உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, March 31, 2011

எல்லாமே அறிந்தவன்

து நாள் வரை இணையத்தில் எதையாவது தேட கூகிளை மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்த கோபால் இப்போதெல்லாம் பிங்குக்கும், யாகூக்குமாக தாவிக் கொண்டிருக்கின்றான். இரண்டிலும் சிக்காத பட்சத்தில் மட்டுமே கடைசி முயற்சியாக கூகுளுக்கு செல்வதாக கேள்விப் பட்டேன். அதற்கு அவன் சொல்கின்ற காரணம் சமீபத்தில் கூகிளின் CEO Eric Schmidt பேட்டி ஒன்றில் பார்வையாளர்களைப் பார்த்து சொன்ன ஒரு கூற்று "We Know Where You Are. We Know Where You've Been. We Can More Or Less Know What You're Thinking About."

அந்தாள் சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை.ஜிமெயிலிலோ அல்லது ஐகூகிளிலோ நீங்கள் லாகின் செய்ததும் ஐபி விலாசம் வைத்து கூகிளுக்கு நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள் என்ற தகவல் தெரிந்து விடுகின்றது. உங்கள் ஜிமெயில் மற்றும் Gtalk தொடர்புகள் வழி உங்கள் நண்பர்கள் யார், யாரிடம் அடிக்கடி தொடர்புகொள்கின்றீர்கள் என்ன விசயமாக போன்ற விசயங்கள் கூகிளுக்கு தெரிந்து விடும். தேடல்களில் நீங்கள் டைப்பும் கீ வார்த்தைகள் மூலம் உங்கள் ஆர்வங்களும் கூகிளுக்கு தெரிந்து விடுகின்றது.கூகிள் மேப் பயன் படுத்தி போக வர டைரக்சன்கள் நாம் கேட்கும் போது உங்கள் இருப்பிடமும், எங்கே செல்ல விழைகின்றோம் என்ற தகவலும் கூகிளுக்கு தெரிந்து விடுகின்றது.பிறரிடம் நாம் கேட்க தயங்குவதைக் கூட கூகிளிடம் வெட்கமில்லாமல் தைரியமாக கேட்கின்றோம். சிக்கன் பிரியாணி செய்து பார்க்கலாமாவென யோசித்து அதை மனைவியிடம் சொல்லுமுன்பே கூகிளிடம் நீங்கள் சொல்லிவிடுகின்றீர்கள்.How to make chicken biryani?.

உண்மையில் கூகிளால் உங்களை பற்றி ஓரளவு ஆருடம் கூட சொல்ல முடியும். உங்கள் குணங்களையும் ஆர்வங்களையும் செயல்பாடுகளையும் பட்டியலிட்டு இவர் இப்படிபட்ட நபராகத்தான் இருக்க முடியும் என ஒரு ரிப்போர்ட்டே கொடுக்க முடியும்.பெண்ணை கட்டிக் கொடுக்கப் போகின்றவர் மாப்பிளையின் குணநலன்கள் செயல்பாடுகள் பற்றி எதிர்காலத்தில் கூகிளிடமே விசாரிக்கலாம். இதை தான் எரிக் சிமிட் அப்படிச் சொன்னார். இதனால் கோபம் பொத்துக்கொண்ட கோபால் கூகிளை விட்டுவிட்டான். இதனால் யாருக்கு நஷ்டமோ தெரியவில்லை.

