இந்த வருடம் பெப்ரவரி வாக்கில் ஒரு அமெரிக்கர் பெங்களூர் வருவதாக இருந்தது.இந்தியாவை பற்றி விவரம் தெரிந்தவர்களிடமிருந்து சில தகவல்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என நினைத்த அவர் தன் வலைப்பூவில் இந்தியாவை பற்றிய பயண அறிவுரைகள் யாராவது கொடுக்க முடிந்தால் கொடுங்களேன் என கேட்டிருந்தார்.ஒரு அமெரிக்கர் பதில் எழுதினார் "தவறாமல் ஒரு அணுகுண்டு எடுத்து செல்லவும்.பெங்களூர் டிரிப் முடிந்து திரும்பும் போது அதை போட்டுவிட்டு வரவும்.அமெரிக்கர் வேலைகளையெல்லாம் பெங்களூர்காரர்கள் திருடிவிட்டார்கள்".-நல்ல அறிவுரை என்று அந்த அமெரிக்கர் நொந்துபோய் இருந்த போது சில நாட்கள் கழித்து இன்னொரு இந்தியர் அதற்கு பதில் எழுதி இருந்தார் -"அப்படியே ஒரு குண்டை சியாட்டிலிலும் போட்டுவிடுங்கள்.அவர்கள் எங்கள் திறமைமிக்க எஞ்சினியர்களையெல்லாம் அபகரித்து வைத்திருக்கிறார்கள்".
-அடப்பாவி அடப்பாவி அட்ப்பாவிகளா...... இங்க ஏற்கனவே பாபுகாரயும்,எஸ் எம் சாரயும் குண்டுபோட்டு வீட்டுக்கு அனுப்பியாச்சு.அங்க சார்ஜ் புஷ்ஷயும்.......கொஞ்சம் செப்டம்பர் வர வெய்ட் பண்ணுங்க.ப்ளீஸ்....
வகை:நகைச்சுவை
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Saturday, May 22, 2004
பிடித்ததுசனி-39
Wednesday, May 19, 2004
வீழுமெனநினைதாயோ?வாழும்எம்பாரதம்
பாரா சொல்கிறார்
இந்தியா இதுவரை சுதந்தரப் போராட்ட வீரர்களால் ஆளப்பட்டிருக்கிறது. அரசியல்வாதிகளால் ஆளப்பட்டிருக்கிறது. அரைகுறை அரசியல்வாதிகளால் ஆளப்பட்டிருக்கிறது. ஊழல் பெருச்சாளிகளால் ஆளப்பட்டிருக்கிறது. முதல்முறையாக இப்போதுதான் ஓர் அறிஞரால் ஆளப்படவிருக்கிறது. வாழ்த்தவேண்டியது நம் கடமை.....எப்படியானாலும் மன்மோகன்சிங் இப்போது பிரதமராவது நாட்டுக்கு நல்லது. அவ்வகையில் சோனியாவுக்கு நன்றி சொல்லவேண்டியதும் நமது கடமையாகும்.
--------------------------------------------------------------------------------
"People will not believe that a person can walk away from the post of prime minister," said Rahul, adding "I'm proud of her."
Echoed Jairam Ramesh, who is part of the party's economic think tank, agrees with Kuldip Nayar: "Sonia Gandhi has now joined the pantheon of renunciates like the Buddha and Mahatma Gandhi with her decision."
--------------------------------------------------------------------------------
என்னமோ ஒண்ணு ...நல்லது நடந்தா சரிதான்.
(ஆனாலும் இட்ஸ் டூ மச் NDA)
வகை:சலோ இந்தியா
வார இறுதி கொண்டாட்டம்
கேரளாவுக்கு சென்றால் எங்கள் மாவட்டத்து ஆசாமிகளை "பாண்டி' என்பர்; தமிழகத்திலோ "மல்லு' என்பர்
அந்த மாவட்டம் தான் நான் வளர்ந்த மாவட்டம்!
