உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Monday, April 30, 2007

வின்மெர்ஜ் வரப்பிரசாதம்

வரி வரியாய் கோடெழுதி பிழைக்கும் நம் போன்ற மென்பொருள் டெவலப்பர்களுக்கு யூனிக்ஸ் சார்ந்த செயலிகளில் இருக்கும் வசதிவாய்ப்புகள் வின்டோஸில் இருப்பதில்லை.அப்படியாய் ஒரு வசதி தான் இரு கோப்புகளை அல்லது இரு folder-களை பொருத்தி பார்த்து, வேறுபடுத்தி பார்த்து வித்தியாசங்களை கண்டறிதல் அதாவது compare folders and compare files.அது போல் இரு வேறு பதிப்பு file,folder-களை இணைத்தலும் வின்டோஸில் மிஸ்ஸிங். அதாவது merge folders and merge files.இது போன்ற மாயங்களை விண்டோஸ் உலகில் செய்ய இதோ ஒரு இலவச எளிய மென்பொருள்.

Screen Shot


Direct Download Link
http://prdownloads.sourceforge.net/winmerge/WinMerge-2.6.6-Setup.exe

Product Page
http://winmerge.org/


Email PostDownload this post as PDF

Sunday, April 29, 2007

கொஞ்சம் சிரிக்க...Email PostDownload this post as PDF

Thursday, April 26, 2007

யாகூ மேப்பில் நம்மூர்கள்


கூகிளை தொடர்ந்து யாகுவும் (Yahoo) நம்மூர் மேப்புகளை வெளியிட்டிருக்கிறார்கள்.20 நகரங்களுக்கான தெருவுக்கு தெரு மேப்புகளும்,பிற 170 நகரங்கள், 4,785 சிற்றூர்கள் மற்றும் 220,000 கிராமங்களை தேடினால் அது இருக்கும் இடத்தை காட்டும் படியாகவும் இந்த மேப் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
நம்மூர்களில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களை தெருவுக்கு தெரு காட்டியிருக்கிறார்கள்.கூடவே ATM, Hospital, Bank, Tourist Spots, Hotel, Movie Halls, Restaurant, Shopping Complex, Pub & Bar, Police Station-களை தேடவும் வசதிசெய்து கொடுத்திருக்கிறார்கள்.

கீழே அதற்கான சுட்டிகள்

Chennai City Map

Chennai Closer View

Coimbatore City Map

Madurai City Map

Trivandrum City Map

Bangalore City Map

All Indian Cities Map

Yahoo India Map Home

யாகூ தனது தமிழ் தளத்தை சமீபத்தில் வெளியிட்டது நினைவிருக்கலாம்.அதற்கான சுட்டி.

Yahoo Website in Tamil


Email PostDownload this post as PDF

Tuesday, April 24, 2007

மைக்ரோசாப்டின் மரணம்

மைக்ரோசாப்ட் எனும் மாபெரும் சாம்ராஜ்யம் கொஞ்சம் கொஞ்சமாய் மரணித்து கொண்டிருக்கின்றது என்கிறார் Paul Graham எனும் டெக் எழுத்தாளர்.
இதற்கு இவர் சொல்லும் காரணங்கள் நான்கு.
1.கூகிள்
2.ஏஜாக்ஸ்
3.அகலப்பட்டை இணைய இணைப்புகள்
4.ஆப்பிள்

கொக்ககோலா போன்ற மகா பிராண்டுகளையெல்லாம் தள்ளிவிட்டு இன்று உலகின் நம்பர் ஒன் பிராண்டாகியிருக்கின்றது கூகிள்.brandz.com சர்வே படி கூகிள் பிராண்ட் உலகில் முதலிடமும்,GE பிராண்ட் இரண்டாம் இடமும், மைக்ரோசாப்ட் பிராண்ட் மூன்றாம் இடமும் வருகின்றது.இன்றைய நிலைப்படி Information is power.அதை தன்னகத்தே கொண்டுள்ள கூகிளார் தான் இன்று முன்னுக்கு நிற்கின்றார்.

