சூரியனை ஓயாமல் சுற்றி வந்து கொண்டிருக்கும் சனி போன்ற இயற்கை கோள்கள் நம்மிலே, நம் செயல்பாட்டிலே எந்த வித தாக்கங்களை ஏற்ப்படுத்துகின்றனவென திட்டமாய் தெரியவில்லை. ஆனால் பூமியை ஓயாமல் சுற்றி வந்து கொண்டிருக்கும் மனிதனின் செயற்கை கோள்கள்(Satellite) நம்மிலே, நம் செயல்பாட்டிலே அதிக தாக்கங்களை ஏற்ப்படுத்தி வருகின்றது உண்மையே.
உதாரணத்துக்கு சொல்லப்போனால் பூமி உருண்டையை இடைவிடாது சுற்றி வரும்
QuickBird, WorldView I போன்ற சேட்டலைட்கள் இன்றி கூகிள் எர்த் நமக்கு கிடைத்திருக்காது.
Global Navigation Satellite System-ன் அந்த 24 சேட்டலைட்கள் இன்றி அமெரிக்க கார்களின் GPS வேலை செய்யாது.
INSAT 4B இல்லாமல் சன் டிவியின் SunDTH நேரடி சேட்டலைட் வழி ஒளிபரப்பு சேவை நமக்கு கிடைத்திருக்காது.
இப்படி டிவி சேனல்களை கேபிள்களின்றி நாடுமுழுதும் ஒளிபரப்ப ,சுற்று புற சீதோஷண நிலையை மணிக்கு மணி தெரிந்துகொள்ள , கடலடி இண்டர்நெட் கேபிள் வெட்டுண்டு போனாலும் அவசரத்துக்கு இணையம் மேய, நமக்கப்பாலுள்ள அண்டங்களை ரொம்ப அவசியமாய் ஆராய, எதிரியின் தந்திர நகர்வுகளை கவனமாய் நோட்டமிட இப்படி பல உதவிகள் இந்த செயற்கை கோள்களால்.
அந்த காலத்து போர் தந்திரம் ஆரம்ப குறி எதிரியை புற உலகிலிருந்து துண்டிப்பது. சாலைகளை துண்டித்தல், பாலங்களை உடைத்தல், துறைமுகங்களை தகர்த்தல் இப்படி.
வரும் கால போர் தந்திரமும் இப்படியே தான் இருக்கும். ஆனால் சற்று வித்தியாசமாக. பகைநாடு பற்றிய தகவல்களை அள்ளித்தரும் இந்த சேட்டலைட்களை நொறுக்குதல்.
சீனா, ரஷ்யாவின் கருத்துப் படி ஆத்திர அவசரமேயில்லாமல் விண்வெளியில் சும்மா ஒடிக்கொண்டிருந்த ஒரு செயற்கைகோளை ஏவுகணை(SM-3) வைத்து சுட்டு அமெரிக்கா ஒரு வெற்றிகரமான ஸ்டார்வார் (Starwar) ஒத்திகை பார்த்துள்ளதாம்.
இதையே தான் சீனாவும் (KillSat) முன்பு ஒருமுறை சாதித்துள்ளது.
ஆக இன்னொரு யுத்தம் வந்தால் முதல் இலக்கு வானமாய் தான் இருக்குமோ...?
சிறு வயதில் படித்த சிறுவர் பாடல் ஒன்று நினைவுக்கு வருகின்றது.
வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா
இடி இடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்
மின்னல் ஒரு நாட்டியம்
மேடை வான மண்டபம்
தூரல் ஒரு தோரணம்
தூய மழை காரணம்
எட்டுத் திசை காற்றிலே
ஏக வெள்ளம் ஆற்றிலே
தெருவெல்லாம் வெள்ளமே
திண்ணையோரம் செல்லுமே
பார் முழுதும் வீட்டிலே
பறவை கூட கூட்டிலே
தவளை மட்டும் பாடுமே
தண்ணீரிலே ஆடுமே
அகன்ற வெளி வேடிக்கை
ஆண்டு தோறும் வாடிக்கை"
மனசு ஏனோ இலகுவாகி சில்லுனு இருக்குது.
வேதாளம் "மந்திரக்கள்ளி மாயம்" தமிழ் சிறுவர் படக்கதை இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Veethaalam Phantom Mandhirak Kalli Maayam Tamil Children Comics pdf ebook Download. Right click and Save.Download
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Wednesday, February 27, 2008
வானத்திலே திருவிழா
Friday, February 22, 2008
உங்களிடமிருந்து
பக்கத்திலோடும் 279 KB அளவேயான gif படக்கோப்பு என்னமாய் நீளக் கதை சொல்லுகிறதென பாருங்கள். மிக அருமையல்லவா?. சரி.விசயத்துக்கு வருவோம்.
