வலைப் பதிய அதிகமாய் பயன்படுத்தும் விருப்ப மென்பொருள்களுள் "குறள் தமிழ்ச் செயலி" (Kural Tamil Software) எனும் மென்பொருள் ஒன்று.எளிதாய் தமிழில் எழத உதவுகின்றது.A cave man can do it. :).
இதனை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவிக்கொண்டு குறியீடு-யூனிகோட் மற்றும் விசைப்பலகை-ஒலியியல் (eg:அதாவது-athaavathu) என அச்செயலியில் செய்து விட்டால் நீங்கள் தமிழில் எழுத தயார்.
செயல்முறை அமைப்பு படம் போட்டு அழகாய் விளக்கி இருக்கிறார்கள்."alt+k" keycombination எளிதாய் உங்களை ஆங்கிலம்/தமிழ் என தாவ உதவுகின்றது.இது ஒரு இலவச செயலி.கணிணி தமிழுக்கு புதியோர் இதனை முயன்று பார்க்கலாம்.
Product Page
http://www.kuralsoft.com/products.htm
Direct Download Link
http://www.kuralsoft.com/download/KRL33_SETUP.EXE
How to write in tamil unicode free writer Kural Kuralsoft
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Thursday, November 30, 2006
தமிழில் எழுத "குறள் தமிழ்ச் செயலி"
Posted by
PKP
at
11/30/2006 04:21:00 PM
4
comments
Labels: Tamil
Wednesday, November 29, 2006
முன்பே வா என் அன்பே வா-A hit`s Profile
படம் : சில்லென்று ஒரு காதல்
இசை :ஏஆர்ரகுமான்
பாடியவர் :நரேஸ் அய்யர், ஸ்ரேயா கோஷல்
நடிப்பு :சூர்யா, ஜோதிகா & பூமிகா
இயக்கம்:என்.கிருஷ்ணா
எழுதியவர்:வாலி
வரிகள்
(பெண்)
முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப் பூவாய் பூப்போம் வா
நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே
முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப் பூவாய் பூப்போம் வா
(கோரஸ்)
ரங்கோ ரங்கோலி
கோலங்கள் நீ போட்டால்
கோலம் போட்டவள் கைகள் மாறி வளையல் சத்தம்
ஜல் ஜல்
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால்
கோலம் போட்டவள் கைகள் மாறி
சுந்தர மல்லிகை
சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன
(ஒ ஓ )
(பெண்)
பூ வைத்தாய் பூ வைத்தாய்
நீ பூவைக்கோர் பூ வைத்தாய்
மண பூ வைத்து பூ வைத்த
பூவைக்குள் தீ வைத்தாய்
(ஒ ஓ)
(ஆண்)
தேனி - நீ -நீ மழையில் ஆட
நாம் - நாம் -நாம் நனைந்து வாட
என் நாளத்தில் உன் ரத்தம்
ஆடைக்குள் உன் சத்தம்
உயிரே ஒ
(பெண்)
தோழி ஒரு சில நாழி தனி
யென ஆனால் தரையினில் மீன்
முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
நான் நானா கேட்டேன் என்னை நானே
(ஆண்)
நான் நானா கேட்டேன் என்னை நானே
(பெண்)
முன்பே வா என் அன்பே வா
பூப் பூவாய் பூப்போம் வா
(ஆண்)
நிலவிடம் வாடகை வாங்கி
விழி வீட்டினில் குடி வைக்கலாமா
நாம் வாழும் வீட்டுக்குள்
வே ராரும் வந்தாலே தகுமா?
(பெண்)
தேன் மழை தேக்கத்தில் நீ தான்
உந்தன் தோள்களில் இடம் தரலாமா
நான் சாயும் தோள் மேல்
வேர்யாரும் சாய்ந்தாலே
தகுமா?
(ஆண்)
நீரும் செங்குள சேறும்
கலந்தது போலே
கலந்திடலாம்
(பெண்)
முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப் பூவாய் பூப்போம் வா
(ஆண்)
நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே
(பெண்)
முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப் பூவாய் பூப்போம் வா
(கோரஸ்)
ரங்கோ ரங்கோலி
கோலங்கள் நீ போட்டால்
கோலம் போட்டவள் கைகள் மாறி வளையல் சத்தம்
ஜல் ஜல்
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால்
கோலம் போட்டவள் கைகள் மாறி
சுந்தர மல்லிகை
சந்தன மல்லிகை
சித்திர புன்னகை வண்ணம் மின்ன
(ஒ ஓ )
Click here to view more video songs from Sillena Oru Kaathal
Download MP3 link on Link Sharing Forum
Munbe Vaa Lyrics Sillunu Sillentru Chillunu Jillentru Oru Kaathal Surya Jyothika
Posted by
PKP
at
11/29/2006 06:38:00 PM
0
comments
Labels: Tamil Lyrics
Tuesday, November 28, 2006
இலவசமாய் MP3 -யை Ringtone-ஆக்குக
அநேகரின் கனவுகளில் ஒன்று தன்னிடமுள்ள CD track, MP3 அல்லது WAV கோப்புகளை ரிங்டோனாக மாற்றம் செய்து தன் மொபைல் போனில் ஒலிக்க செய்வது.காசு கொடுத்தால் கிடைக்கும் MP3toRingtone converter-கள் அநேகம்.ஆனால் இதோ ஒரு முற்றிலும் இலவச MP3 to Ringtone converter உங்களுக்காக. ரிங்டோன் மட்டுமல்லாது உங்கள் கணிணியிலுள்ள பெரிய JPEG, BMP image களை சிறிதாக்கி உங்கள் செல்போனில் wallpaper-ஆக வைத்துகொள்ளவும் இது உதவி செய்கின்றது.
Over 60+ carriers, 15+ countries and 300+ handsets,Almost all US/Canada/EU/AU carriers supported என்கிறார்கள்.
