ஊருக்கு கிளம்பும் முன் அவசர அவசரமாக இந்த பதிவு.Eye-Fi-பற்றியது.இந்த மாதிரியான அற்புத தொழில் நுட்பங்களை பற்றி கேள்விப்படும் போது உடனே எழுதிவிட வேண்டும். நம்மில் அநேகருக்கு இது ஏற்கனவே தெரிந்த விசயம் தான். தெரியாதவர்களுக்கு மட்டும் இந்த அறிமுகம். சாதாரண மெமரி கார்டுக்கு உயிர்கொடுக்கும் தொழில் நுட்பம் இது. memory card + Wi-Fi = Eye-Fi எனும் சமன்பாட்டை பயன்படுத்தியிருக்கிறார்கள். அதாவது உங்கள் SDHC மெமரிகார்டால் Wi-Fi எனப்படும் வயர்லஸ் நெட்வொர்க்கோடு இணைய முடியும். அவ்ளோதான். இதனால் என்ன பயன்? உங்கள் சாதாரண டிஜிட்டல் கேமராவில் இந்த Eye-Fi மெமரிகார்டை பயன்படுத்தினால் உங்கள் கேமரா உங்கள் வீட்டு வயர்லஸ் நெட்வொர்க்கோடு இணைக்கப்பட்டு விடும்.விளைவு போட்டோ எடுக்க எடுக்க அப்படியே வை-பை வழி உங்கள் கணிணிக்கோ அல்லது ஐபோன்/ஐபேடு/ஆண்ட்ராய்டுக்கோ போட்டோக்களை எளிதாக கடத்திவிடலாம். உங்கள் மெமரி கார்டு எப்போதுமே போட்டோக்களால் நிரம்பிவழியாது.never run out of space again, எப்படி கான்செப்ட்? எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் பாருங்கள்? இங்கு ஆப்டிமம் மற்றும் AT&T வைபைகள் ஊரெங்கும் உள்ளன. எனவே எங்கிருந்து வேண்டுமானாலும் போட்டோக்களை சாதாரண டிஜிட்டல் கேமராவிலிருந்து அப்லோடு செய்துவிடலாம். இன்னும் அநேக நம்ம வீட்டு சாதனங்கள் சீக்கிரத்தில் உயிர்பெற்று வீட்டு வயர்லெஸ் நெட்வொர்க்கோடு இணைக்கப்படும். அந்த வழியில் டம்ப் பொருட்களைக்கூட நெட்வொக்கில் இணைக்க நாம் ரொம்ப கஷ்டப்படவேண்டியதில்லை என்பதை இந்த ஐ-பை நிரூபிப்பதாய் உள்ளது.
மீண்டும் cleartrip.com இந்திய ரெயில்வே ரெசர்வேசன்களுக்கு உதவியது. irctc.co.in -னோ makemytrip.com-மோ அல்லது yatra.com-மோ சர்வதேச அல்லது குறைந்த பட்சம் அமெரிக்க கிரெடிட்/டெபிட் கார்டுகளை ஏற்றுக் கொள்ளவில்லை. flykingfisher.com-ல் கூட முன் பதிவு செய்ய cleartrip.com - தான் உதவியது.Long live cleartrip.com. ஆன்லைன் coupon code-களையும் கவுரவிக்கிறார்கள். பல சென்னை ஹோட்டல் ஆன்லைன் ரெசர்வேசன் தளங்கள் அநியாயத்துக்கும் இருக்கின்றன. பக்காவாக வெளிநாட்டு ஓட்டல்களுக்கு வெப் பக்கங்களை வடிவமைக்கும் நாம், நம்ம ஊர் ஸ்டார் ஹோட்டல் ஆன்லைன் ரெசர்வேசன் தளங்களை பார்க்கவேண்டுமே, பாழடைந்த மண்டபத்தினுள் நுழைவது போல் இருக்கின்றது. வியாபார விரிவாக்கத்தில் கவனம் செலுத்தும் நம்மவர்கள் ஆன்லைன் அப்பியரன்ஸ்சிலும் கவனம் செலுத்தினால் நன்னாய் இருக்கும்.தூரத்து வாடிக்கையாளார்களுக்கு அந்தந்த இணைய தளங்களே அந்த வியாபாரம் பற்றிய மறைமுக நல்லெண்ணத்தையும் நம்பிக்கையின்மையினையும் கொடுக்கும் என்பதை அறியவேண்டும். வெள்ளிக்கிழமை ஐபோன் 4S கையில் வந்து கிடைத்ததும் கூகிளுக்கு ஆப்படிக்க வந்திருக்கும் SIRI-யோடு கூட அப்படியே கிளம்பிவிட வேண்டியது தான்.புதிதாக சர்வதேச விமானநிலையம் ஒன்றை திருவனந்தபுரத்தில் கட்டியிருக்கிறார்களாம். பார்க்கலாம். அப்படியே ஒரே கல்லில் இரண்டு மாங்காயிட்ட அசோக்கையும் சந்திக்க வேண்டும்.போன முறை வேலுவை பார்த்தோம் இந்த முறை முடிந்தால் பொன்னுசாமி. வேறெதாவது இருக்கு பரிந்துரைக்க?
On the Lighter Side
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Tuesday, October 11, 2011
ஐ-ஃபை
Posted by
PKP
at
10/11/2011 04:32:00 PM
4
comments
Labels: About me, Business, Hardware, India, Marketing, Websites
Sunday, August 24, 2008
ஏதோ ஒரு பாட்டு
நம் குரல்தனை எழுத்துக்களாக மாற்றும் speech recognition நுட்பம் வளர்ந்துகொண்டிருப்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனாலும் அது இந்த அளவுக்கு வளர்ந்துவிட்டிருப்பது எனக்கு தெரிந்திருக்கவில்லை.
FM-ல் ஒரு ஆங்கிலப்பாடலை கேட்கின்றோம். ஏனோ அது பிடித்துபோய்விட்டது. நம்மை அறியாமலே நாம் அதை முணுமுணுக் கொண்டே வீடு வருகின்றோம். கவுச்சில் (Couch) உட்காரும் போது மீண்டும் அந்த பாடல் நினைவுக்கு வருகின்றது. இன்னொரு முறை அந்த இனிய இசையை கேட்டால் நன்றாய் இருக்கும் போல் தோன்றுகின்றது. ஆனால் அது என்ன பாடல், யார் பாடியது, எந்த ஆல்பத்திலிருந்து என ஒன்றுமே தெரியாது உங்களுக்கு. என்ன செய்வது இப்போது?
மிடோமி (midomi) உங்களுக்கு உதவுகின்றது. நீங்கள் செய்ய வேண்டிதெல்லாம் மிடோமி இணையதளம் போய் அந்த பாடலை 10 நொடிகள் பாடி அல்லது hum-மி காண்பியுங்கள். அவ்வளவுதான். அவர்கள் அந்த பாடலை தேடி உங்களுக்கு கண்டுபிடித்து தருகின்றார்கள். என்னமோ MARS அதாவது Multimodal Adaptive Recognition System என்றொரு தொழில் நுட்பமாம்.இந்த அட்டகாச வேலைகளையெல்லாம் செய்கின்றது. டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் பாடல் என்னப் பாடல் என கண்டுபிடிக்க மிடோமியிடம் சில செக்கண்டுகள் ரெக்கார்டு பண்ணி காட்டினாலே போதும் நொடியில் அது அந்த பாடல் பற்றிய முழு ஜாதகத்தைம் வைத்துவிடுகின்றது. iPhone-னிலும் இது கையடக்க பயன்பாடாய் இலவசமாய் கிடைக்கின்றது.
http://www.midomi.com
Backstreet Boys-ன் "Show me the meaning" பாடலை எனது கனகனத்த குரலில் பாடிக்காண்பித்தேன். மிடோமி உடனே அதை கண்டுபிடித்து விவரத்தை தெரிவித்ததோடல்லாமல் அந்த பாடலின் யூடியூப் வீடியோக்கான சுட்டியையும் கொடுத்து அசத்தியது. ஆச்சரியமாய் இருந்தது.
இது போல தமிழிலும் வர இன்னும் கொஞ்சநாள் தவம் இருக்கவேண்டும்.