நண்பர் இஸ்மாயில் கனி கேட்டிருந்தார்.
ஒரு VIDEO file-லிருந்து தேவையான பகுதி மட்டும் வெட்டி எடுக்க, மற்றும் வெட்டி எடுத்த பகுதிகளையெல்லாம் ஒரு கோப்பாக செய்ய Video cutter or VCD CUTTER செயலி பற்றி அறிய தாருங்களேன்.
இலவச வீடியோ எடிட்டரான Virtual Dub -ஐ நீங்கள் முயன்று பார்த்ததுண்டா? இதனோடு ஒத்து போகும் filters-ஐ இங்கே இலவசமாய் இறக்கம் செயது கொள்ளலாம்.
http://milafat.free.fr/vdfilters.htm
மற்றபடி VCD கட்டர் தான் வேண்டுமெனில் 4shared.com-ல் தேடிப்பாருங்கள். கிடைக்கும். கீழே சுட்டி.
VCD Cutterநண்பர் காசிபாரதி கேட்டிருந்தார்.
பிகேபி சார் மிகவும் பயனுள்ள தகவல்கள் தொடர்ந்து தருகிறீர்கள். என்னுடைய கம்ப்யூட்டரில் இருக்கிற திடீர்ன காணமுடியாம இருக்கு. ஆனால் அழிஞ்சு போகல்ல. அதை எப்படி மீட்க முடியும்? நான் இந்த கம்ப்யூட்டருக்கு புதுசு கொஞ்சம் உதவி பன்னுவிங்களா?
நீங்கள் சொல்வது புரியலையே. ஒருவேளை உங்கள் கோப்புகள் அழிபட்டிருந்தால் "அழிக்கப்பட்ட கோப்புகளை மீட்க" என்ற எனது முந்தைய பதிவை படித்து பாருங்கள்.உதவலாம்.நண்பர் rsankar கேட்டிருந்தார்.
PKP sir I want video mixing software.I need to mix some video file and special effect also please can you help? same as pinnacle studio.please reply me sir.thank you
Wax உங்கள் தேவையை சரிகட்டுமாவென தெரியவில்லை.
http://www.debugmode.com/wax/
Pinnacle தான் வேண்டுமெனில் இங்கு தேடிப் பாருங்கள்.நண்பர் வால்பையன் கேட்டிருந்தார்.
ஒரிஜினல் windows xp எங்கே கிடைக்கும்.ஈரோட்டில் Rs.3700 சொல்கிறார்கள், அதன் விலை அவ்வளவு தானா?
http://www.buyoriginalms.com எனும் வெப்தளம் வழி வாங்கலாமாம். அல்லது http://www.askfororiginal.comஎனும் தளம் பிற வழிகளை (தொலைபேசி வழி அல்லது கடை முகவரிகள்) சொல்லித் தருகின்றார்கள். Windows Vista Home basic பதிப்பு 7,250 ரூபாயாம். விலை கொஞ்சம் அதிகம் தான். :)நண்பர் கயல்விழி முத்துலெட்சுமி கேட்டிருந்தார்.
N72 நோக்கியா மாடல் போன் மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்கள் mp4 பார்மேட்டில் இருக்கிறதே அதை சிடி செய்ய இயலவில்லை.. அதற்காக அதை வேறு பார்மாட்டில் மாத்த எதாவது சாப்ட்வேர் இருக்கிறதா? (இலவசமாக)
சூப்பர் என்ற மென்பொருள் உதவுமே, மீடியா ஸ்பெஷல் என்ற எனது முந்தைய பதிவை படித்துப் பாருங்கள்.நண்பர் பிரேம்ஜி கேட்டிருந்தார்.
நண்பர் PKP க்கு வணக்கம். என்னிடம் 350 MB அளவில் ஒரு AVI வீடியோ உள்ளது. அதை எவ்வாறு சுருக்குவது. மேலும் அதை நான் edit செய்ய விரும்புகிறேன். தயவு செய்து விளக்கவும். நன்றி.
புரிகிறது.AVI வீடியோக்களின் சைசு பெருசு பெருசாகத்தான் இருக்கும்.அதை பிற ஃபார்மாட்டுக்கு (Like mpeg) மாற்றுவதன் மூலம் அதன் சைஸை குறைக்கலாம்.மேலே நான் சொன்ன சூப்பர் என்ற மென்பொருள் அதற்கு உதவும்.நண்பர் Sundar கேட்டிருந்தார்.
