உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Tuesday, May 02, 2006

எங்களூர் தமிழ்(?)

கன்னியாகுமரி--திருநெல்வேலி-தூத்துக்குடி பகுதி வாழ்மக்கள் பயன்படுத்தும் பிரத்தியேக தமிழ்(?) வார்த்தைகளின் தொகுப்பு இங்கே

படக்கு - பட்டாசு
அய்யம் - கெட்டது (எகா.அய்யே அது அய்ய பழம்)
தல்லுதல் - பொடியாக்குதல்
சமுட்டுதல் - மிதித்தல்
ஏசுதல்-திட்டுதல்
பைதா - சக்கரம்
பிளசர்-கார்
குசினி - சமையலறை-ஆங்கில வார்த்தை Cuisine-யிலிருந்து வந்ததோ?.
அரங்குவீடு-சேமிப்பு அறை
கக்கூஸ் - கழிப்பறை
மட்டுப்பாவு வீடு - மாடி வீடு
அளி-பெரிய ஜன்னல் (அளிபோட்ட வீடு)
வீட்டு நடை-வீட்டு படி (நடைல உக்காரு)
தலவாணி-தலையணை
செட்டி-சோபா செட்-ஆங்கில வார்த்தை set-யிலிருந்து வந்ததோ?.
பத்தாயம்-அரிசி சேமித்துவைக்குமிடம்
துடைப்பம்-விளக்குமாறு
காய்ச்சல்-ஜூரம்
கடுதாசி,காயிதம்-கடிதம்
சோறு-சாதம்
கொக்கூஸ் - அச்சுமுறுக்கு
சக்கப் பழம் - பலாப்பழம்
சின்ன உள்ளி-சின்ன வெங்காயம்
பல்லாரி உள்ளி-பெரிய வெங்காயம்
சீனி-சக்கரை
சக்கரை-வெல்லம்
கருப்பட்டி-பனைவெல்லம்
மண்ணெண்ணெய்-கிருஸ்னாயில்-கெரசின் (kerosene)ஆயில்-சீமெயெண்ணை
வாத்தியார்,வாத்திச்சி- ஆசிரியர்,ஆசிரியை
வள்ளம்-சிறுபடகு
குட்டுவம்,குத்துப்போணி-பெரிய பாத்திரம்
சருவம்-சிறிய பாத்திரம்
சொளவு-அரிசியை வீசி சுத்தம் செய்ய உதவும் பொருள்
முடுக்கு-சந்து
விலக்கு-ஊரின்எல்லை
புட்டான் - பட்டாம்பூச்சி
பக்கி-வண்ணத்துப்பூச்சி
நாய்க்குடை-காளான்
ஓந்தான் - ஓணான்
பாச்சா-கரப்பான்பூச்சி
கொட்டு-ட்ரம்ஸ்
உளக்கு-அரிசி அளவை
சென்ட்-நில அளவை
நிக்கர்-அரைகால்சட்டை
சாப்பு-சட்டை பை
சாரம்-லுங்கி
கைலேஞ்சி-கர்சீப்பு
சென்னி-கன்னம் அல்லது தலை
சுண்டு- உதடு
சாணி-சாணம்
சாளை,வாளை,நெய்மீன்,துண்டுமீன்,துப்புவாளை,வெளமீன்,இறா,பாறைமீன்,நெத்திலி-மீன்வகைகள்
தெங்கு-தென்னைமரம்
பொத்தை-சிறுமலை,பாறை
சானல்-சிறுஆறு-ஆங்கில வார்த்தை Channel-யிலிருந்து வந்ததோ?.
பலசரக்குகடை-டிபார்ட்மென்டல் ஸ்டோர்
ஆக்கர்கடை-காயலான் கடை
சுள்ளி-காய்ந்த மரக்கிளை துண்டுகள்
கோயில்கொடை-கோயில் திருவிழா
சோலி-வேலை
வண்ணம்-குண்டு,பருத்த (அவள் என்னா வண்ணம்)
குண்டு-குழி (குப்பை குண்டு)
கட்டை-குள்ளம்
நெட்டை-உயரம்
ஈக்கல்-தென்னைஓலை நார்
ஓலைப்பிறை-தென்னைஓலையால் வேய்ந்த கூரை
தொந்தி-தொப்பை