அதை நினைத்தால் மலரும் நினைவுகளில் மூழ்கிப்போவேன்.
அதை சுற்றி ஒரு ரவுண்டப் இந்தவாரம்
Enjoy
வரிகள்புதன்-38
காத்திருந்தான்
தனிமை இந்த தனிமை..
கொடுமையிலும் கொடுமை..
இனிமை இல்லை வாழ்வில்..
எதற்க்கு இந்த இளமை...
என் நான் செய்த பாவம்..
அழகு மலர் ஆட..
அபினயங்கள் கூட..
சிலம்பொலிகள் புலம்புவதை கேள்..
Tuesday, May 18, 2004
கிசுகிசுசெவ்வாய்-37
கிசு கிசு இந்தவாரம் நெறையங்கோ
Californians just got themselves a governor born in Austria
Rajiv was also seen in Dubai, visiting the Jumbo Electronics office secretly in the night when its owner Chabria, was wanted in India by the Police.
பல மாநிலங்களில் (incl TN) ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கவர்னர்களாக உள்ளனர். இதில் சிலர் பாரதிய ஜனதாவுக்கு பகிரங்கமாக ஓட்டு வேட்டையாடினார்கள். குறிப்பாக அயானா கவர்னர் பரமானந்த், பா.ஜ. பிரசார காரராகவே மாறிவிட்டார். மேலும் பீகார், கோவா, குஜராத், உ.பி.யில் கவர்னராக உள்ளவர்கள் also from RSS.
போலீஸ் ஸ்டேஷனில் உபசரிப்பு ஜில்லென்று மோர் கொடுத்து.
உடனடி குறை தீர்ப்பு.சபாஷ் ஸார்.
சாலமன் பாப்பையா பாணியில் "வெளங்க்க்கும்மாய்யா"
கசமுசாகார்னெர்
மதமாற்றத் தடைச் சட்டம் வாபஸ் ; எச் முத்திரை வாபஸ் ; இலவச மின்சாரம் தொடரும் ; அரசு ஊழியர்கள், பத்திரிகைகள் மீதான வழக்குகள் வாபஸ் : முதல்வர் ஜெ.,திடீர் அறிவிப்பு
சென்னை: மதமாற்றத் தடைச் சட்டத்தினை திரும்பப் பெற்றும், ரேஷன் கார்டுகளில் எச் முத்திரை குத்துவதை திரும்பப் பெற்றும், போரட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீதான வழக்குகளும், இந்து உள்ளிட்ட பத்திரிகைகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இன்று தெரிவித்தார். மேலும் அரசு ஊழியர்களைப் போராடத் துõண்டியதாக திமுக தலைவர் கருணாநிதி மீது போடப்பட்ட டெஸ்மா வழக்கினையும் வாபஸ் பெறுவதாகவும் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., அதிமுக., விற்கு ஏற்பட்ட படுதோல்விøயையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது
-Dinamalar
அடடா செஞ்ச சாதனையெல்லாம் ஒரே நாள்ல Withdraw பண்ணிட்டாங்களே.
வாழுக சனனாயகம்.
(வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்) அம்மா திருந்திட்டாங்கய்யா அம்மா திருந்திட்டாங்கையா
Monday, May 17, 2004
Sunday, May 16, 2004
கசமுசாகார்னர்
Sadly, we are back to foreign rule.????
WE indians have so much double standards. WE cried out loud when the Fiji President of indian origin (but has settled there for many years now) was ousted b'coz he was not a native fiji but a "foreigner." We make such noise when Indians are discriminated abroad for the plain reason of being Indian. We feel discriminated in the US, UK and other EU countries even when we are there just for our higher studies and snatch the job opportunities of the locals. We still moan of being racially discriminated!! All that even when we do not hold any local citizenship!!!
And didnt we all rejoice when an Indian american contested for the Governor Elections in the US recently?
PLus, we Indians do make the Indian connection with some of the gr8 minds (in various fields like literary, science, arts etc) and show off as if they are the jewel of India even when they have ditched the Indian citizenship for luxurious/pompous life in another country's!!! When those ppl dont care about India, why do we care about them?? Isnt that double standard too?
