உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Friday, December 28, 2007

மின்சாரக் கனவு

முதலில் எங்கோ உருவாக்கப்பட்ட ஒலி அலைகளை கம்பியின்றி தொலை வானொலிகளுக்கு கடத்தி வெற்றி பெற்றார்கள். அதோடு ஒளியையும் சேர்த்து கலந்து இனிதாய் ஒலியும் ஒளியுமாய் தொலைகாட்சிகளுக்கு பின் கடத்தினார்கள்.இப்படி வெற்றிகரமாய் வயர்லெஸ் வழி ஒலியையும் ஒளியையும் கடத்தியாயிற்று.

இப்படியே மின்சாரத்தையும் கம்பியின்றி கடத்த முடியுமா?

அப்படி கடத்த முடிந்தால் எத்தனை மாற்றங்கள் உலகில் உருவாகும்.யூகிக்க கூட முடியாத ஒன்று.

நெடுஞ்சாலைகளில் மைல்கணக்கில் வேகமாய் நம் கூடவே வரும் அந்த பருத்த மின்கம்பங்களும், கம்பிகளும் காணாமல் போய்விடும்.

பாக்கெட்டில் இருக்கும் செல்போன் தானாய் வயர்லெஸ்ஸாய் சார்ஜ் ஆகிவிடும்.EB-க்கு தனியாய் காசு கட்டலாம்.

மின்சார பேருந்துகள் ஓடிக்கொண்டே இருக்க வயர்லெஸ்ஸாய் அதற்கு கரண்ட் சப்ளை ஆகிக்கொண்டேயிருக்கும். இப்படி எல்லாமே மாறிப்போகும்.

இதெல்லாம் சாத்தியமா? சமீபத்திய ஆய்வுகள் சில இவை சாத்தியம் என்கின்றன. இதை Wireless Electricity Power Transfer என்கின்றார்கள். மைக்ரோவேவ் ஓவன் மாதிரி ஒர் அறையை இந்த மின்னலைகளால் நிறைத்து அந்த அறை முழுவதும் மின்சாரத்தை கம்பியின்றி கடத்த முயன்றிருக்கிறார்கள். கி.பி 3000-த்தில் உங்களிடமுள்ள மின்கருவிகள் எல்லாம் வயர்கள் தொல்லைகள் எதுவும் இன்றி தானாய் இயங்க உலகமே இவ்வலைகளால் நிறைந்திருக்கலாம். யாருக்குத் தெரியும்?

அட குடி தண்ணீரை கூட குழாயின்றி கடத்தலாம்ங்க. மேகம் டன் டன்னாய் வானில் தண்ணீரை குழாயின்றி கடத்த வில்லையா என்ன? :)

ஆனால் ஒன்று. அதுவரை மாறி மாறி குண்டு வைத்து தகர்த்து தன்னை தானே கொல்லும் மனித ஜன்மம் தான் இருக்குமோ என்னவோ தெரியவில்லை.

Ref 1 2"கடைசி பேட்டி" கிருட்டிண மூர்த்தியின் மர்மக்கதை புதினம் மென்புத்தகம் Mohan Krishnamoorthy "Kadaisi Paetti" Novel pdf Tamil e-book Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Monday, December 24, 2007

வயர்லெஸ் கீ போர்டு அபாயம்

வயர்லெஸ் கீ போர்டு, வயர்லெஸ் மவுஸ் என வைத்துக்கொளல் இப்போதெல்லாம் ஆடம்பர விஷயமல்ல. வீடுகளிலும் அலுவலகங்களிலும் இவை மிக சகஜமாகிவிட்டன.

அசோக்நகர் அப்பார்ட்மெண்ட் குடியிருப்பின் முதலாவது மாடியில் ஹாயாக அமர்ந்து கொண்டு வயர்லெஸ் கீ போர்டுவழி உங்கள் கணிணியில் ஏதோ டைப்புகின்றீர்கள் என வைத்துக்கொள்வோம். அது ஏதோ ஒரு பாங்கிங் சைட் பாஸ்வேர்டாக கூட இருக்கலாம். அதை அப்படியே என்ன டைப்புகின்றீர்கள் என இரண்டாவது மாடியில் குடியிருக்கும் "பத்தாவது படிக்கும் சுட்டி" தெரிந்து கொள்ளலாம். எப்படி?

வயர்லெஸ் கீ போர்டுகள் நீங்கள் தட்டும் எழுத்துக்களை அப்படியே டைப்ப டைப்ப அவற்றை ரேடியோ அலைகளாக மாற்றி கணிணிக்கு அனுப்பிக்கொண்டேயிருக்கும். மேல்மாடி சுட்டி ரொம்ப தொலைவில் இல்லையே. அவர்களுக்கும் அந்த ரேடியோ அலைகள் எட்டும். இந்தகால பள்ளிக்கூட படு சுட்டிகளுக்கு ஒரு வயர்லெஸ் ரிசீவரும்,எளிய டிகிரிப்டோ மென்பொருளும் கிடைத்தால் போதும். மொத்தமும் காலி. ஏன் அப்பேர்பட்ட Microsoft Wireless Optical Desktop 1000/2000 keyboard-கள் கூட இதற்கு விதிவிலக்கில்லையாம்.

அக்கம் பக்கம் யார் இருக்கானு தெரிஞ்சு வச்சிக்கிறது ஒரு விதத்தில் நல்லது தான்.

More about this hack Video Text


சுபாவின் தமிழ் நாவல் "காத்திருக்கிறேன்" மென்புத்தகம் Subha Tamil Novel Kaathirukirean e-book Download. Right click and Save.Download Subha Kaaththirukkiraen Novel


Email PostDownload this post as PDF

Wednesday, December 19, 2007

அம்பலம் ஏறும் அந்தரங்கங்கள்

டிஜிட்டல் உலகில் எல்லாமே செம ஸ்பீடு. டிஜிட்டலைஸ்ட் ஆகிய நடிகையின் கவர்ச்சி படமாகட்டும் அல்லது ரகசிய கசமுசா வீடியோவாகட்டும் அல்லது டிஜிட்டலைஸ்ட் ஆகிய ஒரு மென்புத்தகமாகட்டும் நொடிப்பொழுதில் உலகெங்கும் விஷ காய்ச்சல் போல் இணையம் வழி பரவிவிடும். என்னத்தான் பாதுகாப்பு முறைகள் கடைபிடித்தாலும் கலிபோர்னிய காட்டு தீ போல் இவை
பரவுகின்றன. உருவாக்குதல் தான் கடினம், காப்பி செய்ய சில நொடிப்பொழுதுகள் போதும். மில்லியன் டாலர்கள் செலவு செய்து ஆயிரக்கணக்கானோரின் உழைப்பில் வெளியாகும் வீடியோ கேம்கள், விலைமிக்க மின் பொருள்களின் கதையும் அதுதான்.

ஏதோ ஒரு விபரீத ஆசையில் யாருக்கும் தெரியாமல் சிட்டி ஹாலின் மதிப்புமிக்க மேயர் ஆசனத்தில் தன் மனைவியை துளி கூட துணியின்றி அவரை அமரவைத்து படம் எடுத்து தன் வீட்டு கணிணியில் வைத்திருந்தார் ஒரு பிரிட்டன் நகர மேயர். தன் வீட்டு பசங்க வீட்டில் ஒரு பார்ட்டி வைக்க வெளியூர் சென்றிருந்தார் மேயர். அவர் பிள்ளைகளின் நண்பர்கள் மேயர் வீட்டு கணிணியில் விளையாட தவறுதலாய் சிக்கியது அந்த படம். எவ்வளவு நேரமாகும்? ஒரே கிளிக்கில் உலகெங்கும் பறந்தது அந்த ஜோடியின் அந்தரங்கம்.