உங்கள் போனில் இதை பயன்படுத்த முடியுமா என இங்கே சொடுக்கி பார்க்கவும் (Supported Phones list)
http://www.tonethis.com/index.php?page=supported_phones2
Product Page
http://www.tonethis.com/
Direct Download Link
http://www.tonethis.com/download/tonethisBeta.exe
Free Mp3 to Mobile Phone Cellphone ringtone converter - Make Cell phone wallpapers
Monday, November 27, 2006
தமிழ் OCR - காகிதத்திலிருந்து கணிணிக்கு
உங்களின் பழைய தமிழ் நூல்கள்,அச்சுப் பிரதிகள்,சேகரித்த செய்திதாள்கள், பத்திரிகை துணுக்கு துண்டுகள்,கிழித்து வைத்திருக்கும் பிரசுரங்கள்,தமிழ் பக்கங்கள் இவற்றை எல்லாம் கணிணியில் ஏற்றி புதிய பதிப்பாக மென்னூலாகவோ அல்லது அச்சிட்டோ வெளியிட ஆசையா?.எளிது அது இப்போது.நீங்கள் நினைப்பது போல் அவற்றையெல்லாம் தட்டச்சு செய்து கணிணியில் ஏற்ற வேண்டிய அவசியமில்லை.எந்த தமிழ் தாளையும் ஸ்கேனாக படம் (bmp) பண்ணி (ஸ்கேனர் தேவைப்படும்) பின்பு OCR மென்பொருள் வழி ஸ்கான் செய்தால் சாதாரண அந்த பட கோப்பு பின்பு சாதாரண text கோப்பாக மாறி உங்களுக்கு கிடைக்கும்.நீங்கள் மேற்செய்ய வேண்டியதெல்லாம் ஏதேனும் மாற்றம் எடிட்டிங் செய்து உங்கள் மின்புத்தகம் செய்யவேண்டியது தான்.
இந்த மாதிரியான முதன் முதல் தமிழ் ஓசிஆர் மென்பொருள் "பொன்விழி" ஆகும்.70% வரை குறையின்றி பணிசெய்வதாக கேள்வி.கீழ்காணும் இரண்டு தமிழ் OCR மென்பொருள்களும் இலவச மென்பொருள்களே.
PonVizhi Product Page
http://www.ildc.in/GIST/htm/ocr_spell.htm
PonVizhi Direct Download Link
http://www.ildc.in/GIST/LearnFun/PonVizhi-TamilOCR.zip
Another Tamil OCR
http://sourceforge.net/projects/gtamilocr/
Free Tamil OCR Optical Character Recognition Paper printout Scan Computer Image Picture to text file conversion
Posted by
PKP
at
11/27/2006 03:44:00 PM
4
comments
Labels: Tamil
Saturday, November 25, 2006
லூசுப் பெண்ணே- A hit`s profile
படம்-வல்லவன்
இசை-யுவன் சங்கர் ராஜா
நடிப்பு-சிம்பு,நயன்தாரா,சந்தியா,ரீமாசென்
இயக்கம்-சிம்பு
பாடியவர்-சிம்பு,பிளேஸ்
எழுதியவர்-சிம்பு
வரிகள்
Gal You got my heart breaking
Gal The rate no faking
Gal If you that I need
Gal Oh yes indeed
Gal As time flies by
Gal This say no lie
Gal If you feeling my pain
Then Let me explain
லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே
லூசுப் பையன் உன் மேல தான் லூசா சுத்துறான்
லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே
லூசுப் பையன் உன் மேல தான் லூசா சுத்துறான்
காதல் வாராதா காதல் வாராதா
என் மேல் என் மேல்
உனக்கு காதல் வாராதா
காதல் வாராதா காதல் வாராதா
என் மேல் என் மேல்
உனக்கு காதல் வாராதா
காலை முதல் மாலை வரை
தினமும் நானும் உன்னதானே நெனச்சு வாழுறேன்
கண்கள் மூடி இரவு தூங்கும்போதே
என் பெட் ரூம் பேனும் கீழே வந்து என்ன எழுப்புதே
உன்ன நெனைக்க சொல்லுதே
லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே
லூசுப் பையன் உன் மேல தான் லூசா சுத்துறான்
லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே
லூசுப் பையன் உன் மேல தான் லூசா சுத்துறான்
லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே
You got me flowing but but i dont where i am going
Since you got me got me thinking that i am loosing
ma mind
Since you got me you got me feeling that i am running
out of time
Because i never see a girl that was just like you
No one never never give up...want to know the truth
And i never ever thought you would say no..
