உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in
Showing posts with label Gadget. Show all posts
Showing posts with label Gadget. Show all posts

Thursday, November 29, 2012

மினி பிசி ஸ்டிக்குக‌ள்

HDMI போர்ட்டுக‌ளோடு கூட‌ வ‌ர‌க்கூடிய‌ இந்த‌ மினி பிசி ஸ்டிக்குக‌ள்தான் இப்போதைக்கு ஹாட் கேட்ஜ‌ட்க‌ளாம். பொடி க‌ணி சுளிக‌ள் என‌லாமோ?க‌ண‌ப்பொழுதில் உங்க‌ள் டிவியை க‌ணிணியாக்கிவிடுகிற‌து. பென்டிரைவ் போல குட்டியாயிருக்கும் இந்த‌ க‌ணி சுள்ளியை உங்க‌ள் டிவியின் HDMI போர்ட்டில் செருகிவிட்டால் போதும். உங்க‌ள் டிவி கணிணியாக‌ உருமாறிவிடுகிற‌து. அன்ட்ராய்ட் முத‌லான‌ ப‌ல்வேறு OS-க‌ளோடு வ‌ருகின்ற‌ன‌. இத‌ன் Wi-fi வ‌ழி கேம்ஸ்,அப்ஸ்,பிரவுஸ் என‌ ப‌ல‌வும் ப‌ண்ண‌லாம்.வீட்டு போட்டோக்க‌ளை வீடியோக்க‌ளை பார்க்க‌ மெம‌ரி கார்ட் போட‌ ஸ்லாட்டும் இருக்கிற‌து.பிசி ஸ்டிக்கிலுள்ள‌ USB போர்ட்டில் ஒரு வ‌ய‌ர்ல‌ஸ் ம‌வுசை செருகிவிட்டால் ஆல்செட்.க‌வுச்சில் அம‌ர்ந்து உலகை உலாவ‌ர‌லாம்.அம்ப‌து டால‌ருக்கெல்லாம் கிடைக்கிற‌து.சும்மா ஒரு அறிமுக‌ம்.


Email PostDownload this post as PDF

Friday, July 22, 2011

3டி to 4டி


3டி-யைப் பற்றி ஊடகங்கள் பெரிதாக பேசியபோது எனக்கு ஒன்றும் நம்பிக்கை இருக்கவில்லை. காஸ்க்கோவில் பெரிய 3டி தொலைக்காட்சி ஒன்றை வைத்து முன்னால் பைனாகுலர் போல 3டி கண்ணாடி ஒன்றை ஒரு ஸ்டாண்டில் நிறுத்தி வைத்திருந்தார்கள். உற்று நோக்கிப் பார்த்தபோது 3டியில் பெண்கள் மணலில் பீச் வாலிபால் ஆடிக்கொண்டிருப்பது தெரிந்தது.அவ்வளவாக கன்வின்ஸ் ஆகவில்லை. இப்படி கண்ணாடியைச் சூடிக்கொண்டு எவ்வளவு நேரம் தான் ஒருவர் நடுஅறையில் அமர்ந்திருக்க முடியும். சாத்தியமில்லையென்றே தோன்றிற்று. நேற்று பார்த்த HTC Evo 3D செல்போன், 3டி பற்றிய எண்ணங்களையே முழுதாக மாற்றிக்கொள்ள வைத்தது. வெறும் கண்ணால் 3டி படங்களை, 3டி வீடியோ மூவீக்களை செல்போன் திரையில் பார்ப்பது மட்டுமல்லாமல் இந்த கேமராவால் 3டி போட்டோக்கள், 3டி வீடியோக்களும் எடுக்க முடிவது கூடுதல் அதிசயம். இப்போது புரிகின்றது 3டி புகுந்து இன்னொரு ரவுண்டு வந்து நம் வீட்டு நடுஅறை டிவிகளையெல்லாம் ஒருவழி செய்துவிடும் என்று. இப்போதைக்கு ஒருசில 3டி சேனல்களே உள்ளன. அதுவும் போட்டதையே திரும்ப திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் போகின்ற போக்கில் எல்லாருமே சீக்கிரத்தில் மாறிவிடுவார்கள். அப்போது இப்போது உசத்தியாய் பேசப்படும் HD படங்கள் கூட நமக்கு அந்தக்கால பிளாக் அண்ட் ஒயிட் படம் பார்ப்பது போன்ற பிரம்மையைத்தரும்.

3டி பற்றி சில கொசுறு தகவல்கள்:

  • யூடியூப் ஏற்கனவே 3டி வீடியோக்களை கொண்டுள்ளன.
  • வலதுகண்பார்வை,இடதுகண் பார்வையென இரு பார்வை கேமராக்கள் கொண்டு 3டி படங்கள் எடுக்கப்படுகின்றன.ஆதலால் இப்போது வரும் 3டி செல்போன்கள் எல்லாம் மூன்று கேமராக்களோடு வருகின்றன.
  • 3டி படங்கள் MPO எனப்படும் multi-picture file format அல்லது JPS எனப்படும் stereo JPEG ஃபார்மேட்டில் இருக்கும்.

