உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in
Showing posts with label India. Show all posts
Showing posts with label India. Show all posts

Thursday, March 01, 2012

தங்கத்தின் ஏறுபடலம்

கடந்த 86 வருடங்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை வளர்ந்த வளர்ச்சி இதோ அருமையாக அட்டவணையாக. எனது சேகரிப்புக்காக இங்கே.


Email PostDownload this post as PDF

Tuesday, October 11, 2011

ஐ-ஃபை

ருக்கு கிளம்பும் முன் அவசர அவசரமாக இந்த பதிவு.Eye-Fi-பற்றியது.இந்த மாதிரியான அற்புத தொழில் நுட்பங்களை பற்றி கேள்விப்படும் போது உடனே எழுதிவிட வேண்டும். நம்மில் அநேகருக்கு இது ஏற்கனவே தெரிந்த விசயம் தான். தெரியாதவர்களுக்கு மட்டும் இந்த அறிமுகம். சாதாரண மெமரி கார்டுக்கு உயிர்கொடுக்கும் தொழில் நுட்பம் இது. memory card + Wi-Fi = Eye-Fi எனும் சமன்பாட்டை பயன்படுத்தியிருக்கிறார்கள். அதாவது உங்கள் SDHC மெமரிகார்டால் Wi-Fi எனப்படும் வயர்லஸ் நெட்வொர்க்கோடு இணைய முடியும். அவ்ளோதான். இதனால் என்ன பயன்? உங்கள் சாதாரண டிஜிட்டல் கேமராவில் இந்த Eye-Fi மெமரிகார்டை பயன்படுத்தினால் உங்கள் கேமரா உங்கள் வீட்டு வயர்லஸ் நெட்வொர்க்கோடு இணைக்கப்பட்டு விடும்.விளைவு போட்டோ எடுக்க எடுக்க அப்படியே வை-பை வழி உங்கள் கணிணிக்கோ அல்லது ஐபோன்/ஐபேடு/ஆண்ட்ராய்டுக்கோ போட்டோக்களை எளிதாக கடத்திவிடலாம். உங்கள் மெமரி கார்டு எப்போதுமே போட்டோக்களால் நிரம்பிவழியாது.never run out of space again, எப்படி கான்செப்ட்? எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் பாருங்கள்? இங்கு ஆப்டிமம் மற்றும் AT&T வைபைகள் ஊரெங்கும் உள்ளன. எனவே எங்கிருந்து வேண்டுமானாலும் போட்டோக்களை சாதாரண டிஜிட்டல் கேமராவிலிருந்து அப்லோடு செய்துவிடலாம். இன்னும் அநேக நம்ம வீட்டு சாதனங்கள் சீக்கிரத்தில் உயிர்பெற்று வீட்டு வயர்லெஸ் நெட்வொர்க்கோடு இணைக்கப்படும். அந்த வழியில் டம்ப் பொருட்களைக்கூட நெட்வொக்கில் இணைக்க நாம் ரொம்ப கஷ்டப்படவேண்டியதில்லை என்பதை இந்த ஐ-பை நிரூபிப்பதாய் உள்ளது.

மீண்டும் cleartrip.com இந்திய ரெயில்வே ரெசர்வேசன்களுக்கு உதவியது. irctc.co.in -னோ makemytrip.com-மோ அல்லது yatra.com-மோ சர்வதேச அல்லது குறைந்த பட்சம் அமெரிக்க கிரெடிட்/டெபிட் கார்டுகளை ஏற்றுக் கொள்ளவில்லை. flykingfisher.com-ல் கூட முன் பதிவு செய்ய cleartrip.com - தான் உதவியது.Long live cleartrip.com. ஆன்லைன் coupon code-களையும் கவுரவிக்கிறார்கள். பல சென்னை ஹோட்டல் ஆன்லைன் ரெசர்வேசன் தளங்கள் அநியாயத்துக்கும் இருக்கின்றன. பக்காவாக வெளிநாட்டு ஓட்டல்களுக்கு வெப் பக்கங்களை வடிவமைக்கும் நாம், நம்ம ஊர் ஸ்டார் ஹோட்டல் ஆன்லைன் ரெசர்வேசன் தளங்களை பார்க்கவேண்டுமே, பாழடைந்த மண்டபத்தினுள் நுழைவது போல் இருக்கின்றது. வியாபார விரிவாக்கத்தில் கவனம் செலுத்தும் நம்மவர்கள் ஆன்லைன் அப்பியரன்ஸ்சிலும் கவனம் செலுத்தினால் நன்னாய் இருக்கும்.தூரத்து வாடிக்கையாளார்களுக்கு அந்தந்த இணைய தளங்களே அந்த வியாபாரம் பற்றிய மறைமுக நல்லெண்ணத்தையும் நம்பிக்கையின்மையினையும் கொடுக்கும் என்பதை அறியவேண்டும். வெள்ளிக்கிழமை ஐபோன் 4S கையில் வந்து கிடைத்ததும் கூகிளுக்கு ஆப்படிக்க வந்திருக்கும் SIRI-யோடு கூட அப்படியே கிளம்பிவிட வேண்டியது தான்.புதிதாக சர்வதேச விமானநிலையம் ஒன்றை திருவனந்தபுரத்தில் கட்டியிருக்கிறார்களாம். பார்க்கலாம். அப்படியே ஒரே கல்லில் இரண்டு மாங்காயிட்ட அசோக்கையும் சந்திக்க வேண்டும்.போன முறை வேலுவை பார்த்தோம் இந்த முறை முடிந்தால் பொன்னுசாமி. வேறெதாவது இருக்கு பரிந்துரைக்க?