Loosu penne you know..you know
தனிமைய தேடுதே இதயமும் ஓடுதே
என்னை நானே என்னை நானே தேடி தேடி பார்க்கிறேன்
தேடி தேடி பார்க்கிறேன்
உனக்கு என்னை கொடுக்க நினைத்து
மனசை நான் அனுப்பினேன்
ரொம்ப ஆசையாய்
உனக்கு என்னை என்னை கொடுக்க நினைத்து
மனசை நான் அனுப்பினேன்
ரொம்ப ஆசையாய்
வாலி போல பாட்டு எழுத எனக்குத் தெரியலியே
உன்ன பத்தி பாடாமல்தான் இருக்க முடியலயே
என்ன நானே திட்டித் திட்டிப் பார்த்தேன்
மனச திருந்தவில்லை
என் மனசு உன்னவிட்டு மாறவில்ல
லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே
லூசுப் பையன் லூசா சுத்துறான்
லூசு லூசு பெண்ணே லூசுப் பெண்ணே
லூசுப் பெண்ணே
லூசுப் பையன் லூசா லூசா லூசா சுத்துறான்
காதல் வாராதா காதல் வாராதா
என் மேல் என் மேல் உனக்கு காதல் வாராதா
காதல் வாராதா காதல் வாராதா
என் மேல் என் மேல் உனக்கு காதல் வாராதா
காலை முதல் மாலை வரை
தினமும் நானும் உன்னதானே நினைச்சு வாழுறேன்
கண்கள் மூடி இரவு தூங்கும்போது
என் பெட் ரூம் பேனும் கீழே வந்து என்ன எழுப்புதே
உன்ன நினைக்க சொல்லுதே
லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே
லூசுப் பையன் உன் மேல தான் லூசா சுத்துறான்
லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே
லூசுப் பையன் உன் மேல தான் லூசா சுத்துறான்
You may not know
Know right now
The pain of feel
It is so real
And no matter where
The future lies
I see right now
Only you and I
Only you and I
0nly you and I
Yea
MP3 download link is available on Link sharing forum
More Vallavan video songs click here
Simbu Nayanthara Vallavan Loosu penne lyrics
Posted by
PKP
at
11/25/2006 10:55:00 PM
2
comments
Labels: Tamil Lyrics
Friday, November 24, 2006
எளிய அவுட்லுக் எக்ஸ்பிரஸ் backup மென்பொருள்
Outlook Express மின்னஞ்சல் மென்பொருளை பயன்படுத்தும் நண்பர்கள் அநேகர்.என்னத்தான் உயர்நுட்ப மின்னஞ்சல்கள் like Outlook,Lotus Notes மென்பொருள்கள் இருந்தாலும் சிறு/குறுஅலுவலகம் மற்றும் வீடுகளில் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் ராஜாங்கம் தான்.என்ன வேண்டுமோ அது மட்டும் கொண்டதோடு POP,IMAP,HTTP,News Group Reader இதெல்லாம் கொண்டு இது இருப்பதால் பெரும்பாலும் திருப்தி அளிக்கிறது.ஆனால் வந்திருக்கும் மெயில்களை பத்திரமாக் backup செய்ய,இருக்கும் விலைமதிப்பற்ற address book-ஐ பாதுகாப்பாய் வைத்திருக்க வழியுள்ளதா?.இதோ ஒரு வழி..இலவச எளிய அவுட்லுக் எக்ஸ்பிரஸ் backup மென்பொருள்.இதை ஓட்டி உங்கள் மெயில்களை பத்திரமாய் இன்னொரு டிரைவிலோ அல்லது CD,DVD,USB டிரைவிலோ பேக் அப் எடுத்து வைத்திருங்கள்.எப்போது உதவும் அது என்று சொல்லமுடியாது.
Product Page
http://www.oehelp.com/OEBackup/Default.aspx
Direct download link
http://www.oehelp.com/OEBackup/oeqbfull.zip
Free Outlook Exprees Backup software
Wednesday, November 22, 2006
மீள்பதிவு-தமிழ் வலைப்பதிவுகள்-சுவாரஸ்ய தகவல்கள்
"போட்டிக்கு யாராவது இருந்தால் தயவு செய்து பின்னூட்டமிடவும்" என்ற வேண்டுகோளோடு தமிழ் வலைப்பதிவுகள் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை கடந்த பதிவில் தெரிவித்திந்தேன்.வந்த பின்னூட்டங்களின் அடிப்படையில் இங்கே சில தகவல்கள் மாற்றம் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.
மூத்தவயது தமிழ் வலை பதிவர் யார் என்ற போட்டி வரிசையில் சிவஞானம் மற்றும் பெருசு உள்ளனர்.யார் முந்துவது என உறுதிசெய்ய இயலவில்லை
முதல் பெண் தமிழ் வலை பதிவர் யார் என்ற போட்டியில் முந்துவது மதி கந்தசாமி-On Blogger Since May 2003.அப்புறமாய் சந்திரவதனா-On Blogger Since July 2003.
அதிக இடுகைகள் துளசி கோபால்: 474 இன்றுவரை
இளவயது தமிழ் வலைபதிவர்கள்
அஞ்சலி On Blogger Since July 2005
மழலை On Blogger Since February 2006
ஜோனத்தன் 3 மாத வயது
அதிக தமிழ் வலைப்பூக்கள் சொந்தகாரர் குமரன் (ஏறக்குறைய 20 தமிழ் வலைப்பூக்கள்)
கல்லில் செதுக்கப்பட்டாற்போல் இதுபோன்ற பதிவுகளும் என்றென்றும் நீடித்திருக்குமாதலால் தவறான தகவல்கள் இங்கு பொறிக்கப்படக்கூடாது.
திருத்தம் தேவைப்பட்டால் சுட்டிக் காட்டுங்கள்.மகிழ்ச்சியே!!.
Posted by
PKP
at
11/22/2006 02:33:00 PM
6
comments
Tuesday, November 21, 2006
தமிழ் வலைப்பதிவுகள் - சுவாரஸ்ய தகவல்கள்
முன்பு வலைப்பூக்கள் எனப்பட்டு இப்போது வலைப்பதிவுகள் எனப்படும் தமிழ் பிளாகுகள் (Tamil Blogs) பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இங்கே பார்க்கலாம்.
உலகின் முதல் தமிழ் வலைப்பதிவு "நவன்"னோடது.அவர் முதல் தமிழ் பதிவு பதித்த நாள் 16 ஜனவரி வியாழன் 2003.ஆக முதல் தமிழ் வலைப்பதிவாளார் நவன்.இவரின் முதல் பதிவு 29 டிசம்பர் ஞாயிறு 2002.இது தான் அதன் அடக்கம் "Hello world !At last set up blogging."
