உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Monday, August 31, 2009

அதி சின்னப் பயல்

காந்திமதி நாதன் என ஒரு வாத்தியார். சிறுவன் பாரதி படித்த பள்ளியில் ஆசிரியராக இருந்தாராம். இவன் எழுதும் கவிதைகளைப் பற்றியெல்லாம் அதிகம் கேள்விப்பட்ட அவர் பாரதியிடம் கிண்டலாக கேட்டாராம். ”எங்கே! பாரதி சின்னப்பயல் என முடிகிற மாதிரி ஒரு கவிதை எழுது பார்க்கலாம்”. நொடியும் தாமதிக்காது பாரதி கவிதை சொன்னானாம்.
”காந்திமதி நாதனைப் பார்,
அதி சின்னப் பயல்” -என்று

நாமெல்லோரும் சின்னப்பயல்கள் தான். நாமென்ன நம்ம பூமியே இந்த மகா அண்டத்திலும் ஒரு சின்னப்பயலாம். இன்னும் கொஞ்சம் பெஞ்சிலேறி உந்திப் பார்த்தால் நம்ம சூரியனே கூட சின்னப்பயல் தானாம். இந்த அனிமேட்டட் ஜிப் படத்தை பாருங்கள். உங்களுக்கே புரியும். கொஞ்சம் பொறுமை வேண்டுமாக்கும்.

How big is Earth in the Universe
Watch slowly what happens!!! The picture will be changingநான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்

தவயோகி தங்கராசன் அடிகளார் ”அண்டமும் பிண்டமும்” மென்புத்தகம் இங்கே தமிழில்.Thavayogi Thangarasan Adikalaar "Andamum Pindamum" in Tamil pdf ebook Download. Just click and Save.
Download


Email PostDownload this post as PDF

Thursday, August 27, 2009

புதிய முகம்

கோடைகாலம், குளிர்காலம், இலையுதிர்காலம், வசந்தகாலம் என காலநிலைகளில் நான்கு பருவங்கள் இருப்பது போன்று வேலை கொடுப்போரும் வழக்கம் போல நான்கு நிலைகளில் தலைகளை சுத்திகரிக்கின்றார்கள் . முதலில் எழுத்து தேர்வு, பின்பு தொலைப்பேசி வழி சராமாரி கேள்விகள், அதிலும் தேறிவிட்டால் இறுதியாய் நேர்முகத் தேர்வு. நான்காவதாக எதாவது உங்கள் பேரில் கிரிமினல் கேஸ்கள் இருக்கின்றதாவென பார்க்க பேக்கிரவுண்ட் செக் மற்றும் போதை வஸ்துவுக்கு அடிமையாய் இருக்கின்றீர்களாவென பார்க்க டிரக் டெஸ்ட். இதையெல்லாம் தாண்டி வருவோரை தான் கன்கிராட்ஸ் என சொல்லி பெரும் நிறுவனங்கள் வேலை கொடுக்கின்றார்கள். Kroll, Intellicorp போன்ற நிறுவனங்கள் இந்த Background Screening Service வேலைகளை கமுக்கமாக அவர்களுக்காக செய்கின்றன. Drug test க்காக Lap corp அல்லது Quest Diagnostics போக வேண்டும். கிரான்பெர்ரி பழரசத்தை மடக் மடக் என குடித்திருந்தால் யூரின் Drug test-ஐ ஏமாற்றிவிடலாமென பரி முன்பு சொல்லியிருக்கின்றாள்.அது ஒரு நல்ல Natural Diuretic என்றாள். புரியவில்லை. தேவையும் இல்லை.