On the Lighter Side


Email PostDownload this post as PDF

Thursday, June 30, 2011

பணம் கொத்திப் பறவைகள்

ந்தியர்கள் வேண்டுமானால் ஏழைகளாக இருக்கலாம், ஆனால் இந்தியா ஒன்றும் ஏழைநாடல்ல என ஒரு சுவிஸ் வங்கி இயக்குனர் கூறியிருந்தார்.இவர் கூறும் தகவல்கள் அடிப்படையில் பார்த்தால் எங்கோ இருக்க வேண்டிய இந்திய சமுதாயம், தனது சுய நல எண்ணங்களால் சிதைக்கப்பட்டு போயிருக்கின்றது என்பது தெளிவாகின்றது. அமெரிக்கர்கள் பணக்காரர்களாக இருக்கலாம். ஆனால் அமெரிக்க அரசாங்கம் ஒன்றும் பணக்கார அரசாங்கம் இல்லை. அது ஒரு ஏழை அரசாங்கமே.பட்டென ஒரு 150 பில்லியன் டாலர் கடன் கொடேன் எனக் கேட்டால் அதனால் கொடுக்க முடியாது. ஏற்கனவே 14 டிரில்லியன் கடன் வாங்கி தள்ளாடிக் கொண்டிருக்கும் அரசாங்கம் தான் அது.இதன் பல மாகாணங்கள் அதனதன் சொத்துக்களை பொதுமக்களுக்கு ஏலம் விட்டு தற்காலிகமாக காசு பார்த்துக் கொண்டிருக்கின்றது. இங்கிலாந்தின் லட்சணமும் இதுதான் 9 டிரில்லியன் டாலர்கள் கடன் பட்டு நிற்கின்றது.அப்படி பார்க்கப்போனால் உலகின் பணக்கார அரசாங்கம் சீனா தான்.$2,454,300,000,000 டாலர்கள் ரெடி கேஷாக வைத்திருகின்றது.இரண்டாவது இடம் ஜப்பான்.அதன் தேசிய கையிறுப்பு டாலர்கள் 1,019,000,000,000.

நமக்கு இடம் ஆறாவது வரும் Indian National reserves: $279,422,000,000. இது போக சுவிஸ் வங்கிகளில் தேங்கி இருக்கும் இந்தியர்களின் பணங்கள் ஏறக்குறைய 280 லட்சம் கோடி (280,00,000,000,0000) இந்திய ரூபாய்கள். பெரும்பாலும் கறுப்புப்பணங்கள் தாம்.இதை வைத்து மட்டும் 30 ஆண்டுகளுக்கு வரிகளே இல்லாத பட்ஜெட்டை இந்தியாவில் தாக்கல் செய்யலாம்.60 கோடி வேலை வாய்ப்புகளை இந்தியாவில் உருவாக்கலாம். எல்லா கிராமங்களிலிருந்தும் டெல்லிக்கு நான்குவழி சாலைகள் போடலாம். ஒவ்வொரு இந்தியனுக்கும் மாதம் 2000 ரூபாயென 60 வருடங்களுக்கு அரசிடமிருந்து பணம் கிடைக்க வழி செய்யலாம்.உலக வங்கியும் IMF-ம் கடன் தரவேண்டாம் ஒரு வெளிநாட்டு முதலீடும் நமக்கு தேவை இல்லை.இப்படி செல்வச் செழிப்பாய் இருக்க வேண்டிய இந்தியா, தன் குடும்பம், தன் வாரிசுக்கென கோடிக்கோடியாய் பணத்தை அள்ளி எங்கேயோ உனக்கும் பயனில்லாமல் ஊருக்கும் பயனில்லாமல் தேக்கி வைத்திருக்கிற பாழாப்போன அரசியல்வாதிகளாலும் செல்வந்தர்களாலும் மோசம் போயிருக்கின்றது.

இதுமட்டுமா நாட்டிலுள்ள பல ஸ்ரீகளின், பாபாக்களின், சுவாமிஜிக்களின், போதகர்களின் இரகசிய அறைகளில் இருக்கும் பணக்கட்டுகள், தங்கக்கட்டிகள் எல்லாம் இன்னும் கோடிக் கோடி பெருமானம் வரும்.யாருக்கும் பயனின்றி சேர்த்தார் நீத்தார் பின் ஏதோ சில திருடர்கள் திருடிப்போய் மீண்டும் சுவிசில் கொண்டு போய் சேர்ப்பார்கள்.