முதல் தமிழ் வலைபதிவு பின்னூட்டமிட்டவர் (comment) இராசன்.இவர் பின்னூட்டமிட்ட நாள் ஜூன் 5th, 2003 at 6:36 am பின்னூட்டமிட்ட வார்த்தை "வணக்கம்"
முதல் பெண் தமிழ் வலைப்பதிவாளர்-துளசி கோபால் செப்டம்பர் 2004 முதல் வலைபதித்துள்ளார். (போட்டிக்கு யாராவது இருந்தால் தயவு செய்து பின்னூட்டமிடவும் :) )
http://www.blogger.com/profile/4714811
(UPDATED :முதல் பெண் தமிழ் வலை பதிவர் யார் என்ற போட்டியில் முந்துவது மதி கந்தசாமி On Blogger Since May 2003- அப்புறமாய் சந்திரவதனா On Blogger Since July 2003)
முதல் தமிழ்பதிவுகள் திரட்டி
தமிழ்மணம் 05-Jan-2004
நிறுவியவர் காசிலிங்கம் http://kasilingam.com/about.php
அதிக இடுகைகள் கொண்ட வலைபதிவு
pkp.blogspot.com 240 :)
(யாரென்று தெரியவில்லை.எனது பதிவுகளின் எண்ணிக்கை 240.இதைவிட அதிகம் கொண்ட பதிவாளர் இங்கே என்னை நீக்கம் செய்யலாம்.தயவு செய்து பின்னூட்டமிடவும்.உங்கள் இடுகைகளின் எண்ணிகையோடு)
நீளமான பெயர் வலைபதிவு
dhinamum-ennai-kavani.blogspot.com (போட்டிக்கு யாராவது இருந்தால் தயவு செய்து பின்னூட்டமிடவும் :) )
குறுகிய பெயர் வலைபதிவு
pkp.blogspot.com (போட்டிக்கு யாராவது இருந்தால் தயவு செய்து பின்னூட்டமிடவும் :) )
இளவயது தமிழ் வலைபதிவாளர்
நிச்சயமாய் நான் இல்லை இளையோர் யாராயிருந்தாலும் இவ்விடத்தை நிரப்பலாம்.தயவு செய்து பின்னூட்டமிடவும்
மூத்தவயது தமிழ் வலைபதிவாளர்
டோண்டு-சாராக இருக்கலாம் வயது 60 என்கிறது அவர் profile
இவரை விட மூத்தோர் யாராயிருந்தாலும் இவ்விடத்தை நிரப்பலாம்.தயவு செய்து பின்னூட்டமிடவும்.
(UPDATED:மூத்தவயது தமிழ் வலை பதிவர் யார் என்ற போட்டி வரிசையில் சிவஞானம் மற்றும் பெருசு உள்ளனர்.யார் முந்துவது என உறுதிசெய்ய இயலவில்லை)
தமிழ்மணம் கணக்குபடி மொத்த தமிழ் வலை பதிவுகள்: 1491
கடந்த ஒரு மாதத்தில் எழுதப்பட்ட இடுகைகள்: 3395
கடந்த ஒரு வாரத்தில் எழுதப்பட்ட இடுகைகள்: 822
கடந்த 24 மணி நேரத்தில் எழுதப்பட்ட இடுகைகள்: 153
ஒரு நாளில் சராசரியாக எழுதப்படும் இடுகைகள்: 113 அதாவது ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு இடுகை
ஒரு நாளில் சராசரியாக இடப்படும் பின்னூட்டங்கள்: 1004 அதாவது ஒவ்வொரு இரண்டு நிமிடமும் மூன்று பின்னூட்டங்கள் இடப்படுகின்றன
தேன்கூடு கணக்குபடி அதிக தமிழ் வலைப்பதிவாளர்கள் வாழுமிடங்கள்
1.இந்தியா 487
2.அமெரிக்கா 68
3.சிங்கப்பூர் 23
4.கனடா 18
(படம் காசி மற்றும் நவன்)
Please have a look of updated version of this log here.
Interesting facts about Worlds First Tamil blogs and Tamil bloggers
Posted by
PKP
at
11/21/2006 03:12:00 PM
14
comments
Monday, November 20, 2006
இந்த வீணைக்கு தெரியாது-A hit`s Profile
ராகம் - சகானா.(Sahana)
வெளியீடு-தூர்தர்ஸனின் ரயில் ஸ்நேகம் டிவி தொடர் (1990`s) (with 13 episodes)
இயக்கம்-கே.பாலசந்தர்
பாடியவர்-சித்ரா
நடிப்பு-நிழல்கள் ரவி, அமுதா
எழுதியவர் : வைரமுத்து
இசை அமைத்தவர் : வி.எஸ்.நரசிம்மன்.
வரிகள்
இந்த வீணைக்கு தெரியாது
இதை செய்தவன் யாரென்று(2)
என் சொந்த பிள்ளையும் அறியாது
அதை தந்தவன் யாரென்று
எனக்குள் அழுது ரசிக்கின்றேன்
இரண்டையும் மடியில் சுமக்கின்றேன்
இந்த வீணைக்கு தெரியாது
மலையில் வழுக்கி விழுந்த நதிக்கு
அடைக்கலம் தந்தது கடல் தானே
தரையில் வழுக்கி விழந்த கொடிக்கு
அடைக்கலம் தந்தது கிளை தானே
எங்கோ அழுத கண்ணீர் துடைக்க
எங்கோ ஒரு விரல் இருக்கிறது
காகம் குருவிகள் தாகம் தீர
கங்கை இன்னும் நடக்கிறது
இந்த வீணைக்கு தெரியாது
சொந்தம் பந்தம் என்பது எல்லாம்
சொல்லித் திரிந்த முறை தானே
சொர்கம் நரகம் என்பது எல்லாம்
சூழ்நிலை கொடுத்த நிறம் தானே
உள்ளம் என்பது சரியாய் இருந்தால்
உலகம் முழுதும் இனிக்கிறது
உதிர போகும் பூவும் கூட
உயிர் வாழ்ந்திட தான் துடிக்கிறது
இந்த வீணைக்கு தெரியாது
என் சொந்த பிள்ளையும் அறியாது
MP3 download link is available on Link sharing forum.
