உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, June 29, 2006

கேட்டான் பாரு ஒரு கேள்வி-2

May 15, 2004-ல் என்னுடைய "கேட்டான் பாரு ஒரு கேள்வி"-யாக கீழ்கண்டபடிஎழுதியிருந்தேன்.
//இணயத்தில் தமிழ் வலைப்பதிவுகள் நாளொரு வண்ணமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறன.எனக்கு தெரிந்து இரு இடங்களில் Tamil Bloggers List உள்ளது.அனைத்து வலைப்பதிவுகளையும் மேயும் போது சில வலைப்பதிவுகள் பல மாதமாக செயலற்று இருக்கின்றன.சில சோதனை பக்கமோடு நின்று விட்டன.என்னோட கேள்வி .Active Blogs மற்றும் New Blogs- என்று எங்காவது list உள்ளதா.அல்லது இதற்க்கு ஏதாவது வேறுவழி உள்ளதா செயலற்ற பக்கங்களுக்கு அடிக்கடி போய் நேரம் வீணாகிறது என நினைகிறேன்.நீங்க எப்படி சம்மாளிக்கிறீங்க.? //

சில காலத்தில் இதற்கு விடையாக தமிழ்மணமும் தேன்கூடும் இன்னும் பல ரீடர்களும் அமைந்தன.மகிழ்ச்சி.

இப்போது இன்னொரு கேள்வி.
பெரும்பாலான நமது பதிவுகள் seasonal-ஆக இருந்தாலும் அநேக பதிவுகள் எப்போதும் படிக்கும் படியான கட்டுரைகளாகவோ அல்லது தகவல்களாகவோ அமைந்து விடுவது உண்டு.அப்படியான பதிவுகள் இன்றைய நிலையில் எனக்கு தெரிந்து சில காலங்களில் சேமிப்பு கிடங்குக்கு சென்று விடுகின்றன.புதிதாக தகவல் தேடிவருவோருக்கு அது உதவுவது கடினம்.
ஆங்காங்கே பல வலைப்பூ கிடங்குகளில் கிடக்கும் குறிப்பிட்ட பதிவுகளை ஒரு காட்சியகத்தில் வைக்க வழி உண்டா?.தொழில் நுட்பம் உள்ளதா? டாகிங்,காட்டகிரி,கில்லி எல்லாம் இதைத்தான் செய்கிறதா?.சிறுகேள்வி.கேட்டு பார்க்கலாம் என்று தோன்றியது.

அப்டேட்:

வெங்கடரமணியின் "Archive Browser for Blogger blogs" என்ற புராஜெக்ட் பற்றிய தகவல் இங்கே. இந்த உலாவி எந்த அளவுக்கு உதவுகின்றது,முழு வலைபதிவையும் அல்லாமல் தனி பதிவை மட்டும் சேமிக்கமுடியுமா என இன்னும் முயன்று பார்க்கவில்லை.எனினும் ரமணியின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.
http://www.anniyalogam.com/scripts/browser.php


Email PostDownload this post as PDF

Monday, June 26, 2006

தமிழ்மணத்துக்கு என்ன விலை கொடுக்கலாம்?

பொதுவாக ஒரு வலையகத்தின் மதிப்பானது அதன் வயது,அந்த வலையகத்துக்கு பிற வலையகங்களிலிருந்து வரும் சுட்டிகளின் எண்ணிக்கை,எங்கெல்லாம் அவ்வலையகத்தின் பெயர் வரிசைபடுத்தப்பட்டுள்ளது மற்றும் அவ்வலையகத்துக்கு அன்றாடம் வரும் சொடுக்குகளின் எண்ணிக்கை ஆகியவற்றை பொறுத்ததாகும்.இங்கே ஒரு வலைத்தளம் தமிழ்மணம் டொமைன் பெயரின் குத்து மதிப்பு விலை என்ன என கணக்கிட்டு கொடுக்கிறார்கள்.கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்கி "Check the Resale Value of Your Domain Name"-ல் www.thamizmanam.com என தட்டி "Calculate Price"-யை சொடுக்கவும்.ஏதோ ஒரு கணக்கு கணக்கிட்டு கணிப்பு கணித்து டாலரில் விடையறுக்கிறார்கள்.இதில் தனிப்பட்ட அந்த டொமைன் பெயரின் பிரபலம் மற்றும் அதோடு கொடுக்கப்படும் தற்போது இயங்கும் மென்பொருளின் மதிப்பு ஆகியவை அடங்காது.இத்தகவலானது எல்லா தளங்களுக்குமே பொருந்தும்.
http://www.domains-for-sale-by-owners.com/

