உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, November 29, 2007

மூக்கு பிடிக்க தின்னலாம்

இதை எழுதும் போது தன் கணவனிடம் "நான் நல்லா சமைப்பேன்,..நல்லா சாப்பிடவும் செய்வேன்"-னு சொல்லி வெட்கப்படும் டி.வி கமெர்சியல் புதுமணப்பெண் தான் நினைவுக்கு வருகின்றாள். ஆனால் நிஜம் பின்னோக்கி போய்க் கொண்டிருக்கிறது. சமையலறையை சோதனை கூடமாக்கி பார்க்க விரும்புவோருக்கு இங்கே சில சமையல் மென்புத்தகங்கள் இறக்கத்துக்காக.

To download these Tamil Recipe pdf ebooks please Right click the word Download and select "Save Target As"

Download 30 வகை வறுவல் கலைச்செல்வி சொக்கலிங்கம் 30 varities - Varuval-Kalai Selvi Chokalingam

Download 30 வகை வெரைட்டி ரைஸ் ரேவதி சண்முகம் 30 varities - Varity Rice-Revati Sanmugam

Download 30 வகை தக்காளி சமையல் 30 varities - Tomato Recipes-Revati Sanmugam

Download 30 வகை சூப்பர் டிபன் வசந்தா விஜயராகவன் 30 varities - Tiffin-Vasantha Vijayaraghavan

Download 30 வகை இனிப்பு உருண்டை 30 varities - Sweet Balls Inippu Urundai-Revati Sanmugam

Download சர்க்கரை நோயாளிகளுக்கு 30 வகை ஸ்வீட் & ஸ்நாக்ஸ் 30 varities - Sweet and Snacks for Sugar Patients-Shanthi-Vasantha

Download 30 வகை சூப் 30 varities - Soup-Revati Sanmugam

Download 30 வகை சேமியா உணவுகள் 30 varities - Semiya Recipes-Revati Sanmugam

Download 30 வகை கிழங்கு சமையல் வள்ளியம்மை பழனியப்பன் 30 varities - Root-Kizhangu Recipes-Valliyammai Palaniyappan

Download 30 வகை ரசம் சாந்தி விஜய கிருஷ்ணன் 30 varities - Rasam-Shanthi Vijaya Krishnan

Download 30 வகை பொரியல் 30 varities - Poriyal-Vanaja Subramanian

Download 30 வகை பூரி சந்திரலேகா ராமமூர்த்தி 30 varities - Poori-Santhraleka Ramamoorthy

Download 30 வகை பொடி சாந்தி-ராசலட்சுமி 30 varities - Podi-Shanthi-Rasalakshmi

Download 30 வகை பாயாசம் ரேவதி-ராஜேஸ்வரி 30 varities - Payasam-Revati-Rajeshwari

Download 30 வகை பருப்பு மசியல் 30 varities - Paruppu Masiyal-Vasantha Vijayaraghavan

Download 30 வகை பச்சடி 30 varities - Pachadi-Revati Sanmugam

Download 30 வகை பச்சடி வனஜா சுப்ரமணியன் 30 varities - Pachadi-Vanaja Subramanian

Download 30 வகை மாங்காய் மாம்பழ சமையல்கள் 30 varities - Mango Recipes-Shanthi Vijaya Krishnan

Download குறைவான எண்ணெயில் சுவையான 30 வகை சமையல்கள் 30 varities - Less Oily Items-Revati Sanmugam

Download 30 வகை குழம்பு 30 varities - Kuzhambu II-Revati Sanmugam

Download 30 வகை கூட்டு 30 varities - Kootu-Shanthi Vijaya Krishnan

Download 30 வகை கஞ்சி ராஜம் முரளி 30 varities - Kanji-Rajam Murali

Download 30 வகை இட்லி 30 varities - Idly-Revati Sanmugam

Download 30 வகை ஐஸ் டிஷ் 30 varities - Ice Dish-Valliyammai Palaniyappan

Download 30 வகை ஐஸ் கிரீம் 30 varities - Ice Cream-Vasantha Vijayaraghavan

Download 30 வகை அழகு தரும் உணவுகள் 30 varities - Healthy and Beauty Foods-Rajam Murali

Download பழங்களில் 30 வகை உணவுகள் 30 varities - Fruit Dishes-Revati Sanmugam

Download 30 வகை முட்டை சமையல் 30 varities - Egg Recipes-Kalai Selvi Chokalingam

Download 30 வகை தோசை 30 varities - Dosa-Valliyammai Palaniyappan

Download 30 வகை பருப்பு உணவுகள் 30 varities - Dal Recipes-Revati Sanmugam

Download 30 வகை சப்பாத்தி 30 varities - Chappati-Revati Sanmugam

Download 30 வகை போண்டா வடை 30 varities - Bonda Vadai-Revati Sanmugam

Download 30 வகை பிரியாணி 30 varities - Biriyani-Kalaiselvi-Revati

Download 30 வகை பஜ்ஜி பக்கோடா 30 varities - Bajji and Bakoda-Revati Sanmugam

Download 20 வகை தோசை 20 varities - Dosa-Shanthi Vijaya Krishnan

ஈபுத்தகங்கள் உபயம் தமிழ்நெஞ்சம்


Email PostDownload this post as PDF

Wednesday, November 28, 2007

உலக அளவில் ஒரே கரன்சி

Globalization அதாவது உலகமயமாக்கலின் தாக்கம் இன்று எல்லாராலுமே உணரப்படுகின்றது. வால்ஸ்டிரீட்டின் நெளிவு சுழிவுகள் உலக பங்குசந்தைகளில் எதிரொலிக்கின்றன. ஈரானில் போர் மேகம் சூழ்ந்தால் சீனாவில் பெட்ரோல் விலை ஏறுகின்றது. அமெரிக்காவில் Day Light Saving Time மாற்றப்பட்டால் சென்னையில் கால் சென்டரில் வேலை செய்யும் மனோஜ் சீக்கிரமாக வேலைக்கு போக வேண்டியுள்ளது. இப்படி வீடுவரை குடிவந்துள்ள உலகமயமாக்கல் பாதி கிணறே தாண்டியுள்ளதால் தாம் இன்றைய உலக எக்கானமி தடுமாறுகின்றது என்கின்றது ஒரு ஆய்வு. அதாவது இன்று Economic imbalance, Economic instability பிரபலமான வார்த்தைகள்.

இதற்க்கெல்லாம் தீர்வு அரைவேக்காட்டு தனமாய் உள்ள உலகமயமாக்கலை முழுதாக்க வேண்டுமாம். அதாவது ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து யூரோ எனும் கரன்சி கொண்டு வந்துள்ளார்கள். அரபு நாடுகளும் இது போன்ற ஒரு பொது கரன்சிக்கு தயாராகின்றார்கள். ஏன் தெற்காசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் உட்பட சில நாடுகள் சேர்ந்து பொது கரன்சி உருவாக்கவும் திட்டம் போட்டுள்ளன. அமெரிக்காவும் கனடாவும் மெக்ஸிகோவும் இணைந்து North American Union- என "The Late Great U.S.A" உருவாக்கி அதில் பொது கரன்சி உலவ விட திட்டங்கள் உள்ளன.

