Hacking என்னும் சொல் நாம் நினைப்பது போல் அவ்வளவாய் சட்டவிரோதமானதல்ல. Cracking-க்குதான் cops வருவார்கள். யாருக்கும் தீமைதராவாறு தொழில்நுட்பத்தோடு ஒரு தப்பாட்டம் ஆடிப்பார்த்தல் hacking. உதாரணத்துக்கு சாதாரண குடிமகனும் செய்யும் ஒரு hacking தான் "missed call" கொடுத்தல். பெரிய மூளைகள் கொஞ்சம் அதிகமாய் சிந்தித்து தங்கள் தொழில்நுட்ப தீர்வுகள் சரியா என உறுதிபடுத்த hacking செய்வார்கள்.
இங்கே ஒரு சுவாரஸ்யமான hacking-ஐ பார்க்கலாம். அருமையான பயனுள்ள ஒரு இணையதளம் கொடுமையான டொமைன் பெயர் கொண்டு பார்த்திருக்கிறீர்களா? அதுதான் del.icio.us அவ்வளவு எளிதாய் யாரும் இப்பெயரை சரியாய் Browser-ல் டைப்பிடமாட்டார். காரணம் அப்பெயரிலிருக்கும் ஒரு கரடுமுரடு.
உண்மையில் இப்பெயர் hack-செய்யப்பட்ட டொமைன் பெயர்.எப்படி?
delicious (தமிழில் சுவை என பொருள்படும்) எனும் ஆங்கில சொல்லைதான் இப்பாடு படுத்தியிருக்கிறார்கள்.
அதாவது
www க்கு பதிலாய் del
.delicious க்கு பதிலாய் .icio
.com க்கு பதிலாய் .us (அமெரிக்காவின் top level domain name)
இதில் காமெடி என்ன வென்றால் www.delicious.com மும் அவர்களுடையதே.
இது போல பெயரில் விளையாண்ட இன்னொறு வெப் தளம் www.blo.gs (gs-South Georgia and South Sandwich Islands top level domain name)
இன்னொரு பெயர் பெற்ற தளம் www.fami.ly (ly-லிபியா-வின் top level domain name)
முதன் முதலாக இது போல hack-செய்யப்பட்ட டொமைன் பெயராக கருதப்படுவது 1992-ல் பதிவு செய்யப்பட்ட www.inter.net
நான் www.nager.co.il (il-இஸ்ரேல் top level domain name) பெயரை பதிவு செய்யலாமெனவிருக்கின்றேன் :)
பின்குறிப்பு
del.icio.us மற்றும் blo.gs இரண்டும் Yahoo-வுடையது.
del.icio.us போல் உங்கள் அபிமான சுட்டிகளை ஆன்லைனில் சேமித்து வைக்க தமிழில் உள்ள தளம் பெட்டகம் http://www.pettagam.com/
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Friday, March 30, 2007
பெயரையும் hack-க்கலாம்
Thursday, March 29, 2007
கிறுக்குத்தனங்களை கிறுக்கச்சொன்னா...?.
தமிழ் பிளாக் நண்பர்களிடையே உலவும் வியர்ட் விளையாட்டில் என்னையும் உந்தி தள்ளியிருக்கிறார்கள் அன்பர்கள் யோசிப்பவரும், ஈரோடு பீம்பாயும்
.
ஐந்து வியர்டான கிறுக்குத்தனமான காரியங்கள் அவரவர்களைப்பற்றி சொல்வ வேண்டுமாம்.அதுதான் இந்த விளையாட்டு.நண்பர் தாஸூ "லூசு மக்கா" வென சுடச்சுட பரவலாக நோட்டமிட்டு hightlights-ம் வழங்குகிறார்.
நாலு ஜோக் சொல்ல சொன்னா சொல்லிடலாம் இப்படி கிறுக்குத்தனங்களை கிறுக்கச்சொன்னா...?. :)
இனி நம்மளை பற்றி சில வரிகள்.இவை வியர்டு ஆட்டத்தில் வருமானு தெரியவில்லை.
இவர்க்கு எதையாவது பண்ணனும் நெனச்சா வொடனே பண்ணியாகனும். இல்லைனா தலையே வெடிச்சிடும் போலாயிடும்.பொறுமையே கிடையாது.முக்கியமா வேலை சம்பந்தமா..., யாராவது பொறுமை பொறுமைனு சொன்னாலும்,பொறுமையா இருப்பது போல் நடித்து விட்டு ஆனால் தலையில் உச்ச பிரஷரில் இரத்தம் ஓடும்.
டென்சன் டென்சன் டென்சன்.சமீபத்தில் கார் இருக்கைகளின் இடையே வாலட்டை தொலைத்துவிட்டு ஊர் முழுக்க தேடி ஒரே டென்சன்.செல்போனும் அடிக்கடி இவ்வாறு விளையாடுகிறது.
