இணையத்தில் இணைந்திருக்கும் இருவர் தங்களிடையே எந்த இடை சேவையும்யின்றி எளிதாக கோப்பு பரிமாற்றம் செய்ய உதவுவது தான் HFS எனப்படும் (Http File Server).இந்த மென்பொருளை உங்கள் கணிணியில் ஓட விட்டால் உங்கள் கணிணி இணையத்தில் ஒரு தற்காலிக செர்வராகிவிடும்.தூரத்திலுள்ள வருக்கு உங்கள் அய்பி(IP),போர்ட் (Port) எண் கொடுத்தால் எளிதாக அவர் உங்கள் கணிணியுடன் Browser வழி இணையலாம்.கோப்பு பரிமாற்றம் செய்யலாம்.இத்தனைக்கும் இம்மென்பொருளை உங்கள் கணிணியில் நிறுவக்கூட தேவையில்லை.எல்லாவற்றிர்க்கும் மேல் இது ஒரு இலவச மென்பொருள்.
Product Page link
http://www.rejetto.com/hfs/?f=intro
Direct download link
http://www.rejetto.com/hfs/?f=dl&id=exe
Freeware to share files over the internet-Point to Point-Peer to Peer web based file sharing.
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Tuesday, October 31, 2006
இணையம் வழி எளிய கோப்பு பரிமாற்றம்
Monday, October 30, 2006
அழகு தேவதைகள் நிறைந்த நாடு
உலகிலேயே மிக அழகான பெண்கள் நிறைந்த நாடு "Countries with the Most Beautiful Women"
இந்தியாவாம்.இந்நாட்டோடு போட்டிபோடும் இன்னொரு நாடு வெனிசுலாவாம்.இப்படி பல சுவாரஸ்ய தகவல்களை தருகிறது இந்த தளம்.http://www.aneki.com/beautiful.html.
படம் ஒரு வெனிசூல அழகியும் ஒரு இந்திய அழகியும். :)
மேலும் சில தெரிய வேண்டிய சுவாரஸ்ய தகவல்கள்.உலகில் அநேகர் இறப்பது இதய நோய்களால் தானாம்.அப்புறமாய் புற்று நோய்.
வெளிநாடு வேலை தேடி போய் குடியேறி அங்கிருந்து பணம் அனுப்புவதில் கில்லாடிகள் இந்தியர் தானாம் $10 bn.
"Countries Receiving the most Money from Remittances by Migrants" .அப்புறமாய் மெக்சிகன்ஸ் வருகிறார்கள்.
செல்போன் அதிகமாய் உற்பத்தியாவது பின்லாந்தில்.(நோக்கியா/30.4%).அப்புறமாய் அமெரிக்க மோட்டரோலா.(15.3%)
பதின்வயது கர்ப்பமாவோர் பெண்கள் எண்ணிக்கை ரஷ்யாவில் 1000க்கு 101.7 பேர் அமெரிக்காவில் 1000க்கு 83.6 பேர்
உல்லாச பயணம் செல்வோரை அதிகமாய் கவர்வது இப்போதைக்கு UAE-யாம் (நம்ம துபாய்!!) அப்புறமாய் தென் ஆப்ரிக்கா.
உலகின் பெஸ்ட் விமான நிலையம் சீனாவின் Hong Kong International Airport-ஆம்.ஆச்சர்யம்.அப்புறமாய் Singapore-ன் Changi Airport ஆம்.
அமெரிக்காவில் பர்ஸை கடிக்கும் நகரங்களில் முதலாவது வருவது நியூயார்க். அப்புறமாய் வருவது சான்பிரான்ஸிஸ்கோ.
அதிகமாய் புத்தகம் படிப்பது நம்மாட்களாம்,வாரத்துக்கு 10.7 மணிநேரம் புத்தகம் படிக்கிறார்களாம்.
இப்படி அநேக இன்டரஸ்டிங் தகவல்கள்
http://www.aneki.com/lists.html
UPSC,TNPSC,Railway,Bank,IAS,IPS,IFS test எழுதும் முன் மேற்கண்ட பக்கத்தை ஒரு முறை பார்வையிட்டுகொள்ளலாம்.