அப்போது நாம் இருமினாலும் தும்மினாலும் அது யாருடைய இருமல் யாருடைய தும்மல் என கணிணியார் கரேட்டாக கண்டுபிடித்துச்சொல்வார்.விதைகள் கிறிஸ்தவ தமிழ் மென்நூல்.Vithaikal Christian Tamil pdf ebook Download. Right click and Save.Download
Posted by
PKP
at
8/24/2008 11:58:00 PM
5
comments
Labels: Free Services, Websites
Thursday, June 26, 2008
பயனர் கையேடுகள்
ஆயிரத்து ஐநூறு டாலர்கள் கொடுத்து Sony Bravo 40" HDTV ஒன்றை வாங்கி நடுஅறையில் பெருமையாய் வைத்திருப்போம். வழக்கம் போல அதன் ரிமோட் உங்கள் வீட்டுகுட்டிப் பாப்பாவின் பொம்மையாகிவிடும். மாறிமாறி இரு பொத்தான்களை அது அமுக்க அப்புறம் அந்த அழகான உங்கள் பிளாட் ஸ்கிரீன் டிவி கோணல் மாணலாய் அல்லது ஒடுங்கி தெரியத் தொடங்கிவிடும். இதை எப்படி சரி செய்வது? தேடு தேடு அதோடு வந்த யூசர்கைடை தேடு அட எங்கப்பா அந்த யூசர்கைடு?
ஹாண்டா பைலட் வேன், அதன் டேஷ்போர்டில் விவகாரமாய் ஒரு குறி தோன்றி பயமுறுத்தும். அப்போது தான் அக்குறியின் அர்த்தம் அறிய வேனோடு வந்த அந்த பயனர்கையேடை தேடுவோம்.அட அந்த யூசர்கைடு எங்கப்பா?இப்படி அநேக மின்ணணுசார் உபயோகப்பொருட்களின் யூசர் மானுவல்கள் ஆரம்பத்திலேயே வீடுகளில் எறியப்பட்டு விடுவதால் தேடப்படும் போது கிடைப்பதில்லை. இருக்கும் போது அது தேவைப்படுவது இல்லை..ஆமாம். ஆனால் இங்கு ஒரு தளத்தை பாருங்கள்.ஏறக்குறைய எல்லா user guides மற்றும் manual-களையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றார்கள். 800,000-க்கும் அதிகமான வீட்டு உபயோகப்பொருட்களின் User Guides-கள் இங்கு இணையேற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன.
உங்களுக்கு ஏதாவது user manual தேவையெனில் வீட்டு அட்டைப்பெட்டிகளில் தேடிப்பார்ப்பதை விட இந்த தளத்தில் முதலில் தேடிப்பார்க்கலாம்.
http://safemanuals.com
(மின்னஞ்சல் வழி என்னை வாசிக்கும் நண்பர்களுக்கு ஏனோ எனது கடந்த இரு பதிவுகளும் கிடைக்க வில்லை.அவற்றை படிக்க இதோ அவற்றின் சுட்டிகள்.
கடிவாளங்கள்
நடந்து பாருங்கள் உலகம் மிகப்பெரியது
மற்றபடி கடவுளின் புண்ணியத்தில் நான் நலமே.நன்றி ரிஷான்,நன்றி அதிரை)தா.பாலகணேசன் "வர்ணங்கள் கரைந்த வெளி" கவிதைகள் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Varnankal Karaintha Veli Tamil Poems T. Balaganeshan kavithaikal in pdf ebook Download. Right click and Save.Download
Posted by
PKP
at
6/26/2008 12:40:00 AM
4
comments
Tuesday, June 10, 2008
உலகின் முதல் இணையதளம்
செவ்வாய் கிரகத்தில் தெரியாது.ஆனால் பூமியில் டிசம்பர் 1990 கணக்குப்படி ஒரே ஒரு இணையதளம் தான் இருந்தது. அதன் விலாசம் info.cern.ch அதற்கு சொந்தக்காரர் www-வை அதாவது html-ஐ கண்டு பிடித்த Tim Berners-Lee ஆவார். இன்றைக்கு வெப் 2.0 வெப் 3.0 வென போய்கொண்டிருக்கின்றோம். ஆனாலும் அன்றைக்கு அவர் முதன்முதலாய் நெய்த அந்த வலைப்பக்கத்தை இன்றைக்கும் பத்திரமாய் வைத்திருக்கின்றார்கள். நீங்கள் கீழ்கண்ட சுட்டி போய் அதை பார்க்கலாம்.
http://www.w3.org/History/19921103-hypertext/hypertext/WWW/TheProject.html
1990-ல் இவ்வெளிய பக்கத்தை உருவாக்க உங்களுக்குத் தெரிந்திருந்தால் நீங்கள் தான் பூமிப்பந்தை இணைய வலையில் சிக்கவைத்த ஜீனியஸ் சிலந்தியாய் இருந்திருப்பீர்கள்.
இந்த மே மாத கணக்குப்படி இணைய உருண்டையின் மொத்த இணையதளங்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா? 168,408,112 அபாரமானமான வளர்ச்சிதான். இத்தனை வெப்தளங்கள் உருவாக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் ஒரு முக்கிய காரணமாய் அமைந்தது கூகிளின் அட்சென்ஸ் (Google Adsense) என்றால் மிகையாகாது.
தங்கள் இணையதளங்களில் ஓடும் விளம்பரங்களை கிளிக்கினால் மாதம் தோறும் காசோலை வீடு தேடி வரும் என்றதும் மெக்கானிக்கல், சிவில் மாணவன் கூட இணையதளம் தொடக்கினான். பல வெப்வித்தைகளை காட்டி சட்டம் சட்டமாய் விளம்பரங்களைப் போட்டு. இப்படி ஆடை அணிகலன்களோடும் நிர்வாணமாயும் ஆயிரம் ஆயிரம் தளங்கள்.
இத்தனை வெற்றிகரமான கூகிளின் ஆட்சென்ஸ் புராஜெக்ட்டை முன்னின்று நடத்தியவர் ஒரு இந்தியர் என்பது நமக்கெல்லாம் பெருமை. அவர் பெயர் கோகுல் ராஜாராம் (Gokul Rajaram). 2003-ல் கூகிளின் இந்த நுட்பம் வெளிவந்த பின்பு தான் கூகிளுக்கு காசு கொட்டோ கொட்டென கொட்டத் தொடங்கியது.அப்புறம் இணைய காட்டுக்கு இன்றுவரை கூகிள் தான் ராஜா.
ராஜாராம் கான்பூர் IIT யில் B.Tech முடித்து பின் MIT Sloan School of Management-ல் M.B.A-யும் M.S. in Computer Science-ம் முடித்தவர். ராஜாராம் பழைய நினைவுகளை சொலலும்போது “When we started adsense, it was just me and four engineers,” “The night before we launched, Sergey spent five hours with me testing the system and pointing out bugs.” என்கின்றார் மறக்க இயலாத நினைவுகளாக. இணையத்தின் போக்கையே மாற்றிய நாளல்லவா அது. இங்கு அவர் கூறும் "செர்ஜி" கூகிளை நிறுவிய நிறுவனர்களில் ஒருவர் ஆவார்.
ஆனாலும் கோகுல் ராஜாராம் இன்றைக்கு Xoogler ஆகிவிட்டார். அதாவது x-googler. மில்லியன்களை சம்பாதித்து விட்டு இனி தானே தனக்காக உழைக்கப்போவதாக chailabs.com தொடங்கியிருக்கிறார். அதன் விவரங்களெல்லாம் இப்போதைக்கு ரகசியமே. எதாவது வியப்பாய் சீக்கிரமாய் கொண்டு வருவார் என எல்லோரும் எதிர்பார்க்கின்றார்கள்.