அடுத்ததாக 4டி எனச்சொல்லி தியேட்டரில் நாற்காலிகள் படக்காட்சிகளுக்கேற்ப அதிரவும், திரைப்படங்களில் மழைபெய்தால் தியேட்டரிலும் சாரலடிக்கவும், திரையில் புயல்வீசினால் நிஜமாகவே தியேட்டரில் மின்விசிறிகளைக் கொண்டு காற்றுவீசவும், திரையில் தோன்றுவதற்கேற்ப தியேட்டரிலும் நறுமணங்களை (Aroma-scope)வீசவும், புகை எழும்புதல், நீர்க்குமிழிகளை பறக்கவிடுதல் எனப் பல யுத்திகளை செய்ய முயன்றுகொண்டு இருக்கின்றார்கள். அப்படியாக இந்த ஆண்டு 4டியாக வெளியாகவிருக்கும் படம் Spy Kids.
HTC Evo 3D தவிர LG யும் Optimus 3D என 3டி செல்போன் வெளியிட்டுள்ளது. செப்டம்பரில் அடுத்த ஐபோன் மாடல் வரவிருக்க ஆப்பிள் ஸ்டீவின் யோசனை என்னமோ.

நீங்கள் பார்க்க ரசிக்க சில வீடியோகிராப் படங்கள் இங்கே.
வீடியோகிராப்=வீடியோ+போட்டோகிராப்


















மேலும் படங்கள் இங்கே
Amazing Videographs


Email PostDownload this post as PDF

Thursday, August 21, 2008

சிறு துளிகள்


இணையம் வந்தாலும் வந்தது இன்றைக்கு அங்கு பணம் சம்பாதிக்க பலமார்க்கங்கள் இருக்கின்றன. அதற்காக நாம் சும்மா இருந்தால் போதும் அது கொட்டிக்கொடுக்கும் கற்பகதரு என்றர்த்தமில்லை.விற்க உங்களிடம் ஏதாவது ஒரு சரக்கு இருக்கவேண்டும். வாங்குவதற்கு உலக அளவில் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். சமீபத்தில் நான் கண்ட ஒரு உதாரணத்தையே இங்கும் உங்களுக்கு எடுத்துக்காட்டாக்க விழைகின்றேன்.

மீண்டும் இந்த ஐபோனை பற்றியே இங்கு பேசுவதால் கோபித்துக்கொள்ள வேண்டாம். இந்த ஐபோனின் ஒரு மிகப்பெரிய பாஸிட்டிவ் பாயிண்ட் அதன் SDK அதாவது Software Developement Kit. இந்த மென்பொருள் கிட்டை வைத்து ஐபோனுக்கான பயன்பாட்டு மென்பொருள்கள் பலவற்றை மினி மினியாக ஒருவர் இஷ்டத்துக்கு தயார் செய்து கொள்ளலாம். என்ன, கொஞ்சம் Objective C மொழி தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஒரு Mac-OS X உள்ள கணிணிப்பொறி மற்றும் ஒரு ஐபோன் தேவைப்படும். அருமையான, பலருக்கும் பயன்படும் ஒரு சிறுபயன்பாட்டை படைத்து அதை ஆப்பிள் அப்ளிகேஷன் ஸ்டோரில் விலைக்கு வைத்தால் கூவிக் கூவி நாம் விற்கத்தேவையில்லை. இன்றைக்கு மில்லியன்கணக்கில் ஐபோன்கள் மார்கெட்டில் உள்ளன. இதில் ஒரு சொற்ப சதவீதத்தினருக்கு மட்டும் டாலர் ஒன்றுக்கு உங்கள் அப்ளிகேசனை விற்றாலும் கொடிகட்டிப் பறக்கலாம்.

அப்படியே Apple App Store-ல் மேய்ந்து வந்த போது ஒரு தமிழ் பெயர் அடிபட்டது. முத்து ஆறுமுகம் (Muthu Arumugam).திண்டுக்கல் அருகே காட்டுப்புதூர் என்ற குக்கிராமத்திலிருந்து படித்து வெளியேறியவர்.இவர் தானே டெவலப்செய்த TamilDaily எனும் ஒரு iPhone அப்ளிகேஷனை $0.99-க்கும் Upcoming Plus எனும் ஒரு அப்ளிகேஷனை $1.99-க்கும் அங்கு விற்றுவருகின்றார். மகிழ்ச்சியாய் இருந்தது. யாருக்குத் தெரியும் அந்த சிறு துளி சிறு துளிகள் சேர்ந்து பெரு வெள்ளமாகலாம். புரோகிராமிங் படிச்சு தொலச்சோமில்லையேனு வருத்தமாயிருந்தது.

செம்மல் நபியைக் காணச்செல்வோம் எனும் இஸ்லாமிய தமிழ் மென்னூல் இங்கே உங்கள் இறக்கத்துக்காக. Chemmal Nabiyai Kaanach Selvoom Islamic Tamil ebook in pdf format Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Thursday, July 31, 2008

