ரூபவாகினி முதல் சன் வரை - சில மறவா நினைவுகள்
1.தெருக்கோடியிலுள்ள பெரியவரின் வீட்டில் கருப்பு வெள்ளை டீவியில் இலங்கையிலிருந்து வந்த ரூபவாகினி செய்திகள்.(ஏதோ ஒரு வகை பறவை லோகோவுடன்).
2.அந்த காலத்தில் அடிக்கடி வரும் வாசிங் பவுடர் நிர்மா விளம்பரம்.ஸ்கர்ட் பறக்க சிறுமி வந்து போவாள்.
3.அப்புறமா ஐ லவ் யூ ரஸ்னா சுட்டிப் பெண்.
4.கபில் தேவ் வரும் "பூஸ்ட் ஈஸ் தி சீக்ரட் ஆப் மை எனர்ஜி".
5.புதன் வரும் இந்திபாட்டுகள் சித்ரகார்.
6.ஞாயிறு World Of Sports-க்கு அப்புறமா வரும் விக்ரம்-விக்ரமாதித்யன் கதை.
7.அப்புறமாய் ஒளிபரப்பாகும் ஸ்பைடர்மான்,ஹீமான்,டார்சான் வகையறாகள்.
8.ஒன்டே மாட்சில் மன்மதன் ரவி சாஸ்திரியின் கொட்டோகொட்டு.
9.கட்ட குத்து கவாஸ்கரின் மெதுவான விளாசல்கள்.
10.படேடாவின் சிக்ஸர்கள்.
11.குண்டப்ப விஸ்வநாத்தை கின்னஸில் பார்த்தது.
12.அந்த கருப்பான கழுத்து குறுகிய துடுப்பான ஸ்மால் தென் ஆப்ரிக்க பீல்டர்.
13.Srikanth அப்பப்போ சூரியனை பார்ப்பது.
14.Skylab வானிலிருந்து விழப்போகுதுனு ஊரே பயந்தது.
15.நீ சிவாஜி கச்சியா? எம்ஜிஆர் கச்சியா?-னு கேட்க எம்ஜிஆர்-னு பதில் சொல்ல போடா டோப்பா தலையா என பெயர் வாங்கியது.
16.புதன்தோரும் தினமலரின் கதைமலர் வந்து போனது.
17.ஆர்வமாய் படித்த பூந்தளிர்,அம்புலிமாமா,கலைக்கதிர்.
18.ஸ்கூலில் கோனார்,வெற்றி,பாண்டியன்,கவ்சானல் கையேடுகள்.
19.துணிதோய்த்த 501 சோப்பு.இப்போ இருக்கா தெரியலை.
20.டையனோரா டிவி பிராண்ட்.இப்போ இருக்கா தெரியல.
21.அம்பாஸடர் போல் மொட்டையாய் இல்லாமல் சதுர வடிவில் வரும் பியட் கார்.
22.அந்த நீளமான பந்தாவான ஸ்டான்டர்ட் 2000 கார்
23.லைசென்ஸ் இல்லாம ஓட்டலாமே எலும்பும் தோலுமாய் இருந்த லூனா மொபட்
24.புதுசா லாம்பெர்டா ஸ்கூட்டரை பார்த்ததே இல்லை.
25.சைக்கிள் பின் டயரில் அச்சருகே மாட்டப்பட்டிருக்கும் வட்ட லைசென்ஸ் தகடு.
26.Bigfun bubblegum வாங்கியாந்து டிக்கட்டுகள் 1000 ரன் சேகரித்து டையரி வாங்கியது.
27.ஸ்டாம்ப் கலெக்டிங்னு ஒரு hobby இருந்தது.
28."மேடின் ஜப்பான்" ஒரு நாடென நினைத்தது.
29.கதிரவன்னு ஒரு நாளிதழ் தோன்றி மறைந்தது.
30.கிராமத்தில் நடு மைதானத்தில் சைக்கிளில் ஒருவரை ஏற்றி விட்டு அவர் இறங்காமலே ஒரு வாரமாய் வட்டம் வட்டமாய் சுற்றிவருவார்.என்ன கூத்தோ அது தெரியவில்லை.
31.ரேடியோ வச்சுக்க லைசென்ஸ் புக் வேணுங்கோ.
32.தினமலரில் வெளியான டார்சான் படக்கதை.
33.வாரமலரில் வெளியான ஒரு குட்டிச்சாத்தான் திகில் பேய் தொடர்கதை.
34.மெட்ராஸிக்கு போகும் கண்ணன் கண்ணன் பஸ்ஸி.
35.கன்னியாகுமரி கடல் உள் பாறையில் கட்டப்பட்டிருந்த கண்ணாடி ஓட்டல்.
36.நாகர்கோவில் நகராட்சி பூங்காவின் மான்கள், மட்டுமல்லாமல் கொட்டிகிடந்த நாவல் மற்றும் இலந்த பழங்கள்.
வகை:தமிழ்நாடு
Download this post as PDF
4 comments:
//Bigfun bubblegum வாங்கியாந்து டிக்கட்டுகள் 1000 ரன் சேகரித்து டையரி வாங்கியது.//
அடப்பாவிகளா..நீரும் நம்ம கட்சி தானா? அது சரி..அந்த 35 ஸ்டிக்கரும் கிடைச்சிச்சா..இல்லாட்டி கடைசி வரைக்கும் 33 தானா?! (எனக்கு 33 தான்!)
அச்சச்சோ மாயவரத்தான் சார்.. நீங்களும் இக்கட்சியால் பாதிக்கப்பட்டவரா.மனசுக்கு திருப்தியா இருக்கு. :) .ஸ்டிக்கர் கவுண்டெல்லாம் நியாபகம் வச்சிருக்கீங்களே!!!
என்ன சார்? முக்கியமாக கன்னித்தீவு, சிந்துபாத், டப்பாவுக்குள்ளே லைலா, வில்லன் மந்திரவாதி மூஸா எல்லாத்தையும் மறந்துட்டீங்களே?
அட சுல்தான் சார் நீங்க ஒரு லிஸ்டே நியாபகத்ல வச்சிருக்கீங்களே.கலக்குறீங்க போங்க.
Post a Comment