உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, January 29, 2009

இரண்டு Word மந்திரங்கள்

மந்திரம் ஒன்று:
MS office word-ல் அல்லது Outlook-ல் மவுசை தொடாமலேயே வெறும் தட்டச்சுபலகையை தட்டி எளிதாக கட்டம் போட்டு அட்டவணை போடும் முறையை நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார்.மிகவும் பிடித்திருந்தது.இங்கே உங்களுக்கும் அறிமுகப்படுத்துகிறேன். இது ரொம்பவும் பழைய டிரிக் என்று சொல்பவர்கள் தயவு செய்து மன்னிக்கவும்.


மந்திரம் இரண்டு:
எதோ ஒரு காரணத்துக்காக ஒரு சாம்பிள் word டாக்குமெண்ட் 100 பக்கத்துடன் வேண்டுமா? தேடிக்கொண்டிருக்க வேண்டாம்.ஒரே நொடியில் நீங்களே உருவாக்கிவிடலாம்.MS office word-ஐ திறந்து =rand(10,50) என டைப்பி enter-ஐ தட்டுங்கள். ஒரே நொடியில் 50 வரிகளுடன் 10 பாராகிராப்புகளுடைய ஒரு பெரிய டாக்குமெண்ட் ரெடி. அந்த The quick brown fox jumps over the lazy dog வரிகள் ஆங்கிலத்தின் 26 எழுத்துக்களையும் கொண்டுள்ளதால் எளிதாக உங்கள் "Font" -ஐ சரிபார்த்துக் கொள்ளலாம். இதுமாதிரி எல்லா ஆங்கில எழுத்துக்களையும் கொண்டு எழுதப்படும் வாக்கியத்தை pangram என்பார்கள். முன்பெல்லாம் தட்டச்சு எந்திரத்தின் எல்லா அச்சுகளும் சரியாக வேலை செய்கின்றனவாவென பார்க்க இந்த வாக்கியத்தை முதலில் காகிதத்தில் அடித்து சரி பார்ப்பார்களாம்.Mr. Jock, TV quiz PhD, bags few lynx சரியாக 26 எழுத்துகள் மட்டுமே கொண்டது. எனக்கு பிடித்த pangram இதுதான்.
Pack my box with five dozen liquor jugs.


ஒரு மனிதனின் வாழ்க்கையில்
நன்மை செய்தலே
உண்மையான இன்பம் அளிக்கும் செயல்.
- சர் பிலிப்சிட்னி

ரமணிச்சந்திரன் புதினம் "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு" நூல் மென்புத்தகமாக Ramanichandran Konjam Nilavu Konjam Neruppu Tamil Novel pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Wednesday, January 28, 2009

தமிழில் நுட்பங்கள்

என்னத்தான் நடக்குதுனு தெரிந்து கொள்ள FM வானொலிகளுக்கு திரும்பினாலும் சரி அல்லது செய்திகளை கேட்கலாமென்று தொலைக்காட்சி பக்கம் நுழைந்தாலும் சரி பேட்டிகளின் போது பேட்டி கொடுப்பவர் ஒரு புத்தகமாவது எழுதினவராகத்தான் இருக்கின்றார். பேட்டி தொகுப்பாளரும் இவர் இந்த புத்தகத்தை எழுதின ஆசிரியராக்கும் அவர் அந்த புத்தகத்தை எழுதின ஆத்தராக்கும் என்று பெருமையாக கூறிக்கொண்டு பேட்டியை தொடர்வதுண்டு. குழந்தைகள் நல மருத்துவர் என்றால் அவர் அத்துறையை சிறிது ஆய்ந்து அப்படியே ஒரு நூல் எழுதிவிடுகின்றார். ஊர் சுற்றுபவர் என்றால் அவர் அந்த அனுபவத்தை அப்படியே ஒரு நூலாக்கிவிடுகின்றார். கொஞ்சம் ஒருமாதிரி பட்டவர்களெல்லாம் பட்டென புத்தகம் எழுதிவிடுகின்றார்கள். அதனைத் தேடித் தேடிப் படிப்பவர்களும் இருப்பார்கள்தான் போலிருக்கின்றது. ஆங்கிலமெனில் ஆடியன்ஸ் அதிகம்.பிரயாணத்தின் போதெல்லாம் கைகளில் ஒரு புத்தகத்தை இடுக்கிக்கொண்டு அதை முடித்துவிடுவது பலரின் வழக்கமாக இருந்திருக்கின்றது. இப்போதெல்லாம் அவ்விடத்தை ஸ்மார்ட்ஃபோன்களும், MP3 பிளயர்களும், நெட்புக்குகளும் பிடித்துவிட்டன. ஆனாலும் ஆர்வமுள்ளோர் இதுமாதிரியான புத்தகங்களை ஆடியோ வடிவிலாவது, வாங்கிப் படிக்கத்தான் செய்கின்றார்கள். தமிழிலும் audible.com-ல் ஒலிப்புத்தகங்கள் (Tamil audio MP3 books) வாங்கக்கிடைக்கின்றன.

நம்மிலும் ஒரு குறிப்பிட்ட துறையில் சிறந்தோர் அதை ஆய்ந்து நம் மொழியிலேயே புத்தகங்கள் வெளியிட்டால் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் டார்கெட் ஆடியன்ஸ் சுருங்கிவிடுவதால் பணப்பை நிரம்புவதில்லை. மாகாணமொழி வெளியீடுகளில் தரம் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு.அதையும் வெல்ல வேண்டும்.