ஐபோன் 3G சில நிறைகளும் குறைகளும்


ஐபோன் கைக்கு வந்து இன்றைக்கு ஒரு வாரம் ஆகிவிட்டது. ரொம்ப விளையாடவில்லை. USB கேபிள் கொடுத்திருக்கின்றார்கள்.எனினும் இதுவரை அதை கணிணியோடு இணைக்க வில்லை.வைரஸ் ஏதாவது வந்துவிடப்போகின்றது என்றாள் நேகா. எங்கிருந்தாலும் மெய்மறந்து யூடியூப் பார்ப்பதிலேயே சமயம் போகின்றது.3G அலைவரிசை உள்ள இடங்களில் வசிப்போருக்கு கொண்டாட்டம்தான்.(USA-ல் 3G வசதி உள்ள இடங்கள் Map இதோ).அதாவது எங்குபோயினும் அகலப்பட்டை வேகம் உங்கள் ஐபோனில் இருக்கும். 3G இல்லா இடங்களில் EDGE அலைவரிசை கிடைக்கலாம்.அது கொஞ்சம் வேகம் குறைவாய் இருக்கும். இருந்தாலும் அவ்வளவு மோசமாய் இல்லை.அப்பார்ட்மென்டில் இருக்கும் போது வீட்டு Wi-Fi-யை அது பிடித்துக்கொள்ளும். அப்படித்தான் நியூஜெர்சி மொகுலில் டின்னருக்காக போகும்போது காரின் சிடிகொத்தை மறந்துவிட்டோம். தமிழிசை இன்றி போரடித்தது. கோபாலுக்கு பட்டென ஒரு யோசனை. காரின் Ipod அடாப்டரிலேயே iPhone -ஐ செருகி நாங்கள் விரும்பி கேட்கும் தமிழ் பாடல்களை யூடியுபில் லைவாக ஓடவிட்டு DJ ஆனாள் நேகா. ஆமாம் விரல் நுனியில் உலகம்.


3G தொழில் நுட்பம் நம்மை பெரிதும் மாற்றிவிடும் போலிருக்கின்றது. இந்தியாவில் அடுத்த மாதம் வோடாபோனும் ஏர்டெல்லும் ஐபோனை அறிமுகப்படுத்துகின்றதாம். ஆனால் முக்கியமான அந்த 3G அலைவரிசை இந்தியாவில் வர இன்னும் கொஞ்ச நாள்பிடிக்கும். எப்போதோ வந்திருக்க வேண்டியது. பாதுகாப்பு அது இதுவென கூறி நம் அமைச்சர்கள் அதை தள்ளிப் போட்டுக்கொண்டே வந்திருக்கின்றார்கள்.

ஐபோன் 3G சில நிறைவுகளும் குறைபாடுகளும்.

நிறைவுகள்.

  • மட மட வென அதிவேக இணையம்.
  • யூடியூப் வீடியோக்கள் அட்டகாசமாய் ஓடுகின்றன.
  • விரல் நுனியில் பங்கு நிலவரங்கள் மற்றும் வானிலை நிலவரங்கள்.
  • Pdf கோப்புகளை படிக்க முடிகின்றது.
  • Word Doc கோப்புகளை படிக்க முடிகின்றது.
  • கேமரா உதவியால் நல்ல துல்லிபமான டிஜிட்டல் படங்களை எடுக்கமுடிகின்றது.அப்படியே ஆன் த ஸ்பாட்டில் மின்னஞ்சலும் செய்துவிடலாம்.
  • விமானம் ஏறியதும் வயர்லெஸ் வசதியை மட்டும் அணைக்கும் வசதி.
  • ஸ்கிரீன் ஷாட் எடுக்கும் வசதி.
  • கான்ஃபெரன்ஸ் கால் செய்யும் வசதி.
  • புளூடூத் மற்றும் விபிஎன் வசதிகள்.
  • எரிச்சலூட்டும் No booting time, No logon time
  • அதனால் Instant email checkup, Instant Browsing, Instant Youtube
  • பல்வேறு பலரும் உருவாக்கிய இலவச ஐபோன் பயன்பாடுகள் (Updated)
குறைபாடுகள்.
  • தமிழ் யூனிக்கோடு எழுத்துருக்கள் உடைந்து உடைந்து தெரிகின்றன(படம்).Safari உலாவியிலிருக்கும் Iphone emulator பொய் சொல்லுகின்றது நெஜமாலுமே.
  • கேமராவில் ஸூம் வசதியில்லை (ரொம்பவும் ஆசைதான்).
  • அவுட் ஆப் பாக்ஸ் ஐபோனில் வீடியோ பதிவு செய்யும் வசதியில்லை. ஆனால் அது ஏற்கனவே ஹேக்கப்பட்டு ஐபோனுக்கான வீடியோ ரெக்கார்டிங் மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கின்றன.
  • GPS நீங்கள் இருக்கும் இடத்தை காட்டுகின்றது, போக வேண்டிய இடத்துக்கான turn by turn direction-ம் கொடுக்கின்றது. ஆனால் சாதாரண ஜிபிஎஸ் போல் குரல் வழி வழிநடத்தும் வசதியில்லை. இதுவும் மென்பொருள் சமாச்சாரமாகையால் எளிதில் மாற்றப்பட்டுவிடலாம்.
  • கூகிள் வீடியோக்களை பார்க்க சில தந்திரங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது.
  • AT&T-யை பொறுத்தவரை, ஐபோனை மோடமாக பயன்படுத்தி லேப்டாப்பில் இணையம் மேய முடிந்தால் கூட நாம் அதை செய்யக் கூடாதாம்.
  • Flash நுட்ப வசதியில்லை.(Updated)

கையடக்க இந்த ஐபோன் பலருக்கும் ஒரு கியூட் கேட்ஜெட். இதுவே சற்று பெரிதாக சிறு புத்தக வடிவில் கீபோர்டு டைப்ப ரொம்ப கஷ்டப்படாத வகையில் ஒரு கேட்ஜெட் வந்தால் நன்றாயிருக்கும் என்பது பலரின் அவா. அதாவது சற்று பெரிய தட்டையான ஐபோன். ஆப்பிள் நிறுவனம் ரகசியமாய் அதற்கான புரோட்டோடைப்பில் ஈடுபட்டிருப்பது போல் தெரிகின்றது. ஐடேப்ளட் (iTablet) என்றோ அல்லது வேறெதாவது பெயரிலோ இந்த வருட இறுதிக்குள் அது சந்தைக்கு வரலாம்.

