கொல்லாம்பழம்-ஓந்தாம்பழம்-கொல்லாங்கொட்டை-முந்திரிக்கொட்டை-அண்டி-அண்டிப்பருப்பு-முந்திரிப்பருப்பு இதெல்லாம் Cashew apple மற்றும் Cashew nut ன் நம்மூர் பெயர்கள்.
தான் சாப்பிடாமல் ஏழைநாடுகள் பணக்கார நாடுகளுக்கு அனுப்பிவைக்கும் ஒரு சுவையான பருப்பு இது.இன்று உலக அளவில் இந்தியாவின் கேரளா ஏற்றுமதியில் நம்பர் ஒன்னாம்.
இதன் பெயர்காரணம்-கேஸிவ்நட்-பற்றி பேச்சு வந்த போது ஒரு சுவையான கதையொன்றை கேள்விபட்டேன்.அந்த பெயர்க்காரணம் எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.
அந்த காலத்தில் இந்த அண்டிப்பருப்பை நம் ஆட்கள் அழகாக வறுத்து உப்பிட்டு சூடாக "காசுக்கு எட்டு...காசுக்கு எட்டு"என கூவி விற்பனை செய்தார்களாம்.இதைக் கேட்ட நம்மூர் வந்த மேற்க்கத்தியர் "வாட் இஸ் இட் காஸ்க்கெட்" என வினவினராம்.சுவைத்துப்பார்த்துவிட்டு "ஓ காஸ்கெட் இஸ் நைஸ்" என்றனராம். அதுவே படிப்படியாக மருவி காஸிவ்நெட் ஆகி விட்டதாம்.கதை எப்படி இருக்கு?
ஒருவேளை இருந்தாலும் இருக்கலாம்.யாருக்கு தெரியும்?.
இது போல் மாங்காயிலிருந்து mango-வும்,
இஞ்சிவேரிலிருந்து ginger-ரும் ,
பப்பாளியிலிருந்து papaaya-வும்,
சக்கவிலிருந்து jack-கும்,
தேக்குவிலிருந்து teak-கும்,
கொய்யாவிலிருந்து guava-வும்,
வெற்றிலயிலிருந்து betel-லும் வந்திருக்கும் போலும்.
வகை:தமிழ்நாடு
Download this post as PDF
2 comments:
கேபி சார்,
எங்க ஊர் பக்கம் சிலர் கொல்லாங்கொட்டையை கப்பலண்டி என்று சொல்லுவாங்க தானே, அதுக்கும் ஒரு கதை உண்டு.
ஒரு கப்பல் தலைவன், முந்திரிபருப்பை சாப்பிட்டு சாப்பிட்டு அதன் ருசியால் மேலும் மேலும் சாப்பிட தன் கப்பலையே விற்றுவிட்டாராம் :) அதனால கப்பலண்டி என்று சொல்லுவாங்க.
நம்ம முத்து கூட நீங்க சொன்ன மாதிரி ஒரு பதிவு போட்டிருந்தார்.
ஆ பரஞ்சோதி சார்...இக்கதை இன்னும் இன்டர்ஸ்டிங்கா இருக்கே.
Thanks for sharing.
Post a Comment