நண்பர் தமிழ்நெஞ்சம் அவர்கள் தன் நேரத்தை தியாகம் செய்து தான் சிறந்திருக்கும் துறையான SQL சார்ந்த தொழில் நுட்பத்தகவல்களை ”எளிய தமிழில் SQL” என்ற தலைப்பில் வழங்கி வருகின்றார்கள்.அவர் கற்றுக்கொடுக்கும் பாங்கு எல்லோரும் கற்றுக்கொள்ளும் அளவில் மிக எளிதான நடையில் அமைந்திருக்கின்றது. SQL கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

Learn SQL in easy Tamil

நன்றி http://www.tamilnenjam.org

தமிழில் Cascading Style Sheets கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு சிவராசா பகீரதன் அவர்கள் ”CSS ஒரு ஆரம்ப வழிகாட்டி” என்றதொரு அருமையான சிறு மென்புத்தகத்தை வெளியிட்டிருந்தார்கள்.அதை நீங்கள் கீழ்கண்ட சுட்டிகளிலிருந்து இறக்கம் செய்துகொள்ளலாம்.

Download CSS beginners guide tamil.pdf
Download CSS - an introduction_tamil_II.pdf

நன்றி http://www.oorodi.com

தமிழிலிருந்து ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு நண்பர் HK அருண் அவர்களின் அருமையான வலைப்பூ இதோ
http://aangilam.blogspot.com"ஒரு நல்ல நூல்
ஒரு நல்ல மனிதனுக்கு நல்ல சொத்தாகும்.
- வில்லியம் ஹாஸ்விட்

"ரொமான்ஸ் ரகசியங்கள்" நூல் மென்புத்தகமாக Romance Ragasiyangal Tamil pdf ebook Download. Right click and Save.Download
Source http://kricons.blogspot.com


Email PostDownload this post as PDF

Tuesday, January 27, 2009

நடக்கும் என்பார் நடக்காது

நடக்கும் என்பார் நடக்காது... நடக்காதென்பார் நடந்துவிடும் என்ற பாடல் உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்போதெல்லாம் இப்பாடல் அடிக்கடி நினைவுக்கு வந்து
போய்கொண்டிருக்கின்றது. இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா போய் உருப்படியா எதாவது வேலையைப் பாரும்வோய் என சில நபர்களின் ஊகங்களை படிக்கும் போது சொல்லத்தோன்றும். அதுவே சில நாட்களில் நிஜமாகவே நடக்கும் போது ரொம்பவும் கிலேசமாகிப்போய் விடும்.இப்படித்தான் பீட்ட்ர் ஷெப் (Peter Schiff) எனும் அமெரிக்க பொருளாதார நிபுணர் இன்றைய பொருளாதார நிலைகுலைதலைப் பற்றி 2006-2007-லேயே சொல்லிக் கொண்டிருந்தார். இந்த வீடியோவைப் பாருங்கள். http://www.youtube.com/watch?v=v1YhJRXqnXI மற்றவர்கள் கிண்டலாக சிரித்துக்கொண்டிருந்தார்கள். இன்றைக்கு அது நெசமாகவே போய்விட்டது. இனியாவது அவர் சொல்வதை கேட்கின்றார்களா என்றால் இல்லை.

ஐகோர் பனாரின் (Igor Panarin) என்றொரு ரஷ்ய கல்வியாளரின் கணிப்பு இன்னும் பகீரென்றிருக்கின்றது. 1998-டிலிருந்தே இவர் சொல்லிவருகின்றார். சோவியத் யூனியன் துண்டு துண்டாக உடைந்து சிதறியது போல அமெரிக்க ஐக்கிய நாடுகளும் 2010-வாக்கில் நான்கு துண்டுகளாக உடைந்துபோகும் என்று. தாங்க இயலா பொருளாதார பிரச்ச்னைகளும், கலாச்சார சீரழிவுகளும், அதனைத் தொடர்ந்து உண்டாகும் உள்நாட்டு குழப்பங்களும் இதற்கான காரணமாக அமையும் என்றார். சீனர்களின் ஆதிக்கம் மிகுந்து கலிபோர்னிய பகுதிகள் “The Californian Republic”-ஆகவும் டெக்சஸ் பகுதிகள் மெக்சிக்கோ காரர்களின் வசம் போய் “"The Texas Republic”-ஆகவும் நியூயார்க் பகுதிகள் “Atlantic America” என்ற பெயரில் ஐரோப்பிய தாக்கத்துடனும் சிக்காகோ பகுதிகள் ”The Central North American Republic” என்ற பெயரில் கனடாவிடமும் விழுந்து போகுமாம். ”அலாஸ்கா திரும்பவும் ரஷ்யாவிடமே வந்து சேர்ந்து விடும். இப்போது ஒத்திக்கு தானே கொடுத்திருக்கின்றோம்” என்கின்றார் சிரித்தவாறு.”புதிய அதிபர் என்னமோ அற்புதங்களை செய்வார் என எதிர்பார்த்திருக்கின்றார்கள். ஆனால் வசந்த காலம் வரும் போது ஒரு அற்புதங்களும் இல்லை என தெளிவாகிப்போகும்” என்றார்.

இதெல்லாம் அமெரிக்கர்களின் மனஉறுதியை குலைக்க KGB-ன் வாரிசான FSB செய்யும் தந்திரங்களே என்பது எதிர் தரப்பு வாதம்.


"மிக அற்பமான விஷயங்களைப் பற்றி
அதிகமாக அறிந்து கொள்கிறவனே நிபுணன் ஆகிறான்.
- சாமுவேல் பட்லர்.

மதன் ”மனிதனுக்குள் ஒரு மிருகம்” கட்டுரை நூல் மென்புத்தகமாக Mathan "Manithanukkul oru mirugam" Tamil Katturai pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Friday, January 23, 2009

Doc தர்மசங்கடம்

முன்னைய இடுக்கமான காலங்களிலும் தன் பணியாளார்களை துரத்தாத ஒரே நிறுவனமாக இருந்த மைக்ரோசாப்டே இப்போது தன் evangelist-களை கழற்றிவிட தொடங்கியிருக்கின்றது. மந்த நிலையின் உக்கிரம் இன்னும் வெட்ட வெளிச்சமாகி இருக்கின்றது. சும்மானாச்சும் சர்கியூட்சிட்டியின் இணையதளம் போய் பார்த்தேன். 60 வருடமாய் கோடீஸ்வரனாயிருந்த ஒருவன் கோமணத்தோடு தெருவில் நிற்பதைபோல உணர்ந்தேன். 34000 பேரின் வேலைக்கு கல்தா.எங்கு போய் கொண்டிருக்கிறோம் ஒன்றுமே புரியவில்லை.இன்றைக்கு வேலை ஒன்றில் இருக்கின்றேன்.காலையில் வேலைக்கு போகும் போது கூட அதே உலகம் அதே சம்பளம். பெரியதாய் மாற்றம் ஒன்றும் இல்லை.என்னமோ ரிஷசன் என்கின்றார்கள். அதன் அர்த்தம் அப்போது புரிந்திருக்கவில்லை. மாலையில் வீடு திரும்பும் போது உனக்கு வேலை இல்லை என்றார்கள். இப்போது புரிகின்றது.என் உலகமும் மாறி இருக்கின்றது.