இன்னும் அதிஷ்டமாக நம்முன்னோர்கள் முன்பு சேர்த்துவைத்திருந்த பொக்கிஷங்களும் இப்போது தோண்டி எடுக்கப்படுகின்றன.திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளில் தோண்ட தோண்ட தங்கக் குடங்களும் வைரங்களும் வைடூரியங்களும் எடுக்க்ப்படுகின்றன. மொத்த ஆறு அறைகளில் மூன்று அறைகளில் மட்டும் 400 கோடி மதிப்பிலான தங்க வைர நகைகள். ஆறு அறைகளையும் திறந்து மதிப்பிட்டால் 1000 கோடியையும் தாண்டும் என்கின்றார்கள்.யார் கொத்திக்கொண்டு போவார்களோ?

இந்திய மாலுமிகளை மீட்க பாகிஸ்தானிய படை வரவேண்டியிருக்கின்றது. இந்திய மீனவர்களை சாகடி அடிக்கிறான் வளரும் வல்லரசுக்கு கேட்க நாதியில்லை. கடமையை விட்டு விட்டு பணம் பணம் என்று அலைகின்றதே இந்தியா. மனிதனே! அதிகமாய்ப்போனால் நூறு ஆண்டுகள் தான் வாழ்வாய். எத்தனை கோடிகள் தான்வேண்டும் உனக்கு?

தள அறிமுகம்
தமிழ் இசைப் பாடல்களை கேட்க ஆர்ப்பாட்டமில்லாத அருமையான எளிமையான ஒரு தளம்

http://www.paadal.com

எனது சேகரிப்புக்காக
“நெஞ்சை அள்ளும் நெல்லை,தூத்துக்குடி சம்மர் டூர்” - Nellai Tuticorin Summer Tour Guide


Email PostDownload this post as PDF

Thursday, June 23, 2011

ஊர் வலம்

சிவ்நகர் ஒன்று ஸ்நேப்டீல்.காம் நகராகின்றது
உத்தரபிரதேச கிராமமொன்று தனது பெயரை சிவ்நகரிலிருந்து, ஸ்நாப்டீல்.காம் நகரென பெயர்மாற்றம் செய்திருக்கின்றது. காரணம் snapdeal.com வழங்கிய குடிநீர் தீர்வு தான்.குடிநீர் பிரச்சனையில் கிடந்த இக்கிராமத்தில் குழாய்க்கிணறுகளை தோண்டி அவர்களுக்கு கைப்பம்புகளையும் இலவசமாய் அமைத்துக் கொடுத்திருக்கின்றது இந்நிறுவனம். நன்றிக்கடனாக பஞ்சாயத்து கூடி அவர்கள் தங்கள் ஊருக்கு புதுநாமம் இட்டுவிட்டார்கள்.இங்கு நாம் ஸ்நேப் டீல்.காம் தளத்தின் நிறுவனர் குணால் பாஹலை பாராட்டியே ஆகவேண்டும்.உண்ட கையால் காக்கை கூட விரட்டாதவர்கள் மத்தியில் இவர்களெல்லாம் எவ்வளவோ மேல்.



சம்பந்தமில்லாத இன்னொரு சேதி
இந்தியாவின் இன்றைய தேவை, தன்னிடம் உள்ள செல்வத்தை சமூக நலனுக்காகவும் பயன்படுத்துபவர்களே. இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி பல கோடி மதிப்புள்ள 27 அடுக்கு மாளிகையில் வசிக்கிறார். இது மிகப்பெரிய தவறு. மற்றவர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய இவர், செல்வத்தை இப்படி வீணாக்கலாமா?" என்று கடுமையாக விமர்சித்துள்ளார் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா. பல் இருக்குது பக்கோடா சாப்பிடுறான் உங்களுக்கென்ன என்கின்றீர்களா?

அம்மா தயவில்
இலவச லேப்டாப்புகள் தமிழகமெங்கும் பள்ளிகளில் வரப்போகின்றது.இது எந்த மாதிரி புரட்சியை உண்டுபண்ணபோகுதோ தெரியவில்லை முந்தைய இலவச டிவி போலல்ல இது.குத்துக்கல்லாட்டம் ஒரு மூலையில் வைத்துக்கொள்ள. இதனால் இண்டர்நெட் இணைய தேவைகள் அதிகமாகும்,ஆக்சசரீஸ்கள் நிறைய போகும்,டிஜிட்டல் காமரா,ஐபாட் போன்ற கணிணி சார் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் சக்கை போடு போடும், இணையத்தின் நன்மை தீமைகள் இன்னும் வேகமாக தமிழகமெங்கும் பரவும், சைபர் கிரைம்ஸ் விர்ரென எகிறும். எகிப்தில் ஒருவர் தன் குழந்தைக்கு ”பேஸ்புக் ஜமால் இப்ராகிம்” என பெயர் வைத்தாராம். இந்த மாதிரியான தீவிர ரசிகர்கள் நம்மூரிலும்தோன்றுவார்கள்.