இப்படி படமாயும், வீடியோவாயும் மாட்டி நோந்து போனோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதில் புதிது இப்போது ஒலிவடிவம்.

நண்பரிடம், நன்கு தெரிந்தவரிடம், காதலரிடம் தானே பேசுகிறேன் என்ற நினைப்பில் அந்தரங்கமாய் ஏதேதோ கிளுகிளுப்பாய் பேச அப்பேச்சுக்கள் முழுவதும் எதிர்முனை நபரால் பதிவு செய்யப்பட்டு MP3 ஒலி வடிவில் எடுக்கப்பட்டு இணையத்தில் உலவ விடப்பட்டால் எப்படி இருக்கும்?. டிஜிட்டல் உலகில் இது போன்றவை எளிதாய் சாத்தியம். வெளிவரும் செல்போன்கள் அனைத்துமே இது போன்ற வாய்ஸ் ரெக்கார்டிங் கொண்டிருப்பது ஒரு பயமுறுத்தும் செய்தி. "நேரில் காதுள் பேசு. போனில் அதுவும் பேசாதே" என புதுசாய் சொற்றொடர் உருவாக்கவேண்டியுள்ளது.

அப்படியே எசகு பிசகாய் எதாவது ஆர்வக்கோளாரில் பேசினாலும் பேசும்போது கவனமாய் போனில் பேசவும். முக்கியமாய் "அது" போன்ற பேச்சுகளிடையே உங்கள் விலாசம், பெயர், மொபைல்நம்பர் போன்ற தகவல்களை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

இதை தெரிஞ்சு உசாராக ஒரு சாம்பிள் தேவையா என்ன?


"குரு பெயர்ச்சி பலன்கள்" தமிழில் மென்புத்தகம் Guru Peyarchi Tamil Astrology e-book Download. Right click and Save.http://static.scribd.com/docs/i21hm1qcgdm62.pdf

"சனி பெயர்ச்சி பலன்கள்" தமிழில் ஜோதிட மென்புத்தகம் Sani Peyarchi Tamil Jothidam e-book Download. Right click and Save.http://static.scribd.com/docs/2vaug4vsz1d7b.pdf


Email PostDownload this post as PDF

Tuesday, December 18, 2007

கைப்பேசியிலிருந்து கணிணிக்கு


ஒரு காலத்தில் கேமரா தயாரிப்பில் கொடிகட்டி பறந்த நிறுவனங்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டு இன்றைக்கு உலகில் அதிக அளவு கேமராக்களை தயாரித்து உலகில் உலவ
விட்டுக்கொண்டிருக்கிறது "கைப்பேசி நிறுவனம்" நோக்கியா. முன்பெல்லாம் சுற்றுலா செல்லும் போதும் முக்கிய நிகழ்வுகளிலும் மட்டுமே தேடப்படும் கேமராக்கள் இப்போது எல்லாருடைய கையிலும் எல்லா நிமிடமும் செல்போன் வடிவில். தெருவில் தான் கண்ட கண்கொளா காட்சியை பிறருக்கும் காட்ட படங்களை கிளிக்குகிறார்கள். வீடியோக்களை பிடிக்கின்றார்கள்.

பொக்கைவாயில் சிரிக்கும் உங்கள் மழலையில் அபூர்வ சிரிப்பு ஒன்றை மொபைல் போனில் கிளிக்கி படமாய் எடுத்து விட்டீர்கள் என வைத்துக்கொள்வோம். அதை உங்கள் செல்போனில் வால்பேப்பராயும் ஆக்கி விட்டீர்கள். அந்த அபூர்வ படத்தை மடிக்கணிணிக்கு கொண்டுவருவது எப்படி?

அவசரமாய் கொண்டு வர உங்கள் செல்போன் வழி இணையத்தில் நுழைந்து அப்படத்தை உங்கள் ஈமெயில் ஐடிக்கு மின்னஞ்சல் செய்யலாம் . அப்புறமாய் உங்கள் மடிக்கணிணியில் நுழைந்து மின்னஞ்சல் வழி இறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆனால் அடிக்கடி MP3 கோப்புகள், ரிங் டோன்கள், படங்கள், வீடியோக்கள் என இன்னும் பிற
கோப்புகளை செல்போன் டு கணிணி மற்றும் கணிணி டு செல்போன் பறிமாற்றம் செய்ய உங்களுக்கு தேவை கீழ்கண்ட மூன்றில் ஏதாவது ஒன்று.

1.Laptop comes with Bluetooth or
2.Laptop comes with Infrared (IrDA) or
3.USB Bluetooth or (படம்) ($10 க்குள் கிடைக்கிறது)
4.USB Infrared (IrDA) or (படம்)($10 க்குள் கிடைக்கிறது)
5.USB Data Cable (படம்)

மேலும் இதன் மூலம் உங்கள் செல்போனை மோடம் (Cellphone as modem) போல் பயன்படுத்தி எங்கிருந்து வேண்டுமானாலும் மடிக்கணிணி வழி இணையத்தில் நுழையலாம்.

இரு உபயோகமான மென்பொருள்கள்
If you use Bluetooth to connect Cellphone to Computer use this free software BlueSoleil to transfer files from/to mobiles phones.
Download Page
http://www.bluesoleil.com/download/

If you use USB Data Cable
floAt`s Mobile Agent- A free software to install on computer to manage Phonebook (both SIM and Phonememory), SMS, Profiles, and Files stored on the Mobile phone.
Home Page
http://fma.sourceforge.net/index2.htm

Download Page
http://sourceforge.net/project/showfiles.php?group_id=71167


எஸ்.ராமகிருஷ்ணனின் "அயல் சினிமா" மென்புத்தகம் S Rama Krishnan-Ayal Cinema Tamil pdf e-book Download. Right click and Save.Download Ayal Cinema


Email PostDownload this post as PDF

Thursday, December 13, 2007

அழிக்கப்பட்ட போட்டோக்கள் MP3 களை மீட்க

உங்கள் கணிணியின் C டிரைவிலும் D டிரைவிலும் சேமித்து வைக்கப்பட்டுள்ள விலைமதிப்பற்ற வீடியோ ஆடியோ கோப்புகள் , மென்புத்தகங்கள், குடும்பமாய் எடுத்துக்கொண்ட டிஜிட்டல் போட்டோ படங்கள் மற்றும் வீடியோக்கள் இவற்றையெல்லாம் அவ்வப்போது பேக்கப் (Backup) எடுத்து வைத்துக்கொள்ளல் ஒரு நல்ல பழக்கம். எப்போது ஹார்ட் டிரைவுகள் மூச்சைவிடும் எனத் தெரியாது. டிஜிட்டல் போட்டோக்களின் பெருக்கத்தால் காகித போட்டோ ஆல்பங்களின் பயன்பாடு குறைந்து வருகின்றன. அதனால் நொடிப்பொழுதில் மொத்தத்தையும் இழக்கும் வாய்ப்புகள் மிக அதிகம்.

எனவே அவ்வப்போது ஒரு DVD யில் அவற்றை எரித்து வைக்கலாம். அல்லது இப்போதெல்லாம் மிகக் குறைந்த விலையில் வரும் 500Gig, 1 Tera Usb based External Harddrive களில் அவ்வப்போது சேமித்து வைக்கலாம். (Western Digital -லின் My Book கொஞ்சம் கனமாய் தெரிகின்றது. LaCie யின் external hard drives ரொம்ப கியூட். ). அல்லது பல நிறுவனங்கள் வழங்கும் ஆன்லைன் ஸ்டோரேஜிலும் சேமித்து வைக்கலாம். போட்டோக்களுக்கு கூகிளின் பிக்காஸா ஆல்பம் மை பேவரைட். கூகிள் சீக்கிரத்தில் அறிமுகப்படுத்தவிருக்கும் கூகிள்டிரைவுக்காகவும் ஆர்வமாக வெயிட்டிங்.

