வயர்லெஸ் கீ போர்டு, வயர்லெஸ் மவுஸ் என வைத்துக்கொளல் இப்போதெல்லாம் ஆடம்பர விஷயமல்ல. வீடுகளிலும் அலுவலகங்களிலும் இவை மிக சகஜமாகிவிட்டன.
அசோக்நகர் அப்பார்ட்மெண்ட் குடியிருப்பின் முதலாவது மாடியில் ஹாயாக அமர்ந்து கொண்டு வயர்லெஸ் கீ போர்டுவழி உங்கள் கணிணியில் ஏதோ டைப்புகின்றீர்கள் என வைத்துக்கொள்வோம். அது ஏதோ ஒரு பாங்கிங் சைட் பாஸ்வேர்டாக கூட இருக்கலாம். அதை அப்படியே என்ன டைப்புகின்றீர்கள் என இரண்டாவது மாடியில் குடியிருக்கும் "பத்தாவது படிக்கும் சுட்டி" தெரிந்து கொள்ளலாம். எப்படி?
வயர்லெஸ் கீ போர்டுகள் நீங்கள் தட்டும் எழுத்துக்களை அப்படியே டைப்ப டைப்ப அவற்றை ரேடியோ அலைகளாக மாற்றி கணிணிக்கு அனுப்பிக்கொண்டேயிருக்கும். மேல்மாடி சுட்டி ரொம்ப தொலைவில் இல்லையே. அவர்களுக்கும் அந்த ரேடியோ அலைகள் எட்டும். இந்தகால பள்ளிக்கூட படு சுட்டிகளுக்கு ஒரு வயர்லெஸ் ரிசீவரும்,எளிய டிகிரிப்டோ மென்பொருளும் கிடைத்தால் போதும். மொத்தமும் காலி. ஏன் அப்பேர்பட்ட Microsoft Wireless Optical Desktop 1000/2000 keyboard-கள் கூட இதற்கு விதிவிலக்கில்லையாம்.
அக்கம் பக்கம் யார் இருக்கானு தெரிஞ்சு வச்சிக்கிறது ஒரு விதத்தில் நல்லது தான்.
More about this hack Video Text
சுபாவின் தமிழ் நாவல் "காத்திருக்கிறேன்" மென்புத்தகம் Subha Tamil Novel Kaathirukirean e-book Download. Right click and Save.Download Subha Kaaththirukkiraen Novel
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Monday, December 24, 2007
வயர்லெஸ் கீ போர்டு அபாயம்
Posted by
PKP
at
12/24/2007 12:59:00 PM
Labels: Security
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
நன்றி pkp
I'm looking forward to read your posts everyday for the last 3 months.
U r doing readlly good work brother.
ஹூம்!! இன்னும் என்னென்ன வெடிகள் வரப்போகிறதோ??
மிக்க நன்றி,தங்களது பணி தொடரட்டும்..... நான் தங்களது வலைபூவை , கூகுள் ரீடர் முலம் படித்து வருகின்றேன் , அதனால் வலைபூவிற்கு வ்ருவது குறைவு...
வலைபூவிட்கு அதிகம் வர முயற்சிக்கின்றேன்....
அன்புடன்
இரா .செந்தில் நாதன்
http://anbutan.blogspot.com
http://all-opinion.blogspot.com
பல வாரங்களில் வெளிவந்த ஆனந்தவிகடன் வார இதழின் பிடிஎப் தொகுப்புகள் இங்கே உள்ளன..
http://www.esnips.com/web/AnandhaVikatan
Post a Comment