And, honestly tell me, how many of u, given a chance, wud like to settle abroad? u cud easily say u wud never wanna go outta our gr8 country and will work hard for our country. but can u say that honestly?
And now we dare call a person who's legally an INdian citizen for many years, who's resided in India for as long - a foreigner!!! Agreed she may not form a gr8 leader (but only time will tell that..) of the likes INdia has seen in the recent past, but why not give her a chance and see for ourselves?
P.S: I am sick and tired of hearing about the Foreign issue being made such a huge issue. Where were u all when Mr.Vajpayee kept mumb over the Gujarat riots issue? And when he had been to Iran on a visit he acclaimed Islam to be a gr8 religion. and the same Mr.Vajpayee in Goa a few days later in a speech had this to say - "Islam ek Khattar dharm hai." Now, wudnt u call that double standards???
I hope i have not gone outta the bounds of common sense with my argument. I never had a liking for politics, but it just gets me when ppl form double-standard-opinions...
And if i offended any of u, please do forgive me...
-TheMask
--------------------------------------------------------------------------
Tailpiece - In btw how many of you mind having a forigen coach for your Indian cricket team. You obviously dont cause he is good at his job which shows in our team now.
--------------------------------------------------------------------------
One---Shame on India.One of the days I really feel shameful to say that I live in India.
Other---I hate when people say that... What have you done for your country to say that...
கடிஞாயிறு-35
வாஜ்பாயி ஏன் இந்த முறை பிரதமர் ஆக முடியலை.?
அவர் "LUCK NO"தொகுதியில் போட்டியிட்டதால்
இன்னொரு போனஸ் கடி
What is the center of gravity?
"V"
வகை:நகைச்சுவை
Saturday, May 15, 2004
கேட்டான் பாரு ஒரு கேள்வி
இணயத்தில் தமிழ் வலைப்பதிவுகள் நாளொரு வண்ணமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறன.எனக்கு தெரிந்து இரு இடங்களில் Tamil Bloggers List உள்ளது.அனைத்து வலைப்பதிவுகளையும் மேயும் போது சில வலைப்பதிவுகள் பல மாதமாக செயலற்று இருக்கின்றன.சில சோதனை பக்கமோடு நின்று விட்டன.என்னோட கேள்வி .Active Blogs மற்றும் New Blogs- என்று எங்காவது list உள்ளதா.அல்லது இதற்க்கு ஏதாவது வேறுவழி உள்ளதா செயலற்ற பக்கங்களுக்கு அடிக்கடி போய் நேரம் வீணாகிறது என நினைகிறேன்.நீங்க எப்படி சம்மாளிக்கிறீங்க.?
பிடித்ததுசனி-34