தவறுதலாக கணிணி டிரைவுகளிலிருந்து அழிக்கப்பட்ட கோப்புகளை மீட்க வழிமுறைகளை ஏற்கனவே நான் "அழிக்கப்பட்ட கோப்புகளை மீட்க" என்ற பதிவில் கூறியிருந்தேன். ஆனால் டிஜிட்டல் கேமராவின் Memory Card-ல் இருந்த போட்டோவை தவறுதலாக அழித்தால் மீட்பது எப்படி? iPod போன்ற MP3 பிளயரிலிருந்து தவறுதலாக அழிக்கப்பட்ட கோப்புகளை மீட்பது எப்படி?

இதோ இங்கு ஒரு இலவச மென்பொருள். அதன் பெயர் Recuva .It does it all.

Product Home Page
http://www.recuva.com

குறித்து வைத்துக்கொள்ளுங்கள். எப்போதாவது யாருக்காவது உதவலாம்.

It recovers deleted digital photos from Camera memory cards and MP3 files from iPod music player.


"சிவாஜிராவ் டு சிவாஜி" நடிகர் ரஜினிகாந்த் பற்றிய் மென்புத்தகம் Rajini Kanth Sivajirao to Sivaji Tamil e-book Download. Right click and Save.http://static.scribd.com/docs/99d6j2f7kc5af.pdf


Email PostDownload this post as PDF

Tuesday, December 11, 2007

குக்கீஸ்-ன் இன்னொரு அவதாரம்

ஏதோ ஒரு தேவைக்காக ஒரு
இணைய தளம் போகின்றீர்கள் என வைத்துக் கொள்வோம். சில வாரங்கள் கழித்து மீண்டும் அதே இணைய தளம் போனால் அது "ஹாய் " என உங்கள் பெயர் சொல்லி கூப்பிட்டு வரவேற்பதோடு உங்களுக்கு பிடித்தமான சமாசாரங்களையும் பட்டியலிட்டு காட்டும். அமேசான்.காம் போன்ற தளங்கள் போனவர்கள் மிக தெளிவாகவே இதை உணரலாம். இதற்க்கு காரணம் பிரவுஸர் குக்கீஸ் (Browser Cookies). முதல் தடவை அத்தளம் போகும் போது அது உங்களை குறித்த முக்கிய தகவல்களை உங்கள் கணிணியில் ஒரு டெக்ஸ்ட் கோப்பில் இட்டுச் செல்லும். எனவே மறு முறை நீங்கள் அதே தளம்
செல்லும் போது அது உங்களைப் பற்றி தெளிவாக சொல்லுகின்றது.
பயனுள்ள தொழில்நுட்பமாக இது தெரிந்தாலும் சிலர் இதை தவறாக பயன் படுத்துவதால் பெரும்பாலோர் இந்த குக்கீகளை தாங்களாகவோ அல்லது சில பிரைவேஸி மென்பொருள் கொண்டோ அழித்து விடுவது உண்டு.

இதற்கு டிமிக்கி கொடுக்க வந்துள்ளது ப்ளாஷ் குக்கீஸ் (Flash cookies-Local Shared Object (LSO)). சாதாரண பிரவுஸர் குக்கீ போலவே இது செயல் பட்டாலும் இந்த பிளாஷ் குக்கீகள் சில விஷயங்களில் சிறிது வேறுபட்டவை.

முதலாவது உங்கள் கணிணியிலுள்ள அனைத்து பிரவுசர்களுக்கும் (Like Internet Exploere and Firefox in the same computer) ஒரே ஒரு குக்கீ மட்டுமே இருக்கும்.

இரண்டாவது இக்குக்கீகளை பராமரிக்க ஆன்லைனில் செல்ல வேண்டும். பிரவுசர் செட்டிங்ஸ் உதவாது. இக்குக்கீகளை பிரவுசர் செட்டிங்ஸ் வழி அழிக்கவும் முடியாது. இதற்காகவே macromedia.com தளம் Adobe Flash Player settings Manager-யை ஆன்லைனில் வைத்துள்ளது.
View Adobe Flash Player settings Manager

To View and delete Flash Cookies on your computer click here
View and delete Flash Cookies

அல்லது கீழ்கண்ட இடத்தில் (ஹார்ட் டிரைவ்) உங்கள் கணிணியிலுள்ள பிளாஷ் குக்கீகளை பார்க்கலாம். அழிக்கலாம்.
[systemdrive]:\Documents and Settings\[username]\Application Data\Macromedia\Flash Player

அல்லது இருக்கவே இருக்கு Objection எனப்படும் Firefox extension to delete Flash Cookies

http://objection.mozdev.org/

சாதாரண பிரவுஸர் குக்கீகளை மட்டுமே அழித்துவிட்டு ஆகா தடயங்களை முற்றிலுமாய் அழித்து விட்டோம் என மெத்தனமாய் இனி இருக்க வேண்டாம். பிரைவசி பற்றி கவலைப்படுவோர் இனி பிளாஷ் குக்கீகளையும் அழித்து விடவேண்டும்.


"இது ஆண்டவன் கட்டளை" நடிகர் ரஜினிகாந்த் இதயம் திறக்கிறார் மென்புத்தகம் Super Star Rajini Special - Aandavan Kattalai Tamil e-book Download. Right click and Save.http://static.scribd.com/docs/i4naop96e56eo.pdf


Email PostDownload this post as PDF

Monday, December 10, 2007

ஐநூறாவது பதிவு

அப்படியும் இப்படியுமாய் இது எனது ஐநூறாவது பதிவு. அவ்வப்போது வருகை தந்து உற்சாகமூட்டிய அன்பு தமிழ்நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல. தமிழில் இவ்வளவு எழுதியிருக்கிறேனா? என ஆச்சரியமாய் இருக்கின்றது. கணிணியில் அதுவும் தமிழில் எழுதுவது ரொம்ப கஷ்டம்ங்க. நான் தமிழில் எழுத "அம்மாவை ammaa வென" எழுதும் Thanglish Transliteration முறையை
பயன்படுத்துகிறேன். இந்த முறை எதுவரைக்கும் இயல்பு வாழ்க்கையில் கட்டுபடியாகுமென தெரியவில்லை. அநேக வெப் தளங்களும் மென் பொருள்களும் இதையே தான் பயன்படுத்த உற்சாக மூட்டுகின்றன. ஆனால் நம் குழந்தைகளுக்கு கணிணியில் தமிழில் எழுத எப்படி கற்று கொடுப்பது? தமிழில் எழுத அவர்களுக்கு முதலில் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டுமே?. இல்லையா? நான் சொல்லவருவது சரிதானா? இது எங்கு போய் முடியுமோ?.

வலை பதிவை படிக்க வரும் சிலர் தமிழில் எழுத கற்றுக்கொண்டேன் என்றார்கள். சிலர் புதிதாய் தங்கள் வலைபதிவையும் தொடக்கியிருக்கின்றார்கள். மிக்க மகிழ்ச்சி.

Amatuer Yogi கேட்டிருந்தார்.
Hi pkp
How did you remove the nav bar of blogspot?