ஏஜாக்ஸ் போன்ற தொழில் நுட்பத்தால் இணையம் வழியே பெரும்பாலான கணிணித்தன வேலைகளை செய்யும் வசதி மெதுவாக உருவாகி வருகின்றதால் (உதாரணமாய் ஆன்லைனிலேயே ஆபீஸ்,போட்டோஷாப் பயன்பாடுகள்) இனி டெஸ்க்டாப் அப்ளிகேசன்களுக்கு முடிவுகாலமாம்.Simply desktop applications would be replaced by web applications. இதிலும் கூகிள் முந்திக்கொண்டு Docs and Spreadsheets முதலானவை ஆன்லைனிலேயே தருகின்றார்கள்.ஆகிலும் ரொம்ப தூரம் போக வேண்டியுள்ளது.

இதற்கெல்லாம் வசதியாய் அகலப்பட்டை இணைய இணைப்புகளும் பெருகி வருகின்றன.

ஆப்பிளும் முன்னெப்போதும் இல்லாதது போல் எதிரியின் எதிரி நண்பன் கணக்கில் முன்னுக்கேற கடும் போராட்டத்திலிருக்கிறார்கள்.

ஆக மைக்ரோசாப்ட்டுக்கு கஷ்டகாலம்.சொல்லும்படியாய் Windows,Office தவிர வேறு பிற பெரிதாய் தெரியவில்லை.அவைதான் இப்போதைக்கு bread and butter. அந்த காலத்தில் விலைகொடுத்து வாங்கிய Frontpage முதல் சமீபத்தில் விலைகொடுத்து வாங்கிய Softricity,Connectix PC,GreatPlains CRM போன்றவற்றை அழிக்கிறார்களே தவிர உருவாக்குவதாய் தெரியவில்லை.Redmond அயர்ந்த நித்திரையில்.

மீண்டெழ வாய்ப்புண்டாவெனில் இருக்கிறதாம்.Redmond-ஐ துண்டித்து விட்டு புது வெப்நுட்பங்களை வாங்கினால்/படைத்தால் பிழைக்கலாமாம்.

இதெல்லாம் பற்றி கவலையே இல்லாமல் $25மில்லியன் டிக்கெட்டில் பில்கேட்ஸ் விண்வெளிக்கு சுற்றுலா போகவிருக்கிறார் என்று ஒரு செய்தி சுற்றி வருகின்றது.


Email PostDownload this post as PDF

Monday, April 23, 2007

மொபைல் உலகம்

செல்போன் எனும் மொபைல் போன்களின் ஆதிக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகின்றனவென புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.இந்த ஆண்டு மார்ச் கணக்கீடுபடி மொத்தம் 166 மில்லியன் இந்தியர்கள் மொபைல் போன் வைத்துள்ளனராம். இது கடந்த வருடத்தை விட 68 சதவீதம் அதிகம். இந்த எண்கள் ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டேயுள்ளன. மொபைல் போன்கள் இப்போதெல்லாம் வெறும் பேசுவதற்காக மட்டுமல்லாது பிற பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளதால் இந்த ஜூரம் இன்னும் ஏறும்.

சமீபத்தில் ரிலையன்ஸ் "R World"-டோடு சன்டிவி சேர்ந்து மொபைல் போனில் சன் டிவி பார்க்கும் சூழல் உருவாகியுள்ளனர். ஏறத்தாழ சில கணங்களே தாமதமாய் லைவாய் சன் டிவி பார்க்கலாமாம்.5 நிமிடம் பார்க்க 15 ரூபாய்னு சொல்லியிருக்கிறார்கள்.இந்தியா முழுதுமாய் 30 மில்லியன் பேரும் தமிழகத்தில் மட்டும் 26 லட்சம் பேரும் ரிலையன்ஸ் சந்தாதாரர்கள். இவர்களில் 50 சதவீதம் பேர் சன்டிவி பார்க்கும் வசதியுள்ள செல்போன்கள் வைத்துள்ளார்களாம். மேலும் நிகழ்சிகளை இறக்கம் செய்து பார்க்கவும் வசதி செய்து தருகின்றார்களாம்.ஒரு இறக்கத்துக்கு 7 ரூபாய். :)

.com போல் .mobi எனும் ஒரு தனி டொமைன் பெயரே மொபைல் போன் பயன்பாட்டு வெப் சைட்டுகளுக்கென அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். நோக்கியாவின் .மொபி வெப்தளத்தை இங்கே காணலாம்.
http://nokia.mobi/