இந்த போட்டிகளையெல்லாம் விட்டு விட்டு பேசாமல் உலக அளவில் ஒரு பொது கரன்சி உருவாக்கி, அதற்கொரு உலக ரெசர்வ் பாங்க் உருவாக்கினால் பெரும்பாலான தலைவலிகள் தீரும் என்கின்றார்கள் பெரும்பாலானோர். இதைத்தான் Single Global Currency.org-ம் வலியுறுத்துகின்றார்கள். 2025-க்குள் உலக அளவில் ஒரு பொது கரன்சி கொண்டு வருவது தான் இவர்கள் நோக்கம். பலரின் விருப்பமும் அதுதான்.முன்னாள் U.S Federal Reserver Chair Paul Volcker இவ்வாறாக கூறினார் "A global economy requires a global currency."

உலக பொது கரன்சியானால் உலகில் அனைவருக்கும் சம்பளம் ஒரே கரன்சியில் வழங்கப்படுவதால் ஏற்றத்தாழ்வுகள் வெகுவாக குறையும். பெரும்பாலான பொருளாதார குளறுபடிகள் சரியாகும் என நம்புகின்றார்கள்.

அப்படியே உலக அளவில் ஒரு பார்லிமெண்ட் அமைத்து உலகளாவிய அரசு ஒன்றும் ஆட்சி செய்தால் பிரச்சனையே இருக்காது போங்க.


"முல்லாவின் கதைகள்" தமிழில் மென்புத்தகம் Mulla Stories In Tamil ebook Download. Right click and Save.http://static.scribd.com/docs/8qmttjfktf5so.pdf
நன்றி தமிழ்நெஞ்சம்


Email PostDownload this post as PDF

Tuesday, November 27, 2007

மீண்டும் தமிழ்

விண்டோஸ் நோட் பேடில் (Windows Note Pad) அல்லது நேரடியாக வலைப்பூவில் எப்படி தமிழில்எழுதலாம் என கடந்த பதிவொன்றில் சொல்லி இருந்தேன். Rajesh RV, Mani Kumar மற்றும் Srikanth போன்றோர் கூகிளின் Indic Transliteration பற்றி குறிப்பிட்டிருந்தார்கள். இது போன்ற Web based தீர்வுகள் தரும் jaffnalibrary, quillpad என பல தளங்கள் பற்றி கேள்வி பட்டிருக்கின்றேன். உபயோகமும் படுத்தி இருக்கின்றேன். ஆனால் கூகிளும் அதை வழங்கும் செய்தி எனக்கு புதிது.

ம்..தினமும் புதுசு புதுசாய் கற்றுக்கிறோம்.இங்கு ராஜேஷ் சொன்னது போல தமிழில் எழுதும் போது drop down menu for possible tamil word வழங்குவது which is really good. நோட்பேடில் சிறிது சிறிதாய் தமிழில் எழுதி சேமிப்பது போல் இந்த Web based தீர்வுகளில் முடிவதில்லை என்பது இப்போதைக்கு சிறிய குறை. சீக்கிரத்தில் அதுவும் மாறிவிடலாம்.

நண்பர் Madasamy Windows 98-ல் தமிழ் சரியாய் தெரியவில்லை என்றிருந்தார்.
Please try this.
You have Windows 98 and Windows 2000/ME With IE 6.0 and If you face any problem to view tamil fonts, then do the following steps.

Steps:

Make sure you have Internet Explorer 6.0 or above on your computer.

Download Tamil unicode font Latha from the following link.
Download latha.ttf
Install downloaded unicode font
1.On windows Click Start > Settings > Control Panel > Fonts
2. On Fonts window click Files > Install New Fonts...
3. Select the path to the downloaded file and then click Ok button.

4. Or you can right Click on the above link and select 'Save target as' and save the fonts in 'C:\WINDOWS\Fonts' directory for windows 98/ME or 'C:\WINNT\Fonts' directory for Windows 2000.


Krishnamurthy ekalappai vs Vista பிரட்சனை பற்றி கேட்டிருந்தார்.

Can i Use the same way in windows Vista operating system to write in Tamil,I did not have any problem in windows xp but windows vista I was not able to use the key board same as ekalappai UNI tamil, its always taking tamil net key board.

நான் இன்னும் விஸ்டா பயன் படுத்த தொடங்கவில்லை சார். தேடிக்கொண்டிருக்கின்றேன்.

Amatuer Yogi இப்படியாக கேட்டிருக்கிறார்.
May i know y u have removed my comment pkp. Any concerns??? .Just wanted to know.......

அப்படியெல்லாம் இல்லீங்கோ. நல்லா பார்த்தீங்களா சார்..உங்கள் கேள்விக்கு பதிலும் கொடுத்திருந்தேனே. :)


பி பெர்சிவலின் "6000 தமிழ் பழமொழிகள்" ஆங்கில மொழிபெயர்ப்போடு மென்புத்தகம் P Percival 6000 Tamil Proverbs with English Translation e-book Download. Right click and Save.P Percival 6000 Tamil Proverbs with English Translation .pdf


Email PostDownload this post as PDF

Monday, November 26, 2007

அழிக்க அன்லாக்கர்

எனக்கு தெரிந்தவரை ஆக்குதல் தான் ரொம்பவும் கடினம். அழித்தல் மிக எளிது. ஆனால் சில சமயங்களில் கணிணி உலகு அப்படி இருப்பதல்ல. சில கோப்புகளை அழிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். Cannot delete file: Access is denied அல்லது The source or destination file may be in use அல்லது There has been a sharing violation போன்ற வார்த்தைகளால் நச்சல் கொடுக்கும். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பெரும்பாலும் அக்குறிப்பிட்ட கோப்பானது அச்சமயத்தில் இன்னொரு பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்திருப்பதால் அழிக்கமுடியாதிருந்திருக்கலாம். இது போன்ற சமயங்களில் உதவ வருவது தான் Unlocker எனும் மென்பொருள். இந்த இலவச மென்பொருள் அக்கோப்புகளை அது மாதிரி பணிகளிலிருந்து விடுவிப்பதால் அழிக்கமுடியா கோப்புகளையும் எளிதாக அழிக்கலாம். தேவைப்படும்போது முயன்று பாருங்கள்.

Product Homepage
http://ccollomb.free.fr/unlocker/

Download Link
http://ccollomb.free.fr/unlocker/unlocker1.8.5.exe

1. Simply right click the folder or file and select Unlocker
2. If the folder or file is locked, a window listing of lockers will appear
3. Simply click Unlock All and you are done!
4. Now you can delete the file.


"வாசிங்டனில் திருமணம்" சாவி-யின் நகைச்சுவை காவியம் மென்புத்தகம் Washingtonil Thirumanam Chavi Tamil Novel e-book Download. Right click and Save.
Chavi Washingtonil Thirumanam.pdf
நன்றி: தமிழ்நெஞ்சம்


Email PostDownload this post as PDF

Thursday, November 22, 2007

தமிழில்..

அடிக்கடி என்னிடம் கேட்கப்படும் ஒரு கேள்வி.நீங்கள் தமிழில் எப்படி எழுதுகின்றீர்கள்? நான் தமிழில் எழுத என்ன செய்ய வேண்டும்? பையர்பாக்ஸ் -ல் தமிழ் ஒழுங்காக தெரிய மாட்டேங்குதே என்ன செய்ய? போன்றன.

இங்கே என் விளக்கங்கள்.