இன்றைக்கு Google Adsense-ன் நிலமை அவ்வளவு பிரகாசமாய் இல்லை. மைஸ்பேஸ் சிறுவர்கள் கும்பலை நம்பி மில்லியன்களை கூகிள் செலவழித்து கையை தானே சுட்டுக் கொண்டிருக்கிறது. வருமானமும் கம்மி. கொஞ்ச காலமாய் இன்னோவேசனே இல்லை. இப்படி அநேக கம்ப்ளெயின்ட்கள். பல முக்கிய googler-கள் வேறு xoogler-கள் ஆகிக் கொண்டிருக்கின்றனர். இப்படி தொடர்ச்சியாய் மாற்றங்கள், உலகில் அது மட்டும்தானே மாறாதது.கந்தசஷ்டிகவசம் தமிழிலும் ஆங்கிலத்திலும் Kanda Shasti Kavasam pdf in Tamil and English ebook Download. Right click and Save.Tamil Download and English Download
Posted by
PKP
at
6/10/2008 08:59:00 PM
2
comments
Tuesday, June 03, 2008
போலி வெப்கேமும் சில சுட்டிகளும்
ஏதாவது ஒரு மெசெஞ்சரில் சாட்டிங்கில் இருக்கின்றீர்கள்.உங்களிடம் வெப்கேமே இல்லை.எனினும் மறுமுனையில் இருப்பவரிடம் உங்களிடம் வெப்கேம் இருப்பது போல் பாவ்லா காட்ட ஆசையா?.அவர் போன்றோர்க்கு உதவுவது தான் இந்த போலி வெப்கேம். Fakewebcam இந்த மென்பொருளை நிறுவிவிட்டு பின் அதில் ஒரு போலி வெப்கேம் வீடியோவை ஓட விட்டு விட்டால் மறுமுனை மனசு அதை உண்மையென்றே நம்பிவிடுமாம். டைப்புவதில் மட்டும் அல்ல வெப்கேமில் தோன்றுபவரிலும் பொய் இருக்கலாம்.உசாராயிருங்கள் அவதார்களே.
கூகிளில் inurl:view/index:shtml அல்லது inurl:viewerframe?mode= எனத் தேடினால் ஆயிரக்கணக்கான திறந்த கேமராக்கள் உங்கள் பார்வைக்கு வரும்.அதெல்லாம் அங்காங்கே ரோடுகளிலும் ஓட்டல்களிலும் பார்க்குகளிலும் ஒழுங்காக பாதுகாக்கப்படாத CCTV security கேமராக்கள்.சிலவற்றை கிளிக்கினால் இன்டரஸ்டிங் காட்சிகள் கூட உங்களுக்கு கிட்டலாம். இதை பார்வையிட Axis Live View அல்லது live applet அல்லது webview livescope இதிலெதாவது ஒரு ஆக்டிவெக்ஸ் கன்ட்ரோல் நீங்கள் நிறுவ அனுமதிக்க வேண்டிவரும். அவ்வளவுதான்.முழுக் கேமராவும் உங்கள் கைபிடிக்குள் வந்து விடும். இஷ்டப்படி கேமராவை மேலே கீழே இடது வலது வென நகர்த்தலாம்.கேமரா தானாகவே நகர்வதை பார்த்து அங்கிருந்து நோக்கும் அன்னியர்கள் சற்று கிலியிலேயே கேமராவை பார்ப்பர்.
உதாரணத்துக்கு கீழ்கண்ட சுட்டியைப் பாருங்கள்.எங்கோ ஒரு ரெஸ்டாரன்டின் பாதுகாப்பு கேமரா பாதுகாப்பேயின்றி.
http://yamucha.miemasu.net:81/ViewerFrame?Mode=Motion&Language=1
இது இன்னொன்று.உலகின் எங்கோ ஒரு தெருமுனை.
நான் பார்த்ததிலேயே மிக வேகமாக ஸ்டிரீம் செய்யும் கேமரா.லைவ்வாய் உலகை காட்டுகின்றது.
http://213.196.182.244/view/index.shtml
கீழ்க்கண்ட இணையதளத்தில் இதுமாதிரி ஏகப்பட்ட அனாதை கேமராக்களை கண்டுபிடித்து உங்களுக்காக கண்காட்சி போல் அடுக்கிவைத்திருக்கின்றார்கள்.
http://www.opentopia.com/hiddencam.php
இந்தியாவிலும் ஏன் சென்னையிலும் இது போல் கேமராக்கள் சாலைகளிலுள்ளதுவென கீழ் கண்ட சுட்டியில் சொல்கின்றார்கள்.எதுவும் வேலை செய்வதாய் தெரியவில்லை.
http://www.webcamgalore.com/EN/India/countrycam-0.html
நியூஜெர்ஸி டர்ன்பைக்கில் டிராபிக் எப்படி இருக்குதுவென கேமரா வழி பார்க்க நாங்கள் அடிக்கடி பயன்படுத்தும் சுட்டி இது.
http://www.state.nj.us/transportation/traffic/cameras/"கணிணி மொழி சி ஒரு அறிமுகம்" தமிழில் பிடிஎப் பக்கங்கள் Introduction to C in Tamil pdf pages download. Right click and Save.Download
Posted by
PKP
at
6/03/2008 11:25:00 PM
2
comments
Labels: Websites
Sunday, May 18, 2008
வித விதமான மனிதர்கள்
எனது இந்த பிகேபி வலைப்பதிவுக்கு வந்து செல்லும் நண்பர்களைப் பற்றி எனக்கு எப்போதுமே ஒரு பெரிய அபிப்ராயம் உண்டு. காரணம் பெரும்பாலும் நான் மெலிதான விஷயங்களை இங்கு பேசுவதைவிட சொரசொரப்பான விசயங்களையே அதிகம் பேசி போரடித்திருக்கின்றேன். ஆயினும் தவறாமல் வந்து பொறுமையாய் படித்து தங்கள் பின்னூட்டங்களை இட்டு உற்சாகப்படுத்தி... உண்மையைச் சொல்லப்போனால் இங்கு எனது அநேக பதிவுகளுக்கு காரணமே இந்த நண்பர்கள் தான். இதைப் பற்றி எழுதுங்களேன், அல்லது இதை எப்படிப் பண்ணுவது என சொல்லுங்களேன் அல்லது இதற்கு ஏதாவது மென்பொருள் உண்டா அப்படி இப்படி என்று கேள்விகள் கேட்டே அநேக பதிவுகள் என்னை போட வைத்துவிட்டனர். நான் எழுத நினைப்பது ஒன்றாயிருக்க கடைசியில் நண்பர்கள் கேட்டதையே பதித்து நின்றிருக்கின்றேன்.
அதையும் தாண்டி சில நண்பர்கள் "பிகேபி I think there is a spelling mistake in this post"-ன்னு சொல்லி என்னை திருத்தியிருக்கின்றார்கள். சில நண்பர்கள் "This is not good for you PKP,do this way" அப்படினு சொல்லி அக்கரையாய் ஆலோசனை கொடுத்திருக்கின்றார்கள். இன்னும் சில நண்பர்கள் தாங்கள் கேள்விப்பட்ட நல்ல தகவல்களை எனக்கும் மின்னஞ்சலாய் அனுப்பி மகிழ்ந்திருக்கின்றார்கள்.இப்படி பதிவுகள் எழுதுவது நான் மட்டுமே ஆயினும் இதுவரை இவ்வலைப்பூ ஓடிக்கொண்டிருப்பதற்கு முழ முதற்காரணம் இதை படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் தான் என்றால் அது மிகையாகாது.(பெப்ஸி உமா நியாபகம் வருதா? :))
சில தினங்களுக்கு முன் கூட தமிழில் ஒரு சந்தேகத்தை கேட்டிருந்தேன். அப்பாடா எத்தனை பின்னூட்டங்கள். நண்பர்கள் எத்தனை தெளிவாய் இருக்கின்றார்கள் என தெரிந்து கொண்டேன். "தமிழ் அண்ணை வாழ்க" கோஷ்டி இது இல்லை எனப் புரிந்தது. இரண்டு வல்லின மெய்யெழுத்துகள் - க் ச் ட் த் ப் ற் -வரின் ஒன்றாக வாரா-னு அற்புதமாக விளக்கம் அளித்து பலரும் வியக்கவைத்தனர்.
எனக்கு இப்போதெல்லாம் எழுத கொஞ்சம் பயமாய் இருக்கின்றது. அறிமுகமே இல்லாத 1500 பெரியவர்கள் அமர்ந்திருக்கும் சபையில் எழுந்து பேச என்னை யாரோ கட்டாயப்படுத்துவது போல் உள்ளது.
வயதான பெரியவர் ஒருவர் எனக்கு எழுதியிருந்தார்.
"அன்புடைய அறிஞர் திரு பி.கே.பி. அவர்களுக்கு நன்றிகள் பல. என்னைப்போல் எழுபது அகவை தாண்டியவனுக்கும் கூட கணினியில் ஆர்வம் காட்ட உதவும் உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துகிறேன்.
