கடந்த 86 வருடங்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை வளர்ந்த வளர்ச்சி இதோ அருமையாக அட்டவணையாக. எனது சேகரிப்புக்காக இங்கே.
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Thursday, March 01, 2012
தங்கத்தின் ஏறுபடலம்
Posted by
PKP
at
3/01/2012 04:34:00 PM
1
comments
Thursday, September 01, 2011
பிடித்து போடு போடு.
முன்பு ஒரு முறை கணிணி ஹேக்கிங் அடிப்படைகளை பற்றி நாம் இந்த வலைத் தளத்தில் எழுதிய போது ஏன் இதையெல்லாம் எழுதி ஜனங்களை கெடுக்கின்றீர்கள் என்கிற ரீதியில் ஒருவர் கோபமாய் பின்னூட்டமிட்டு போயிருந்தார்.களவும் கற்று மற என்பது நம் ஊர் வாக்கு.திருடர்களின் தந்திரங்களை அறியாத போலீசாரால் என்ன பயன். போனால் போகட்டும் மக்களுக்கு பிடிக்கவில்லை ரூட்டை மாத்து என்றானது.
இன்றைக்கு இந்த ஹேக்கிங்குகளின் போக்கே மாறியிருக்கின்றது. திருட்டுத்தனமாய் இல்லாமல் நல்ல முறையில் ஹேக்கிங் செய்பவர்களை ஒயிட் ஹேட்ஸ் (White Hats) என்பார்கள்.இத்தகையோருக்கு இன்றைக்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்ப்பு. பேப்பர் பேப்பராக வேலை தேட வேண்டியதில்லை, பயோடேட்டாவெல்லாமல் எழுத வேண்டியதில்லை, பேஸ் டு பேஸ் இண்டர்வியூவெல்லாம் செல்லாமல் கூகிள்,ஆப்பிள் போன்ற பிரதான கம்பெனிகள் வேலை கொடுக்கின்றன ஹேக்கர்களுக்கு. ஆஸ்திரியாவை சேர்ந்த வலைப்பதிவர் பிளோரியன்.புதிதாக வந்துள்ள கூகிள் ப்ளசின் இண்டு இடுக்குகளில் நுழைந்து மோப்பமிட்டு கூகிள் ரகசியமாக டெவலப் செய்து கொண்டிருந்த பல புது கூகிள் பிளசின் வசதிகளை முன்கூட்டியே உலகுக்கு தனது வலைப்பதிவுகள் வழி அறிவித்துவிட கூகிளுக்கு பொத்துக்கொண்டு வந்தது டென்சனும் ஆச்சரியமும். கூகிளுக்கு தெரிந்த ஒரே ஈசி சொலூசன். இத்தனை புத்திசாலியை விட்டு வைக்கக்கூடாதுவென தன் நிறுவனத்தில் அவரை சேர்த்துக்கொண்டது.
இதே மாதிரி இன்னொரு கதை.பத்தொன்பதே வயதான நிக்கோலஸ் என்பவர் ஆப்பிள் ஐபோன்களை ஜெயில் பிரேக் பண்ணுவதில் படு கில்லாடி. www.jailbreakme.com-னு இதற்கென தனியாக ஒரு வலைத்தளமே வைத்திருக்கின்றார். பார்த்தது ஆப்பிள். தொல்லை தாங்க முடியாமல் அவருக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் அனுப்பி இருக்கின்றது. இப்படி இந்த மாதிரியான கதைகள் தொடர்கின்றது.
என் இனிய தமிழ் மாணவர்களே! ஹேக்கிங்கில் ஆர்வமா,இன்னும் வாய்ப்புகள் இருக்கின்றன. பேஸ்புக் இணையதளம் ”Security Bug Bounty” எனும் திட்டத்தை அறிவித்திருக்கின்றது. அதன் படி பேஸ்புக் வெப்சைட்டின் புரோகிராம் கோடில் நீங்கள் ஏதாவது பாதுகாப்பு குறைபாடுகளை கண்டுபிடித்து அறிவித்தால் $500 முதல் இன்னும் அதிகமான டாலர்கள் வரை சன்மானம் நீங்கள் கொடுக்கும் தகவலை பொறுத்து கொடுப்பதாக அறிவித்திருக்கின்றார்கள்.இதுவரை இந்த மாதிரி பக் ரிப்போர்ட் கொடுத்துள்ளவர்கள் லிஸ்டில் பல இந்திய பெயர்கள் இருக்கும் என நினைத்து ஓடிப்போய் பார்த்தால் இரண்டே இந்திய பெயர்கள் தான் தெரிந்தது.”நம் ஊர் காரர்களுக்கு சம்பளத்துக்கு தான் புரோகிராம் பண்ணத் தெரியும், ஹேக்கிங்குக்கு சீனர்களைத்தான் பிடிக்கனும்” என்று கோபப்பட்டான் கோபால். அதனால் என்ன பேஸ்புக்குக்கு போட்டியாக வந்து சக்கை போடு போடும் கூகிள் பிளஸ் புராஜெக்டின் லீடரே ஒரு இந்தியர் தான் என நாம் பெருமைபட்டுக்கொள்ளலாம். பெயர் Vic Gundotra.
