கணேஷ்.காம் (ganesh.com) எனும் டொமைன் பெயர் ஈபே(www.ebay.com)-யில் ஏலத்திற்கு உள்ளது.கலிபோர்னியாவை சேர்ந்த இந்தியர் சாய் போலா (Sai Pola) என்பவர் அதை ஏலமிடுகிறார்.என்ன விலை போகும் என இப்போது கணிக்க இயலவில்லை.ஏல முடிவிற்கு இன்னும் சில மணிநேரங்களே உள்ளன.அவர் நியமித்துள்ள அவருக்கு மட்டுமே தெரிந்த ரெஸர்வ் ப்ரைஸ்ஸை (Reserve price) அது எட்டுமா என்பதும் கேள்விகுறியே.இதுபோல தான் ஈபேயில் ஜெருசலேம்.காமும் (Jerusalem.com) ஏலத்துக்கு வந்து $50000 ஏலம் போயும் ரெஸர்வ் ப்ரைஸ எட்டவில்லை.பொறுத்திருந்து பார்ப்போம்.CIOL-ன் சாய் போலாவுடனான சுவாரஸ்யமான சாட் பேட்டிக்கு கீழே கிளிக்குங்கள்.
http://www.ciol.com/content/news/2006/106083106.asp
Click here to see the auction.
அப்டேட்:INR 350,732.00 அதாவது $7,562.13 -க்கு ஏலம் எட்டியும் ரெசெர்வ் பிரைஸ் எட்டவில்லை.விற்காமல் போனது.
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Thursday, August 31, 2006
விலைபோகும் கணேஷ்
தமிழர்கள் என்ன தேடுகிறார்கள்?
இணையத்தில் தமிழர்கள் என்ன தேடுகிறார்கள் என ஆய்ந்தபோது சில ஆச்சர்யமான உண்மைகள் தெரிய வந்தன.அதன் தொகுப்பு இதோ.பெரும்பாலான அவர்கள் தேடல்கள் சினிமா,பாடல் இறக்கம்,நடிகை படம்,நீல மசாலா பற்றியதே.எதோ ஒரு சில அப்பாவிகள் நியூஸ்,கதை,பிபிசி என தேடுகிறார்கள்.நடிகை திரிசாவும் மீனாவும் இன்னும் மிக பிரபலம்.திரிசா பாத்ரூம் வீடியோவை இன்னும் சீரியசாக தேடிக்கொண்டிருக்கிறார்கள்.ஒரு சிலர் ஏதோ வரன் தேடுகிறார்கள்.சிலர் குழந்தை பெயர்,காலண்டர்,ஜோக்ஸ் என தேடுகிறார்கள்.ஓவர்சர் (overture) எனும் மென்பொருள், கடந்த மாதம் மட்டும் "தமிழ் Tamil" என என்னவெல்லாம் உலகெங்கும் எத்தனை முறை ஆன்லைன் தேடுஎந்திரத்தில் (Search Engine) தேடினார்கள் என காட்டிய டாப் 10 ரிசல்ட் இங்கே.
54701 tamil
51212 tamil song
15207 tamil sex
14928 tamil actress
14906 tamil movie
9420 actress hot picture tamil
8119 tamil cinema
7574 tamil trisha video bathroom clip
6427 tamil song free download
6294 tamil sex story
6274 tamil mp3 song
5464 free tamil movie download
5393 tamil news
5024 new tamil song
4896 tamil story
இங்கே முயன்று பாருங்கள்.
http://inventory.overture.com/d/searchinventory/suggestion
Posted by
PKP
at
8/31/2006 11:14:00 AM
4
comments
Labels: Tamil
Tuesday, August 29, 2006
ஈபே மில்லியனர்கள்
வீட்டிலிருந்த படியே பணம் சம்பாதிக்க முடியுமா?.முடியும் என்கிறது இன்றைய தொழில் நுட்பம்.ஆன்லைனில் உங்களிடம் உள்ள பொருட்களை ஏலம் இட்டு அல்லது விற்று பணம் ஈட்ட வழி இருக்கிறது என்கிறார்கள் இந்த ஈபேயர்கள் - (ebayers).வீட்டிலுள்ள உங்களுக்கு தேவையில்லாத பொருட்களை பிறர்க்கு விற்கலாம் அல்லது குறைந்த விலையில் மொத்த விற்பனையாளர்களிடமிருந்து பொருட்களை வாங்கி அதை
அதிக விலைக்கு பிறர்க்கு விற்கலாம்.கோடீஸ்வரர் ஆகாவிட்டாலும் குறைந்தது அநேகர் பாக்கெட் மணிக்கான அளவாவது காசு ஈபேயில் (ebay) பண்ணிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.அதற்கு நாம் பண்ண வேண்டியது என்ன?