To hide the Blogger NavBar:
- Log in to blogger
- On your Dashboard, select Layout. This will take you to the Template tab.
-Click Edit HTML. Under the Edit Template section you will see you blog's HTML.
- paste the following bolded CSS definition in the top of the template code above "body" section shown as below:

#navbar-iframe {
height:0px;
visibility:hidden;
display:none
}

body {
background: $bgColor;
margin: 0;
padding: 0px;
font: x-small Verdana, Arial;
text-align: center;
color: $textColor;
font-size/* */:/**/small;
font-size: /**/small;
}


இளைய கவி கேட்டிருந்தார்
Dear Mr. P.K.P,
Can you please explain why my feedsubscribers are not geting my mail in unicode format ( in yahoo )? cuz I dont know how to slove this problem. But there is no prob with gmail. plz help me in this case

எனக்கு தெரிந்து இந்த பிரச்சனை பழைய Yahoo mail Classic-ல் இருந்தது உண்மைதான். ஆனால் இப்போதைய புதிய Yahoo mail-ல் இருப்பதாக தெரியவில்லை. So எனது தீர்வாக தெரிவது plz click the button "Switch to the new Yahoo! Mail"

Prakash K கேட்டிருந்தார்
Hello PKP
How we can upload our own template in blogspot? awaiting for your reply.
I need to improve my blog.

To upload a blogger template from a file on your hard drive:
- Log in to blogger
- On your Dashboard, select Layout. This will take you to the Template tab.
-Click Edit HTML. Under the Backup/Restore Template section you will see "Browse" button to look for a file on your hard drive and click "Upload" button to upload it.

நண்பர் அருண் அவர்கள் நடா (NaDa) வெனும் யாருக்கும் ஒன்றுமே செய்யாத அருமையான இலவச 1 byte மென்பொருளை அறிமுகப் படுத்தியிருந்தார். http://www.bernardbelanger.com/computing/NaDa/
It was really so funny.Thanks Arun.

மலேசிய தமிழ் பாப்பாடல்கள் மிக அருமையாய் இருக்கும். சில வருடங்களுக்கு முன் கூட மலேசிய தமிழ் சினி விழா ஒன்றில் மேற்கத்திய சக்கிரா போல் பாடிக்கொண்டே ஆடிய தமிழ் நங்கை ஒருவரை சி.டி ஒன்றில் கண்டேன். அவர் யாரென பெயர் தெரியவில்லை. இனிய தமிழில் விளையாடியிருந்தார். இங்கே TamilNenjam அவர்கள் வழங்கிய Malaysian tamil pop albums MP3 download லிங்க் உங்களுக்காக.
http://www.freewebs.com/freetamilmp3/

சிங்கம்+ஊர்=சிங்கப்பூர் ஆச்சுதாம் என முந்தைய பதிவொன்றில் நான் சொன்ன விவகாரத்தில் நண்பர் Srikanth சிங்கம் என்பது சிம்ஹம் என்ற சம்ஸ்க்ருத வார்த்தை இல்லையோ? தமிழில் 'ச' என்ற வர்க்கத்தில் வார்த்தைகள் ஆரம்பிக்காது - என்று படித்ததாக நினைவு என கூறியிருந்தார்.

அதற்கு பதிலுரைத்த நண்பர் யோசிப்பவர் அப்போ 'சத்தம்', 'சக்கரம்', 'சங்கு', 'சாதம்','சோதனை','சிலம்பு', 'சிக்கல்'.... இதெல்லாம்?!? என கேள்வி எழுப்பியுள்ளார்.

யாராவது ஒரு தமிழ் வாத்தியாரைதான் பிடிக்க வேண்டும். :)


பொள்ளாச்சி நசனின் "மழலையர்களுக்கான சிறு கதைகள்" தமிழில் மென்புத்தகம் Pollachi Nasan Children Stories Tamil Kids e-book Download. Right click and Save.http://static.scribd.com/docs/fqaq6lhzp6sqn.pdf


Email PostDownload this post as PDF

Thursday, December 06, 2007

ஏய் தோழா! முன்னால் வாடா!

உயிர் காப்பான் தோழன் என முன்பு சொல்லி வைத்தார்கள். அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாது . ஆனால் கார்ப்பரேட் உலகில், வானளாவ உயர்ந்திருக்கும் அநேக கார்ப்பரேட்களுக்கு உயிர் கொடுத்தது தோழர்கள் தாம் என்றால் அது மிகையாகாது. இன்றைக்கு வெற்றிகரமாக இயங்கிகொண்டிருக்கும் அநேக கார்ப்பரேட்களின் ஆரம்ப காலத்தை திரும்பிப்பார்த்தால் இரு தோழர்களின் விடா முயற்சி இருந்திருக்கும்.

மென்பொருள் ஜையண்ட் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நிறுவ பில்கேட்ஸுக்கு பால் ஆலன் உறுதுணையாய் இருந்தார். (Microsoft-Bill Gates and Paul Allen)நம் எல்லாருக்கும் அபிமானமான கூகுள் தேடு பொறியை உருவாக்கியதில் நண்பர்கள் லேரி பேஜ்க்கும் செர்ஜி ப்ரின்-குக்கும் பங்கு உண்டு. (Google-Larry Page and Sergey Brin)


போர்ட்டல் மன்னன் யாகூ உருவாக ஜெர்ரி யாங்-கும் டேவிட் பிலோவும் கூட்டு சேர வேண்டியிருந்தது. (Yahoo-Jerry Yang and David Filo)

டேட்டாபேஸ் புகழ் ஆரக்கிளை உருவாக்க லேரி எலிஸன், பாப் மைனர் என இருவர் தேவைப்பட்டார்கள். (Oracle-Larry Ellison and Bob Minor)
சிறுசுகளை விளாசிக்கொண்டிருக்கும் இன்றைய ஹீரோ மைஸ்பேசை உருவாக்க தாமஸ் ஆண்டர்சனும் கிறிஸ்டோபர் டிவோல்பும் இணைந்து உழைத்தார்கள். (Myspace-Thomas Anderson and Christopher DeWolfe)

இளசுகளை இசையால் மயக்கும் ஐபாட் உருவாக்கிய முண்ணணி நிறுவனமான ஆப்பிளை உருவாக்க ஸ்டீவ் ஜாப்ஸ்-க்கு ஆரம்பகாலத்தில் இன்னொரு ஸ்டீவ் துணையாய் உடனிருந்தார். (Apple-Steve Jobs and Steve Wozniak)


ஏன்? வன்பொருள் வித்துவான் கார்டன் மூர்-க்கு கூட இண்டெலை நிறுவ நண்பன் ராபட் நோய்ஸ்-ன் உதவி தேவையாய் இருந்தது. (Intel-Gordon Moore and Robert Noyce)

Single Founder கம்பெனிகளை விட இது மாதிரி Co-Founder சகிதம் வந்து கலக்கிய கம்பெனிகளே அதிகம் போல் தெரிகின்றது.

தனியே, தன்னம் தனியே சாதிப்பதை விட இருவராய் அல்லது சிறு குழுவாய் அதிகம் சாதிக்கலாம் என இவர்கள் எடுத்துக்கூறுகின்றார்கள். நம்மூரில் கூட இன்போஸிஸ், சன் டிவி நெட்வொர்க் போன்ற பல வளர்ந்த நிறுவனங்களின் வரலாற்றை திருப்பி பார்த்தால் கடுமையாய் உழைத்த இருவர் அல்லது ஒரு குழு கண்ணில் அகப்படும்.

அகத்தில் அசாத்தியமானதொரு கருவோடு, கொஞ்சம் கனவுகள், பெரிய தரிசனங்களுடன் அலைகின்றீர்களா?. நல்லதொரு தோழனைத் தேடுங்கள். தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என சும்மாவா சொன்னார்கள்?


"தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை" தமிழில் மென்புத்தகம் An AutoBiography of Periyar Tamil ebook Download. Right click and Save.http://static.scribd.com/docs/a60798inps30t.pdf


Email PostDownload this post as PDF

Tuesday, December 04, 2007

பல்வேறு சுவைகள்

இன்ன இன்ன தலைப்பில் தான் எழுத வேண்டுமென இப்போதைக்கு எல்லையெதுவும் இங்கு இல்லாததால் பல்வேறு சுவைகளை தொட்டுச் செல்கின்றேன்.

சிங்கப்பூரிலிருந்து நண்பர் சங்கர் ஸ்பைவேர்கள் தொல்லை தாங்க முடியவில்லை சார். உதவமுடியுமா? என கேட்டிருந்தார். விண்டோஸ் எக்ஸ்பியில் ஆரம்ப முதலே Windows Firewall இருப்பதாலும் அவ்வப்போது வெளிவரும் பாதுகாப்பு ஒட்டல்கள் (Security Patches) மற்றும் Service Pack-குகளை சமயத்துக்கு சமயம் நிறுவுவதாலும் இத்தகைய ஸ்பைவேர், மால்வேர் மற்றும் அட்வேர்களின் தொல்லைகள் இப்போது விண்டோஸ் கணிணிகளில் சிறிது தணிக்கப்பட்டிருக்கின்றது. அதையும் மீறி (கண்ட கண்ட வெப்சைட்கள் போய்) மாட்டிக்கொள்வோர் மைக்ரோசாப்டின் கீழ்கண்ட இரு இலவச மென்பொருள்களையும் முய்ன்று பார்க்கலாம்.
Windows Defender
Windows Malicious Software Removal Tool

கொடுமை என்னவெனில் கூகிள் தேடலில் மாட்டும் அநேக தன்னை ஆண்டிஸ்பைவேர் என சொல்லிக்கொள்ளும் மென்பொருள்கள் உண்மையில் மேலும் ஸ்பைவேர்களை உங்கள் கணினியில் விதைத்து இன்னும் சூழலை மோசமாக்குபவையாகவே உள்ளன. குறிப்பாக என்ன ஸ்பைவேர் உங்கள் கணிணியில் இருக்கிறதுவென கண்டறிந்து அதன் பெயரை தெரிந்து அதை நீக்க வழிமுறையைகளை இணையத்தில் தேடலாம். அதை விட்டு விட்டு எதாவது ஒரு இலவச ஆண்டிஸ்பைவேரை சும்மாவாகும் முயல்தல் நலமல்லவே.

அன்பர் சேஷகிரி எனக்கு மற்ற format-களில் உள்ள இசைக் கோப்புகளை MP3 format-ல் மாற்ற ஏதேனும் செயலி இருப்பின் (ஓசியில்தான்) ஒரு லிங்க் கொடுங்களேன் என கேட்டிருந்தார்.

அதற்கு நண்பர் இளைய கவி அழகாக பதிலளித்திருந்தார்.
தாங்கள் கீழ் கண்ட சுட்டியிலிருந்து அந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். Audacity.

Product Home Page

Direct Download Link

மேலும் இது open source முறையை சார்ந்தது என்பதால் தங்களால் இந்த மென்பொருளில் மாறுதலும் செய்ய இயலும்.(ஓசியில்தான்)

நன்றி இளைய கவி!!

Rajesh RV - "It takes me lot of manual efforts to download everything.... " என சலித்திருந்தார்.

பல கோப்புகளை எளிதாய் ஒரே நேரத்தில் இறக்கம் செய்யவும் குறிப்பாய் esnips.com mp3 கோப்புகளை எளிதாய் இறக்கம் செய்யவும் http://www.internetdownloadmanager.com வழங்கும் டவுன்லோடு மேனேஜரை முயன்று பார்க்கவும். It works Great. After you install Internet Download Manager Make sure Go to Options>File types.Add mp3 file type. Make sure Internet Download Manager has integrated with your browser.

Product Home Page

Direct Download Link


அழகிய தமிழ் பற்றி பேசிய போது நண்பர் கார்த்திக், கராத்தே எனும் வார்த்தை கரகாட்டம் எனும் வார்த்தையிலிருந்து வந்திருக்கலாம் என சொல்லி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். :)

நான் மறந்து விட்டிருந்த Mango மாங்காயிலிருந்து வந்தது வென நண்பர் உரை நினைவூட்டினார்.

Srikanth சிங்கம்+ஊர்=சிங்கப்பூர் ஆச்சுதாம் பற்றி சொல்லும் போது சிங்கம் என்பது சிம்ஹம் என்ற சம்ஸ்க்ருத வார்த்தை இல்லையோ? தமிழில் 'ச' என்ற வர்க்கத்தில் வார்த்தைகள் ஆரம்பிக்காது - என்று படித்ததாக நினைவு. என சொல்லி வைத்தார்.

தேடிப்பார்த்ததில் siṃha வடமொழி வார்த்தை எனவும் singam தமிழ் வார்த்தை எனவும் சொல்கின்றார்கள்."அரிமா" என்பது தான் சுத்தமான தமிழ் வார்த்தையோ என்னவோ?


மர்பியின் விதியில் மாட்டாதோர் உண்டோ? என முன்பு ஒரு பதிவிட்டிருந்தேன். இங்கே "மர்பியின் விதிகள் 1000" தமிழில் தொகுப்பு S.ரத்தினகிரி மென்புத்தகம் Murphy's Laws - 1000 Tamil Compiled by S.Rathinagiri ebook Download. Right click and Save.Murphy's Laws - 1000.pdf


Email PostDownload this post as PDF

Monday, December 03, 2007

அழகிய தமிழ்

சமீபத்தில் சன் தொலைக்காட்சியின் "கோலங்கள்" தொடரை தற்செயலாக பார்க்க நேரிட்டது. அதில் வரும் பால கிருஷ்ணன் எனும் கதாபாத்திரமானது, என்னை தொடர்ந்து அத்தொடரை பார்க்க வைத்து விட்டது. அதில் வரும் "தோழரான" அக்கதாபாத்திரம் பேசும் சுத்தமான தமிழ் மனதை மயக்குவதாகவும் அவர் கூறும் சில கருத்துக்கள் அருமையானதாகவும் இருப்பதோடு, தெளிவான தமிழில் பேசுவதொன்றும் அப்படி ஒரு கடினமான செயலல்ல என நிரூபிப்பது போன்றும் இருந்தது. இக்காலத்தில் நிஜ உலகில் இது போன்றோர் இருக்கின்றார்களா? எனபது சந்தேகமே.

ஆனாலும் தமிழ் பற்றி உலாவரும் சில உண்மைகள் நம்மை மனம் நிறைய வைக்கின்றது.

உலகின் மிக பழமையான நகரத்தின் பெயர் "ஊர்" (Ur) என்கின்றார்கள். இது பற்றிய குறிப்பு பைபிளிலும் உள்ளது. அட இது நம்ம தமிழ் வார்த்தையல்லவா?.

சிங்கம்+ஊர்=சிங்கப்பூர் ஆச்சுதாம். Singam+Ur=Singapore. உலகில் ஒரு நாட்டின் பெயரே தமிழில் இருக்கின்றது நமக்கு பெருமையல்லவா?.

யானையையே கொல்லும் பாம்பு - அதை ஆனை கொன்றான் எனலாம்- அது ஆனைகொண்டான் ஆகி- அப்படியே Anaconda ஆனது- திரைப்படமும் வந்தது.