பயோடேட்டாக்கள் மின்னஞ்சலில் பறந்துகொண்டிருக்கின்றன.தங்குவதற்கு கூடு கிடைக்கும் வரை அவை பறந்துகொண்டே தான் இருக்க வேண்டும். நம்பிக்கையை மட்டும் விட்டுவிடக்கூடாது. நண்பன் ஒருவன் தன் "ரெஸ்யூமை" Doc வடிவில் அனுப்பியிருந்தான். நம்மில் பெரும்பாலானோர் இதுமாதிரி Doc வடிவில் தான் Resume-களை வைத்திருக்கின்றோம். அவன் ரெஸ்யூமை திறந்து அதன் Properties-ஐ எதேச்சையாக பார்த்தால் அடப்பாவி Title : Robert`s resume என இருந்தது. Author : Robert Wood என இருந்தது. யாரோ ஒருவருடைய Biodata-வை அப்படியே காப்பி அடித்திருக்கின்றான் இவன். உள்ளே அழகாக தன் பெயரை போட்டு எடிட் செய்த அவன் இந்த Word டாக்குமெண்டுகள் தன் கூடவே தாங்கி செல்லும் இந்த Properties metadata தகவல்களை மாற்ற மறந்திருக்கின்றான். அல்லது அவனுக்கு இந்த விஷயம் தெரியாதிருந்திருக்கின்றது. இது போல காப்பி செய்யும் போது உள்தகவலை மட்டும் உங்கள் தேவைக்கேற்ப மாற்றம் செய்வதோடல்லாமல் மறக்காமல் metadata எனப்படும் Title, Author, Subject, Keywords போன்றவற்றையும் உங்களுக்கேற்றார் போல் எடிட் செய்குதல் நமக்கு நல்லது அல்லது குறைந்த பட்சம் இலவச Doc Scrubber மென்பொருள் கொண்டாவது அந்த metadata-களை சுவடே இல்லாமல் எளிதாக அழித்துவிடுவது புத்திசாலித்தனம். இன்டர்வியூக்களில் அனாவசிய தர்மசங்கடங்களை தவிர்கலாம்.(படவிளக்கம்:மேலே உள்ள கோப்பு பெயர் அது கோபாலின் ரெஸியூம் என்கின்றது.ஆனால் அதன் Properties-ஸோ அது வேறு தகவல்களை சொல்கின்றது.)

Download Doc Scrubber
http://www.javacoolsoftware.com/docscrubber.html


"மகிழ்ச்சி என்பது நல்ல ஆரோக்கியமும்
குறைந்த ஞாபக சக்தியையும்விட வேறொன்றுமில்லை."
-ஆல்பர்ட் ஸ்வேசர்

இரா.முருகன் ”கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம்” கவிதைத் தொகுப்பு Ra.Murugan "Kiraamathu Pennin Thalaipirasavam" Tamil Kavithaikal Thokuppu" pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Tuesday, January 20, 2009

தேடி வரும் தூண்டில்

என்னைப்போல எழுதப்பிடிப்போர் எழுதிக்கொண்டே இருக்கின்றோம் சமயம் கிடைக்கும் போதெல்லாம். அது ஒரு ஹாபி...பொழுதுபோக்கு.என்னைப் பொறுத்தவரை அது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பயனுள்ள பொழுது போக்காகிவிட்டது. இதுபோல ஆயிரக்கணக்கான தமிழ் ஆர்வலர்கள் இன்றைக்கு தமிழில் இணையத்தில் வலைப்பதிவுகளாய் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். பேனா பிடித்து ஒரு தமிழ் வார்த்தைகூட ஆண்டுகளாக எழுதாத விரல்கள் இன்றைக்கு இணையத்தில் தமிழில் எழுதித் தள்ளிக் கொண்டிருப்பது நல்ல சகுனமே. I guess.

எழுத்துதவிர ஆடியோ வீடியோ திறமைகளில் சிறந்தவர்களை தூக்கிவிடவும் பல தளங்கள் உள்ளன.உதாரணத்துக்கு நல்ல இசைஞானம் உள்ளோர், குரல்வளம் உள்ளோர் அதை வீடியோவாக்கி யூடியூபில் இட்டு கவனத்தை கவரலாம். நடிப்பு திறனுள்ளோர் தமிழில் நல்ல நகைச்சுவை ஓரங்க நாடகங்களை உருவாக்கி யூடியூபில் இட்டு ஜனங்களை ஈர்க்கலாம். உங்கள் மிமிக்கிரி திறமைகளை ஏன் மூழ்கடிக்கவேண்டும்?. "அசத்தபோவது யாரு" பாணி திறமை உங்களில் இருந்தால் சன் டிவி வரை போய்தான் அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்றில்லையே. ஒரு வெப்கேமராவோ அல்லது கைப்பேசி கேமராவோ வைத்து கொஞ்சம் கொஞ்சம் விளையாடினாலே சீக்கிரத்தில் வீடியோ தயாரிப்பில் வித்தகர் ஆகிவிடலாம். உலகளாவிய ஆடியன்ஸ். தூண்டில் தேடி வரும்.