செல்போன் வழி இணையம் மேய்தலும் அதிகரித்து வருகின்றது.அதற்கு வசதியாக மைக்ரோசாப்ட் "டீப் பிஷ்" DeepFish என்று ஒரு புதுவகையான பிரவுசரோடு வந்திருக்கிறார்கள். இருக்கும் இணைய பக்கங்களை அப்படியே மினிபடுத்தி மொபைல் பதிப்பாக இது காட்டுமாம்.
http://labs.live.com/deepfish/

மைக்ரோசாப்ட் இப்போதெல்லாம் அழகாக பெயர் வைக்க கற்றிருக்கிறார்கள்.
SilverLight என்று இன்னொரு படைப்பும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இவர்களின் இந்த படைப்பு அடோபியின் பிளாஷுக்கு போட்டியாய் அமையுமோ என்று தோன்றுகிறது. புதுவகையான பிரவுசர் plugin ஆம் அது. http://www.microsoft.com/silverlight/asp/downloads.aspx


இங்கே ஒரு தளம் இந்தியாவில் செல்போனிலிருந்து யாராவது உங்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் அந்த நம்பர் எவ்விடமிருந்து வந்தது எனக் காட்டுகின்றது.முதல் 5 நம்பர்களையும் உள்ளீடு செய்து தட்டி பாருங்கள்.
Got missed call? Find out who called and from where?
http://www.informationmadness.com/cms/index.php?option=com_content&task=view&id=40&Itemid=53

அப்படியே இருக்கிற வீடியோ துண்டுகளை 3gp எனப்படும் வகையாய் மாற்றி உங்கள் மொபைலில் கொண்டு திரிய இங்கே ஒரு Super மென்பொருள்.இறக்கம் செய்து முயன்று பார்க்கலாம்.
http://www.megaupload.com/?d=HOB6VOBO

பேச,SMS அனுப்ப,படம்,வீடியோ எடுக்க மற்றும் பறிமாற,FM,MP3 கேட்க,இணையம் மேய,டிவி பார்க்கவென போய்க்கொண்டேயிருக்கும் இது எங்கு போய் முடியுமோ?


Email PostDownload this post as PDF

Sunday, April 22, 2007

டெக் நகைச்சுவைEmail PostDownload this post as PDF

Friday, April 20, 2007

சில பயனுள்ள தளங்கள்

இணையத்தில் மேயும்போது அகப்பட்ட சில பயனுள்ள தளங்களை வரிசைபடுத்தியுள்ளேன்.
உங்களுக்கும் உதவலாம்.


1.இலவச ஈபுத்தகங்களில் குவியலை இத்தளத்தில் காணலாம்.
இன்றைய அளவில் ஏறக்குறைய 16,502 புத்தகங்கள் உங்களுக்காக இலவசமாக உள்ளன.

http://manybooks.net2.இன்னொரு இலவச ஈபுத்தகங்களில் குவியல்

http://www.wowio.com
3.போட்டோஷாப் போன்ற பெரும் மென்பொருள்கள் இல்லாவிட்டாலும் எளிதாய் சில சிறிய போட்டோ எடிட்டிங்கள்
ஆன்லைனிலேயே செய்ய இத்தளம் சூப்பர்.

http://www.cellsea.com


4.வரிசையாய் அநேக மென்பொருள்கள் இறக்கத்துக்கு இருக்கின்றது இங்கே.

http://www.p30world.com


5.எல்லோரும் சேர்ந்து ஒர் ஆன்லைன் நூலகத்தை உருவாக்கிவருகின்றார்கள் இங்கே.தேவையெனில் தேடிப் பார்க்கலாம்.

http://www.scribd.com


Email PostDownload this post as PDF

Thursday, April 19, 2007

பெண்டியம் போய் பென்ரின் வருகுது

இந்த வருட தொடக்கத்தில் சிப் பயில்வான் இன்டெல் கார் (Intel) பெண்டியத்தின் அடுத்த வடிவத்தை அறிவித்திருக்கிறார்கள். இந்த வருட முடிவுக்குள் Penryn எனும் புதுவகையான மைக்ரோ புராசசர்கள் மார்க்கெட்டில் புழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 1993-ல் மாபெரும் எதிர்பார்ப்போடு Pentium சந்தையில் வந்து ஒரு கலக்கு கலக்கியது.
இதை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றிய வினோத் தாம் (Vinod Dham -"The father of the Intel Pentium processor") இண்டல் பெண்டியம் புராசசரின் தந்தை என அறியப்பட்டார்.இவர் பூனாவில் பிறந்து டெல்லியில் படித்து பின் அமெரிக்கா பறந்தவர்.இண்டல் நிறுவனத்தின் VP பதவிவரை ஏறி பின் வெளியேறியவர்.

