்

வரிகள்:

பெண்
டோலு டோலு தான் அடிக்கிறான்
இரு தோலுந் தோலுந்தான் ஒரசுறான்
மேலும் கீழுமாய் இழுக்குறான்
முப்பாலும் கலந்து என்ன கலக்குறான்
புலி மானை வேட்டைதான் ஆடிடுமே காட்டில்
மான் புலியை வேட்டைதான் ஆடுமிடம் கட்டில்
முன்னும் பின்னும் தான் முழுமையா
நான் சொர்க்க நரகத்தின் கலவையா
பெண் இடையும் நிறைவதும் ஒன்று தான்
ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை.

ஆண்
அய்ல அய்ல அடி ஆரியமாலா
அகந்த விழிகள் என்ன கூரியவேலா
ஒய்ல ஒய்ல நீ சில்மிஷ ப்பேரா
சிரிக்கி சிரிப்பு என்ன மந்திரக்கோலா

பெண்
சுட சுட மழையை குளு குளு வெயிலை
முதல் முறை உலகத்தில் கண்டேனே
வெள்ளை நிற இரவை கரு நிற பகலை
முதல் முறை பார்த்தேனே

ஆண்
இடிகளை உரசி புயல்களை அலசி
நடந்தவன் நான் தானே
இது என்ன மாயம் மலர் ஒன்றை பறிக்க
முதல் முறை பயந்தேனே

பெண்
நீ ஞனன நமன நான் யரல வரல
நீ உடைந்து உருக நான் உணர்ந்து பருக
வலப்பக்கம் சுழலும் பூமிப்பந்து திரும்பி
இடப்பக்கம் சுழலுது உன்னாலே
கைப்பிடி அளவு இருக்கின்ற இதயம்
விரிந்தது குடை போலே

ஆண்
இருபது வருஷம் பறவையைப் போலே
சுற்றிச் சுற்றி திரிந்தேனே
இரண்டொரு நொடியில் உனக்குள்ளே வளைய
முழுவதும் தொலைந்தேனே

பெண்
நீ எனக்குள் நுழைய நான் உனக்குள் வளைய
நாம் நமக்குள் கரைய நம் உலகம் குறைய (புலி)

Watch Pokiri Video Songs Here

Pokkiri Movie

Tamil Movie Pokkiri lyrics Asin, Vijay Prabhu Deva Mani Sharma Ramesh Babu Dol Dol Ranjith, Suchitra Prakash Raj, Vadivelu Dolu Dolu Thaan Adikkiran


Email PostDownload this post as PDF

Tuesday, January 30, 2007

கூகிளின் கதை

கூகிள் நிறுவனர்கள்ஸ்டான்போர்ட் பல்கலைகழக மாணவர்கள் இருவர் Larry Page-ம் Sergey Brin-னும் தங்கள் பிஎச்டி ஆய்வுக்காக விளையாட்டாக உருவாக்கிய தேடல் இயந்திரம் தான் Backrub.துவக்கத்தில் இதை உருவாக்கி
முடித்ததும் இந்த தேடல் நுட்பத்தை Yahoo போன்ற பெரும் தலைகள் யாருக்காவது விற்கலாம் என முடிவெடுத்தனர்.வாங்க யாரும் இல்லாததால் 1998-ல் Google என்ற கம்பெனி உருவானது.1998 நவம்பரில்
தான் கூகிள் இணையதளம் முதலாக தலைக்காட்ட தொடங்கி யிருந்தது.ஆரம்பத்தில் பணம் ஒன்றும் அவ்வளவாய் சம்பாதிக்க இயலவில்லை.Sun-னும் IBM-மும் சில Sun Ultra II,F50 IBM RS/6000
செர்வர்களை தானமாக வழங்கியிருந்தனர்.2001-ல் யாகூ கூகிளை வாங்க விலைப்பேசி கொண்டிருந்ததாம்.தேடல் இயந்திரத்தின் வலிமை அறியா யாகூ ஒரு தேடல் இயந்திரத்துக்கு இத்தனை விலையா ($5 Billion) என ஒதுங்கி விட்டது.(அன்று யாகுவிடம் விலைபோயிருந்தால் கூகிள் என்னவாயிருக்கும்?...யூகிக்க கூட இயலவில்லை.)

2004-ல் கூகிள் பங்குகள் வெளியான போது விளம்பரம் இல்லா இந்த வெற்று முகப்பு பக்கம் கொண்ட வலையகம் எப்படி பணம் உருவாக்க போகுது என எல்லாரும் வியந்தனர்.அந்த ஆண்டு முதற்பாதியில் மட்டும் $1.4 billion சம்பாதித்தது கூகிள்.இன்று இது $6.1 billion கம்பெனி.