இனிப்பான கிரேசியிலும் கிரேசி செய்தி:
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்க்கும் கூகிளின் அமேசிங் சேவை துவங்கியிருக்கின்றது.கொஞ்சம் தத்தக்கு பித்தக்குவாக இருந்தாலும் அற்புதமான ஆரம்பம்.மிக முக்கியமான மைல் கல்லை இணையத்தமிழ் எட்டியிருக்கின்றது எனச் சொல்லலாம். நன்றி via ஜிஎஸ்ஆர்
http://translate.google.com/


கேள்வி: வெளிநாட்டு வேலை தரும் நிறுவனம் சரியானதா என கண்டுபிடிக்க மத்திய அரசின் இணையதளம் ஒன்று உள்ளதாமே? அது உண்மையா?
பதில்: உண்மைதான்.கீழ்கண்ட சுட்டியில் Recruiting agent-ன் நிலையை தெரிந்துகொள்ளலாம்
http://www.poeonline.gov.in/


Email PostDownload this post as PDF

Friday, May 23, 2008

தமிழிலும் வந்துவிட்டது GPS

இதெல்லாம் இப்போதைக்கு சாத்தியமில்லை என்று நாம் அசட்டையாய் சொல்லிக் கொண்டிருக்க எங்கோ யாரோ உழைத்து இது மாதிரி அற்புதங்களையெல்லாம் கொண்டு வந்து கொண்டிருக்கின்றார்கள். ஆமாம் நம் தாய்மொழியாம் தமிழில் கூட இப்போது ஜிபிஎஸ் வந்துவிட்டதாம். இடது புறம் திரும்பு மக்கா , வலது புறம் திரும்பு மக்காவென தமிழில் அந்த GPS அம்மணி நமக்கு வழிகாட்ட நாம் தேசியநெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டப் போகின்றோம்.இந்த கருவியை சமீபத்தில் SatNav Technologies எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பல்வேறு விதமான வழிகளில் பல்வேறு விலைவாசிகளில் ஜிபிஎஸ் தீர்வுகளை இவர்கள் அளிக்கின்றனர்.ஆர்வமுள்ளோர் இவர்களின் http://www.satguide.inஎனும் தளம் போய் ஒரு கணம் பார்க்கலாம்.

சில ஹைலைட்கள்

  • நீங்கள் GPS வாங்காவிட்டாலும் பரவாயில்லை,உங்கள் மடிக்கணிணியை அல்லது PDA-வை அல்லது மொபைல்போனை GPS போல பயன்படுத்த அவர்கள் வழி செய்து தருகின்றார்கள்.
  • நடந்து போகும் போதும் ஆட்டோவில் போகும்போதும் கூட இதை பயன் படுத்தலாம் என்கின்றார்கள்.
  • இந்தியாவாயிருந்தாலும் எல்லா GPS-களும் பயன்படுத்துவது அந்த 24 அமெரிக்க சாட்டலைட்டுகளைதாமாம்.
  • MP3 இசை கூட பாடும் வசதி இவர்கள் தரும் GPS-ல் உள்ளதாம்.
  • GPS க்கும் GPRS க்கும் எந்த சம்பந்தமும் கிடையாது தெரியுமோ?
  • வாங்கும் செலவு மட்டும் தான் பெருசு,மாதம் தோறும் பணம் எதுவும் கட்டவேண்டியதில்லை.
  • பிற்காலத்தில் மேப்பை அப்டேட் செய்ய வேண்டுமாயின் பணம் கட்டவேண்டியது வரும்.
  • இந்த ஜிபிஎஸ்களை வெளிநாட்டிலும் பயன்படுத்தலாமாம்,ஆனால் முதலில் Destinator தளத்திலிருந்து அந்த நாட்டுக்கான மேப்பை வாங்கி நிறுவ வேண்டுமாம்.

முன்பு ஒரு பதிவில் இந்தியாவில் ஜிபிஎஸ்-ன் வருகையை பற்றி எழுதியிருந்த போது நண்பர் வெங்கி கேட்டிருந்தார்
Dear PKP,
I have a GPS unit (MIO C520). Is it possible to buy just the map for India ? which is compatible with this unit ? Your guidance is appreciated.


அவர்கள் கொடுக்கும் GPS unit மாடல் (MIO C230) OS: WinCE .Net 5 போல் தெரிகின்றது.
அவர்கள் FAQ-க்கிலிருந்து ஒரு கேள்வி
Is my device compatible to SatGuide?
Today, SatGuide is compatible with all devices that have the following features:
* The device should be based on windows mobile 2003/2003Se/5.0 Versions.
* The screen size of the device should be 240x320 or 240x240.
* It should have an inbuilt GPS receiver or else you will need to make it GPS enabled by purchasing an external Bluetooth GPS Receiver.