விஷயத்துக்கு வருவோம்,இந்த பென்ரின் புராசசர்கள் 45 nanometre technology கொண்டவையாய் இருக்குமாம்.அதாவது இன்றையவை 65 nanometre technology கொண்டவை.இதனால் சிப் அளவு மிகச் சிறிதாவதோடு அதிலிருக்கும் டிரான்சிஸ்டர்கள் எண்ணிக்கை இன்றை போல் பலமடங்காய் அதிகரிக்குமாம்.அதேநேரம் குறைந்த அளவே மின்சாரம் அது பயன்படுத்துமாம்.எதோ ஒருவகையில் Moore's Law நிரூபிக்கப்பட்டுகொண்டே வருகின்றது.


Email PostDownload this post as PDF

Wednesday, April 18, 2007

இந்தியாவில் இன்டர்நெட் - ஒரு பார்வை

இந்தியாவில் இண்டர்நெட் யுகம் 1995-ல் தொடங்கியதாக சொல்கின்றார்கள். அவ்வருடம் தான் டெல்லியிலுள்ள National Informatics Centre (NIC) எனும் மையம் C-Web வழி இணையத்தின் வலைச் சேவையை பயனர்களுக்கு அளித்தனராம். இன்று இந்தியாவில் 2.9 மில்லியன் பேர் இணைய இணைப்பு வைத்திருக்கிறார்கள். இணையத்தை பெரும்பாலானோர் Email மற்றும் Chat க்காக பயன்படுத்தினாலும் கணிசமானோர் அதாவது 32% பேர் தகவல் தேடபயன் படுத்துகிறார்கள் என்பது ஒரு மகிழ்சியான சேதி. பரீட்சை ரெசல்ட் பார்க்கவும் ரயில் டிக்கட் முன்பதிவு செய்யவும் இன்னொரு கூட்டம் இணையம் பக்கமாய் வருகின்றார்கள்.கொஞ்சம் கொஞ்சமாய் நம்மூரில் இணையச் சூடு பரவி பற்றிக்கொண்டிருக்கின்றது.இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அடுத்த ஆண்டு வரும் போது (இன்று 38 மில்லியன்) 50 மில்லியனாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.கூடவே ஈகாமெர்ஸ் Ecommerce எனப்படும் இணையம் வழி வர்த்தகமும் பெருகும் என நம்பலாம்.மொத்த இணையம் பயன்படுத்துவோரில் 37% பேர் சிறுநகர,குறுநகர வாசிகள் என்பது இன்னொரு ஆச்சர்யமான தகவல்.இந்திய இணையவாசிகளில் 50 சதவீதம் பேர் 18-லிருந்து 35 வயதுக்குட்பட்டவர்களாம்.39 சதவீதபேருக்கு இணையம் தெருமுனை "cyber cafe"-தான் கிடைக்கின்றது.நாளை பெரும்பாலானோர் கனவிலிருக்கும் அகலப்பட்டை எனப்படும் broadband மற்றும் 10000 ரூபாய் மலிவு கணிணிகள் வீதிக்கு வரும் போது ஓய்வெடுக்கும் வெப்செர்வர்கள் திணறப்போகின்றன.