More Rayil Snegam videos
Tamil Serial Song K Balachander Rayil Snegam Rail Sneham Chitra V.S.Narasimhan indhaa veenaiku teeriyadhu Intha veenaikku theriyaathu lyrics MP3 Video Doordarshan
Posted by
PKP
at
11/20/2006 03:53:00 PM
5
comments
Labels: Tamil Lyrics
Thursday, November 16, 2006
ஆன்லைன் கோப்புவகை மாற்றி
ஆன்லைனிலேயே உங்கள் கோப்புகளை ஒரு வகையிலிருந்து இன்னொரு வகைக்கு மாற்றலாம்.(I mean file format.For instance wma to mp3 or avi to 3gp (3gp-வீடியோவகை தான் மொபைல் போனில் பயன்படுத்தப்படுகிறது).இது ஒரு இலவச சேவை.எந்த ஒரு மென்பொருளும் இறக்கம் செய்யவோ அல்லது நிறுவவோ தேவை இல்லை.5 image formats, 14 document formats, 11 video மற்றும் 9 audio formats -ல் விளையாடலாம்.100 MB கோப்பு வரை பயன்படுத்தலாம்.கோப்பு இருக்கும் இடத்தை Browse-ல் காட்டி விட்டு விட்டு நீங்கள் output format-ஐ சொல்லிவிட்டால் மிச்சத்தை Zamar server பார்த்துக்கொள்ளும்.வகை மாற்றம் செய்யப்பட்ட கோப்பை இறக்கம் செய்ய சுட்டி உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பப்படும்.ஆன்லைனில் என்னலாமோ செய்கிறார்கள் போங்கள்.
http://www.zamzar.com/
Convert any file types and formats online
Wednesday, November 15, 2006
பெற்றோர்களுக்கு ஒரு hacking டிப்
ஆன்லைனில் கணிணியில் தனது பிள்ளைகள் என்ன பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என பேதலித்து கலங்கிபோயிருக்கும் பெற்றோர்கள் பல உண்டு.இணைய உலகில் புகுந்து விளையாடும் இளசுகள் வழி தவறி வலையிலிருக்கும் சிலரால் ஏமாற்றப்பட்டு சீரழிய அநேக வாய்ப்புகள்.
உங்கள் பிள்ளைகள் கணிணியில் என்ன செய்கிறார்கள்.அவர்கள் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்க இதோ ஒரு சிறு இலவச மென் பொருள்.இதை உங்கள் கணிணியில் நிறுவி விட்டால் உங்கள் கணிணியில் டைப்செய்யப்படும் அனைத்து key storkes களும் பதிவு செய்யப்படும்.பின்னால் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் அந்த key storkes பதிவுசெய்யபட்டுள்ள கோப்புகளை திறந்து பார்வையிட்டு நீங்கள் நிம்மதி அடைந்து கொள்ளலாம்.
இது மிகவும் சென்சிட்டிவான மென் பொருளானதால் கவனமாக கையாளவும்.ஏனெனில் அதை சரியாக கையாளாவிட்டால் நீங்களே அதில்
மாட்டிக்கொள்ள வாய்ப்பு உண்டு.இன்னொறு முக்கியமான விசயம் உங்கள் பாஸ்வேட்கள்,கிரெடிட் கார்ட் எண்கள் கூட key storkes களாக பதிவு செய்யபட்டிருக்கும்.So more risk.
இதனால் தான் அலுவலக கணிணியை /வீட்டு கணிணியை நீங்கள் பயன்படுத்தாத போது lock it or logout.
நீங்கள் அதை திறந்து விட்டு விட்டுப் போனால் யாராவது இது போன்ற மென்பொருள்களை உங்கள் கணிணியில் நிறுவிவிடவாய்ப்பு உண்டு.ஆச்சர்யம் என்ன வென்றால் இம்மென்பொருள் உங்கள் கணிணியில் அமைதியாக அமர்ந்திருந்து கொண்டு நீங்கள் டைப்பும் அனைத்தையும் தினமும் அந்த நபருக்கு கவனமாக ஈமெயில் செய்து கொண்டேயிருக்கும்.
Product Page
http://www.refog.com/keylogger/
Direct download link
http://www.refog.com/files/keyspectlite.exe
Product Page
http://www.revealerkeylogger.com/
Direct download link
http://www.revealerkeylogger.com/Revealer_Free_Edition_1.1-Setup.exe
Watch kids save from internet keyboard logger logging monitor children.