You tube video-kkalai .flv file download seithu .mpg yaga SUPER converter-il seithu CD yil paarthaal,Quality poor-aaga irukkirathae? your suggestions please
யூடியூபில் முழுத்திரையாக அவ்வீடியோவை பார்த்தால் என்ன தரத்தில் தெரியுமோ அதே தரத்தில் தான் CD-யாக எரிக்கும் போதும் கிடைக்கின்றது. அதனால் நல்ல தரமுள்ள யூடியூப், கூகிள் வீடியோக்களையே CD-யாக சமைத்தல் நல்லது. நண்பர் வடுவூர் குமார் கேட்டிருந்தார்.
ஆத்திச்சூடி அருமையாக இருக்கு. படைத்தவர்களுக்கு வாழ்த்துக்கள். பள்ளியில் உட்கார்ந்து பெரிய புத்தகத்தில் படிப்பது போல் இருக்கு. குரல் கொடுத்திருக்கலாமோ??
கொடுத்திருந்தார்களே!! கவனிக்கலையோ!
:)நண்பர் thiruthiru கேட்டிருந்தார்.
பிகேபி ஐயா, தமிழ் யுனிகோட் ஏற்றுக்கொள்ளக் கூடிய freeware pdf editor கிடைக்குமா?
தமிழ் யுனிகோடில் எந்த எடிட்டரை வைத்து வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள். நோட்பேடிலோ அல்லது மைக்ரோசாப்ட் வேர்டிலோ எழுதிக்கொள்ளுங்கள்.அக்கோப்பை எளிதாய் pdf-ஆக்க PDFcreator போன்ற மென்பொருள்கள் இலவசமாய் கிடைக்கின்றனவே.
"பிரிப்போம், சேர்ப்போம்":-ல் பிரிச்சாச்சு. பிரிச்ச கோப்பை அனுப்பும்போது மறுமுனையில் ஒட்டத் தேவையான .exe கோப்பை mail clients like gmail, hotmail, rediff, yahoo நாலுமே மறுக்கின்றனவே? என்ன வழி? ஒட்டுவான் இல்லாமல் எப்படி வெட்டிய கோப்புகள் இணையும்?
மறுமுனை நண்பருக்கு அந்த பதிவிறக்க சுட்டியை மின்னஞ்சல் வழி அனுப்பலாம். அல்லது .exe-யை சும்மாவாச்சும் .doc-னு rename பண்ணி மின்னஞ்சலில் அனுப்பலாம். ஆனால் நண்பருக்கு சரியான வழிமுறைகளை சொல்ல மறந்துடாதீங்கோ.சுஜாதா "கணையாழியின் கடைசிபக்கங்கள்" தமிழில் மென்புத்தகம் Sujatha Kanayaliyin Kadaisi Pakangal pdf Tamil e-book Download. Right click and Save.Download
Posted by
PKP
at
2/22/2008 04:39:00 PM
13
comments
Labels: QandA
Thursday, February 21, 2008
கொஞ்சம் சுயபுராணம்
என்னைப் போன்ற சராசரி தமிழ் பேசுபவனுக்கு தெரிந்த சில சமாசாரங்களை, இன்னொரு சாமானிய தமிழனுக்கு சொல்லத் தான் இந்த வலைப்பதிவு இதுவரை ஓட்டப்பட்டு வருகின்றது. வழக்கமாய் வந்து கேள்விகளை கேட்டு, பின்னூட்டங்களை இட்டு உற்சாகப்படுத்தும் அநேக நண்பர்களுக்கு இடையே திடீரென சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆனந்த அதிர்ச்சி. பிரபல பத்திரிகையாளரும் வெகுஜன எழுத்தாளருமான அன்பர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் இவ்வலைப்பதிவை தனது புத்தம் புதிய இணைய தளத்தில்(www.sramakrishnan.com) அறிமுகப்படுத்தியதோடு (படம்) இங்கு பின்னூட்டமும் இட்டு சென்றிருக்கின்றார்.அவருக்கு என் நன்றிகள் பல. இப்போது அவர் தனது தமிழ் வலைதளத்திலும் பிரத்தியேக பத்திகள் அவ்வப்போது எழுதிவருகின்றார்.
இவ்வலைப்பதிவை படித்த பலரும் என்னிடம் கேட்கும் ஒரு கேள்வி "நீங்கள் பட்டுக்கோட்டை பிரபாகரா?".ஏனெனில் தமிழ் எழுத்துலகில் எல்லோரும் அறிந்த பிகேபி "பட்டுக்கோட்டை பிரபாகர்" அவர்கள் தாம். இங்கு எனது வலைப்பதிவின் பெயரும் பிகேபி என அமைந்ததால் அக்கேள்வி கேட்கப்படுவதுண்டு. ஆனால் உண்மையில் அவருக்கும் இந்த வலைப்பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் ஒர் மலை. நான் மடு.