நீங்கள் தமிழில் எப்படி எழுதுகின்றீர்கள்?
ஆரம்பத்தில் Kuralsoft எனும் அழகிய எளிய இலவச மென்பொருள் ஒன்றை தான் பயன்படுத்தி வந்தேன்.இதன் வழி நேராக Notepad-ல் தமிழில் தட்டச்சலாம் அல்லது நேராகவே பிளாகிலேயே தட்டச்சலாம்.பிரச்சனை இல்லாதிருந்து வந்தது. என்னநினைத்தார்களோ சமீபத்தில் அதற்கு விலையை குறித்து விட்டார்கள். தமிழில் எழுத இலவச மென்பொருள்கள் இன்னும் இருப்பதால் அவைகளுக்கு தாவ வேண்டி வந்தது. இப்போது ஈகலப்பை எனும் மென்பொருளை பயன்படுத்துகின்றேன். இந்நேரத்தில் இம்மென்பொருளை இலவசமாய் வழங்கிவரும் தமிழா (Thamizha) குழுவுக்கு நன்றிகள் தெரிவித்துகொள்கின்றேன்.

நான் (அதாவது நீங்கள்) தமிழில் எழுத என்ன செய்ய வேண்டும்?
நீங்களும் தமிழில் Notepad-லோ அல்லது Blog-கிலோ அல்லது Gmail-லிலோ தமிழில் எழுதலாம். முதலில் கீழ்கண்ட சுட்டியிலிருந்து eKalappaiஎனும் மென்பொருளை இறக்கம் செய்து கொள்ளுங்கள்

http://thamizha.com/modules/mydownloads/singlefile.php?cid=3&lid=5

பின் கீழ்கண்ட சுட்டியிலிருந்து கீபோர்டு Tamil unicode .kmx கோப்பை இறக்கம் செய்து அதை ஈகலப்பையில் பயன்படுத்துங்கள்

http://thamizha.com/modules/mydownloads/singlefile.php?cid=3&lid=13

குழப்பமாய் இருக்கிறதா? இதோ படிப்படியாக செய்முறை உங்களுக்காக..

1.eKalappai-யை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவவும். சும்மா Install-யை கிளிக் பண்ணி மற்ற எல்லா வற்றையும் பட்பட்டென கிளிக்கி செல்லவும்.கீழே அந்த ஆரம்ப படம்.

2.eKalappai நிறுவி முடித்ததும் கீழே படத்தில் இடதுகோடியில் காண்பது போல புதிதாய் ஒரு ஐகான் (TavulteSoft Keyman 6.0) உங்கள் கணிணியில் வரும்.

3.அந்த ஐகானை வலது கிளிக்செய்து keyman configuration...-ஐ கிளிக்கவும்.

4.அதிலுள்ள Install Keyboard-யை கிளிக்கி ஏற்கனவே இறக்கம் செய்து வைத்துள்ள NewUniTamil.kmx கோப்பை நிறுவவும்

5.முடிவில் இப்போது மூன்று கீபோடுகள் இருக்கும். அதில் Tamil99UNI,Tamil99Tsc இரண்டிலும் உள்ள டிக் மார்க்கை நீக்கிவிடவும்.UniTamil மட்டும் டிக் இருக்கட்டும்.

6.இப்போது Alt மற்றும் 2 கீகளை சேர்த்து அமுக்கினால் நீங்கள் தமிழில் எழுத தயார். Notepad-யை திறந்து தமிழில் எழுதலாம்.
உதாரணமாய் அம்மா என்பதை ammaa எனவும் ஆசை என்பதை aasai எனவும் டைப்பவேண்டும். இதை Tamil Transliteration என்பார்கள். மீண்டும் Alt மற்றும் 2 கீகளை சேர்த்து அமுக்கினால் ஆங்கிலத்துக்கு போய் விடுவீர்கள்.

பையர்பாக்ஸ் -ல் தமிழ் ஒழுங்காக தெரிய மாட்டேங்குதே என்ன செய்ய?
ஏற்கனவே நண்பர் இலக்கியன் சொல்லிய விளக்கத்தையே இங்கும் தருகின்றேன்.

பயர்பொஸ் உலாவியில் தான் தமிழ் யுனிகோட் பிரச்சனை உள்ளது. அதனை கீழ் கண்டவாறு சீர் செய்யலாம்

1.முதலில் windows XP with Service pack 2 இறுவட்டை CD Drive க்குள் போட்டுக்கொள்ளவும். பின்னர் க்ண்ட்ரோல் பனெலிற்கு போய் Regional & Language Options என்னும் ஐக்கனை கிளிக் பண்ணவும்.

2. அதில் language என்னும் Tab இனை கிளிக் பண்னவும்.

3.அதில் supplemental language supportஏனும் option இல் இரண்டு தெரிவுகள் இருக்கும்
*. install files for complex scripts and right to left language (including Thai)

*install files for east Asian languages

இதில் முதலாவதை தெரிவு செய்த பின்பு apply button ஐ சொடுக்கினால் வின்டோஸ் எக்ஸ்பி சீடியிலிருந்து தமிழ் யுனிகோட்டுக்கு தேவையான விபரங்களை தானாகவே அது பதிவு செய்து கொள்ளும். பின்பு கணினியை மீள ஆரம்பிக்கவும்.

அவ்வளவு தான்


"சுஜாதாவின் சிறுகதைகள் தொகுப்பு" தமிழில் மென்புத்தகம். தொகுத்தவர்: பிரதீப் குமார் திருமலை அரசன் "Sujatha Short Stories Collection" Tamil e-book Download Compiled by Pradeep Kumar Tirumalai Arasan. Right click and Save.http://static.scribd.com/docs/f5se8xfsjb6v4.pdf
உபயம் : தமிழ்நெஞ்சம்


Email PostDownload this post as PDF

Wednesday, November 21, 2007

பெருசு சொன்னது


ஜாதி, மத பேதங்களை கடந்து இந்திய அளவில் எனக்கு மிகப் பிடித்தமான மனிதர் டாக்டர் அப்துல்கலாம் அவர்கள். உலக அளவில் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

ஐன்ஸ்டீன் தன் மரணப்படுக்கையிலும் கடைசி நொடிவரை கணக்குகளாய் போட்டுத்தள்ளிக் கொண்டிருந்தார் என்பார்கள். அவர் மூளையை ஆராய ஆர்வம் கொண்ட Dr.Thomas Harvey ஐன்ஸ்டீனின் மரணத்துக்கு பின் திருட்டுத் தனமாய் அவர் மூளையை எடுத்து வைத்துக்கொண்டாராம். இன்றும் அது Princeton Hospital Pathology lab-ல் இருக்கின்றது.

ஐன்ஸ்டீனின் வார்த்தைகள் பொதுவாய் நகைச்சுவையும் அர்த்தமும் செறிந்ததாய் இருக்கும். இங்கே சில உதாரணங்கள். எளிய தமிழில்.

ஐன்ஸ்டீன் சொல்கிறார்.....

எனக்கென தனித் திறமைகள் எதுவும் கிடையாதப்பா. ஆனால் எதையோ ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கின்றேன் என மட்டும் எனக்குத் தெரியும்.

அவ்வப்போது என்னை பைத்தியம் பிடிக்க வைக்கும் ஒரே கேள்வி. நான் பைத்தியமா? இல்லை மற்றவர்களா?

அறிவியல் அற்புதமானது தான். ஆனால் அதுவே பிழைப்பாய் இருக்காதவரை.

ரொம்ப முக்கியமானது என்னவென்றால் கேள்வி கேட்பதை நிறுத்த கூடாது.

கடவுள் முன் நாம் எல்லாரும் சம அளவு அறிவாளிகள்,சம அளவு முட்டாள்கள்.

கற்பனாவளம் அறிவைவிட மிக முக்கியமானதாக்கும்.