சிறுவர் கதைகள் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. 6th Siruvar Kathaikal kids stories in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Saturday, May 17, 2008

வழித்தடங்கள்

சிலவருடங்களுக்கு முன்பு மேலைநாடுகளின் சாலைகளில் புதுஇடங்கள் பயணிக்கும் போது நமக்கு வழிக்காட்ட துணையாக ஜீபிஎஸ் (GPS) எனும் கருவி புழக்கத்துக்கு வந்ததை கேள்விப்பட்டபோது இது மாதிரி கருவிகளெல்லாம் நம் ஊருக்கு ஒத்துவருமா பொருந்துமாவென வியந்ததுண்டு. நேர்க்கோடாய் கறுப்பு வண்ணத்தை சிந்திய மாதிரி குறுக்கும் நெடுக்குமாய் புதுசாய் திட்டமிடப்பட்டு போடப்பட்ட ரோடுகளுக்கு வேண்டுமானால் ஜிபிஎஸ் கருவி ஒத்துவரலாம்.ஆனால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வரலாறுகள் கொண்ட நம்மூர் சாலைகளில் ஜிபிஎஸ் சாத்தியமா, புதிதாய் உருவாகிய நாடுகளில் ஒரு இடத்துக்கு செல்ல ஒன்று அல்லது இரண்டு வழிகள் தான் இருக்கும். நம்மூரில் ஒரு இடத்துக்கு வேண்டுமானால் ஐம்பதுவழிகளில் செல்லலாமே?

அத்தனை இடற்பாடுகளையும் மேற்கொண்டு நம் ஊருக்கும் இப்போது GPS Navigator வந்துள்ளது. இதனை mapmyindia.com எனும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போதைக்கு A-MAX 06GP5A மற்றும் Delphi NAV 200 எனும் இரு மாடல்களில் கிடைக்கின்றது. இதனை வாங்கி உங்கள் காரில் நீங்கள் பொருத்திக்கொண்டால் தைரியமாய்
இந்தியாவெங்கும் செல்லலாம் என்கின்றார்கள்.

இந்தியா முழுக்க 55,000 கிராம நகரங்களுக்கு இதுவால் வழிகாட்டமுடியும். மாநகரங்களில் Delhi, Gurgaon, Noida, Chandigarh, Mumbai, Thane, Pune, Bangalore, Hyderabad, Kolkata, Chennai போன்ற நகரங்களில் தெருவுக்கு தெரு அதுவால் கூட்டிசெல்ல முடியுமாம்.விலையை கேட்டால் தான் சற்று தலை சுற்றுகின்றது ரூ 20,990/ தான்.

நிற்க. சம்பந்தமேயில்லாத சம்பந்தமுள்ள இன்னொரு சேதி.

YourGmap.com என ஒரு இணைய தளம். உங்களுக்கு சொந்தமாய் கூகிள் மேப்கள் வைத்துக்கொள்ள இங்கு வசதிசெய்து தருகின்றார்கள். நீங்கள் போயிருக்கும் அல்லது போக ஆசைப்படும் அல்லது சமீபத்தில் போன இடங்களை மேப்பில் குறித்து வைத்து குடும்பத்தினர்களிடையே அல்லது உங்கள் நண்பர்களிடையே அந்த மேப்பை பரிமாறிக்கொள்ளலாமாம். இஷ்ட புனிதத் தலங்களை அல்லது விருப்ப உணவகங்களையும் குறித்து பிறருக்கு காட்டலாம்.

"நானும் அங்கிருந்தேன்" என எனது வழித்தடங்களை குறித்துப்பார்த்தேன்.
இதோ அந்த மேப்.(சில நாடுகள் ஏனோ மிஸ்ஸிங்)
I was also there - PKP



லினக்ஸ் ஒரு அறிமுகம் தமிழில் பிடிஎப் பக்கங்கள். Introduction to Linux in Tamil pdf pages Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Thursday, October 25, 2007

விக்கி மாஃபியா

விக்கி மாஃபியா என்றதும் "இது ரொம்ப முக்கியமோ? அடுத்தவன் கம்ப்யூட்டர கெடுக்க நல்ல வழி சொல்றீங்க"- என்று சொல்லும் படியான பதிவு அல்ல இது. இது விக்கிமேப்பியா (Wikimapia.org) பற்றிய பதிவு. :)

இந்தியாவில் இண்டர்நெட் எத்தனையாய் ஊடுருவியிருக்கின்றது என்பதற்கு இந்த விக்கிமேப்பியாவே சாட்சி. நம்மூரில் பிரபலமான இந்த மேப்பின் விசேஷம் என்னவென்றால் நீங்களே உங்கள் வீட்டை, உங்களுக்கு தெரிந்த இடங்களை பிறர் அறிய எழுதி அதில் குறித்து வைக்கலாம். நம்மூரில் எதோ ஒரு கோடியிலிருக்கும் குப்பன் மற்றும் சுப்பனின் வீடுகளும் அழகாக குறித்து வைக்கப்பட்டிருக்கின்றது. இப்படி இந்த தளத்திற்கு வருவோர்களாலேயே குறிக்கப்பட்டு இந்த மேப்பானது தகவல்களால் பெருகி வருகின்றது. மேலே படத்தில் மவுசை வைத்தால் சென்னை கடற்கரை மற்றும் சேப்பாக்கம் ஸ்டேடியத்தை பார்க்கலாம்.சென்னையில் மட்டும் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்கள் இப்படி வாசகர்களால் குறிக்கப்பட்டுள்ளனவாம்.