On the Lighter Side

Posted by
PKP
at
9/01/2011 11:57:00 AM
10
comments
Thursday, August 21, 2008
சிறு துளிகள்
இணையம் வந்தாலும் வந்தது இன்றைக்கு அங்கு பணம் சம்பாதிக்க பலமார்க்கங்கள் இருக்கின்றன. அதற்காக நாம் சும்மா இருந்தால் போதும் அது கொட்டிக்கொடுக்கும் கற்பகதரு என்றர்த்தமில்லை.விற்க உங்களிடம் ஏதாவது ஒரு சரக்கு இருக்கவேண்டும். வாங்குவதற்கு உலக அளவில் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். சமீபத்தில் நான் கண்ட ஒரு உதாரணத்தையே இங்கும் உங்களுக்கு எடுத்துக்காட்டாக்க விழைகின்றேன்.
மீண்டும் இந்த ஐபோனை பற்றியே இங்கு பேசுவதால் கோபித்துக்கொள்ள வேண்டாம். இந்த ஐபோனின் ஒரு மிகப்பெரிய பாஸிட்டிவ் பாயிண்ட் அதன் SDK அதாவது Software Developement Kit. இந்த மென்பொருள் கிட்டை வைத்து ஐபோனுக்கான பயன்பாட்டு மென்பொருள்கள் பலவற்றை மினி மினியாக ஒருவர் இஷ்டத்துக்கு தயார் செய்து கொள்ளலாம். என்ன, கொஞ்சம் Objective C மொழி தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஒரு Mac-OS X உள்ள கணிணிப்பொறி மற்றும் ஒரு ஐபோன் தேவைப்படும். அருமையான, பலருக்கும் பயன்படும் ஒரு சிறுபயன்பாட்டை படைத்து அதை ஆப்பிள் அப்ளிகேஷன் ஸ்டோரில் விலைக்கு வைத்தால் கூவிக் கூவி நாம் விற்கத்தேவையில்லை. இன்றைக்கு மில்லியன்கணக்கில் ஐபோன்கள் மார்கெட்டில் உள்ளன. இதில் ஒரு சொற்ப சதவீதத்தினருக்கு மட்டும் டாலர் ஒன்றுக்கு உங்கள் அப்ளிகேசனை விற்றாலும் கொடிகட்டிப் பறக்கலாம்.
அப்படியே Apple App Store-ல் மேய்ந்து வந்த போது ஒரு தமிழ் பெயர் அடிபட்டது. முத்து ஆறுமுகம் (Muthu Arumugam).திண்டுக்கல் அருகே காட்டுப்புதூர் என்ற குக்கிராமத்திலிருந்து படித்து வெளியேறியவர்.இவர் தானே டெவலப்செய்த TamilDaily எனும் ஒரு iPhone அப்ளிகேஷனை $0.99-க்கும் Upcoming Plus எனும் ஒரு அப்ளிகேஷனை $1.99-க்கும் அங்கு விற்றுவருகின்றார். மகிழ்ச்சியாய் இருந்தது. யாருக்குத் தெரியும் அந்த சிறு துளி சிறு துளிகள் சேர்ந்து பெரு வெள்ளமாகலாம். புரோகிராமிங் படிச்சு தொலச்சோமில்லையேனு வருத்தமாயிருந்தது. செம்மல் நபியைக் காணச்செல்வோம் எனும் இஸ்லாமிய தமிழ் மென்னூல் இங்கே உங்கள் இறக்கத்துக்காக. Chemmal Nabiyai Kaanach Selvoom Islamic Tamil ebook in pdf format Download. Right click and Save.Download
Posted by
PKP
at
8/21/2008 09:26:00 PM
3
comments
Wednesday, November 14, 2007
தங்கத்தை நம்பி
பங்கு சந்தைகள் தோன்றி மியூச்சுவல் பண்ட்கள் தோன்றா காலத்தே முன் தோன்றிய முதலீட்டு முறை நம் ஊரில் தங்கத்தில் முதலீடு செய்யும் முறை. நம் பாரம்பரியத்தில் ஊறிப்போன "பண்டிகைக்கு தங்கம் வாங்குதல்" பழக்கம் அக்காலமிருந்தே குடும்பத்தில் சேமிப்புக்கு வழிகோலிவிட்டது. அதனாலேயே "மண்ணிலும் பொன்னிலும் போட்ட காசு வீணாகாது" என சொல்லித் தந்தர்.