இவ்வேளையில் விலைமதிப்பில்லா வலைத்தமிழ்சேவை புரிந்த தமிழ்மணம் காசி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.மீண்டும் இன்னொரு மெகா திட்டத்தோடு மீண்டும் தமிழ் கணிணி வலை உலகில் வலம் வர வாழ்த்துக்கள்.


Email PostDownload this post as PDF

Saturday, June 24, 2006

புள்ளிகளின் பயணம்-What u got inside?

கணிணியினுள்ளான புள்ளிகளின் (bits) பயணமும் இது போன்றது தானோ என அழகாக படம் போட்டு காட்டியிருக்கிறார்கள் இங்கே.
http://www.newportharbor.us/computerworks.htm

மெகா சிபியூகளின் லிஸ்ட் இங்கே
http://www.cpu-collector.com/menu/list.htm

உங்கள் கணிணியில் எந்த சிபியூ உள்ளது மற்றும் அதன் விவரங்கள் அறிய உதவும் இலவச மென்பொருள் இங்கே.
http://www.cpuid.com/cpuz.php

and a wellknown joke about "intel inside"

Q: What's another name for the "Intel Inside" sticker they put on
Pentiums?
A: The warning label.


Email PostDownload this post as PDF

Thursday, June 22, 2006

எல்லா வெப்சைட் பாஸ்வேர்ட்களும் இங்கே

பொதுவாக நாம் சில வலைத்தளங்களுக்கு செல்லும் போது அவற்றில் நுழைய பயனர் பெயர் (username) மற்றும் கடவுசொல் (password ) கேட்கப்படுவது வழக்கம்.(Eg: dinamalar.com,nytimes.com).அவை ஒருவேளை உங்களிடம் இல்லாவிட்டால் நீங்கள் புதிதாக பதிவுசெய்ய வேண்டி வரும்.அவ்வாறு பதிவு செய்ய நீங்கள் சில நிமிடங்கள் செலவு செய்ய வேண்டும்.சில சமயம் உங்கள் பல விவரங்களை கூட கேட்பார்கள்.அதற்கு பொறுமை இல்லையா இதோ ஒரு வலையகம் இலவசமாக அப்படி பட்ட வலையகங்களுக்கான பயனர் பெயர் மற்றும் கடவுசொல்களை வழங்குகிறது.
Just type in web site name and click "Get logins".You are all set!!!.

http://www.bugmenot.com/

வகை:இலவச சேவைகள்


Email PostDownload this post as PDF

Wednesday, June 21, 2006

லோகோ ரகசியம் : அடிடாஸ்


அடிடாஸ்-adidas ஜெர்மனியை சேர்ந்த புகழ் பெற்ற காலணி ஷூ மற்றும் விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம்.இதன் பெயர் இதன் நிறுவனரான Adolf(Adi) Dasler-ல் இருந்து வந்தது.மற்றபடி இதன் பெயர் ரகசியம் All Day I Dream About Sports (or Soccer or Sex) அல்ல. இந்நிறுவன லோகோவிலுள்ள மூன்று முக்கோண துண்டுகள் அவர் மூன்று மகன்களை குறிக்கிறது என்கிறார்கள்.1920-லேயே ஷூ தைத்து விற்ற அடி 1949-ல் இதை ஒரு நிறுவனமாக்கினார்.1980-களில் அடிடாஸ் காலணிகள் இளசுகள் மற்றும் மத்திய வயதினர் மத்தியில் கொடிகட்டி பறந்தது.இன்றைய 2006 உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் official partner இவர்கள்.இப்போட்டிகளுக்கு கால்பந்து வழங்குபவர்களும் இவர்களே.