மக்கள் மனம் கவர உங்களால் வீடியோக்களை தொகுத்து வழங்க முடியுமென்றால் ஒரு ஆன்லைன்டிவியை நீங்கள் உருவாக்கலாம். உங்கள் அபிமான பல்வேறு யூடியூப் வீடியோக்களையும் இன்னும் பிற வீடியோக்களையும் தொகுத்து உங்களால் ஒரு ஆன்லைன் டிவியை முற்றிலும் இலவசமாக உருவாக்கமுடியும்.http://www.mogulus.com என்ற தளம் இதற்கான வசதியை உங்களுக்கு தருகின்றது.நகைச்சுவை காட்சிகள், இனிய பாடல்கள், பார்க்க பிடிக்கும் திரைப்படங்களை நீங்கள் அழகாக தொகுத்து வழங்க தொடங்கினால் சீக்கிரத்தில் அரைத்தமாவையே அரைக்கும் பல பிரபல தொலைக்காட்சிகளையும் தோற்கடித்துவிடுவீர்கள். இதோ ஒரு சிம்பிள் சாம்பிள் தமிழ் ஆன்லைன் டிவி http://www.mogulus.com/tvtamil நினைவிருக்கட்டும் பூமாலை கேசட்டுகள் தான் பின்பொருநாள் பிரபல தொலைக்காட்சியானது.


எண்ணத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.
சொல்லில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.
செயலில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.
பழக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!”
-அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

இன்னும் ஒரு படி மேலே போய் உங்களை நீங்களே கூட ஒளிபரப்பு செய்துகொள்ளலாம் நேரடியாக.உங்கள் வெப்கேமை பலருக்கும் பார்க்க லைவ்வாக பகிர்ந்துகொள்ளலாம் அல்லது உங்கள் வீட்டு விழாக்களை அயல்ஊர் வாழ் நண்பர்கள் காண இணையத்தில் லைவ் டெலிகாஸ்ட் செய்யலாம் எல்லாம் இலவசமாக.http://www.ustream.tv என்ற தளம் இதற்கான வசதியை தருகின்றது. வெப்கேமராவை எங்கள் சென்னை வீட்டு டிவி முன் வைத்துவிட்டால் சிக்காகோவில் கிடைக்கா சென்னை டிவி சேனல்களையும் சிக்காகோவிலிருந்து காணலாம். ஐபோனிலும் இவ்வீடியோக்களை காண வசதியுள்ளது கூடுதல் பிளஸ். இங்கே ஒரு டெக்கீயை பாருங்கள் 24 மணிநேரமும் லைவ் கேமராவோடு. http://www.ustream.tv/channel/chris-pirillo-live

வெப்கேமராவில் நீங்கள் இருக்கும்போது வீடியோ திரையில் சில சித்து விளையாட்டுகளை எளியமுறையில் செய்ய கீழ்கண்ட ManyCam என்றமென்பொருள் உதவலாம். உங்கள் வெப்கேம் வீடியோ திரையில் எதிர்முனையோர் வியக்க நீங்கள் எழுத்துக்களை எழுதுதலாம். சில அனிமேசன் மாயா ஜாலங்களை செய்யலாம். நெருப்பு ,பூ, பனிபோன்றன விழும் எஃபெக்ட்களை கொண்டுவரலாம். மேலும் பின்புறங்களை இஷ்டத்துக்கும் மாற்றி முகமூடிகளை போட்டு கலாச இந்த இலவச மென்பொருள் உதவும்.
http://www.manycam.com/

வெகுஜன பத்திரிகை குமுதத்தில் இந்த இதழில் "டாப் 10 பிளாக்ஸ்" வரிசையில் நமது வலைப்பதிவிற்கு மூன்றாவது இடம் கிடைத்திருக்கின்றது.பெரும்பாலும் "போரடிக்கும்" தொழில்நுட்பத்தகவல்களையே தாங்கிவரும் நம் வலைப்பூ அந்த வரிசையில் வந்தது எனக்கு மிகுந்த ஆச்சரியமே.நண்பர்கள் பலரும் தகவலை தெரிவித்து வாழ்த்துதல் சொல்லியிருந்தார்கள்.உங்கள் ஆதரவால் இது சாத்தியமாயிற்று. நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள். குமுதம் குழுவிற்கும் நன்றி.

ரமணிசந்திரன் பிரிய மனம் கூடுதில்லையே தமிழ் புதினம் மென்புத்தகம். Ramani Chnadran Piriyamanam Kooduthillaye novel in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Friday, January 16, 2009

3G-யுடன் மடிக்கணிணிகள்

முன்பெல்லாம் GPRS என்கின்ற பெயரில் டயல்அப் இணைப்பு வேகத்தில் ”எங்கிருந்தாலும் இணையம்” வசதியை பெற்றிருப்பீர்கள். அதை 2.5G என்பார்கள். இப்போது அதே GPRS இன்னும் ஒரு படி முன்னேறி 3G எனும் பெயரில் வந்திருக்கின்றது. அட்டகாச வேகம் நீங்கள் எங்கிருந்தாலும் கிடைக்கும் குறிப்பாக மெட்ரோ ஏரியாவில். வீட்டிலும் விமானநிலையத்திலும் நீங்கள் Wifi பயன்படுத்தினால் வழியில் நீங்கள் 3G பயன்படுத்தலாம். யூடியூப் வீடியோ கூட சிக்கலின்றி தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டே பயணிக்கலாம். எங்கிருந்தாலும் இணையம் கிடைக்குமென்றால் அது 3G. அங்கிருந்தால் மட்டுமே இணையம் கிடைக்குமென்றால் அது WiFi.