இன்றைக்கும் தங்கத்தில் முதலீடு செய்தல் ஒரு பாதுகாப்பான முதலீடு முறையாக கருதப்படுகின்றது. பொருளாதார நிகழ்வுகள் காகித பணமெல்லாம் வெறும் வெத்துவேட்டுத்தான் என அடிக்கடி நினைவூட்டுகின்றன. அநியாயத்துக்கு கரன்சிநோட்டுகளை அச்சடித்து தள்ளுவதால் இந்த அபாயம் இனியும் தொடரவே செய்யும்.ஆக Paper money is fraud என்கின்றார்கள். அமெரிக்காவிடம் இப்போதைக்கு இருக்கும் தங்கஇருப்பின் அளவு 261மில்லியன் அவுன்ஸ்கள். ஆனால் அது உலவ விட்டிருக்கும் பேப்பர் பண அளவோ $12 trillion டாலர்கள். அதாவது தங்கம் அவுன்ஸ் ஒன்றின் மதிப்பு $45,977. வாவ்!!!கடந்த சில வருடங்களில் தங்கத்தில் மதிப்பு ஏறக்குறைய இரட்டிப்பாய் உயர்ந்திருக்கின்றது. ஆனால் ரியல் எஸ்டேட் மற்றும் பங்கு சந்தை வழி பணம் பண்ணி ருசி கண்டோர்க்கு இது சரியான முதலீட்டு வழியாய் படாது தான். ஆனாலும் கரன்சியாய் வைத்திருப்பதற்கு இது தேவலாம்.
இப்போதெல்லாம் தங்கத்தை கட்டியாய் பீரோவில் வைத்திருக்க வேண்டியதில்லையே. ஈகோல்டுகாரர்கள் (e-gold) அதை உங்களுக்காக டிஜிட்டலாய் வைத்திருக்க தயாராய் இருக்கின்றார்கள். நீங்கள் Gold-ஐ egold-ஆய் வாங்கி அக்கவுண்டில் வைத்திருக்கலாம். இன்றைய விலைக்கு வாங்கி அப்புறமாய் நாளைய விலைக்கு விற்கலாம். அவர்கள் அந்த ஈதங்கத்தை நிஜதங்கமாய் வைப்பு வைக்கின்றார்கள். இந்த ஏப்ரலில் மட்டும் இப்படியாய் அவர்களிடம் பலரின் தங்கங்கள் 3,492 கிலோவாய் இருப்பு இருக்கின்றதாம். ஈகோல்டில் நுழையுமுன் உங்களுக்கு இது சரிப்பட்டு வருமாவென சிறிது ஆய்வு செயல் நலம்.
http://www.e-gold.com/
"அர்த்தமுள்ள இந்து மதம்" தமிழ் ஆடியோ புத்தகம் கவிஞர் கண்ணதாசன் குரலில். Kavijar Kannadasan Arthamulla Hindu Matham Tamil MP3 Audio Book
Click here to download.
Posted by
PKP
at
11/14/2007 03:00:00 PM
3
comments
Monday, October 08, 2007
வளர்வோரோடு வளர
சேது சமுத்திர திட்டம் பற்றிய காரசார விவாதங்கள், அமெரிக்க அணு சக்தி ஒப்பந்ததால் ஆட்சியே கவிழும் அபாயம், யோசிக்க கூட சமயமின்றி ஆளும் கட்சிகள், சுடச் சுட தினம் புதுப் புது விவகாரங்களுடன் எதிர்கட்சிகள் இத்தனைகள் மத்தியிலும் சந்தேகமே இல்லாமல் வளர்ந்து கொண்டிருக்கின்றாள் நம் பாரதத்தாய். இதற்குபெரிதும் துணையாய் இருப்பது தனியார் துறைகளே என அனைவரும் ஒத்துக்கொள்கின்றார்கள்.வளர்வோரோடு சேர்ந்து நீங்களும் வளர பங்குசந்தையில் நுழைவதை பற்றி முன்பு (அடிக்கும் ஷேர்மார்கெட் லாட்டரி) கூறியிருந்தோம்.சூடாய் இருக்கும் இப்போதைய பங்குசந்தையில் சிறு முதலீட்டார்கள் மிக எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என எச்சரித்திருக்கின்றார் நம் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள்.அதையேதான் நண்பர் SRI-யும் தனது பின்னூட்டத்தில் கூறியிருந்தார்.