சம்பந்தப்பட்ட இன்னொரு பதிவு
http://www.pkp.in/?p=262
Thursday, October 26, 2006
இலவச தமிழ் மென்நூல்கள்
மதுரைத்திட்டத்தின்கீழ் வெளியிடப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களின் மின்பதிப்புகள்-
அகர வரிசைப் பட்டியல்
http://www.tamil.net/projectmadurai
தமிழ் நூலகம் தமிழ் மென்நூல்கள்
http://www.chennailibrary.com/ebooks
தமிழ்மன்றம்.காம் தமிழ் மின் புத்தகங்கள்
http://www.tamilmantram.com
நூலகம் திட்டம்
இந்நூலகம் திட்டத்தில் ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களே வெளியிடப்படுகின்றன.
http://www.noolaham.net/library
தமிழ் கதைகள்
http://www.maraththadi.com
சில தமிழ் எழுத்தாளர்களின் பக்கங்கள்
சுஜாதா http://www.writersujatha.com
சாரு நிவேதிதா http://www.charuonline.com
சிவசங்கரி http://www.sivasankari.com
சத்யராஜ்குமார் http://www.sathyarajkumar.com
egroups.com tamil-ulagam -ன் 74 பக்க ஆங்கில தமிழ் அகராதியை இங்கே இறக்கம் செய்யலாம்.
Download English Tamil dictonary
http://www.pkp.in/info/downloads/englishtamildictionary.pdf
Free Tamil ebooks download Novel stories
Posted by
PKP
at
10/26/2006 11:38:00 AM
1
comments
Labels: Tamil
Tuesday, October 24, 2006
பளா பளா தலைமையகங்களின் காலரி
பிரபல உலகளாவிய கார்ப்பரேட்களின் தலைமையக கட்டடங்களை ஒருங்கே காண கிடைத்தால் விட தோன்றுமோ?.இங்கே பார்வையிடுங்கள் ஒவ்வொரு corporate headquartes-களின் கட்டங்களை அதின் வடிவமைப்புகளை.Ford-ஐ பார்க்கும் போது மட்டும் மனம் நெருடுகின்றது.
:(
முழு ஆல்பத்துக்கு கீழே சொடுக்குங்கள்
Corporate Headquarters Picture Gallery
Monday, October 23, 2006
இலவச அல்டிமேட் வீடியோ மாற்றி
கைவசம் உள்ள எந்த மாதிரியான வீடியோக்களையும் உங்கள் PSP, iPod அல்லது mobile phone-க்கு மாற்ற ஒரு நல்ல வீடியோ கன்வெர்ட்டர் நிச்சயம் தேவை.காசு கொடுத்து வாங்கினாலும் அநேக வீடியோ மாற்றிகள் எல்லா வகை வீடியோ ஆடியோக்களையும் தேவையான format-க்கு கன்வெர்ட் பண்ணுவதில்லை.இங்கே ஒரு இலவச வீடியோ மாற்றி பெயர் "Super" ஏறக்குறைய எல்லா வீடியோ ஆடியோ format-களையும் சம்மாளிக்கிறது.முயன்று பாருங்கள்.இது போன்ற வீடியோ மாற்றிகளை பயன்படுத்த அதிக கணிணிசக்தி தேவைப்படுவதால் சக்திமிக்க கணிணிகளில் இது போன்ற மென்பொருள்களை இயக்குதல் நலம்.
It handles 3gp/3g2 (Nokia, Siemens, Sony, Ericsson), asf, avi (DivX, H263, H263+, H264, Xvid, MPEG4, MSmpeg4 etc), dat, fli, flc, flv (used in Flash), mkv, mpg (Mpeg I, Mpeg II), mov (H263, H263+, H264, MPEG4 etc), mp4 (H263, H263+, H264, MPEG4), ogg, qt, rm, ram, rmvb, str (Play Station), swf (Flash), ts (HDTV), viv, vob, and wmv. It also handles audio file format conversion including ac3, amr, mp2, mp3, mp4, ogg, ra, wav, and wma
Best Video Conversion Freeware
http://www.erightsoft.net/Superdc.html
To download this freeware visit http://www.erightsoft.net/S7f01.html
this page and scroll down to find the download links.