இதையெல்லாம் இங்கு சொல்லவந்ததற்கு முக்கிய காரணம் இந்த ஆளெடுக்கும் படலத்தினூடே இக்காலங்களில் புகுந்துவிட்ட இன்னொரு படிதான். ஓரளவு தேர்வாகி வருகின்ற நபர்களை இன்னும் முறமிட இணையத்தை பயன்படுத்துகின்றார்களாம். உதாரணத்துக்கு குறிப்பிட்ட நபரின் First name மற்றும் Last name-ஐ கூகிளில் தட்ட அது காட்டும் Myspace, Facebook, Linkedin, Blog, Forum பக்கங்களுக்கெல்லாம் சென்று இவரின் இணைய வாழ்வின் லட்சணத்தை அலசுகின்றார்களாம். அங்கு கண்டுபிடிக்கப்படும் இவர் பற்றிய அல்லது இவர் இட்ட தகவல்களும், வண்ணப் படங்களும் பெரிதும் இவரின் உண்மை முகத்தை எளிதில் காட்டுவதாக HR பெரிசுகளெல்லாம் சொல்லுதுகளாம். என் பெயரையும் முழுசாய் டைப்பி கூகிளில் தேடிப்பார்த்தேன் பெரிதாய் ஒன்றும் கிட்ட வில்லை. புனைபெயரை பயன்படுத்துவதில் இப்படி ஒரு லாபம். ஹாயாக கீழ்கண்ட சுட்டியில் இணையத்தில் ஃபாக்ஸ் நியூஸ் சேனல் (Fox News) பார்த்துக் கொண்டிருந்தேன். கோபாலோ டென்சனாய் கூகிளில் தன் பேரைத் தேடிக் கொண்டிருந்தான். கொஞ்சம் துப்புறவு தேவைப்படும் போலிருக்கின்றது. நாளைக்கு பொண்ணு கொடுக்கப்போகும் வீட்டுக்காரர்களும் மாப்பிள்ளை பேரை சும்மாவேனும் கூகிளில் தட்டி எதாவது விவகாரம் சிக்குதாவென தேடிப் பார்த்தாலும் பார்ப்பார்கள்.


பேச்சாளர்களே!
பார்க்கும்படியாக நில்லுங்கள்
கேட்கும்படியாக பேசுங்கள்
விரும்பும்படியாக உட்காருங்கள்

"வெற்றி தரும் “பேச்சு”" எளிய தமிழில் மனித வள மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் மென்புத்தகம்.Effective Speaking - in Tamil pdf ebook Download. Right click and Save.
Download


Email PostDownload this post as PDF

Wednesday, August 26, 2009

விரைவாய் வேகமாய்

படத்தில் நீங்கள் பார்ப்பது உலகின் மிக வேகமான மனிதர் - மணிக்கூருக்கு 40-43 கி.மீ வேகம் Fastest Man in the world - Usain Bolt(Jamaican) - 40-43 KMPH


படத்தில் நீங்கள் பார்ப்பது உலகின் மிக வேகமான மீன் - மணிக்கூருக்கு 110 கி.மீ வேகம் Fastest Fish in the world - SailFish - 110 kmph


படத்தில் நீங்கள் பார்ப்பது உலகின் மிக வேகமான மிருகம் - சிறுத்தை - மணிக்கூருக்கு 113 கி.மீ வேகம் Fastest Animal in the World - Cheetah - 113 KMPH


படத்தில் நீங்கள் பார்ப்பது உலகின் மிக வேகமான பறவை - மணிக்கூருக்கு 171 கி.மீ வேகம் Fastest Bird in the World - Spine tailed swift - 171 KMPH


படத்தில் நீங்கள் பார்ப்பது உலகின் மிக வேகமான மோட்டார் சைக்கிள் (அனுமதி பெற்றது)- மணிக்கூருக்கு 320 கி.மீ வேகம் Fastest Bike in the world - Ducati Desmosedici RR GP Replica(Legal) - 320 KMPH


படத்தில் நீங்கள் பார்ப்பது உலகின் மிக வேகமான கார் - மணிக்கூருக்கு 412.28 கி.மீ வேகம் Fastest Car in the World - Shelby Super Cars Ultimate Aero - 412.28 KMPH