தினம் தினம் ஷேர்மார்கெட்டை கண்காணித்து சமயத்துக்கேட்ப சரியான முடிவுகள் எடுக்க வசதி வாய்ப்புகள் இல்லாதோர் நம்பகமான மியூட்சுவல் பண்ட்களில் தங்கள் பணத்தை முதலீடு செய்யலாம்.மியூட்சுயல் பண்ட்டில் உங்கள் பணமானது விவரமறிந்தோர்களால் அநேக விதமான ஷேர்களில், முதலீடுகளில் முதலீடு செய்யப்படும். விதவிதமான மியூட்சுவல் பண்ட்கள் விதவிதமாக அதிக ரிஸ்க்கள் மற்றும் குறைந்த ரிஸ்க்களில் இருக்கின்றன.அதிக ரிஸ்க் அதிக லாபம்.குறைந்த ரிஸ்க் குறைந்த லாபம். நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு மியூட்சுவல் பண்ட் நல்லது.பட் பட்டென மௌஸ் கிளிக்கில் மணிக்கூருக்கொருதரம் ஒரு ஷேரிலிருந்து இன்னொரு ஷேருக்கு குதிப்போருக்கு இது சரிபட்டுவராது.ஆனால் டாலர் peg-கினால் மனம் நொந்திருக்கும் வளைகுடா வாழ் நண்பர்கள் இது போல் ஷேர்மார்கெட், மியுசுவல் பண்ட் ,ரியல் எஸ்டேடில் வளர்வோரோடு வளர பணம் போட்டு வைக்கலாம்.(பின்னே 1 துபாய் திரம்ஸ் மதிப்பு 12 யிலிருந்து 10.7ரூபாய்களாயிட்டுது,1 ஒமானி ரியால்ஸ் மதிப்பு 128 யிலிருந்து 102ரூபாய்களாயிட்டுது etc)
சில மியுசுவல் பண்ட்கள் கீழே
SBI Mutual Fund (SBI MF)
Principal Mutual Fund
Unit Trust of India (mutual fund)
அதுவும் பிடிக்கவில்லையா இருக்கவே இருக்கு பிக்ஸட் டெப்பாஸிட்.இப்போதெல்லாம் 9.00% வரை வட்டி கொடுக்கின்றார்கள்.
SBI SMART DEPOSIT
சும்மா பணத்தை சேமிப்பு கணக்கில் போட்டு வைக்காமல் தூக்கி பிக்ஸடில் போடுங்கள்.Its Worth it.
"அண்டத்தின் அற்புதங்கள்" பாகம் 2 தமிழில் அறிவியல் மென்புத்தகம் Andathin Arputhangal Part2 Tamil ebook Download. Right click and Save.
http://static.scribd.com/docs/eau4p0wid4g2v.pdf
Posted by
PKP
at
10/08/2007 03:34:00 PM
3
comments
Friday, September 28, 2007
அடிக்கும் ஷேர்மார்க்கெட் லாட்டரி
எகிறிக்குதித்தோடிக் கொண்டிருக்கின்றது நம் இந்திய பொருளாதாரம். ஏறிக்கொண்டே இருக்கும் நம்மூர் பங்குவர்த்தகத்தால் நாளுக்கு நாள் இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே இருக்கின்றது. முகேஷ் அம்பானி ,அணில் அம்பானி சகோதரர்களின் மொத்த பணமதிப்பும் (43+29=72பில்லியன்) இன்றைய உலக பணக்காரரைவிட (67பில்லியன்) அதிகமாயிற்றாம். இப்போது அம்பானி குடும்பம்தான் உலகின் பணக்காரக் குடும்பம் போலும்.
சாதாரண இந்திய குடிமகனும் கவனமாய் பங்குவணிகத்தில் கால்வைக்க இது சரியாண தருணம். சீனாவில் ஏற்கனவே பீடித்த இந்த ஜூரத்தால் சாதாரண அடிமட்ட சீனரும் பங்கு வணிகத்தில் புகுந்து விளையாடுகின்றனராம்.தினம் தினம் மில்லியன் கணக்கில் புதிதாய் சீனர்கள் பங்கு வணிகத்தில் நுழைகின்றனர். எல்லாம் ஆன்லைனாகி போயிற்றல்லவா? பங்குசந்தை புள்ளிகள் ஏறினால் ஆடிப்பாடி குதிக்கின்றனர். தப்பிதவறி ஒரு கால் டாக்ஸியில் ஏறினால்கூட அங்கு இலவசமாய் பங்கு வர்த்தகம் பற்றிய டிப்ஸ் அண்ட் டிரிக்குகள் கிடைக்கின்றனவாம்.
ஆனால்...பங்குவர்த்தகம் ஆட்டம் கண்டால்..?? நீங்கள் முனுமுனுப்பதும் புரின்றது. இதுவும் ஒரு வகை சூதாட்டம் தானே. அதானால் தான் சொன்னேன் "கவனமாய்" என்று.
மூன்று காரியங்கள் ரொம்ப முக்கியம்.
ஒன்று: உங்களுக்கு நம்பிக்கை தரும் எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சி எதிர்பார்க்கப்படும் பங்குகளில் முதலீடு செய்யுங்கள்
இரண்டு:பேராசை வேண்டவே வேண்டாம்
மூன்று:போட்ட பணத்தை இழந்து விடாதீர்கள். ஏன்னா அது உங்கள் பணம்.
உதவும் தளங்கள்
இந்தியாவில் வாழும் அல்லது UAE,Saudi Arabia, Bahrain, Kuwait, Oman,Qatar-ல் வாழும் இந்தியர்கள் இந்திய சந்தையில் முதலீடு செய்யலாமாம்.கொஞ்சம் காகித வேலைகள் இருக்கும் போலத் தெரிகின்றது.
http://www.sharekhan.com
http://www.icicidirect.com
அமெரிக்கா வாழ் இந்தியர்கள் புதிதாய் பங்கு வணிகத்தில் நுழைய.