Email PostDownload this post as PDF

Tuesday, April 17, 2007

பெரிது பெரிதாய்

SAN,DSL போன்ற தாராள தொழில் நுட்பங்களின் பெருக்கத்தால் இப்போதெல்லாம் ஸ்டோரேஜ் இடம் (Storage Space),பாண்ட்வித்தெல்லாம் (Bandwidth) ரொம்ப மலிவாகிவிட்டன.அந்த காலத்தில் 2 MB, 5MB என கஞ்சம் பண்ணிக்கொண்டிருந்த Yahoo Mail,Hotmail-கள், 3 வருடத்திற்கு முன்பு Gmail வந்து அனைவருக்கும் 1Gig கொடுத்து புரட்சி பண்ணியதால் மற்றோரெல்லாரும் போட்டியில் குதிக்க வேண்டியதாயிற்று.இன்று அதிகமாய் எனக்கு தெரிந்து http://www.30gigs.com/ பெயர் போலவே மிக அதிகமாய் 30 Gig இலவச ஸ்டோரேஜ் இடம் மெயிலுக்கு கொடுக்கிறார்கள்.யாகூ மெயில் தனது 10வது வருட பிறந்த நாளை முன்னிட்டு இவ்வருடம் மே மாதம் முதல் கணக்கற்ற அளவு (Unlimited) மெயில் இடம் கொடுக்க போகிறார்களாம்.

இது போக உங்கள் கோப்புகளை அழகாக ஒழுங்காக ஆன்லைனின் சேமித்து வைக்க http://www.mediamax.com/ பெரிதும் உதவலாம்.இலவசமாக இவர்கள் 25 Gig ஸ்டோரேஜ் இடம் இலவசமாய் தருகிறார்கள். வீடியொக்கள், ஆடியோக்கள், படங்கள், ஈ புத்தகங்கள் என அதிகமாய் சேமித்து வைக்க இப்போதைக்கு இது ஒரு நல்ல சேவை.

மீம்பெரும் கோப்புகளை எளிதாய் பரிமாறிக்கொள்ள இப்போதைக்கு தலைவலி இல்லாத சேவை அளிப்பது http://www.transferbigfiles.com.
1Gig கோப்புவரை இலவசமாய பரிமாறலாம்.பதிவுசெய்தல்,அக்கவுண்ட் வைத்தல,பாஸ்வேர்ட் தொல்லையெல்லாம் இல்லை.


Email PostDownload this post as PDF

Monday, April 16, 2007

நண்பர்கள் உருவாக்கிய சன்

1982-ல் நண்பர்கள் நால்வர் இணைந்து உருவாக்கிய நிறுவனம் தான் Sun Microsystems. இந்நிறுவனத்தின் ஜாவா மொழி இன்றும் மிகப் பிரபலம்.சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் இன்று 38,600 பணியாளர்களுடன் கூடிய ஒரு உலகளாவிய நிறுவனம். இதை நிறுவிய நான்கு நண்பர்களும் Stanford University மாணவர்கள் ஆவர்.

அவர்கள் முறையே
Andreas Bechtolsheim என்பவர் ஒரு மைக்ரோ கணிணியை உருவாக்கினார்;
Vinod Khosla என்பவர் மேற்க்கண்டவரை பணிக்கு அழைத்துவந்தார்;
Scott McNealy என்பவர் திட்டமிட்டபடி கணிணிகளை தயாரித்தார்;
Bill Joy என்பவர் அந்த கணிணிக்கேற்றவாறு ஒரு UNIX OS (BSD)-ஐ உருவாக்கினார்.

ஆப்பிள் போல தங்களுக்கேயான Hardware மற்றும் Operating System-மோடு கூடிய ஒரு நிறுவனம் உருவானது. SUN என்பது Stanford University Network என்பதின் சுருக்கமாகும்.

இதில் வினோத் கோஸ்லா என்பவர் நம்மூர்காரர்.இந்தியா பூனாவில் பிறந்து டெல்லி IIT -யில் தொழில்நுட்பம் படித்து பறந்து போனவர்.

படத்தில் நீங்கள் காண்பது அந்த ஆரம்பகால சன் மைக்ரோ சிஸ்டம் நால்வர்களே.இன்று Scott McNealy மட்டுமே சன் மைக்ரோ சிஸ்டத்தோடு இருக்கின்றார்.மீதியோர் கழன்று போய் வேறுவேறாய் முயன்றுகொண்டிருக்கின்றனர்.

அதிகம் ரிஸ்க் எடுப்போர் பக்கம் தான் அதிஷ்ட தேவதையும் வருவாளாமே?

பின்குறிப்பு:
Java க்கும் Java Script -க்கும் எந்த சம்பந்தமும் கிடையாதாம்.
உண்மையில் Java Script "Netscape"-நிறுவனத்தின் இன்னொரு படைப்பாம்.