ஒரு மருத்துவரிடம் பல் நோவுக்கெனச் சிகிச்சைக்குச் சென்றிருந்தபோது பொய்ப்பல் கட்ட அளவுகள் எடுத்துப் பூர்வாங்கப் பணிகள் துவக்கப்பட்ட அமர்வில், மெழுகுக் கலவையின் சூடாக்கிய பல்வடிவை வாயினுள் இட்டு , முகத்தின் மீது செல்லோ டேப் பலவாறாக ஓட்டிவிட்டு 61, 62. 63, 64, 65, 66. வரை ஆங்கிலத்தில் உறக்க உச்சரிக்கக் கூறினார்.
அவரது கூற்றின்படி உச்சரித்து வாய் கழுவி எழும் போது அவருக்குப் பிரியமான மந்திர எண்களாஅவை ? எனக் கேட்டேன். அவர் முறுவல் பூத்து இதுநாள் வரையில் என் அனுபவத்தில் இப்படி ஒரு கேள்வியை எவரும் கேட்டதில்லை என்று கூறி விளக்கம் சொல்லிப் பாராட்டினார். அந்த எண்கள் வாயின் உதடுகளின் குவிப்பு, நாவின் சுழற்சி, மடிப்பு, திண்மை,மென்மை, வலிமை இவற்றின் தொகுப்பாக அந்த எண்களின் உச்சரிப்பு இருக்கும். அதனை வைத்து உங்கள் உட்தாடையினில் பல்செட் எவ்வாறு பொருந்துகின்றது என்பதை நிர்ணயிக்க முடியும் என்றார். என் கேள்வி மிகவும் அற்பமானதாகத் தென்பட்டாலும் அதன் உண்மைப் பொருளைக் கூறிய அம்மருத்துவரை நான் மிகவும் மதிக்கிறேன்
இதை ஏன் உங்களிடம் பேசுகின்றேன் என்றால், கணினி அறிவும் முதிர்ச்சியும் பெற்றோர் ஆங்கிலத்தினின்றும் தமிழுக்கு வந்து உதவுவார்கள் என்பது எதிர்பார்க்க முடியாது. எனவே பொறுமையாக தமிழ் உள்ளீடு செய்து சிறப்பாக கணினி நுணுக்கங்களை தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் உங்கள் சேவை ஓர் இன்றியமையாததாகும்.." இப்படியாக எழுதியிருந்தார்.
உங்கள் விலைமதிப்பற்ற வார்த்தைகளுக்கு மிக்க நன்றி ஐயா.
இது இப்படி இருக்க மூன்று வாரங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து ஒரு மருத்துவர் தானும் எனது பதிவுகளை விடாமல் படித்துவருவதாக எழுதியிருந்தார்.சத்தியமாய் அதிர்ச்சியாகிப் போனேன். மருத்துவ துறைக்கும் எனது பதிவுகளுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாதே.
இப்படி இவ்வலைப்பதிவு பக்கங்களில் வித விதமான மனிதர்கள்.
முன்பெல்லாம் உங்கள் நண்பர்களுக்கெல்லாம் இவ்வலைப்பதிவை அறிமுகப்படுத்துங்கள் என உங்களிடம் கேட்கலாமோவெனத் தோன்றும். இப்போது ஐயோ யாருக்கும் இவ்வலைப்பதிவை அறிமுகப்படுத்தாதீங்கனு சொல்ல தோன்றுகிறது.
ஏறக்குறைய 645 பேர் மின்னஞ்சல் வழியும் 308 பேர் RSS ரீடர் வழியும் படிக்கின்றார்கள் என Feedburner சொல்றான்.
நேரடியாக தளத்திற்கே வந்து சராசரியாய் தினமும் 500-றிலிருந்து 650 பேர் வரை படிக்கின்றார்கள் என Statcounter சொல்றான்.
இப்படியாய் போய்கொண்டிருக்கின்றது எண்கள்.
ஏறக்குறைய 60% வருகை நேரடியாக தளத்துக்கே வருபவர்கள்.பிற சுட்டிகள் மூலம் வருபவர்களில் பெரும்பாலோர் எழுத்தாளர் திரு.எஸ்.இராமகிருஷ்ணனின் sramakrishnan.com -மிலிருந்தும் இன்னும் பலர் thenkoodu.com வழியும் வருகின்றனர் என Google analytics சொல்றான்.இதுவே போதுமென நினைக்கின்றேன்.
நண்பர் Prakash K கேட்டிருந்தார்
How to make a blog more popular like ur blog....! give some tips.
நெஜமாவா பிரகாஷ்! இந்த வலைப்பதிவையா popular என்கின்றீர்கள். எதை வைத்து இப்படி சொன்னீர்களெனத் தெரியவில்லை. என்னை வைத்து காமெடி கீமெடி ஒன்ணும் பண்ணலையே?? :)
டிப்ஸ் கொடுக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை என்றே நினைக்கின்றேன் பிரகாஷ்!!
ஒன்றுமே தெரியாத ஒருவருக்கு ஒரு விஷயத்தை சொல்லி விளக்க என்ன செய்வேனோ அதையே தான் நான் இங்கு எழுத்தால் விளக்க முற்படுகின்றேன்.இதில் அதிகமாய் தொழில் நுட்பத் தகவல்கள்.
வேடிக்கை என்னவென்றால் இங்கு வந்து செல்லும் நண்பர்களெல்லாம் தொழில் நுட்பங்களில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள். அவர்களும் அதை பொறுமையாய் படிக்கின்றார்கள் எனில் அவர்கள் பொறுமை நிச்சயம் அபாரமே.
அவர்களுக்காக இங்கு ஒரு விவாதகளத்தை அறிமுகப்படுத்த விரும்புகின்றேன். ஆங்கிலத்தில் Geeks அல்லது Nerds என்பார்கள். தமிழில் படிப்பாளிகள் எனலாமோ?
நீங்கள் இந்த ரகமெனில் இத்தளம் உங்களுக்கு நிச்சயம் ஒரு வரப்பிரசாதமாயிருக்கும். நண்பர்கள் சிலர் நடத்துகின்றனர்.ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். But It looks great.முயன்று பாருங்கள்.
forum.Only4gurus.org
எனது Techies நண்பர்களுக்கு இன்னொரு சுட்டி கூட..
A free training From HP
Introduction to HP BladeSystems Web based training class.Click this link.கோபாலிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்.
"எனக்கு இப்போதெல்லாம் எழுத பயமாய் இருக்குடா. நிறைய பேரு என் வலைப்பதிவை படிக்க வர்றாங்க.எல்லாம் பெரிய பெரிய தலைங்க போல இருக்குது"
"அட கம்முனு கெட, நீ தைரியமாய் எழுது , நீ எழுதுவதையெல்லாம் யாரும் படிப்பதில்லை. எல்லாம் நீ கொடுக்கும் ஈபுத்தகங்களுக்காக தான் இத்தனை பேர் உன் வலைப்பூ பக்கம் வருகின்றார்கள். மற்றபடி பெருசா ஒண்ணும் நெனைச்சுக்காத"-ன்னு செவிட்டில் அடித்தாற்போல் சொன்னான்.
பக்கத்தில் நீங்கள் காணும் விவேகானந்தரின் அற்புதமான வார்த்தைகள் தான் அப்போது எனக்கு நினைவுக்கு வந்தன.
கம்முனு இருந்தேன்.கர்மவீரர் காமராஜரின் வாழ்க்கை நிகழ்சிகள் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Kamarajar Life history in Tamil pdf ebook Download. Right click and Save.Download
Posted by
PKP
at
5/18/2008 12:45:00 AM
10
comments
Saturday, May 17, 2008
வழித்தடங்கள்
சிலவருடங்களுக்கு முன்பு மேலைநாடுகளின் சாலைகளில் புதுஇடங்கள் பயணிக்கும் போது நமக்கு வழிக்காட்ட துணையாக ஜீபிஎஸ் (GPS) எனும் கருவி புழக்கத்துக்கு வந்ததை கேள்விப்பட்டபோது இது மாதிரி கருவிகளெல்லாம் நம் ஊருக்கு ஒத்துவருமா பொருந்துமாவென வியந்ததுண்டு. நேர்க்கோடாய் கறுப்பு வண்ணத்தை சிந்திய மாதிரி குறுக்கும் நெடுக்குமாய் புதுசாய் திட்டமிடப்பட்டு போடப்பட்ட ரோடுகளுக்கு வேண்டுமானால் ஜிபிஎஸ் கருவி ஒத்துவரலாம்.ஆனால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வரலாறுகள் கொண்ட நம்மூர் சாலைகளில் ஜிபிஎஸ் சாத்தியமா, புதிதாய் உருவாகிய நாடுகளில் ஒரு இடத்துக்கு செல்ல ஒன்று அல்லது இரண்டு வழிகள் தான் இருக்கும். நம்மூரில் ஒரு இடத்துக்கு வேண்டுமானால் ஐம்பதுவழிகளில் செல்லலாமே?