ஆறு மாதத்துக்கு முன்னால் வரை காங்கிரஸ் இந்த தேர்தலில் முதலிடத்துக்கு வந்து விடும் என யாராவது சொல்லியிருந்தால் அது மிகப் பெரிய ஜோக்காக இருந்திருக்கும்.அந்த கால கட்டத்திலேயே வீட்டைவிட்டு புறப்பட்டு விட்டார் சோனியா.யாருக்கும் நம்பிக்கையே இல்லாதபோது அவருக்கு எங்கிருந்துதான் நம்பிக்கை வந்ததோ தெரியவில்லை.மீடியாக்கள் வேறு இந்தியா ஒளிர்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தது.சென்செக்ஸ் 6000 வரலாற்று உச்சத்தில்.பண மதிப்பு ஏறுமுகத்தில்.யாருக்கு நம்பிக்கைவரும்.காவிக்காரர்கள் அதீத நம்பிக்கையில்.350 வரை கிடைக்கும் என கருத்து கணிப்பு வேறு.சந்து பொந்தெல்லாம் ஏறி இறங்கி,தன் குழந்தைகளையும் இறக்கி விட்டு அயரா உழைப்பு,அசாத்திய நம்பிக்கை என தனியொருவராக நின்று வெற்றிக்கனியை பறித்து விட்டார்.(இங்கும் தமிழ் நாட்டில் சிலர் ஒடியாடி உழைத்தார்கள்,அதீத நம்பிக்கையுடன் மக்கள் மூடர் என எண்ணி).NRI-களையும் IT-மனிதர்களையும் விட்டால் வேறு யாருக்கும் இந்தியா ஒளிரவில்லை.இனயம் எல்லாம் அவர்கள் புலம்பிதள்ளுகிறார்கள் 100 கோடி இந்தியர்களும் முட்டாள்களாம்.ஆனால் ஓட்டு போட்டது என்னவோ சோனியா முழுசாய் நம்பியிருந்த ஏழை மக்கள் தான்.வாஜ்பாய் நம்பியிருந்த NRI-களோ,IT மனிதர்களோ இல்லை சினிமா ஸ்டார்களோ அல்ல.பிறந்ததுக்கும் வாழ்ந்ததுக்கும் சம்பந்தமே இல்லாத ஒரிடதில் வந்து,மக்களை முழுமயாய் புரிந்து சிம்மாசனத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறார்.அந்த அசாத்திய நம்பிக்கையும் உழைப்பும் பாராட்டுகுரியது.இனிமேலும் நகரம்,தொழில்நுட்பம் என்று மட்டுமில்லாமல் கிராமம்,விவசாயம் இதுவும் கவனிக்கப்படும் என நம்புகிறார்கள்.பெண் ஆட்சி என்றாலே பயமாய் இருக்கிறது(சந்திரிகாவை சொன்னேன்).நல்லதாகவே நடக்கும் என நம்புவோம்
Wednesday, May 12, 2004
வார இறுதி கொண்டாட்டம்
இந்த வாரம் தேர்தல் முடிவுகள் டென்சன் வாரம்.
Election comission of India
NDTV News
நல்லா பார்த்து டென்சன் ஆகுங்கள்
ஒரு நிமிடம்
If Sonia becomes the PM
If lalloo becomes the PM
அரே Gandhi
Summa ஜாலிக்காக
Enjoy the weekend
வகை:நகைச்சுவை
வரிகள்புதன்-33
என்றாவது ஒரு நாள்
எங்காவது ஓரிடத்தில்
நீங்கள் சந்திபீர்கள்
சகலமும் அமைந்தவர்
(அட ரேமாண்ட்ஸ் விளம்பரம்)
கிசுகிசுசெவ்வாய்-32
"And the government is going all out to woo the IT industry as well. During a recent nationwide strike in February, IT companies were given yellow stickers to place on workers' cars identifying them as providing an essential service, and were promised security. "
புது சிலிகான் வேலி உருவாகிக்கொண்டிருக்கிறது.ஹைதராபாத் தொடர்ந்து ரேஸில் இருக்குமா தெரியவில்லை."நாங்கள் நாயுடு ப்ள்ஸ் பண்ணுவோம்" என்கிறார்கள்.பார்ப்போம்.
வகை:சலோ இந்தியா
Monday, May 10, 2004
தகவல்திங்கள்-31
எல்லோரும் இன்னைக்கி ஓட்டு போட போய்ட்டாங்க.அதனால இன்னைக்கி எல்லோருக்கும் லீ...வ்வு
Sunday, May 09, 2004
கடிஞாயிறு-30
ஒரு காட்டு வழியே ஏழு பேர் போய்க்கொண்டிருக்கின்றனர்.திடீரென ஒரு சிங்கம் அவ்வழியே வந்து அந்த ஏழுபேரில் ஐந்து பேரை கடித்து குதறிவிடுகிறது.மற்ற இருவரையும் விட்டுவிடுகிறது.ஏன்?
ஏன்னா அந்த இருவரும் லயன்ஸ் கிளப்பில் மெம்பர்ஸ்.
ஹெக்....ஹெக்....ஹே.....