அப்டேட்:

இன்னும் சில நினைவுகள்

எப்பாவு-செல்லமாய் எப்பா
எம்மாவு-செல்லமாய் எம்மா
மக்கா-செல்லமாய் மக்களே
மேனே-செல்லமாய் மகனே
மேளே-செல்லமாய் மகளே
மயினி-மச்சினி(மச்சினன்)-கொழுந்தி,கொழுந்தியாள்-மாப்பிளையின் தங்கை-"மதினி"யின் மரூஉ-மதினி-அத்த பொண்ணு, மாமன் பொண்ணு, மனைவியின் அக்கா
செமத்தியா-செமத்தியா அடிவாங்கினான் (செம்மையாய் -யின் மருவோ?)
மசுகுட்டி பூச்சி,மைக்குட்டி பூச்சி-கம்பளி பூச்சி
ஏல-சிறு பையனை அழைத்தல்
ஏட்டி-சிறு பெண்ணை அழைத்தல்
இன்னேருங்க-மனைவி கணவணை அழைத்தல்
ஆட்டும்-சரியென ஆமோதித்தல்- ஆகட்டும்
மரு-மச்சம்
மூஞ்சி-முகம்-மூஞ்சியும் மொகரக்கட்டையும்
முழித்தல்-விழித்தல்
வெள்ளனே-காலைநேரம்
அந்தி-சாயங்காலம்
உச்சி-உச்சை-மதியம்
நிசி-இரவு
வெளக்கு-பல் வெளக்கு-வெள்ளையாக்கோ?
கருக்கு-இளம்-இருளாகும் மாலை பொழுது,இளம் தேங்காய்
பயினி-பனை பதனீர்
எளனி-இளம் தேங்காய் நீர்
சொக்காய்-சட்டை
அதிரசம்,மோதகம்,பனியாரம்,கொழுக்கட்டை,முந்திரிகொத்து-பலகாரவகைகள்
சாரா-பூரான்
ஊத்து-பீப்பீ-இசைக்குழல்
மேனி-உடம்பு
பெடனி,பெடரி = பின்கழுத்து
குறுக்கு = பின் இடுப்பு (இடுப்போட முதுகுப்பக்கம்)
கொவுருதல்-குளிர்தல் ஈரமாதல்
மாய்ச்சல்-வருத்தம்
தெகையும்-பத்தும்-பற்றும்-போதும்
ஓர்மை-நினைவு-நியாபகம்-(ஓர்மை இருக்கா?)

வகை:தமிழ்நாடு


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



17 comments:

Anonymous said...

KB Annachi(If more than age 35),
Lae Makka KB(If below age 35)

Alaga Column set Panni Potirutha Nalla irunthirukumla.
Regards.
Dubai Raja.

பரஞ்சோதி said...

ஆகா கே.பி. அண்ணாச்சி,

இத்தன நாளு மறந்து போன நம்ம ஊரு பாசையை சொல்லி நெயாபகப்படுத்தியலே, படிக்க சந்தோசமா இருக்குது.

பசாரு பக்கம் வந்தீங்கன்னா, நம்ம வூட்டுல காப்பிதண்ணி குடிச்சிட்டு, வெலையில் போய் நொங்கு வெட்டி சாப்பிடலாம்.

Sudhakar Kasturi said...