படத்தில் நீங்கள் பார்ப்பது உலகின் மிக வேகமான தொடர்வண்டி - மணிக்கூருக்கு 581 கி.மீ வேகம் Fastest Train in the World - Shanghai Maglev Train - 581 KMPH


படத்தில் நீங்கள் பார்ப்பது உலகின் மிக வேகமான மோட்டார் சைக்கிள் (அனுமதி பெறாதது)- மணிக்கூருக்கு 675 கி.மீ வேகம் Fastest Bike in the world - TomaHawk(Not a Legal Bike) - 675 KMPH


படத்தில் நீங்கள் பார்ப்பது உலகின் மிக வேகமான விமானம் - மணிக்கூருக்கு 12144 கி.மீ வேகம் Fastest Plane in the world - X-43 Aircraft - 12144 KMPHசந்தத்தை நம்பி கவிதை இருக்கலாம்,
தந்தத்தை நம்பி யானைஇருக்கலாம்,
சொந்தத்தை நம்பி நீ இருக்காதே,
பந்தத்தை நம்பி மதிப்பை இழக்காதே.பெரியார் “இராமாயணக் குறிப்புகள்” மென்புத்தகம். Periyar Raamaayanak Kuripukal pdf ebook Download. Click and Save.
Download


Email PostDownload this post as PDF

Monday, August 24, 2009

இரு OS-கள் விட்டுச்சென்ற பாதச்சுவடுகள்

இந்த வண்ணப்படப் பதிவு எனது சேகரிப்புக்காக மட்டும். ஒத்த ஆர்வமுள்ளோர் பார்த்து ரசித்துக்கொள்ளலாம். படத்தை கிளிக்கி பெரிதாக்கியும் பார்க்கலாம்.

Microsoft Windows OS vs Apple Mac OS history Screen Shots


நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர்,
உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!க.சீ.சிவகுமார் சிறுகதைகள் மென்புத்தகம். K.C.Sivakumar Short stories in Tamil pdf ebook Download. Click and Save.
Download


Email PostDownload this post as PDF

Thursday, August 20, 2009

டைம் பாஸ் சாட்டில்

அவன் பெயரும் கோபால் தான். ஆனால் இன்னொரு கோபால். சரியாகச் சொன்னால் கோபாலிகா-வாம். முப்பது வயது. இந்திய ஐஐடியில் என்னவெல்லாமோ மிகப் பெரிய டிகிரி படிப்புகளெல்லாம் படித்து முடித்து விட்டு பிழைப்புத் தேடி அமெரிக்கா வந்தவன். இணையத்தில் சாட் செய்வதென்றால் அவனுக்கு கொள்ளைப் பிரியம். அதிலும் முகமறியாத அனானிகளிடம் சாட் செய்வது என்றால் இன்னும் இஷ்டம். அப்படித்தான் அந்த பதிமூன்று வயது அமெரிக்க பெண்ணும் அவனுக்கு அறிமுகம் ஆனாள். நிறைய சாட்டியிருக்கின்றார்கள். ஆனாலும் நேருக்கு நேர் பார்த்ததில்லை. அரசியல் முதல் அந்தரங்கங்கள் வரை அநேகம் பேசியிருக்கின்றார்கள். படங்களும் பரிமாறப்பட்டன. எத்தனை நாட்கள் தான் பேசிக் கொண்டிருப்பதாம். நேரில் சந்திக்கலாமே என முடிவெடுத்தார்கள். அதீத எதிர்பார்ப்புகளோடு இந்த கோபாலும் ஏற்கனவே சொல்லப்பட்டிருந்த மீட்டிங் பிளேசுக்கு போனால் அங்கே இவனை வரவேற்றது ஒரு under cover agent from Chid Predator Unit. அவன் கையும் களவுமாக பிடிபட்டதாகவும் அவனை ஜாமீனில் எடுக்கவே $15000 ஆகுமென சொல்லுகின்றார்கள். எல்லாம் நிரூபிக்கப்பட்டால் இது பெரும் குற்றமாக (First degree felony) கருதப்பட்டு 20 ஆண்டு சிறைத் தண்டனையும் $25000 அபாராதமும் கிடைக்குமாம். பொழுதுபோகாமல் இணையத்தில் விளையாடி அந்த விளையாட்டு இப்போது இவனுக்கு வினையாகியிருக்கின்றது.