வகை:நகைச்சுவை
Saturday, May 08, 2004
கசமுசா கார்னெர்
212,122,145,277,123,213,238,124,574,90..............
கருத்து கணிப்பு படிச்சு படிச்சு தலை சுத்துதுங்க.
தேர்தலுக்கு முன்,தேர்தலுக்கு பின்
வாஜ்பாயி வரும் முன்,வாஜ்பாயி வந்த பின்
சோனியா வரும் முன்,சோனியா வந்தபின்
ரஜினி வாய்ஸ்க்கு முன்,ரஜினி வாய்ஸ்க்கு பின்
மழை வரும் முன்,மழை வந்தபின்
என்ன கருத்துக்கணிப்பு கன்ட்ராவியோ நம்பர மாத்தி மாத்தி போட்டுக்கிட்டு.
மக்கள் ரொம்ப தெளிவா இருக்காங்கங்க
எப்பவோ அவங்க முடிவு பண்ணியாச்சுது யாருக்கு ஓட்டுனு
மக்கள் லேசில மாறமாட்டாங்க,கச்சிக மாதிரி
மற்ற கூத்தெல்லம் சும்மா டைம் பாஸ்.
212,122,145,277,123,213,238,124,574,90..............
கருத்து கணிப்பு படிச்சு படிச்சு தலை சுத்துதுங்க.
Wednesday, May 05, 2004
வார இறுதி கொண்டாட்டம்
பெற்ற சுதந்திரத்தை அளந்து பார்ப்பது எப்படி என்று முன்னர் பார்த்தோம்.இப்போ வாங்கியாந்த டூத்பேஸ்ட் அளவு சரியா இருக்கானு பார்க்கலாம்.அளவெல்லாம் சரியாஇருக்கணுமோஇல்லையோ?
Happy Weekend
வரிகள்புதன்-28
ஓரிடம் நீ கொடுத்தாய்
தலைவி தலைவனை நினைத்து பாடுகிறாள்
அன்றொருநாள் இதே நிலவில்
அவன் இருந்தான் என் அருகில்-நான்
அடைக்கலம் கொண்டேன் அவன் அழகை நீ
அறிவாயோ வெண்ணிலவே
வானும் மதியும் மாறாமல் போனால்
நானும் அவனும் நீங்காமல் இருப்போம்
சேர்ந்து சிரிப்போம்
சேர்ந்து நடப்போம்
காதல் மேடையிலே
நீ சாட்சியடி வெண்ணிலவே
-சின்ன வயதில் எதிலோ படித்தது.ரொம்ப பிடித்ததால் அப்படியே நினைவில் நின்றுவிட்டது.மூலம் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.திரைப்பாடலாகவும் இருக்கலாம்.
Tuesday, May 04, 2004
கிசுகிசுசெவ்வாய்-27
"எல்லாவற்றிற்கும் மேலாக நமது நாடாளுமன்றத்தில் இந்துத்வ சக்திகளின் தலைமை குருவின் படம் திறக்கப்பட்டிருக்கிறது. அண்ணல் காந்தியடிகளை எப்படிக் கொலை செய்வது என்று அவருடைய இல்லத்தில்தான் திட்டமிட்டப்பட்டது. அண்ணல் காந்தியடிகள் கொலை வழக்கில் அவர் எட்டாவது குற்றவாளி. அவர்தான் ------."
யார் இது?
Monday, May 03, 2004
தகவல்திங்கள்-26
நாம நம்ம நாட்டில் உண்மையிலேயே சுதந்திரமா இருக்கோமா?.
காந்தி வாங்கிதந்த விடுதலை எத்தனை கிலோ கிராம்?.அளந்து பாக்கலாம்.
வாங்க இங்கே
அமெரிக்கா குறைந்த ரேட்டிங் 1-1 அதாவது முழுச்சுதந்திரம்
சௌதி அரேபியா அதிக ரேட்டிங் 7-7 அதாவது முழுச்சுதந்திரம் இல்லை.
வகை:பொது அறிவு