இப்போதைக்கு இந்த 3G வசதி கைப்பேசிகளில் மட்டுமே இருந்து வருகின்றது. அதுவும் ஸ்மார்ட் ஃபோன்கள் எனப்படும் நோக்கியாவின் N வரிசைபோன்கள், ஆப்பிளின் ஐபோன்கள்,RIM-ன் பிளாக்பெர்ரிகளில் இதைக் காணலாம். ஏறக்குறைய ஒரு கணிணியின் வேலையையே முழுதாக செய்யும் இந்த ஸ்மார்ட்போன்களை நாம் கணிணியாகவே கணித்தோமானால் இன்றைக்கு உலகின் நம்பர் ஒன் கணிணி தயாரிப்பாளார் இடத்துக்கு நோக்கியா வந்துவிடுவார். அதை அடுத்துதான் HP, Dell வந்து மீண்டும் நான்காம் இடத்தை ஆப்பிள் பிடிக்கும். மடிக்கணிணியை கண்டு பிடித்த டொசீபா-வே 7 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஏற்கனவே கைப்பேசிகளில் இருக்கும் கேமராக்களை கணக்கில் கொண்டால் உலகில் அதிக அளவு காமெரா தயாரிப்பாளர் என்ற பெயர் நோக்கியாவிற்கே போய்விடுகின்றது.

இந்திய முகங்களை பார்க்க கடந்த முறை சிக்காகோ Devon Ave-போக வழிதவறிய போது iPhone 3G-யின் GPS ரொம்பவே உதவியாக இருந்தது. இந்த 3G வசதியை சீக்கிரத்தில் மடிக்கணிணிகளும் தன்னகத்தே கொண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சந்தைகளில் ஏற்கனவே இத்தகைய மடிக்கணிணிகள் நெட்புக்குகள் இருக்கலாம். இதனால் போகுமிடமெங்கும் அதிவேக இணைய இணைப்பு உங்கள் மடிக்கணிணியில் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அங்கும் ஒரு சிம் கார்டு போட வேண்டி இருக்குமோ?

சென்னையில் இது போல போகுமிடமெல்லாம் இணைய இணைப்பு வேண்டுமானால் இப்போதைக்கு இரண்டு சேவைகள் உள்ளனவென நண்பர் முகம்மது இஸ்மாயில்.H, PHD தெரிவித்திருந்தார்.

ஒன்று BSNL-ன் EVDO (Evolution-Data Optimized) சேவை.மாதம் 550 ரூபாயாம். எவ்வளவு வேண்டுமானாலும் வலைமேய்ந்து கொள்ளலாம். குறைந்த பட்சவேகம் 256 Kbps-ஆகவும் அதிக பட்சவேகம் 1024Kbps ஆகவும் இருக்கும். ஒரு PCMCIA கார்டு (BSNL data card ) கொடுப்பார்கள் அல்லது USB மோடமாகவும் வாங்கிக்கொள்ளலாம்.அதை உங்கள் மடிக்கணிணியில் செருகிக் கொள்ளவேண்டும். அவ்ளோதான். இவ்வசதி பெரும்பாலான தமிழக நகரங்களிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.வேகம் தான் வித்தியாசப்படலாம். Rental அல்லது Purchase செய்யவும் வசதி கொடுத்திருக்கின்றார்கள்.

இவ்வசதிஉள்ள நகரங்களின் வரிசையை பார்க்க கீழே சொடுக்கவும்
http://bsnlevdoclub.com/bsnl-evdo-coverage/bsnl-evdo-enabled-cities-in-india/

சென்னையில் எங்கெங்கு எவ்வளவு EVDO வேகம் கிடைக்கும் என இங்கே பார்த்து அறிந்து கொள்ளலாம்.
http://chennai.bsnl.co.in/News/EVDO_BTS.htm

மேலும் விவரங்களுக்கு
http://chennai.bsnl.co.in/News/EVDO.htm

இன்னொன்று Tata Indicom-ன் Photon சேவை. மாதம் 1500 ரூபாயாம். ஒரு USB மோடம் கொடுப்பார்கள்.சென்னையில் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே இது வேலை செய்கின்றது.
http://www.tataindicom.com/HSIA-photon-usb-personal.aspx

3G சேவை எப்போது சென்னைக்கு வருகின்றதாம்?
தேர்தலுக்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பு பெட்ரோல் விலையை குறைத்து விலைவாசி குறைந்துவிட்டது என படம் காட்டுவது போல 3G-யையும் வெளியிட்டு ஒளிருகின்றோம் என்று சொன்னாலும் சொல்வார்கள்.கடுமையான கஞ்சத்தனம்
தகுதியற்ற தற்பெருமை
எல்லையற்ற பேராசை
இந்தமூன்றும் மனிதனை நாசமாக்கிவிடும்-முகமதுநபி

ஜெய்சக்தி "எழுதி வைத்தாய் என்னை" புதினம் இங்கே தமிழில் மென் புத்தகமாக. Jaisakthi Ezhuthi Vaithaai Yennai novel in Tamil pdf ebook Download. Right click and Save Download


Email PostDownload this post as PDF

Tuesday, January 13, 2009

அறமா அகமா

கோப்புகளை ஆன்லைனில் சேமித்து வைத்து நண்பர்களுக்கு பகிரவென பல சேவைகள் இருந்தாலும் அவை அளந்து அளந்தே ஸ்டோரேஜ் ஸ்பேஸ்களை கொடுக்கின்றன. ஆனால் நான் சமீபத்தில் அறிய வந்த தளம் www.mybloop.com இது Unlimited space கொடுப்பதுடன் ஏற்றம் செய்யப்படும் ஒரு கோப்பின் அளவு அதிக பட்சமாக 1Gig வரைக்கும் இருக்கலாமென சுதந்திரம் கொடுத்திருக்கின்றார்கள். அதாவது ஒரு முழு திரைப்படத்தையே நீங்கள் ஏற்றம் செய்யலாம். Images can be hotlinked. இப்போதைக்கு சில நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டுமே அங்கத்தினராக முடிகின்றது. எப்படி காசு பண்ணுகிறார்களோ தெரியவில்லை.