Try
http://www.sharebuilder.com
அமெரிக்கா வாழ் இந்தியர்கள் இந்திய சந்தையில் விளையாட நேர்வழி இருப்பதாய் தெரியவில்லை.தெரிந்தோர் சொல்லலாம்.
Free Real time Stock Quote (You need hotmail id)
http://moneycentral.msn.com/detail/realtime_quote
அமெரிக்காவை பொருத்தவரை Real time Stock Quote-ம் Live Stock Quote-ம் வேறு வேறு.பொதுவாய் Live Stock Quote-கள் இருபது நிமிடம் தாமதமாய் வருகின்றது.
மீண்டும் பார்க்கலாம்.
பா.ராகவனின் "நிலமெல்லாம் ரத்தம்" மென்புத்தகம் Pa.Raghavan Nilamellam Ratham Tamil ebook Download. Right click and Save.
http://static.scribd.com/docs/3lf4xgwfzyzur.pdf
Posted by
PKP
at
9/28/2007 02:52:00 PM
4
comments
Thursday, May 17, 2007
இன்னோவேஷன் சோறு போடும்
பல தடவைகளில் நாம் இங்கே சொல்லியிருப்பது உண்மை என்பது போல் இன்றைக்கும் தகவல் தொழில் நுட்ப உலகம் இன்னோவேஷன் வித்தகர்களின் கைகளில் சிக்கிகிடக்கின்றது. வித்தியாசமாய், அனைவருக்கும் உபயோகமாய், புதுமையாய் ஒன்றை மென்பொருளறிவால் உருவாக்கினால் உலகமும் மெச்சுகின்றது பணமும் புரள்கின்றது. ஆயிரமாயிரம் உதாரணங்களை அடுக்கினாலும் இதோ ஒரு சமீபத்திய உதாரணம் Rmail.
தனது வலைபதிவின் RSS Feed-களை ஈமெயில்களாக பலருக்கும் அனுப்ப கனடாவை சேர்ந்த Randy Charles Morin (37) என்பவர் இரு வருடங்களுக்கு முன்பு சில சேவைகளை பயன்படுத்தி பார்த்தாராம்.ஒன்றும் உருப்படியாய் வேலை செய்வது போல் தெரியவில்லையாதலால் தானே ஒரு RSS to Email வெப் பக்கத்தை உருவாக்கத் தீர்மானித்தார்.இப்பக்கத்தில் உள்ள கட்டங்களில் உங்கள் விருப்ப RSS feed url-ஐயும் உங்கள் email id-ஐயும் கொடுத்தால் போதும். எப்போதெல்லாம் புதுப் பதிவு வருகின்றதோ அப்போதெல்லாம் அப்பதிவு ஈமெயிலாக உங்களுக்கு அனுப்பப்படும்.ரொம்ப சிம்பிள் கான்செப்ட்.இப்போது 50,000 பேர் இங்கு பயனர்கள், தினம் ஆயிரக்கணக்கான feed-கள் மெயில்களாக அனுப்பப்படுகின்றன.NBC என்ன நினைத்ததோ தெரியவில்லை.ஏறக்குறைய 150,000 டாலர்கள் கொடுத்து இந்த தளத்தை ராண்டியிடமிருந்து வாங்கிவிட்டது.யார் யாருக்கு என்ன பிடிக்குமென இத்தள டேட்டாபேஸிலிருந்து எளிதாய் கணிக்கலாமென NBC-க்கு தெரியும்.
இன்னோவேஷன் சோறு போடும் என்பது இன்னொரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.நம் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் இறுதியாண்டு புராஜெக்ட்களுக்கு கடந்த வருடத்திய புராஜெக்ட்களிலிருந்து கட் அண்ட் பேஸ்ட் செய்வதை விட்டு விட்டு இதுமாதிரி என்னமாய் யோசித்து புதுசுபுதுசாய் படைத்தால் நலமாயிருக்கும்.
Posted by
PKP
at
5/17/2007 02:26:00 PM
0
comments
Wednesday, May 09, 2007
வியாபாரி
இரண்டாம் இடம் அவ்வளவாய் போற்றப்படுவதில்லை. ஆம்ஸ்ட்ராங்கை பற்றி பேசுவோர் ஆல்டிரிங்கை பற்றி பேசுவதில்லை, ஆஸ்திரேலியா பற்றி பேசுவோர் இலங்கை பற்றி பேசுவதில்லை. அது போல் தான் பில்கேட்ஸ் பற்றி நன்கு தெரிந்த உலகம் வாரன் பப்பே (Warren Buffet) பற்றி அவ்வளவாய் தெரிந்திருப்பதில்லை.உலகின் இரண்டாம் பெரும் பணக்காரர். மைக்ரோசாப்ட் போல் பிரபல பிராண்ட் ஒன்றும் அவரிடம் இல்லை.Berkshire Hathaway என்ற கம்பெனி பற்றி எத்தனை பேர் கேள்வி பட்டிருக்கிறோம்.11 வயதில் ஷேர் மார்கெட்டில் பங்குகள் வாங்க தொடங்கினாராம். இப்போது அவர் சொத்து மதிப்பு 52 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.அட ரொம்ப லேட்டா தொடங்கிவிட்டோம்பா என்று பீல் வேற பண்ணுக்கிறாராம்.