Or try these links
http://updat3.free.fr/AD93AFC6AB6A2D9DBA9FDE/SUPERsetup.exe
http://updat2.free.fr/AD93AFC6AB6A2D9DBA9FDE/SUPERsetup.exe
http://updat1.free.fr/AD93AFC6AB6A2D9DBA9FDE/SUPERsetup.exe
http://updat4.free.fr/AD93AFC6AB6A2D9DBA9FDE/SUPERsetup.exe
Tuesday, October 17, 2006
SMS வழி இந்திய ரயில்வே தகவல்கள்
SMS வழி இந்திய ரயில்வே குறித்ததான தகவல்கள் பெற முடியும் என்கிறார்கள்.
இங்கே அதற்கான வழிமுறைகளை இறக்கம் செய்து கொள்ளுங்கள்.
Download
முயன்று பார்த்ததில்லை.
Indian Railways System Access through SMS.
SMS Codes Table
To get Railway Information on Mobile Phones using SMS, follow these steps
1. Which Operator & Circle you are in
2. Type the Pink Coloured Text according to the information you want followed by white coloured text e.g
1. For getting PNR Status type IRPNR
2. For getting Seat Availability in particular Train type IRAVB
3. For getting Train Time Table for particular Train type IRTT
4. Send the message to the Short Access Number of your Operator.
Click here to download more details
Monday, October 16, 2006
கற்காலத்தில் தமிழ் இணைய இதழ்கள்
பல தமிழ் இணைய இதழ்கள் ஆளுக்கொரு எழுத்துருவை வைத்துக் கொண்டு இன்னும் வலை ஓடிக் (ஓட்டிக்) கொண்டிருக்கிறார்கள்.இதுவரை பலர் உரக்கக் கூவியும் யார் கேட்பது.யூனிக்கோடில் (Unicode) வலை அமைப்பதால் வரும் சாதகங்களை இன்னும் பல முன்னணி தமிழ் இணைய இதழ்கள் அனுபவிக்க தொடங்கவில்லை.பந்தயத்தில் ரொம்ப பின்னாலே.மற்றும் பின்னோக்கியே.பிற்காலத்தில் என்ன இழக்க போகிறார்கள் என பார்ப்போமாயின் முக்கிமாய் இழக்க போவது SEO (Search engine optimization) சங்கதி.ஒவ்வொரு வலை முதலாளியும் தன் வலைபக்கம் தேடல் எந்திரத்தில் மக்கள் தேடும் போது முதலில் வர வேண்டும் என பாடாய்படுகிறான்.அதற்காகவே தோன்றியது தான் SEO துறை.இன்று "அந்துமணி" என கூகிளில் தேடினால்
செந்தழல் ரவி வந்துநிற்கிறார்."அரசு பதில்கள்" என தேடினால் வலைப்பதிவர் அரசு வந்து நிற்கிறார்.தினமும் பெரும் உழைப்பில் உருவாகி சேமிப்பில் இருக்கும் ஆயிரம் ஆயிரம் தமிழ் பக்கங்களை தேட தேடலெந்திரம் உதவி வேண்டாமோ?.அவர்கள் இவ்வகை வருகைகளை நிராகரிக்கிறார்களா? இல்லை யூனிக்கோடில் நம்பிக்கை இல்லையா?.புரியவில்லை.கஷ்டபட்டு தேடிப் பிடித்து தினத்தந்தி வலைபக்கம் வந்துவிட்டு ஜங்க் எழுத்துகளை பார்த்து விட்டு எழுத்து நிறுவ (Font) பொறுமையில்லாமல் அல்லது தெரியாமல் அப்படியே நகர்ந்து போவோர் ஆயிரம்.
இன்னொன்று செய்தியோடை அமைப்பு.RSS வெளீயிடு உள்ள ஜனரஞ்சக தமிழ் இதழ் இல்லவே இல்லை.