பாரதம் போன்ற மக்கள் தொகை மிகுந்த தேசம் தொழில்நுட்பத்தை தங்களுக்கு லாவகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டியது மிக அவசியமாகின்றது. ஒன்றாம் தேதியானால் தமிழகத்தின் ATM-களில் நீண்ட வரிசைகளாம். குடும்பத்துடன் நுழைந்த அப்பா தன் பிள்ளைகளுக்கு பணம் எடுப்பது எப்படி என காட்டிக்கொடுத்துக் கொண்டிருக்க வெளியே வெயிலில் மண்டைகாய்ந்து விடுகின்றது என்றான் கோபால். பெரும்பாலோனோரின் சம்பளம் "Direct deposit" ஆகிவிடுவது இன்னொரு காரணம்.

மிழகத்தினர் தங்கள் மின் அட்டை ரீடிங் தகவல்களை (Reading details) கீழ்கண்ட தளத்தில் கண்டு கொள்ளலாமாம். உங்கள் TNEB மின்சார அட்டையில் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள Service Number தேவைப்படும்.http://www.tnebnet.org/newlt/menu2.html இப்போதைக்கு சென்னைவாசிகள் மட்டும் கீழ்கண்ட தளத்தில் மின்கட்டணத்தை ஆன்லைனிலேயே கட்டலாம். கடனட்டை அல்லது டெபிட் அட்டை பயன்படுத்தலாம். http://www.tnebnet.org/awp/TNEB/இதுவரைக்கும் தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளட்டுமேவென சொன்னேன்.

ண்பர் வி.சுப்பிரமணியன் அவர்கள் அவ்வப்போது கருத்து செறிந்த நல்ல மின்அஞ்சல்களை எனக்கு அனுப்பிவைப்பதுண்டு. அதில் ஒன்று இதோ...

அது ஒரு மலைக் கோயில் கனவான் ஒருவர் தரிசனம் முடித்து இறங்கி வந்து கொண்டிருந்தார்.அடிவாரத்தில் பிச்சைக்காரர்கள் கூட்டம். கனவான் தானம் செய்வதற்காகப் பணப்பையைத்திறந்தார். எல்லாமே நூறு ரூபாய் நோட்டுகள். சில்லரை மாற்றிவந்து பிறகு தரலாம் என்று பையை மூடினார். துடுக்கான ஒரு பிச்சைக் காரன் கேட்டான்,” 100 ரூபாயாக இருந்தால் என்ன, கொடுத்தால் பங்கிட்டுக் கொள்ள மாட்டோமா?” கனவான் திரும்பிப் பார்த்தார்.”என்ன முறைக்கிற, அடிச்சிடுவியா?” என்றான். கனவான் அடிப்பது போல் கையை ஓங்கினார். அவன்,” ஐயோ! அடிச்சிட்டார்” என்று அலறினான். சக பிச்சைக் காரர்களும் சூழ்ந்து கொண்டு கூவினர். கனவான் நிலைகுலைந்தார். அவ்வமயம் அறங்காவலர் அங்கு வந்தார். யாசகர்கள் மூலைக்கு ஒருவராக ஓடி அமர்ந்து கொண்டனர்.

கனவான் மனம் வருந்தி அச் சான்றோரிடம் கேட்டார்; “ ஐயா! தர்ம நெறியெல்லாம் தர்மம் செய்வோருக்கு மட்டும் தானா? பிச்சை ஏற்பவர்களுக்கு எந்த நெறிமுறையும் இல்லையா?”

அச்சான்றோர் கூறினார்,” மகனே! ஏற்பவர்களுக்கும் நீதி நெறிகள் உண்டு. அதை மீறும் போது அவர்கள் மேலும் மேலும் வறுமமைத் துன்பத்துக்கு உள்ளாவார்கள். வண்டுகள் மலர்களுக்குத் துன்பம் ஏற்படாமல் தேனை அருந்துவது போல கொடுப்பவர் மனம் நோகாமல் யாசிக்கவேண்டும். இளம் தளிரை ஒரு புழு அரித்துத் தின்பது போல கொடுப்பவர்க்கு அச்சம் உண்டாக்கிப் பிச்சை பறிக்கக்கூடாது. அது வெறும் பாவமன்று. அகம்பாவம், பெரும்பாவம் என்றார்.

ஆயும் மலர்த் தேன்வண்டு அருந்துவதுபோல் இரப்போர்
ஈயும் அவர் வருந்தாது ஏற்றல் அறம்- தூய இளம்
பச்சிலையைக் கீடம் அறப்பற்றி அரிப்பதுபோல்
அச்சமுற வாங்கல் அகம்.
-நீதி வெண்பா
{கீடம்- புழு, அகம்- அகம்பாவம்}
வாழ்க்கையில் வெற்றி பெற
மூன்று வழிகள் உள்ளன.
பிறரைக்காட்டிலும் அதிகமாக
அறிந்து கொள்ள முயலுங்கள்.
பிறரைக்காட்டிலும் அதிகமாக
உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
பிறரைக் காட்டிலும் குறைவாக
பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
-வில்லியம் ஷேக்ஸ்பியர்

ஜோதிடரத்னம் S.சந்திரசேகரன் "நீங்களும் ஜோதிடர் ஆகலாம்" இங்கே தமிழில் மென் புத்தகமாக. Jothidarathnam S Chandrasekaran "Neengalum Jothidar Aagalaam" astrology in Tamil pdf ebook Download. Right click and Save Download Source:Tamiloviam.com


Email PostDownload this post as PDF

Sunday, January 11, 2009

விர்சுவல்பாக்ஸ்

பெரும்பாலான டெல், டொஷீபா, எச்பி, ஐபிஎம் லெனோவா, சோனி போன்ற நிறுவனங்களின் மடிக்கணிணிகளை வாங்கும்போது இன்றைக்கு அவை கூடவே விண்டோஸ் விஸ்டாவோடு கூட வரும்.இவை OEM எனப்படும் original equipment manufacturer மென்பொருள் உரிமமோடு வருகின்றன.அதாவது உங்கள் மடிக்கணிணியோடு கூட வரும் விண்டோஸ் விஸ்டா ஒரிஜினல் விண்டோஸ் விஸ்டாவாகும்.அந்த வின்டோஸ் விஸ்டாவுக்கான விலையையும் சேர்த்து கொடுத்துதான் அந்த மடிக்கணிணியை நீங்கள் வாங்கியிருக்கின்றீர்கள் என்று பொருள். உங்கள் மடிக்கணிணியின் பின்னால் ஒட்டப்பட்டிருக்கும் அந்த பச்சக் கலரு சான்றிதழ் தான் அதற்கான அத்தாட்சி.