மைனர்களிடம் சீண்டுவது இங்கு பெருங்குற்றம். பள்ளிப் பேருந்துகளை நடுச்சாலையில் நிறுத்தும் போது அதில் மின்னும் சிவப்பு ஒளியைக்கண்டு மொத்த சாலைகளும் ஸ்தம்பித்து நின்று சிறார்களுக்கு சாலையைக் கடக்க வழிவிடும். சிறுவர்களை அடித்தாலோ அல்லது திட்டி அது அழுதாலோ Child Abuse என யார் வேண்டுமானாலும் 911 அழைக்கலாம். எல்லாம் டீனேஜ் முடியும் வரை தான். பள்ளி முடிந்து கல்லூரி போனதும் பொத்தி பொத்தி வளர்த்ததெல்லாம் பூ...ம். கோபாலுக்கு இதுவெல்லாம் தெரியாதிருந்ததா? அல்லது தெரிந்திருந்தும் இது ஒரு வெர்சுவல் உலகம் தானே எப்போது வேண்டுமானாலும் Undo செய்துகொள்ளலாம் என நினைத்திருந்தானா? அல்லது அமெரிக்காவில் இதெல்லாம் சகஜமென ஆழம் தெரியாமல் காலையிட்டு பார்த்தானா தெரியவில்லை. இணையத்தின் இன்றைய மெகா பரிமாணம் நம் ஊரில் வருமுன்னேயே இது குறித்துச் சொன்ன "காதலர் தினம்” கூடவா இவன் பார்த்ததில்லை?

இனி சாலையில் போவோறெல்லாரும் இவனுக்கு தேவர்களாகவும் தேவதைகளாகவும் தெரிவார்கள் .இவன் மட்டும் தனக்கு படுபாவியாகத் தெரிவான். http://locator.thevision2020.com ல் Sex Offenders அல்லது Child Predators வரிசையில் இவன் பெயரையும் போட்டாலும் போட்டு விடுவார்கள். உருப்படியாய் எதாவது செய்கின்ற நேரத்தில் சும்மா வம்புக்கு சாட் செய்து வாழ்க்கையை தொலைத்துக் கொண்டான். பாவம் அந்த கோபால்.


இளைஞனே!
ஓடுகின்ற கால்கள்
ஓய்வெடுக்கும் போது
நீ எடுத்துக்கொண்ட பயணம்
முடிந்திருக்க வேண்டும்!
வாழ்ந்த நாட்களை
திரும்பிப் பார்க்கும் போது
உன் பெயரை சிலர்
உச்சரிக்க வேண்டும்!
கோபுரங்களின் அழகை
அஸ்திவாரங்கள் தாங்குவது போல்
நீ பிறந்ததின் பயனை
ஊரறியச் செய்
- யாரோ

தாமரைச்செல்வி “வீதியெல்லாம் தோரணங்கள்” புதினம் மென்புத்தகம். Thamaraiselvi "Veethiyellaam Thoranangal" Tamil novel pdf ebook Download. Click and Save.
Download


Email PostDownload this post as PDF

Friday, August 07, 2009

தெரிந்த மென்பொருள்கள் தெரியாத பயன்பாடுகள்

அன்றாடம் நாம் பயன்படுத்தும் சில மென்பொருள்களில் ஒளிந்திருக்கும் பயன்பாடுகளை சாமானியர்களுக்காக இங்கே தனித்திட விரும்பினேன்.

