1.இரட்டை குழந்தைகளில் ஒருத்தன் பெயர் பீட்டர் என்றால் இன்னொருத்தன் பெயர் இன்னா?
Repeater
2.கடலை பாத்து tide என்னா சொல்லி இருக்கும்?
Long time no sea
3.கணக்கு புத்தகம் ஏன் பெஜாரா இருக்கு?
It has got lot of problems to solve
4.முருகனால நெட் ப்ரொஸ் பண்ணமுடில ஏன்?
Because mouse is with pillaiyaar
5.காக்கை ஏன் கருப்பா இருக்கு?
Because its mummy and dady is black
வகை:நகைச்சுவை
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Sunday, July 11, 2004
கடி வாங்கலையோ கடி
Posted by
PKP
at
7/11/2004 09:21:00 AM
0
comments
Labels: Funny
Saturday, July 10, 2004
பழம்குறிப்புகள்
-Armstrong number 22 2*2=4 2+2=4
-Java Sun micro systems-For consumer electronics named oak by James Gosling Java workshop
-Athlon means "reward for arthletes"
-APB-Asia pacific breweries -Singapore
-WIPRO-Westren India Products
-Mac user interface developed by Xerox at its Palo alto research center
-IBM and Apple jointly backed the RISC based Power pc
-IBM PCs orginated in 1981
-Popular early modems manufactured by Hayes microcomputer products
-BNC-Bayonet Network Connector
-Intel 1968 Dr.Craigr Barrett .Santaclara California No of CPU factories 15
-AMD 1969 W.J.Sanders III Sunnyvale California 2 Texas&Dresden
-Kerberos-From greek mythology is the name of the dog that guards the castle of hades the god of the under world
-DIN-Deutshe industrie norm
-RJ45-Registerd Jack45
-APC-AmericaN Power Conversion
-Netbeui-IBM
வகை:பொது அறிவு
Monday, July 05, 2004
உன் நினைவில்
நெஞ்சம் முழுதும் உன் நினைவு
புதிதாய் எதையும் பிடிக்கவில்லை
கண்கள் முழுதும் உன் உருவம்
துளிவிட்டு தினமும் துடைக்கின்றேன்
சேர்ந்திருந்த கால வசந்தங்களால்
இவ்வலைகள் அமர்ந்து அழிந்தால்கூட
அப்படியே உன் நினைவில் தவமிருப்பேன்
இன்னுமோர் சகாப்தம் வாழ்ந்திருப்பேன்
Sunday, July 04, 2004
இப்படியும் சேவை
இந்த பக்கமா வந்து இந்த பக்கத்தை பார்த்தால் ஐந்து நிமிடத்தில் தலைவலி கியாரண்டி.
Monday, June 28, 2004
Sunday, June 27, 2004
கஸ்டமைஸ்ட் கனவுகள்
ரொம்ப நாள் ஆசை அவனுக்கு.புதிதாய் பசிபிக் பெருங்கடலில் கட்டப்பட்டிருக்கும் "கடலடி சிட்டி"யை(UnderWaterVillage)பார்க்க வேண்டும் என்பதோ,அல்லது பாரிஸ் நகரின் வான்வெளியில் மிதந்தபடி கிடக்கும் "ப்ளோட்டிங் ஹோட்டலில்" சாப்பிடவேண்டும் என்பதோ அல்ல.அந்த ஆசை இப்போதைக்கு மிக சின்னது.புனித நகரமெனப்படும் எருசலேமை சுற்றி பார்க்கவேண்டும் என்பது.அது தான் அந்த பிஞ்சு நெஞ்சின் ஆசை.பக்கத்திலேயே ஒரு மருந்து கடை.
"Dடேப்ளட்ஸ்" செக்ஸன் பக்கம் செல்கிறான்.வகைவகையாக Dடேப்ளட்ஸ்.ஆசைப்படும் சினிமாவை கனவில் காணலாம்.அந்த மாத்திரை சாப்பிட்டால் போதும்.ஆசைப்படும் ஆளுடம் பேசலாம் கனவில்.அந்த Dடேப்ளட் சாப்பிட்டால் போதும்.ஆசைப்படும் வேலை செய்யலாம்.ஆசைப்படும்.....
எருசலேமை வாங்கிக்கொண்டான்.மறக்காமல் ஒருமுறை சாப்பிடும் முறையை படித்துக்கொண்டான்.
தூங்கும் முன் லபக்.எருசலேம் மாத்திரை.கொஞ்சூண்டு தண்ணீர்.தூங்கிப்போனான்.ஆகா கலர் கலராய் எருசலேம் நகரம்.ஓடியாடினான் ஒய்யாரமாய் நகர வீதியில்.திடீரென குண்டு வெடித்தது அங்கேயும்!
- 2002 ஏப்ரலில் கிறுக்கியது.
Wednesday, June 23, 2004
உன்னருகில்
இப்படியே காலம் காலமாய்..
செடிமேல் படர்ந்த கொடி கணக்காய்.....
மடிமேல் சாய்ந்து கிடப்பேன் - மாட்டாயா எந்தன் அன்பே.
நிஜமாய் கணம் கணமாய்
உயிர் பிரிந்தாலும் பரவாயில்லை.
இதற்க்கு மேல் என்ன இருக்கிறது.
உலகம் கெடக்குது விட்டுத்தொலை.
Tuesday, June 22, 2004
எல்லோரும் நல்லா இருக்கனும்
தினமலரை அங்காங்கே திட்டி எழுதி இருக்கிறார்கள்.எனக்கொரு நினைவு.2002 என நினைக்கிறேன்.ஐடி பபிள் உடைந்திருந்த நேரம்.நியு எகனாமியின் அபாயம் குறித்து பத்திரிகைகள் பக்கம் பக்கமாய் எழுதிகொண்டிருந்தன.தினமலரில் ஒரு செய்தி துணுக்கு படித்தேன்.அது இப்படியாக போகிறது."சில மாதங்களுக்கு முன்பு வரை ஐடி எனப்படும் கம்ப்யூட்டெர் படிதவர்கள் பண்ணின பந்தாவுக்கு அளவே இல்லை.கல்லூரி முடித்திருந்தாலே போதும் கை நிறைய சம்பளம் என இருந்தது.ரெஸ்டாரென்ட்தோரும் இளைஞர் பட்டாளங்கள்.இஷ்டத்துக்கு செலவு செய்து கொண்டிருந்தனர்.இப்போ IT பபிள் உடைந்து விட்டதால் எல்லாம் முடிவுக்கு வந்து விட்டது.பந்தாபண்ணிதிரிந்த இளைஞர் கொட்டம் அடங்கியிருக்கிறது" என்கிறரீதியில் மகிழ்ச்சி தொனியில் எழுதி இருந்தது.As a IT guy ஆத்திரத்தில் தினமலருக்கு எழுதலாம் என நினைதேன்.மீண்டும் மௌன வாசகனாகிவிட்டேன்.வேலைஇல்லாமல் நம் இளைஞர் சுற்றினால் தினமலருக்கு என்ன சந்தோசமோ.ரொம்ப வருத்தமாகிவிட்டது.இப்போ அவுட்சோர்சிங்கால் நம் இளைஞருக்கு வேலை கிடைத்திருக்கிறது.அதற்க்கு எதாவது ஆபத்தென்றால் மீண்டும் தினமலர் சந்தோச பட்டாலும் படும்.எல்லோரும் நல்லாஇருந்தால் நாமும் நல்லா இருக்கலாம் என்பதை எப்போ தினமலர் புரிந்து கொள்ளபோகிறதோ.
வகை:தமிழ்நாடு
Saturday, June 19, 2004
கடிங்க
1.How do you make 7 even?
Take away the S!
2.How do you make holy water?
Boil the hell out of it!
3.How many letters are in the alphabet?
Really 26, but 24, since E.T. went home
4.Why did the girl run outside with her purse open?
She heard there was going to be some change in the weather.
5.Why is an empty room like a room full of married people?
There isn't a single person in it.
வகை:நகைச்சுவை
Posted by
PKP
at
6/19/2004 09:34:00 AM
0
comments
Labels: Funny
Thursday, June 17, 2004
அடடா அடடா
உங்கள் மூளை இளமையா,சுறுசுறுனு இருக்குதாங்க.ஆராய்ச்சி சொல்லுது.
The tests of people who grew up speaking English and either Tamil or French suggested that having to juggle two languages keeps the brain elastic and may help prevent some of the mental slowing caused by age, the researchers said
கூல் நியூஸ் தானே.
வகை:தமிழ்நாடு
Wednesday, June 16, 2004
Saturday, May 22, 2004
பிடித்ததுசனி-39
இந்த வருடம் பெப்ரவரி வாக்கில் ஒரு அமெரிக்கர் பெங்களூர் வருவதாக இருந்தது.இந்தியாவை பற்றி விவரம் தெரிந்தவர்களிடமிருந்து சில தகவல்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என நினைத்த அவர் தன் வலைப்பூவில் இந்தியாவை பற்றிய பயண அறிவுரைகள் யாராவது கொடுக்க முடிந்தால் கொடுங்களேன் என கேட்டிருந்தார்.ஒரு அமெரிக்கர் பதில் எழுதினார் "தவறாமல் ஒரு அணுகுண்டு எடுத்து செல்லவும்.பெங்களூர் டிரிப் முடிந்து திரும்பும் போது அதை போட்டுவிட்டு வரவும்.அமெரிக்கர் வேலைகளையெல்லாம் பெங்களூர்காரர்கள் திருடிவிட்டார்கள்".-நல்ல அறிவுரை என்று அந்த அமெரிக்கர் நொந்துபோய் இருந்த போது சில நாட்கள் கழித்து இன்னொரு இந்தியர் அதற்கு பதில் எழுதி இருந்தார் -"அப்படியே ஒரு குண்டை சியாட்டிலிலும் போட்டுவிடுங்கள்.அவர்கள் எங்கள் திறமைமிக்க எஞ்சினியர்களையெல்லாம் அபகரித்து வைத்திருக்கிறார்கள்".