அத்தனை இடற்பாடுகளையும் மேற்கொண்டு நம் ஊருக்கும் இப்போது GPS Navigator வந்துள்ளது. இதனை mapmyindia.com எனும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போதைக்கு A-MAX 06GP5A மற்றும் Delphi NAV 200 எனும் இரு மாடல்களில் கிடைக்கின்றது. இதனை வாங்கி உங்கள் காரில் நீங்கள் பொருத்திக்கொண்டால் தைரியமாய்
இந்தியாவெங்கும் செல்லலாம் என்கின்றார்கள்.
இந்தியா முழுக்க 55,000 கிராம நகரங்களுக்கு இதுவால் வழிகாட்டமுடியும். மாநகரங்களில் Delhi, Gurgaon, Noida, Chandigarh, Mumbai, Thane, Pune, Bangalore, Hyderabad, Kolkata, Chennai போன்ற நகரங்களில் தெருவுக்கு தெரு அதுவால் கூட்டிசெல்ல முடியுமாம்.விலையை கேட்டால் தான் சற்று தலை சுற்றுகின்றது ரூ 20,990/ தான்.
நிற்க. சம்பந்தமேயில்லாத சம்பந்தமுள்ள இன்னொரு சேதி.
YourGmap.com என ஒரு இணைய தளம். உங்களுக்கு சொந்தமாய் கூகிள் மேப்கள் வைத்துக்கொள்ள இங்கு வசதிசெய்து தருகின்றார்கள். நீங்கள் போயிருக்கும் அல்லது போக ஆசைப்படும் அல்லது சமீபத்தில் போன இடங்களை மேப்பில் குறித்து வைத்து குடும்பத்தினர்களிடையே அல்லது உங்கள் நண்பர்களிடையே அந்த மேப்பை பரிமாறிக்கொள்ளலாமாம். இஷ்ட புனிதத் தலங்களை அல்லது விருப்ப உணவகங்களையும் குறித்து பிறருக்கு காட்டலாம்.
"நானும் அங்கிருந்தேன்" என எனது வழித்தடங்களை குறித்துப்பார்த்தேன்.
இதோ அந்த மேப்.(சில நாடுகள் ஏனோ மிஸ்ஸிங்)
I was also there - PKPலினக்ஸ் ஒரு அறிமுகம் தமிழில் பிடிஎப் பக்கங்கள். Introduction to Linux in Tamil pdf pages Download. Right click and Save.Download
Posted by
PKP
at
5/17/2008 12:16:00 AM
3
comments
Sunday, May 04, 2008
அவள் பறந்து போனாளே
இரவு 9 மணி.
கோபால் அப்போது தான் வீட்டுக்குள் நுழைந்திருந்தான்.
"ஏண்டா லேட்டு"
"JFK வரை போயிருந்தேன்,பரிமளாவை டிராப் பண்ண"
"ஓ"
சற்று நேரம் அமைதி. கோபால் முகத்தை பார்த்தேன். அவன் முகத்தில் வழக்கமான களையில்லை.
லேப்டாப்பில் மூழ்கியிருந்தான்.
"இன்னைக்கு ஏதாவது பதிவு போட்டிருக்கியா?" இது கோபால்.
"இல்லை"
"ஏன்,டாபிக் எதுவும் கிடைக்கலையா?" கிண்டலாகக் கேட்டான்.
சிரித்தேன்.
"பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முறை நேற்று" பிரசாந்தின் பாடல் என நினைக்கின்றேன்.
லேப்டாப்பில் ஓட விட்டு கூடவே முனுமுனுத்துக்கொண்டேயிருந்தான்.
"ஒரே டென்சனா இருக்குடா" என்றான்.
"ஏன்"
"ஒண்ணும் இல்லை"-ன்னு இழுத்தான் பின் "பரி ஒழுங்கா பத்ரமா டிரிவான்ட்ரம் போய் சேரனுமேன்னு தான்"என்றான்.
உடனே நான் "ஆமாடா நீ சொல்றதும் சரிதான்.ஒரு மாசத்துக்கு முன்னாடி தான் காங்கோல ஒரு பிளைட் கிராஷ் ஆகி...."
"கொஞ்சம் வாய மூடுறியா" என்றான்.
"ஓ..ஓ.க்கே"
"டேய் பெரிசு பெரிசா எழுதுறியே.இந்த பிளைட்டுங்கள் ஒழுங்கா போய் சேந்துதானு பாக்க ஏதாவது சாப்ட்வேர் இருக்குதான்னு பார்த்து சொல்லு" என்றான் கோபால்.
"ஓ இருக்கே"
விவேக் பாணியில் "சிஎன்என் பார்த்துக்கிட்டே இரு பிரேக்கிங் நியூஸ் போடுவார்கள்" என்றேன்.
"ஷடப்" என்றான்.
அப்புறம் http://flightaware.com தளத்தை அறிமுகப்படுத்தி வைத்தேன்.
பொதுவாக JFK போன்ற விமானநிலையங்களில் விமானத்தில் ஏறி அமர்ந்தால் அது ஒரு ஒரு மணிநேரமாக விமான தளத்தையே சுற்றி சுற்றி வரும். ஒரு நீண்ட வரிசையின் முடிவில் ஒரு மணிநேரத்துக்கப்புறம் தான் நம் விமானம் பறக்கிறதற்கு வாய்ப்பு கிடைக்கும். அவ்வளவு கூட்டம். இந்த இணைய தளத்தில் விமான சேவை நிறுவனம் மற்றும் அந்த குறிப்பிட்ட விமான எண் கொடுத்தால் போதும், விமானம் எப்போது புறப்பட்டது, எப்போது அது டேக் ஆப் ஆனது, இப்போது பூமியிலிருந்து எவ்வளவு உயரத்தில் அது பறந்து கொண்டிருக்கின்றது? புறப்பட்ட இடத்திலிருந்து அது எவ்வளவு தூரம் போயிருக்கின்றது? இன்னும் எவ்வளவு தூரம் போகவேண்டும்? இன்னும் எவ்வளவு நேரமாகும்? இதெல்லாம் நிமிடத்துக்கு நிமிடம் அப்டேட் செய்து சொல்கின்றார்கள்.
விமானம் தற்போது பறந்து கொண்டிருக்கும் இடத்தை அழகாய் ஒரு மேப்பும் வரைந்து காட்டுகின்றார்கள்.
குவைத் ஏர்வேஸ்-ன்னு டைப்பி விமான எண்ணையும் கொடுத்தான் கோபால். பட்டென அது புள்ளிவிவரங்களை சொல்லிற்று.
கோபாலுக்கு பயங்கர குஷி.ஏதோ பரியே தன் பக்கத்தில் இருப்பது போன்ற உணர்வு.மேப்பில் அந்த விமானத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.
விமானம் டேக் ஆப் ஆகி 5 நிமிடம் ஆகிவிட்டதாக அது சொல்லியது.
"டேய் பைலட்டோட சாட் செய்ய முடியுமாடா" இது கோபால்.
"ஆமா,ரொம்ப ஆசை தான்" என்றேன்.
இரண்டு மணிநேரமாகியிருக்கும். என்னமோ நடந்திருக்க வேண்டும்.
பதட்டமாக கோபால் கத்தினான்.
"டேய் இங்க பாருடா We could not get the status of this flight-ன்னு என்னமோ சொல்லுது"
தூங்கிப்போயிருந்தேன்.