1.உங்கள் விண்டோஸ் கணிணியில் ஏற்கனவே உள்ள சாதாரண Windows Media Player மூலம் உங்கள் ஆடியோ சிடியிலுள்ள இசைக்கோடுகளையெல்லாம் MP3-யாக மாற்றி கணிணியில் சேமிக்க முடியும் தெரியுமோ? அதிலுள்ள Rip வசதியை பயன்படுத்தலாம்..


2.Windows Media Player Classic மூலம் ஒரு மூவியின் ScreenCaps-யை கீழ்கண்டது போல் அழகாக ஒரே சொடுக்கில் எடுக்கலாம் தெரியுமோ?

Download Windows Media Player Classic
http://www.free-codecs.com/Media_Player_Classic_download.htm

3.இப்போது இலவசமாக கிடைக்கும் RealPlayer SP BETA மூலம் ஒரு வீடியோ/ஆடியோ ஃபார்மேட்டை இன்னொரு வீடியோ/ஆடியோ ஃபார்மேட்டாக எளிதாக மாற்றலாம் தெரியுமோ?

Download RealPlayer SP BETA
http://www.real.com

How to use RealPlayer's free media converter in 3 short steps:
1) Download your video or audio file to your computer.
2) Click on the "Copy To" link next to the video.
3) Select your device from the list and RealPlayer SPBeta will automatically convert your file to the right format and transfer it to your device

4.Microsoft Office 2007 கோப்புகளை நேரடியாக MS Office-யிலிருந்தே PDF கோப்புகளாக சேமிக்கலாம் தெரியுமோ?. Save as PDF Add-in-ஐ பயன்படுத்துங்கள்

Download
http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=f1fc413c-6d89-4f15-991b-63b07ba5f2e5&displaylang=en

5.விண்டோஸ் டெக்ஸ்டாப்பில் பலவகையான கோப்புகளையும் நாம் தாறுமாறாக அப்படியும் இப்படியும் போட்டிருப்போம். Wallpaper எல்லாருக்கும் தெரிந்த விஷயம். அதையே மிக பயனுள்ளதாக பயன்படுத்த இதோ ஒரு எளிய வழி.
சாதாரண விண்டோஸ் வால் பேப்பர் இப்படி இருக்கும்.

அதையே இப்படி பயனுள்ளதாகவும் மாற்றலாம்.

Download
http://antbag.com/desktops


ஏதாவது ஒரு தரப்பில் சேருங்கள்.
நடுநிலைமை வகிப்பது அக்கிரமக்காரனுக்குத்தான் உதவியாக இருக்கும்.
அக்கிரமத்துக்கு உள்ளாகிறவனுக்கு உதவாது.
மௌனம் சாதிப்பது கொடியவனுக்கே ஊக்கம் அளிக்கும்.
கொடுமைக்கு உள்ளாகிறவனுக்கு ஊக்கமளிக்காது

- 1986-ல் சமாதான நோபல் பரிசு பெற்ற ஏலிவீசெல்சுதேசமித்திரன் அமுதும் நஞ்சும் தமிழ் சினிமா பற்றிய மென்புத்தகம். Suthesamithiran Amuthum Nanchum Tamil cinema pdf ebook Download. Click and Save.
Download


Email PostDownload this post as PDF

Wednesday, August 05, 2009

எஸ்கட்டாலஜி

உலகின் இறுதிக் காலங்களில் நடைபெறப் போவன பற்றி பல்வேறு மார்க்கங்களும் நூல்களும் சொல்வனவற்றை தெரிந்து கொள்வது ஒரு சுவாரஸ்யமான விஷயம். அதை நம்மவர்கள் எஸ்கட்டாலஜி (Eschatology) என்கின்றனர். வரப்போவன பற்றி அறிவதில்தானே நம்மில் பலருக்கும் ஆர்வம். அதனால் தானே பலரும் ஆருடம் நோக்குகின்றோம் ஜோதிடம் பார்க்கின்றோம். சமீபத்தில் ஈராக்கில் ஓடும் சுமேரிய நாகரீகப் புகழ் யூப்ரடிஸ் நதி பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று அறியக் கிடைத்தது.