-அடப்பாவி அடப்பாவி அட்ப்பாவிகளா...... இங்க ஏற்கனவே பாபுகாரயும்,எஸ் எம் சாரயும் குண்டுபோட்டு வீட்டுக்கு அனுப்பியாச்சு.அங்க சார்ஜ் புஷ்ஷயும்.......கொஞ்சம் செப்டம்பர் வர வெய்ட் பண்ணுங்க.ப்ளீஸ்....
வகை:நகைச்சுவை
Wednesday, May 19, 2004
வீழுமெனநினைதாயோ?வாழும்எம்பாரதம்
பாரா சொல்கிறார்
இந்தியா இதுவரை சுதந்தரப் போராட்ட வீரர்களால் ஆளப்பட்டிருக்கிறது. அரசியல்வாதிகளால் ஆளப்பட்டிருக்கிறது. அரைகுறை அரசியல்வாதிகளால் ஆளப்பட்டிருக்கிறது. ஊழல் பெருச்சாளிகளால் ஆளப்பட்டிருக்கிறது. முதல்முறையாக இப்போதுதான் ஓர் அறிஞரால் ஆளப்படவிருக்கிறது. வாழ்த்தவேண்டியது நம் கடமை.....எப்படியானாலும் மன்மோகன்சிங் இப்போது பிரதமராவது நாட்டுக்கு நல்லது. அவ்வகையில் சோனியாவுக்கு நன்றி சொல்லவேண்டியதும் நமது கடமையாகும்.
--------------------------------------------------------------------------------
"People will not believe that a person can walk away from the post of prime minister," said Rahul, adding "I'm proud of her."
Echoed Jairam Ramesh, who is part of the party's economic think tank, agrees with Kuldip Nayar: "Sonia Gandhi has now joined the pantheon of renunciates like the Buddha and Mahatma Gandhi with her decision."
--------------------------------------------------------------------------------
என்னமோ ஒண்ணு ...நல்லது நடந்தா சரிதான்.
(ஆனாலும் இட்ஸ் டூ மச் NDA)
வகை:சலோ இந்தியா
வார இறுதி கொண்டாட்டம்
கேரளாவுக்கு சென்றால் எங்கள் மாவட்டத்து ஆசாமிகளை "பாண்டி' என்பர்; தமிழகத்திலோ "மல்லு' என்பர்
அந்த மாவட்டம் தான் நான் வளர்ந்த மாவட்டம்!
அதை நினைத்தால் மலரும் நினைவுகளில் மூழ்கிப்போவேன்.
அதை சுற்றி ஒரு ரவுண்டப் இந்தவாரம்
Enjoy
வரிகள்புதன்-38
காத்திருந்தான்
தனிமை இந்த தனிமை..
கொடுமையிலும் கொடுமை..
இனிமை இல்லை வாழ்வில்..
எதற்க்கு இந்த இளமை...
என் நான் செய்த பாவம்..
அழகு மலர் ஆட..
அபினயங்கள் கூட..
சிலம்பொலிகள் புலம்புவதை கேள்..
Tuesday, May 18, 2004
கிசுகிசுசெவ்வாய்-37
கிசு கிசு இந்தவாரம் நெறையங்கோ
Californians just got themselves a governor born in Austria
Rajiv was also seen in Dubai, visiting the Jumbo Electronics office secretly in the night when its owner Chabria, was wanted in India by the Police.
பல மாநிலங்களில் (incl TN) ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கவர்னர்களாக உள்ளனர். இதில் சிலர் பாரதிய ஜனதாவுக்கு பகிரங்கமாக ஓட்டு வேட்டையாடினார்கள். குறிப்பாக அயானா கவர்னர் பரமானந்த், பா.ஜ. பிரசார காரராகவே மாறிவிட்டார். மேலும் பீகார், கோவா, குஜராத், உ.பி.யில் கவர்னராக உள்ளவர்கள் also from RSS.
போலீஸ் ஸ்டேஷனில் உபசரிப்பு ஜில்லென்று மோர் கொடுத்து.
உடனடி குறை தீர்ப்பு.சபாஷ் ஸார்.
சாலமன் பாப்பையா பாணியில் "வெளங்க்க்கும்மாய்யா"
கசமுசாகார்னெர்
மதமாற்றத் தடைச் சட்டம் வாபஸ் ; எச் முத்திரை வாபஸ் ; இலவச மின்சாரம் தொடரும் ; அரசு ஊழியர்கள், பத்திரிகைகள் மீதான வழக்குகள் வாபஸ் : முதல்வர் ஜெ.,திடீர் அறிவிப்பு
சென்னை: மதமாற்றத் தடைச் சட்டத்தினை திரும்பப் பெற்றும், ரேஷன் கார்டுகளில் எச் முத்திரை குத்துவதை திரும்பப் பெற்றும், போரட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீதான வழக்குகளும், இந்து உள்ளிட்ட பத்திரிகைகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இன்று தெரிவித்தார். மேலும் அரசு ஊழியர்களைப் போராடத் துõண்டியதாக திமுக தலைவர் கருணாநிதி மீது போடப்பட்ட டெஸ்மா வழக்கினையும் வாபஸ் பெறுவதாகவும் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., அதிமுக., விற்கு ஏற்பட்ட படுதோல்விøயையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது
-Dinamalar
அடடா செஞ்ச சாதனையெல்லாம் ஒரே நாள்ல Withdraw பண்ணிட்டாங்களே.
வாழுக சனனாயகம்.
(வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்) அம்மா திருந்திட்டாங்கய்யா அம்மா திருந்திட்டாங்கையா
Monday, May 17, 2004
Sunday, May 16, 2004
கசமுசாகார்னர்
Sadly, we are back to foreign rule.????
WE indians have so much double standards. WE cried out loud when the Fiji President of indian origin (but has settled there for many years now) was ousted b'coz he was not a native fiji but a "foreigner." We make such noise when Indians are discriminated abroad for the plain reason of being Indian. We feel discriminated in the US, UK and other EU countries even when we are there just for our higher studies and snatch the job opportunities of the locals. We still moan of being racially discriminated!! All that even when we do not hold any local citizenship!!!
And didnt we all rejoice when an Indian american contested for the Governor Elections in the US recently?
PLus, we Indians do make the Indian connection with some of the gr8 minds (in various fields like literary, science, arts etc) and show off as if they are the jewel of India even when they have ditched the Indian citizenship for luxurious/pompous life in another country's!!! When those ppl dont care about India, why do we care about them?? Isnt that double standard too?
And, honestly tell me, how many of u, given a chance, wud like to settle abroad? u cud easily say u wud never wanna go outta our gr8 country and will work hard for our country. but can u say that honestly?
And now we dare call a person who's legally an INdian citizen for many years, who's resided in India for as long - a foreigner!!! Agreed she may not form a gr8 leader (but only time will tell that..) of the likes INdia has seen in the recent past, but why not give her a chance and see for ourselves?
P.S: I am sick and tired of hearing about the Foreign issue being made such a huge issue. Where were u all when Mr.Vajpayee kept mumb over the Gujarat riots issue? And when he had been to Iran on a visit he acclaimed Islam to be a gr8 religion. and the same Mr.Vajpayee in Goa a few days later in a speech had this to say - "Islam ek Khattar dharm hai." Now, wudnt u call that double standards???
I hope i have not gone outta the bounds of common sense with my argument. I never had a liking for politics, but it just gets me when ppl form double-standard-opinions...
And if i offended any of u, please do forgive me...
-TheMask
--------------------------------------------------------------------------
Tailpiece - In btw how many of you mind having a forigen coach for your Indian cricket team. You obviously dont cause he is good at his job which shows in our team now.
--------------------------------------------------------------------------
One---Shame on India.One of the days I really feel shameful to say that I live in India.
Other---I hate when people say that... What have you done for your country to say that...
கடிஞாயிறு-35
வாஜ்பாயி ஏன் இந்த முறை பிரதமர் ஆக முடியலை.?
அவர் "LUCK NO"தொகுதியில் போட்டியிட்டதால்
இன்னொரு போனஸ் கடி
What is the center of gravity?
"V"
வகை:நகைச்சுவை
Saturday, May 15, 2004
கேட்டான் பாரு ஒரு கேள்வி
இணயத்தில் தமிழ் வலைப்பதிவுகள் நாளொரு வண்ணமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறன.எனக்கு தெரிந்து இரு இடங்களில் Tamil Bloggers List உள்ளது.அனைத்து வலைப்பதிவுகளையும் மேயும் போது சில வலைப்பதிவுகள் பல மாதமாக செயலற்று இருக்கின்றன.சில சோதனை பக்கமோடு நின்று விட்டன.என்னோட கேள்வி .Active Blogs மற்றும் New Blogs- என்று எங்காவது list உள்ளதா.அல்லது இதற்க்கு ஏதாவது வேறுவழி உள்ளதா செயலற்ற பக்கங்களுக்கு அடிக்கடி போய் நேரம் வீணாகிறது என நினைகிறேன்.நீங்க எப்படி சம்மாளிக்கிறீங்க.?