ஆப்பிள் காட்டில் மழைதான்.

குரான் தமிழ் மொழிபெயர்ப்பு இங்கே சிறு மென் புத்தகமாக. Quran Tamil Translation pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Friday, May 23, 2008

தமிழிலும் வந்துவிட்டது GPS

இதெல்லாம் இப்போதைக்கு சாத்தியமில்லை என்று நாம் அசட்டையாய் சொல்லிக் கொண்டிருக்க எங்கோ யாரோ உழைத்து இது மாதிரி அற்புதங்களையெல்லாம் கொண்டு வந்து கொண்டிருக்கின்றார்கள். ஆமாம் நம் தாய்மொழியாம் தமிழில் கூட இப்போது ஜிபிஎஸ் வந்துவிட்டதாம். இடது புறம் திரும்பு மக்கா , வலது புறம் திரும்பு மக்காவென தமிழில் அந்த GPS அம்மணி நமக்கு வழிகாட்ட நாம் தேசியநெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டப் போகின்றோம்.இந்த கருவியை சமீபத்தில் SatNav Technologies எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பல்வேறு விதமான வழிகளில் பல்வேறு விலைவாசிகளில் ஜிபிஎஸ் தீர்வுகளை இவர்கள் அளிக்கின்றனர்.ஆர்வமுள்ளோர் இவர்களின் http://www.satguide.inஎனும் தளம் போய் ஒரு கணம் பார்க்கலாம்.

சில ஹைலைட்கள்

  • நீங்கள் GPS வாங்காவிட்டாலும் பரவாயில்லை,உங்கள் மடிக்கணிணியை அல்லது PDA-வை அல்லது மொபைல்போனை GPS போல பயன்படுத்த அவர்கள் வழி செய்து தருகின்றார்கள்.
  • நடந்து போகும் போதும் ஆட்டோவில் போகும்போதும் கூட இதை பயன் படுத்தலாம் என்கின்றார்கள்.
  • இந்தியாவாயிருந்தாலும் எல்லா GPS-களும் பயன்படுத்துவது அந்த 24 அமெரிக்க சாட்டலைட்டுகளைதாமாம்.
  • MP3 இசை கூட பாடும் வசதி இவர்கள் தரும் GPS-ல் உள்ளதாம்.
  • GPS க்கும் GPRS க்கும் எந்த சம்பந்தமும் கிடையாது தெரியுமோ?
  • வாங்கும் செலவு மட்டும் தான் பெருசு,மாதம் தோறும் பணம் எதுவும் கட்டவேண்டியதில்லை.
  • பிற்காலத்தில் மேப்பை அப்டேட் செய்ய வேண்டுமாயின் பணம் கட்டவேண்டியது வரும்.
  • இந்த ஜிபிஎஸ்களை வெளிநாட்டிலும் பயன்படுத்தலாமாம்,ஆனால் முதலில் Destinator தளத்திலிருந்து அந்த நாட்டுக்கான மேப்பை வாங்கி நிறுவ வேண்டுமாம்.

முன்பு ஒரு பதிவில் இந்தியாவில் ஜிபிஎஸ்-ன் வருகையை பற்றி எழுதியிருந்த போது நண்பர் வெங்கி கேட்டிருந்தார்
Dear PKP,
I have a GPS unit (MIO C520). Is it possible to buy just the map for India ? which is compatible with this unit ? Your guidance is appreciated.


அவர்கள் கொடுக்கும் GPS unit மாடல் (MIO C230) OS: WinCE .Net 5 போல் தெரிகின்றது.
அவர்கள் FAQ-க்கிலிருந்து ஒரு கேள்வி
Is my device compatible to SatGuide?
Today, SatGuide is compatible with all devices that have the following features:
* The device should be based on windows mobile 2003/2003Se/5.0 Versions.
* The screen size of the device should be 240x320 or 240x240.
* It should have an inbuilt GPS receiver or else you will need to make it GPS enabled by purchasing an external Bluetooth GPS Receiver.

சிறுவர் கதைகள் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. 6th Siruvar Kathaikal kids stories in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Saturday, May 17, 2008

வழித்தடங்கள்

சிலவருடங்களுக்கு முன்பு மேலைநாடுகளின் சாலைகளில் புதுஇடங்கள் பயணிக்கும் போது நமக்கு வழிக்காட்ட துணையாக ஜீபிஎஸ் (GPS) எனும் கருவி புழக்கத்துக்கு வந்ததை கேள்விப்பட்டபோது இது மாதிரி கருவிகளெல்லாம் நம் ஊருக்கு ஒத்துவருமா பொருந்துமாவென வியந்ததுண்டு. நேர்க்கோடாய் கறுப்பு வண்ணத்தை சிந்திய மாதிரி குறுக்கும் நெடுக்குமாய் புதுசாய் திட்டமிடப்பட்டு போடப்பட்ட ரோடுகளுக்கு வேண்டுமானால் ஜிபிஎஸ் கருவி ஒத்துவரலாம்.ஆனால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வரலாறுகள் கொண்ட நம்மூர் சாலைகளில் ஜிபிஎஸ் சாத்தியமா, புதிதாய் உருவாகிய நாடுகளில் ஒரு இடத்துக்கு செல்ல ஒன்று அல்லது இரண்டு வழிகள் தான் இருக்கும். நம்மூரில் ஒரு இடத்துக்கு வேண்டுமானால் ஐம்பதுவழிகளில் செல்லலாமே?