A-யை வெற்றி யென நான் கொண்டால் என் சூத்திரம் A = X + Y + Z
அதாவது இங்கு X உழைப்பையும் Y விளையாட்டையும் Z வாயை மூடிக்கொண்டு கம்னு இருத்தலையும் குறிக்கும்.

ஒரே நேரத்தில் யாரும் போருக்கும் சமாதானத்துக்கும் தயாராக முடியாது.

மூன்றாவது உலகப்போரில் எந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமென எனக்கு தெரியாது.ஆனால் நான்காம் உலகப்போரில் கம்புகளும் கல்லுகளும் தான் பயன்படுத்தப்படும்.

ஆகாயமண்டலத்துக்கும் மனிதனின் முட்டாள் தனத்துக்கும் முடிவே இல்லை. முன்னதுக்கு முடிவிருந்தாலும் இருக்கலாம்.

தவறே செய்திராதவர்கள் புதுசாய் எதையும் முயலாதவர்கள் தாம்.

காதலில் விழுதலுக்கெல்லாம் புவி ஈர்ப்புவிசை காரணமாகாதையா.

உலகிலேயே புரிந்து கொள்ள முடியாத ரொம்ப கஷ்டமான ஒன்று இன்கம்டாக்ஸ்.

சிலவை எளிதாயிருக்க வேண்டும் தான். ஆனால் ரொம்ப ரொம்ப எளிதாய் அல்ல.

கடவுள் என்ன நெனைப்பில் இருக்கிறார்னு விளங்கிக்கனும், மற்றவையெல்லாம் விளக்கமாயுள்ளன.

நேரம் என ஒன்றிருக்க காரணம், எல்லாம் ஒரே சமயத்தில் நடக்காததால் தான்.

சூடேறிப்போயிருக்கும் ஓர் அடுப்பில் நீங்கள் ஒரு நிமிடமே கையை வைத்தாலும் அது ஒரு மணிநேரம் போல் தோன்றும். ஆனால் அழகான பெண்ணோடு ஒரு மணிநேரமாய் பேசினாலும் அது ஒரு நிமிடமாய் தான் தோன்றும். அதான் ரிலேடிவிட்டி.

உலகை புரிஞ்சிக்கவே முடியாத காரணம் அதை புரிந்துகொள்ள முடிவதுதான்.

கடவுள் உலகை படைத்த போது அவருக்கு வேறு எதாவது தெரிவு இருந்ததாவென அறிய ஆவல்.

வெற்றிகரமான மனிதனாவதைவிட மதிப்பிற்குரிய மனிதனாதல் வேண்டும்.

உதாரணமாய் வாழ்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்டவேண்டும். அதுவே வழிகாட்ட சிறந்த வழி.

நான் கற்றுக்கொள்ள அதிகம் தொல்லை கொடுப்பது என் கல்வியே.

நிஜம் ஒரு மாயை. ஆனால் பாருங்கள் அதுதான் நிலைத்திருக்கின்றது.

எதிர்காலத்தை பற்றி ரொம்ப யோசிப்பதில்லை. அது சீக்கிரமாய் வந்துவிடுகின்றதே.

-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein)


"ஆ..!" தமிழில் சுஜாதாவின் நவீனம் மென்புத்தகம் Aah..! Sujatha Tamil Novel e-book Download. Right
click and Save.http://static.scribd.com/docs/p2b8hm5gyn77.pdf இப்புத்தக இறக்கம் பற்றி தகவல் தந்த இனிய தமிழ்நெஞ்சத்துக்கு நன்றிகள் பல


Email PostDownload this post as PDF

Monday, November 19, 2007

விதியை மதியால்

என்னுள்ளில் "ஆகா நன்னாருக்கே"னு தோன்றும் செய்திகளையும், தகவல்களையும், கருத்துக்களையுமே மட்டுமே இங்கு அவ்வப்போது சொல்லிவருகின்றேன். இவற்றில் பெரும்பாலும் கணிணி, இணையம் மற்றும் அறிவியல் சார்ந்திருப்பதன் காரணம் அதிலுள்ள சிறு ஆர்வம் தான். தொழில்நுட்ப தகவல்களை தமிழில் எழுதுவதால் எஞ்சினியர்கள் அல்லாதோர்க்கும் இத்தகவல்கள் உபயோகமாயிருக்குமென நம்புவதால் இந்த விஷப் பரீட்சை.ஆனால் சமீபத்தில் அதிலும் மண் விழுந்தது. :) மரக்காணம் பாலாவிடம் சிறிது நேரம் தொலைபேசியில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே நான் எழுதியிருந்த "போலிவெப்சைட்கள்" பதிவை பற்றி மேலும் அறிய விரும்பியிருந்தார். முழு பதிவை படித்தும் ஒன்றும் தனக்கு புரிந்தும் புரியாததும் போல் இருந்தது என்றாக இருந்தது அவர் Feedback.

ஆனால் ஸ்ரீகாந்த் போன்ற இணைய Hack-களை எடுத்து கூறும் நண்பர்களும் என் பிலாகு பக்கம் வருவது ஆச்சர்யமே. இவர் esinps.com-மிலிருந்து MP3-கோப்புகளை எப்படி இறக்கம் செய்வதுவென ஒரு டிப்பை கொடுத்து அசத்தியிருந்தார்.

Nonameboyinusa ஒரு படி மேலே போய் "ஏங்க பி.கே.பி இப்ப இந்த சைட் போலினு தெரியுது, இது மேல கம்ளைன்ட் பன்னினால் இந்த சைட் யாரு பேருல ரெஜிஸ்டர் பன்னிருக்காங்கனு தெரிம்ல...அந்த டீட்டெய்ல்ஸ் வைத்து அவர்கள் மேல் நடவடிக்க்கை எடுக்கமுடியும் தானே? அதே மாதிரி மெயின் ஐ.எஸ்.பி யிடம் சொல்லி அந்த சைட் பிளாக் பன்னமுடியும் தானே?" என கேட்டிருந்தார்.
இங்கே பாருங்கள்.
Law enforcement agencies say these kinds of Internet companies are able to thrive in countries where the rule of law is poorly established. "It is clear that organized cybercrime has taken root in countries that don't have response mechanisms, laws, infrastructure and investigative support set up to respond to the threat quickly," said Ronald K. Noble, secretary general of Interpol, an organization that facilitates transnational law enforcement cooperation. He declined to discuss the Russian Business Network specifically.Link

பல சாராரும் வருகின்றார்கள். புரிந்தாலும் புரியாவிட்டாலும் எனக்கு பிடித்ததை எழுத ஆசை. பார்க்கலாம். எதற்கும் ஒருமுறை இன்னும் தெளிவாய் எழுத முயன்று பார்க்கின்றேன். எப்போதுமே அதிகம் சோசியலாக பழக சிறிது பயம். தமிழ் இணைய உலகின் கருப்பு பக்கங்களையும் கண்டிருப்பதால்.

கொடுக்கப்படும் மென்புத்தகங்கள் அநேகருக்கு பிடிக்கிறது போல் தெரிகிறது. கார்த்திக் பிரபு "enakoru unmai solunga eppadi ellam e books pudikireenga ??"-னு கேட்டிருந்தார். எல்லாம் "கூகிள்"கே வெளிச்சம்.சில ஆடியோ புத்தகங்களுக்கும் சுட்டி கொடுத்துள்ளேன். பிரம்போடு யாராவது வந்தால் எல்லாம் பொட்டுனு போய்விடும். ஆனாலும் டிவி சீரியல் யுகத்தில் இன்னும் தமிழர்க்கு புத்தகங்கள் மேல் உள்ள ஆர்வம் வியப்பைத்தருகின்றது.