ஈபேயில் ஒரு இலவச கணக்கை ஆரம்பிக்க வேண்டும்.கூடவே பேபால் (paypal.com) அல்லது பைசாபேயில் (paisapay) ஒரு இலவச கணக்கையும் ஆரம்பிக்க வேண்டும்.என்ன விற்க போகிறீர்களோ அதை இருப்பில் வைத்துக்கொண்டு அதை ஈபேயில் விளம்பரம் பண்ண
வேண்டியது தான்.தண்ணீரை கலக்கி பார்க்க முதலாவது எதாவது ஒரு பொருளை ஈபேயில் வாங்கிபாருங்கள்.அப்புறமாய் விற்க அநேக தந்திரங்கள் பிடிகிடைக்கும்.அமெரிக்க வரி ஆசாமி IRS -ன் கண்கள் இப்போது இந்த ஈபேயர் மேலும் விழுந்திருக்கிறதென்றால் பார்த்து கொள்ளுங்களேன்.
http://money.cnn.com/2006/08/23/pf/taxes/online_taxes/index.htm
உலகளாவிய ஈபே தளம் (www.ebay.com).
இந்திய ஈபே தளம் (www.ebay.in). அதாங்க முன்னாள் (www.baazee.com
).
சில ஈபே மில்லியனர்கள் எப்படி கலக்கிக்கொண்டிருக்கிறார்கள் என பாருங்கள் இங்கே.
http://www.entrepreneur.com/slideshows/ebay
http://www.entrepreneur.com/article/0,4621,327585,00.html
(www.ebay.com).
Posted by
PKP
at
8/29/2006 03:36:00 PM
0
comments
Labels: Money, Pictures, Software, Tamil Lyrics
Saturday, August 26, 2006
தீச்சுவரையும் தாண்டி FTP
பொதுவாக பெரும்பாலான நிறுவனங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் பையர்வால் எனப்படும் தடுப்பானானது FTP கோப்பு கடத்தலை தடுத்துவிடும்.அதனால் சாதாரண FTP client-ஆல் கோப்பு மேலேற்றம் மற்றும் இறக்கம் செய்ய இயலாது.இவ்வாறான தருணங்களில் அதையும் மீறி FTP டவுன்லோட் அப்லோட் செய்ய இதோ ஒரு எளிய வழி.Browser or HTTP based ftp. Skip or bypass the firewall.எந்த ஒரு FTP client-ஐயும் உங்கள் கணிணியில் நிறுவத் தேவை இல்லை.
http://web2ftp.com
net2ftp.com
Thursday, August 24, 2006
குரல் தனியே இசை தனியே பிரிக்க
MP3 பாடல்களில் வரும் பின்னணி குரலையும் (ie Singers vocal), பின்னணி இசையையும் (Music) தனியாக பிரித்தெடுக்க மென்பொருள் உளதா என்றால் ஆம் உளது எனலாம்.அதுவும் இலவசமாக.கரோகே Karaoke அல்லது வோக்கல் ரிமூவர் (vocal remover)எனப்படும் இம்மென் பொருள்களை இன்னும் நான் முயன்று பார்க்கவில்லை.யாராவது முயன்று பார்த்தால் உங்கள் அனுபவம் சொல்லுங்கள்.சினி இசை தடம் மட்டும் பிளயரில் சத்தமாக ஓட இனி இனிய குரலில் பாடி தம்பிமார் கலக்கலாம்.
http://www.analogx.com/contents/download/audio/vremover.htm
http://www.karafun.com/index_en.html
ஆன்லைனில் தி.நகர்-ஷாப்பிங் போகலாம் வாங்க
தமிழ்நாட்டில் சில வருடங்களுக்கு முன்புவரை ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் ஈகாமர்ஸ் என்பதெல்லாம் நமக்கு காமெடியாக தெரிந்தன.இப்போது அது மெதுவாக நம்மூரிலும் நிஜமாக தொடங்கியிருக்கிறது.இதோ பாருங்கள் சில நம்மூர் வியாபாரிகள் வலையுலகிலும் கடை விரித்து வியாபாரத்தை தொடங்கியிருக்கிறார்கள்.குறைந்தது தங்கள் இருப்பையாவது காண்பித்திருக்கிறார்கள்.
போத்தீஸ் http://www.pothys.com
ஆரெம்கேவி http://www.rmkv.com
ஜெயசந்திரன் http://www.jeyachandran.com
பிரின்ஸ் ஜுவல்லரி http://www.princejewellery.com
சென்னை சில்க்ஸ் http://www.thechennaisilks.com
சரவண பவன் http://www.saravanabhavan.com
குமரன் சில்க்ஸ் http://www.kumaransilks.net
நல்லி http://www.nalli.com
மேதா ஜுவல்லரி http://www.mehtajewellery.com
தொலைந்து போனவை
பீமா ஜூவல்லரியின்- Bhima Jewellery-யின் www.bhima.com எங்கேயோ அழைத்து செல்கிறது.