Tuesday, November 14, 2006
மீள்வரிசை Top 10 தமிழ் வலைப்பதிவுகள்
"உங்கள் தமிழ் வலைப்பதிவு இந்த டாப் 10-ன் இடையே புகுமானால் தயவுசெய்துபின்னூட்டமிடுங்கள்." என ஏற்கனவே தெரிவித்திருந்தேன்.இதன் படி வந்த பின்னூட்டங்களின் அடிப்படையில் கீழே புதுப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட முடிவுகள்.No offence please. :)
நவம்பர் 2006
அலெக்ஸா(Alexa) டிராபிக் தர வரிசைபடி Top 12 தமிழ் வலைப்பதிவுகள்
1.idlyvadai.blogspot.com 422,558
2.thoughtsintamil.blogspot.com 440,022
3.oosi.blogspot.com 477,177
4.vettipaiyal.blogspot.com 605,314
5.madippakkam.blogspot.com 629,244
6.etamil.blogspot.com 702,042
7.gpost.blogspot.com 780,010
8.pkp.blogspot.com 1,027,690
9.holyox.blogspot.com 1,046,210
10.mkarthik.blogspot.com 1,057,265
11.kadalganesan.blogspot.com 1,153,928
12.dharumi.blogspot.com 1,480,622
(Updated On 15th Nov,12thplace dondu.blogspot.com 1,557,295 is replaced by 7th place insert gpost.blogspot.com 780,010)
(Updated On 16th Nov,12thplace valai.blogspirit.com 1,511,625 is replaced by 8th place insert pkp.blogspot.com 1,027,690)
Link Popularity தர வரிசைபடி Top 12 தமிழ் வலைப்பதிவுகள்
1.etamil.blogspot.com 19147
2.thoughtsintamil.blogspot.com 13233
3.gragavan.blogspot.com 4082
4.idlyvadai.blogspot.com 2401
5.dondu.blogspot.com 1267
6.dhinamum-ennai-kavani.blogspot.com 752
7.holyox.blogspot.com 738
8.muthuvintamil.blogspot.com 442
9.valai.blogspirit.com 438
10.pkp.blogspot.com 387
11.vettipaiyal.blogspot.com 321
12.mkarthik.blogspot.com 317
(Updated on Nov 15th, 12th place madippakkam.blogspot.com 210 is replaced by 6th place insert dhinamum-ennai-kavani.blogspot.com 752)
(Updated on Nov 16th, 12th place kadalganesan.blogspot.com 228 is replaced by 10th place insert pkp.blogspot.com 387)
Posted by
PKP
at
11/14/2006 09:36:00 AM
11
comments
Monday, November 13, 2006
போட்டி Top 10 தமிழ் வலைப்பதிவுகள்
சமீபத்தில் இட்லிவடையார் ஒரு தேர்தல் நடத்தி எந்த வித அசம்பாவிதமுமின்றி வெற்றிகரமாக டாப் 5 தமிழ் வலைப்பதிவுகள் - முடிவுகள் தெரிவித்திருந்தார்.முற்றிலும் வலைமக்களால் ஓட்டளிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இட்லிவடையாரின் இந்த டாப் 5 தமிழ் வலைப்பதிவுகள் முடிவுகளை இந்த சுட்டியில் காணலாம் .http://idlyvadai.blogspot.com/2006/11/5.html
கீழே கொடுக்கப்பட்ட Top 10 தமிழ் வலைப்பதிவுகள் நவம்பர் 2006-ல் புகழ்பெற்ற அலெக்ஸா(Alexa) டிராபிக் தர வரிசைபடி தேர்ந்தெடுக்கப்பட்டவை.
1.idlyvadai.blogspot.com 422,558
2.thoughtsintamil.blogspot.com 440,022
3.madippakkam.blogspot.com 629,244
4.etamil.blogspot.com 702,042
5.holyox.blogspot.com 1,046,210
6.kadalganesan.blogspot.com 1,153,928
7.dharumi.blogspot.com 1,480,622
8.dondu.blogspot.com 1,557,295
9.muthuvintamil.blogspot.com 2,083,393
10.gragavan.blogspot.com 2,427,390
கீழே கொடுக்கப்பட்ட Top 10 தமிழ் வலைப்பதிவுகள் நவம்பர் 2006-ல் Link Popularity தர வரிசைபடி தேர்ந்தெடுக்கப்பட்டவை
1.etamil.blogspot.com 19147
2.thoughtsintamil.blogspot.com 13233
3.gragavan.blogspot.com 4082
4.idlyvadai.blogspot.com 2401
5.dondu.blogspot.com 1267
6.holyox.blogspot.com 738
7.muthuvintamil.blogspot.com 442
8.madippakkam.blogspot.com 210
9.kadalganesan.blogspot.com 228
10.dharumi.blogspot.com 190
உங்கள் வலைப்பதிவின் அலெக்ஸா டிராபிக் தரம் காண இங்கே சொடுக்கி Traffic Rankings -ஐ சொடுக்கி உங்கள் வலைப்பதிவின் முகவரி கொடுக்கவும்
http://www.alexa.com/
உங்கள் வலைப்பதிவின் Link Popularity தரம் காண இங்கே சொடுக்கி உங்கள் வலைப்பதிவின் முகவரி கொடுக்கவும்
http://www.submitexpress.com/linkpop/
உங்கள் தமிழ் வலைப்பதிவு இந்த டாப் 10-ன் இடையே புகுமானால் தயவுசெய்து பின்னூட்டமிடுங்கள்.நான் முடிவுகளை மீள் வரிசைபடுத்திக்கொள்வேன்.
அடுத்த காலாண்டில் யார் ஏறுகிறார்கள் யார் இறங்குகிறார்கள் என பார்க்க இப்பதிவு உதவும்.
இந்த தரக்கணக்கீட்டு எண்கள் முற்றிலும் பதிவு தளத்துக்கு வருவோர் போவோர் எண்ணிக்கை மற்றும் அந்தந்த பதிவுதளத்தை சுட்டும் பிற சுட்டிகளின் எண்ணிக்கையை பொறுத்து மென்எந்திரம்
கணக்கிட்டது.மனித தேர்வு அல்ல.
Posted by
PKP
at
11/13/2006 02:42:00 PM
14
comments
Saturday, November 11, 2006
Desperate Housewives ஆன்லைனில்
ஆங்கில தொலைக்காட்சி தொடர்களான Lost, Desperate Housewives,Ugly Betty,Six Degrees,The Nine,Grey`s Anatomy போன்றவற்றின் சமீபத்திய எபிசோட்களை ஆன்லைனில் இலவசமாக பார்வையிட abc ஒரு சேவை வழங்குகிறது.இது போன்ற ஆங்கில சீரியல் விரும்பிகள் கீழ்கண்ட சுட்டி சென்று தொடர்களை கண்டு களிக்கலாம்.
இது போல ஏறக்குறைய 30 தமிழ் தொலைகாட்சி தொடர்களை அனைத்து episode-களோடு காண tamilgrounds.com இணையத்தில் வழிசெய்து கொடுக்கிறது.டாலர் கொடுக்க வேண்டும்.கொஞ்சம் பொறுத்தால் 2010 ல் விழுதுகளோ அல்லது சித்தியோ ஆன்லைனில் இலவசமாய் வரும் என நம்புவோம்.அரசு இலவச கலர் கணிணி இணைய இணைப்போடு வழங்கி கொண்டிருக்கும்.