அண்ணாச்சி,
பக்கி -ன்னா வண்ணத்திப்பூச்சி இல்லேல்லா.. அது பழுப்பு கலர்ல தண்டியா இருக்கற பூச்சி.. பாக்கறச்சேயே பயம்மா இருக்குமே...பறந்துச்சுன்னா "பே"ன்னு அலறி ஓடுவம் அப்போல்லாம். 'அது கண்ணுல விழுந்தா குருடாயிருவம்'-னு லூர்து தாத்தா பயமுறுத்தி வேற வெச்சிருந்தாரு.. அத்தக் கண்டாச்சுன்னா சரி.. ஒத்தேயடி... சப்ளிங்கிப் போயிரும்லா..
வண்ணாத்திப்பூச்சி கலர்கலரால்லா இருக்கும்...என்ன சொல்லுதீய?
அன்புடன்
தூத்துக்குடிக்காரன்.( க.சுதாகர்)

SnackDragon said...

இராம கி- அய்யா போன்றவர்கள் இது பற்றி இன்னும் விளக்கலாம்.

'தெங்கு ' விலிருந்துதான் தேங்காய் வந்ததா?
தெங்குதல் என்றால் என்ன?

//சென்னி-கன்னம்//
பொதுவாக சென்னி என்றால் தலை என்று பொருளல்லவா?'

/உளக்கு-அரிசி அளவை/
உழக்கு தான் வட்டார வழக்கில் உளக்காகி உள்ளது.

//பாச்சா-கரப்பான்பூச்சி//
பாச்சா => பாய்ச்சான் => பாய்ந்தான்?

//கொக்கூஸ் - அச்சுமுறுக்கு// என்னங்க சம்பந்தமே இல்லாதமாதிரி இருக்கு :-)

அய்யே என்று சொல்கிறோமே அது கூட 'அய்யம்' தானா?

SnackDragon said...

சொளவு- சுளகு என்பதன் மருவல்தான் சொளவு.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

ஒரு கண்டனம் + ஓர் அவதானிப்பு

கண்டனம்: அதேன் தமிழ்(?)-னு எழுதியிருக்கீங்க. இதுவும் தமிழ்ந்தானே. வட்டாரத் தமிழ். முந்தி எங்கேயோ வட்டார வழக்குத் தமிழ்ல பேசுறதில இருந்து எல்லாரும் பேசுற இந்தத் தங்கிலிஷ் தமிழ்க்கு மாறினதை ஒருத்தர், 'நல்ல தமிழுக்கு' மாறினேன்னு சொல்லியிருந்தார். அந்தமாதிரி நீங்களும் தமிழ்(?)னு எல்லாம் சொல்லாதீங்க. என்னைக் கேட்டா வட்டாரத் தமிழ் வழக்குகள்தான் கொள்ளை அழகுன்னு சொல்லுவேன்.

---

நிறைய வார்த்தைகள், எங்க ஊர் வழக்கோட ஒத்துப் போகுது. அதை வசந்தன் மாதிரி ஆக்கள் வந்து புட்டுப்புட்டு வைப்பினம். நான் போயிட்டு வாறன்.

குசினி - எங்கட ஊரிலயும் இப்பிடித்தான் சொல்லுறவை. போத்துக்கீசியர் சமையலறையை அப்படித்தான் சொல்லுறவை. அவையிட்ட இருந்து வந்திருக்கும்.

Premalatha said...

Many words have gone "from" Tamil to English. so, there is a possiblity that குசினி is indeed tamil.
example:
1)Mullagatawny = மிளகுத்தண்ணி (ரசம்)
http://dictionary.reference.com/search?r=2&q=Mullagatawny

2) catamaran = கட்டுமரம் (boat)
http://dictionary.reference.com/search?r=2&q=catamaran

3)Moringa =முருங்ககாய்
http://dictionary.reference.com/search?r=2&q=Moringa

4)curry = கறி (குழம்பு)
http://dictionary.reference.com/search?q=curry

but, it could have come "from" English to Tamil as well, like
டில்ல = delay (in my area)

Nice list. :)

Premalatha said...

//செட்டி-சோபா செட்-ஆங்கில வார்த்தை set-யிலிருந்து வந்ததோ//

In Brittain sofa is called as "seate". செட்டீ".

why மண்ணெண்ணெய் is known as கிருஷ்னாயில்?