பிடித்ததுசனி-34
ஆறு மாதத்துக்கு முன்னால் வரை காங்கிரஸ் இந்த தேர்தலில் முதலிடத்துக்கு வந்து விடும் என யாராவது சொல்லியிருந்தால் அது மிகப் பெரிய ஜோக்காக இருந்திருக்கும்.அந்த கால கட்டத்திலேயே வீட்டைவிட்டு புறப்பட்டு விட்டார் சோனியா.யாருக்கும் நம்பிக்கையே இல்லாதபோது அவருக்கு எங்கிருந்துதான் நம்பிக்கை வந்ததோ தெரியவில்லை.மீடியாக்கள் வேறு இந்தியா ஒளிர்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தது.சென்செக்ஸ் 6000 வரலாற்று உச்சத்தில்.பண மதிப்பு ஏறுமுகத்தில்.யாருக்கு நம்பிக்கைவரும்.காவிக்காரர்கள் அதீத நம்பிக்கையில்.350 வரை கிடைக்கும் என கருத்து கணிப்பு வேறு.சந்து பொந்தெல்லாம் ஏறி இறங்கி,தன் குழந்தைகளையும் இறக்கி விட்டு அயரா உழைப்பு,அசாத்திய நம்பிக்கை என தனியொருவராக நின்று வெற்றிக்கனியை பறித்து விட்டார்.(இங்கும் தமிழ் நாட்டில் சிலர் ஒடியாடி உழைத்தார்கள்,அதீத நம்பிக்கையுடன் மக்கள் மூடர் என எண்ணி).NRI-களையும் IT-மனிதர்களையும் விட்டால் வேறு யாருக்கும் இந்தியா ஒளிரவில்லை.இனயம் எல்லாம் அவர்கள் புலம்பிதள்ளுகிறார்கள் 100 கோடி இந்தியர்களும் முட்டாள்களாம்.ஆனால் ஓட்டு போட்டது என்னவோ சோனியா முழுசாய் நம்பியிருந்த ஏழை மக்கள் தான்.வாஜ்பாய் நம்பியிருந்த NRI-களோ,IT மனிதர்களோ இல்லை சினிமா ஸ்டார்களோ அல்ல.பிறந்ததுக்கும் வாழ்ந்ததுக்கும் சம்பந்தமே இல்லாத ஒரிடதில் வந்து,மக்களை முழுமயாய் புரிந்து சிம்மாசனத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறார்.அந்த அசாத்திய நம்பிக்கையும் உழைப்பும் பாராட்டுகுரியது.இனிமேலும் நகரம்,தொழில்நுட்பம் என்று மட்டுமில்லாமல் கிராமம்,விவசாயம் இதுவும் கவனிக்கப்படும் என நம்புகிறார்கள்.பெண் ஆட்சி என்றாலே பயமாய் இருக்கிறது(சந்திரிகாவை சொன்னேன்).நல்லதாகவே நடக்கும் என நம்புவோம்
Wednesday, May 12, 2004
வார இறுதி கொண்டாட்டம்
இந்த வாரம் தேர்தல் முடிவுகள் டென்சன் வாரம்.
Election comission of India
NDTV News
நல்லா பார்த்து டென்சன் ஆகுங்கள்
ஒரு நிமிடம்
If Sonia becomes the PM
If lalloo becomes the PM
அரே Gandhi
Summa ஜாலிக்காக
Enjoy the weekend
வகை:நகைச்சுவை
வரிகள்புதன்-33
என்றாவது ஒரு நாள்
எங்காவது ஓரிடத்தில்
நீங்கள் சந்திபீர்கள்
சகலமும் அமைந்தவர்
(அட ரேமாண்ட்ஸ் விளம்பரம்)
கிசுகிசுசெவ்வாய்-32
"And the government is going all out to woo the IT industry as well. During a recent nationwide strike in February, IT companies were given yellow stickers to place on workers' cars identifying them as providing an essential service, and were promised security. "
புது சிலிகான் வேலி உருவாகிக்கொண்டிருக்கிறது.ஹைதராபாத் தொடர்ந்து ரேஸில் இருக்குமா தெரியவில்லை."நாங்கள் நாயுடு ப்ள்ஸ் பண்ணுவோம்" என்கிறார்கள்.பார்ப்போம்.
வகை:சலோ இந்தியா
Monday, May 10, 2004
தகவல்திங்கள்-31
எல்லோரும் இன்னைக்கி ஓட்டு போட போய்ட்டாங்க.அதனால இன்னைக்கி எல்லோருக்கும் லீ...வ்வு
Sunday, May 09, 2004
கடிஞாயிறு-30
ஒரு காட்டு வழியே ஏழு பேர் போய்க்கொண்டிருக்கின்றனர்.திடீரென ஒரு சிங்கம் அவ்வழியே வந்து அந்த ஏழுபேரில் ஐந்து பேரை கடித்து குதறிவிடுகிறது.மற்ற இருவரையும் விட்டுவிடுகிறது.ஏன்?
ஏன்னா அந்த இருவரும் லயன்ஸ் கிளப்பில் மெம்பர்ஸ்.
ஹெக்....ஹெக்....ஹே.....
வகை:நகைச்சுவை
Saturday, May 08, 2004
கசமுசா கார்னெர்
212,122,145,277,123,213,238,124,574,90..............
கருத்து கணிப்பு படிச்சு படிச்சு தலை சுத்துதுங்க.
தேர்தலுக்கு முன்,தேர்தலுக்கு பின்
வாஜ்பாயி வரும் முன்,வாஜ்பாயி வந்த பின்
சோனியா வரும் முன்,சோனியா வந்தபின்
ரஜினி வாய்ஸ்க்கு முன்,ரஜினி வாய்ஸ்க்கு பின்
மழை வரும் முன்,மழை வந்தபின்
என்ன கருத்துக்கணிப்பு கன்ட்ராவியோ நம்பர மாத்தி மாத்தி போட்டுக்கிட்டு.
மக்கள் ரொம்ப தெளிவா இருக்காங்கங்க
எப்பவோ அவங்க முடிவு பண்ணியாச்சுது யாருக்கு ஓட்டுனு
மக்கள் லேசில மாறமாட்டாங்க,கச்சிக மாதிரி
மற்ற கூத்தெல்லம் சும்மா டைம் பாஸ்.
212,122,145,277,123,213,238,124,574,90..............
கருத்து கணிப்பு படிச்சு படிச்சு தலை சுத்துதுங்க.
Wednesday, May 05, 2004
வார இறுதி கொண்டாட்டம்
பெற்ற சுதந்திரத்தை அளந்து பார்ப்பது எப்படி என்று முன்னர் பார்த்தோம்.இப்போ வாங்கியாந்த டூத்பேஸ்ட் அளவு சரியா இருக்கானு பார்க்கலாம்.அளவெல்லாம் சரியாஇருக்கணுமோஇல்லையோ?
Happy Weekend
வரிகள்புதன்-28
ஓரிடம் நீ கொடுத்தாய்
தலைவி தலைவனை நினைத்து பாடுகிறாள்
அன்றொருநாள் இதே நிலவில்
அவன் இருந்தான் என் அருகில்-நான்
அடைக்கலம் கொண்டேன் அவன் அழகை நீ
அறிவாயோ வெண்ணிலவே
வானும் மதியும் மாறாமல் போனால்
நானும் அவனும் நீங்காமல் இருப்போம்
சேர்ந்து சிரிப்போம்
சேர்ந்து நடப்போம்
காதல் மேடையிலே
நீ சாட்சியடி வெண்ணிலவே
-சின்ன வயதில் எதிலோ படித்தது.ரொம்ப பிடித்ததால் அப்படியே நினைவில் நின்றுவிட்டது.மூலம் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.திரைப்பாடலாகவும் இருக்கலாம்.
Tuesday, May 04, 2004
கிசுகிசுசெவ்வாய்-27
"எல்லாவற்றிற்கும் மேலாக நமது நாடாளுமன்றத்தில் இந்துத்வ சக்திகளின் தலைமை குருவின் படம் திறக்கப்பட்டிருக்கிறது. அண்ணல் காந்தியடிகளை எப்படிக் கொலை செய்வது என்று அவருடைய இல்லத்தில்தான் திட்டமிட்டப்பட்டது. அண்ணல் காந்தியடிகள் கொலை வழக்கில் அவர் எட்டாவது குற்றவாளி. அவர்தான் ------."
யார் இது?
Monday, May 03, 2004
தகவல்திங்கள்-26
நாம நம்ம நாட்டில் உண்மையிலேயே சுதந்திரமா இருக்கோமா?.
காந்தி வாங்கிதந்த விடுதலை எத்தனை கிலோ கிராம்?.அளந்து பாக்கலாம்.
வாங்க இங்கே
அமெரிக்கா குறைந்த ரேட்டிங் 1-1 அதாவது முழுச்சுதந்திரம்
சௌதி அரேபியா அதிக ரேட்டிங் 7-7 அதாவது முழுச்சுதந்திரம் இல்லை.
வகை:பொது அறிவு
Wednesday, April 28, 2004
கசமுசா கார்னெர்
"கூட்டணி கச்சிங்களோட மாரடிச்சி போரடிச்சி போச்சி.குடுத்தா முழுசா குடுங்க இல்லனா வேண்டாம்" இது வாஜ்பாய்-பாவம் மனுஷ்ன் அன்சு வருசம் அனல்ல இருந்திருக்காரு
...........................................................................................
"முழுசா கெடச்சா நீ எதுக்கு நானே இருக்கேன்" இது அத்வானி.
...........................................................................................
பிஜேபி ஜெயிச்சா... மூணு மாசம் தான் வாஜ்பாயி.........,அப்புறம் அத்வானிதேன்.பட்சி சொல்லுது.வாஜ்பாய் மறுத்திருக்கார்.
...........................................................................................
பிரதமராய் இளைஞர் வேணும் இது பெரியங்(க்)கா வாய்ஸ்.ராகுல சொல்லுதோ.