Nathella Sampath chetty-யின் www.nathella.com விலைக்கு இருக்கிறது.ஏகப்பட்ட காசுக்கு.
NaiduHall நாயுடுகாலின் டொமைன் பெயர் காப்பிரைட் விவகாரத்தில் சிக்கி இப்போது தான் மெதுவாக மீள்கிறது போலும்.
சரவணாஸ்டோர்ஸை காணவே காணோம்.
கோடிக்கணக்கில் விளம்பர முதலீடு வானொலி,தொலைகாட்சிகளில் செய்யும் நம்மூர் வணிக முதலைகள் எப்போது இணைய நெடுஞ்சாலையில் நுழைவார்களோ?
Tuesday, August 22, 2006
இலவச சிடி கீ ரீடர்
CD Key Reader - இதை குறுந்தகடின் சாவி படிப்பான் எனலாமா? - சரி போகட்டும்- எப்போதோ உங்கள் கணிணியில் நீங்கள் நிறுவியிருந்த எதாவது மைக்ரோசாப்ட் மென்பொருளின் CD key மறந்து விட்டதா? இப்போது அது உங்களுக்கு தெரிந்தாக வேண்டுமா? .கவலையை விடுங்கள் .இதோ ஒரு சிறு இலவச மென்போருள் அந்த CD Key-யை விண்டோஸ் ரெஜிஸ்டிரியிலிருந்து தேடி கண்டு பிடித்து உங்களுக்கு அளிக்கிறது.ஆமாம் No installtion required.இப்போதைக்கு இந்த சிடி கீ ரீடர் மைக்ரோசாப்ட் தயாரிப்புகளுக்கு மட்டுமே பொருந்துகிறதாம்.
Utility to read registration keycodes from the registry.
Utility to read CD keys from the registry.
http://www.skaro.net/cd-keyreader/index.html
Thursday, August 17, 2006
உங்கள் போட்டோக்களை இனி இலவசமாக 3D ஆக்கலாம்
இப்போது 3D பார்வையில்- அதாங்க முப்பரிமாண பார்வையில்- போட்டோ வைத்துக்கொள்வது மிக எளிதாகிவிட்டது.தொடர்ச்சியாய் குறிப்பிட்ட பொருளை/நபரை சுற்றி வந்து உங்கள் டிஜிடல் கேமரா வழி சில படங்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.(பாய்ஸ் படத்தில் ஷங்கர் அந்த பாட்டுக்கு கதாநாயகன்,நாயகியை சுற்றி சுற்றி எடுப்பாரே,அப்படி).கீழ்கண்ட இணையதளம் போய் மிக எளிதாக ஆன்லைனில் அப்பொருளுக்கு/நபருக்கு 3D வியூ படம் உருவாக்குங்கள்.தனிப்பட்ட உபயோகத்துக்கு இச்சேவை இப்போது இலவசமாம்.முயற்சித்து பாருங்கள்.
Convert Digital Photos to 3D for Free
http://www.picturecloud.com
Wednesday, August 16, 2006
கணிணி சான்றிதழ் தேர்வுகள் படும்பாடு
Computer certification exams எனப்படும் கணிணி சான்றிதழ் தேர்வுகளின் நம்பக நிலை இன்று பரிதாபகரமாக நிலையில் உள்ளன.இங்கு நான் குறிப்பிடுவது சிசிஎன்ஏ,சிசிஐயி,ஏப்ளஸ்,எம்சிஎஸ்சி எனப்படும் (முறையே CCNA ,CCIE ,A+ ,MCSE) கணிணி படிப்புகளை.மறைந்து மறைந்து நடந்துவந்த தேர்வு மைய கோல்மால்கள் மறைந்து போய் இங்கே உங்களுக்காக தேர்வு எழுத ஒரு கும்பல் வலையுலகில் வலை விரித்து காத்து இருக்கிறார்கள்.காசு மட்டும் கொடுங்கள்,மிச்சமெல்லாவற்றையும் அவர்களே பார்த்து கொள்கிறார்கள்.No study,No exam -Your best way to be professional என்கிறார்கள்.கீழேகொடுத்துள்ள சுட்டியை சொடுக்கி பாருங்கள்.அதில் லைவ் சப்போட் வேற.கலிகாலம் டோய்!!
http://www.certcampus.com
Tuesday, August 15, 2006
இலவச வீடியோ எடிட்டர்கள்
நீங்கள் எடுக்கும் வீட்டு காம்காடர் வீடியோக்களில் புகுந்து விளையாட விருப்பமா?.கிடைக்கும் வீடியோ சிடிக்கள்,பாடல் கிளிப்புகள், mp3-கள் மற்றும் உங்கள் போட்டோக்களை கலந்தடித்து டாக்குமென்டரி அல்லது வீட்டுவீடியோ செய்ய விருப்பமா?.காசுகொடுத்து வாங்க அநேக வீடியோ எடிட்டர்கள் இருக்கையில் இதோ சில இலவச வீடியோ எடிட்டர்கள் உங்களுக்காக.