"சும்மாவா சொன்னாங்க பெரியவுங்க" என்ற மென்புத்தகத்தை படித்த துளசி கோபால் அக்கா "நீங்கதானே பட்டாபி? இன்னிக்குத்தான் உங்க 'சும்மாவா சொன்னாங்க பெரியவுங்க' படிச்சேன். எல்லாம் சூப்பர். மிகவும் ரசித்தேன். அநேக புதிய தகவல்கள் கிடைத்தன.ஒன்று மட்டும் சொல்லிக்கவா? வடக்கே தலைவச்சுப் படுக்கும் பகுதி: பூமத்திய ரேகைக்கு எட்டு டிகிரியில் இந்தியா ஆரம்பம் அது வடதுருவத்துக்குப் பக்கமுன்னு தாத்தா சொல்றாரே.....
அது சரியான்னு சொல்லுங்களேன்."-ன்னு கேட்டிருந்தார். ஐயோ அக்கா நான் பட்டாபியும் இல்லை அந்த தாத்தாவும் இல்லை. உங்கள் பாராட்டுகளெல்லாம் அந்த "பட்டாபி" தாத்தாவையே போய் சேரட்டும்.
மற்றபடி பூகோளத்தை பார்க்கும் போது வடதுருவம் தென்துருவம் இரண்டில் இந்தியா வடதுருவத்தின் பக்கமாய் உள்ளது அல்லவா அதை தான் அப்படி சொன்னாரோவென சந்தேகிக்கின்றேன்.
P.G.Sayee Prackash அவர்கள் "I really like and stunned the works of PKP. The pdf format of life history of Chaplin and Marx are really good to read and preserve to our life. Nanrigal pala" என சொல்லியிருந்தார். இப்படி பலரும் பாராட்டிய அவ்விரு மென்புத்தகங்களின் ஆசிரியருக்கே அப்பாராட்டுகள் போயடையட்டும்.
பின்னூட்டமிடும் அல்லது மின்னஞ்சலிடும் நண்பர்கள் உங்களின் பெயர் இங்கு இப்பதிவுகளில் இடம் பெற விருப்பமில்லையெனில் தயவு செய்து அதை உங்கள் பின்னூட்டத்தில் அல்லது மின்னஞ்சலில் தெரிவிக்க வேண்டுகின்றேன்.
இவ்வலைப்பதிவை வாசிப்பதில் பெரும்பாலானோர் மின்னஞ்சல் வழியே வாசிப்பதால் தான் பின்னூட்டங்களுக்கான பதில்களையும் பதிவுகளாகவே பதிக்கின்றேன்.மற்றபடி வேறு இரகசியம் ஒன்றுமில்லை. பின்னூட்டத்தின் வழி பேசப்படும் பல நல்ல விசயங்கள் கூட அனைவரையும் சென்றடைய வேண்டுமல்லவா?இக்கால உலக அரசியல் நிகழ்வுகள் தமிழில் கவிதைகளாக மு.பொன்னம்பலம் "பொறியில் அகப்பட்ட தேசம்" சிறு மென் புத்தகமாக. Mu.Ponnambalam "Poriyil Agappatta Thesam" in Tamil kavithaikal pdf ebook Download. Right click and Save.Download
Posted by
PKP
at
2/21/2008 03:03:00 PM
6
comments
Labels: About me
Tuesday, February 19, 2008
பிரிப்போம், சேர்ப்போம்
100 மெக் (100MB) அளவிலான வீடியோ கோப்பு ஒன்றை நண்பர் ஒருவருக்கு மின்னஞ்சல் வழி அனுப்ப விழைகின்றீர்கள் என வைத்துக் கொள்வோம். பெரும்பாலும் அது சாத்தியமாகாது. ஏனெனில் இப்போதைக்கு சத்தியமாய் அக்கோப்பின் அளவு மிகப்பெரிது. ஜிமெயில் போன்ற இலவச மின்னஞ்சல் கொடுப்போர் கூடிப்போனால் 20 மெக் (20MB) அளவிலான கோப்புகளை மின்னஞ்சல் வழி அனுப்ப அனுமதிப்பர். அதற்கும் மேல் போனால் அழகாய் "சாரி" சொல்லிவிடுவர்.