நீங்கள் இதுமாதிரியான ஒரிஜினல் வின்டோஸ் வைத்திருப்பதால் முதல் நன்மை உங்கள் வின்டோசால் எளிதாக இணையம் வழி அவ்வப்போது மைக்ரோசாப்டின் "Windows update" செர்வரோடு தொடர்புகொண்டு உங்கள் கணிணியின் விண்டோசின் ஓட்டை ஒடசல்களையெல்லாம் சரியாக்கி கொண்டே வரும். இதனால் அநேக வைரஸ்களிடமிருந்தும் ஹேக்கர்களிடமிருந்தும் நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம். இன்னொரு நன்மை உங்கள் கணிணியில் என்ன பிரச்சனை வந்தாலும் மைக்ரோசாப்ட் ஐயா அவர்களின் சப்போர்ட் டிப்பார்ட்மென்டை தைரியமாகத் தொடர்புகொள்ளலாம்.

ஆனால் பெரும்பாலான நம்மவர்கள் செய்யும் தவறு என்னவென்றால் நம் மடிக்கணிணியோடு வந்த விண்டோஸ் விஸ்டா அல்லது எக்ஸ்பி Home edition ஆக இருப்பதால் அது வழி நிறைய சாதிக்க முடிவதில்லை. நொண்டது நொடிச்சதுக்கெல்லாம் அழும்.IIS இருக்காது.அது முடியாது.இது முடியாது என கரைந்துகொண்டே இருக்கும்.ஆனால் மடிக்கணிணியோ 4கிக் மெமரியுடனும் 300கிக் ஹார்ட் டிரைவுடனும் எதையும் தாங்க தயாரான நிலையிலிருக்கும்.

இவ்வேளைகளில் இருக்கின்ற உங்களின் ஒரிஜினல் வின்டோஸ் விஸ்டாவை தூக்கிவிட்டு அதற்கு பதிலாக ஒரு கிராக் செய்யப்பட்ட வின்டோஸ் செர்வரை உங்கள் மடிக்கணிணியில் நிறுவுவது அவ்வளவு புத்திசாலித்தனமல்ல.

இங்கு நீங்கள் விர்சுவல் செர்வரை பயன்படுத்தலாம்.அதாவது உங்கள் வின்டோஸ் விஸ்டாவினுள்ளேயே இன்னொரு வின்டோஸ் செர்வரை ஓட்டலாம்.இதனால் உங்கள் விஸ்டா ஒரிஜினலாக இருந்து கொண்டே உங்களுக்கு பாதுகாப்பைத் தரும் அதேவேளையில் கிராக்கப்பட்ட விண்டோஸ் செர்வரை விர்சுவர் செர்வராக உங்கள் மடிக்கணிணியில் ஓட்டுவதால் உங்களுக்கு கூழும் கிடைக்கும் மீசையும் பாதுகாப்பாயிருக்கும்.இதற்காக VMware Workstation அல்லது Microsoft Virtual PC போன்ற விர்சுவல் செய்யும் மென்பொருள்களை நீங்கள் பயன்படுத்தலாம். என்ன கொஞ்சம் காசு கேட்பார்கள். இதனால் அவைகளுக்கு பைபை சொல்லிவிட்டு இலவச விர்சுவலைசேசன் மென்பொருள் பக்கம் வரலாம்.சன் நிறுவனத்தின் திறந்த மூல படைப்பான VirtualBox-ஐ பயன்படுத்தலாம். இம்மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது. ஒருமுறை முயன்றுபாருங்கள்.விடவே மாட்டீர்கள்.உண்மையிலேயே இதை பயன்படுத்துவது மிக எளிது.இவ்வளவு நாளாக இதை மிஸ் பண்ணியிருந்தோமே என்று பின்பு தோன்றும்.(மேலே படத்தில் லினக்ஸினுள் வின்டோஸ் ஓடுவதை காணலாம்)

Download Virtual box here.
http://www.virtualbox.org/wiki/Downloads
(Updated)வீட்டுக்குள் இருக்கும் போது
ஹிந்து, முஸ்லீம், கிறிஸ்டியனாக இரு
வெளியில் வரும் போது மனிதனாக இரு.

வாஸந்தி "வல்லினமே மெல்லினமே" புதினம் இங்கே தமிழில் மென் புத்தகமாக. Vaasanthi "Vallinamey Mellinamey" novel in Tamil pdf ebook Download. Right click and Save Download


Email PostDownload this post as PDF

Thursday, January 08, 2009

கடவுள் எதற்கு?

மந்தமான பொருளாதாரமும் குறைந்துவரும் வேலைவாய்ப்புகளும் ஆலயங்களையும் கோவில்களையும் நிரப்பியிருக்கின்றன. வருகின்றவர்களெல்லாம் மனுக்களோடு வருகின்றார்கள். இறைவனின் இன்பாக்ஸ் இப்போதைக்கு ஃபுல். ஒரே ஒரு ஆறுதல் விவாகரத்துக்கு விரையும் தம்பதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாம்.பின்னே இருக்கின்ற விலைவாசியில் யாருக்கு அது கட்டுபடியாகும்? கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

சகல தொல்லைகளுக்கும் காரணம் இந்த கடவுள் தான். அவனை ஒரேயடியாக விட்டுதொலைத்தால் என்ன என யோசித்த சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு "நல்லவனாய் இரு. கடவுள் எதற்கு" என்ற கோஷத்துடன் கிளம்பியிருக்கின்றார்கள். வாஷிங்டனிலும் லண்டனிலும் போஸ்டர்கள் நாத்திகம் பேசுகின்றன. அப்படியாவது ஒரு யுட்டோபியா கிட்டாதா என்ற நம்பிக்கையில்.