Tamilnenjam அவ்வப்போது சும்மா ஸ்பாமாயில்லாமல் பயனுள்ள சுட்டிகளை சொல்லி வருகின்றார்.

நண்பர் Ram PKP சார், எனக்கு ஒரு நல்ல லேப்டாப் பரிந்துரை செய்யுங்கள். பட்ஜெட் $1000 என கேட்டிருந்தார். தாங்க்ஸ்கிவிங் வந்திருக்கு. சொல்லித்தரவா வேணும். :)

Saravana Gopi video to 3gp converter free version கேட்டிருந்தார்.
இதோ http://www.megaupload.com/?d=HOB6VOBO

பலருக்கும் "இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை!" பதிவு பிடித்திருந்ததாம்.
Amatuer Yogi கடைசியாய் கேட்டிருக்கின்றார்.
Hi pkp,
I don't understand the moral of the story. Can u expain it? Nothing happens as we wish. Is this the moral?
கொஞ்சம் யோசித்த பின்பாடு எனக்கு புரிந்தது இதுதான். விதியை மதியால் வென்றுகொண்டேயிருக்க முடியும். ஆனால் ரொம்ப நாளைக்கு அல்ல. கடவுள்னு யாரோ இருக்கின்றான். இல்லையா?!


"தமிழ் மருத்துவம்" தமிழில் மருத்துவ குறிப்புகள் மென்புத்தகம் Tamil Maruththuvam Health Medicine e-book Download. Right click and Save.http://static.scribd.com/docs/7hvefr075xqmg.pdf


Email PostDownload this post as PDF

Friday, November 16, 2007

அப்லோட் அபாயங்கள்

இன்றைய தேதியில் இணையத்திலிருக்கும் இலவச கோப்புகிடங்குகளின் (Free File Storage) எண்ணிக்கை எண்ணற்றவை. உதாரணமாய் www.4shared.com, www.esnips.com போன்றவற்றை சொல்லலாம். 5 Gig வரைக்கும் இலவச ஸ்டோரேஜ் கொடுக்கின்றார்கள். நம் கணிணிகளில் வைத்திருப்பதை விட இவைகளில்
சேமித்து வைத்தால் டேட்டாவும் பாதுகாப்பாய் இருக்கும் கூடவே எங்கிருந்து வேண்டுமானாலும்
இணையம் வழி டேட்டாவை எடுத்துக் கொள்ளலாம் என்பது மிக வசதி.

ஆரம்பத்தில் MP3 மற்றும் இலசவமாய் ஆங்காங்கே கிடைத்த மென்பொருள்கள், மென்புத்தகங்கள், சினிமா கிளாமர் படங்கள், வீடியோ கிளிப்புகளை மட்டுமே சேமித்து வைத்து வந்த நம்மவர்கள்
இப்போது தங்கள் தனிப்பட்ட தகவல்களையும் சேமித்து வைப்பது கவலைக்குரியது. இவற்றில் தனிநபர் மற்றும் குடும்ப அங்கத்தினர்களின் பயோடேட்டாக்கள், சர்டிபிக்கேட் ஸ்கான் நகல்கள், முக்கிய வியாபார மற்றும் வேலை சம்பந்தபட்ட கோப்புகள், குடும்பமாய் எடுத்து கொண்ட போட்டோக்களும் அடுக்கம்.

இவற்றை ஒரே கிளிக்கில் இது போன்ற கோப்புகிடங்குகளில் அப்லோட் செய்துவிட்டு விடுவதால் இத்தகவல்கள் அனைத்தும் அனைவர் கைகளிலும் கிடைக்க வசதியாகிவிடுகின்றது. கேசுவலாய் எடுத்த சில குடும்ப பெண்கள் படங்கள் பொதுநபர் பார்வைக்கு போகின்றது. சிலர் அதை எடிட்டிங் செய்து தவறுதலாய் கூட பயன்படுத்தலாம். சிலர் தங்கள் பாஸ்வேர்ட்களை அழகாய் டைப்பி ஒரு டெக்ஸ்ட் கோப்பில் வைத்து அப்லோட் செய்து வைத்திருக்கின்றார்கள். என்ன கொடுமை பாருங்கள்.

அப்பாய்மெண்ட் ஆர்டர்களையும் ஏன் அமெரிக்க கான்சுலேட்டோடு ஒரு நபர் கொண்ட மொத்த தகவல் தொடர்புகளையும் கூட நான் தவறுதலாய் இக்கிடங்குகளில் காண நேரிட்டது. இத்தனைக்கும் இவர்களில் பலர் சாப்ட்வேர் இஞ்சினியர்கள்.

உதரணமாய் இங்கே கிளிக்கி பாருங்கள்.resume என்ற கீ வார்த்தை கொடுத்து தேடினால் esnips கொடுக்கும் லிஸ்ட் இது.
http://www.esnips.com/_t_/resume

இது லைம்வேர் (Limeware) போன்ற P2P மென்பொருள் வழி கோப்புகள் பறிமாற்றம் செய்பவர்களுக்கும் பொருந்தும்.இவர்கள் தெரியாத்தனமாய் தங்கள் கணிணியின் மொத்த டிரைவையுமே உலகுக்கு ஷேர் செய்திருக்க வாய்ப்புண்டு.

So தீர்வுதான் என்ன? இது போன்ற கோப்புகிடங்குகளில் சேமிக்கும் போது Private எனும் கட்டத்தை கண்டிப்பாய் டிக்குங்கள். Public கட்டம் திறந்தே இருக்கட்டும் அல்லது Do not share போன்ற வசதிகள் இருக்கிறதாவென பாருங்கள். இப்படி பட்ட வசதிகள் இல்லாவிட்டால் அக்கிடங்குகளுக்கு முழுக்கு போடுதல் நலம்.

Peer 2 Peer-அப்ளிகேசன்களிலும் எந்த டிரைவ் அல்லது எந்த ஃபோல்டர் வெளிஉலகுக்கு திறந்திருக்கிறதுவென கட்டாயமாய் தெரிந்திருத்தல் நல்லது. Anyway Have a Happy File sharing!!


"புதிய ஏற்பாடு" தமிழ் வேதாமம் ஆடியோ புத்தகம் MP3 வடிவில். Tamil Bible New Testment MP3 Audio Book
Click here to download.


Email PostDownload this post as PDF

Wednesday, November 14, 2007

தங்கத்தை நம்பி

பங்கு சந்தைகள் தோன்றி மியூச்சுவல் பண்ட்கள் தோன்றா காலத்தே முன் தோன்றிய முதலீட்டு முறை நம் ஊரில் தங்கத்தில் முதலீடு செய்யும் முறை. நம் பாரம்பரியத்தில் ஊறிப்போன "பண்டிகைக்கு தங்கம் வாங்குதல்" பழக்கம் அக்காலமிருந்தே குடும்பத்தில் சேமிப்புக்கு வழிகோலிவிட்டது. அதனாலேயே "மண்ணிலும் பொன்னிலும் போட்ட காசு வீணாகாது" என சொல்லித் தந்தர்.