இதன் Data center 450,000 servers கொண்டது.

பல வகையான செர்வர்கள் 533 MHz Intel Celeron முதல் dual 1.4 GHz Intel Pentium III வரை.

இருக்குமிடங்கள்:Mountain View, California;Virginia; Atlanta, Georgia; Dublin, Ireland; கடைசியாக மிகப்பெரியதாக புத்தம் புதிதாக 2006-ல் The Dalles, Oregon-ல் ஒன்று.

2005 -ல் மட்டும் 8 பில்லியன் பக்கங்களை கூகிள் அட்டவணைப்படுத்தியுள்ளது.

ஆயிரக்கணக்கான x86 செர்வர்களில் தாங்களே உருவாக்கியுள்ள Linux-ல் தாங்களே உருவாக்கிய வெப்செர்வரில் எல்லாவற்றையும் ஓட்டுகிறார்கள்.அவர்கள் வெப் செர்வர் பெயர் GWS/2.1 அதாவது Google Web Server, current Version 2.1.அதாவது Apache-ன் கூகிள் வடிவம் என்கிறார்கள்.

கடைசியா ஒன்று
கூகிள் செர்வர்கள் 450,000-ஐயும் ஓட்ட 20 மெகாவாட்டுகள் மின்சாரம் தேவையாம்.அதாவது மாதம் கூகிளுக்கு கரண்ட் பில் $2 மில்லியன்கள்.அம்மாடியோவ்!!!

கீழே படத்தில் கூகிளின் முதல் முதல் Production Server-ஐ பார்க்கலாம். இப்போது அது மியூசியத்தில்.



Email PostDownload this post as PDF

கருப்பான கையாலே Thamiraparani Lyrics

பாஸ்டன் பாலா என்ன சொன்னாலும் விடுறதாயில்லே :)


திரைப்படம் : தாமிரபரணி (2006)
இசை : யுவன் சங்கர் ராஜா
இயக்கம் : ஹரி
பாடியவர்கள் : கோரஸ்,ரஞ்சித்,ரோஷிணி
நடிப்பு : விஷால்,பானு,நதியா,பிரபு

வரிகள்:

பெண்
கருப்பான கையாலே என்ன புடுச்சான்
காதல் என் காதல் பூப்பூக்குதம்மா.............
மனசுக்குள்ளே பேய் புடுச்சு ஆட்டுதம்மா
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா
அவன் மீச முடிய செஞ்சுக்குவேன் மோதிரமா

ஆண்
செவப்பாக இருக்காளே கோவப்பழமா
கலரு இந்த கலரு என்ன இழுக்குதம்மா
அருகம் புல்லு ஆட்ட இப்போ மேயுதம்மா
பார்வையால ஆயுள்ரேக தேயுதம்மா
இவ காதல் இப்போ ஜோலியத்தான் காட்டுதம்மா (கருப்பான)

பெண்
வெள்ளிக்கிழம பத்திர பன்னன்டு உன்ன பாத்தேனே
அந்த ராகு கால நேரம் எனக்கு நல்ல நேரமே

ஆண்
தண்ணியால எனக்கு ஒண்ணும் கண்டமில்லையே
ஒரு கன்னியால கண்டமின்னு தெரியவில்லையே

பெண்
ஆத்துக்குள்ள மீன்பிடிக்க நீச்சல் தெரியணும்
காதல் கடலுக்குள்ள முத்தெடுக்க பாய்ச்சல் புரியணும் ஐயா

ஆண்
செவப்பாக

பெண்
ஆஹா

ஆண்
இருப்பாளே

பெண்
ஆமா

ஆண்
செவப்பாக ஆ................. ஆ................. (செவப்பாக)

ஆண்
ஓ..... உருக்கி வச்ச இரும்பு போல ஒதடு ஒனக்கு
அட நெருங்கும் போது கரண்டு போல ஷாக்கு எனக்கு

பெண்
ஏ வெட்டு புலி தீப்பெட்டி போல் கண்ணு ஒனக்கு
நீ பாக்கும் போது பத்திக்கிச்சு மனசு எனக்கு

ஆண்
பூ மயிலே எத்தனையோ பூவு இருக்கு
ஒன் பூப்போட்ட பாவாட மேல் எனக்கு கிறுக்கு
யம்மா ஆத்தா ஏஹேய் ஹேய் (கருப்பான)

