கேட்க தோன்றுதே
கீழ்த்தெரு பைத்தியம் சொல்லிக்கொண்டு போனான்
அண்ணா போல் அறிவை தேடாதே
பெரியார் போல் பகுத்தறிவை பேசாதே
எம்ஜிஆர் போல் ஏழைக்கு உதவாதே
காமராஜ் போல் காரியத்தில் மூழ்காதே
கண்ணகி போல் கற்ப்பாயிருக்காதே
கண்ணதாசன் போல் கவிதையாய் கொட்டாதே
களிப்பாய் இரு தினமும் களிப்பாய் இரு
அதிகமாய் போனால் உலகம் என்ன செய்யும்?
சிலை வைக்கும்.
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Wednesday, March 31, 2004
வரிகள்புதன்-4
Tuesday, March 30, 2004
கிசுகிசுசெவ்வாய்-3
இந்த "வால்" நபர் அடிக்கடி மாலை மது வாங்கிவிட்டு ஊருக்கு ஒதுக்குபுறமாய் ஒதுங்குகிறாராம் தன் தோழரோடு-யார் இது?
விடைக்கு சொடுக்குங்கள் கீழே
http://www.dinamalar.com/2004march28varamalar/thunuk.asp
Monday, March 29, 2004
தகவல்திங்கள்-2
மால்வேர்-என்பது (தமிழில் மென்பூச்சிகள் எனலாம்)அணுகுண்டு மாதிரி.அறிவியலை நல்லதுக்கு பயன் படுத்தாமல் சில மென்பொருள் வல்லுனர்கள் உட்கார்ந்து கஷ்டப்பட்டு தயாரித்த viruses(மென்கிருமிகள்), worms, and Trojan horses.இவை உங்கள் கணிணியில் நுழைந்தால் அவ்ளோதான் கணிணி படுத்துக்கொள்ளும்.ஒன்றில் உங்கள் கோப்புகள் வீண்போகும் அல்லது உங்கள் கோப்புகளோ அல்ல உங்களைப் பற்றிய தகவல்களோ தூரத்திலிருக்கும் மென்பொருள் திருடனுக்கு போய்கொண்டிருக்கும் உடனே நீங்கள் antivirus (தமிழில் மென்பூச்சிநாசினி எனலாம்)நிறுவுவது அவசியம்
Malware (for "malicious software") is programming or files that are developed for the purpose of doing harm. Thus, malware includes computer viruses, worms, and Trojan horses.
Sunday, March 28, 2004
Saturday, March 27, 2004
சில நேரங்களில் சில சந்தேகங்கள்
நானும் பல முறை நினைத்திருக்கிறேன் தமிழ் தான் வளமையான மொழி என்று.பின்னே,நிலையைபொறுத்து தமிழில் தானே இலைக்கு தழை,ஓலை,கீரை என பல பெயர்கள் உண்டு.இப்போதோ சில சந்தேகங்கள்,அறிவியல் தமிழ் பலவீனமானதோ என்று. இல்லைஇல்லை பலவீனமாக்கிவிட்டோம்.புத்தம்புது கருவிகளும்,கண்டுபிடிப்புகளும் தினமும் தோன்றும் உலகில் நமக்கு தமிழிலும் சில பல புது சொற்கள் தேவைபடுகின்றன.
கண்டிப்பாக.
தொடர்ந்து அறிவியலை அப்படியே ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்காமல் (உதாரணமாய் Workgroup-பை வேலைகுழு என்றும்,vertical scroll bar-யை செங்குத்து உருள் பட்டி என்றும்) என்றைக்குதான் தமிழ் தனித்து நிக்கபோகிறதோ?