இவர் கீழ் 63 கம்பெனிகள் உள்ளனவாம். வருடத்துக்கு ஒரு ஈமெயில் அதன் CEO களுக்கு அனுப்பப்படும்.மற்ற படி சராசரியான ரெகுலர் மீட்டிங்,மெயில் சமாசாரம் எல்லாம் கிடையாது.
அவரின் CEO களுக்கான இரட்டை கட்டளை
Rule number 1: Do not lose any of your share holder's money.
Rule number 2: Do not forget rule number 1.
அவ்ளோதான்.
அவரவர் இஷ்டம் போல் வேலை செய்யவிட்டு பணம் பண்ணிகொண்டிருக்கிறார்.எது உனக்கு பிடிக்கிறதோ அதையே தொடர்ந்து செய்.ஒரு நாள் வெல்வாய் என்பதே இவர் தாரக மந்திரம். ஆனாலும் ஏதோ ஒரு மாஜிக் இவரிடம் இருப்பதாக எல்லாரும் நம்புகிறார்கள்.தொடுவதெல்லாம் பொன்னானால் பின்னே...
வணிக உலகின் ஐன்ஸ்டீன் என்று எல்லோரும் பேசுகின்றனர்.
ஆனால் அவரிடம் எந்த பந்தாவும் இருப்பதாக தெரியவில்லை. பாதுகாப்பு வளையமின்றி, பெருங்குடிகள் சூழலின்றி,வழக்கம்போல் டீ ஷாப் போய்..டிவி பார்த்து காலம் போகின்றது.சமீபத்தில் 31பில்லியன் டாலர்களை சமூக பணிகளுக்கு வழங்கியிருகிறாராம். உங்களுக்கு தெரிந்தபடி வின்னர் பில்கேட்ஸ் ரன்னர் வாரன் பப்பேடின் பாதைகள் வேறு வேறு.பேச ஒன்று மில்லை என்ற சலிப்புடன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பில்கேட்ஸ் வாரனை சந்திக்க அரை மணி நேரம் ஒதுக்கினாராம்.அச்சந்திப்பு 10 மணி நேரமாக நீண்டு போனதாம். அன்றிலிருந்து பில்கேட்ஸ் அவர் ரசிகராய் போனார்.இளசுகளுக்கு வாரன் சொல்வதெல்லாம் "Stay away from credit cards and invest in yourself"
Posted by
PKP
at
5/09/2007 11:19:00 AM
0
comments
Monday, May 07, 2007
பண டியூப்
இணையம் வழி பணம் பண்ண ஆயிரம் ஆயிரம் வழிகளை யோசித்து யோசித்து உருவாக்கி கொண்டேயிருக்கின்றார்கள்.யூடியூப் (Youtube) எனும் வீடியோக்களை வழங்கும் தளம் பற்றி இணைய உலகில் தெரியாதோர் இருக்கமுடியாது.அதை அப்படியே ஈ அடிச்சான் காப்பியாக இங்கே ஒரு சுவாசரஸ்ய தளம் உருவாக்கி இருக்கிறார்கள்.அது மணிடியூப்.காம் (Moneytube.com).இதில் அங்கம் வகிப்போர் பணம் பண்ணலாமாம். எப்படி?.இதில் மெம்பராகி பின், பிற வீடியோ தளங்களிலுள்ள (Like YouTube™, Google Videos™, Break™ etc) சூடான வீடியோக்களுக்கு சுட்டி கொடுக்க வேண்டும்.அந்த சுட்டி வழி வரும் டாலர்கள் வருவாயில் ஒரு குறிப்பிட்ட பகுதி உங்களுக்கு பகுத்து வழங்கப்படுமாம்.இன்றைய நிலையில் User Earnings : $758.12 என்கிறது இத்தளம்.இது பற்றி மேலும் அறிய கீழே சொடுக்குங்கள்.
http://www.moneytube.com/?do=faq இன்னொரு தளம் metacafe.com. இத்தளத்தில் நீங்கள் ஏற்றும் வீடியோ 20,000 தடவை பார்வையிடப்பட்டால் $100 கிடைக்கும்.2 மில்லியன் தடவை பார்வையிடப்பட்டால் $10,000 கிடைக்கும்.
இப்படி Reel Stunts என்பவர் இதுவரை அதிகபடசமாக $26,757 சம்பாதித்துள்ளாராம்.
அடப்போங்கடா பணம் என்னடா பணம் என்கின்றீர்களா?