...........................................................................................
ராகுல் இன்னும் கல்யாணமே பண்ணலை எதிர் கச்சிகனாலயா (வெளி நாட்டு பொண்ணாமே).
...........................................................................................
யாரு எதிர்க்கா இலங்கை தமிழரை?.வைகோவு ரொம்ப பேசி கெடுக்கிறா தன்னைதானே.தமிழனை எதிர்க்கும் தான் தமிழனல்லனு "அவாளுக்கு" தெரியும்.
............................................................................................
பாபா இப்பொ தெருவுக்கு வர்ரது சுத்த சுயநலம் போல தோனுது.நதி நீரெல்லாம் சும்மா சால்ஜாப்புனு பட்சி சொல்லுது.
பட் பட்சி தீவிர பாஷா ரசிகன்.ஆமா.
............................................................................................
சிறுதுறும்பு
??காதும்காதும்??
How do you Burn Copy Protected Cd's? Step by Step Guide.
வகை:தொழில் நுட்பம்.
வரிகள்புதன்-24
வெற்றி
வெற்றி என்பது யாதெனில்
ஓயாத புன்முறுவலுடன்
பல் அறிஞர்களின் மரியாதைகளையை அள்ளிக்கொண்டு
சிறுகுழந்தையோடு குழந்தையாய் கூத்தாடி
உண்மையான விமர்ச்சனங்களை வாங்கிக்கொண்டு
காட்டிக்கொடுக்கும் நண்பர்களைத் தாங்கிக்கொண்டு
அழகை ஆராதித்து
அடுத்தவர் திறனை வெளிக்கொணர்ந்து
வாழும்பூமியை இன்னும் வளமாக்க
துடிப்பான குழந்தையையோ-இல்லை
செழிப்பான துறவையோ-இல்லை
சுதந்திரமான ஒரு சமூகத்தையோ உருவாக்கி
உன் வாழ்வால் இன்னொரு உயிர் நிம்மதியாய் மூச்சுவிடுகிறது என்றால்
அதுவே உன் வாழ்வின் வெற்றியாகும்
-ரால்ப் வால்டொ எமெர்சன்
What is success?
To laugh often and much;
To win the respect of intelligent people
and the affection of children;
To earn the appreciation of honest critics
and endure the betrayal of false friends;
To appreciate beauty;
To find the best in others;
To leave the world a bit better, whether by
a healthy child, a garden patch
or a redeemed social condition;
To know even one life has breathed
easier because you have lived;
This is to have succeeded.
-Ralph Waldo Emerson
Tuesday, April 27, 2004
சிறுதுறும்பு
$/////////////////////////////$
$/////காற்றுவாக்கில்///////$
$/////////////////////////////$
Whats that site running?
www.microsoft.com போன்ற வெப் சைட்கள் என்ன Operating System ல் ஓடுகின்றது.என்ன வெப் செர்வர்ல் ஓடுகிறது (IIS or Apache),யார் ஓனர்,என்ன IP,எவ்வளவு நேரமாக ஓடுகின்றது என தெரிய ஆசையா.இங்கு வாருங்கள்.
வகை:தொழில் நுட்பம்.
கிசுகிசுசெவ்வாய்-23
உங்களுக்கு ரொம்ப தெரிந்த மாநில முதல்வர் ஒருவர் விவசாயம் தொழில் செய்கிறாராம்.யாருப்பா அது?
Monday, April 26, 2004
தகவல்திங்கள்-22
பகரினும்,சௌதியாவும்
பகரினில்விமானம் இறங்கும்போதே ஒரு வித்தியாசமான உணர்வு.என்னடா கடல்லயா விமானத்தை இறக்க போகிறார்கள் என்று.
ஒரு குறும்தீவு இது.சுற்றி கடல்.
நடுவே கண்ணாடி மாளிகைகள் அடுக்கடுக்காய்.
பளீர்சாலைகள்.
இருமருங்கிலும் செயற்கையாய் பச்சை ஆக்கியிருக்கிறார்கள்.
அரபு நாடென்றாலும் ரொம்ப கெடுபிடியில்லை.அழகிய நங்கைகள் நவ நாகரீக உடைகளில் ஆங்காங்கே.
சந்தேகித்தால் முழு பயணப்பெட்டியையும் விமானநிலயத்தில் சோதிக்கிறார்கள்,போதை வஸ்துக்களுக்காக.
அப்பப்போ ஏதாவதொரு திருவிழா நடந்துகொண்டேஇருக்கிறது.
பகரினில் வாழ்கைகொஞ்சம் ஜாலிதான்.
இங்கிருந்து தரைவழியாகவே பொய்விடலாம் சௌதி அரேபியாவுக்கு.எட்டும் தூரம்.
பகரின் கடல் தீவிலிருந்து சௌதிஅராபிய நிலப்பரப்புக்கு நீண்ட கடல்மேல் பாலம் அமைத்திருக்கிறார்கள்.
சுமார் 26 கிலோமீட்டர்கள்.
சுற்றிலும் கடலைபார்த்த படியே பயணிக்கலாம்.
நடுவில் சௌதியில்நுழையும் போது கெடுபிடி ஆரம்பிக்கிறது.
சூழலில் ஒருவித மான இறுக்கம் வந்துவிடும்.
வெட்டு ஒன்று துண்டு இரண்டு.
உங்கள் பயணபெட்டிகள் சுத்தமாய் அலசப்படும்.எதைவேண்டுமானாலும் அவர்கள் குப்பையாய் தூக்கி எறியலாம்.
பெண்கள் முழு பர்தா அணிய துவங்கிவிடுகின்றனர்.கருப்பாய் முழுநீள அங்கி அவ்ளோதான்.
வாகனங்களெல்லாம் இறக்குமதி செய்யப்பட்ட பழம் பெரும் வாகனங்கள்.
மண்ணும் சேறும் அப்பியிருக்கிறது.
பெரும்பாலான வாகனங்களில் பலபெண்கள் உட்பட குடும்பம் குடும்பமாய் குந்தியிருக்கிறார்கள்.
பாகிஸ்தானியரும்,பங்ளாதேசியர்களும்.மற்றும் இந்தியர்களும் ஏறெடுத்துக்கூட பார்ப்பது இல்லை.
பயம்.
எல்லோருக்கும் சட்டமும்,விதிகளும் நடப்பு நிலவரங்களும் நன்கு தெரிகிறது.
முழு பரிசோதனைக்கு பின் சௌதிக்குள் நுழைகின்றோம்.
அநேக ஏன் எல்லா முஸ்லீம்களுக்கும் அது ஒரு புனிதமான கனவு பிரதேசம்.
"டேய் நீ ரொம்ப குடுத்துவச்சவன்" என என் இஸ்லாமிய தோழி சொன்னது நினைவுக்கு வந்தது.
நீண்ட பரந்த சாலைகள்.இருபுறமும் குப்பைகள்.
ஓடும் வாகனங்களும் அப்படியே.
அல்கோபார்,தமாம் என்று அந்த பயணம் தொடர்கிறது.
குடும்பம் குடும்பமாய் வாழ்கிறவர்கள் பாக்கியசாலிகள்.அதுவும் முஸ்லிமாய் இருந்தால் மிக்க நலம்.
எல்லாமே இரண்டு இரண்டு.பெண்களுக்கொரு மார்க்கெட் .ஆண்களுக்கொரு மார்க்கெட் இப்படியாக.
தனியாக வேலை செய்யும் ஆண்கள் பெரிய மூடப்பட்ட சுற்று சுவர்களுக்குள் வசிக்கிறார்கள்.
ஒவ்வொரு காம்ப்பவுண்டும் ஒரு உலகம்.
அராம்கோ-பெட்ரோல் கம்பனி.பெரும்பாலான தொழில்கள் இதை சார்ந்தே இருக்கின்றன.
இந்தியன் கல்விச்சாலைகளை பார்க்கமுடிகிறது.
சாலைகளில் பெண்களை காண முடிவதில்லை.
கொஞ்சம் சுதந்திரமாய்(?) இருக்க அப்பப்போ பகரின் வந்து செல்கிறார்கள் பலர்.இதில் சௌதியர்களும் உட்பட.
நம்மஊர் ஆட்கள் ஒராண்டோ அல்லது ஈராண்டோ கழித்து விடுமுறையில் இந்தியா போக பகரின் வரும் போது அங்கு நுழைந்ததும் அவர்கள் சந்தோசம் பார்க்க வேண்டுமே மகிழ்ச்சி தெளிவாய் தெரிகிறது.
நவநாகரீக பெண்களையும் சிட்டென காரில் பறக்கும் பெண்களையும் உற்று பார்க்கிறார்கள்.ஒருகணம் சிறு பெருமூச்சுவிட்டு இதயம் அடங்குகிறது.ஒருகாலத்தில் ஆடிய ஆட்டமென்ன இப்பொ இது தான் நம் வாழ்கை.இப்படித்தான் எழுதியிருக்கிறது.இப்படிதான் நாம்
பயணித்தாகவேண்டும் என்று அவர்கள் நினைப்பது போல் தோன்றும்.
வகை:பொது அறிவு
Posted by
PKP
at
4/26/2004 06:14:00 AM
Labels: Gulf
Sunday, April 25, 2004
கடிஞாயிறு-21
ஜவகர்லால் நேரு ரொம்ப மோசமாமே?
ஆமாம்.
ஏன்?
அவரு "ரோஜா"வை வச்சிருந்தாரே.
வகை:நகைச்சுவை
Saturday, April 24, 2004
பிடித்ததுசனி-20
*எல்லா ஆணும் ஒரு நாள் கல்யாணம் பண்ணியே ஆகவேண்டும்.பின்னே என்ன சிலர் மட்டும் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாய் இருக்கலாமா?