இன்றைக்கும் தங்கத்தில் முதலீடு செய்தல் ஒரு பாதுகாப்பான முதலீடு முறையாக கருதப்படுகின்றது. பொருளாதார நிகழ்வுகள் காகித பணமெல்லாம் வெறும் வெத்துவேட்டுத்தான் என அடிக்கடி நினைவூட்டுகின்றன. அநியாயத்துக்கு கரன்சிநோட்டுகளை அச்சடித்து தள்ளுவதால் இந்த அபாயம் இனியும் தொடரவே செய்யும்.ஆக Paper money is fraud என்கின்றார்கள். அமெரிக்காவிடம் இப்போதைக்கு இருக்கும் தங்கஇருப்பின் அளவு 261மில்லியன் அவுன்ஸ்கள். ஆனால் அது உலவ விட்டிருக்கும் பேப்பர் பண அளவோ $12 trillion டாலர்கள். அதாவது தங்கம் அவுன்ஸ் ஒன்றின் மதிப்பு $45,977. வாவ்!!!

கடந்த சில வருடங்களில் தங்கத்தில் மதிப்பு ஏறக்குறைய இரட்டிப்பாய் உயர்ந்திருக்கின்றது. ஆனால் ரியல் எஸ்டேட் மற்றும் பங்கு சந்தை வழி பணம் பண்ணி ருசி கண்டோர்க்கு இது சரியான முதலீட்டு வழியாய் படாது தான். ஆனாலும் கரன்சியாய் வைத்திருப்பதற்கு இது தேவலாம்.

இப்போதெல்லாம் தங்கத்தை கட்டியாய் பீரோவில் வைத்திருக்க வேண்டியதில்லையே. ஈகோல்டுகாரர்கள் (e-gold) அதை உங்களுக்காக டிஜிட்டலாய் வைத்திருக்க தயாராய் இருக்கின்றார்கள். நீங்கள் Gold-ஐ egold-ஆய் வாங்கி அக்கவுண்டில் வைத்திருக்கலாம். இன்றைய விலைக்கு வாங்கி அப்புறமாய் நாளைய விலைக்கு விற்கலாம். அவர்கள் அந்த ஈதங்கத்தை நிஜதங்கமாய் வைப்பு வைக்கின்றார்கள். இந்த ஏப்ரலில் மட்டும் இப்படியாய் அவர்களிடம் பலரின் தங்கங்கள் 3,492 கிலோவாய் இருப்பு இருக்கின்றதாம். ஈகோல்டில் நுழையுமுன் உங்களுக்கு இது சரிப்பட்டு வருமாவென சிறிது ஆய்வு செயல் நலம்.
http://www.e-gold.com/


"அர்த்தமுள்ள இந்து மதம்" தமிழ் ஆடியோ புத்தகம் கவிஞர் கண்ணதாசன் குரலில். Kavijar Kannadasan Arthamulla Hindu Matham Tamil MP3 Audio Book
Click here to download.


Email PostDownload this post as PDF

Tuesday, November 13, 2007

இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை!

நான் பார்த்தவரையில் உலகத்தில் உள்ள அத்தனை பேரும், மொழி மாறினாலும் அர்த்தம் மாறாமல் துயரத்துடன் எழுப்புகிற கேள்வி -ஆண்டவன் எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டங்களைக் கொடுக்க வேண்டும் ?

இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்படும்போதெல்லாம் புத்த மதத்தினர் சொல்கிற ஒரு சின்னக் கதையை நான் அவர்களுக்குச் சொல்லுவது வழக்கம்.

அது ஒரு கிராமம்... சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடப் போகிறான். அப்போது என்னைக் காப்பாற்று ! காப்பாற்று ! என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில் வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாகக்கதறுகிறது. உன்னை வலையிலிருந்து விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடுவாய். நான் மாட்டேன் ! என்று முதலையைக் காப்பாற்ற மறுக்கிறான் சிறுவன். ஆனால் முதலை, நான் உன்னைச் சத்தியமாகச் சாப்பிடமாட்டேன் ! என்னைக் காப்பாற்று ! என்று கண்ணீர்விடுகிறது.

முதலையின் பேச்சை நம்பி சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான்... சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது. பாவி முதலையே... இது நியாயமா ? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க... அதற்கென்ன செய்வது ? இதுதான் உலகம்... இதுதான் வாழ்க்கை ! என்று சொல்லிவிட்டுச் சிறுவனை விழுங்க ஆரம்பித்தது முதலை. சிறுவனுக்குச் சாவது பற்றிக்கூட கவலை இல்லை. ஆனால், நன்றிகெட்டதனமாக அந்த முதலை சொன்ன சித்தாந்தத்தைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

முதலையின் வாய்க்குள் மெள்ளப் போய்க் கொண்டிருக்கும் சிறுவன், மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான் - முதலை சொல்வது மாதிரி... இதுதான் உலகமா ? இதுதான் வாழ்க்கையா ? அதற்குப் பறவைகள், எவ்வளவோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் கூடுகட்டி முட்டையிடுகிறோம்... ஆனால், அதைப் பாம்புகள் வந்து குடித்துவிட்டுச் சென்றுவிடுகின்றன... அதனால் சொல்கிறோம், முதலை சொல்வது சரிதான் !

ஏரிக்கரையில் மேய்ந்து கொண்டிருக்கும் கழுதையைப் பார்த்து சிறுவன் அதே கேள்வியைக் கேட்கிறான்...

நான் இளமையாக இருந்த காலத்தில் என் எஜமான் அழுக்குத் துணிகளைச் சுமக்க வைத்து என்னைச் சக்கையாகப் பிழிந்தெடுத்தான். எனக்கு வயதாகி நடை தளர்ந்துபோனபோது எனக்குத் தீனி போட முடியாது என்று சொல்லி என்னைத் துரத்திவிட்டான். முதலை சொல்வதில் தப்பே இல்லை. இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை ! என்றது கழுதை.

சிறுவனால் அப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ! கடைசியாக ஒரு முயலைப் பார்த்து சிறுவன் இதே கேள்வியைக் கேட்கிறான். இல்லை ! முதலை சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை ! முதலை பிதற்றுகிறது என்று முயல் சொல்ல... முதலைக்குக் கோபம் வந்து விட்டது. சிறுவனின் காலைக் கவ்வியபடியே வாதாடத் தொடங்கியது. ஊஹூம்! சிறுவனை வாயால் கவ்விக்கொண்டே பேசுவதால் நீ சொல்வது எனக்குச் சரியாகப் புரியவில்லை என்றது முயல்.

பெரிதாகச் சிரித்த முயல் புத்தியில்லாத முதலையே ! உன் வாலின் பலத்தைக் கூடவா நீ மறந்துவிட்டாய் ? சிறுவன் ஓட முயற்சித்தால் வாலால் அவனை ஒரே அடியில் உன்னால் வீழ்த்திப் பிடித்துவிட முடியுமே. என்று நினைவுபடுத்த... முதலையும் சிறுவனை விடுவித்துவிட்டுப் பேசத் துவங்கியது. அப்போதுதான் முயல் சிறுவனைப் பார்த்து நிற்காதே ! ஓடிவிடு ! என்று கத்த.. சிறுவன் ஓடுகிறான்.

முதலை, சிறுவனை வீழ்த்த வாலை உயர்த்திய போதுதான் அதற்கும் ஒன்று புரிந்தது. வலையிலே சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை விழுங்கத் துவங்கியது. அதன் நினைவுக்கு வந்தது ! சிறுவன் தப்பி ஓடிவிட்டான் அப்போது கோபத்தோடு தன்னைப் பார்த்த முதலையிடம் முயல் புன்னகையுடன் சொன்னது - புரிந்ததா... இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை !

சிறிது நேரத்துக்கெல்லாம் தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்து வர... அவர்கள் முதலையைக் கொன்றுவிடுகிறார்கள். அப்போது சிறுவனோடு வந்த ஒரு நாய் அந்தப் புத்திசாலி முயலைத் துரத்தி... சிறுவன் பதறி ஓடிச்சென்று தடுப்பதற்குள் கொன்றுவிடுகிறது..சிறுவன் பெருமூச்சு விடுகிறான். இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை என்று சமாதானம் ஆகிறான்.

வாழ்கையின் அநேக விஷயங்களை நம்மால் முழுக்க புரிந்துகொள்ள முடியாது ! என்று இந்து மத ரிஷிகள் சொன்னதைத்தான் புத்தமதமும் சொல்கிறது.
..............
.......
....
..

இப்படியாய் போகின்றது சுவாமி சுகபோதானந்தாவின் (Swami Sukhabodhananda) "மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்" புத்தகம். இப்புத்தகம் இப்போது ஆடியோ வடிவிலும் (MP3) கிடைப்பது மிக அருமை. நிழல்கள் ரவி தன் சொந்த குரலில் இந்த புத்தகத்தை ஒலி வடிவாக்கியிருக்கின்றார்.

Download Manase Relax Please Audio Book in MP3 Format here

http://www.megaupload.com/?d=XRKHAQ5S


Email PostDownload this post as PDF

Monday, November 12, 2007

கூகிள் எர்த் சேட்டலைட்கள்

கூகிள் எர்த் பற்றிய அறிமுகம் நம்மில் பலருக்கும் தேவைப்படாது. அது அவ்வளவாய் பிரபலம். ஆனால் கூகிள் எர்த் படங்களை விண்வெளியிலிருந்து சுட்டுத்தள்ளும் சேட்டலைட்கள் பற்றி கேள்விபட்டிருக்கின்றீர்களா?. அந்த சேட்டலைட்டின் பெயர் QuickBird (படத்தில் காண்பது). இவர் தான் மூத்த அண்ணா. இவர் விண்ணில் ஏவப்பட்ட நாள் முதல் (October 18, 2001) பூமியின் மூலை முடுக்குகளையெல்லாம் வானிலிருந்து படம் எடுத்து பிடித்து பூமிக்கு அனுப்பி வைக்கின்றார். அவற்றை தாம் நாம் கூகிள் எர்த்தில் அல்லது கூகிள் மேப் சேட்டலைட் வியூவில் பார்க்கின்றோம். இந்த சேட்டலைட் பூமிக்கு மேல் 450கிமீ தொலைவில் பூமியை சுற்றியவாறு உள்ளதாம். உண்மையில் இந்த சேட்டலைட் கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமானதல்ல. இது DigitalGlobe எனும் American remote sensing நிறுவனத்தினுடையது.

QuickBird-ன் தம்பி சேட்டலைட்டான WorldView I சமீபத்தில் தான் (September 18, 2007) விண்ணில் ஏவப்பட்டது. இப்போது இவரும் கலக்கலாய் தெளிவாய் லேட்டஸ்ட் டெக்னாலஜியோடு படங்களை சுட்டு வானிலிருந்து பூமிக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றார். QuickBird-ஐ விட தெளிவான படங்களாய் இவை இருக்கின்றன. விரைவில் இப்படங்கள் கூகிள் எர்த்தில் இடம்பிடிக்க தொடங்கிவிடும்.

WorldView I-னால் தினமும் 750,000 சதுரகிலோமீட்டர்களை படம்பிடிக்க இயலுமாம்.மேலும் அப்படங்களில் பூமியின் அரைமீட்டரே அளவான பொருள்களையும் காண இயலுமாம்.
WorldView I சேட்டலைட் பூமிக்கு அனுப்பிய சில சாம்பிள் படங்களை இங்கே காணலாம்.
http://www.digitalglobe.com/worldview-1_images.html

அடுத்ததாய் 2008-ல் Worldview II ஏவவிருக்கின்றார்கள். அது என்னமாயமெல்லாம் செய்யப்போகின்றதோ?.

இப்போதைக்கு DigitalGlobe-ன் ஒரே காம்பெடீட்டர் GeoEye Inc.இவர்கள் பணியும் விண் ஒடம் வழி படம் எடுத்து கொடுப்பதே.

கூகிள் எர்த்தை ரியல்டைமில் பார்க்க ஆசையா?.கொஞ்ச நாள் காத்திருக்க வேண்டும்.

கிறித்தவர்களின் புனித நூலான வேதாகமத்தின் இரண்டாம் பகுதி "புதிய ஏற்பாடு" தமிழில் மென்புத்தகம் Christians Holy book Bible "New Testment" Tamil ebook Download. Right click and Save.http://static.scribd.com/docs/jvn4rhnx6u0zc.pdf


Email PostDownload this post as PDF

Thursday, November 08, 2007

"போட்டோ" போட்டி

பெருசுகள் இரண்டு மார்கெட்டில் மோதிக்கொள்ளும் போது ஏற்படும் சுவாரஸ்யமே தனி தான். கோக்கும் பெப்ஸியும் மாறி மாறி விளம்பரங்களில் அடித்துக் கொள்வார்கள். அப்படியே சன்னும்,விஜய்யும் கலக்கப்போவது பெட்டரா இல்ல அசத்தபோவது பெட்டரானு போட்டி போடுவார்கள். மலரா கரனானு தமிழகத்தில் இதழ்களிடையேயும் போட்டி. இங்கு பாருங்கள் கூரியரில் கொடிகட்டி பறக்கும் ஃபெடக்ஸ் மற்றும் யூ.பி.எஸ்ஸின் Photo போட்டி.

யூ.பி.எஸ்ஸையே நாங்கள் தான் டெலிவர் செய்கிறோமென இங்கே Fedex படம் காட்ட
(Click the pictures to enlarge)

UPS-ன் பதிலடி இங்கே
ஊப்ஸ்...


உங்கள் பார்வைக்கு மேலும் சில விளம்பர போட்டிகள் இங்கே
BMW Audi Subaru இவர்களின் விளம்பர சண்டை
King Fisher AirDeccan GoAir சபாஷ் சரியான போட்டி

கிறித்தவர்களின் புனித நூலான வேதாகமத்தின் முதல் பகுதி "பழைய ஏற்பாடு" தமிழில் மென்புத்தகம் Christians Holy book Bible "Old Testment" Tamil ebook Download. Right click and Save.http://static.scribd.com/docs/bsp34xlq7uu3m.pdf


Email PostDownload this post as PDF

Tuesday, November 06, 2007

ரியல் இறக்கம்

என்றைக்குமே RealPlayer மென்பொருள் நமக்கு பிடித்ததாய் அமைந்ததில்லை. இணையத்தில் காணக்கிடைக்கும் பிரபலமான அபூர்வ வீடியோ கிளிப்புகள் பெரும்பாலும் rm, ram ஃபார்மாட்டில் கிடைப்பதால் ரியல் பிளயர் சும்மாவேனும் நிறுவி வைத்திருப்பது உண்டு. ஆனால் சமீபத்தில் வெளியான RealPlayer (பீட்டா) நம் அபிப்ராயத்தையே முற்றிலும் மாற்றி விடும் போலுள்ளது. இதில் நமக்கு மிக பிடித்தமான பயன் Youtube வீடியோக்கள் , Google Video-களை பிரவுஸரில் ஒரே கிளிக்கில் நேரடியாக டவுன் லோட் செய்து கொளல் தான். இவை .flv எனும் கோப்பு வகையாக உங்கள் கணிணியில் இறக்கம் செய்யப்பட்டு உங்கள் வீடியோ லைப்ரரியில் அழகாய் அடுக்கப்படும். பின் நேரம் கிடைக்கும் போது அவ்வீடியோக்களை பொறுமையாய் Full Screen-ல் பார்த்துக்கொள்ளலாம். நல்ல வீடியோ குவாலிட்டி கூட.

esnips.com எனும் பிரபல கோப்புகள் கிடங்குகாரர்கள் நம் பேவரைட் MP3-களை கேட்க மட்டுமே அனுமதிக்கின்றார்கள். டவுண்லோட் செய்ய வசதி தருவதில்லை. செர்வர் சுமையை தவிர்க்க தான். ஆனால் புதிய RealPlayer அந்த MP3-களையும் ஒரே கிளிக்கில் இறக்கம் செய்ய நன்கு உதவுகின்றது.இவை .ivr எனும் கோப்பு வகையாக உங்கள் கணிணியில் இறக்கம் செய்யப்படும்.