RSS -ன் கீர்த்தி நம்மவர்களுக்கு புரிய இன்னும் பல்லாண்டு பிடிக்கும் போலும்.
தொலைக்காட்சி மீடியாக்களை விழுங்கி,அப்புறமாய் வானொலி மீடியாக்களை விழுங்கி இப்போ காகித மீடியாக்களை விழுங்கி கொண்டிருக்கும் சூரிய குடும்பம் தமிழ் இணைய மீடியாவில் மும்முரமாய் இறங்கும் போது "பெஸ்டுகண்ணாபெஸ்டுனு" போட்டி தொடங்கும்.சும்மா நச்சுனு சுவாரஸ்யமாய் இருக்கும்.
ரொம்ப படித்து தளர்ந்திருப்பீர்கள்.ஒரு இன்டரெஸ்டிங் தகவல்.
தினமலம் என ஒரு முறை கூகிளில் டைப்பி பாருங்களேன்......:)
Friday, October 13, 2006
தமிழ் பாட்கேஸ்டிங்
வழக்கமான ஆன்லைன் ரேடியோ போலல்லாது எப்போது வேண்டுமானாலும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் கேட்டு மகிழ தோன்றியிருப்பவை தான் பாட்காஸ்டிங் எனப்படும் ஒலி கோப்புகளின் அணிவகுப்பு.ஆப்பிள் ஐபாடிலிருந்து உண்டான பெயர்.இது ஒருவர் உருவாக்கிய பாடலாக இருக்கலாம் அல்லது நகைசுவை,குறு நாடகம்,இசை,செய்தி,தகவல் ஏன் பிரசாரமாகக் கூட இருக்கலாம்.No rules No regulations.பெரும்பாலும் MP3 வடிவத்தில் காணலாம்.
பாட்காஸ்டிங் செய்ய என்ன வேண்டும்?முதலில் ஒரு மைக்ரோ போன் வேண்டும்.உங்கள் கணிணியில் ஏற்கனவே அமந்துள்ள மைக்ரோபோனை உபயோகபடுத்தினாலும் Audio Technica 3035 Microphone அல்லது Edirol R-9 போன்ற மைக்ரோ போன் நல்ல தரமான ஒலிப் பதிவை தரும்.
அப்புறமாய் ஒலி கோப்புகளோடு விளையாட அதாவது record audio, edit MP3 files, cut, copy, splice மற்றும் mix sounds செய்ய இலவச மென்பொருள் Audacity இங்கிருந்து இறக்கம் செய்து கொள்ளலாம் http://audacity.sourceforge.net.மிக உயர்தர எடிட்டிங்கு-க்கு Sound Forge Audio Studio software-ஐ முயலலாம்.
உங்கள் பாட்காஸ்டிங்கில் கலந்து வழங்க இனிய இசைகளை இங்கிருந்து இலவசமாக எடுத்துக் கொள்ளலாம்.காப்பிரைட் பற்றி பயப்பட தேவையில்லை.
http://music.podshow.com
http://www.podsafeaudio.com
http://www.audiofeeds.org
சொற்பொழிவு பாட்காஸ்டிங்கு bit rate 48 - 56k Mono வாகவும் இசை பாட்காஸ்டிங்கு 63 - 96k Stereo-வும் வைத்தல் தகும்.உயர் bit rate (around 160kbps) இசை பாடல்களுக்கு நல்லது.வசன பாட்காஸ்டிங்களுக்கு நல்லதல்ல.முடிந்தவரை சிறிய அளவு கோப்பாக இருத்தல் நலம்.எனில் பயனர் இறக்கம் செய்ய எளிது.
ID3 tag-ல் உங்களின் பெயர்,தலைப்பு,வகை குறித்து கொள்ளவும்.தேடல் மற்றும் உங்களை பற்றி அறிதல் எளிதாகும்.
அவ்ளோதான் ஒலிவலைப்பூ-வில் அதாங்க ஆடியோ பிளாகில் போட உங்கள் பாட்காஸ்டிங் ரெடி!!