//சொளவு-அரிசியை வீசி சுத்தம் செய்ய உதவும் பொருள்//

==சுளகு (எங்க ஊர்ல)

//உளக்கு-அரிசி அளவை//
==நாளி and, மரக்கா
1 நாளி (equipemet) = 1 படி (measure)
have you seen அரப்படி நாளி, காப்படி நாளி, அரைக்காப்படி நாளி, மான்படி நாளி காலரைக்காப்படி நாளி..? I have. we used to have in our house.

3 படி == சின்ன மரக்கா
4 படி == பெரிய மரக்கா
12 சின்ன மரக்கா = 1 கலம் (மூட்ட)
அப்புறம் மறந்து போச்சு.

//சென்ட்-நில அளவை//
1000 செந்த்= 1 குளி (I don't remember very well)


:)

PKP said...

நம் ஊர்ப்புற தமிழ் ஆர்வத்தில் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.
-----------------------------------
Dubai Raja ஸார் எனக்கு ப்ளாக்ல colum செட் பண்ணலாம் தெரியாது மக்கா.
-----------------------------------
பரஞ்சோதி ஐயா-ஆட்டும்யா.நெசமாவே காப்பிதண்ணி குடிக்க வாறேன். :)
-----------------------------------
க.சுதாகர் ஸார் நல்லாவே தூத்துக்குடி பேச்சு பேசரீங்க.அந்த பூச்சிக்கு பேர் என்னவோ?.வண்ணத்திப்பூச்சி-னு நாட்டுபுறத்துல சொல்லி கேட்டது மாரி எனக்கு நெனவு இல்ல
-----------------------------------
karthikramas ஸார் சென்னினா தலைனு யாரு சொன்னாவோ? சென்னிய பேத்துடுவேன் அப்படினா- கன்னத்தை பெயர்த்துடுவேன்-என்பது ரொம்ப பொது பேச்சு வழக்காச்சுதே சார்
விளக்கங்களுக்கு நன்றி சார்.
-----------------------------------
மதி-சிலவார்த்தைகள் ஆங்கிலம் மாதிரி தெரிந்ததால் தான் தமிழ் (?)-னு அச்சமாளிப்பு :) எகா:குசினி.மன்சிடுபா.
-----------------------------------
premalatha-வாவ்...பெரிய ஸ்சுடடியே பண்ணிடீங்க போங்க :)
சென்னையில் மண்ணென்னெயை கிருஷ்னாயில்-ங்கிறார்கள் அதான் அப்படி எழுதினேன்.
மற்றபடி நீங்க கொடுத்திருக்கும் தகவல்கள் ரொம்ப ரொம்ப vital-ங்கோ.

Premalatha said...

கொஞ்சம் உசுப்பிவிட்டுதால (ஹிஹி)

மயினி == "மதினி"யின் மரூஉ
மதினி == அத்த பொண்ணு, மாமன் பொண்ணு, மனைவியின் அக்கா. Elder.
கொழுந்தியா = மனைவியின் தங்கை

Sudhakar Kasturi said...

என்ன அண்னாச்சி, தூத்துக்குடிக்காரன் தூத்துக்குடி தமிழ்தான பேசுவான்?! என்ன சொல்லுதீய?!
பக்கின்னா நம்மூரு பக்கம் கருவேல மரக்காடு இருக்கு பாருங்க.. அங்கன பம்மிகிட்டு படை படையா இருக்கும் . லோகஸ்ட்ந்னுவாங்களே (locust)அந்த வகை. இது நம்ம ஊர்ல மழை முடிcஞ உடனே வரும். கலர்கலரா இருக்கறது வண்ணத்குப்பூச்சிந்னுதான் சொன்னதா நினைவு.
கார்த்திக் சொன்னாப்புல சென்னின்னா தலைதான். சென்னி- தலை, மென்னி-கழுத்து..
மதினி , மயினி என்பது வயினி-ங்கிற மராத்திச் சொல்லுக்குத் திரிபு. இது தஞ்சாவூர் மராத்திப் படையெடுப்பின் போது அல்லது சௌராஷ்டிரர்கள், நாயக்கர்கள் காலத்தில் தமிழில் வந்திருக்கலாம். திராவிட மொழிகளின் தாக்கம் மராத்தி குஜராத்தியிலும் இருக்கிறது.
கிரிஷ்னாயில் -என்பது கெரசின் (kerosene)ஆயில் என்பதின் திரிபு. சீமெயெண்ணை, மண்ணெண்ணை என்பதும் வழக்கு தென்னாட்டில்.
நல்ல சொற்திரட்டு நண்பரே. தொடருங்கள். நான் படிக்கும்போது பயல்கள் "என்னலெ லெவெண்டி கணக்கா பேசுத?" என்பான்கள். லெவெண்டி என்பது லூசு எனலாம்..கிட்டத்தட்ட.. அதெல்லாம் இப்பவும் வழக்கில் இருக்கான்னு தெரியலை. :)