யாகூகாரர்களும் சும்மா இருக்கவில்லை. இப்போது இந்தியாவில் டிரைவிங் டைரக்ஷன்கள் கொடுக்க தொடங்கியிருக்கின்றார்கள். உதாரணமாய் From tnagar,chennai to ashoknagar,chennai என கொடுத்த போது அழகாய் எங்கே இடது பக்கம் திரும்பவேண்டும் எங்கே வலது பக்கம் திரும்பவேண்டும் என டிரைவிங் தகவல்களும் வரைபடமும் (மேலே) கொடுக்கின்றார்கள்.
திநகரிலிருந்து அசோக்நகர் செல்ல வரைபடம் பெற இங்கே சொடுக்குங்கள்.

கிடைத்த வழித்தடம் கீழே
Start-Raja Mannar St,L-Gopathi Narayanswami Chetty Rd,Prakasam Rd,1st L,R-Nageswaran St,L-Sir Mohammed Usman Rd,R-Duraisamy Rd,Brindavan St,L-Thamvaiah Rd,R-Veeraswamy St,R-Arya Gowda Rd,L-Brindavan Street Extension,L-4th Av,L-Jawaharlal Nehru Rd,1st L,Stop
(L stands for Left & R stands for Right)


மைக்ரோசாப்டின் லைவும் டிரைவிங் டைரக்ஷன்கள் கொடுக்கின்றார்கள்.ஆனால் பிரமாதமாய் ஒன்றும் தெரியவில்லை.இங்கே சொடுக்கி சென்னை டு மதுரை டிரைவிங் டைரக்ஷன் பாருங்கள்.

அமெரிக்க வாழ் நண்பரா நீங்கள்?. உங்கள் பூகோள அறிவுக்கு இங்கு கூலாய் ஓர் குவிஸ் மேப்.
http://jimspages.com/States.htm


சத்குரு ஜக்கி வாசுதேவ் "அத்தனைக்கும் ஆசைப்படு" தமிழில் மென்புத்தகம் "Aththanaikkum Aasaipadu" Sadhguru http://www.ishafoundation.org Tamil e-book Download. Right click and Save.http://static.scribd.com/docs/7g9sye5z7f1sx.pdf


Email PostDownload this post as PDF

Monday, October 08, 2007

வளர்வோரோடு வளர

சேது சமுத்திர திட்டம் பற்றிய காரசார விவாதங்கள், அமெரிக்க அணு சக்தி ஒப்பந்ததால் ஆட்சியே கவிழும் அபாயம், யோசிக்க கூட சமயமின்றி ஆளும் கட்சிகள், சுடச் சுட தினம் புதுப் புது விவகாரங்களுடன் எதிர்கட்சிகள் இத்தனைகள் மத்தியிலும் சந்தேகமே இல்லாமல் வளர்ந்து கொண்டிருக்கின்றாள் நம் பாரதத்தாய். இதற்குபெரிதும் துணையாய் இருப்பது தனியார் துறைகளே என அனைவரும் ஒத்துக்கொள்கின்றார்கள்.வளர்வோரோடு சேர்ந்து நீங்களும் வளர பங்குசந்தையில் நுழைவதை பற்றி முன்பு (அடிக்கும் ஷேர்மார்கெட் லாட்டரி) கூறியிருந்தோம்.சூடாய் இருக்கும் இப்போதைய பங்குசந்தையில் சிறு முதலீட்டார்கள் மிக எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என எச்சரித்திருக்கின்றார் நம் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள்.அதையேதான் நண்பர் SRI-யும் தனது பின்னூட்டத்தில் கூறியிருந்தார்.

தினம் தினம் ஷேர்மார்கெட்டை கண்காணித்து சமயத்துக்கேட்ப சரியான முடிவுகள் எடுக்க வசதி வாய்ப்புகள் இல்லாதோர் நம்பகமான மியூட்சுவல் பண்ட்களில் தங்கள் பணத்தை முதலீடு செய்யலாம்.மியூட்சுயல் பண்ட்டில் உங்கள் பணமானது விவரமறிந்தோர்களால் அநேக விதமான ஷேர்களில், முதலீடுகளில் முதலீடு செய்யப்படும். விதவிதமான மியூட்சுவல் பண்ட்கள் விதவிதமாக அதிக ரிஸ்க்கள் மற்றும் குறைந்த ரிஸ்க்களில் இருக்கின்றன.அதிக ரிஸ்க் அதிக லாபம்.குறைந்த ரிஸ்க் குறைந்த லாபம். நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு மியூட்சுவல் பண்ட் நல்லது.பட் பட்டென மௌஸ் கிளிக்கில் மணிக்கூருக்கொருதரம் ஒரு ஷேரிலிருந்து இன்னொரு ஷேருக்கு குதிப்போருக்கு இது சரிபட்டுவராது.ஆனால் டாலர் peg-கினால் மனம் நொந்திருக்கும் வளைகுடா வாழ் நண்பர்கள் இது போல் ஷேர்மார்கெட், மியுசுவல் பண்ட் ,ரியல் எஸ்டேடில் வளர்வோரோடு வளர பணம் போட்டு வைக்கலாம்.(பின்னே 1 துபாய் திரம்ஸ் மதிப்பு 12 யிலிருந்து 10.7ரூபாய்களாயிட்டுது,1 ஒமானி ரியால்ஸ் மதிப்பு 128 யிலிருந்து 102ரூபாய்களாயிட்டுது etc)