அரிசி (Arici) Rice ஆனது
கட்டுமரக்காரன் Catamaran ஆனது
காசு Cash என ஆனது
சுருட்டு Cheroot ஆனது
குருந்தம் அல்லது குருவிந்தம் Corundum ஆனது
கயிறு Coir ஆனது
கறி Curry ஆனது
கிடங்கு Godown ஆனது
பச்சை இலை Perfume Patchouli ஆனது

முன்பு மயில்-ஐ தோகை என அழைத்தார்களாம்- இதில் தோகை எனும் வார்த்தை Tuki ஆகி பின் மயில் போல் சிறகு விரிக்கும் வான்கோழியை பார்த்து ஏமாந்து Turkey என்றார்கள்.

அது போல்
இஞ்சிவேரிலிருந்து Ginger-ரும் ,
பப்பாளியிலிருந்து Papaaya-வும்,
சக்கவிலிருந்து Jack-கும்,
தேக்குவிலிருந்து Teak-கும்,
கொய்யாவிலிருந்து Guava-வும்,
வெற்றிலயிலிருந்து Betel-லும் வந்தது.

அது போல
Vettri (வெற்றி) தான் Victory ஆனதோ?
Parisu (பரிசு) தான் Prize ஆனதோ?
Idhara (இதர) தான் Other ஆனதோ?
Sarkkarai (சர்க்கரை) தான் Sugar ஆனதோ?
Pathukavar (பாதுகாவலர்) தான் Father ஆனதோ?
Tharai (தரை) தான் Terra ஆனதோ?
Akkam (அக்கம்) தான் Aqua ஆனதோ?
Tholai (தொலை) தான் Tele ஆனதோ?

"காசுக்கு எட்டு" எனும் தமிழ் வார்த்தை Cashew nut ஆன கதையை இங்கே படியுங்கள்.
அதே கொல்லாங்கொட்டை கப்பலண்டி ஆன சுவாரஸ்ய கதையை இங்கே படியுங்கள்.

இப்படி தமிழின் மகத்துவம் சொல்லித்தீராதவை.
என்ன, இலங்கையிலிருந்தும் மலேசியாவிலிருந்தும் வரும் செய்திகள் தான் இப்போது நம்மை கவலையுற வைக்கின்றன.


"வெற்றி நிச்சயம்" சுகி சிவம் மென்புத்தகம் Sugi Sivam Vettri Nichayam Part1 and Part2 Tamil e-book Download. Right click and Save.
பாகம் 1 http://static.scribd.com/docs/hocj4zrx4asq9.pdf
பாகம் 2 http://static.scribd.com/docs/6oa1fzt61966j.pdf
Thanks Tamilnenjam!!


Email PostDownload this post as PDF

Thursday, November 29, 2007

மூக்கு பிடிக்க தின்னலாம்

இதை எழுதும் போது தன் கணவனிடம் "நான் நல்லா சமைப்பேன்,..நல்லா சாப்பிடவும் செய்வேன்"-னு சொல்லி வெட்கப்படும் டி.வி கமெர்சியல் புதுமணப்பெண் தான் நினைவுக்கு வருகின்றாள். ஆனால் நிஜம் பின்னோக்கி போய்க் கொண்டிருக்கிறது. சமையலறையை சோதனை கூடமாக்கி பார்க்க விரும்புவோருக்கு இங்கே சில சமையல் மென்புத்தகங்கள் இறக்கத்துக்காக.

To download these Tamil Recipe pdf ebooks please Right click the word Download and select "Save Target As"

Download 30 வகை வறுவல் கலைச்செல்வி சொக்கலிங்கம் 30 varities - Varuval-Kalai Selvi Chokalingam

Download 30 வகை வெரைட்டி ரைஸ் ரேவதி சண்முகம் 30 varities - Varity Rice-Revati Sanmugam

Download 30 வகை தக்காளி சமையல் 30 varities - Tomato Recipes-Revati Sanmugam

Download 30 வகை சூப்பர் டிபன் வசந்தா விஜயராகவன் 30 varities - Tiffin-Vasantha Vijayaraghavan

Download 30 வகை இனிப்பு உருண்டை 30 varities - Sweet Balls Inippu Urundai-Revati Sanmugam

Download சர்க்கரை நோயாளிகளுக்கு 30 வகை ஸ்வீட் & ஸ்நாக்ஸ் 30 varities - Sweet and Snacks for Sugar Patients-Shanthi-Vasantha

Download 30 வகை சூப் 30 varities - Soup-Revati Sanmugam

Download 30 வகை சேமியா உணவுகள் 30 varities - Semiya Recipes-Revati Sanmugam

Download 30 வகை கிழங்கு சமையல் வள்ளியம்மை பழனியப்பன் 30 varities - Root-Kizhangu Recipes-Valliyammai Palaniyappan

Download 30 வகை ரசம் சாந்தி விஜய கிருஷ்ணன் 30 varities - Rasam-Shanthi Vijaya Krishnan

Download 30 வகை பொரியல் 30 varities - Poriyal-Vanaja Subramanian

Download 30 வகை பூரி சந்திரலேகா ராமமூர்த்தி 30 varities - Poori-Santhraleka Ramamoorthy

Download 30 வகை பொடி சாந்தி-ராசலட்சுமி 30 varities - Podi-Shanthi-Rasalakshmi

Download 30 வகை பாயாசம் ரேவதி-ராஜேஸ்வரி 30 varities - Payasam-Revati-Rajeshwari

Download 30 வகை பருப்பு மசியல் 30 varities - Paruppu Masiyal-Vasantha Vijayaraghavan

Download 30 வகை பச்சடி 30 varities - Pachadi-Revati Sanmugam

Download 30 வகை பச்சடி வனஜா சுப்ரமணியன் 30 varities - Pachadi-Vanaja Subramanian

Download 30 வகை மாங்காய் மாம்பழ சமையல்கள் 30 varities - Mango Recipes-Shanthi Vijaya Krishnan

Download குறைவான எண்ணெயில் சுவையான 30 வகை சமையல்கள் 30 varities - Less Oily Items-Revati Sanmugam

Download 30 வகை குழம்பு 30 varities - Kuzhambu II-Revati Sanmugam

Download 30 வகை கூட்டு 30 varities - Kootu-Shanthi Vijaya Krishnan

Download 30 வகை கஞ்சி ராஜம் முரளி 30 varities - Kanji-Rajam Murali

Download 30 வகை இட்லி 30 varities - Idly-Revati Sanmugam

Download 30 வகை ஐஸ் டிஷ் 30 varities - Ice Dish-Valliyammai Palaniyappan

Download 30 வகை ஐஸ் கிரீம் 30 varities - Ice Cream-Vasantha Vijayaraghavan

Download 30 வகை அழகு தரும் உணவுகள் 30 varities - Healthy and Beauty Foods-Rajam Murali