இது போன்ற சந்தர்பங்களில் கை கொடுப்பவை தான் கோப்பு பிரிப்பான்கள், சேர்ப்பான்கள். இதன் மூலம் அந்த 100மெக் கோப்பை நீங்கள் 20மெக் அளவினதாய் ஐந்து துண்டு துண்டாக்கி (Split) தனித் தனி மின்னஞ்சல்களில் நண்பருக்கு அனுப்பலாம். மறுமுனையில் நண்பர் அந்த ஐந்து மின்னஞ்சல் அட்டாச்மெண்ட்களையும் இறக்கம் செய்து கோப்பு சேர்ப்பான் மூலம் எளிதாய் ஒன்றாய் இணைத்துக்கொள்வார் (Join). அவ்ளோதான். 100 மெக் வீடியோ துண்டு மறுமுனை போய் சேர்ந்தாயிற்று.
இது போல் கோப்புகளை பிரிக்க சேர்க்க இரண்டு பிரபல இலவச மென்பொருள்கள் உள்ளன.
ஒன்று HJSplit
Download here
இன்னொன்று The File Splitter
Download here
இப்படி பிரிப்பதும் சேர்ப்பதும் இங்கு இத்தனை எளிது. மனிதர்களிடையே தான் ரொம்ப கஷ்டம் டோய்.
சுஜாதாவின் "மெரினா" குறுநாவல் இங்கே தமிழில் மென் புத்தகமாக. Sujatha Merina Novel Story in Tamil pdf ebook Download. Right click and Save.Download
Thanks Tamilnenjam.
Posted by
PKP
at
2/19/2008 09:53:00 AM
7
comments
Labels: Freewares
Friday, February 15, 2008
போட்டு தாக்கு
நாமெல்லாரும் இருப்போம், கட்டிடங்களெல்லாம் அப்படியே இருக்கும். ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்பால் நாம் சென்றிருப்போம். என்ன? கால எந்திரம் பற்றி எதாவது கூறுகிறேனென நினைத்தீர்களா? இல்லை நான் இங்கு சொல்ல வருவது ஈ-பாம்(E-bomb) அதாவது மின்காந்த வெடிகுண்டு (Electromagnetic Bomb) பற்றி.
நவீன கால இந்த E-bomb ஒரு நகரில் போடப்பட்டால் உருவாக்கப்படும் மாபெரும் மின்காந்த புலமானது அப்பகுதியிலுள்ள அனைத்து மின்னணு சாதனங்களையும் பொரித்து போட்டு விடுமாம். உதாரணமாய் உங்கள் கணிணியின் சர்கியூட் போர்டு அந்த அசூர மின்காந்த அலைகளுக்கு தாக்குபிடிக்க முடியாமல் உருகிப்போகும். இதில் ஹார்ட் டிஸ்க் எம்மாத்திரம். அதிலுள்ள அனைத்து டேட்டாவும் அழிபட்டு போகும். தொலைப்பேசிகள், கைபேசிகள், தொலைகாட்சிகள் எல்லாம் செயலிழந்துபோம். மின்சார வசதி துண்டிக்கப்பட்டு விடும். வாகனங்கள் நடுரோட்டில் நின்றுவிடும். மொத்ததில் எலக்ட்ரானிக் சர்கியூட்கள் உள்ள அனைத்து சாதனங்களும் ஸ்தம்பித்துவிடும். ஆனால் மனிதன் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பான். நடை பிணமாக.
இத்தகைய E-bomb-களை பற்றி இன்னும் எந்த நாடும் அப்பட்டமாக பேச விட்டாலும் ஆளாளுக்கு வைத்திருப்பார்கள் என்றே தோன்றுகின்றது. இந்தியாவில் IIT, Kharagpur இதில் மும்முரமாய் இருக்கின்றதாம்.
இதிலிருந்து தப்பிப்பது எப்படி?
எப்படி அண்டர் கிரவுண்ட் அதாவது பேஸ்மென்டில் நீங்கள் இருக்கும் போது அல்லது சில லிப்டில் நீங்கள் இருக்கும் போது உங்களுக்கு மொபைல் சிக்னல் கிடைக்காதோ அது போல சிக்னல் கிடைக்காத இடத்தில் உங்கள் எலக்ட்ரானிக் சாதனங்கள் இருந்தால் தப்பித்தீர்கள். இதனை Faraday cage அல்லது Faraday shield என்கின்றார்கள்.
இப்போதுதான் புரிகின்றது எதற்கு அநேக டேட்டா சென்டர்கள் தரையின்அடியில் அமைக்கபடுகின்றன வென்று.சில United States national security கட்டிடங்கள் இது மாதிரி ஃபாரடே பாதுகாப்புக்குள் கட்டப்பட்டுள்ளனவாம்.