அத்தனை இடற்பாடுகளையும் மேற்கொண்டு நம் ஊருக்கும் இப்போது GPS Navigator வந்துள்ளது. இதனை mapmyindia.com எனும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போதைக்கு A-MAX 06GP5A மற்றும் Delphi NAV 200 எனும் இரு மாடல்களில் கிடைக்கின்றது. இதனை வாங்கி உங்கள் காரில் நீங்கள் பொருத்திக்கொண்டால் தைரியமாய்
இந்தியாவெங்கும் செல்லலாம் என்கின்றார்கள்.

இந்தியா முழுக்க 55,000 கிராம நகரங்களுக்கு இதுவால் வழிகாட்டமுடியும். மாநகரங்களில் Delhi, Gurgaon, Noida, Chandigarh, Mumbai, Thane, Pune, Bangalore, Hyderabad, Kolkata, Chennai போன்ற நகரங்களில் தெருவுக்கு தெரு அதுவால் கூட்டிசெல்ல முடியுமாம்.விலையை கேட்டால் தான் சற்று தலை சுற்றுகின்றது ரூ 20,990/ தான்.

நிற்க. சம்பந்தமேயில்லாத சம்பந்தமுள்ள இன்னொரு சேதி.

YourGmap.com என ஒரு இணைய தளம். உங்களுக்கு சொந்தமாய் கூகிள் மேப்கள் வைத்துக்கொள்ள இங்கு வசதிசெய்து தருகின்றார்கள். நீங்கள் போயிருக்கும் அல்லது போக ஆசைப்படும் அல்லது சமீபத்தில் போன இடங்களை மேப்பில் குறித்து வைத்து குடும்பத்தினர்களிடையே அல்லது உங்கள் நண்பர்களிடையே அந்த மேப்பை பரிமாறிக்கொள்ளலாமாம். இஷ்ட புனிதத் தலங்களை அல்லது விருப்ப உணவகங்களையும் குறித்து பிறருக்கு காட்டலாம்.

"நானும் அங்கிருந்தேன்" என எனது வழித்தடங்களை குறித்துப்பார்த்தேன்.
இதோ அந்த மேப்.(சில நாடுகள் ஏனோ மிஸ்ஸிங்)
I was also there - PKP



லினக்ஸ் ஒரு அறிமுகம் தமிழில் பிடிஎப் பக்கங்கள். Introduction to Linux in Tamil pdf pages Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Tuesday, April 22, 2008

பரிமளா போன பாதை

வெள்ளிக்கிழமை என்றாலே பக்கத்து வீட்டு பரிமளாவுக்கு ஏகத்துக்கும் குஷிதான்.ஏனென்றே எனக்கு தெரிந்ததில்லை. கார் சாவியை சுழற்றிச்சுழற்றி ஏதோ ஒரு பாடலை முணங்கிக்கொண்டே அலுவலகம் விட்டு வீட்டுக்கு வரும் அவள் அரைமணிநேரத்தில் ரெடியாகிவிடுவாள். கிளம்பி போனவள் போனவள் தான். திரும்பிவர நள்ளிரவும் தாண்டிவிடும்.இதையெல்லாம் இங்கு நான் கட்டாயம் சொல்லத்தான் வேண்டுமாவென நினைத்தேன். சொல்லிவிடுவதுதான் நல்லது.அதற்கான காரணத்தையும் அப்புறம் சொல்கின்றேன்.

எங்கு போகின்றாள் இவள்? மாலை முதல் நள்ளிரவுதாண்டியும் அப்படி எங்கே அவள்?

போன வாரம் கிளைமாக்ஸ் நடந்தது.

வெறும்(!) 230 டாலர்கள் தான். ஆன்லைனில் ஆர்டர்பண்ணியிருந்த LandAirSea GPS Tracking Key வந்துவிட்டிருந்தது. சிறுசா தீப்பட்டிமாதிரி. ஒரு USB கொக்கியும் இருந்தது. சில பேட்டரிகள் நாம் போடவேண்டும்.பரிமளாவுக்குத் தெரியாமல் அவள் டொயோட்டா கேம்ரி காரின் அடியில் அந்த டிராக்கிங் கீயை நச்சென ஒட்டவைத்தேன். அதிலிருந்த காந்தம் பரிமளாவின் காரை கெட்டியாகப் பிடித்துக்கொண்டது.

இனி இந்த கார் எங்கெல்லாம் போகுமோ அதெல்லாம் எனக்கு சந்து சந்தாக தெரிந்துவிடும். எவ்வளவு வேகமாக அவள் காரை ஓட்டினாள் (அவள் ஒரு பறக்கும் பாவை) எங்கெல்லாம் எவ்வளவு நேரம் அவள் நின்றாள் எல்லாம் இந்த கீ நோட் செய்து வைத்துக்கொள்ளும். அடுத்த நாள் அந்த Tracking Key-யை எடுத்து வந்து எனது கணிணியில் செருகி பார்த்தால் அத்தனையும் மேப் போட்டு துல்லிபமாய் எனக்கு காட்டிவிடும்.