தமிழ்/ஆங்கில பைபிள் உங்கள் கணிணியில் நிறுவ வசதியான .exe வடிவில். Tamil / English Bible in installable .exe format Download here. Right click and Save.Download
Posted by
PKP
at
5/04/2008 10:35:00 PM
6
comments
Labels: Free Services, Websites
Wednesday, April 30, 2008
இலவச குறுஞ்செய்திகள்
அவசரமாய் அமெரிக்காவிலுள்ள ஒரு நண்பரை தொடர்புகொள்ள வேண்டுமா? நீங்கள் ஒரு மின்னஞ்சல் செய்தால் போதும். அது அமெரிக்காவிலிருக்கும் உங்கள் நண்பரின் அலைபேசியில் குறுஞ்செய்தியாக கிடைக்கும்.அதற்கான வசதி நெடுநாட்களாகவே இருந்து வருகின்றது.ஆனாலும் உங்களில் தெரியாதோருக்கு மட்டும் இத்தகவல் இங்கே.
அதாவது நீங்கள் இலவசமாய் நண்பருக்கு மின்னஞ்சல் வழியாய் குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டிருப்பீர்கள். அதை பெறுவோரின் பில் மட்டும் எகிறிக் கொண்டேயிருக்கும்.
இப்படி SMS செய்ய, உங்களுக்கு தெரிய வேண்டியதெல்லாம் அந்நண்பரின் 10 இலக்க கைப்பேசி எண்ணும் அவருக்கு அலைச்சேவை வழங்கும் நிறுவனத்தின் பெயரும் மட்டுமே.
மின்னஞ்லைத் தட்டியதும் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிகளை பயன்படுத்துங்கள்.
AT&T: 10digitphonenumber@txt.att.net
Verizon: 10digitphonenumber@vtext.com
Sprint: 10digitphonenumber@messaging.sprintpcs.com
T-Mobile: 10digitphonenumber@tmomail.net
Nextel: 10digitphonenumber@messaging.nextel.com
Virgin Mobile: 10digitphonenumber@vmobl.com
Alltel: 10digitphonenumber@message.alltel.com
CellularOne: 10digitphonenumber@mobile.celloneusa.com
Omnipoint: 10digitphonenumber@omnipointpcs.com
Qwest: 10digitphonenumber@qwestmp.com
ஒருவேளை நண்பருக்கு அலைச்சேவை வழங்கும் நிறுவனத்தின் பெயர் தெரியாதிருந்தால் கீழ்கண்ட முகவரியை பயன்படுத்தலாம்.
10digitphonenumber@teleflip.com
கனடாவுக்கு இலவச குறுஞ்செய்தி அனுப்ப http://www.zemble.com
பிறபல ஐரோப்பிய நாடுகளுக்கு இலவச குறுஞ்செய்தி அனுப்ப http://mrtextmessage.com
இந்தியாவில் இலவசமாக குறுஞ்செய்தி அனுப்ப நண்பர்கள் V.Subramanian மற்றும் Bala chandran எனக்கு கீழ்கண்ட தளத்தை பரிந்துரைக்கின்றார்கள்.
http://indyarocks.com/sms/index.php
நன்றி.
படபடவென இருகர விரல்களாலும் கைப்பேசிவிசைகளை தட்டிக்கொண்டே சாலையில் நடக்கின்றீர்களா? அவ்வப்போது எதிரேயும் பார்த்தல் அது நம்மெல்லாருக்கும் நல்லது. :)
நண்பர்கள் பலர் அநேக கேள்விகளை எனக்கு சுட்டுத்தள்ளியிருக்கின்றார்கள். அதற்கான பதில்கள் நாளை.ஸர்வதாரி (2008-2009) வருஷ பரந்தாமன் பஞ்சாஞ்கம் தமிழ் வருட நாட்காட்டி. Tamil Year Calender in Tamil pdf format Download. Right click and Save.Download
Posted by
PKP
at
4/30/2008 09:05:00 PM
1
comments
Labels: Free Services, Websites
Friday, May 11, 2007
அபாயகரமான தளங்கள்
பாதுகாப்பான பிரதேசம் என்று ஒன்று எங்குமே இல்லை போலும். இதற்கு இணையமும் விதிவிலக்கல்ல. கடந்த வருடம் மட்டும் இணையத்தில் ஏமாற்றப்பட்டு இழக்கப்பட்ட பணம் 198 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.இது கணக்குக்கு வந்த மட்டும்.கணக்கில் வராமல் எத்தனை மில்லியன்களோ?.இதில் 45 சதவீதம் Internet auction fraud எனப்படும் ஆன்லைன் ஏலத்தில் ஏப்பமிடப்பட்டவையாம். மீதம் 19 சதவீதம் ஆன்லைனில் மக்கள் ஆர்டர் செய்து சரக்கு வந்துசேராமல் ஏமாற்றப்பட்டோர் பணம். இது தவிர செக், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பிராடுகள் அடுத்து அடுத்து வருகின்றன.இன்னும் புகழ்பெற்ற நைஜீரியா ஈமெயிலுக்கு ஏமாறுவோர் ஏராளம் இருக்கின்றார்களாம்.
McAfee-ன் SiteAdvisor சில சுவாரஸ்ய தகவல்களை சமீபத்தில் வெளியிட்டிருக்கின்றார்கள்.
இப்போதைக்கு .info தளங்கள் மிக அபாயகரமானவையாம்..info தளங்களில் 8 சதவீத டொமைன்கள் அபாயகரமானவை என்கிறார்கள்.
நாடுகள் பெயரிலுள்ள தளாங்களில் (eg:India .in) கீழ் கண்ட டொமைன் பெயர்கள் கொண்ட தளங்கள் அதிகம் ரிஸ்க் கொண்டவை என்கின்றார்கள்.
Romania (.ro) with 5.6 percent risky sites
Russia (.ru) with 4.5 percent risky sites.
Sao Tome/Principe (.st) 19 percent risky sites.
Tokelau (.tk) 10 percent risky sites.
Turks and Caicos (.tc) 10 percent risky sites.
South Georgia/South Sandwich Islands (.gs) 9 percent risky sites.
பின்லாந்து,நார்வே,ஸ்வீடன், ஐஸ்லாந்து மற்றும் அயர்லாந்து தளங்களை பாதுகாப்பான தளங்கள் என நம்பி புகலாம் என்கின்றார்கள்.
மற்றபடி அமெரிக்க அரசின் டொமைன் .gov டொமைன்களில் மட்டும் தான் எந்த அபாயமும் இதுவரை கண்டறியபட்டதில்லையாம்
Samoa (.ws), .biz, Bulgaria (.bg) போன்ற டொமைன்களிலிருந்து மென்பொருள் இறக்கம் செய்யும் 10 ல் ஒருவர் அபாயத்தில் மாட்டிக்கொள்கின்றனராம்.கவனம் தேவைதாம்.
.info ( 73.2 percent),Russia (22 percent),South Korea (20 percent) தளங்களில் தவறியும் உங்கள் மெயில் ஐடி கொடுத்துவிடாதீர்.ஸ்பாம் எனப்படும் குப்பை மின்னஞ்சல்கள் உங்கள் அஞ்சல் பெட்டியை நிரப்புமாம்.
ஆக .ws சைட்களில் டவுன்லோட் செய்வோரும் .info சைட்களில் மெயில் ஐடி கொடுப்போரும் சிக்கலில் மாட்டுவார் என்பது சத்தியமாம்.
Posted by
PKP
at
5/11/2007 03:07:00 PM
0
comments
Monday, April 23, 2007
மொபைல் உலகம்
செல்போன் எனும் மொபைல் போன்களின் ஆதிக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகின்றனவென புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.இந்த ஆண்டு மார்ச் கணக்கீடுபடி மொத்தம் 166 மில்லியன் இந்தியர்கள் மொபைல் போன் வைத்துள்ளனராம். இது கடந்த வருடத்தை விட 68 சதவீதம் அதிகம். இந்த எண்கள் ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டேயுள்ளன. மொபைல் போன்கள் இப்போதெல்லாம் வெறும் பேசுவதற்காக மட்டுமல்லாது பிற பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளதால் இந்த ஜூரம் இன்னும் ஏறும்.