உதாரணமாய் இங்கே பாருங்கள் தமிழ் பாட்காஸ்ட்களின் அணிவகுப்பை
http://odeo.com/tag/tamil
http://search.singingfish.com/sfw/home.jsp
Make Tamil Podcasting Online Radio Station
அப்டேட்:
திரு.சுந்தர் ராம்ஸ் அறிமுகபடுத்திய சக வலை பதிவாளர் நடத்தும் தமிழ்பாட்காஸ்ட் வலையகம் பார்க்க http://www.tamilpodcaster.com/
http://tamilpodcaster.blogspot.com/
Posted by
PKP
at
10/13/2006 11:42:00 AM
4
comments
Labels: Tamil
Wednesday, October 11, 2006
இலவச ஸ்டிரீமிங் மீடியா ரெக்கார்டர்கள்
இணையத்தோடு இணைந்து ஓடும் ஆனால் நம்மால் இறக்கமோ அல்லது சேமிப்போ செய்ய இயலாத வகை ஒலி ஒளி கோப்புகளை ஸ்டிரீமிங் மீடியா -Streaming media என்கிறார்கள்.ரியல்மீடியா (RealMedia),வின்டோஸ் மீடியா (Windows Media),குயிக் டைம் (Quick Time) ஆகியவை இதற்கு உதாரணங்கள்.
இங்கே அநேக தமிழ் வீடியோ ஸ்டிரீமிங் மீடியாக்களை காணலாம்
http://ww.smashits.com/video/cat4/tamil-songs.html
இங்கே அநேக தமிழ் ஆடியோ ஸ்டிரீமிங் மீடியாக்களை காணலாம்
http://ww.smashits.com/index.cfm?Page=Audio&SubPage=ShowSubCats&AudioCatID=41
இது போன்ற ஆடியோ வீடியோ ஸ்டிரீமிங் மீடியாக்களை பதிவு செய்து சேமித்துக் கொண்டு பின் மீண்டும் மீண்டும் பயன்படுத்த கீழ்கண்ட இலவச மென் பொருள்கள் உதவுகின்றன.
பெரும்பாலான ஸ்டிரீமிங் மீடியா சேவைகள் பதிப்புரிமை கொண்டதால் இது போன்ற மென்பொருள்களை கவனமாய் கையாயாள வேண்டும் என அறியவும்.
StreamBox VCR http://p082.ezboard.com/fstreemeboxvcrfrm7.showMessage?topicID=27.topic
GetASFStream http://www.urltrim.com/ct/t.php?l=77
FAQ about GetASFStream http://tinyurl.com/fwvzq
SDP free video player http://sdp.ppona.com/
Record or Rip or Save streamed tamil videos and audio tracks like Replay Video and RM Recorder
Tuesday, October 10, 2006
தமிழ்மசாலாவின் புத்தம் புது MP3 பாடல்கள்
தமிழ்மசாலா.நெட் tamilmasala.net புத்தம் புது தமிழ் MP3 பாடல்களை ஒரே சொடுக்கில் வழங்குகிறது.ஒரு விசை சென்று பாருங்கள்.ஒருவேளை நீங்கள் தேடும் பாடல் இறக்கத்துக்காக இருக்கலாம். Latest Hits | 2000 Hits | 1990 Hits | 1980 Hits | Golden Hits | Weekly Songs | Devotional Songs என அடுக்கி இருக்கிறார்கள்.JFYI.Enjoy.
Tamilmasala.net
Posted by
PKP
at
10/10/2006 04:21:00 PM
2
comments
Labels: Tamil
Monday, October 09, 2006
ஆன்லைன் தமிழர்கள் மொத்தம் எத்தனை பேர்?
இன்றைய நிலையில் உலகெங்கும் எத்தனை ஆன்லைன் தமிழர்கள் இருக்க முடியும்? அந்த அபூர்வ எண்கள் நமக்கு கிடைக்க கிடக்கிறதா?.பார்க்கலாம்.உலகளாவிய தமிழர்களின் மொத்த எண்ணிக்கை 80 மில்லியன் என்கிறார்கள்.இவர்களில் எத்தனை பேர் ஆன்லைன் உலகில் வருகிறார்கள்?