வெறும் நானூறே டாலருக்கு இந்த E-bomb-களை தயாரிக்கலாமாம். நவ நாகரீக நகரொன்றை Time machine எதுவுமின்றி 200 ஆண்டுகளுக்குப் பின்தள்ளலாம் ஒரு சொடுக்கில்.
நல்லாருக்கு.வாழுக விஞ்ஞானம்.
1893-ல் சிக்காகோ நகரில் சுவாமி விவேகானந்தர் இவ்வாறாக கெம்பீரமாக பேசத்தொடங்கினார், "உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டை சேர்ந்தவன் என்பதில் பெருமைப்படுகிறேன்" அவரது சிக்காகோ சொற்பொழிவுகள் இங்கே தமிழில் சிறு மென்புத்தகமாக. Vivekananda Chicago speech in Tamil pdf e book Download. Right click and Save.Download
Wednesday, February 13, 2008
Pdf டு Doc
நாலும் தெரிந்திருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். இதில் அந்த நான்கும், நான்கு வேதங்களை குறிக்கின்றதா அல்லது நான்கு திசைகளை குறிக்கின்றதாவென தெரியவில்லை. ஆனாலும் நாலு திசைகளிலும் நடப்பனவற்றை நாளும் நாம் அறிந்து வைத்தல் நம்மெல்லாருக்கும் பயனாயிருக்கும்.News-ன் விரிவாக்கம் North East West South ஆக இருக்க இதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம்.
கொஞ்சம் தெரிந்த நமக்கே இங்கே பதிவாய் எதாவது எழுத நேரம் கிடைப்பதில்லை. முற்றும் அறிந்த பலருக்கும் எங்கே எழுத, தாங்கள் கற்றவற்றை சொல்ல சமயம் கிடைக்கப் போகின்றது.
நண்பர் vijay prasanna கூட கேட்டிருந்தார்.
ஏன் நீண்ட நாளாக ஆங்கிலத்தில் எழுதுவதில்லை ?
சமயம் தான் பிரச்சனை.
:)
இப்போது Pdf டு Doc-க்கு வருவோம்.
நண்பர் Sathananda Ganesan கேட்டிருந்தார்.
Is it possible to covert Adobe pdf to Ms word and vise versa ? Like wise Can we covert Note pad text document to Ms word or adobe pdf? Please advise.Nanri
இது ஒரு நல்ல கேள்வி. இதர பிற டெக்ஸ்ட்,டாக்குமெண்ட் கோப்புகளை PDF-க்கு மாற்ற அநேக வழிமுறைகளும் இலவச மென்கருவிகளும் உள்ளன.
உதாரணத்துக்கு Primopdf- இம்மென்பொருளை உங்கள் கணிணியில் நிறுவ வேண்டும். அது பல வித கோப்புகளை பிடிஎப் ஆக மாற்றி தரும்.
Convert other document formats to pdf (Installable Tool)
http://www.primopdf.com/
இணையம் வழி ஆன்லைனிலேயே மாற்ற கீழ்கண்ட சுட்டியை முயலவும்.
Convert other document formats to pdf (Online)
http://convert.neevia.com/
ஆனால் பிடிஎப் கோப்பை Word(doc)-க்கு மாற்ற சில இலவச சேவைகளே உள்ளன.
கீழ்கண்ட சுட்டிகள் உதவலாம்.
Convert Pdf to Word(doc) or Excel(xls) or RichText(rtf)
http://media-convert.com/(up to 150Mb files)
http://www.freepdfconvert.com/convert_pdf_to_source.asp
ஈடு இணையற்ற அறிவியல் மேதை ஐன்ஸ்டீனே தன் வாயால் "என்னைப் போன்ற விஞ்ஞானிகளை விட,சாப்ளின் உயர்ந்தவர்" என பாராட்டிப் பேசியுள்ளார். அப்பேர்பட்ட நகைச்சுவை நடிகரான சார்லிசாப்ளினின் வாழ்க்கை கதை இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Actor Charlie Chaplin Life history in Tamil pdf ebook Download. Right click and Save.Download
Thanks TamilNenjam!!
Posted by
PKP
at
2/13/2008 12:45:00 PM
9
comments
Labels: Freewares
Tuesday, February 12, 2008
வின்டோஸ் சிடி கீ மாற்றி
தற்போதைய உங்கள் வின்டோஸ் கணிணியின் Product Key என்னவென கண்டுகொள்ளவும், தேவைப்பட்டால் அக்கீயை மாற்றவும் ஒரு இலவச மென் பொருளை நண்பர் தமிழ் நெஞ்சம் அவர்கள் தனது பின்னூட்டம் வழி அறிமுகம் செய்து வைத்துள்ளார்.அதன் பெயர் Magical Jelly Bean Keyfinder என்பதாகும். இதனை கீழ்க் கண்ட சுட்டியை சொடுக்கி இறக்கம் செய்து கொள்ளலாம்.