Posted by
PKP
at
5/07/2007 04:01:00 PM
0
comments
Labels: Money
Tuesday, December 19, 2006
சூப்பர் ஹிட் வலைப்பூக்கு வந்த சிக்கல்
உலகின் சூப்பர் ஹிட் வலைப்பூக்களில் (Blog) ஒன்று பெரேஸ் கில்டன் வலைப்பூ.மரியோ லாவன்டிரா (Mario Lavandeira),எனும் இந்த 28 வயது இளைஞரின் இணைய வலைப்பூக்கு படிக்க ஒரு நாளில் வருவோரின் எண்ணிக்கை என்ன தெரியுமா?. 30 லட்சம்.உலக புகழ்பெற்ற ஆங்கில திரை உலகமாகிய ஹாலிவுட் பிரபலங்கள் பற்றிய கிசுகிசுக்கள் மற்றும் சர்ச்சைக்கிடையான படங்களை
வெளியிட்டே இந்த பிளாகு சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.
இந்த வலைப்பூ முழுக்க முழக்க அவராலேயே எழுதப்படுகிறதாம்.தினமும் சராசரியாய் 25 பதிவுகள் வேறு.ஆனால் ஆள் நன்றாக காசு பண்ணிக்கொண்டிருக்கிறார்.150x200 Pixel விளம்பரம் ஒன்று இவர் வலைப்பூவில் ஒரு வாரம் ஓட விட ஏறக்குறைய 4 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும்.சராசரியாய் தினமும் 12 லட்ச ரூபாய் பண்ணுவது போல் தெரிகின்றது.இதுவரை மொத்தம் 7000 பதிவுகள் இட்டுள்ளாராம்.அதில் சுமார் ஐந்து லட்சம் பின்னூட்டங்கள். மூச்சுவாங்குகிறது.இத்தனைக்கும் இவருக்கென்று ஒரு நிரூபர் கூட கிடையாதாம்.
இப்போதோ அவர் இன்னொரு காப்பிரைட் சிக்கலில் மாட்டி இன்னும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறார்.
Posted by
PKP
at
12/19/2006 09:18:00 AM
3
comments
Saturday, December 16, 2006
3 மில்லியன் டாலருக்கு விலைபோன வோட்கா
ரஷ்யாவைச் சேர்ந்த Russian Standard என்னும் கம்பனி 3 மில்லியன் டாலர் விலைகொடுத்து வோட்கா.காம் (Vodka.com) எனும் டொமைன் பெயரை (வெப்சைட் பெயர்) விலைக்கு வாங்கியுள்ளது.இதன் மூலம் இந்நிறுவனம் இன்னும் குடியானவர்கள் சந்தையில் முன்னுக்கு வரலாம் என் நம்புகிறதாம்.
இம்பீரியா (Imperia) என்னும் பெயரில் அமெரிக்காவில் நுழைந்துள்ள இந்நிறுவன வோட்காவின் பார்முலாவை கண்டுபிடித்தவர் வேதிய தனிம வரிசை அட்டவணையை கண்டுபிடித்த விஞ்ஞானி Dimitri Mendeleev என்கிறார்கள்.இந்நிறுவனம் தான் ரஷ்யாவின் இரண்டாம் மிகப்பெரிய தனியார் வங்கியான Russian Standard Bank-க்கு சொந்தகாரர்கள்.
டொமைன் பெயர் வணிக உலகில் இதுபோல அதிக விலைக்கு டொமைன் பெயர்கள் விலைபோவது ஒன்றும் புதிதல்ல.மே மாதம் diamond.com 7.5 மில்லியன் டாலருக்கு Ice.com-மிடம் விலைபோனது ,1999-ல் Business.com 7.5 மில்லியன் டாலருக்கு விலைபோனது.இவ்வருட தொடக்கத்தில் Sex.com 12 மில்லியன் டாலருக்கு Escom LLC எனும் கம்பெனியிடம் விலைபோனது.இந்த டொமைன் பெயர்கள் எல்லாம் காலப்போக்கில் அவ்வளவு காசையும் அவர்களுக்கு திரும்ப அளிப்பதோடு அவற்றை விஞ்சவும் செய்கிறது.
