இப்போதெல்லாம் எப்படி என தெரியவில்லை.2003 தீபாவளிவாக்கில் பர்-துபாயில் தங்கியிருந்தபோது நம் இந்தியர்கள் எப்படி தீபாவளியை துபாயில் பயங்கரமாய் பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர் என்பதை பார்க்க முடிந்தது.இந்தியாவில் இருந்து தீபாவளி கொண்டாடுவது போன்றே ஒரு பிரம்மை.அடுத்த நாள் அரேபிய நாளிதழ் ஒன்றில் ஒரு அரேபியர் கடிதம் எழுதியிருந்தார்."தீபாவளி பட்டாசு கொண்டாட்டம் ஒரு பப்ளிக் நியூசன்ஸ் (nuisance).அதை தடை செய்ய வேண்டும்" என்று.அடுத்த நாளே நம்மவர் ஒருவர் பதில் கடிதம் எழுதியிருந்தார்."விடிய விடிய வெடிகுண்டு சத்தங்களும் ,சூசைட்பாம் சத்தங்களும் ஆம்புலன்ஸ் சத்தங்களும் கேட்பதைவிட இந்தமாதிரி குழந்தைகள் பட்டாசு வெடித்து கொண்டாடும் சத்தம் கேட்பது எவ்வளவோ மேல்" என்று.
Download this post as PDF
4 comments:
அப்போதும் சரி இப்போதும் சரி, பட்டாசு வெடித்து கொண்டாடுவது எல்லாம், அரசாங்கம் அனுமதி இல்லாமல் தான் (illegally). பட்டாசு விற்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. கூறும் காரணம் - குழந்தைகளின் பாதுகாப்பு மட்டுமே!
ஆனாலும், வருடா வருடம் பட்டாசு மட்டும் எப்படியாவது கிடைத்துவிடும் (ஒரு பெரிய தொகைக்குத் தான்).
தகவலுக்கு நன்றி துபாய்வாசி ஸார்.
துபாயில் மட்டும்தான் அபுதாபியில் மூச்.
பிகெபி சார் அந்த லெட்டரை வெளியிட்டப் பத்திரிக்கை எது? கல்பா கலீச் ஆ?
சிவா அது கலீஜ்னு நினைக்கிறேன்.சரியா நியாபகம் இல்லை.நீங்க சொன்ன அபுதாபி மேட்டர் எனக்கு புதிது.அப்படியா சேதி?.
Thanks siva.
Post a Comment