இதுமாதிரி யாரை வேண்டுமானாலும் நீங்கள் கண்காணிக்கலாமாம் அதுவும் உலக அளவில். அதனால் இனிமேல் "ஒருமாதியான" இடங்களுக்கு போவதாய் இருந்தால் செல்லும்முன் காரை முழுசா சோதனை போட முடிவெடுத்திருக்கின்றேன்.

இன்றைய காலத்தில் தொழில்நுட்பத்தில் நீங்கள் ஆர்வமுள்ளவராய் இல்லாதவராயினும் நிகழ் கால தொழில்நுட்ப விசயங்களை கண்டிப்பாய் தெரிந்திருக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.எது தொழில் நுட்பத்தால் முடியும் எது முடியாது இதெல்லாம் சகலோர்க்கும் தெரிந்திருக்க வேண்டிய நிலை. ஒன்றும் தெரியாத அப்பாவியாய் இருந்தால் தெரிந்தவன் உங்களை கொள்ளை கொண்டு போய்விடுவான்.

சரி பரிமளாவின் கதையை நான் இப்போ எப்படி முடிக்கறது? ஒவ்வொரு மொழி பட இயக்குனர்களும் ஒவ்வொரு விதமாய் முடித்திருப்பார்கள். இல்லையா?

மேலும் அறிய
http://www.trackingkey.com

டிஸ்கிளைமர்: எனது பதிவுகளில் வரும் பக்கத்து வீட்டு பரிமளா முதல் பொன்னம்மா பாட்டி வரை அத்தனைபேரும் கற்பனை கதாபாத்திரங்களே Just In Case :)

நெ.சி.தெய்வசிகாமணியின் மரியாதைராமன் கதைகள் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. N C Theiva Sigaamony Mariathai Raman Kathaikal in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Monday, November 05, 2007

கீ செயினில்

நம் சாவிக்கொத்தில் தொங்கவென என்னவெல்லாம் வந்துவிட்டன பாருங்கள். ஏன் சீக்கிரத்தில்
Keychain MP3 Players, Keychain IPods, Keychain Cell Phones, Keychain GPS Navigator, Keychain Computer-கள் கூட வரலாம். இப்போதைக்கு என் பேவரைட் Keychain Digital Photo Viewer. :)

Keychain Hand bag holder can be used at Hotel table,Office table etc

Keychain Digital Camera

Keychain Torch Light

Keychain Thermometer

Keychain Compas

Keychain Digital Photo Viewer

Keychain USB Flash Drive

Keychain Universal Remote Control

Keychain Ash Tray

Keychain Calculator

Keychain FM Radio



கிருஷ்ணாவின் "பகவத் கீதை" தமிழில் இந்துக்களின் புனிதநூல் மென்புத்தகம் Krishna`s Bhagavad Gita Hindus Holy Book in Tamil e-book Download. Right click and Save.http://static.scribd.com/docs/f5a2dcgknqbum.pdf


Email PostDownload this post as PDF

Monday, June 04, 2007

இதற்கொரு கூகிள்

சோபாக்கடியில் ரிமோட்டை தொலைத்துவிட்டு அதை வீடெல்லாம் தேடல், அது போல் சாவியை எங்காவது தொலைத்துவிட்டு சந்துபொந்தெல்லாம் தேடல்,மூக்குக் கண்ணாடியை தொலைத்துவிட்டு தடவி தடவி தேடல், பர்ஸை தொலைத்துவிட்டு பக் பக்கென தேடல் இதெல்லாம் சராசரி மனிதர் வீட்டில் சகஜமப்பா. இதெற்கெல்லாம் ஒரு முடிவுவாராதாவென வேண்டுவோருக்கு இதோ ஒரு எலக்ட்ரானிக் தீர்வு.
"Sharper Image"-ன் "Now You Can Find It!" Things Locator எனும் கையடக்க உபகரணம் உங்களுக்கு உதவலாம். உதாரணமாய் உங்கள் சாவிகொத்தோடு இதனோடு வரும் குறிப்பிட்ட வண்ண "தொங்கட்டாணை" இணைத்துவிட்டால் போதும். சாவிகொத்து காணாமல் போனதும் கொடுக்கபட்ட அந்த சாதனத்தில் அந்த குறிப்பிட்ட சாவி சம்பந்த பட்ட வண்ண பொத்தானை அமுக்கினால் சாவிகொத்துவிலிருந்து கீ... கீ... வென குரலெழும். என்ன நீங்கள் 40 அடி தூரத்துக்குள் இருக்க வேண்டும்.
இந்த சாதனமே காணாமல் போனால் என்ன பண்ணவென்று மட்டும் கேட்காதீர்கள்.

Product Page
http://www.sharperimage.com/us/en/catalog/product/sku__SI676FUN

இதற்கெல்லாம் மயங்காமல் "இதற்கொரு கூகிள் வேண்டுமடா"-வென்று நீங்கள் அடம்பிடித்தால் கீழ்கண்டவாறு சாவிகொத்தை தேடி கண்டுபிடிக்கும் கூகிள் சீக்கிரத்தில் வரலாம்.என்ன சிலகாலம் காத்திருக்க வேண்டும்.