இந்திய அளவில் 2007 மார்ச்சில் 33 மில்லியனாக இருந்த வலைமக்கள் தொகை இந்த செப்டம்பரில் 37 மில்லியனாக எம்பியிருக்கிறது என்கிறது IAMAI -The Internet and Mobile Association of India-வின் சர்வே.
இது அடுத்த மார்ச்சில் 42 மில்லியனாகவும்,2008 மார்ச்சில் 54 மில்லியனாகவும் எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் சிறு நகர ,குறு நகர வலைமக்களின் எண்ணிக்கை 142 சதவீதமாக ஏறி இருப்பது தான்.அநேகமான சீக்கிரமாக அரசு சார்ந்த சேவைகள் ஆன்லைன் ஆகும்போது இந்த எண்ணிக்கை இன்னும் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.பழைய email, chat மற்றும் IM -வோடு புது blogs, P2P, video on demand and online gaming-சேர்ந்து நம்மூர் வலை பயன்பாடு சீக்கிரத்தில் களை கட்டப்போகிறது என நம்பலாம்.
இப்போதைக்கு அமெரிக்க வலைமக்கள் தான் மிக அதிகமாம் 153 மில்லியன்.அதை தொடர்ந்து சீனா,ஜப்பான்,ஜெர்மனி வருகிறார்கள்.
இனி தமிழுக்கு வருவோம்.எனக்கு தெரிந்து இப்போதைக்கு தமிழில் முதலிடத்தில் இருக்கும் வலையகம் தினமலர்.காம் dinamalar.com அலெக்ஸா தரத்தில் 66-வது இடம்.( ஈநாடு eenadu.net தெலுங்கு நாளேடு 52 வது இடத்திலும்-அதிக வெளிநாடு வாழ் ஆந்திரைட்ஸ் காரணமோ? ,மசாலா Debonairblog.com 14 வது இடத்திலும்-நம்ம மக்களின் மசாலா ரசனை காரணமோ? உள்ளது குறிப்பிட தக்கது).
தினமலர்.காம் சொல்லும் எண்கள் தினம் 3 லட்சம் பார்வையாளர்கள்.http://www.dinamalar.com/webtariff.htmசில தமிழ் வலையகங்களை மேய்ந்தபோது தினம் 1000 தாண்டும்.வலைபூக்கள் நிலை 100 களில்.
வலைபதிவோர்காக வலைபதிவர்களை கொண்டு வலைபதிக்கப்படுதல் தான் இன்றைய தமிழ் "வலைநாயக" நிலை.
ஆனாலும் சில ஆச்சர்ய புள்ளி விவரங்களில் தமிழ் வலைபதிவு உலகம் இந்திய அளவில் முன்னுக்கு நிற்கிறது புலனாகிறது.
எடுத்து காட்டாக http://india.blogstreet.com/directory.html#City பார்வையிட்டால் சென்னை இந்திய வலைபதிவு உலகில் முந்தி நிற்கிறது
"தமிழ் blog" மற்றும் "हिन्दी blog" கூகிள் தேடலில் தமிழ் எண்கள் முந்தி நிற்கிறது.என் கணிப்பு அநேக இந்திகாரர்கள் ஆங்கிலத்தில் எழுதி காசு பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தான்.என்னவாயினும் இது வரை தமிழில் வலை பதிவோர்,ஒன்றில் எதோவொரு வெறியில் (? )எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.தமிழ் பற்றாய் (அல்லது வேறு பற்று)கூட இருக்கலாம் அல்லது நேரப்போக்குகாக (I mean hobby) எழுதிக்கொண்டிருக்கலாம்.
சன் டிவி தமிழர்கள் -அதாவது பேச,புரிய தெரியும்-படிக்க தெரியாத புது வகை தமிழர்களை நாம் இக்கணக்கில் exclude பண்ணியாகவேண்டும்.