”டிஸ்பிளே போர்ட்” ஒரு அறிமுகம்:
சில சமயம் நம் கணிணியில் அல்லது மடிக்கணிணியில் இருக்கும் வினோதமான புதியவித போர்ட்டுகள் எதற்காக இருக்கின்றனவென்றே நமக்கு தெரிவதில்லை. அப்படி புதிதாக சமீப காலங்களில் உங்கள் கண்களில் சிக்கும் ஒரு போர்ட்டு தான் ”டிஸ்பிளே போர்ட்”. அது பற்றிய ஒரு சிறிய அறிமுகம் இங்கே.
படத்தில் நீங்கள் காணும் இந்த புதிய வகை ”டிஸ்பிளே போர்ட்டுகள்” சீக்கிரத்தில் VGA,DVI மற்றும் HDMI போர்ட்டுகளை பெவிலியனுக்கு அனுப்பிவிடுமாம்.மிக அதிக ரெசல்யூசன் மானிட்டர்களுக்கு இந்த போர்ட்டு வகைகள் நல்லதாம். HDMI போல இது வீடியோவோடு ஆடியோவையும் கடத்துகின்றது. அது போல ஒரு நடுபெட்டி அமைத்து பல எண்ணிக்கையில் மானிட்டர்களை ஒரு கணிணியில் இணைக்கலாமாம். பல வீடியோ கார்டுகள் தேவைப்படாது. HDMI போல இது பாயிண்ட் டூ பாயிண்ட்டாக வேலை செய்யாமல் பாக்கெட் சுவிட்சிங் முறையில் இது வேலை செய்வது இங்கு குறிப்பிடத் தக்கது. ராயல்டி இல்லாமை, விசேச கண்ட்ரோலர் தேவை இல்லாமை இவ்வகை ஹார்டுவேர்களின் விலையை குறைக்கின்றன. ஆப்பிள் கணிணிகள் இப்போதெல்லாம் அதன் விசேச mini DisplayPort-களுடன் வருகின்றன.
DisplayPort vs HDMI port comparison chart

Caught on Camera
செய்த தவறை ஒத்துக்கொள்ளாமல் மாறாக தவறை சுட்டிக்காட்டிய தொண்டனை கும்மாங்குத்து குத்தும் தலைவனெல்லாம் என்ன தலைவன்?
கேப்டனின் நிஜ சண்டைக் காட்சி.

மேலே ஒளிப்படம் தெரியவில்லையா?
யூடியூப் வீடியோவை பார்க்க இங்கே சொடுக்கவும்
http://www.youtube.com/watch?v=u9TS5xUHIRk
On the Lighter Side


Email PostDownload this post as PDF

Wednesday, March 16, 2011

அடுத்தது கலிபோர்னியா?

சிபிக் பெருங்கடலை சூழ்ந்துள்ள அந்த குதிரைக் குளம்பு வடிவ பெரும் பகுதியை ”பசிபிக் ரிங் ஆப் பயர்” (Pacific Ring of Fire) என்கின்றார்கள். நிலநடுக்க அபாயங்களும் எரிமலை அபாயங்களும் நிறைந்த கடல் எல்லைப்பகுதி அது. உலகின் 75 சதவீத எரிமலைகள் இப்பகுதியில் தான் அமைந்துள்ளனவென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த நெருப்பு வட்டத்தின் தென் கிழக்கு பகுதியில் சிலியும் தென் மேற்கு பகுதியில் நியூசிலாந்தும் வட மேற்கு பகுதியில் ஜப்பானும் அமைந்துள்ளது. இந்த மூன்று மூலைகளிலும் சமீப நாட்களில் தான் மாபெரும் பூகம்பங்கள் நிகழ்ந்தன. மிச்சமிருக்கும் நான்காவது மூலையான வட கிழக்கு பகுதியில் கலிபோர்னியா உள்ளது. இங்கு பேரழிவு தரும் பூமிஅதிர்ச்சி வருமா என்பது கேள்வி அல்ல, எப்போது வரும் என்பது தான் நிஜக் கேள்வி என்கின்றார்கள்.