Watch Thamiraparani Video Songs Here

Thamiraparani Movie

Tamil Movie Thaamirabharani Bharath Reddy Hari Banu, Nadiya, Prabhu, Vishal Yuvan Shankar Raja Karuppaana Kaiyale Lyrics Chorus, Ranjith, Roshini THAMIRABARANI Nathiya, Nassar, Vijayakumar Karuppana Kaiyale Ennai Pidichan J.K.V.Roshini


Email PostDownload this post as PDF

Monday, January 29, 2007

ஃபெராரி தொழிலகம்

Ferrari-Logoபந்தய கார்களுக்கெனவே (Race cars) தோற்றுவிக்கப்பட்ட ஒரு நிறுவனம் ஃபெராரி. இத்தாலியை சேர்ந்த இந்நிறுவனத்தை நிறுவியவர் என்சோ அன்செல்மோ ஃபெராரி என்பவர் (Enzo Anselmo Ferrari-1898).பத்து வயதில் தான் பார்த்த கார் பந்தயம் ஒன்று அவர் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டது.விளைவு 21 ஆம் வயதில் தானும் கார் பந்தயத்தில் குதித்து 23 ஆம் வயதிலேயே சாம்பியனும் ஆனார்.தனது 47ம் வயதில் முதல் ஃபெராரி காரை உருவாக்க ஆரம்பித்த அவர் 1947-ல் தனது முதல் 125S (12 cylinder) காரோடு தொழிற்சாலையை விட்டு வெளியேறினார்.அது முதல் பந்தய கார்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அநேக வகை கார்களை ஃபெராரி வெளியிட்டது.1969 முதல் ஃபெராரி இத்தாலியை சேர்ந்த FIAT நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது.மிகக் குறைந்த அளவே தயாரிக்கப்படும் விலைமிக்க இக்கார்களை இன்றைக்கும் மேற்க்கத்தியவர்கள் ஒரு status symbol-ஆக கருதுகின்றனர்.அந்த Pracing Horse Symbol-ஐ அவருக்கு அறிமுகப்படுத்தியது Countess Baracca என்பவர்.அது Good luck charm-ஐ குறிக்கிறதாம்.மேலே பச்சை-வெள்ளை-சிகப்பு இத்தாலிய தேசிய கொடியையும்,பின்ணணி மஞ்சள் அவர் பிறந்த ஊர் Modena-வின் வண்ணத்தையும் கொண்டுள்ளது.

கீழே ஃபெராரி தொழிலகத்திலிருந்து சில படங்கள்.
Click on the picture to enlarge.









Email PostDownload this post as PDF

Saturday, January 27, 2007

ஸ்காட் டைகர் ரகசியம்

எப்படி ஜாவா கற்றுகொள்வோர் "Hello world" என்ற குட்டி புரோகிராமோடு ஆரம்பிப்பார்களோ அது போல ஆரக்கிள் (Oracle) கற்று கொள்வோருக்கும் ஒரு மந்திரம் உண்டு.அது ஸ்காட் டைகர் - Scott Tiger என்பது.அது ஒரு default user name and password.இதில் ஸ்காட் என்பது புருஸ் ஸ்காட் (Bruce Scott) என்பவரைக் குறிக்கும்.இவர் ஆரம்பகால ஆரக்கிளில் பணிபுரிந்தவர்களில் ஒருவர்.அப்புறமாய் Software Development Laboratories-ல் பணியாற்றினார்.Gupta Technology நிறுவனத்தை (இப்போது Centura Software) 1984-ல் Umang Gupta-வோடு சேர்ந்து நிறுவினார்.பின்பு PointBase, Inc என்ற நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமானார்.Oracle V1, V2 and V3 மென்பொருள்களை வடிவமைத்து எழுதியதில் ஸ்காட்டின் பங்கு பெரும் பங்கு.இதில் SCOTT schema-வை (EMP and DEPT tables) TIGER என்ற பாஸ்வேர்டோடு எழுதியது இவரே.

அப்போ TIGER???
அவரோட செல்லக் குட்டிப் பூனையின் பெயர்.


Email PostDownload this post as PDF

Friday, January 26, 2007

இரவா பகலா

இருளென்று ஒன்றில்லையாம்.வெளிச்சம் இல்லாமையே இருட்டாம்.அப்படி சொல்வதிலும் நியாயம் இருக்கின்றது.ஒளியின் வேகத்தை கணக்கிடும் விஞ்ஞானம் இருளின் வேகம் சொல்லவில்லையே.ஒளி ஒரு துகளாகவோ அல்லது அலையாகவோ இருக்கலாமாம்.இருள்...?-அப்படி எதுவுமே இல்லை.அது ஒரு துகளும் இல்லை அல்லது அலையும் இல்லை.Dark is just a dictionary word என்கிறார்கள்.இது இன்றைய நிலை. நாளை இன்னொறு ஐன்ஸ்டீன் வந்து புதிதாக எதாவது கண்டுபிடிக்கலாம். அதெல்லாம் விட்டு தள்ளுங்க.இந்த இணைய பக்கத்தை பாருங்கள்.