Download பழங்களில் 30 வகை உணவுகள் 30 varities - Fruit Dishes-Revati Sanmugam

Download 30 வகை முட்டை சமையல் 30 varities - Egg Recipes-Kalai Selvi Chokalingam

Download 30 வகை தோசை 30 varities - Dosa-Valliyammai Palaniyappan

Download 30 வகை பருப்பு உணவுகள் 30 varities - Dal Recipes-Revati Sanmugam

Download 30 வகை சப்பாத்தி 30 varities - Chappati-Revati Sanmugam

Download 30 வகை போண்டா வடை 30 varities - Bonda Vadai-Revati Sanmugam

Download 30 வகை பிரியாணி 30 varities - Biriyani-Kalaiselvi-Revati

Download 30 வகை பஜ்ஜி பக்கோடா 30 varities - Bajji and Bakoda-Revati Sanmugam

Download 20 வகை தோசை 20 varities - Dosa-Shanthi Vijaya Krishnan

ஈபுத்தகங்கள் உபயம் தமிழ்நெஞ்சம்


Email PostDownload this post as PDF

Wednesday, November 28, 2007

உலக அளவில் ஒரே கரன்சி

Globalization அதாவது உலகமயமாக்கலின் தாக்கம் இன்று எல்லாராலுமே உணரப்படுகின்றது. வால்ஸ்டிரீட்டின் நெளிவு சுழிவுகள் உலக பங்குசந்தைகளில் எதிரொலிக்கின்றன. ஈரானில் போர் மேகம் சூழ்ந்தால் சீனாவில் பெட்ரோல் விலை ஏறுகின்றது. அமெரிக்காவில் Day Light Saving Time மாற்றப்பட்டால் சென்னையில் கால் சென்டரில் வேலை செய்யும் மனோஜ் சீக்கிரமாக வேலைக்கு போக வேண்டியுள்ளது. இப்படி வீடுவரை குடிவந்துள்ள உலகமயமாக்கல் பாதி கிணறே தாண்டியுள்ளதால் தாம் இன்றைய உலக எக்கானமி தடுமாறுகின்றது என்கின்றது ஒரு ஆய்வு. அதாவது இன்று Economic imbalance, Economic instability பிரபலமான வார்த்தைகள்.

இதற்க்கெல்லாம் தீர்வு அரைவேக்காட்டு தனமாய் உள்ள உலகமயமாக்கலை முழுதாக்க வேண்டுமாம். அதாவது ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து யூரோ எனும் கரன்சி கொண்டு வந்துள்ளார்கள். அரபு நாடுகளும் இது போன்ற ஒரு பொது கரன்சிக்கு தயாராகின்றார்கள். ஏன் தெற்காசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் உட்பட சில நாடுகள் சேர்ந்து பொது கரன்சி உருவாக்கவும் திட்டம் போட்டுள்ளன. அமெரிக்காவும் கனடாவும் மெக்ஸிகோவும் இணைந்து North American Union- என "The Late Great U.S.A" உருவாக்கி அதில் பொது கரன்சி உலவ விட திட்டங்கள் உள்ளன.

இந்த போட்டிகளையெல்லாம் விட்டு விட்டு பேசாமல் உலக அளவில் ஒரு பொது கரன்சி உருவாக்கி, அதற்கொரு உலக ரெசர்வ் பாங்க் உருவாக்கினால் பெரும்பாலான தலைவலிகள் தீரும் என்கின்றார்கள் பெரும்பாலானோர். இதைத்தான் Single Global Currency.org-ம் வலியுறுத்துகின்றார்கள். 2025-க்குள் உலக அளவில் ஒரு பொது கரன்சி கொண்டு வருவது தான் இவர்கள் நோக்கம். பலரின் விருப்பமும் அதுதான்.முன்னாள் U.S Federal Reserver Chair Paul Volcker இவ்வாறாக கூறினார் "A global economy requires a global currency."

உலக பொது கரன்சியானால் உலகில் அனைவருக்கும் சம்பளம் ஒரே கரன்சியில் வழங்கப்படுவதால் ஏற்றத்தாழ்வுகள் வெகுவாக குறையும். பெரும்பாலான பொருளாதார குளறுபடிகள் சரியாகும் என நம்புகின்றார்கள்.

அப்படியே உலக அளவில் ஒரு பார்லிமெண்ட் அமைத்து உலகளாவிய அரசு ஒன்றும் ஆட்சி செய்தால் பிரச்சனையே இருக்காது போங்க.


"முல்லாவின் கதைகள்" தமிழில் மென்புத்தகம் Mulla Stories In Tamil ebook Download. Right click and Save.http://static.scribd.com/docs/8qmttjfktf5so.pdf
நன்றி தமிழ்நெஞ்சம்


Email PostDownload this post as PDF

Tuesday, November 27, 2007

மீண்டும் தமிழ்

விண்டோஸ் நோட் பேடில் (Windows Note Pad) அல்லது நேரடியாக வலைப்பூவில் எப்படி தமிழில்எழுதலாம் என கடந்த பதிவொன்றில் சொல்லி இருந்தேன். Rajesh RV, Mani Kumar மற்றும் Srikanth போன்றோர் கூகிளின் Indic Transliteration பற்றி குறிப்பிட்டிருந்தார்கள். இது போன்ற Web based தீர்வுகள் தரும் jaffnalibrary, quillpad என பல தளங்கள் பற்றி கேள்வி பட்டிருக்கின்றேன். உபயோகமும் படுத்தி இருக்கின்றேன். ஆனால் கூகிளும் அதை வழங்கும் செய்தி எனக்கு புதிது.

ம்..தினமும் புதுசு புதுசாய் கற்றுக்கிறோம்.இங்கு ராஜேஷ் சொன்னது போல தமிழில் எழுதும் போது drop down menu for possible tamil word வழங்குவது which is really good. நோட்பேடில் சிறிது சிறிதாய் தமிழில் எழுதி சேமிப்பது போல் இந்த Web based தீர்வுகளில் முடிவதில்லை என்பது இப்போதைக்கு சிறிய குறை. சீக்கிரத்தில் அதுவும் மாறிவிடலாம்.

நண்பர் Madasamy Windows 98-ல் தமிழ் சரியாய் தெரியவில்லை என்றிருந்தார்.
Please try this.
You have Windows 98 and Windows 2000/ME With IE 6.0 and If you face any problem to view tamil fonts, then do the following steps.

Steps:

Make sure you have Internet Explorer 6.0 or above on your computer.

Download Tamil unicode font Latha from the following link.
Download latha.ttf
Install downloaded unicode font
1.On windows Click Start > Settings > Control Panel > Fonts
2. On Fonts window click Files > Install New Fonts...
3. Select the path to the downloaded file and then click Ok button.

4. Or you can right Click on the above link and select 'Save target as' and save the fonts in 'C:\WINDOWS\Fonts' directory for windows 98/ME or 'C:\WINNT\Fonts' directory for Windows 2000.


Krishnamurthy ekalappai vs Vista பிரட்சனை பற்றி கேட்டிருந்தார்.

Can i Use the same way in windows Vista operating system to write in Tamil,I did not have any problem in windows xp but windows vista I was not able to use the key board same as ekalappai UNI tamil, its always taking tamil net key board.

நான் இன்னும் விஸ்டா பயன் படுத்த தொடங்கவில்லை சார். தேடிக்கொண்டிருக்கின்றேன்.

Amatuer Yogi இப்படியாக கேட்டிருக்கிறார்.
May i know y u have removed my comment pkp. Any concerns??? .Just wanted to know.......

அப்படியெல்லாம் இல்லீங்கோ. நல்லா பார்த்தீங்களா சார்..உங்கள் கேள்விக்கு பதிலும் கொடுத்திருந்தேனே. :)


பி பெர்சிவலின் "6000 தமிழ் பழமொழிகள்" ஆங்கில மொழிபெயர்ப்போடு மென்புத்தகம் P Percival 6000 Tamil Proverbs with English Translation e-book Download. Right click and Save.P Percival 6000 Tamil Proverbs with English Translation .pdf


Email PostDownload this post as PDF

Monday, November 26, 2007

அழிக்க அன்லாக்கர்

எனக்கு தெரிந்தவரை ஆக்குதல் தான் ரொம்பவும் கடினம். அழித்தல் மிக எளிது. ஆனால் சில சமயங்களில் கணிணி உலகு அப்படி இருப்பதல்ல. சில கோப்புகளை அழிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். Cannot delete file: Access is denied அல்லது The source or destination file may be in use அல்லது There has been a sharing violation போன்ற வார்த்தைகளால் நச்சல் கொடுக்கும். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பெரும்பாலும் அக்குறிப்பிட்ட கோப்பானது அச்சமயத்தில் இன்னொரு பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்திருப்பதால் அழிக்கமுடியாதிருந்திருக்கலாம். இது போன்ற சமயங்களில் உதவ வருவது தான் Unlocker எனும் மென்பொருள். இந்த இலவச மென்பொருள் அக்கோப்புகளை அது மாதிரி பணிகளிலிருந்து விடுவிப்பதால் அழிக்கமுடியா கோப்புகளையும் எளிதாக அழிக்கலாம். தேவைப்படும்போது முயன்று பாருங்கள்.