Vodka.com-மை கோட்டை விட்ட பிற பிரபல வோட்கா தயாரிப்பாளர்கள்:
Fortune Brands, Inc-ன் Absolut (Sweden)
Diageo plc-ன் Smirnoff (Russia)
நம்மவர் ஒருவரின் டொமைன் கதையை இங்கு படியுங்கள்
Posted by
PKP
at
12/16/2006 12:06:00 AM
0
comments
Labels: Money
Wednesday, September 13, 2006
பிக்ஸல் மில்லியனர்கள் - வீட்டிலிருந்தபடியே பணம்
வீட்டிலிருந்த படியே பணம் பண்ண முடியுமா? முடியும் என எனது முந்தைய ஈபேமில்லியனர் பதிவில் சொல்லியிருந்தேன்.இப்போது எப்படி இன்னொரு வழியாய் வீட்டிலிருந்த படியே பணம் பண்ண முடியும் என பார்க்கலாம். இன்னோவேட்டிவான சிந்தனை.அதாவது வித்தியாசமாய் யோசித்து செயலாற்றி இணையத்தில் பணம் பண்ணலாம்.அதில் ஒரு முறை தான் பிக்ஸல் (Pixel) வழி மில்லியனர்கள்.ஒரு இணையத்தை உருவாக்கி அதன் ஒவ்வொரு பிக்சலையும் ரியல்எஸ்டேட் போல Pixel-போட்டு விலைக்கு விடுவது.வாடிக்கையாளர்கள் தங்களது விளம்பரங்களையிட இப்பிக்ஸ்ல்களை போட்டியிட்டு வாங்குவர்.இது தான் அடிப்படை சூத்திரம்.இச்சூத்திரத்துக்கு சொந்தகாரர் Alex Tew, Wiltshire, England.உதாரணத்துக்கு மிக வெற்றிகரமாக இயங்கிய http://www.milliondollarhomepage.com/ என்ற தளத்தை பார்வையிடுங்கள்.ஒரு பிக்ஸல் கூட மிச்சம் இல்லை.அனைத்து பிக்ஸல்களும் விற்று தீர்ந்து விட்டன.இது போல இணையத்தில் அநேக பிக்ஸல் விற்கும் தளங்கள் உள்ளன.புகழ் பெற்ற ஒரு சில தள உரிமையாளர்கள் பணம் பண்ணுகிறார்கள்.இங்கே பாருங்கள் நம்மூர் இந்திய பெண்மணி ஒருவர் குரோர்பதிபேஜ் http://www.crorepatipage.com/ என கலக்கிக்கொண்டிருக்கிறார்.சோ,சுருக்க கூறின் புதிய ஐடியாக்களை (அட்லீஸ்ட் காப்பி அடித்தாலும் பரவாயில்லை) உடனடியாய் நடைமுறைபடுத்தி அதை முறையாய் விளம்பரப்படுத்தினால் இணையம் வழி பணம் அச்சிடலாம்.
Make million money from home by web pixels
Posted by
PKP
at
9/13/2006 04:23:00 PM
0
comments
Labels: Money, Pictures, Software, Tamil Lyrics
Tuesday, August 29, 2006
ஈபே மில்லியனர்கள்
வீட்டிலிருந்த படியே பணம் சம்பாதிக்க முடியுமா?.முடியும் என்கிறது இன்றைய தொழில் நுட்பம்.ஆன்லைனில் உங்களிடம் உள்ள பொருட்களை ஏலம் இட்டு அல்லது விற்று பணம் ஈட்ட வழி இருக்கிறது என்கிறார்கள் இந்த ஈபேயர்கள் - (ebayers).வீட்டிலுள்ள உங்களுக்கு தேவையில்லாத பொருட்களை பிறர்க்கு விற்கலாம் அல்லது குறைந்த விலையில் மொத்த விற்பனையாளர்களிடமிருந்து பொருட்களை வாங்கி அதை
அதிக விலைக்கு பிறர்க்கு விற்கலாம்.கோடீஸ்வரர் ஆகாவிட்டாலும் குறைந்தது அநேகர் பாக்கெட் மணிக்கான அளவாவது காசு ஈபேயில் (ebay) பண்ணிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.அதற்கு நாம் பண்ண வேண்டியது என்ன?
ஈபேயில் ஒரு இலவச கணக்கை ஆரம்பிக்க வேண்டும்.கூடவே பேபால் (paypal.com) அல்லது பைசாபேயில் (paisapay) ஒரு இலவச கணக்கையும் ஆரம்பிக்க வேண்டும்.என்ன விற்க போகிறீர்களோ அதை இருப்பில் வைத்துக்கொண்டு அதை ஈபேயில் விளம்பரம் பண்ண
வேண்டியது தான்.தண்ணீரை கலக்கி பார்க்க முதலாவது எதாவது ஒரு பொருளை ஈபேயில் வாங்கிபாருங்கள்.அப்புறமாய் விற்க அநேக தந்திரங்கள் பிடிகிடைக்கும்.அமெரிக்க வரி ஆசாமி IRS -ன் கண்கள் இப்போது இந்த ஈபேயர் மேலும் விழுந்திருக்கிறதென்றால் பார்த்து கொள்ளுங்களேன்.
http://money.cnn.com/2006/08/23/pf/taxes/online_taxes/index.htm
உலகளாவிய ஈபே தளம் (www.ebay.com).
இந்திய ஈபே தளம் (www.ebay.in). அதாங்க முன்னாள் (www.baazee.com
).
சில ஈபே மில்லியனர்கள் எப்படி கலக்கிக்கொண்டிருக்கிறார்கள் என பாருங்கள் இங்கே.
http://www.entrepreneur.com/slideshows/ebay
http://www.entrepreneur.com/article/0,4621,327585,00.html
(www.ebay.com).
Posted by
PKP
at
8/29/2006 03:36:00 PM
0
comments
Labels: Money, Pictures, Software, Tamil Lyrics