டுத்தது சூப்பர் மூன். சில சமயங்களில் நிலவுப் பெண்னானவள் ஏதோ ஆசையில் பூமிக்கு மிக அருகில் வருவதுண்டு. இந்த முறை கிட்டமாக 221,567 மைல்கள் வரைக்கும் வருகின்றாள். இதை சூப்பர் மூன் என்கின்றார்கள். 1955,1974,1992 மற்றும் 2005-லும் இப்படி நெருங்கி வந்திருக்கின்றாள். வந்த போதெல்லாம் பூமியில் பேரழிவு தான். 2005 சுப்பர் மூனுக்கு இருவார முன்பு இந்தோனேசிய பூகம்பமும் அதைத் தொடர்ந்து மாபெரும் சுனாமியும் ஆசியாவை விழுங்கியது. இந்த மாதம் 19-ம் தேதி சூப்பர் மூன் வரவிருக்க இரு வாரங்களுக்கு முன் ஜப்பானின் பாதி செத்திருக்கின்றது. ஆனால் சூப்பர் மூனுக்கும்-பூமிஅதிர்ச்சிகளுக்கும் சம்பந்தமில்லை என விஞ்ஞானிகள் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். சந்திரனின் நகர்வுக்கேற்ப கடல் மட்டங்கள் ஏறி இறங்குவது சகஜம். இதை ஓதங்கள் அதாவது tides என்பார்கள். இதற்கு இந்தியாவில் அலிபா கடற்கோட்டை நீரில் மூழ்கி எழுவது அப்பட்ட சாட்சி.(படம்:Alibag, Maharashtra).டுத்தது கதிர் வீச்சு பற்றி கொஞசம். ஜப்பானில் கசியும் கதிர் வீச்சு எந்நேரமும் கலிபோர்னியா கடற்கரை பக்கம் வந்து சேரலாம் என தகவல் கசிய அமெரிக்க மேற்கு கரை பகுதிகளில் ”பொட்டாசியம் அயோடைடு” பார்மசி ஸ்டோர்களில் விற்று தீர்ந்திருக்கின்றது. பீதியில் பெட்ரோல் விலை என்ன, யாரும் சீண்டாத பொட்டாசியம் அயோடைடுக்கே இப்போது தட்டுப்பாடு. கதிர்வீச்சை சீவெர்ட்ஸ் (Sieverts) என்ற அலகினால் அளக்கின்றனர்.அதாவது mSv-மில்லிசீவெர்ட்ஸ் (Milli sieverts). வருடத்துக்கு நம்மால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவு கதிர்வீச்சு 3mSv/year. ஒரு முறை CT ஸ்கேன் செய்தாலே 3mSv உங்களுக்கு வந்து விடும். எக்ஸ்ரேயின் போது கதிர்வீச்சு கொஞ்சம் கம்மி 0.1mSv. ஆனால் ஜப்பானில் இப்போது வெளியாகும் அளவு 400mSv/hour. கொஞ்சம் டேஞ்சர் தான். மண்ணிலிருந்து நாம் பிரித்தெடுத்த மாணிக்கங்களே - சீசியம், அயோடின், ஸ்ட்ரோண்டியம், புளூட்டோனியம்-கள் விஷமாகின்றன.

FLAC எனப்படும் Free Lossless Audio Codec பற்றி இன்னும் தெரியாதவர்களுக்கு ஒரு அறிமுகம். MP3 போல இதுவும் ஒரு வகை ஒலி கோப்பு. MP3 கோப்புக்களை அதிகமாய் சுருக்கம் செய்வதால் 5நிமிட பாடலின் அளவு 5MB அளவாகவும் ஆடியோ தரம் சுமாராகவும் இருக்கும். ஆனால் பிளாக் எனப்படும் இந்த ஆடியோ இசை கோப்புகள் கம்ப்ரஸ் செய்யப்படாததால் இந்த கோப்புகளில் முழ இசைநாதங்களும் அடங்கியிருக்கும். விளைவு உச்ச குவாலிட்டி இன்னிசை உங்களுக்கு கிடைக்கும். ஆனால் கோப்புகளின் அளவு மட்டும் 35MB அல்லது 40MB என்றாகிவிடும். கீழ்கண்ட சுட்டியில் ”புதிய மனிதா”-வை flac வடிவில் இறக்கம் செய்து வித்தியாசம் தெரிகின்றதாவென அனுபவித்துப் பாருங்கள்.VLC அல்லது Winamp பயன்படுத்தவும்.
http://www.tamilmini.net/downloads/

கேள்வி: தமிழ்நாட்டில் திருமண சான்றிதழ் (Marriage Certificate) கேட்டு ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாமென கேள்விப்பட்டேனே அது உண்மையா?
பதில்: உண்மைதான்.கீழ்கண்ட சுட்டியில் உங்கள் திருமணத்தை தேடி பின் விண்ணப்பம் செய்யலாம். 2002 முதலான திருமணங்கள் மட்டுமே பார்வைக்கு கிடைக்கின்றன.