வகை:தமிழ்நாடு
Saturday, March 13, 2004
அவர்கள் சந்தோசமாகட்டும்
நான் நினைத்தது தப்பாகி விட்டது முதன் முதலாக.சப்னா ஒரு இந்திய முஸ்லிம் பெண்.பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை கன்னாபின்னாவென திட்டுகிறாள்.இந்தியா ஜெயிக்க வேண்டுமென அல்லாவை வேண்டுகிறாள்.அக்தரை ஒரு பிடிபிக்கிறாள்.அலுவலகம் விட்டு மதியம் உனவுக்காக உணவகம் போகும் போது காரில் வைத்து சப்னாக்கும் தாமஸ்க்கும் செம சண்டை.தாமஸ் கேரள கிறிஸ்தவன்.பாகிஸ்தானை சப்போர்ட் பண்ணுகிறான்.கேட்டால் அப்போ தான் இரு நாடு உறவுகள் நன்றாய் நீடிக்கும் இல்லையேல் "There is a possiblility of terrorist threat for the players" என்கிறான்.சப்னா ஒரு நிமிஷம் ஆடிப் போனாள்."My sweet Tendulkar.O God No No" (இன்று அடித்தது என்னமோ 28.டிராவிட்.99).அவர்கள் பூமியில் அவர்கள் விளையாடி ஜெயித்து அவர்கள் சந்தோசமாகட்டும் இது தாமஸின் விளக்கம்..ஒன்னுமே புரியவில்லை.பாகிஸ்தான் மக்கள் மனதில் என்ன ஒடுகிறதோ?
வகை:சலோ இந்தியா
Wednesday, March 10, 2004
பயமாய் இருக்கிறது
சத்தியமாய் பயமாய் இருக்கிறது.எத்தனை நாள் இது நீடிக்குமோ?.தோட்டாக்களும் குண்டுக்களுமே பாய்ந்து கொண்டிருந்த தேசங்களுக்கிடையே பூக்கள் சொரிகின்றன .பேருந்தும்,இரயில் வண்டிகளும்,விமானங்களும் ஓடுகின்றன.மாரிமாரி வர்த்தகம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.ஏன் போரிட்டுக்கொண்டிருந்த அநேக தேசங்கள் கூடிகுலவும் இந்நாட்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் கூடிகுலவகூடாதா என்ன?.யுடோபியா என்பார்கள்.வளமான இந்தியா செழிப்பான பாகிஸ்தான் அலையலையாய் மோதும் சுற்றுல்லா பயணிகளின் கூட்டத்தால் பூத்துகுலுங்கும் காஷ்மிர்.நாச அயுதங்களுக்கு போன பட்ஜெட் இப்பொழுது மனிதங்களுக்கு வந்து சேருகிறது.அப்பப்போ நமக்குள்ளே ஆரொக்கியமாய் அறிவுப்போட்டியயும் கிரிக்கெட் போடியயும் வச்சுக்கலாம்.நினைக்கவே புல்லரிக்குது.இதெல்லாம் நடக்குமா.சத்தியமாய் பயமாய் இருக்கிறது.(எதாவது மேலை நாட்டுக்குபொறாமை பற்றிவிட போகிறது?)
வகை:சலோ இந்தியா
Tuesday, March 09, 2004
தமிழ் கலாசுகிறது
அடடா என்னமாய் எழுதுகிறார்கள்.கொட்டிக்கிடக்குது தமிழ் வலைபூக்கள் இணயமெங்கும்.கொஞ்சகாலமாயிருந்த தமிழ் வறட்சி,இணயத்தில் சுத்தமாய் விட்டுப்போனது போலவே தோன்றுகிறது.தமிழ் இனி மெல்ல ஒளிரும்.நம்பிக்கையாய் சொல்லலாம்.இலக்கியம் பேசுகிறார்கள்,அரசியல் அலசுகிறார்கள்,அறிவியல் ஆய்கிறார்கள்.வரலாறு,புவியியல் என தமிழ் கலாசுகிறது வலையுலகத்தில்.நல்லதொரு திருப்பம்.கட்டுரை எழுதி விகடனுக்கும்,குமுதத்திற்கும் காத்திருப்பதை விட மலருக்கும் இதழுக்கும் மாரடிப்பதை விட எழுது தோன்றுகிறதை எழுது எழுதிக்கொண்டே இரு நல்லபக்கமானால் கட்டாயம் திரும்ப வருவார்கள் என்ற வேகம் பிடித்திருக்கிறது.மொத்தத்தில் கணனி தமிழ் விழித்திருக்கிறது.ஆரோக்கியமான இந்த போக்கு கடைசிவரை தொடரவேண்டும் என கடவுளை பிரார்தித்து கொள்வோம்.(குடுமிபிடி சண்டை போட யாராவது வந்துவிடபோகிறார்கள்)
வகை:சலோ இந்தியா
வகை:தமிழ்நாடு
Posted by
PKP
at
3/09/2004 02:08:00 AM
Labels: Tamil