Watch serial episodes online free
http://dynamic.abc.go.com/streaming/landing
இது சம்பந்த பட்ட இன்னொரு பதிவு இங்கே
http://pkp.blogspot.com/2006/06/tv.html
Friday, November 10, 2006
ஹோட்டல் கலிபோர்னியா - A hit`s profile
வெளியீடு : அமெரிக்க லாஸ் ஏஜ்சலஸ்,கலிபோர்னியாவை சேர்ந்த ராக் இசை குழு ஈகிள்ஸ்
ஆண்டு : 1977
Updated:MP3 download here link has been removed based on a request.
வரிகள்
On a dark desert highway
Cool wind in my hair
Warm smell of colitas
Rising up through the air
Up ahead in the distance
I saw a shimmering light
My head grew heavy, and my sight grew dim
I had to stop for the night
There she stood in the doorway
I heard the mission bell
And I was thinking to myself
This could be Heaven or this could be Hell
Then she lit up a candle
And she showed me the way
There were voices down the corridor
I thought I heard them say
Welcome to the Hotel California
Such a lovely place
Such a lovely place (background)
Such a lovely face
Plenty of room at the Hotel California
Any time of year
Any time of year (background)
You can find it here
You can find it here
Her mind is Tiffany twisted
She’s got the Mercedes bends
She’s got a lot of pretty, pretty boys
That she calls friends
How they dance in the courtyard
Sweet summer sweat
Some dance to remember
Some dance to forget
So I called up the Captain
Please bring me my wine
He said
We haven’t had that spirit here since 1969
And still those voices are calling from far away
Wake you up in the middle of the night
Just to hear them say
Welcome to the Hotel California
Such a lovely Place
Such a lovely Place (background)
Such a lovely face
They’re livin’ it up at the Hotel California
What a nice surprise
What a nice surprise (background)
Bring your alibies
Mirrors on the ceiling
Depict champaign on ice
And she said
We are all just prisoners here
Of our own device
And in the master’s chambers
They gathered for the feast
They stab it with their steely knives
But they just can’t kill the beast
Last thing I remember
I was running for the door
I had to find the passage back to the place I was before
Relax said the nightman
We are programed to recieve
You can check out any time you like
But you can never leave
Hotel California Eagles (American rock music group-Los Angeles, California) video mp3 download Lyrics
Watch more Eagles videos here
Thursday, November 09, 2006
ரூபி போகும் ரயில்
வெப் டெவலப்பர்கள் உலகில் இன்று சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு ஜார்கன் "Ruby on Rails".இது ஒரு சில சமயங்களில் RoR அல்லது Rails எனப்படுகிறது. Perl , Python போன்ற ஸ்கிரிப்டிங் வகைகளுக்கு இந்த RoR ஒரு மாற்று எனலாம்.வேகமான செயல்பாடு,எளிதான ஸ்கிரிப்டிங் என்கிறார்கள்.இன்னும் மார்க்கெட்டில் இதெல்லாம் நிரூபிக்கப்பட்டதாக தெரியவில்லை.ஆனாலும் போகப் போக இந்த ஸ்கிரிப்டிங் வகை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Ruby on Rails ஆனது இருவற்றால் ஆனது. அதாவது Ruby எனப்படும் object-oriented programming scripting language (OOP) - மற்றும் Rails எனப்படும் open source web framework-ன் கலவையே Ruby on Rails.அதாவது ரயில் இல்லையேல் ரூபி இல்லை. இது டேவிட் கெனிமெர் கான்ஸ் என்பவரால் (David Heinemeier Hanss) உருவாக்கப்பட்டு,இன்று அது open-source project ஆக, rubyonrails.org -ல் காணக் கிடைக்கிறது.
நீங்களே உங்கள் வின்டோஸ் கணிணியில் இதை நிறுவி விளையாடி பார்க்கலாம்.ரூபியுடன் நீங்களும் ரயிலேறி பாருங்கள்.
Windows -க்கான Ruby download link
http://rubyforge.org/frs/?group_id=167&release_id=5246
Rubygems download link
http://rubyforge.org/frs/?group_id=126&release_id=2471
சாம்பிள் ஸ்கிரிப்டுகள்-டூடோரியல்கள்- இங்கே
http://www.hotscripts.com/Ruby_on_Rails/index.html
Wednesday, November 08, 2006
"ஓவ்வொரு பூக்களுமே சொல்கிறதே"-A hit`s Profile
படம்- ஆட்டோகிராப் (2003)
பாடியவர்-சித்ரா
எழுதியவர்-பா.விஜய்
இசை-பரத்வாஜ்
நடிப்பு-சிநேகா,சேரன்,கோபிகா
கவி வரிகள்
ஓவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் பொர்க்களமே
ஓவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் பொர்க்களமே
ஓவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போகக் கூடாது
என்ன இந்த வாழ்கையென்றே
எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயமெல்லாம்
மாறிப்போகும் மாயங்கள்
உளி தாங்கும் கற்கள் தானே
மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஓரு கனவு கண்டால்
அதை தினமும் என்றால்
ஓரு நாளில் நிஜமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
ஓவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் பொர்க்களமே
வாழ்க்கை கவிதை வாசிப்போம்
வானமளவு யோசிப்போம்
மகிழ்ச்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போலே சுவாசிப்போம்
லட்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை
உறுதியோடு போராடு
மனிதா உன் மனதை கீரி விதை போடு மரமாகும்
அவமானம் தடுத்தால் நீயும் எல்லாமெ உறவாகும்
தோல்வியின்றி வரலாறா?
துக்கம் என்ன என் தோழா?
ஓரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
Mp3 download link
http://66.90.103.126/~rose4you/www.only4roses.com/index.php?dir=Alphabet%20A-Z/A/Autograph/&file=Ovvoru%20Pookkalume.mp3
இத்திரைப்படத்தின் பிற வீடியோ பாடல்களை பார்வையிட
http://www.pkp.in/fun/Albums/index.php?twg_album=TamilVideoSongs%2FAutograph&twg_show=x
Tamil movie autograph song Ovvoru pookalumey solkirathee video mp3 lyrics
Posted by
PKP
at
11/08/2006 04:57:00 PM
0
comments
Labels: Tamil Lyrics
Tuesday, November 07, 2006
இலவச எளிய Wi-Fi தேடி
மடிக்கணிணி வைத்துக்கொண்டு மால் மாலாய் செல்லும் போது சமயம் கிடைக்கும் போது அருகாமையில் எட்டும் எதாவது கம்பியில்லா வலையை (Wireless) மோந்து பார்ப்பது சகஜம்.
அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் பாதுகாக்கப்படாத வயர்லெஸ் இணைப்புகளை தேடினால் கிடைக்காமல் இருக்காது.காட்ஸ்பாட் (Hotspot) எனப்படும் வயர்லெஸ் இணையமையங்கள் உள்ள ரெஸ்டாரெண்ட்கள்,கிளப்புகள்,நூலகங்கள்,விமான,ரயில் நிலையங்கள்,ஆடிட்டோரியங்கள் மற்றும் அலுவலகங்களில் வை-பி (Wi-Fi means wireless fidelity ) யை நீங்கள் தேடி பிடிக்க வேண்டியது இருக்கும்.இது போன்ற சமயங்களில் ஸ்னிபர்ஸ் (sniffer) எனப்படும் கீழ்கண்ட NetStumbler போன்ற மென்பொருள்கள் ரொம்பவே கைகொடுக்கும்.இண்டு இடுக்குகளில் தேடி சுற்றிலும் எட்ட கூடிய வயர்லஸ் காட்ஸ்பாட்களை பட்டியலிட்டு காட்டிவிடும்.கூடவே signal strength, noise level, encryption method used, GPS coordinates தகவல்கள் வேறு. அப்புறமாய் என்ன இலவச வலை மேயல் தான்.
http://www.netstumbler.com/downloads/
Free packet sniffer utility used to locate Wi-Fi networks
இங்கே சொடுக்கி இலவச hotspot-கள் தமிழகத்தில் எங்கெல்லாம் கொடுக்கிறார்கள் என தெரிந்து கொள்ளலாம்.
Free internet wireless hotspots in Chennai TamilNadu
பிற இடங்களில் இலவச hotspot தேட இங்கே சொடுக்கவும்
http://www.jiwire.com/search-hotspot-locations.htm
Internet cafe Hotspot Wifi search Directory finder
Saturday, November 04, 2006
வந்தது Zune.net
ஆப்பிளின் ஐபாடுக்கு(Ipod) போட்டியாய் மைரோசாப்ட் இறக்கும் ஸியூன் (Zune) MP3 பிளயரின் Official web site கடைசியாய் ஆன்லைனுக்கு வந்துள்ளது.அது http://www.Zune.net
Zune.com என்ற டொமைன் பெயரை மைக்ரோசாப்ட் இழந்தது ஒரு தோல்வியே.http://www.redherring.com/Article.aspx?a=18939&hed
அதை சரி கட்டும் சக்தி மைக்ரோசாப்டுக்கு உண்டு என்பதும் உண்மையே.
தொடக்கத்தில் http://www.comingzune.com Official website -ஆக இருந்தது.இப்போது அது Zune.net -க்கு இட்டுசெல்கிறது.
சில குறிப்புகள்:
இப்பிளயர் 30GB hard drive-3" QVGA screen-FM radio மற்றும் WiFi உடன் வருகிறது. அளவு 4.4" x 2.4" x 0.6"
எடை 5.6 ounces.
Battery life :14 hours (WiFi off)
13 hours (WiFi on) when playing music.
Battery life when watching videos up to 4 hours.
Charging time 3 hours from empty
2 hours to 90% charge.
MSN Music store க்கு மூடுவிழா. அது இனி Zune market place எனப்படும்.புது ஸியூன் ஓனர்களுக்கு 14 நாள் இலவச Zune market place நுழைவும் வழங்கப்படுகிறது.
மைக்ரோசாப்டின் Xbox வெளியிட்டபோது அதன் அபார வெற்றி யாரும் எதிர்பாராதது.இப்போது ஸியூன்.யாருக்கு தெரியும்?.
ABI Research Reveals 58 Percent of iPod Users May Choose Zune
இது குறித்த இன்னொரு பதிவு.
http://pkp.blogspot.com/2006/07/ipod-killer.html
Posted by
PKP
at
11/04/2006 11:46:00 AM
0
comments
Labels: Gadget
Thursday, November 02, 2006
தமிழா? ஹிந்தியா? Google Battle
கூகிள் கரண்டில் (Google current) "தமிழ்" வந்து கலக்கியது யாவரும் அறிந்ததே.கீழ்கண்ட வீடியோவை பார்க்கவும்.உலகளாவிய மொத்த கூகிள் "Tamil" தேடலில் 30% அமெரிக்க நியூஜெர்ஸியிலிருந்து வருகிறது என சொல்லியிருந்தார்கள்.US-ல் அதிகம் தமிழர் வாழ்வது ஜெர்ஸியிலாம்.
இங்கே ஒரு வலை தளம் இரு சொற்களை கூகிள் சண்டையிட வைத்து யார் முந்திகொண்டிருக்கிறார்கள் என காட்டுகிறார்கள். இதில் Higher Google rating-ல் வருவது இப்போதைக்கு என்னவோ தமிழ் தான்.
நம்மாட்கள் வலையில் என்னவெல்லாமோ பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
http://douweosinga.com/projects/googlebattle
Google battle result:
tamil : 438
hindi : 366
Posted by
PKP
at
11/02/2006 04:10:00 PM
2
comments