http://www.tnreginet.net/english/smar.asp

On the Lighter Side


Email PostDownload this post as PDF

Tuesday, March 08, 2011

21 மே 2011

ந்து வருடத்துக்கொரு முறை ஆட்சி மாறுகின்றதோ இல்லையோ, நான்கு வருடத்துக்கொரு முறை கிரிக்கெட் ஜூரம் வருகின்றதோ இல்லையோ "உலகம் அழியப்போகுது” புரளி மட்டும் தவறாமல் வருடந்தோறும் வந்து விடுகின்றது .அதற்கு ஏற்றால் போல் மனிதன் மட்டுமல்ல இயற்கையும் சீறி சில சமயங்களில் அச்செய்திகளை ஒத்துக்கொள்வது போல தலையாட்டி வைக்கின்றது.2012 டிசம்பர் 21-வரைக்கும் தாங்காது இந்த உலகம், இரண்டு மாதத்திலேயே உலகத்தின் அழிவு தொடங்குகின்றது எனச் சொல்லி அமெரிக்காவில் ஊர் ஊராக பிரச்சாரம் செய்து வருகின்றனர் பேமிலி ரேடியோ எனும் ஒரு கிறிஸ்தவ குழுவினர்.இவர்களின் தமிழ் இணைய தளம் இங்கே. http://www.familyradio.org in Tamil

கிறிஸ்தவத்தில் ரேப்சர் என்றொரு நம்பிக்கை உள்ளது. இதன் படி உலகத்தின் இறுதிக் காலத்தில் நடைபெறவிருக்கும் அழிவுகள் தொடங்கும் முன்னரே யேசு நாதர் அவரது சீடர்களை மேலுலகத்துக்கு எடுத்துக்கொள்வார் என்பது நம்பிக்கை. இந்த சம்பவத்தை ரேப்சர் (Rapture) என்கின்றார்கள். இச்சம்பவம் மே21-ம் தியதி சம்பவிக்கும் என 89 வயதான பேமிலி ரேடியோ நிறுவனர் கேம்பிங் கணக்கிட்டுள்ளாராம். இதனால் அன்றைய தினம் 20 கோடிபேர் அதாவது உலக மக்கள்தொகையின் மூன்று சதம் பேர் பரலோகத்திற்குள்ளாக எடுத்துக் கொள்ளப்படுவார்கள் என்பது இவரது கணிப்பு. இதை நம்பி அநேக ஜனங்கள் வீடு தோப்பு துரவு வேலைகளை விட்டு விட்டு இந்த செய்தியை பரப்ப இவர் பின்னால் போய் கொண்டிருக்கின்றனர். இதே கேம்பிங் தாத்தா 1994 செப்டம்பர் 6-ல் இதே மாதிரி உலகம் அழியப்போகின்றது என அறிவித்து பின் தன் கணக்கில் ஏதோ தவறு நேர்ந்துவிட்டதாக அறிவித்தவர்.இப்போது மே21-ல் ரேப்சர் நடந்து முடிய பின் ஐந்து மாதம் கழித்து அதாவது அக்டோபர் 21-ல் அபிசியலாக உலகம் அழிந்துவிடும் என அறுதியிட்டு கூறிவருகின்றார். சி.என்.என் -னில் இந்த செய்தி வெளியாக இதற்கு வந்த பின்னூட்டங்கள் 10,000. சரியான ஹாட் டாப்பிக் ஆனது. புலி வருது புலி வருது கதையாக ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் உண்மையிலேயே சிங்கம் வந்துவிடப்போகின்றது.

கிரிக்கெட்டுக்கு ஐபோனில் ICC Cricket World Cup 2011 – Official app-ம் டிவியில் டிஷ் நெட்வொர்க்யிருந்தால் 583 வில்லோ சேனலும் (US-ல் சன் டிவியிருந்தால் கூடவே வருகின்றது) ஆன்லைனில் http://www.extracover.net -ம் உதவுகின்றது.

கேள்வி Barakath: இணையதள நண்பர்களே ஓட்டு சீட்டில் நம் பெயர் இருக்கிறதா என்பதை அறிய ஏதோ இணையதளம் இருக்கிறதாமே please முகவரி தரவும்
பதில் Vijay:http://www.elections.tn.gov.in/eroll/

On the Lighter Side


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்