சமீபத்தில் ரிலையன்ஸ் "R World"-டோடு சன்டிவி சேர்ந்து மொபைல் போனில் சன் டிவி பார்க்கும் சூழல் உருவாகியுள்ளனர். ஏறத்தாழ சில கணங்களே தாமதமாய் லைவாய் சன் டிவி பார்க்கலாமாம்.5 நிமிடம் பார்க்க 15 ரூபாய்னு சொல்லியிருக்கிறார்கள்.இந்தியா முழுதுமாய் 30 மில்லியன் பேரும் தமிழகத்தில் மட்டும் 26 லட்சம் பேரும் ரிலையன்ஸ் சந்தாதாரர்கள். இவர்களில் 50 சதவீதம் பேர் சன்டிவி பார்க்கும் வசதியுள்ள செல்போன்கள் வைத்துள்ளார்களாம். மேலும் நிகழ்சிகளை இறக்கம் செய்து பார்க்கவும் வசதி செய்து தருகின்றார்களாம்.ஒரு இறக்கத்துக்கு 7 ரூபாய். :)
.com போல் .mobi எனும் ஒரு தனி டொமைன் பெயரே மொபைல் போன் பயன்பாட்டு வெப் சைட்டுகளுக்கென அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். நோக்கியாவின் .மொபி வெப்தளத்தை இங்கே காணலாம்.
http://nokia.mobi/செல்போன் வழி இணையம் மேய்தலும் அதிகரித்து வருகின்றது.அதற்கு வசதியாக மைக்ரோசாப்ட் "டீப் பிஷ்" DeepFish என்று ஒரு புதுவகையான பிரவுசரோடு வந்திருக்கிறார்கள். இருக்கும் இணைய பக்கங்களை அப்படியே மினிபடுத்தி மொபைல் பதிப்பாக இது காட்டுமாம்.
http://labs.live.com/deepfish/
மைக்ரோசாப்ட் இப்போதெல்லாம் அழகாக பெயர் வைக்க கற்றிருக்கிறார்கள். SilverLight என்று இன்னொரு படைப்பும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இவர்களின் இந்த படைப்பு அடோபியின் பிளாஷுக்கு போட்டியாய் அமையுமோ என்று தோன்றுகிறது. புதுவகையான பிரவுசர் plugin ஆம் அது. http://www.microsoft.com/silverlight/asp/downloads.aspx
இங்கே ஒரு தளம் இந்தியாவில் செல்போனிலிருந்து யாராவது உங்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் அந்த நம்பர் எவ்விடமிருந்து வந்தது எனக் காட்டுகின்றது.முதல் 5 நம்பர்களையும் உள்ளீடு செய்து தட்டி பாருங்கள்.
Got missed call? Find out who called and from where?
http://www.informationmadness.com/cms/index.php?option=com_content&task=view&id=40&Itemid=53
அப்படியே இருக்கிற வீடியோ துண்டுகளை 3gp எனப்படும் வகையாய் மாற்றி உங்கள் மொபைலில் கொண்டு திரிய இங்கே ஒரு Super மென்பொருள்.இறக்கம் செய்து முயன்று பார்க்கலாம்.
http://www.megaupload.com/?d=HOB6VOBO
பேச,SMS அனுப்ப,படம்,வீடியோ எடுக்க மற்றும் பறிமாற,FM,MP3 கேட்க,இணையம் மேய,டிவி பார்க்கவென போய்க்கொண்டேயிருக்கும் இது எங்கு போய் முடியுமோ?
Posted by
PKP
at
4/23/2007 03:28:00 PM
0
comments
Friday, April 20, 2007
சில பயனுள்ள தளங்கள்
இணையத்தில் மேயும்போது அகப்பட்ட சில பயனுள்ள தளங்களை வரிசைபடுத்தியுள்ளேன்.
உங்களுக்கும் உதவலாம்.
1.இலவச ஈபுத்தகங்களில் குவியலை இத்தளத்தில் காணலாம்.
இன்றைய அளவில் ஏறக்குறைய 16,502 புத்தகங்கள் உங்களுக்காக இலவசமாக உள்ளன.
http://manybooks.net
2.இன்னொரு இலவச ஈபுத்தகங்களில் குவியல்
http://www.wowio.com
3.போட்டோஷாப் போன்ற பெரும் மென்பொருள்கள் இல்லாவிட்டாலும் எளிதாய் சில சிறிய போட்டோ எடிட்டிங்கள்
ஆன்லைனிலேயே செய்ய இத்தளம் சூப்பர்.
http://www.cellsea.com
4.வரிசையாய் அநேக மென்பொருள்கள் இறக்கத்துக்கு இருக்கின்றது இங்கே.
http://www.p30world.com
5.எல்லோரும் சேர்ந்து ஒர் ஆன்லைன் நூலகத்தை உருவாக்கிவருகின்றார்கள் இங்கே.தேவையெனில் தேடிப் பார்க்கலாம்.
http://www.scribd.com
Posted by
PKP
at
4/20/2007 02:33:00 PM
0
comments
Labels: Websites
Tuesday, April 17, 2007
பெரிது பெரிதாய்
SAN,DSL போன்ற தாராள தொழில் நுட்பங்களின் பெருக்கத்தால் இப்போதெல்லாம் ஸ்டோரேஜ் இடம் (Storage Space),பாண்ட்வித்தெல்லாம் (Bandwidth) ரொம்ப மலிவாகிவிட்டன.அந்த காலத்தில் 2 MB, 5MB என கஞ்சம் பண்ணிக்கொண்டிருந்த Yahoo Mail,Hotmail-கள், 3 வருடத்திற்கு முன்பு Gmail வந்து அனைவருக்கும் 1Gig கொடுத்து புரட்சி பண்ணியதால் மற்றோரெல்லாரும் போட்டியில் குதிக்க வேண்டியதாயிற்று.இன்று அதிகமாய் எனக்கு தெரிந்து http://www.30gigs.com/ பெயர் போலவே மிக அதிகமாய் 30 Gig இலவச ஸ்டோரேஜ் இடம் மெயிலுக்கு கொடுக்கிறார்கள்.யாகூ மெயில் தனது 10வது வருட பிறந்த நாளை முன்னிட்டு இவ்வருடம் மே மாதம் முதல் கணக்கற்ற அளவு (Unlimited) மெயில் இடம் கொடுக்க போகிறார்களாம்.
இது போக உங்கள் கோப்புகளை அழகாக ஒழுங்காக ஆன்லைனின் சேமித்து வைக்க http://www.mediamax.com/ பெரிதும் உதவலாம்.இலவசமாக இவர்கள் 25 Gig ஸ்டோரேஜ் இடம் இலவசமாய் தருகிறார்கள். வீடியொக்கள், ஆடியோக்கள், படங்கள், ஈ புத்தகங்கள் என அதிகமாய் சேமித்து வைக்க இப்போதைக்கு இது ஒரு நல்ல சேவை.
மீம்பெரும் கோப்புகளை எளிதாய் பரிமாறிக்கொள்ள இப்போதைக்கு தலைவலி இல்லாத சேவை அளிப்பது http://www.transferbigfiles.com.
1Gig கோப்புவரை இலவசமாய பரிமாறலாம்.பதிவுசெய்தல்,அக்கவுண்ட் வைத்தல,பாஸ்வேர்ட் தொல்லையெல்லாம் இல்லை.
Posted by
PKP
at
4/17/2007 01:52:00 PM
0
comments
Labels: Free Services, Tips, Websites
Sunday, February 18, 2007
ஒரே பக்கம் பல பிரவுசர்களில்...