Product Homepage
http://ccollomb.free.fr/unlocker/

Download Link
http://ccollomb.free.fr/unlocker/unlocker1.8.5.exe

1. Simply right click the folder or file and select Unlocker
2. If the folder or file is locked, a window listing of lockers will appear
3. Simply click Unlock All and you are done!
4. Now you can delete the file.


"வாசிங்டனில் திருமணம்" சாவி-யின் நகைச்சுவை காவியம் மென்புத்தகம் Washingtonil Thirumanam Chavi Tamil Novel e-book Download. Right click and Save.
Chavi Washingtonil Thirumanam.pdf
நன்றி: தமிழ்நெஞ்சம்


Email PostDownload this post as PDF

Thursday, November 22, 2007

தமிழில்..

அடிக்கடி என்னிடம் கேட்கப்படும் ஒரு கேள்வி.நீங்கள் தமிழில் எப்படி எழுதுகின்றீர்கள்? நான் தமிழில் எழுத என்ன செய்ய வேண்டும்? பையர்பாக்ஸ் -ல் தமிழ் ஒழுங்காக தெரிய மாட்டேங்குதே என்ன செய்ய? போன்றன.

இங்கே என் விளக்கங்கள்.

நீங்கள் தமிழில் எப்படி எழுதுகின்றீர்கள்?
ஆரம்பத்தில் Kuralsoft எனும் அழகிய எளிய இலவச மென்பொருள் ஒன்றை தான் பயன்படுத்தி வந்தேன்.இதன் வழி நேராக Notepad-ல் தமிழில் தட்டச்சலாம் அல்லது நேராகவே பிளாகிலேயே தட்டச்சலாம்.பிரச்சனை இல்லாதிருந்து வந்தது. என்னநினைத்தார்களோ சமீபத்தில் அதற்கு விலையை குறித்து விட்டார்கள். தமிழில் எழுத இலவச மென்பொருள்கள் இன்னும் இருப்பதால் அவைகளுக்கு தாவ வேண்டி வந்தது. இப்போது ஈகலப்பை எனும் மென்பொருளை பயன்படுத்துகின்றேன். இந்நேரத்தில் இம்மென்பொருளை இலவசமாய் வழங்கிவரும் தமிழா (Thamizha) குழுவுக்கு நன்றிகள் தெரிவித்துகொள்கின்றேன்.

நான் (அதாவது நீங்கள்) தமிழில் எழுத என்ன செய்ய வேண்டும்?
நீங்களும் தமிழில் Notepad-லோ அல்லது Blog-கிலோ அல்லது Gmail-லிலோ தமிழில் எழுதலாம். முதலில் கீழ்கண்ட சுட்டியிலிருந்து eKalappaiஎனும் மென்பொருளை இறக்கம் செய்து கொள்ளுங்கள்

http://thamizha.com/modules/mydownloads/singlefile.php?cid=3&lid=5

பின் கீழ்கண்ட சுட்டியிலிருந்து கீபோர்டு Tamil unicode .kmx கோப்பை இறக்கம் செய்து அதை ஈகலப்பையில் பயன்படுத்துங்கள்

http://thamizha.com/modules/mydownloads/singlefile.php?cid=3&lid=13

குழப்பமாய் இருக்கிறதா? இதோ படிப்படியாக செய்முறை உங்களுக்காக..

1.eKalappai-யை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவவும். சும்மா Install-யை கிளிக் பண்ணி மற்ற எல்லா வற்றையும் பட்பட்டென கிளிக்கி செல்லவும்.கீழே அந்த ஆரம்ப படம்.

2.eKalappai நிறுவி முடித்ததும் கீழே படத்தில் இடதுகோடியில் காண்பது போல புதிதாய் ஒரு ஐகான் (TavulteSoft Keyman 6.0) உங்கள் கணிணியில் வரும்.

3.அந்த ஐகானை வலது கிளிக்செய்து keyman configuration...-ஐ கிளிக்கவும்.

4.அதிலுள்ள Install Keyboard-யை கிளிக்கி ஏற்கனவே இறக்கம் செய்து வைத்துள்ள NewUniTamil.kmx கோப்பை நிறுவவும்

5.முடிவில் இப்போது மூன்று கீபோடுகள் இருக்கும். அதில் Tamil99UNI,Tamil99Tsc இரண்டிலும் உள்ள டிக் மார்க்கை நீக்கிவிடவும்.UniTamil மட்டும் டிக் இருக்கட்டும்.

6.இப்போது Alt மற்றும் 2 கீகளை சேர்த்து அமுக்கினால் நீங்கள் தமிழில் எழுத தயார். Notepad-யை திறந்து தமிழில் எழுதலாம்.
உதாரணமாய் அம்மா என்பதை ammaa எனவும் ஆசை என்பதை aasai எனவும் டைப்பவேண்டும். இதை Tamil Transliteration என்பார்கள். மீண்டும் Alt மற்றும் 2 கீகளை சேர்த்து அமுக்கினால் ஆங்கிலத்துக்கு போய் விடுவீர்கள்.

பையர்பாக்ஸ் -ல் தமிழ் ஒழுங்காக தெரிய மாட்டேங்குதே என்ன செய்ய?
ஏற்கனவே நண்பர் இலக்கியன் சொல்லிய விளக்கத்தையே இங்கும் தருகின்றேன்.

பயர்பொஸ் உலாவியில் தான் தமிழ் யுனிகோட் பிரச்சனை உள்ளது. அதனை கீழ் கண்டவாறு சீர் செய்யலாம்

1.முதலில் windows XP with Service pack 2 இறுவட்டை CD Drive க்குள் போட்டுக்கொள்ளவும். பின்னர் க்ண்ட்ரோல் பனெலிற்கு போய் Regional & Language Options என்னும் ஐக்கனை கிளிக் பண்ணவும்.

2. அதில் language என்னும் Tab இனை கிளிக் பண்னவும்.

3.அதில் supplemental language supportஏனும் option இல் இரண்டு தெரிவுகள் இருக்கும்
*. install files for complex scripts and right to left language (including Thai)

*install files for east Asian languages

இதில் முதலாவதை தெரிவு செய்த பின்பு apply button ஐ சொடுக்கினால் வின்டோஸ் எக்ஸ்பி சீடியிலிருந்து தமிழ் யுனிகோட்டுக்கு தேவையான விபரங்களை தானாகவே அது பதிவு செய்து கொள்ளும். பின்பு கணினியை மீள ஆரம்பிக்கவும்.

அவ்வளவு தான்


"சுஜாதாவின் சிறுகதைகள் தொகுப்பு" தமிழில் மென்புத்தகம். தொகுத்தவர்: பிரதீப் குமார் திருமலை அரசன் "Sujatha Short Stories Collection" Tamil e-book Download Compiled by Pradeep Kumar Tirumalai Arasan. Right click and Save.http://static.scribd.com/docs/f5se8xfsjb6v4.pdf
உபயம் : தமிழ்நெஞ்சம்


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்