அதெப்படி ஆமை வேகத்தில் டிரைவ்பண்ணுகிறார்கள்னு தெரியலை.,"Move your ass"-ன்னு "மனதில்" திட்டிக் கொண்டே விரைதலோடு சரி.ஏசுதல் பேசுதல் ரொம்ப கம்மி.You are a good listener-னு யாரோ சொன்னார்கள், Silence is golden-னு வாத்தியார் ஆட்டோகிராபிட்டார்.ஆயிரம் எழுதமட்டும் லாயக்கு.சரியான ஏட்டுசுரைக்காய்.
உனக்கு ரொம்ப ஈகோனு அவள் சொன்னாள்.இவளும் சொன்னாள்.அப்படினா என்னனு இன்னுவரை தெரியவில்லை.அதான் ஈகோவோ.
நம்பத்தகு நண்பர்கள் குழுமினால் லூட்டி.நண்பர்கள் வருகிறார்கள் போகிறார்கள்.சத்தியமாய் யாரோடும் சண்டை போட்டதில்லை.Definitly Something wrong with me.மெயின்டெயின் பண்ணத்தெரியவில்லை போலும்.
"Sixth Sense" பார்த்து ரொம்ப பயந்தேன்.இதெல்லாம் ஒரு scary மூவியானு நண்பர்கள் சிரித்தார்கள். தமிழ் படங்களில் ஏற்கனவே பார்த்த படத்தை மட்டுமே பார்க்க பிடிக்குது.புதுசாய் பார்க்க பயம்.அப்படித் தரம்.சூழ்நிலை காரணமாய் புதுசாய் பார்த்தா உண்டு.
நண்பர்கள் யோசிப்பவருக்கும், ஈரோடு பீம்பாய்க்கும் நன்றிகள் பல.
இப்போ ரிலேயை யாரிடம் கொடுக்கனு தெரியலை.யாராவது வாங்கினால் கோடி நன்றிகள்.
:)
Wednesday, March 28, 2007
USB செல்லும் பாதை
ஆரம்பத்தில் ஸ்கேனர்,பிரிண்டர் அப்புறமாய் மவுஸ்,கீபோர்டு அதன் பின் கேமரா, பென் டிரைவ்கள் என அமைதியாய் தன்னை ஆக்கிரமித்து கொண்டிருந்த USB thing இப்போது ஒரு காய்ச்சல் போல் கணிணி geek-களை பிடித்தாட்டுவித்து கொண்டிருக்கின்றது. யாரும் நினைத்திராத அளவில் அது இன்று அனைவருக்கும் ஒரு pet.கையடக்க அளவில் எளிதில் எல்லா கணிணி சாதனங்களையும் plug and play அதாவது மாட்டு ஓட்டு நிலைக்கு கொண்டுவந்தது USB யின் சாதனையே. இப்போது அந்த யூஎஸ்பி எதெற்கெல்லாம் பயனாகின்றதென்று பாருங்கள். டீ கப்பை சூடாக்குவதிலிருந்து பக்கத்து டெஸ்க் மேதாவிக்கு ஏவுகணை விடவரை போய்விட்டது.
USB Pencil Sharpener
USB Cooling Fans
USB Dual LED Light
USB Light
USB Desk Lamp
USB Massager
USB Beverage Chiller
USB Missile Launcher
USB Rocket Launcher
USB Snowbot
USB Laser Guided Missile Launcher
USB Mini Desktop Aquarium
Posted by
PKP
at
3/28/2007 01:22:00 PM
7
comments
Tuesday, March 27, 2007
கிரிக்கெட்டில் தோல்வி இந்தியாவுக்கு வெற்றி
இந்திய கிரிக்கெட் குழுவின் உலகக் கோப்பை கிரிக்கெட் படுதோல்வி இந்தியாவுக்கு ஒருவகையில் நல்லதாம். இதோ நம் பார்வைக்கு வந்த ஒரு எக்கனாமிக் டைம்ஸின் அலசல் கட்டுரை.படத்தை கிளிக்கி பெரிதாக்கி படிக்கவும்.
இந்த பழம் புளிக்கும் :)
Monday, March 26, 2007
இன்போசிஸ் மைசூர் கேம்பஸ்
Infosys Mysore India Campus
GYM
AEROBICS ROOM
BADMINTON COURT
BOWLING ALLEY
CRICKET GROUND
FOOTBALL GROUND
BASKET BALL GROUND
SWIMMING POOL
POOL AND SNOOKER
SQUASH
TABLE TENNIS
VOLLEY BALL
YOGA ROOM
UPCOMING SDB4 IN MYSORE
Friday, March 23, 2007
உலகின் முதன் முதல் டாட் காம்
முதன் முதலாய் இணையத்தில் பதிவு செய்யப்பட்ட .com டொமைன் பெயர் எது தெரியுமா?