*பிரம்மாச்சாரிகள் கட்டாயம் அதிகம் வரிகட்ட வேண்டும்.பின்னே அநேகர் நொந்து போய் இருக்கும் போது இவர்கள் மட்டும் சந்தோஷமாய் இருப்பது நியாயமல்ல-ஆஸ்கார் வைல்ட் (மனுஷன் அனுபவபட்டிருக்கார்)
*தீவிரவாதம் பற்றி நான் கவலைப்படுவதில்லை.எனக்கு கல்யாணம் ஆகி இரண்டு வருடமாகிறது-ஸாம் கினிசன்
*உங்கள் மனைவியின் பிறந்த நாள் நினைவுக்கே வருவதில்லையா?.அதை நினைவில் வைக்க ஒரு எளிய வழியுள்ளது.ஓரு முறை மறந்து பாருங்கள். :)
*திருமணமானவன் ஆயுள் அதிகம் என்பதெல்லாம் உண்மை அல்ல.ஆயுள் அதிகம் போல் தோன்றுகிறது.அவ்வளவுதான்.
*ஒரு ஆண் தனியாய் இருக்கும் வரை அவன் முழுமை அடையாதவன்.திருமணம் ஆனவுடன் சகலமும் முடிந்துபோய்விடுகிறது.
*பணத்துக்காக கல்யாணம் பண்ணாதே.இப்போதெல்லாம் சுலபத்தில் கடன் (அட்டை)கிடைக்கிறது.
*கார் கதவை மனைவிக்கு ,கணவன் திறந்து விடுகிறான் என்றால் ஒன்றை புரிந்து கொள்.ஓன்றில் கார் புதுசு.இல்லை மனைவி புதுசு.
*காதலுக்கு கண்ணில்லை.கல்யாணம் கண்ணை திறந்து விடுகிறது.
*பெண்துணை இல்லாத ஆண்,சைக்கிள் இல்லாத மீன் போல-யூ2
*இரண்டு விதத்தில் பெண்ணைவிட ஆண் கொடுத்து வைத்தவன்.தாமதமாக திருமணம் செய்கிறான்,சீக்கிரமாய் செத்துப்போகிறான் -ஏச்.எல்.மென்கென்
*பிரம்மச்சாரிகளுக்கு பெண்களைப் பற்றி நன்றாகவே தெரிந்திருக்கிறது.இல்லை என்றால் அவர்களும் திருமணம் செய்திருப்பார்களே-ஏச்.எல்.மென்கென்
*நானும் எனது மனைவியும் இருபதுவருடங்கள் சந்தோசமாய் வாழ்ந்தோம்.அப்புறமாய் இருவரும் சந்தித்தோம்.- ரொட்னெய் டய்ன்செர்பீல்ட்
*ஒரு நல்ல மனைவி தான் தவறு செய்யும் போது தன் கணவனை மன்னித்து விடுகிறாள்.-மில்டொன் பெர்லெ
*மகிழ்வான மணவாழ்வின் ரகசியம்,இன்னும் ரகசியமாகவேயுள்ளது- கென்ன்ய் யங்மன்
*உன்மனைவியை எவனாவது திருடினால் விட்டுவிடு.அப்படி தான் சரியாய் பழிவாங்கவேண்டும்.
*கடந்த இருவருடமாக என் மனைவியிடம் நான் பேசவில்லை.அவளை ஏன் நான் தடுக்க வேண்டும்.
*என் பெண்நண்பி என்னை கவர்ச்சியாய் இருக்க சொன்னாள்.இன்னும் இரு பெண்நண்பிகளை சேர்த்துக்கொண்டேன்
*கிரெடிட் அட்டை காணாமல் போன என் நண்பன் போலீஸில் புகார் செய்யவேயில்லை.மனைவியைவிட குறைவாய் தான் அத்திருடன் செலவளிக்கிறானாம்
*கல்யாணம் என்னும் கல்லூரியில் ஆண் தன் Bachelors பட்டத்தை இழக்கிறான்.பெண் தன் Masters பட்டத்தை பெறுகிறாள்.
முதலாம் ஆண்டு ஆண் பேசுகிறான் பெண் கேட்கிறாள்
இரண்டாம் ஆண்டு பெண் பேசுகிறாள் ஆண் கேட்கிறான்
மூன்றாம் ஆண்டு இருவரும் பேசுகிறார்கள் பக்கத்து வீட்டார் கேட்கின்றார்கள்.
*"எல்லாமேஇருந்தது.கைநிறைய பணம்,தேவதை போல ஒரு பெண்,அழகிய வீடு..ஊப்ஸ்..எல்லாமே ஒரே நாளில் போய்விட்டது."
"என்னாச்சு"
"என் மனைவி அதை கண்டுபிடித்துவிடடாள்"
*ஒருவன் சொன்னான் "என் மனைவி ஒரு தேவதை."
இன்னொருவன் சொன்னான் "நீ அதிஷ்டகாரன்.என் மனைவி இன்னும் உயிரோடு இருக்கிறாள்"
வகை:நகைச்சுவை
Wednesday, April 21, 2004
வாரயிறுதி கொண்டாட்டம்
WEEKEND.
நாம எல்லோருமே ரொம்ப ஆசையாய் எதிர்பார்க்கிறது.அதை எந்த புண்ணியவான் கண்டு பிடிச்சானோ தெரியலை.சூரியனை வைத்து நாள் கண்டுபிடித்தான் சந்திரனை வைத்து மாதம் கண்டுபிடித்தான்.எதை வைத்து வாரம் கண்டுபிடித்தான்?.யாராயிருந்தாலும் அவன் வாழ்க.(யூதர்கள் ஒவ்வொரு ஏழாம் நாளும் ஓய்வு இருப்பது வழக்கம் - சாப்பாத் என்கிறார்கள்.அதிலிருந்து வந்திருக்கலாம்).
சனி,ஞாயிறு என முழு உலகமே WEEKEND கொண்டாடும்போது அரபு உலகம் வியாழன்,வெள்ளி என WEEKEND கொண்டாடுகிறது.வாரம்முழுவதும் வார இறுதிக்காக கா.....த்திருந்து வந்ததும் கொண்டாடி தள்ளிவிடுகிறோம்.
ஏனென்றால் TODAY IS "PRESENT".
TOMORROW வருமா யாருக்கு தெரியும்.
இனிமேல் நீங்களும் கூட முழுசாய் கொண்டாடுங்க.
ஒரு நிமிடம்...
என்ன? போவோமா ஊர்கோலம் என்று ஊர் சுற்ற போறீங்களா? போங்க போங்க
ஆனா ஒரேஒரு விசயம்.
எப்போதும் வலது பக்கமாகவே காரை ஓட்டுங்க.ஏன்னா
http://www.dinakaran.com/epaper/2006/Mar/08/16_1.jpg
இங்க பார்த்து தெரிஞ்சுக்கங்க.
Have a Break & ENJOY.
Updated:Fixed the broken link.
வரிகள்புதன்-19
வாழ்வின் உச்சங்களை அடைந்தோரெல்லாம்
ஒரே இரவில் பறந்து போய்
அதை எட்டியவர் அல்லர்.-இவர்
பிறர் தூங்கிக்கொண்டிருக்கும் போது கால்கடுக்க ஏறிக்கொண்டிருந்தார்கள்
-ஹென்றி லாங்பெல்லோ
The heights by great men reached and kept were not attained by sudden flight, but they while their companions slept, were toiling upward in the night.
-Henry Wadsworth Longfellow
Tuesday, April 20, 2004
கிசுகிசுசெவ்வாய்-18
யார்கிட்டேயாவது சேர்ந்திருந்தா, ரகசியமா பேசினா, போன்ல கொஞ்சினாதானே தப்பா ரெண்டு தகவல் பரவிக் கிசுகிசு கிளம்பும்? ஆனா, நம்மைப் பத்தி எதுவும் கிசுகிசு வரமாட்டேங்குதேனு எனக்கே கவலையா இருக்கு. எதை யாவது எழுதுங்க... மனசைப் புண்படுத்தாம, ‘அட!’னு சிரிக்கிற மாதிரி எழுதுங்க... ‘கிசுகிசு’ ரொம்ப ஜாலியான விஷயம். ப்ளீஸ்... என்னைப் பத்தியும் ஏதாச்சும் எழுதுங்க!---
அட இப்டி சொல்றது யாருங்கண்ணா? கண்டுபிடிங்கபாத்துடலாங்கண்ணா.
Monday, April 19, 2004
தகவல்திங்கள்-17
வித்தியாசமாய் சில இணயதளங்கள்
உண்மையில் சிறுவயதில் பார்ப்பனவெல்லாம் ஆச்சரியமாய் தோன்றும்.சில கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.பலவற்றிக்கு விடை கிடைக்காது.நமது கற்பனையில் எதாவது நினைத்து முடித்திருப்போம்.உதாரணமாக மின்னல் கண்ணைபிடுங்கிக்கொண்டு போய் விடும் என்று சொல்லி மழைகாலங்களில் கண்ணைமூடிக்கொண்டு முடங்கிக்கிடந்தது.மின்சாரம் தொட்டால் அது நம்மை இழுத்துக்கொண்டு போய்விடும்.எங்கே EB அலுவலகத்துக்கு.இப்படியாக பல.இப்படிப்பட்ட உங்கள் சிறுவயது எண்ணங்களை இங்கே நீங்கள் பதிவிக்கலாம் மற்றும் படிக்கலாம்.http://www.iusedtobelieve.com/
ஒரு சின்ன ஆசை.இது எப்படி வேலை செய்கிறது என்று கண்டுபிடிக்கவேண்டும்.உதாரணமாய் ஆகாய விமானம்.அது எப்படித்தான் பறக்கிறது இப்படியாக ஏன்,எப்படி என பல கேள்விகள் எழும்பினால் இங்குவாருங்கள் உங்கள் அநேக கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.http://www.howstuffworks.com/
இணயத்தில் உலாவரும் வதந்திகளுக்காகவே இங்குஒரு அருங்காட்சியகம் வைத்திருக்கிறார்கள்.நேரம் கிடைத்தால் அப்படியே ஒரு சுற்று போய்வாருங்கள் .
http://www.museumofhoaxes.com/
புதிதுபுதிதாக தொழில்நுட்பங்களும்,தொழில்நுட்ப சொற்களும் முளைக்கின்ற காலம் இது.WiFi,iPOD,CRM என்று எதாவது யாராவது சொன்னால் பயந்து விடாதீர்கள். இருக்கவே இருக்கிறது இங்கே அனைத்து சொற்களுக்கும் அழகாக விளக்கம் அளிக்கிறார்கள்.