அநேக இலவச மென்பொருள்கள், வெப்தளங்கள், பயர்பாக்ஸ் எக்ஸ்டென்சன்கள் இத்தகைய வீடியோக்களை இறக்கம் செய்ய இருப்பதால் RealPlayer லேட்டாதான் வந்திருக்கின்றார் எனச் சொல்லலாம்.

Download RealPlayer11 Beta here


scribd.com -எனும் ஈபுத்தகங்கள் கிடங்கில் pdf கோப்புகளை எப்படி இறக்கம் செய்வதுவென முன்பு ஒரு நண்பர் கேட்டிருந்தார்.
நீங்கள் scribd.com-ல் ஒரு மென்புத்தகத்தை திறந்தால் படத்தில் காணும் படியாக Download வசதிகொடுத்திருப்பார்கள். அதில் தேவையான ஐகானை கிளிக்க வேண்டியது தான்.

அநேக நண்பர்கள் இங்கு வழங்கப்படும் Todayspecial மென்புத்தகங்களை இறக்கம் செய்யமுடியவில்லை என தெரிவித்திருந்தார்கள். அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் Keep Try.Keep on Try. சில சமயங்களில் செர்வர் டவுனாக இருக்கலாம். சில மணிதுளிகள் கழித்து இறக்கம் செய்ய முயலவும். ப்ளீஸ்....

வருகை தந்து வாசித்து, பின்னூட்டமிட்டு உற்சாக மூட்டும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பலப்பல.
******************************************************************
பண்டிகை கால வாழ்த்துக்கள்.
******************************************************************


இஸ்லாமியர்களின் புனித நூல் "குர் ஆன்" தமிழில் மென்புத்தகம் Muslims Holy Book Quran Tamil e-book Download. Right click and Save.http://pkp.in/mydrive/mydrive/Tamil%20E%20Books/Quran%20in%20Tamil.pdf


Email PostDownload this post as PDF

Monday, November 05, 2007

கீ செயினில்

நம் சாவிக்கொத்தில் தொங்கவென என்னவெல்லாம் வந்துவிட்டன பாருங்கள். ஏன் சீக்கிரத்தில்
Keychain MP3 Players, Keychain IPods, Keychain Cell Phones, Keychain GPS Navigator, Keychain Computer-கள் கூட வரலாம். இப்போதைக்கு என் பேவரைட் Keychain Digital Photo Viewer. :)

Keychain Hand bag holder can be used at Hotel table,Office table etc

Keychain Digital Camera

Keychain Torch Light

Keychain Thermometer

Keychain Compas

Keychain Digital Photo Viewer

Keychain USB Flash Drive

Keychain Universal Remote Control

Keychain Ash Tray

Keychain Calculator

Keychain FM Radioகிருஷ்ணாவின் "பகவத் கீதை" தமிழில் இந்துக்களின் புனிதநூல் மென்புத்தகம் Krishna`s Bhagavad Gita Hindus Holy Book in Tamil e-book Download. Right click and Save.http://static.scribd.com/docs/f5a2dcgknqbum.pdf


Email PostDownload this post as PDF

Thursday, November 01, 2007

சந்தோசமா இருக்கு

அதெல்லாம் அந்த காலம்ங்க. ஜீன் மாச கொட்டும் மழையில் பள்ளிகள் திறக்க, சரக் சரக்கென பையை இழுத்துக்கொண்டு பாதி புத்தகங்கள் வாங்கியும் பாதி புத்தகங்கள் வாங்காமலும். கோமளா ஸ்டோரில்
அடுத்த வாரம் மீதி புத்தகங்கள் வருமென சொல்லியிருப்பார்கள். வந்தாலும் சீக்கிரமாய் விற்றுத் தீர்ந்து போகும். மதுரை மாளிகை புக் செண்டர் புதிதாய் களை கட்டி இருக்கும். கூடுதலாய் வேலைக்கு ஆள்கள் வைத்திருப்பார்கள். அந்த புத்தம் புது பாட நூல்களின் மணமே தனி தான்.

சில பசங்களின் கதை இங்கே கொஞ்சம் வித்தியாசம். சிலர் ஏற்கனவே ஒம்பதாப்பு படித்து போன சீனியரிடமிருந்து இலவசமாய் கிடைக்காதாவென தேடிப்பார்ப்பர். இன்னும் சிலர் சந்தை வாயில்களின் சாலை ஓரங்களில் கசமுசா பத்திரிகைகளோடு மிங்கிளாகி கிடக்கும் பல பாட நூல்களில் நமக்கெதாவது மாட்டாதாவென தேடுவர். ஆனாலும் பலருக்கும் வருசம் முடிவதற்குள் சத்துணவில் கிடைக்கும் இலவச பாட புத்தகங்களில் தான் நம்பிக்கை.

இன்றைக்கு அந்த அனைத்து பாடநூல்களும் இலவசமாய் இறக்கத்துக்கு தமிழக அரசின் இணையதளத்தில் கிடைப்பதை பார்க்கும் போது மனசுக்கு சந்தோசமா இருக்கு. அப்படி பழைய நாம் படித்த பாடங்களெல்லாம் இன்னைக்கு என்ன நிலையிலிருக்குனு நேரம் கிடைக்கும் போது புரட்டி பார்க்கலாமென உத்தேசம்.

தமிழக அரசு பாட நூல் நிறுவனம் வழங்கும் அனைத்து வகுப்பு பாடநூல்களும் Pdf வடிவ கோப்புகளாக இலவசமாக இங்கே
Department of School Education, Government of Tamil Nadu.Text Books
http://www.textbooksonline.tn.nic.in/

கழிந்த வருடத்திய 10-ம்,12-ம் வகுப்பு அரசு தேர்வு கேள்விதாள்கள் இங்கே
Previous year question papers for 10th and 12th are also available
http://www.tn.gov.in/dge/question_bank.htm

புதிய பாட திட்டம் பற்றிய தகவல்கள் இங்கே
New Curriculum and Syllabus
http://www.tn.gov.in/schoolsyllabus/

மேலே அளவுக்கு அதிகமாய் தமிழ் பாட நூல்களுக்கு சுட்டி கொடுத்துள்ளதால் வித்தியாசமாய் இன்றைக்கு இறக்கத்துக்கு ஆங்கில ஈபுக். :) Nursery Rhymes, Songs and Fingerplays for Children in English e-book Download. Right click and Save.http://static.scribd.com/docs/kmj3653x3llc1.pdf


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்