SYMBOLICS.COM-மாம்.அது March 15 1985 -ல் பதிவு செய்யப்பட்டது என்கிறார்கள்.
அதாவது கணிணி தோன்றி HTML தோன்றா காலத்திலேயே பதிவு செய்திருக்கிறார்கள்.
இதை அடுத்து வருவன - இதோ முதல் 15 .com கள்
03/15/1985 SYMBOLICS.COM
04/24/1985 BBN.COM
05/24/1985 THINK.COM
07/11/1985 MCC.COM
09/30/1985 DEC.COM
11/07/1985 NORTHROP.COM
01/09/1986 XEROX.COM
01/17/1986 SRI.COM
03/03/1986 HP.COM
03/05/1986 BELLCORE.COM
03/19/1986 IBM.COM
03/19/1986 SUN.COM
03/25/1986 INTEL.COM
03/25/1986 TI.COM
04/25/1986 ATT.COM
முதல் .net
www.nordu.net Jan 1, 1985
முதல் .org
www.mitre.org July 1985.
முதல் .gov
www.css.gov June 1985.
முதல் .edu
www.cmu.edu April 1985
முதல் தெரிந்த நமக்கு முடிவு தெரிய வேண்டாமா?
மிக்க குழப்பத்தை உண்டாக்கும் டொமைன் பெயரைக் கொண்ட தளம் http://www.wwwdotcom.com இவர்கள் தங்களை இணையத்தின் முடிவான கடைசி பக்கம் என்கிறார்கள். அப்படியே அந்த "very last page of the Internet" - ஐயும் பார்த்துவிட்டு வாருங்கள்.
Thursday, March 22, 2007
அற்பமான ஆரம்பம்
1974-ஆம் ஆண்டு டிசம்பர் மாத ஒரு குளிர்கால பொழுது. "ஆலன்" தன் நண்பன் "பில்"லை பார்க்க போய்க் கொண்டிருக்கின்றான். போகும் வழியில்
பத்திரிகையில் ஒரு செய்தி."World's First Microcomputer Kit to Rival Commercial Models." அதாவது வழக்கமான அக்கால விலைமிக்க கணிணிக்களுக்கு மாற்றாக புதிதாக Altair 8080 -னு ஒரு கணிணி வருகிறதென்று.எங்கோ எதுவோ கிளிக்காகின்றது ஆலனுக்கு. ஆவலுடன் ஆர்வமாய் விரைகின்றான் நண்பன் பில்லின் அறைக்கு.இருவருக்கும் ஒன்று மட்டும் புலனாகின்றது. "கணிணிக்கள் வீட்டுத் தெருகோடி வரை வரப்போகின்றன. அவற்றை ஓட்டத் தேவையான மென்பொருள்களுக்கு கிராக்கி வரப்போகின்றது" என்று.
சில நாள் சீரியஸ் சிந்தனைகளுக்கு பிறகு பில் MITS-க்கு ஒரு போன் போடுகின்றான் .(MITS-தான் அந்த Altair 8080-யை உருவாக்கிய நிறுவனம்). தன்னிடம் Altair 8080-ய் ஓட விடக்கூடிய ஒரு மென்பொருள் பெயர் "BASIC" இருக்கிறது என பொய் சொல்கின்றான்.வியந்து போன MITS நிறுவனம் சோதனை ஓட்டம் காட்ட பில்லிடம் கேட்கின்றனர்.இத்தனைக்கும் பில்லோ,ஆலனோ ஒரு வரி கூட அந்த மென் பொருள் எழுதியிருக்கவில்லை. ஜீரம் பிடித்து கொண்டது. சொன்ன சொல்லை காப்பாற்ற மும்முரமாய் கோடு எழுதும் பணியில் குதித்தனர் நண்பர்கள் இருவரும். பெரும்பாலான கோடுகளை பில் எழுத ஆலன் அதை Altair 8080-ல் ஓட்டினால் எப்படி இருக்கும் என PDP-10-ல் (இன்னொரு பழைய கணிணி மாடல்) சோதனை செய்து கொண்டிருந்தான். எட்டு வாரங்கள் கழிந்தன.நாளும் வந்தது.MITS நிறுவனத்துக்கு சோதனை ஓட்டம் காட்டியாக வேண்டும்.இன்றுவரை ஆலன் ஒரு Altair 8080-யை கூட தொட்டுப் பார்த்ததில்லை. ஆனால் எழுதப்பட்ட புரோகிராம்கள் மிக வெற்றிகரமாக Altair 8080-ல் ஓடியது. நண்பர்களுக்கு மகிழ்ச்சி தாழவில்லை.மென்பொருள்களுக்கான சந்தை ஒன்று புதிதாக உலகில் உருவாவது பில்லுக்கு தெளிவாக தெரிந்தது. Harvard பல்கலைகழகத்துக்கு கல்தா.மைக்ரோசாப்டும் பிறந்தது. (அன்று அந்த சோதனை ஓட்டம் தோல்லியுற்றிருந்தால் Microsoft உருவாகாமலே போயிருந்திருக்கும்)
இன்று பில் கேட்ஸ் 56 பில்லியனுக்கு சொந்தகாரர்.தொடர்ந்து 13 ஆண்டுகளாக உலகின் முதல் பணக்காரர்.