Email PostDownload this post as PDF

Friday, April 13, 2007

கார்ப்பரேட் பாடங்கள்Email PostDownload this post as PDF

இணையத்தின் அஸ்திபாரத்தையே அசைக்க பார்க்கும் Hacker-கள்

இணையம் தடையின்றி இயங்க 13 Root DNS செர்வர்கள் வலையத்தில் உள்ளன. அவை DoD,ICANN மற்றும் UltraDNS எனும் மையங்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நீங்கள் www.google.com -னு வெப்சைட் பெயரை டைப் செய்தால் அதை அதற்கு சரியான IPaddress-ஆக மாற்றி நம்மை google தளத்தோடு இணைக்க உதவுவது இந்த 13 DNS செர்வர்களே. (DNS செர்வர்கள் இல்லாவுலகில் www.google.com க்கு பதில் 216.239.37.104 என்ற எண்ணையும் www.yahoo.com-க்கு பதில் 69.147.114.210 என்ற எண்ணையும் டைப்செய்ய நினைவில் வைத்துக்கொண்டே சுற்ற வேண்டியது தான்.)

இந்த DNS செர்வர்களின் சேவை இணையத்தில் மிக முக்கியம். இவை உடைக்கப்பட்டால் மொத்த இணைய உலகமும் ஸ்தம்பித்து விடும். இதைச் செய்யத்தான் சமீபத்தில் Hacker-கள் முயன்றிருக்கிறார்கள். அதில் 3 செர்வர்களை சரியாய் சுமைபடுத்தி வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். பின்னே ஒரே செக்கண்டில் 2 மில்லியன் பாக்கெட்களை அனுப்பிவைத்தால் என்னாவது.

தடவிப்பார்த்ததில் தென்கொரியா அல்லது சைனா ஆசாமிகளாய் இருக்கலாம் என சந்தேகப்படுகிறார்கள். சமீபகாலங்களில் இது தான் மிகப்பெரியதொரு கணிணி உடைப்பு முயற்சியாக கருதப்படுகின்றது. UltraDNS-ன் தலைவர் Ben Petro இவ்வாறு சொல்கிறார்

"We have not seen an attack act in this fashion with this methodology before, We are at risk, e-commerce is at risk and to an extent the global economy is at risk."


Email PostDownload this post as PDF

Thursday, April 12, 2007

இனி புத்தகங்களுக்கு குட் பை!!

சோனி (Sony) அவ்வப்போது அட்டகாசமான கருவிகளோடு மார்க்கெட்டில் வருவது அவர்கள் பொழுதுபோக்கு. தனக்கே உரித்தான நவீன தொழில்நுட்பங்கள், தரம் என அசத்திவருவது உலகறியும். இப்போது இன்னொரு புரட்சிபடைக்கும் பெட்டியோடு வந்திருக்கிறார்கள். Sony Reader ஈ புக் ரீடர்.ஈ புத்தகங்களை படிப்பது முன்னெப்போதும் இல்லாதபடி இனி மிக எளிதாகப் போகின்றது. இன்றைய நிலையில் இந்த மென் புத்தகங்களை (E books) படிக்க மேஜை கணிணி அல்லது மடிக்கணிணியில் உட்கார்ந்து படிக்க வேண்டும்.அது boot ஆகி அப் ஆகி படிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.மேலும் 8 மணி நேர வேலை போக படிக்கவும் கணிணியா-..னு வெறுப்பு வேறு. இதோ ஒரு கையடக்க கருவி சாதாரண காகித புத்தகம் போல மென்,மின் புத்தகங்களை படிக்க உதவுகின்றது.பஸ்ஸில் ஏறி பட்டென திறந்து படிக்கத் தொடங்கிவிடலாம்.7,500 பக்கங்களை இன்னொரு முறை ரீசார்ஜ் செய்யாமல் முழுதுமாய் படித்து விடலாமாம்.மேலும் ஒரு நூலக புத்தகங்களை இதில் உள்ள டிஸ்கில் சேமித்து வைத்துகொள்ளலாம். சாதாரண புத்தகம் போலவே பக்கங்களை புரட்டி புரட்டி படிக்கவேண்டுமாம்.முக்கியமாய் இது கணிணி மானிட்டர் போல் CRT-யோ அல்லது மடிக்கணிணி போல் LCD technology-யோ பயன்படுத்தாமல் e Ink-னு ஒரு
நுட்பம் பயன்படுத்துவதால் கண்ணுக்கு இது காகிதத்தில் படிப்பது போலவே தோன்றுமாம்.நாம் படித்துக் கொண்டிருக்கும் போது அது துளி கூட மின்சாரம் பயன்படுத்தாது என்பது இன்னொரு ஆச்சர்ய விஷயம்.ஓ மறந்துட்டேன் MP3 பாடல்களையும் இது கொள்வதால் இனிய இசை கேட்டுக்கொண்டே படிக்கலாமாம் போங்கள்.காகித நாவல்களை சுமப்பது போய் இனி இந்த சிலேட்டை அனைவரும் சுமந்து கொண்டு திரிவதை சீக்கிரத்தில் பார்க்கலாம்.