வகை:பொது அறிவு
Sunday, April 18, 2004
கடிஞாயிறு-16
எதிர்த்த வீட்டுகாரர் ஏன் தன் வீட்டுக் கதவு "அழைப்பு மணி"யை கழற்றி எடுத்துக் கொண்டிருக்கிறார்?
அவர் நோபெல் (No bell) பரிசு வாங்க முயற்ச்சிக்கிறாராம்.
வகை:நகைச்சுவை
Saturday, April 17, 2004
Wednesday, April 14, 2004
வரிகள்புதன்-14
இது ஒரு மழைக் காலம்
அப்பப்போ மழைவருதோ இல்லையோ
அவ்வப்போ தேர்தல் வந்துடுது
வாக்கு வாங்க சிலர்
வாக்கு போட சிலர்
வாக்கு பிடுங்க சிலர்
நல்ல போட்டி.
நேரம் போகிறது அநேகருக்கு.
ஆனால் இந்தமுறை ஒரு சின்ன நிம்மதி
அது அந்த இளைஞர்களின் புதுமதி
அந்த காந்தியை திட்ட இறக்கிவிடப்பட்டது இந்த காந்தி
மரியாதையாய் பேசி இன்றோ வருண் எல்லார் மனதிலும் ஓங்கி
தொடை நடுங்கி தலைகள் மத்தியில்-குடும்ப
படை திரண்டு பாக் போய் கலக்கியது பிரியங்கா
பேசத் தெரியாத பெரிசுகள் பைத்தியமாய் பேட்டிகொடுக்கிற போது
புதிதாய் வந்த ராகுல்என்னமாய் விடைக்கிறான்
வேஷ்டி வேஷம் இல்லாத இளைய மாறனை எல்லோருக்கும் பிடிக்குது
இளைய ராஜீவ்கள் அநேகம்
இளைய மன்மோகன்கள் அநேகம்
இளைய வாஜ்பாய்கள் அநேகம்
இளைய சந்திரபாபுக்கள் அநேகம்
இளைய துபேக்கள் அநேகம்
இளைய கலாம்கள் அநேகம்
இளைய கல்பனா சாவ்லாக்கள் அநேகம்
வயதானவர்களெல்லாம் கொஞ்சம் இளைஞனுக்கு வழி விடுங்கள்
வாழ்ந்துவிட்டவனல்ல அவன்
வாழப்பிறந்தவன்
ஆக்கமாய் சிந்திப்பான்.
(இதை எழுதியது பழுத்த காங்கிரஸ்காரனோ அல்லது பிஜேபிவாலாவோ அல்ல.ஒரு இளைஞன்.ஆனாலும் இன்றைய இந்திய IT எழுச்சிக்கு ராஜீவும்,அயல்நாட்டு முதலீடுகளுக்கு மன்மோகனும் முக்கியகாரணமானவர்கள் என நம்புபவன்.யாரோ தான் பண்ணினதாய் தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்கள்.அதை அப்படியே KEEP IT UP பண்ணியதில்,பாக்கிஸ்தான் கூடாலான உறவில் நம்ம வாஜ்பாய் கலக்கீட்டார்.உண்மையிலேயே INDIA SHINING மாதிரி(?)தெரியுது)
வகை:சலோ இந்தியா
Tuesday, April 13, 2004
கிசுகிசுசெவ்வாய்-13
மைக்ரொசாப்ட் பில்கேட்ஸ் இப்போது உலகின் முதல் பணக்காரர் இல்லையாம்.அந்த இடத்தை வேறொருவர் பிடித்துவிட்டாராம்.யாரது?
விடை இங்கே
Monday, April 12, 2004
தகவல்திங்கள்-12
DVD தட்டுகள்
இன்றைய தேதியில் DVD தட்டுகள் மிகப் பரவலாக எல்லோருக்கும் இன்றி அமையாததாகிவிட்டது.நல்ல தரமான ஒலி ஒளியுடன் கூடிய பல பழைய,புதிய திரைப்படங்கள் சந்தையில் DVD-யாக சூடாக விற்பனையாகின்றன.வீட்டு திரைக்கூடங்களில் DVD தட்டுகள் முழு திரை தாக்கத்தையும் அளிக்கிறது.(அதாவது Surround,DTS,DigitalDolphy,Wide Screen என இன்னும் பல இத்தியாதிகளுடன்).இன்னொறு விஷயம் DVD என்றாலே திரை படங்கள் மட்டும் என்றல்ல,இசை மற்றும் மென்பொருள் தகவல்கள் கூட சேமித்து வைக்கலாம்.
இங்கே சில கொசுரு தகவல்கள் DVD பற்றி உங்களுக்காக.
-ஒரு சாதரண DVDயால் 7 CD அளவு தகவல் வைத்திருக்கமுடியும்.
-ஒரு சாதரண DVDயால் 133 நிமிட உச்ச தெளிவான ஒலியுடன் கூடிய ஓட்டபடம்,8 மொழிகளில் 5.1 channel Dolby digital surround sound-டோடு வைத்துக்கொள்ளலாம்.கூடவே 32 மொழிகளில் எழுத்துவிளக்கமும்(subtitle) வச்சுக்கலாம்.
-DVD வகைகள்
Single-sided/single-layer 4.38 GB 2 hours
Single-sided/double-layer 7.95 GB 4 hours
Double-sided/single-layer 8.75 GB 4.5 hours
Double-sided/double-layer 15.9 GB Over 8 hours
-ஒற்றை அடுக்கு DVD தட்டு முழு நீள திரைப்படம் ஒன்றை ஒரே நேர் கோட்டில் இட்டால் 7.5 மைல்கள் போகுமாம்.
-DVD-ல் ஓட்டப்படம் MPEG2 முறையில் உள்ளது
-DVD-யிலுள்ள சில முக்கிய கோப்பு வகைகள்
.IFO files -contain menus and other information about the video and audio.
.BUP files -are backup copies of the .IFO files.
.VOB files (for DVD-Video)
.AOB files (for DVD-Audio) are MPEG-2 program streams with additional packets containing navigation and search information
-DVD-ல் ஓட்டப்படம் 4:3 முறையிலோ (சாதாரண தொலைகாட்சிக்காக)அல்லது 16:9 (அகன்ற திரை தொலை காட்சி) முறையிலோ இருக்கும்.
-DVD-ல் UDF மற்றும் ISO-9660 file systems (கோப்புமுறை) பயன்படுத்துகிறார்கள்.
வகை:தொழில் நுட்பம்
Sunday, April 11, 2004
கடிஞாயிறு-11
ரொம்ப ஆன்மீகத்தனமான (Religious-ஆன) விலங்கு எது?
யானை-அதுக்கு தான் மதம் பிடிக்குமே.
:)
வகை:நகைச்சுவை
Saturday, April 10, 2004
பிடித்ததுசனி-10
உயர்ந்து வளர்ந்திருக்கும் அடர்ந்த மரக் காடுகள்
ஊடுருவிக் கடப்பதென உறுதிபூண்டிருக்கிறேன்
முடிவாய்க் கண் மூடிவிடும் முன்
நெடுந்தூரம் போய்யாகவேண்டும்
நெடுந்தூரம் போய்யாகவேண்டும்
"The woods are lovely, dark and deep.
But I have promises to keep,
And miles to go before I sleep
And miles to go before I sleep."
-Robert Frost, Stopping by Woods on a Snowy Evening
Wednesday, April 07, 2004
வரிகள்புதன்-9
ஒரு அமெரிக்கரின் இந்திய அனுபவம்
சேலை என்றால் என்ன?
A sari is an Indian women's garment made from a single, unstitched, 6-meter-long piece of cloth that is wound several times around the waist before being thrown over the shoulder and held in place by its own weight. It is worn over an underskirt and a short top
லுங்கி?
I have also been fitted for a lungie (pronounced LOONghee), which is a traditional men's garment here. It resembles a wraparound skirt-- a single piece of cloth stitched together at the ends to form a tube about four feet across. You step into it, pinch it at the waist, and fold the excess around to the front. Then you secure it by rolling the waist around until the hem is off the floor (there's about a foot of excess length as well). Mine is blue plaid.
வேஷ்டி?
There is also an variant called a doti, which is similar except it's white with gold thread at the hem. This is considered a holy garment and is used for religious festivals. I may wear one for tomorrow's harvest festival. The lungie is mostly worn while relaxing at home, but I have also seen them on the street. There is also a knee-length mini version. It works nicely as a bathrobe and I have been using it for that for morning tea before I take a shower.
கோலம்?