டெயில் பீஸ் - PUMA - புமா என்பது Adi-யின் சகோதரர் Rudolf Dassler-யின் போட்டி ஷூ கம்பனி.Sister concern மாதிரி Brother concern எனலாமா?

வகை:லோகோ ரகசியம்


Email PostDownload this post as PDF

Friday, June 16, 2006

வெள்ளி vs திங்கள் சிறப்புக் கண்ணோட்டம்

வெள்ளி மாலை வேலை முடிந்து வீட்டுக்கு போகும் போது பெரும்பாலோருக்கு எப்படி இருக்கும்?.அது போல திங்கள் காலை வீட்டிலிருந்து வேலைக்கு போகும் போது பெரும்பாலோருக்கு எப்படி இருக்கும்? என்பது பற்றிய சிறப்பு கண்ணோட்டம் இதோ.தொடுப்பை சொடுக்கி பாருங்கள்.

http://smg.photobucket.com/albums/v366/brat

வகை:நகைச்சுவை


Email PostDownload this post as PDF

Thursday, June 15, 2006

ரியல் மீடியா to MP3 மாற்றி

உங்களிடமுள்ள ரியல் மீடியா கோப்புகளான *.rm, *.ra, *.rmvb ஆகிய கோப்புகளை MP3-களாக மாற்ற இதோ ஒரு எளிய இலவச மென் பொருள்.கீழ்கண்ட சுட்டியை சொடுக்கி இறக்கம் செய்து கொள்ளலாம்.

Yes it is Free-RM-to-MP3-Converter.

வகை:இலவச சேவைகள்
வகை:தொழில் நுட்பம்.
வகை: தமிழ் வீடியோ மூவீஸ் MP3.
Tamil Video Movies MP3


Email PostDownload this post as PDF

Wednesday, June 14, 2006

அண்ணா மேம்பாலமும் கூகுளும்கூகிளின் சமீபத்திய பீட்டா வெளியீடான கூகிள் எர்த் 4 (Google Earth Release 4 - BETA) எனப்படும் மென்படைப்பு முன்னைய வெளியீட்டிலிருந்து தரம் உயர்த்தி சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது.குறிப்பாக இந்திய சேட்டலைட் மேப்புகள் ஓரளவு தெளிவாக இருக்கினறன.சென்னை மேம்பாலங்கள்,சமாதிகள்,பனகல் பார்க் மற்றும் அனைத்து முக்கிய இடங்களும் தெளிவாக தெரிகின்றன.இம்மென்பொருள் வழி சென்னை மட்டுமின்றி அனைத்து நகரங்களையும்,ஊர்களையும் ஏன் உங்கள் வீட்டைக்கூட சேட்டலைட் பார்வை பார்க்கலாம் .கொஞ்சம் பொறுமை வேண்டும் அவ்வளவு தான்.இதோ பக்கத்தில் சென்னை ஜெமினி மேம்பால சேட்டலைட் பார்வை உங்களுக்காக.கீழே கொடுக்கப்பட்ட சுட்டியை சொடுக்கி இலவச இம்மென்பொருளை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவி பாருங்கள்.
http://earth.google.com/earth4.html

வகை:சலோ இந்தியா
வகை:தமிழ்நாடு
வகை:இலவச சேவைகள்


Email PostDownload this post as PDF

Tuesday, June 13, 2006

கிரெடிட் கார்டின் விலை என்ன? - டிப்ஸ்

கடன் அட்டையை தேய்த்து தேய்த்து நீங்கள் பொருள் நுகர்வோராயின் நினைவில் கொள்ள சிறு குறிப்பு இங்கே.கடன் அட்டையால் பொருள் வாங்கும் போது பொருளின் விலையை தவிர வேறு என்ன அதிகமாய் செலவு வர வாய்ப்புக்கள்???

1. Annual fee எனப்படும் வருடாந்திர கட்டணம்
இது எல்லா கடன் அட்டைகளுக்கும் பொருந்துவதில்லை.சில கடன் அட்டைகள் வருடாந்திர கட்டணம் வசூலிக்கப்பதில்லை.சில அட்டைகள் membership program- rewards- rebates-points towards merchandise or travel என்பார்கள்.கவனம் தேவை.வருட இறுதியில் membership fee என அதற்கெல்லாம் வசூலித்துவிடுவார்கள்.