இணையத்தை வடிவமைக்கும் வெப் டிசைனர்களுக்கு ஒரு தலைவலி உண்டு.தாங்கள் உழைப்பில் உருவாக்கிய இணைய பக்கம் (Web Page) ஒன்று ஒவ்வொரு பிரவுசரிலும் (Browsers like Internet explorer,Fire fox,..etc) அது தன்னை எவ்வாறு காண்பிக்கிறது என்று தெரிய வேண்டும்.ஒவ்வொரு பிரவுசரும் ஒரே பக்கத்தை பல வடிவுகளில்,கோணங்களில் காட்டுவதாலும்,சில பிரவுசர்கள் சில ப்ரோகிராம் கோடுகளை புரிந்து கொள்ள இயலாததாலும் ஒரு பிரவுசரில் பளீரென்றிருக்கும் பக்கம் இன்னொரு பிரவுசரில் இடிந்து போய் இருக்கும்.இதையெல்லாம் கண்டறிய வெப் டெவெலப்பர்கள் பல பிரவுசர்களையும் தங்கள் கணிணியில் நிறுவி அது வழி சரிபார்க்க வேண்டும் அல்லது இங்கே இருக்கவே இருக்கிறது browsershots வெப்சைட்.URL கொடுத்ததால் நீங்கள் உருவாக்கிய வெப் பக்கம் வெவ்வேறு வகையான ஏறக்குறைய 20 பிரவுசர்களில் அது எப்படி தெரியும் என எளிதாக காண்பித்து விடும்.கூடவே வெவ்வேறு screen resolution,color depth,turning off JavaScript, Java, Flash மற்றும் media plugins-களையும் சோதிக்கலாம்.பல பிரவுசர்களை உங்கள் கணிணியில் நிறுவி குழம்ப தேவையில்லை.
http://browsershots.org/
Posted by
PKP
at
2/18/2007 07:21:00 PM
0
comments
Labels: Free Services, Freewares, Tips, Websites
Monday, February 12, 2007
இணைய இரத்த வங்கி
இரத்தம்,அது யாருக்கு எப்போது தேவைப்படும்? தெரியாது.தேவைப்படும் போது தேடித் திணறிப்போவது உண்டு.கண்காணா சக மனிதருக்கு இரத்தம் வழங்க காத்திருக்கும் ஈரநெஞ்சுடையோர் இன்றும் இருக்கின்றனர். அவர்களை எளிதாய் கண்டுபிடிக்க,ஆபத்தில் அவசரமாய் தேட இங்கே ஒரு இரத்தம் வழங்கும் நண்பர்களின் டேட்டா பேஸ்.ஆச்சர்யம் என்னவென்றால் இந்திய அளவிலும் அதிலும் தமிழக அளவிலும் அநேக நண்பர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். ஆர்வமுள்ளவராயின் நீங்களும் உங்கள் பெயரை பதிவு செய்யலாம்.உதவலாம்.அல்லது குறைந்தது தேவையிலுள்ளோர்க்கு இந்த சுட்டியை காண்பித்து உயிர் காக்கும் சேவை செய்யலாம்.
http://www.2ndsales.com/bloodgrp.php
O negative-இரத்தகாரர்கள் அனைவருக்கும் இரத்தம் வழங்கலாம் (universal donors)
AB positive-இரத்தகாரர்கள் அனைவரிடமிருந்தும் இரத்தம் பெறலாம் (universal recipients)
Posted by
PKP
at
2/12/2007 01:36:00 PM
0
comments
Labels: Free Services, Websites
Friday, January 26, 2007
இரவா பகலா
இருளென்று ஒன்றில்லையாம்.வெளிச்சம் இல்லாமையே இருட்டாம்.அப்படி சொல்வதிலும் நியாயம் இருக்கின்றது.ஒளியின் வேகத்தை கணக்கிடும் விஞ்ஞானம் இருளின் வேகம் சொல்லவில்லையே.ஒளி ஒரு துகளாகவோ அல்லது அலையாகவோ இருக்கலாமாம்.இருள்...?-அப்படி எதுவுமே இல்லை.அது ஒரு துகளும் இல்லை அல்லது அலையும் இல்லை.Dark is just a dictionary word என்கிறார்கள்.இது இன்றைய நிலை. நாளை இன்னொறு ஐன்ஸ்டீன் வந்து புதிதாக எதாவது கண்டுபிடிக்கலாம். அதெல்லாம் விட்டு தள்ளுங்க.இந்த இணைய பக்கத்தை பாருங்கள்.
அருமையாய் உலக உருண்டையில் நிகழும் இரவு பகல்கள் எல்லாம் ஒரு நிழலின் அசைவாட்டம் என அழகாய் காட்டுகிறார்கள்.(படம் எடுக்கப்பட்ட போது இந்தியாவில் நடுநிசி மற்றும் அமெரிக்காவில் நடுப்பகல் நிலை.)
http://www.daylightmap.com/
கூடுதலாக இன்னொறு கூகிள் மேப்.மவுசை உலாவ விட்டு பாருங்கள்.அவரவர் நேரம் தெரியும்.எல்லாம் டெவலப்பர்கள் Google Map API-யோடு போடுகின்ற ஆட்டம் தான்.
http://www.qlock.com/time/gmaps?map=1
Google Map to Check world international time and Day Night status
Posted by
PKP
at
1/26/2007 03:35:00 PM
0
comments
Labels: Websites
Thursday, January 04, 2007
கூகிள் மேப்பில் வீடு வாங்கலாம்
முன்பெல்லாம் அமெரிக்காவில் வீடு/அறை வாடகைக்கு தேட சுலேகா போக வேண்டும்.வீடு வாங்குவதற்கு பாக்ஸ்டனோ அல்லது நியூயார்க்டைம்ஸோ போவதுண்டு.அப்போதெல்லாம் மனதில் தோன்றியது என்னவென்றால் காண்பிக்கும் விலாசத்தை அழகழகாக உடன் உடன் மேப் போட்டு காண்பித்தால் எவ்வளவு வசதியாக நன்றாக இருக்கும்.நமக்கு மிக அருகே இருக்கும்/கிடைக்கும் வீடுகளை எளிதில் தேடிபிடிக்கலாமே என்று.இன்று அது நிஜமாகிவிட்டது.http://www.housingmaps.com/ எனும் தளம் போய் பார்வையிட்டால் அழகாக மேப் போட்டு விலை வாரியாக தெளிவாக தெரிவிக்கிறார்கள்.வீடு/அறை தேடல் இப்போதெல்லாம் ரொம்பவும் சுலபமாகிவிட்டது.
இதெல்லாம் Google Map API மற்றும் craigslist கலந்து போட்ட எளிய தொழில்நுட்ப விளையாட்டுதான்.
பணம்பண்ண ஆசைப்படும் நம் இளைஞர்கள் இந்த API-யோடு புதிது புதிதாக வித்தியாசமாய் விளையாண்டு எதாவது உருவாக்கினால் பணமழை பெய்யலாம்.
Posted by
PKP
at
1/04/2007 10:06:00 AM
0
comments
Labels: Websites
Wednesday, December 27, 2006
தேடு வசதி கொண்ட கோப்பு கிடங்குகள்
எல்லா கோப்பு கிடங்கு சேவை வழங்கிகளும் அவற்றிலுள்ள பொதுவான கோப்புகளை (Public Files) தேட வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதில்லை.ஆனால் இங்கே அந்த விதமான தேடும் வசதியை தந்துள்ள சில கோப்பு கிடங்கு வலையங்களை காணலாம்.
நன்றாய்த் தேடிப்பாருங்கள்.ஒருவேளை நீங்கள் ரொம்ப நாளாய் தேடிக் கொண்டிருக்கும் சில பொக்கிஷங்கள் கிடைக்கலாம். :)
http://www.4shared.com/network/search.jsp
http://www.orbitfiles.com/search?searchfor=tamil
http://search.filefront.com/india
Find Search featured Public File Storage Share Servers
ரேப்பிட்சேர் கோப்புகளை தேடுவது எப்படி என இங்கே பாருங்கள்
Posted by
PKP
at
12/27/2006 01:05:00 AM
0
comments
Labels: Websites
Wednesday, December 20, 2006
உலகிலேயே மிக உயரமான வலைத்தளம்
கேட்க கேணத்தனமாக இருக்கின்றதா?.ஆமாம் ஆனால் அதுதான் உண்மை.இந்த வலைத்தளத்தின் உயரம் என்ன தெரியுமா? 18.939 கிலோமீட்டர்கள்.அதாவது 11.769 மைல்கள்.இந்த வலைத்தளத்தின் பக்கம் போனால் பக்கத்தை ஸ்க்ரோல் பண்ணிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.ஏறிச் செல்ல படிகளும் எலிவேட்டரும் கொடுத்திருக்கிறார்கள்.அவ்ளோ உயரம்.ஏதோ CSS சோதனைக்காக இப்பக்கத்தை பண்ணியிருக்கிறார்களாம்.போய் பார்த்துவிட்டு வாருங்கள்.
http://worlds-highest-website.com/
கூடவே இங்கு போய் உலகிலேயேயே மிகச் சிறிய வலைத்தளத்தையும் பார்வையிடுங்கள்.
http://www.guimp.com/
Worlds Highest Website And Worlds Smallest website
Posted by
PKP
at
12/20/2006 09:23:00 AM
0
comments
Labels: Websites