3 லட்சம் பேரில் 100 பேர்தான் வலைப்பூ பக்கம் வருகிறார்கள் என்றால் எங்கிருக்கிறது ஓட்டை?
Posted by
PKP
at
10/09/2006 04:37:00 PM
7
comments
Labels: Tamil
Friday, October 06, 2006
கீ செயினிலே உங்கள் முழுக் கணிணியும்
மடிக்கணிணி தூக்கிசெல்லும் மென்வல்லுனோர்க்கு ஓர் நற்செய்தி.வீட்டு கணிணி , அலுவலக கணிணி என இனி குழப்பம் வேண்டாம்.இரண்டு கணிணியையுமே ஒரே ஒரு USB டிரைவிலோ அல்லது iPod-டிலோ அல்லது Nokia N91,Samsung i310-யிலோ ஒரு கோப்பாக வைத்து எங்கிருந்து வேண்டுமென்றாலும் உங்கள் வீட்டு கணிணியையோ அல்லது அலுவலக கணிணியையோ இனி இயக்கலாம்.அலுவலக கணிணியில் USB drive/flash drive இணைத்து வீட்டு கணிணியை இயக்கலாம்.and vice versa.எப்படி?.மோஜோபாக் or மோஜோபேக்
என அழைக்கப்படும் இந்த சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மென்பொருள் இவ்வேலையை கவனித்து கொள்கிறது.மேலும் அறிய கீழ்கண்ட வலையகம் போய் பாருங்கள்.
https://www.mojopac.com/portal/content/what/
இனி லேப்டாப்பை தூக்கி செல்வோர் out dated professionals.Look his/her keychain.
இது போன்ற இன்னும் சில மென்தீர்வுகள்
http://www.ceedo.com
http://www.u3.com
MojoPac MojoPack ceedo u3 Application Virtualization
Thursday, October 05, 2006
புரோகிராமர்களுக்கென ஒரு கூகிள்
வரி வரியாய் ப்ரொக்ராம் கோடு எழுதி மென் பொருள் கட்டுவோர்க்கு இந்தவருடம் தனது பிறந்த நாளை அடுத்து சிறப்பு பரிசாக கூகிள் வழங்குகிறது "கூகிள் கோட் தேடல் எந்திரம்" அதாவது Google Code Search.
மகா இணைய பெட்டகத்திலுள்ள ப்ரொக்ராம் கோடுகளை எளிதாக தேட ஒரு எந்திரம்.பெரும் பாலான மென்மொழி கோட்களை அழகாக வழங்குகிறது.Even if it is inside a archived zip file. Ada தொடங்கி C#, PHP Ruby வரை தேடலாம்.கட் அண்ட் பேஸ்ட் இனி எளிது என சொல்லுங்கள்.
http://www.google.com/codesearch
இது சம்பந்தபட்ட இன்னொரு பதிவு இங்கே
க்ரூகிள்
இன்னொரு இது போன்ற தேடல்எந்திரம்
http://www.koders.com/
Wednesday, October 04, 2006
ரஜினியும் அஜாக்ஸூம்
அஜாக்ஸ் (Ajax) என்பது Asynchronous JavaScript and XML என்பதின் சுருக்கம்.இது ஒரு தனி தொழில் நுட்பமல்ல.கலவை தொழில்நுட்பம்.அதாவது Asynchronous
JavaScript+CSS+DOM+XMLHttpRequest எல்லாம் சேர்ந்து அமைத்த கூட்டணி ஆட்சி.
பொதுவாக நாம் கொடுக்கும் சாதாரண http கட்டளைகள் அதற்கு தேவையான சமயம் எடுத்து செர்வர் போய் விடையெடுத்து வந்து கொடுக்கும்.நம்மூர் செய்திதாள் போல.தேர்தல் முடிவுக்கு விடியும் வரை காத்திருக்க வேண்டும்.