யூனிவர்ஸ் என்பதே பொய் என்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட யூனிவர்ஸ்கள் அங்கே மிதந்துகிடப்பதால் மல்டிவெர்ஸ் என்பதுதான் சரி என்கின்றார்கள். அத்தனை மல்டிவெர்ஸ்கள் கணக்கின்றி இருந்தும் நம் பூமியில் மட்டுமே உயிரினம் வாழமுடிகின்றதென்றால் யாரோ ஒருவர் ஆரம்பத்தில் கொத்தவேலை செய்திருக்கின்றார் என்று தானே அர்த்தம்.

சிறுசுகளை பயமுறுத்தி சாப்பிடவைக்க இல்லாத பூச்சாண்டி தேவைப்பட்டான். பெருசுகளை கட்டுக்குள் வைக்க இல்லாத தெய்வம் ஒன்று தேவைப்படுகின்றது. முறுக்கிருக்கும் போது அவன் "அவன் இல்லை" என்று சொன்னாலும் தள்ளாடும் போது அவனுக்கு சந்தேகம் வந்துவிடுகின்றது.

கனவில் எவனோ ஒருவன் துப்பாக்கியிலிருந்து சுட்ட தோட்டா ஒன்று என் தொண்டையை கிழிக்க பயந்து போய் விழித்தேன். அப்படா நிஜ உலகில் இன்னும் பத்திரமாக இருக்கின்றேனே என மகிழ்ந்து கொண்டேன். ஒருவேளை நிஜ உலகில் நான் இப்படிச் சாகும் போதும் வேறெங்கோ விழிப்பேனோ? Me gone crazy?தங்கள் கால்களால்
பறவை சிக்கிக் கொள்ளும்;
தன் நாவினால்
மனிதன் சிக்கிக் கொள்வான்
-தாமஸ் புல்லர்

Update: Link fixed - முந்தைய காஞ்சி சங்கராச்சாரியார் "தெய்வத்தின் குரல்" இங்கே தமிழில் மென் புத்தகமாக. Kanchi Sankaracharya Theivathin Kural in Tamil pdf ebook Download. Right click and Save Download


Email PostDownload this post as PDF

Tuesday, January 06, 2009

ஓட்டத் தடா

ன்னொரு ஆண்டும் தொடங்கி அது யாரோ தன்னை துரத்தும் வேகத்தில் ஓடிக்கொண்டே இருக்கின்றது. உள்ளே என்ன பரிசுப்பொருள் இருக்கின்றதோ என்று ஒரு பரிசுபொட்டலத்தை திறந்து பார்க்கத் துடிக்கும் ஒரு குழந்தையின் மனநிலையில் இல்லை நாம். அடுத்து என்ன நடக்கப்போகின்றதோ என்று ஒரு திகில் படத்தை பார்க்கும் மனநிலையில் தாம் நாம் இருக்கின்றோம்

ருக்குப் போய் ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்திருந்தான் கோபால். போய் ரொம்ப நாளாகிவிட்டதால் ஆர்வமாய் விசாரித்தேன். கால்மணி நேரத்துக்கொருமுறை வீட்டிலிருந்து செல்போன் வருகின்றதாம் பத்திரமாய் இருக்கின்றாயாவென்று. பொல்லூசன் ரொம்பவாகிக்கிட்டே போகுதுடாவென்று சலித்துக்கொண்டான். தூசு மாசு ஒருபக்கமென்றால் வாகன சத்த மாசு இன்னொரு பக்கம்.சாலைகளில் இளசுகள் வீசும் விழி மாசு தான் கொதிக்கும் வெயிலில் ஒரே ஆறுதல் என்றான்.

ம் ஊரில் குடும்பத்துக்கு ஒரு கணிணி என்ற நிலை மாறி ஆளுக்கு ஒரு கணிணி என்ற நிலை வர இன்னும் சில காலம் ஆகலாம். அதுவரைக்கும் நாம் சில கட்டுப்பாடுகளை வைத்துக்கொள்ளவேண்டியுள்ளது. இரத்தக்களறி காட்டும் கம்ப்யூட்டர் வார் கேம்கள், அப்படி என்னத்தான் இருக்கின்றதுவென பார்க்க நிறுவிய ஏடாகூட வயசுவந்தோர் கேம்கள், கணக்கு வழக்குகளையெல்லாம் வைத்திருக்கும் அக்கவுண்டிங் பயன்பாடுகள் இதுபோன்றவற்றையெல்லாம் தவறியும் குழந்தைகளோ அல்லது பிறரோ ஓட்டிவிடாமல் இருக்க பாஸ்வேர்ட் போட்டுவைக்க Game Protector எனும் இலவச மென்பொருள் உதவலாம். அந்த குறிப்பிட்ட கடவுசொல்லை கொடுத்தால் மட்டுமே அந்த கேமோ அல்லது புரோகிராமோ ரன் ஆகும். தெரிந்தோ தெரியாமலோ சிறுசுகளும் குழந்தைகளும் கேம் மட்டுமல்லாமல் பிற குறிப்பிட்ட புரோகிராம்களையும் ஓட்ட விடாமல் தடுக்க இந்த gameprotector நிச்சயம் உதவும்.

Download from here
http://www.gameprotector.com/gameprotector_setup.exeஎல்லோரையும் நம்புவது
அபாயகரமானது.
ஒருவரையும் நம்பாமல் இருப்பது
இன்னும் அபாயகரமானது
- ஆப்ரகாம் லிங்கன்

சுஜாதா "கடவுள் வந்திருந்தார்" மேடைநாடகம் இங்கே தமிழில் மென் புத்தகமாக. Sujatha Kadavul Vanthirunthaar Stage Drama in Tamil pdf ebook Download. Right click and Save Download


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்