Email PostDownload this post as PDF

Tuesday, May 15, 2007

USB-யால் கணிணிகளை இணைக்கலாம்

அருகருகேயுள்ள இரு கணிணிகளிடையே கோப்புபரிமாற்றம் செய்ய வேண்டும். துரதிஷ்டவசமாய் நெட்வொர்க் அங்கேயில்லை. அதற்கான சாத்தியமுமில்லை. ஸ்நீக்கர்நெட் (Sneakernet) எனப்படும் இங்கே ஒரு டிஸ்கில் காப்பி பண்ணி பின் அங்கே அந்த டிஸ்கை எடுத்து சென்று இணைத்து பேஸ்ட் பண்ணும் முறை செய்ய பொறுமையும் இல்லை.இது போன்ற தருணங்களில் USB to USB கேபிளால் இணைப்பு கொடுத்து கோப்புபரிமாற்றம் செய்ய இப்போதெல்லாம் வழி இருக்கின்றது.USB முனை இல்லா கணிணிகளே இன்றைக்கு இல்லையாதலால் நெட்வொர்க் கார்டு பற்றியோ அல்லது ஐபி அட்ரஸ் குறித்தல் பற்றியோ கவலை பட தேவை இல்லை.இரு கணிணி USB முனைகளையும் டொர்னடோ (The Tornado) எனும் கேபிளால் இணைத்தால் u are all set.எளிதாய் கோப்பு பறிமாற்றம் செய்யலாம்.என்ன இப்போதைக்கு இக்கேபிளின் விலை ஏறத்தாழ 60 டாலர்கள்.ஆனால் அவசரத்துக்கு ரொம்பவே உதவும் gadget.பறிமாற்ற வேகம் 25MB/s.கேபிள் நீளம் 4 அடிகள்.இதில் கூல் என்னவென்றால் இரு கணிணியிலும் எந்த ஒரு மென்பொருளும் நிறுவ தேவையில்லை.

Product Home Page

http://www.thetornado.com/site/product.shtml


Email PostDownload this post as PDF

Monday, April 23, 2007

மொபைல் உலகம்

செல்போன் எனும் மொபைல் போன்களின் ஆதிக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகின்றனவென புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.இந்த ஆண்டு மார்ச் கணக்கீடுபடி மொத்தம் 166 மில்லியன் இந்தியர்கள் மொபைல் போன் வைத்துள்ளனராம். இது கடந்த வருடத்தை விட 68 சதவீதம் அதிகம். இந்த எண்கள் ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டேயுள்ளன. மொபைல் போன்கள் இப்போதெல்லாம் வெறும் பேசுவதற்காக மட்டுமல்லாது பிற பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளதால் இந்த ஜூரம் இன்னும் ஏறும்.

சமீபத்தில் ரிலையன்ஸ் "R World"-டோடு சன்டிவி சேர்ந்து மொபைல் போனில் சன் டிவி பார்க்கும் சூழல் உருவாகியுள்ளனர். ஏறத்தாழ சில கணங்களே தாமதமாய் லைவாய் சன் டிவி பார்க்கலாமாம்.5 நிமிடம் பார்க்க 15 ரூபாய்னு சொல்லியிருக்கிறார்கள்.இந்தியா முழுதுமாய் 30 மில்லியன் பேரும் தமிழகத்தில் மட்டும் 26 லட்சம் பேரும் ரிலையன்ஸ் சந்தாதாரர்கள். இவர்களில் 50 சதவீதம் பேர் சன்டிவி பார்க்கும் வசதியுள்ள செல்போன்கள் வைத்துள்ளார்களாம். மேலும் நிகழ்சிகளை இறக்கம் செய்து பார்க்கவும் வசதி செய்து தருகின்றார்களாம்.ஒரு இறக்கத்துக்கு 7 ரூபாய். :)

.com போல் .mobi எனும் ஒரு தனி டொமைன் பெயரே மொபைல் போன் பயன்பாட்டு வெப் சைட்டுகளுக்கென அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். நோக்கியாவின் .மொபி வெப்தளத்தை இங்கே காணலாம்.
http://nokia.mobi/

செல்போன் வழி இணையம் மேய்தலும் அதிகரித்து வருகின்றது.அதற்கு வசதியாக மைக்ரோசாப்ட் "டீப் பிஷ்" DeepFish என்று ஒரு புதுவகையான பிரவுசரோடு வந்திருக்கிறார்கள். இருக்கும் இணைய பக்கங்களை அப்படியே மினிபடுத்தி மொபைல் பதிப்பாக இது காட்டுமாம்.
http://labs.live.com/deepfish/

மைக்ரோசாப்ட் இப்போதெல்லாம் அழகாக பெயர் வைக்க கற்றிருக்கிறார்கள்.
SilverLight என்று இன்னொரு படைப்பும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இவர்களின் இந்த படைப்பு அடோபியின் பிளாஷுக்கு போட்டியாய் அமையுமோ என்று தோன்றுகிறது. புதுவகையான பிரவுசர் plugin ஆம் அது. http://www.microsoft.com/silverlight/asp/downloads.aspx