சில மியுசுவல் பண்ட்கள் கீழே
SBI Mutual Fund (SBI MF)
Principal Mutual Fund
Unit Trust of India (mutual fund)

அதுவும் பிடிக்கவில்லையா இருக்கவே இருக்கு பிக்ஸட் டெப்பாஸிட்.இப்போதெல்லாம் 9.00% வரை வட்டி கொடுக்கின்றார்கள்.
SBI SMART DEPOSIT
சும்மா பணத்தை சேமிப்பு கணக்கில் போட்டு வைக்காமல் தூக்கி பிக்ஸடில் போடுங்கள்.Its Worth it.


"அண்டத்தின் அற்புதங்கள்" பாகம் 2 தமிழில் அறிவியல் மென்புத்தகம் Andathin Arputhangal Part2 Tamil ebook Download. Right click and Save.
http://static.scribd.com/docs/eau4p0wid4g2v.pdf


Email PostDownload this post as PDF

Friday, September 28, 2007

அடிக்கும் ஷேர்மார்க்கெட் லாட்டரி

எகிறிக்குதித்தோடிக் கொண்டிருக்கின்றது நம் இந்திய பொருளாதாரம். ஏறிக்கொண்டே இருக்கும் நம்மூர் பங்குவர்த்தகத்தால் நாளுக்கு நாள் இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே இருக்கின்றது. முகேஷ் அம்பானி ,அணில் அம்பானி சகோதரர்களின் மொத்த பணமதிப்பும் (43+29=72பில்லியன்) இன்றைய உலக பணக்காரரைவிட (67பில்லியன்) அதிகமாயிற்றாம். இப்போது அம்பானி குடும்பம்தான் உலகின் பணக்காரக் குடும்பம் போலும்.

சாதாரண இந்திய குடிமகனும் கவனமாய் பங்குவணிகத்தில் கால்வைக்க இது சரியாண தருணம். சீனாவில் ஏற்கனவே பீடித்த இந்த ஜூரத்தால் சாதாரண அடிமட்ட சீனரும் பங்கு வணிகத்தில் புகுந்து விளையாடுகின்றனராம்.தினம் தினம் மில்லியன் கணக்கில் புதிதாய் சீனர்கள் பங்கு வணிகத்தில் நுழைகின்றனர். எல்லாம் ஆன்லைனாகி போயிற்றல்லவா? பங்குசந்தை புள்ளிகள் ஏறினால் ஆடிப்பாடி குதிக்கின்றனர். தப்பிதவறி ஒரு கால் டாக்ஸியில் ஏறினால்கூட அங்கு இலவசமாய் பங்கு வர்த்தகம் பற்றிய டிப்ஸ் அண்ட் டிரிக்குகள் கிடைக்கின்றனவாம்.

ஆனால்...பங்குவர்த்தகம் ஆட்டம் கண்டால்..?? நீங்கள் முனுமுனுப்பதும் புரின்றது. இதுவும் ஒரு வகை சூதாட்டம் தானே. அதானால் தான் சொன்னேன் "கவனமாய்" என்று.

மூன்று காரியங்கள் ரொம்ப முக்கியம்.

ஒன்று: உங்களுக்கு நம்பிக்கை தரும் எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சி எதிர்பார்க்கப்படும் பங்குகளில் முதலீடு செய்யுங்கள்

இரண்டு:பேராசை வேண்டவே வேண்டாம்

மூன்று:போட்ட பணத்தை இழந்து விடாதீர்கள். ஏன்னா அது உங்கள் பணம்.

உதவும் தளங்கள்
இந்தியாவில் வாழும் அல்லது UAE,Saudi Arabia, Bahrain, Kuwait, Oman,Qatar-ல் வாழும் இந்தியர்கள் இந்திய சந்தையில் முதலீடு செய்யலாமாம்.கொஞ்சம் காகித வேலைகள் இருக்கும் போலத் தெரிகின்றது.

http://www.sharekhan.com
http://www.icicidirect.com

அமெரிக்கா வாழ் இந்தியர்கள் புதிதாய் பங்கு வணிகத்தில் நுழைய.
Try
http://www.sharebuilder.com

அமெரிக்கா வாழ் இந்தியர்கள் இந்திய சந்தையில் விளையாட நேர்வழி இருப்பதாய் தெரியவில்லை.தெரிந்தோர் சொல்லலாம்.

Free Real time Stock Quote (You need hotmail id)
http://moneycentral.msn.com/detail/realtime_quote

அமெரிக்காவை பொருத்தவரை Real time Stock Quote-ம் Live Stock Quote-ம் வேறு வேறு.பொதுவாய் Live Stock Quote-கள் இருபது நிமிடம் தாமதமாய் வருகின்றது.

மீண்டும் பார்க்கலாம்.