Anonymous said...

KEROSINE + OIL => KRISHANOIL..

-Raj

Premalatha said...

சென்னி கன்னம்தான் எங்க ஊர்லயும்.

பெடனி = பின்கழுத்து
குறுக்கு = பின் இடுப்பு (இடுப்போட முதுகுப்பக்கம்)

மதினி தமிழாத்தான் இருக்கணும். தமிழ்லயிருந்துகூட மராத்திக்குப் போயிருக்கலாம். என்ன, தமிழ் is older than Marathi.

http://en.wikipedia.org/wiki/Tamil_language

http://en.wikipedia.org/wiki/Elamo-Dravidian_language_family

I don't gurantee the authenticity of the information in the wikiperdia.
I had a language tree picci, I couldn't locate now. I will post it if I find it.

Premalatha said...

sorry I understand that we have borrowed words from many other younger languages. but, the reason I believe மதனி is Tamil is because it is the very traditional way of addressing cousin sister in the sourthern districts. if this was a borrowed word, what else was there before for this term?
secondly, in Northern cultures, there is no distinction between cousin sisters (similar to English, சித்தப்பா/பெரியப்பா/சித்தி/பெரியம்மா பொண்ணும் cousin sister தான், மாமா/அத்தை பொண்ணும் cousin sister தான். whereas in Tamil, we differentiate them. we have to dig into the type of language, type of society, type of culture..etc.. to analyse these things.

I must admit, I am no expert in this.

Thanks.

PKP said...

சுதாகர் அண்ணா.. locust-ஐ புட்டான்னு அதாங்க பட்டாம்பூச்சினு சொன்னதா நினைவு.ஆமா..அதென்ன நீங்க வார்த்தையின் வரலாறெல்லாம் சொல்லி கலக்குறீங்க.கிரேட்யா.
------------------------
பிரேமலதா உங்கள்ட மல்லுகட்ட சுதாகர் அண்ணா தான் சரி.நல்லாவே ஆராயுரீங்க மேம்.carry on.

Premalatha said...

அப்புறம்,

மழைக்கு அப்புறம் வர்றதுக்கு "ஈசல்", எங்க ஊர்ல.
//பம்மிகிட்டு படை படையா இருக்கும் // == ஈசப்புத்து.

திடீர்னு அதுவும் அதிகமா (படையா) வர்ற எதையுமே, "ஈசப்புத்துக்குள்ளயிருந்து வந்தமாதிரி"ன்னு சொல்லுவாங்க. ஈசல் கலர்கலரா இருக்காது. borwn-ஆ இருக்கும்.

கலர்க்கலரா இருக்கிறத "பட்டுப்பூச்சி"ன்னு சொல்லுவோம்.


//பிரேமலதா உங்கள்ட மல்லுகட்ட //

உசுப்பேத்தி உசுப்பேத்தித்தான் உடம்பே ரணகளமாயிருக்கு. :D

:D

Karthik said...

மேலும் சில இதோ இப்பதிவில்..

http://fermisoft.blogspot.com/2007/06/blog-post_08.html

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்