இஸ்லாமிய நூல்கள் யூப்ரடிஸ் நதி வரலாற்றின் இறுதிக்காலங்களில் வற்றிப்போகுமென்றும் அதிலிருந்து தங்கக் குவியல்கள் வெளிப்படுமென்றும் அதை எடுக்க இறுதிக்கால மக்கள் போட்டி போடுவதால் ஒரு பெரிய யுத்தமே உண்டாகுமென்றும், அதில் நூற்றில் தொன்னத்தொன்பது பேரும் செத்துப் போவார்கள் என்றும் சொல்லுகின்றது. அக்காலத்தில் நீங்கள் வாழ்ந்தால் அந்த புதையல்களை எடுக்கக்கூடாது எனவும் சாகிக் புகாரி தெரிவிக்கின்றது.

கிறிஸ்தவ நூலான வெளிப்பாடு யூப்ரடிஸ் நதி வரலாற்றின் இறுதிக்காலங்களில் வற்றிப் போகுமென்றும் அது காய்ந்த தரை வழியாக பெரும் படை ஒன்று கடந்து சென்று ஒரு பெரிய யுத்தமிடும் என்றும் தெரிவிக்கின்றது.

உங்களால் நம்பமுடிகின்றதா? போன மாத நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வற்றா ஜீவ நதியாக பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்த யூப்ரடிஸ் நதி இப்போது வற்றிக் கொண்டிருப்பதாக சொல்கின்றது. இன்டரெஸ்டிங் தான்.


மனிதனுக்கு சரியான பொது அறிவு இல்லாமல் போகுமானால் எந்த அளவுக்கு விஞ்ஞானம் முன்னேறுகிறதோ அந்த அளவுக்கு அவன் துயரத்தையும் அனுபவிப்பான்.
- ஹோம்ஸ்.சேகுவேரா பற்றிய மென்புத்தகம். CheGuevera Tamil pdf ebook Download. Click and Save.
Download


Email PostDownload this post as PDF

Saturday, August 01, 2009

வன்பொருள் காட்சியகம்

மதர்போர்டு (Mother board) டாட்டர் போர்டு (Daughter board) என்றிருந்த காலமெல்லாம் போய் இன்றைக்கு வித்தியாசமான காகிதம் ஒன்றில் ஒருவிதமான சிலிகான் மை கொண்டு இந்த மின்னணு சர்கியூட்டு போர்டுகளையெல்லாம் எளிதாக அச்சடிக்கலாமாவென Kovio காரர்கள் யோசித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதற்கான ஆய்வில் மில்லியன் கணக்கில் செலவும் போய்க் கொண்டிருக்கின்றது. ஆய்வின் முடிவில் உங்கள் கை மணிக்கட்டின் தோல்பரப்பில் அழகான கைக்கடிகாரத்தை அச்சிட்டு அனுப்பிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதை சூப்பர் அனிமேசனோடு எலக்ட்ரானிக் டாட்டூ என்பார்களாயிருக்கலாம். (Electronic tattoo).ஜாலிதான். அதுவரைக்கும் இன்றைய நம் பெரிய ஹார்டுவேர்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க மொத்தமாக இதோ அவையெல்லாம் ஒரே சார்ட்டில். படத்தை கிளிக்கி பெரிதாக்கியும் பார்க்கலாம்.


Computer Hardware Chart


தொலைதூர பார்வைகள் பார்க்கிறேன்.
சிலசமயம் சுவர்களையும் ஊடுருவி காண்கிறேன்.
என் கையின் ரேகைகள் மட்டும் புரியவில்லை இன்னும்.
-வாஜ்பாய்


க.சீ.சிவகுமார் ”ஆதிமங்கலத்து விசேஷங்கள்” கிராமத்து தொடர் மென்புத்தகம். K.C.Sivakumar "AathiMangalathu Viseshangal" pdf ebook Download. Click and Save.
Download


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்