பால் ஆலன் 18 பில்லியனுக்கு சொந்தகாரர்.
இருவருமே காலேஜ் dropout-கள்.
அட்டையை வைத்து புத்தகத்தை எடை போடக்கூடாதென சும்மாவா சொன்னார்கள்
படத்தில் கீழ்வரிசையில் இடதுஓரம் பில்கேட்ஸ் வலதுஓரம் பால் ஆலன்
(MITS-Micro Instrumentation and Telemetry Systems)
Wednesday, March 21, 2007
FTP வழங்கிகளிலும் தேடலாம்
அபூர்வமாய் சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட file அவசரமாய் தேவைப்படும் சூழ்நிலை வந்துவிடும்.உதாரணத்திற்க்கு abc.zip அல்லது xyz.rpm.இணையத்தில் பரந்துள்ள ஆயிரக்கணக்கான FTP செர்வர்களில் அந்த குறிப்பிட்ட கோப்பு எங்காவது அமர்ந்திருப்பது பெரும்பாலும் சாத்தியம்.அவற்றை தேடி கண்டுபிடிப்பதில்தான் பெரும்பாடு.
இது போன்ற தருணங்களில் கூகுள் உதவினாலும் கீழே கொடுக்கப்பட்ட FTP Search Engine -கள் இன்னும் எளிதாகஅக்கோப்புகளை தேட உதவும் என்பதில் ஐயமில்லை.தேடிப்பாருங்கள்.புரியும்.
HTTP -யை விட FTP வழி கோப்புகளை இறக்கம் செய்வதால் கோப்பிறக்கம் மிக வேகமாக அமையுமாம்.FTP-யை விடவும் மிக வேகமான ஒரு கோப்பிறக்க வழிமுறை இருக்கிறதாம்.அது TFTP.
http://www.filewatcher.com
http://www.metaftp.com/
Posted by
PKP
at
3/21/2007 01:49:00 PM
0
comments
Labels: Tips
Tuesday, March 20, 2007
Monday, March 19, 2007
நிழல் கீபோர்டு
நிழலெல்லாம் நிஜமாகி பார்த்திருக் கின்றோம்.நிஜம் நிழலாகி பார்த்திருக் கின்றீர்களா?
இங்கே அதான் நடக்கின்றது. Virtual Keyboard.இதை மாயப்பலகை என்பதா அல்லது பொய் சாவிப்பலகை என்பதா தெரியவில்லை.
ஆங்காங்கே கடின கீபோர்டை தூக்கிக் கொண்டு அலைவதற்க்கு பதிலாய் இந்த விர்ச்சுவல் கீபோர்டு உபகரணம், லேசர் கதிர்களைக் கொண்டு ஒரு கீபோர்டை அழகாக எத்தரையிலும் உருவாக்குகின்றது. தரை அல்லது மேஜையில் லேசரினால் வரையப்பட்ட கீபோர்டில் விரல்களினால் டைப்பினால் அது உங்கள் உள்ளங்கை கணிணியில் எழுத்துக்களாக உள்ளீடப்படும். சுற்றிக் கொண்டேயிருக்கும் ஆசாமிகளுக்கு அதுவும் டைப்ரைட்டிங்கில் கில்லாடிகளுக்கு இது ரொம்பவும் உதவிகரமான உபகரணம்.கேபிள் எதுவும் தேவையில்லையாம்.புளூடூத்தால் Windows Mobile, Pocket PC , SmartPhone edition, Palm OS, Blackberry, Symbian போன்றவையுள்ள உள்ளங்கை கணிணியுடன் இணைக்ககலாமாம்.மேலும் சட்டை பாக்கெட்டில் ஜம்மென செருகிகொள்ளலாமாம்.170 டாலருக்கெல்லாம் கிடைக்கின்றது.ROI பார்த்து வாங்கி ஜமாய்க்கலாம்.
Posted by
PKP
at
3/19/2007 04:52:00 PM
2
comments