2.Interest rate எனப்படும் வட்டிவிகிதம்
ஒவ்வொரு மாதமும் நீங்கள் கடன் வாங்கிய மொத்த பணத்தையும் நீங்கள் திருப்பி செலுத்தாவிட்டால் கடன் அட்டை நிறுவனத்துக்கு நீங்கள் ஒரு குறிப்பிட்ட விகிதம் பணத்தை செலுத்த வேண்டி வரும்.இந்த விகிதம் அட்டைக்கு அட்டை வேறுபடும்.

3.Late fee எனப்படும் தாமத கட்டணம்
அந்தந்த மாதம் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகையை செலுத்தாவிட்டால் Late fee எனப்படும் இந்த தாமத கட்டணம் தானாக வந்துவிடும்.

4.Cash advance fee எனப்படும் முன்பணக் கட்டணம்.
கடன் அட்டை வைத்து தானியங்கி பணம் வழங்கிகளிலும்(அதாங்க ATM) பணம் எடுக்கலாம்.
ஆனால் இது ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டிய அணுகுமுறை.ஏனென்றால் இதற்கு நீங்கள் செலுத்தும் விலை அதிகமாயிருக்கும்.ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படும்.மட்டுமின்றி எடுக்கப்பட்ட பணத்திற்கு செலுத்த வேண்டிய வட்டி விகிதம் மிக அதிகமாக இருக்கும்.

அவ்ளோதான்.இவ்வளவும் தெரிந்து உஷாராய் கடன் அட்டையை பயன் படுத்தினால் கடன் அட்டை ஒரு தொல்லையாய் இருக்காது.

வகை:பொது அறிவு


Email PostDownload this post as PDF

Monday, June 12, 2006

மைக்ரோசாப்டின் விர்சுவல் இந்தியா - தமிழில்


இந்தியாவை மேப்(Map) போடும் மைக்ரோசாப்டின் முயற்சிதான் அதன் "VirtualIndia" புராஜெக்ட்.தமிழிலும் உருவாகிவருகின்றதாம்.பக்கத்திலுள்ள படத்தை கிளிக்கி பார்க்கவும்.அமெரிக்காவில் Google earth,Microsoft virtual earth or Street and trips,Mapquest,Yahoo maps போன்றவை மிகப் பிரபலம்.வழி தெரியாத இடங்களுக்கு வழிகாட்டுவதில் (Directions)இவை மிக இன்றியமையாதவை.அதுபோல இந்தியாவில் "VirtualIndia" புராஜெக்ட் எந்த அளவுக்கு வெற்றிபெறும் என்பது போகப் போகத்தான் தெரியும்.கீழ்க்கண்ட லிங்க் இப்புராஜெக்ட் பக்கத்துக்கு இட்டு செல்கிறது.
http://virtualindia.msresearch.in/

முந்தைய மைரோசாப்டின் மாயபூமி பற்றிய எனது பதிவு இங்கே
Microsoft`s Virtual earth

வகை:சலோ இந்தியா
வகை:தமிழ்நாடு
வகை:தொழில் நுட்பம்.


Email PostDownload this post as PDF

Saturday, June 10, 2006

மெகா டமில் MP3 டவுன்லோட் பேஜ்

புதுசு பழசு ரவுசு லவ்சு ரிமிக்சு ஹிட்சுனு வகைவகையாய்.
நோ கிரெடிட்கார்ட்,நோ யூசர் அக்கவுண்ட் ரெக்கொயர்ட்.
வீக்கெண்ட் ஸ்பெஷல்.வாடா.. வாடா.. வாயா..