Many people draw geometric designs with rice flour on the street or sidewalk right outside their houses
சந்தை?
market
1. Start with "Mr. Toad's Wild Ride" at Disneyland.
2. Add 5,000 people.
3. Add cows and dogs in the street.
4. Add other people on the sides who have laid various objects in the dirt and expect you to pay them for them.
5. Shake liberally.
சாலைகள்?
We quickly found out that no two streets are parallel here for any length, and the streets are not well marked.
More on Bangalore traffic. As I said earlier, the streets of Bangalore can be very harrowing. You have cars, buses, trucks, taxis, motorcycles, bicycles, pedestrians, and autorickshaws all mingling together within inches of each other. The last are three-wheeled motorized taxis painted yellow and black. They are heavily utilized by tourists but the locals use them as well. They are little more than overpowered golf carts, and about the same size. They are always squeezing between cars and beeping their little horns. They resemble giant bumblebees, making a nuisance of themselves as they wedge themselves into every nook and cranny.
Traffic as a whole is barely controlled chaos. Especially terrifying to me is seeing women dressed in saris riding side-saddle on the back on the motorcycles, holding on for dear life with one hand while their husbands drive like maniacs in front. One slip (and sari fabric can be made of silk or satin and quite slippery to the touch), or if she puts her feet out too far, or if the voluminous sari gets caught in the machinery of the bike, and she could get seriously hurt.
வாகனங்கள்?
Cars drive on the left here, and all the cars have right-hand drive. It was very odd to sit in the left-front seat and have nothing to do. Cars, bikes, mopeds, and pedestrians all weave in and out, within inches of each other, with little obvious pattern. The traffic lanes, when they exist at all, seem to be merely rough guidelines of lanes that carry little meaning. Horns sound constantly.
continue to be astonished at how anyone manages to drive from one place to another without getting killed, especially at night. A Cadillac or Lincoln Town Car would be impossible to drive here.
பாஸ்ட் புட்?
We had dinner there at an Indian fast-food restaurant. I should mention that the word "fast" seems to have an entirely different meaning here. Out "fast" food took a good 15 minutes to arrive. It was very good, though.
பான்?
we had a very interesting confection called pan. It is made from a variety of ingredients, including betel nuts, fermented rose hips in honey, and others, wrapped in a pan leaf and eaten in one bite. It was very good.
விலை?
The price for both fabric and tailoring is ridiculously cheap-- far less than what you would pay in the US. .........sandwiched between two chapatis (like Indian tortillas), fried, and served with ice cream. It was delicious, and more than enough for the five of us. The bill: 1,063 rupees, including a 10% tip. Converted to dollars, this was a little under $20! In the US, dinner for five at a nice Chinese place would easily run over $100. I was thunderstruck. It was some of the best Chinese food I have ever had.
கடை?
She knows all the merchants by name, and they know her well enough that if she doesn't have enough cash on hand they don't mind if she comes back the next day with the rest. They even bought us tea!
சென்னை?
Overall I like Chennai better than Bangalore, despite the hotter climate and the mosquitoes. Chennai just seems to have more charm and personality than Bangalore. In Bangalore, the atmosphere is one of unrestricted expansion. Chennai is more sedate and sophisticated. The traffic is more organized as well-- most cars stay more or less on their own side of the road.
It strikes me as much more cosmopolitan than Bangalore. If I ever come back to India, I want to come back to Chennai. I wish I had time to see more of it.
சென்னை-மகாப்ஸ் சாலை?
-----'s dad drove us about 40 km south along the coast road to the little town of Mamallapuram. The road is the best I have seen in India. Part of it is a toll road and so is in very good condition. This allowed traffic in excess of 60 mph. This could get very scary after a while; driving habits do not change with the increase in speed and all the hair-raising stunts that drivers pull in the cities are now done at 60 mph. I think I grew a few new gray hairs on that road.
எதிர்காலம்?
We have enjoyed every minute of our trip. India is an amazing place. It is developing rapidly and has great promise for the future.
மேலும் விரிவாக இங்கே
வகை:நகைச்சுவை
Tuesday, April 06, 2004
கிசுகிசுசெவ்வாய்-8
சினிமா மட்டுமல்ல இப்போது டிவியும் டைவெர்ஸ் செய்கிறது.இது என்ன புதிரா இல்ல புனிதமா?
மேலும் விரிவாக இங்கே
Monday, April 05, 2004
தகவல்திங்கள்-7-பிரபல வாகனங்களும் அதன் பிறப்பிடமும்
பிரபல வாகனங்களும் அதன் பிறப்பிடமும்
Alfa Romeo-இத்தாலி
Audi-ஜெர்மனி
Austin-பிரிட்டன்
Benz-ஜெர்மனி
BMW-ஜெர்மனி
Bristol-பிரிட்டன்
Chrysler-அமெரிக்கா
FIAT-இத்தாலி
FORD-அமெரிக்கா
General Motors-அமெரிக்கா
HONDA-ஜப்பான்
Hyundai Motor Company (HMC)& Kia- தென் கொரியா
ISUZU-ஜப்பான்
Jaguar-பிரிட்டன்
Kia- தென் கொரியா
Lambert-அமெரிக்கா
LAND ROVER-பிரிட்டன்
Lexus-ஜப்பான்
Mazda-ஜப்பான்
Mercedes-ஜெர்மனி
Mitsubishi-ஜப்பான்
Opel-ஜெர்மனி
Peugeot-பிரான்ஸ்
Porsche-ஜெர்மனி
Renault-பிரான்ஸ்
Standard-பிரிட்டன்
Subaru-ஜப்பான்
Suzuki-ஜப்பான்
Toyota -ஜப்பான்
Volkswagen-ஜெர்மனி
Volvo-ஸ்வீடன்
மேலும் விரிவாக இங்கே
Why did Japan overtake and in many ways beat the United States at its own automotive game?
A Fact
1991
The "Hummer," the military's High Mobility Multipurpose Wheeled Vehicle, went on the market for civilian use. Actor Arnold Schwarzenegger bought the first of the non-military Hummers.
வகை:பொது அறிவு
Sunday, April 04, 2004
கடிஞாயிறு-6
ஏப்ரல் ஒன்றாம் தேதி எல்லோரும் ரொம்ப களைப்பாய் இருந்தார்கள்.ஏன்?
31 நாள் மார்ச் பண்ணியிருந்ததால்.
வகை:நகைச்சுவை
வளைகுடா வாழ்வில்
இங்கே தினசரிகளில் இஸ்ரேல்,பாலஸ்தீன பிரச்சனைகளைத் தவிர வெறெதுவும் செய்தி இல்லை.வானொலிகளும் இஸ்ரேல்,பாலஸ்தீனம் -ஈராக்,அமெரிக்கா விசயங்களையே திரும்ப திரும்ப ஒலிக்கின்றன.மற்றபடி சுயபிரதேசம் பற்றிய செய்திகளெல்லாம் இருட்டடிப்பு தான்.யாருக்கு தைரியம் இருக்கு.உள்ளதை உள்ளபடியே எழுத.
இந்தியர் என்றால் ரொம்பபேருக்கு இளக்காரம்.மேற்க்கத்திய வெள்ளைதோலைக் கண்டால் ரொம்ப மரியாதை.அவன் தப்பு தப்பாய் பண்ணினாலும் கண்டுகிறது இல்லை.நம்மவர்கள் தும்மினாலும் சிறை பிடிக்கிறார்கள்.அதே வெள்ளையர்கள் அப்பக்கமாய் சற்று மறைந்தால் இவர்கள் காரி துப்புகிறார்கள்.முன்புகொடுத்தது பயத்தினால் கொடுத்த மரியாதை போலும்.
ஐரோப்பியர்கள் எண்ணை கண்டுபிடித்து கொடுத்திருக்கிறார்கள்.அமெரிக்கரின் ஈராக் ஆட்டம் அனைவருக்கும் தெரியும்.அதனால் அவர்களுக்கு நல்ல மரியாதை இங்கு.
இந்தியா மாதிரியா?.இங்கு வெள்ளையன் ஒருத்தனுக்கு நெறி கட்டினால் அவன் நாடு ஒடோடிவருகிறதே.
மேலும் இவர்களுக்கு சொந்தமாய் படை பலம் இல்லை.இராக் மாதிரி எவனாவது ஆக்கிரமிக்க வந்தால் வெள்ளையர் தான் காப்பாற்ற வேண்டும்.
அதற்காக இந்தியரை ஏன் இளக்காரமாக்கவேண்டும்.சொல்லப்போனால் இப்பிரதேசத்தை கட்டி எழுப்பியவர்கள் இந்தியர் தான்.இன்றைய தேதியிலும் நம் பங்களிப்பு மிக மகத்தானது.ஆனால் நாம் எப்பொழுதுமே நம்மை பலமாய் காட்டிக்கொண்டது இல்லை.பேட்டை ரௌடிக்கு தானே இக்காலங்களில் மரியாதை.சாதுக்களை எந்த நாய் கண்டுக்க போகிறது.
இதனால் தான் லேடென்களும்,உசேன்களும் இங்கு பிரபலம்.லேடெனுக்கும்,உசேனுக்கும் எல்லொருமே இங்கு விசிறிகள்.
அமெரிக்கபானம் என பெப்சியை உதறுபவர்கள்.ஆனால் அமெரிக்க இறக்குமதி கார் ஏறி மெக்டொனால்ட் போய் சாப்பிடுவார்கள்.பயன்படுத்தும்ஆப்பரேடிங் ஸிஸ்டம் விண்டோஸ்.