Free video editor.
http://sourceforge.net/projects/virtualdub
http://www.virtualdub.org/
http://milafat.free.fr/vdfilters.htm
UPDATED: Some More
TMPGEnc
One of the best MPEG video encoders, convert to MPEG2 (SVCD, DVD) and MPEG1(VCD) with several settings and filters. Freeware MPEG1(VCD) encoding. Also basic joining, splitting, demultiplexing and multiplexing features.
http://www.tmpgenc.net/en/e_main.html
Mpg2Cut2
Fault Tolerant, GOP level, binary editor for basic cutting of Mpeg2 Program Stream files(DVD, SVCD, HDTV, DTV, TS). Handles very large files (64bit) captured from Digital Television broadcasts (DTV), including High Definiton (HDTV).
http://www.videohelp.com/download/mpg2cut2_6602_libmmd_mpalib.zip
MPEG2Cut
Simple MPEG2/DVD/SVCD Cutter.
http://www.videohelp.com/download/MPEG2Cut.zip
Cuttermaran
Cuttermaran is a cut program for MPEG1 or MPEG2 video streams. The streams can be cut without recalculation. The asynchronous between audio and video will be minimized. Requires demultiplexed/splitted video and audio streams, demux MPGs with tmpgenc->mpeg tools or ProjectX. Requires Microsoft .NET Framework(free).
http://www.free-codecs.com/Cuttermaran_download.htm
AviDemux
Video editor and encoder. It can edit, encode, requantize MPG, MP4, AVI. Very much like VirtualDub, but can also encode to VCD/SVCD/DVD mpg.
http://www.free-codecs.com/AviDemux_download.htm
Sunday, August 06, 2006
எங்கிருந்தாலும் விடமாட்டேன்
தலைப்பை பார்த்து பயந்துவிடவேண்டாம்.ஆனால் இது உண்மை.நீங்கள் எங்கு இருந்தாலும் விடமாட்டேன் என்கிறது இந்த மென்பொருள். "நீங்கள் எங்கிருந்து ஜாலியாக இவ்வாறு இணையத்தை மேய்ந்து கொண்டிருக்கிறீர்கள் என எனக்குத் தெரியும்" என இம் மென்பொருள் சொல்கிறது.கீழ்கண்ட சுட்டியை சொடுக்கி உலக வரைபடத்தின் வலது மேல் கோடியில் இருக்கும் View -வை தேர்ந்தெடுத்து Show Yourself-ஐ சொடுக்குங்கள்.நீங்கள் எங்கிருந்து வலைகிறீர்கள் என அப்பட்டமாக அது காட்டிக்கொடுத்துவிடும்.இந்த யூதாஸ் உங்கள் இருப்பிடத்தின் மேப் மற்றும் சேட்டலைட் பார்வைகளை காட்டிவிடுகின்றான்.காலம் கலியுகங்கோ,இணையமும் ஒரு "விடாது கருப்பு"த்தான் போலும்.
http://forums.digitalpoint.com/usermap.php
Thursday, August 03, 2006
கூரையில்(ன்) நேரம்
படுத்து இருந்தவாறே மணிபார்க்க வசதியாக கூரையில் சரியான நேரத்தை புரஜெக்ட் செய்து காட்டும் கடிகாரங்கள் மார்க்கெட்டில் வந்துள்ளன.கண்ணை திறந்து கூரையை பார்த்தால் போதும்.நேரம் தெரிகிறது.கூட கொஞ்சம் செலவு செய்தால் அது உள்அறை,வெளிஅறை வெப்பநிலையையும் கூரையில் காட்டுகிறது.ரேடியோ அலை வழி தொடர்புகொண்டு இக்கடிகாரங்கள் நேரத்தை தன்னைதானே சரிபடுத்திக்கொள்ளுமாம் இந்த அட்டாமிக் கிளாக்.அலாரத்துடன் வரும் இக்கடிகாரங்களின் விலை மிக அதிகம் என சொல்லமுடியாது.பரிசளிக்க நல்ல தெரிவு.சிலவை தட்பவெப்பநிலை முன்னறிவிப்பும் கூட செய்கிறது என்பது கூடுதல் தகவல்.
Projection alarm atomic clock.Best gift.
http://www.atomic-clocks.com/atprojcloc.html