http://www.mlanka.com/songs/

வகை: தமிழ் வீடியோ மூவீஸ் MP3.
Tamil Video Movies MP3


Email PostDownload this post as PDF

Wednesday, June 07, 2006

ஆங்கில TV தொடர்கள்- இசை வீடியோக்கள் ஆன்லைனில் இலவசமாக

உங்கள் அபிமான ஆங்கில தொலைக்காட்சித் தொடர்கள்,காமெடி ஷோக்கள்,கார்டூன்கள்,பாலிவுட் ஹிந்தி திரைப்பட வீடியோ பாடல்கள்,மேற்க்கத்திய இசை வீடியோக்கள், இன்னும் அநேக வீடியோக்களை இலவசமாக ஆன்லைனில் கண்டுகளிக்க இதோ ஒரு தளம்.
http://www.peekvid.com/

வகை: தமிழ் வீடியோ மூவீஸ் MP3.
Tamil Video Movies MP3


Email PostDownload this post as PDF

Tuesday, June 06, 2006

விண்டோஸ் எக்ஸ்பி தமிழில்...


நீங்கள் பயன்படுத்தும் ஆங்கில Windows XP-யை தமிழுக்கு மாற்ற வேண்டுமா இதோ ஒரு மென்பொருள் உங்களுக்காக.Windows XP-யின் அனைத்து கட்டளைகளையும் மெனுக்களையும் தமிழில் காட்டுகிறது.Windows XP Language Interface Pack-Tamil எனப்படும் இம்மென்பொருளை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் install செய்யவும்.இறக்கம் செய்ய உங்கள் கணிணியின் windows XP Genuine ஆக இருத்தல் வேண்டும் மற்றும் நீங்கள் Hotmail-லில் பயனர் ஐடி வைத்திருக்க வேண்டும்.இங்கே ஒரு screen shot உங்கள் பார்வைக்கு.

மைக்ரொசோப்டின் விளக்கம் இதோ:
Windows XP ® தமிழ் இடைமுக தயாரிப்பு
Windows XP தொகுப்பிற்கான தமிழ் இடைமுகத் தயாரிப்பு, பெரும்பான்மையான Windows XP பயனீட்டாளர் இடைமுகத்திற்கு, தமிழ் இடைமுகத்தை அளிக்கிறது. நிறுவலின்போது, இந்த தமிழ் இடைமுகத் தயாரிப்புக்கு Microsoft Windows -இன் நம்பகச் சோதனை தேவைப்படும். அங்கீகரிக்கப்பட்ட,முழுமையாக உரிமம் பெற்ற Windows -இன் நகலைத் தான் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்பதை இந்தச் சோதனை உறுதிப்படுத்தும். நம்பகமான Windows
மென்பொருளைப் பயன்படுத்துவதன் பயன்கள் குறித்து மேலும் அறிய, Genuine Microsoft Software -ஐ பார்க்கவும்.

http://www.bhashaindia.com/downloadsV2/Category.aspx?ID=2
or
http://www.microsoft.com/downloads/details.aspx?displaylang=ta

வகை:தொழில் நுட்பம்.


Email PostDownload this post as PDF

Friday, June 02, 2006

வலை இணைப்பின்றி வலைமேய

தலைப்பு விநோதமாய் இருந்தாலும் இது ஒரு விதத்தில் சாத்தியமே.எப்படி?.உதாரணமாக ஒரு வலை தளம் அநேக content-களுடன் இருக்கிறதென வைத்துக்கொள்வோம்.ஆன்லைனிலேயே வலைமேய்வது content-களை படிப்பது சில சமயம் செலவு மிக்கதாக இருக்கலாம்.இதை தவிர்க்க இருக்கவே இருக்கிறது வலைதள ரிப்பர் எனப்படும் Web Site Rippers or We Site Copiers.இம்மென்பொருள் நீங்கள் குறிப்பிடும் வலைதளத்தை முழுதாக உறிஞ்சி உங்கள் கணிணியில் வைத்துக்கொள்ளும்.அப்புறமாக நீங்கள் நெட்டை துண்டித்தபிறகும் அந்த இணையதளத்தை பார்வையிட படிக்க அது உதவும்.ஆன்லைனில் ரொம்ப படிப்பவர்களுக்கு இம்மென்பொருள் மிக்கவே உதவலாம்.
http://www.httrack.com/
Yes u can browse offline.நினைவிருக்கட்டும் இது ஒரு இலவச மென்பொருள்.

வகை:தொழில் நுட்பம்.


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்