நம்ம ஆட்கள் கெட்டிக்காரர்கள்.வந்தோமா சம்பாதித்தோமா.போனோமா என்று.எவர் இளக்காரங்களையும் கண்டுகிறதில்லை.எனென்றால் நமக்கொரு காலம் வருகின்றது.ஓரு காலத்தில் செல்வம் கொழித்த நாடுதான் நம்மூர்.ஏதொ
தொழில்புரட்சி காலத்தில் நம்மவர்கள் தூங்கிவிட்டிருந்தோம்.இல்லை இல்லை அடிமைதனத்தில் சிக்கியிருந்தோம்.அதிலிருந்து
விடுபட போராடிக்கொண்டிருந்தோம்.இப்போது உழைப்பால் உயர்ந்து கொண்டுள்ளோம்.இனி நாம் மனித வளத்தால் உலகை கொள்ளையடிப்போம்.ஆனைக்கொரு காலம்.பூனைக்கொரு காலம்.நிச்சயமாக.
(பட்டென தோன்றியது.ஏதோ நாடு மத இன துவேசத்திலோ,வெறியிலோ எழுதியதுஅல்ல.வருத்தியிருந்தால் மன்னிக்கவும்)
அப்டேட்:
மேலும் கல்காரி சிவாவின் சுவாரஸ்யமான அரேபிய அனுபவங்கள் இங்கே.கட்டாயம் படிக்க வேண்டியது.
http://sivacalgary.blogspot.com/2006/03/3.html
வகை:பொது அறிவு
Saturday, April 03, 2004
Wednesday, March 31, 2004
வரிகள்புதன்-4
கேட்க தோன்றுதே
கீழ்த்தெரு பைத்தியம் சொல்லிக்கொண்டு போனான்
அண்ணா போல் அறிவை தேடாதே
பெரியார் போல் பகுத்தறிவை பேசாதே
எம்ஜிஆர் போல் ஏழைக்கு உதவாதே
காமராஜ் போல் காரியத்தில் மூழ்காதே
கண்ணகி போல் கற்ப்பாயிருக்காதே
கண்ணதாசன் போல் கவிதையாய் கொட்டாதே
களிப்பாய் இரு தினமும் களிப்பாய் இரு
அதிகமாய் போனால் உலகம் என்ன செய்யும்?
சிலை வைக்கும்.
Tuesday, March 30, 2004
கிசுகிசுசெவ்வாய்-3
இந்த "வால்" நபர் அடிக்கடி மாலை மது வாங்கிவிட்டு ஊருக்கு ஒதுக்குபுறமாய் ஒதுங்குகிறாராம் தன் தோழரோடு-யார் இது?
விடைக்கு சொடுக்குங்கள் கீழே
http://www.dinamalar.com/2004march28varamalar/thunuk.asp
Monday, March 29, 2004
தகவல்திங்கள்-2
மால்வேர்-என்பது (தமிழில் மென்பூச்சிகள் எனலாம்)அணுகுண்டு மாதிரி.அறிவியலை நல்லதுக்கு பயன் படுத்தாமல் சில மென்பொருள் வல்லுனர்கள் உட்கார்ந்து கஷ்டப்பட்டு தயாரித்த viruses(மென்கிருமிகள்), worms, and Trojan horses.இவை உங்கள் கணிணியில் நுழைந்தால் அவ்ளோதான் கணிணி படுத்துக்கொள்ளும்.ஒன்றில் உங்கள் கோப்புகள் வீண்போகும் அல்லது உங்கள் கோப்புகளோ அல்ல உங்களைப் பற்றிய தகவல்களோ தூரத்திலிருக்கும் மென்பொருள் திருடனுக்கு போய்கொண்டிருக்கும் உடனே நீங்கள் antivirus (தமிழில் மென்பூச்சிநாசினி எனலாம்)நிறுவுவது அவசியம்
Malware (for "malicious software") is programming or files that are developed for the purpose of doing harm. Thus, malware includes computer viruses, worms, and Trojan horses.
Sunday, March 28, 2004
Saturday, March 27, 2004
சில நேரங்களில் சில சந்தேகங்கள்
நானும் பல முறை நினைத்திருக்கிறேன் தமிழ் தான் வளமையான மொழி என்று.பின்னே,நிலையைபொறுத்து தமிழில் தானே இலைக்கு தழை,ஓலை,கீரை என பல பெயர்கள் உண்டு.இப்போதோ சில சந்தேகங்கள்,அறிவியல் தமிழ் பலவீனமானதோ என்று. இல்லைஇல்லை பலவீனமாக்கிவிட்டோம்.புத்தம்புது கருவிகளும்,கண்டுபிடிப்புகளும் தினமும் தோன்றும் உலகில் நமக்கு தமிழிலும் சில பல புது சொற்கள் தேவைபடுகின்றன.
கண்டிப்பாக.
தொடர்ந்து அறிவியலை அப்படியே ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்காமல் (உதாரணமாய் Workgroup-பை வேலைகுழு என்றும்,vertical scroll bar-யை செங்குத்து உருள் பட்டி என்றும்) என்றைக்குதான் தமிழ் தனித்து நிக்கபோகிறதோ?
வகை:தமிழ்நாடு
Saturday, March 13, 2004
அவர்கள் சந்தோசமாகட்டும்
நான் நினைத்தது தப்பாகி விட்டது முதன் முதலாக.சப்னா ஒரு இந்திய முஸ்லிம் பெண்.பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை கன்னாபின்னாவென திட்டுகிறாள்.இந்தியா ஜெயிக்க வேண்டுமென அல்லாவை வேண்டுகிறாள்.அக்தரை ஒரு பிடிபிக்கிறாள்.அலுவலகம் விட்டு மதியம் உனவுக்காக உணவகம் போகும் போது காரில் வைத்து சப்னாக்கும் தாமஸ்க்கும் செம சண்டை.தாமஸ் கேரள கிறிஸ்தவன்.பாகிஸ்தானை சப்போர்ட் பண்ணுகிறான்.கேட்டால் அப்போ தான் இரு நாடு உறவுகள் நன்றாய் நீடிக்கும் இல்லையேல் "There is a possiblility of terrorist threat for the players" என்கிறான்.சப்னா ஒரு நிமிஷம் ஆடிப் போனாள்."My sweet Tendulkar.O God No No" (இன்று அடித்தது என்னமோ 28.டிராவிட்.99).அவர்கள் பூமியில் அவர்கள் விளையாடி ஜெயித்து அவர்கள் சந்தோசமாகட்டும் இது தாமஸின் விளக்கம்..ஒன்னுமே புரியவில்லை.பாகிஸ்தான் மக்கள் மனதில் என்ன ஒடுகிறதோ?
வகை:சலோ இந்தியா
Wednesday, March 10, 2004
பயமாய் இருக்கிறது
சத்தியமாய் பயமாய் இருக்கிறது.எத்தனை நாள் இது நீடிக்குமோ?.தோட்டாக்களும் குண்டுக்களுமே பாய்ந்து கொண்டிருந்த தேசங்களுக்கிடையே பூக்கள் சொரிகின்றன .பேருந்தும்,இரயில் வண்டிகளும்,விமானங்களும் ஓடுகின்றன.மாரிமாரி வர்த்தகம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.ஏன் போரிட்டுக்கொண்டிருந்த அநேக தேசங்கள் கூடிகுலவும் இந்நாட்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் கூடிகுலவகூடாதா என்ன?.யுடோபியா என்பார்கள்.வளமான இந்தியா செழிப்பான பாகிஸ்தான் அலையலையாய் மோதும் சுற்றுல்லா பயணிகளின் கூட்டத்தால் பூத்துகுலுங்கும் காஷ்மிர்.நாச அயுதங்களுக்கு போன பட்ஜெட் இப்பொழுது மனிதங்களுக்கு வந்து சேருகிறது.அப்பப்போ நமக்குள்ளே ஆரொக்கியமாய் அறிவுப்போட்டியயும் கிரிக்கெட் போடியயும் வச்சுக்கலாம்.நினைக்கவே புல்லரிக்குது.இதெல்லாம் நடக்குமா.சத்தியமாய் பயமாய் இருக்கிறது.(எதாவது மேலை நாட்டுக்குபொறாமை பற்றிவிட போகிறது?)
வகை:சலோ இந்தியா
Tuesday, March 09, 2004
தமிழ் கலாசுகிறது
அடடா என்னமாய் எழுதுகிறார்கள்.கொட்டிக்கிடக்குது தமிழ் வலைபூக்கள் இணயமெங்கும்.கொஞ்சகாலமாயிருந்த தமிழ் வறட்சி,இணயத்தில் சுத்தமாய் விட்டுப்போனது போலவே தோன்றுகிறது.தமிழ் இனி மெல்ல ஒளிரும்.நம்பிக்கையாய் சொல்லலாம்.இலக்கியம் பேசுகிறார்கள்,அரசியல் அலசுகிறார்கள்,அறிவியல் ஆய்கிறார்கள்.வரலாறு,புவியியல் என தமிழ் கலாசுகிறது வலையுலகத்தில்.நல்லதொரு திருப்பம்.கட்டுரை எழுதி விகடனுக்கும்,குமுதத்திற்கும் காத்திருப்பதை விட மலருக்கும் இதழுக்கும் மாரடிப்பதை விட எழுது தோன்றுகிறதை எழுது எழுதிக்கொண்டே இரு நல்லபக்கமானால் கட்டாயம் திரும்ப வருவார்கள் என்ற வேகம் பிடித்திருக்கிறது.மொத்தத்தில் கணனி தமிழ் விழித்திருக்கிறது.ஆரோக்கியமான இந்த போக்கு கடைசிவரை தொடரவேண்டும் என கடவுளை பிரார்தித்து கொள்வோம்.(குடுமிபிடி சண்டை போட யாராவது வந்துவிடபோகிறார்கள்)
வகை:சலோ இந்தியா
வகை:தமிழ்நாடு
Posted by
PKP
at
3/09/2004 02:08:00 AM
Labels: Tamil