அருமையாய் உலக உருண்டையில் நிகழும் இரவு பகல்கள் எல்லாம் ஒரு நிழலின் அசைவாட்டம் என அழகாய் காட்டுகிறார்கள்.(படம் எடுக்கப்பட்ட போது இந்தியாவில் நடுநிசி மற்றும் அமெரிக்காவில் நடுப்பகல் நிலை.)

http://www.daylightmap.com/

கூடுதலாக இன்னொறு கூகிள் மேப்.மவுசை உலாவ விட்டு பாருங்கள்.அவரவர் நேரம் தெரியும்.எல்லாம் டெவலப்பர்கள் Google Map API-யோடு போடுகின்ற ஆட்டம் தான்.

http://www.qlock.com/time/gmaps?map=1

Google Map to Check world international time and Day Night status


Email PostDownload this post as PDF

டெக்-டூன்ஸ்




Email PostDownload this post as PDF

Wednesday, January 24, 2007

எப்படி இருந்த நான்...



அவ்ளோ பெரிசு அப்போ
மேலே படத்தில் நீங்கள் பார்ப்பது 1956-ல் IBM நிறுவனம் வெளியிட்ட உலகின் முதன் முதல் ஹார்ட் டிஸ்க் கொண்ட கணிணியான 305 RAMAC-யின் ஹார்ட் டிஸ்க்.ஆமாம் அக்காலத்திய அவ்ளோ பெரிய ஹார்ட் டிஸ்க்.பருமன் மட்டுமே அவ்ளோ பெரிது.ஏறக்குறைய ஒரு டன்.உண்மையில் அதன் நினைவு கொள்ளவு வெறும் 5MB-யே.

இவ்ளோ சிறிசு இப்போ
கீழே படத்தில் நீங்கள் பார்ப்பது இன்றைய கின்னஸ் ரெக்கார்ட் உலகின் மிகச் சிறிய ஹார்ட் டிஸ்க் .85 அங்குலத்தில் தபால் தலை அளவில் 4GB நினைவு கொள்ளவுடனான இது 2005-ல் ஜப்பானை சேர்ந்த டொஷிபா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.


Word's first hard disk drive and world's smallest Hard disk drive


Email PostDownload this post as PDF

பாஸூக்கு டிமிக்கி கொடுக்க Boss Key
















காகம் உட்கார பனைமரம் விழுந்த கதையாய் அப்போது தான் சிறிது ரிலாக்ஸாக வேறு வெப்சைட் பக்கம் சென்றிருப்பீர்கள் அல்லது ஒரு கம்யூட்டர் கேம் like சாலிடர், மைன்ஸ்வீப்பர்,பின்பால் ஆட அது பக்கம் போய் இருப்பீர்கள்.வசமாய் சொல்லி வைத்தது போல் அப்போது தான் உங்கள் பாஸ் உங்கள் பக்கம் வருவார்.அது நேரம் வரை நீங்கள் பட்ட பாடு அவருக்கு தெரியாது.இந்த நொடிதான் அவருக்கு புரியும். கம்மென்றிருப்பாரா கன்னா பின்னாவென நிற்பாரா அதெல்லாம் உங்கள் அதிஷ்டம்.

இது போன்ற நேரங்களில் எஸ்கேப் ஆவதெற்கெனவே ஒரு சில மென் பொருள்கள் உள்ளன. அவை பாஸ் கீ (Boss Key) மென்பொருள்கள் எனப்படுகின்றன. ஒரு முன் குறிப்பிட்டு வைத்துள்ள கீபோர்ட் கீயை பட்டென அழுத்தினால் போதும் உங்கள் லீலைகளை பட்டென மறைத்துவிடும் அந்த மென்பொருள்.ஆமாம் விவகாரமான விண்டோஸ் பக்கங்கள் எல்லாம் ஓடிஒளிந்து கொள்ளும்.:) அதற்கு பதிலாய் பாவமாய் சில எக்ஸெல் அல்லது வேர்ட் பக்கங்களை
காட்டும்.