Download Magical Jelly Bean Keyfinder v1.51
அது சரி.எதற்காக உங்கள் Windows Product Key-யை மாற்ற வேண்டும்?
இங்கு நண்பர் Jafar Safamarva-வின் கேள்வி ஒன்றை நினைவுகூர்கின்றேன்."எல்லாம் சரி பிகேபி ஸார்! விண்டோஸ் ஒரிஜினல் இல்லாமல் என்னைப்போல் காப்பியை பயன் படுத்துபவர்கள் Install the Genuine Windows Validation Component இந்த பிரச்சனையில் சிக்கிக் கொள்ள வேண்டி இருக்கிறதே இதற்கு ஏதாவது தீர்வு இருக்கிறதா?"
அதற்கான தீர்வை இங்கே நண்பர் தமிழ் நெஞ்சம் கொடுத்திருக்கின்றார்.கீழே சொடுக்கி முயன்று பாருங்கள்
How to Make your Windows Genuine?
இப்படி நம்மூரைப் பற்றி நன்கு தெரிந்து கொண்ட மைக்ரோசாப்ட் காரர்கள் நம்மூருக்கென்றே http://www.AskForOriginal.com வைத்திருக்கின்றார்கள். சன்டிவியிலும் அது பற்றி கமர்சியர் போடுகின்றார்கள். :)"அவர் யூதனாகப் பிறந்தார்.கிறிஸ்தவனாக வாழ்ந்தார்,மனிதனாக இறந்தார்.காலங்கள் தோறும் அவரது பெயர் நிலைத்து நிற்கும்" இப்படி ஏங்கல்ஸ் சொன்னது பொதுவுடைமை தந்த கார்ல்மார்ஸ் பற்றி. அவரது வாழ்க்கை வரலாறு தமிழில் சிறு மென்புத்தகமாக இங்கே. Karl Marx life history in Tamil e-book Download. Right click and Save.Download
Posted by
PKP
at
2/12/2008 02:33:00 PM
11
comments
Labels: Freewares
Friday, February 08, 2008
யுத்தம் ஒன்று
புதிய நூற்றாண்டை ஆரம்பிக்கும் உற்சாகத்தில் உலகமே கொண்டாடிக் கொண்டிருக்க இரு வல்லரசுகளுக்கு மட்டும் நெஞ்சம் பக் பக்கென்று கொண்டிருந்தனவாம். Y2K என்றழைக்கப்பட்ட அந்த மென்பொருள் பழுது தவறுதலாய் ஒரு அணுஆயுதப்போரையே தொடக்கிவிடக்கூடாதேவென அவர்களுக்கு அச்சம். அதாவது அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகளெல்லாம் தயார் நிலையில் இருக்கின்றன.ஏதாவதொரு மனிதனுக்கோ அல்லது கணிணிக்கோ பயித்தியம் பிடித்து விட்டால் கோடிக்கணக்காணோரின் உயிர் பொசுங்கிப்போகும் அபாயத்தில் இன்றைய உலகம். ஆண்டு 2000-மும் பிறந்தது. உச்ச டென்சனிலிருந்த அந்த பட்டாளத்தார்களுக்கு நிம்மதி பெருமூச்சும் வந்தது.
இப்படி மென்பொருளில் பழுது வந்தாலும் வன்பொருளில் பழுது வந்தாலும் சோதனை சோதனை தான். உதாரணத்துக்கு கடந்த இரண்டு வாரங்களாக மத்திய தரை,மத்திய கிழக்கு பகுதிகளில் அடுத்தடுத்து 8 கடலடி இணைய இணைப்பு கம்பிகள் வெட்டப்பட்டு போனது பலருக்கும் சாதாரண விபத்து நிகழ்வுகளாய் படவில்லை. நமக்கு அது ஒரு சாதாரண கேபிள் வெட்டாக இருக்கலாம். ஆனால் பல நாடுகளுக்கு அது கோடிக்கணக்கான பண இழப்பு.எப்படி அவை வெட்டப்பட்டு போயின? யாராவது வேண்டுமென்றே வெட்டினார்களா? அப்படியானால் அவர்களின் நோக்கம் என்ன? தொலைப்பேசியை ஒட்டு கேட்பது போல் இணையத்தை ஒட்டு கேட்க யாராவது விளைகின்றார்களாவென பல கேள்விகள் அங்கு.