இங்கே ஒரு தளம் இந்தியாவில் செல்போனிலிருந்து யாராவது உங்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் அந்த நம்பர் எவ்விடமிருந்து வந்தது எனக் காட்டுகின்றது.முதல் 5 நம்பர்களையும் உள்ளீடு செய்து தட்டி பாருங்கள்.
Got missed call? Find out who called and from where?
http://www.informationmadness.com/cms/index.php?option=com_content&task=view&id=40&Itemid=53

அப்படியே இருக்கிற வீடியோ துண்டுகளை 3gp எனப்படும் வகையாய் மாற்றி உங்கள் மொபைலில் கொண்டு திரிய இங்கே ஒரு Super மென்பொருள்.இறக்கம் செய்து முயன்று பார்க்கலாம்.
http://www.megaupload.com/?d=HOB6VOBO

பேச,SMS அனுப்ப,படம்,வீடியோ எடுக்க மற்றும் பறிமாற,FM,MP3 கேட்க,இணையம் மேய,டிவி பார்க்கவென போய்க்கொண்டேயிருக்கும் இது எங்கு போய் முடியுமோ?


Email PostDownload this post as PDF

Thursday, April 12, 2007

இனி புத்தகங்களுக்கு குட் பை!!

சோனி (Sony) அவ்வப்போது அட்டகாசமான கருவிகளோடு மார்க்கெட்டில் வருவது அவர்கள் பொழுதுபோக்கு. தனக்கே உரித்தான நவீன தொழில்நுட்பங்கள், தரம் என அசத்திவருவது உலகறியும். இப்போது இன்னொரு புரட்சிபடைக்கும் பெட்டியோடு வந்திருக்கிறார்கள். Sony Reader ஈ புக் ரீடர்.ஈ புத்தகங்களை படிப்பது முன்னெப்போதும் இல்லாதபடி இனி மிக எளிதாகப் போகின்றது. இன்றைய நிலையில் இந்த மென் புத்தகங்களை (E books) படிக்க மேஜை கணிணி அல்லது மடிக்கணிணியில் உட்கார்ந்து படிக்க வேண்டும்.அது boot ஆகி அப் ஆகி படிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.மேலும் 8 மணி நேர வேலை போக படிக்கவும் கணிணியா-..னு வெறுப்பு வேறு. இதோ ஒரு கையடக்க கருவி சாதாரண காகித புத்தகம் போல மென்,மின் புத்தகங்களை படிக்க உதவுகின்றது.பஸ்ஸில் ஏறி பட்டென திறந்து படிக்கத் தொடங்கிவிடலாம்.7,500 பக்கங்களை இன்னொரு முறை ரீசார்ஜ் செய்யாமல் முழுதுமாய் படித்து விடலாமாம்.மேலும் ஒரு நூலக புத்தகங்களை இதில் உள்ள டிஸ்கில் சேமித்து வைத்துகொள்ளலாம். சாதாரண புத்தகம் போலவே பக்கங்களை புரட்டி புரட்டி படிக்கவேண்டுமாம்.முக்கியமாய் இது கணிணி மானிட்டர் போல் CRT-யோ அல்லது மடிக்கணிணி போல் LCD technology-யோ பயன்படுத்தாமல் e Ink-னு ஒரு
நுட்பம் பயன்படுத்துவதால் கண்ணுக்கு இது காகிதத்தில் படிப்பது போலவே தோன்றுமாம்.நாம் படித்துக் கொண்டிருக்கும் போது அது துளி கூட மின்சாரம் பயன்படுத்தாது என்பது இன்னொரு ஆச்சர்ய விஷயம்.ஓ மறந்துட்டேன் MP3 பாடல்களையும் இது கொள்வதால் இனிய இசை கேட்டுக்கொண்டே படிக்கலாமாம் போங்கள்.காகித நாவல்களை சுமப்பது போய் இனி இந்த சிலேட்டை அனைவரும் சுமந்து கொண்டு திரிவதை சீக்கிரத்தில் பார்க்கலாம்.


Email PostDownload this post as PDF

Wednesday, March 28, 2007

USB செல்லும் பாதை

ஆரம்பத்தில் ஸ்கேனர்,பிரிண்டர் அப்புறமாய் மவுஸ்,கீபோர்டு அதன் பின் கேமரா, பென் டிரைவ்கள் என அமைதியாய் தன்னை ஆக்கிரமித்து கொண்டிருந்த USB thing இப்போது ஒரு காய்ச்சல் போல் கணிணி geek-களை பிடித்தாட்டுவித்து கொண்டிருக்கின்றது. யாரும் நினைத்திராத அளவில் அது இன்று அனைவருக்கும் ஒரு pet.கையடக்க அளவில் எளிதில் எல்லா கணிணி சாதனங்களையும் plug and play அதாவது மாட்டு ஓட்டு நிலைக்கு கொண்டுவந்தது USB யின் சாதனையே. இப்போது அந்த யூஎஸ்பி எதெற்கெல்லாம் பயனாகின்றதென்று பாருங்கள். டீ கப்பை சூடாக்குவதிலிருந்து பக்கத்து டெஸ்க் மேதாவிக்கு ஏவுகணை விடவரை போய்விட்டது.

USB Pencil Sharpener



USB Cooling Fans


USB Dual LED Light


USB Light


USB Desk Lamp


USB Massager


USB Beverage Chiller


USB Missile Launcher


USB Rocket Launcher


USB Snowbot


USB Laser Guided Missile Launcher


USB Mini Desktop Aquarium


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்