கீழே சில இலவச Boss Key மென்பொருள்களை காணலாம்.சரியாய் இறக்கம் செய்து கணிணியில் நிறுவி நன்றாய் ஓரிரு முறை சோதனை செய்து பார்த்து விட்டு உங்கள் திருவிளையாடல்களை ஆரம்பியுங்கள்.(நினைவிருக்கட்டும் இம்மென்பொருள்களால் உங்கள் கணிணி மற்றும் புராக்ஸி செர்வர்களில் (Proxy Server) பதியும் வரலாற்று தடச் சுவடுகளை (History Traces and logs ) மறைக்க இயலாது.).

ஒரு BossKey-யும் இல்லாவிட்டாலும் Alt-ஐயும் Tab-ஐயும் சேர்த்து தட்டுதல் பட்டென ஒரு விண்டோவை மறைக்க அவசரத்துக்கு நல்லொரு தெரிவு.Alt+F4 விண்டோவை பட்டென மூடிவிடும்.

Boss Key freewares மென்பொருள்கள்

BossKey http://keir.net/bosskey.html
Hocus Pocus http://ferruh.mavituna.com/article/?590
Quick Hide http://www.cronosoft.com/download/qhw/
Window Hide Tool http://www.window-hide.com/
EfreeSoft Boss Key http://www.efreesoft.com/modules/news/article_20688.htm


Email PostDownload this post as PDF

Monday, January 22, 2007

துபாய் மெட்ரோ ரெயில்கள் - ஒரு மெகா புராஜெக்ட்

வளர்ந்து வரும் துபாய் மாநகரின் போக்குவரத்து நெரிசலை சம்மாளிக்க உருவாகி வரும் திட்டமே துபாய் மெட்ரோ ரெயில்கள் திட்டம் - Dubai Metro Transit System.இங்கே அது பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்

ஒவ்வொன்றும் 5 பெட்டிகளுடன் ஏறக்குறைய 100 ரயில்கள் , இந்த ரயில்கள் அனைத்தும் ஓட்டுனர் இல்லா ரயில்கள்.முழுக்க முழுக்க தானாக இயங்குபவை.

பச்சை,சிகப்பு என இரண்டு வழித்தடங்கள் இப்போதைக்கு.இரண்டு லேன்களும் சந்திக்கும் இடங்கள் Al Ittihad Square , Burjuman

Red Line வழித்தடம்-50KM-35 Stations-From The intersection of Sheikh Rashid and Sheikh Khalifa Bin Zayed roads to just before the intersection of Salahuddin and Abu Bakr Al Siddique roads.

Green Line வழித்தடம்-20KM-22 Stations-From Garhoud to Oud Metha Rd.

மொத்தம் 70 கீமீ நீளம்,55 நிறுத்தங்கள்,18 கிமீக்கு குகை பாதைகள்,51 கீமீக்கு மேம்பால தலைமேல் பாதைகள்,ஒரு பெரிய பராமரிப்பு நிலையம் அமைக்கப்படுகின்றது.

மொத்த கட்டுமான பட்ஜெட் 14.3 billion AED
அப்புறம் வருடா வருட பட்ஜெட் 570 million AED

எதிர்பார்க்கப்படும் முதல் முதல் பயணிகள் ஓட்டம் 2009
எதிர்பார்க்கப்படும் முழுபணிகளும் முடிவுறும் ஆண்டு 2012

முழபணிகளும் முடிவுற்ற பின் நாளொன்றுக்கு எதிர்பார்க்கப்படும் பயணிகளின் எண்ணிக்கை 1.2 மில்லியன்
வருடம்தோறும் எதிர்பார்க்கப்படும் பயணிகளின் எண்ணிக்கை 355 மில்லியன்

Click to enlarge the Pictures













United Arab Emirates Dubai UAE Metro Train Project Details


Email PostDownload this post as PDF

கணிணி காட்பாதர்கள்

கணிணி யுகத்தின் தந்தை - Father of the computer age
Wilhelm Schickard



Father of Digital computer
John Vincent Atanasoff



Father of The personal computer
Steve Wozniak



Father of Computing
Charles Babbage



Father of Computer Science- கணிணி அறிவியலின் தந்தை
Alan Turing



Father of Visual Basic-விசுவல் பேசிக்-ன் தந்தை
Alan Cooper



Father Of Java - ஜாவா-ன் தந்தை
James Gosling



Father of XML
Jon Bosak



Father of The Internet-இணையத்தின் தந்தை
Vinton Cerf



Father of World Wide Web-உலகளாவிய வலைப் பின்னலின் தந்தை
Tim Berners-Lee



Father of the Mouse
Doug Engelbart



Father of the Hard Drive
Al Shugart



Father of Pentium Processor
Vinod Dham



Father of Computer Graphics
Ivan Sutherland



Father of Robotics
Nikola Tesla



Father of DOS
Tim Paterson



Father of Linux
Linus Torvalds


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்