முன்பெல்லாம் பக்கம் பக்கத்து நாடுகள் போட்டி பொறாமையில் சத்தமின்றி ஏவுகணைகளை ஏவி விட்டு விட்டு "நான் அவன் இல்லை" என்பார்கள்.இன்னும் கொஞ்சம் தைரியம் வந்ததும் ஆட்களை எல்லை தாண்டி ஊடுருவ விடுவார்கள்.இப்போது தொழில்நுட்பம் மாறுகின்றது. அதற்கேற்ப்பவே நாடுகளும். லித்துவேனியா. ரஷ்யாவை அடுத்த ஒரு குட்டி நாடு. இங்கு சகல அரசாங்க சமாச்சாரங்களும் கணிணி மற்றும் இணையம் வழியே தான் நடக்கின்றன. நாட்டு பொது தேர்தலே இணையம் வழிதான் நடத்துகிறார்களென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பக்கத்து நாடான ரஷ்யாவின் தொல்லை தாங்கவில்லை.சைபர் தாக்குதல் நடத்திக்கொண்டே யிருக்கின்றார்கள் என அந்நாடு குற்றம் சாட்டுகின்றது. இப்படி ஹைடெக் யுத்தம்
அமைதியாய் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
கணிணியுகத்திலும் யாரும் திருந்துவதாய் இல்லை. :)
கிருபானந்த வாரியாரின் "இராம காவியம்" மென்புத்தகம் Kirubaanantha Vaariyaar Ramayanam Tamil e-book Download. Right click and Save.Download
Monday, February 04, 2008
இலக்கியம்?
"சீக்கு பிடித்த கோழி மாதிரி" என்ற வாக்கியத்தில் வரும் சீக்கு எனும் வார்த்தை Sick எனப்படும் ஆங்கில
வார்த்தையிலிருந்து இங்கு தமிழுக்கு வந்ததா அல்லது தமிழிலிருந்து அங்கு போனதா? சுத்தமாய் தெரியவில்லை.
இத்தனைக்கும் இதுமாதிரியான வார்த்தைகளை படித்த இலக்கியவாதிகள் பயன்படுத்துகின்றார் என நாம் கூறவில்லை. ஆங்கிலம் துளிகூடா அறியா கிராமத்து தமிழச்சிகள் பயன் படுத்தும் வார்த்தைகள் தாம் இவை. இன்னொரு உதாரணம் கூட நாம் இங்கே கூறலாம். நம் சிறு வயதில் பக்கத்து வீட்டு மூதாட்டி அடிக்கடி சொல்லும் வார்த்தை"பிளசர்" கார் (Pleasure Car). அதாங்க அந்த கால அம்பாசிடர் கார் வண்டி. இப்படி பிற மொழி நம்மில் கலந்ததா அல்லது நம்மொழி நாடு கடந்ததாவென அறியாமல் அநேக அன்னிய வார்த்தைகளை நாளும் அதுவும் "தமிழ் தெரிந்தோர் மட்டும்" கூட பயன் படுத்திக் கொண்டுத்தான் உள்ளனர். நான் எம்மாத்திரம்?
இன்னும் சொல்லப்போனால் அலமாரி, அன்னாசிப்பழம், சப்பு , சாவி ,ஜன்னல், கோப்பை ,குசினி ,தபால், கக்கூஸ் ,வராந்தா,மேசை இதெல்லாம் கூட அயல் மொழி வார்த்தைகள் தானாம். திறவுகோல், சாளரம், அஞ்சல் என சுத்த தமிழ் எல்லோரும் பேச கேட்கத் தான் ஆசை. முடிகிறதில்லையே.
எனது முந்தைய பதிவை படித்த முகம் காட்டா நண்பர் ஒருவர் நாம் இங்கே இலக்கியம் எழுதுகின்றோம் என நினைத்துக் கொண்டு தெளிவான தமிழில் "Sariyana tamizh Kolai - Ayyoko"என்பதாக பின்னூட்டமிட்டிருந்தார்.உண்மை தான் நண்பா. மன்னிக்க வேண்டுகின்றேன். :)
காகிதப்படங்களை புகைப்படமெனலாம்.Digital Photos-களை ஒளிப்படமெனலாம் எனக் கூறி அறிவுவுறுத்திய நண்பர் பிரேம்ஜிக்கு இங்கு நன்றிகள் பல.
மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை "தமிழ் தாய் வாழ்த்து" ஒலி வடிவில் Manonmaniam P Sundaram Pillai Tamil Thai Vaalthu Song Audio Download. Right click and Save.Download