பா.ராகவனின் "நிலமெல்லாம் ரத்தம்" மென்புத்தகம் Pa.Raghavan Nilamellam Ratham Tamil ebook Download. Right click and Save.
http://static.scribd.com/docs/3lf4xgwfzyzur.pdf


Email PostDownload this post as PDF

Tuesday, July 03, 2007

உலக தரவரிசையில் இந்திய நிறுவனங்கள்

BusinessWeek எனும் அமெரிக்க வாரஇதழ் உலக முழுவதுமிருந்து இந்த வருட டாப் 100 தகவல் தொழில்நுட்பம் சார்ந்த மென்பொருள் நிறுவனங்களின் வரிசையை வெளியிட்டுள்ளது. அதில் சில இந்திய நிறுவனங்களும் அடக்கம். இங்கே அதன் சாரம்சம்.

14 ஆவது இடத்தில் வருவது Bharti Airtel (கடந்த வருடம் 10ம் இடம்.இறங்குமுகம்)



23 ஆவது இடத்தில் வருவது Tata Consultancy Services (கடந்த வருடம் 34ம் இடம்.ஏறுமுகம்)



30 ஆவது இடத்தில் வருவது Infosys (கடந்த வருடம் 42ம் இடம்.ஏறுமுகம்)


49 ஆவது இடத்தில் வருவது Wipro (கடந்த வருடம் 57ம் இடம்.ஏறுமுகம்)





73 ஆவது இடத்தில் வருவது Satyam Computer Services (கடந்த வருடம் 49ம் இடம்.இறங்குமுகம்)



HCL Technologies (புதுசாக இந்த வரிசையில் இந்த வருடம் நுழைந்துள்ளது)


பெரும்பாலான மென்பணிகள் இந்தியாவிலேயே நடைபெறும் அமெரிக்க நிறுவனம் Cognizant Technology Solutions 70 ஆவது இடத்தில் வருகிறது. (கடந்த வருடம் 84ம் இடம்.ஏறுமுகம்)

மென்பொருள் துறையில் ஜாம்பவானாக காட்டிகொள்ளும் நம் நிலம் "இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா?" வென இன்னும் கொஞ்சம்
வந்தால் நன்றாய் இருக்கும்.


Email PostDownload this post as PDF

Tuesday, May 29, 2007

சபாஷ் சரியான போட்டி

"ஒவ்வொரு இந்தியனும் பறக்க வேண்டும் என்ற கனவோடு இந்த விமான சேவையை தொடக்கினேன்" என்கின்றார் இன்றைய இந்தியாவின் இரண்டாம் பெரிய விமான சேவை நிறுவனமான Air Deccan-ஐ நிறுவிய மிஸ்டர்.கோபினாத். இவர் "Father of low-cost airlines" என அறியப்படுகின்றார்.இதுவரை இந்நிறுவனமிடமிருந்து ஒரு மில்லியன் 500ரூபாய் விமான டிக்கட்கள் வாங்கப்பட்டுள்ளனவாம்.புதிய இந்தியாவின் இன்னொரு தேவை இந்த விமான போக்குவரத்து புரட்சி.இந்தியாவில் வருடம் தோறும் 50 மில்லியன் பேருக்கும் மேல் விமான பயணம் செய்கின்றார்களாம்.அவற்றில் 50 சதவீதம் பேர் டெல்லி மற்றும் மும்பை வழி பறக்கின்றார்கள்.தனியாரும் விமான சேவையில் குதித்துள்ளதால் புதிது புதிதாக போட்டி போட்டு சேவைகள் விரிவாக்கப்பட்டு வருகின்றன.10 பில்லியன் டாலர்களுக்கு புதிய விமானங்கள் வாங்கப்படுகின்றன. ஆங்காங்கே விமான நிலையங்கள் புதுவாக்கப்படுகின்றன.விமான பைலட்களுக்கு தட்டுபாடு. ஐயடோ... அப்படோ... சுற்று சூழல் பாதிக்கப்படுகின்றது,குளோபல் வார்மிங்-னு மேற்க்கத்திய நாடுகளின் கூக்குரல்.இதையெல்லாம் தாண்டி கீழே பாருங்கள் அருமையான ஒரு விளம்பர போட்டி.

ஜெட்ஏர்வேஸ் இப்படி சொன்னது


இதற்கு கிங்பிஷரின் கிண்டல்


இருவருக்கும் பதிலடியாய் கோஏரின் கலக்கல்


இந்திய விமான நிறுவனங்கள்

http://www.airindia.com/

http://indian-airlines.nic.in

Air India மற்றும் Indian Airlines இரண்டும் இணைந்து புதிய Air India இம்மாதம் உருவாகியிருக்கிறது.So no more Indian Airlines

http://www.airsahara.net
Air Sahara சமீபத்தில் Jet Airways-ஆல் 1,450 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு புதிய பெயரிடப்பட்டுள்ளது.JetLite Airlines.
.So no more Air Sahara

http://www.jetairways.com

http://www.flykingfisher.com

http://mdlrairlines.in/

http://www.paramountairways.com/

http://www.airindiaexpress.in

http://www.goair.in/

http://www.goindigo.in

http://www.jagsonairline.com/

http://www.spicejet.com/


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்