அஜாக்ஸ் தொழில் நுட்பமானது அப்படி அல்ல.அது எப்படி இயங்குகிறதென்றால் சாதாரண http கட்டளைகள் விடையெடுக்க செர்வருக்கு போயிருக்கும் வேளையில் அஜாக்ஸ் எந்திரம் இடையில் அமர்ந்து பயனர்க்கு இடைவிடாது தகவலளித்து கொண்டேயிருக்கும்.நம்மூர் சன்நியூஸ் போல. உடனடி தகவல்கள்.ஆனாலும் ரெஸல்ட் நாளைதான் தெரியும். என்றாலும் அஜாக்ஸ் சூடேற்றி கொண்டேயிருக்கும்.பயனருக்கு குஷி.
Seamless results என்கிறார்கள்.
இது பற்றி மேலும் சில எளிய தகவல்கள் இங்கே
http://adaptivepath.com/publications/essays/archives/000385.php
இணையத்தில் அஜாக்ஸின் பயன்பாட்டை அனுபவித்துபாருங்கள் இங்கே
அஜாக்ஸ் இயக்கும் ஆங்கில அகராதி
http://www.objectgraph.com/dictionary/
அஜாக்ஸ் இயக்கும் IP to location மென்சாதனம்
http://www.seomoz.org/ip2loc/ip2loc.php
அஜாக்ஸ் இயக்கும் டொமைன் பெயர் தேடல் எந்திரம்
http://instantdomainsearch.com/
இந்த சூப்பர் தொழில் நுட்பம் பற்றி 90 களிலேயே நம்மூர் சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்கள் "பாஷா" திரைபடத்தில் மிக தெளிவாக கூறியிருந்தார்."அஜக்குன்னா அஜக்குதான்" என்று. :)
Tuesday, October 03, 2006
கேள்விக்கென்ன பதில்
உலகின் மிகப் பணக்கார நாடு எது தெரியுமா? லக்ஸம்பர்க்காம்
ஏழைநாடு மொசாம்பிக்காம்
மிக சமீபத்தில் பிறந்த ஒரே நாடு கிழக்கு தைமூராம்
மிக வயதான நாடு சான் மரினோவாம் (எகிப்தை காணோம்)
இப்படி அழகாக பொது அறிவு கேள்விகளுக்கு பதிலளிக்கும் வேளையில்
ஒரு கேள்விக்கு மட்டும் பதிலேயில்லை.உலகின் மொத்த நாடுகள் எத்தனை?
Answer is There is no right answer.
189-ஆ, 191-ஆ, 192-ஆ, 193-ஆ அல்லது 194 -ஆ எல்லாமே தான்.
ஐக்கிய நாடு அங்கத்தினர் மொத்தம்192.வாட்டிகன் இதில் இல்லை.
அமெரிக்கா அங்கீகரித்துள்ள நாடுகள் மொத்தம் 193. தைவான் இதில் இல்லை.
World Almanacs 193 என்கிறது.ஆனால் what about Palestine? Greenland? Western Sahara? மற்றும் நம்ம ஈழம்?.
நட்சத்திரங்களை எண்ணி பார்க்கும் சவாலை ஏற்கும் முன் நாம் நாடுகளை எண்ணிப் பார்க்க சவால் ஏற்க வேண்டும் போலும்.
http://worldatlas.com/nations.htm
தொடர
மிக சிறிய நாடு வாடிகன் நகரமாம்
மிக பெரிய நாடு ரஷ்யாவாம் (இன்னுமா?)
மிக அதிக மக்கள் தொகை பெருத்த நாடு சீனாவாம்
அதிகமாக நாடுகள் சுற்றியுள்ள நாடும் சீனாவாம்.
இவை சில சுவாரசிய துளிகள்
எதாவது UPSC,TNPSC,Railway,Bank test எழுதும் முன் கீழ்கண்ட பக்கத்தை ஒரு பார்வையிட்டுகொள்ளலாம்.
மட்டுமல்ல "மெகா" தங்கவேட்டைக்கு போகும் போது கூடத்தான்.
மேலும் பார்க்க
தி லிஸ்ட் - பெரிய சிறியக்களின் சங்கமம்
http://worldatlas.com/geoquiz/thelist.htm