Email PostDownload this post as PDF

Wednesday, April 11, 2007

R K லக்ஷ்மண் கார்ட்டூன்கள்

நாளிதழ் "டைம்ஸ் ஆப் இந்தியா" புகழ் மைசூரை சேர்ந்த ராசிபுரம் கிருஷ்ணசாமி லக்ஷ்மண்-ன் (Rasipuram Krishnaswamy Laxman) முகப்பு பக்க கார்ட்டூன்கள் நம்மூரில் மிகப் பிரபலம்.பார்க்க ரசிக்க இங்கே சில சாம்பிள்கள்.


Email PostDownload this post as PDF

Tuesday, April 10, 2007

வலைப்பதிவும்,மினி வலைப்பதிவும்

தினமும் டைரி எழுதுவதுபோல் தினமும் வலைப்பதிவு எழுதும் ஒரு கூட்டம் என்னையும் சேர்த்து இப்பொழுது கணிசமாக கூடியிருக்கின்றது. இந்த வலைப்பதிவுகளுக்கெல்லாம் பிளாகு "Blog" என பெயரிட்டவர் Peter Merholz என்பவராம். இது நடந்த்து 1999-ல்.இதற்கு முன் அதற்கு வெப்லாக் "weblog” என்று பெயர். அப்பெயரை 1997 டிசம்பர் 17-ல் Jorn Barger என்பவர் முதன்முதலாக பயன்படுத்தினாராம்.

இன்று பெரும்திரளாய் ப்ளாகர்கள் பயன்படுத்தும் blogger.com வலைத்தளம் ஆகஸ்டு 1999-ல் Evan Williams மற்றும் Meg Hourihan (Pyra Labs)-ஆல் தொடக்கப்பட்டது. தொடக்கப்பட்ட சில நாட்களிலே அது ஒரு சூப்பர்கிட்.இவ்வாறு வலைப்பூக்கள் இணைய உலகில் சூப்பர்கிட்-ஆகிவருவதைப் பார்த்த கூகிள் (Google) 2003 பெப்ரவரியில் Blogger.com-ஐ வாங்கி தன் சட்டைப்பையில் போட்டுக்கொண்டது.

இன்று ஏறக்குறைய 12 மில்லியன் அமெரிக்கர்கள் வலைப்பூ வைத்திருக்கின்றார்களாம். அதிக அளவில் பிளாகு படிப்போர் யாரென்றால் அது கன்னடாகாரர்களாம். மொத்த வலைப்பதிவாளர்களில் 46 சதவீதம் பேர் பெண்கள் என்கின்றது இன்னொரு கணக்கீடு.


உலக அளவில் சீன நடிகை Xu Jinglei தான் இன்றைய டாப் வலைப்பதிவாளராம்.தினம் 50 மில்லியன் பேர் இவர் வலைப்பூக்கு வருகின்றனரென்றால் பார்த்துகொள்ளுங்கள்.
http://blog.sina.com.cn/m/xujinglei

இப்போதெல்லாம் யார்வேண்டுமானாலும் வலைப்பூ வைத்துகொள்ளலாம். அவ்வளவு எளிதாக பிளாகுகள் வடிவமைக்கப்ப்டுகின்றன.இல்லையென்றால் குறைந்தது மினி பிளாகாவது வைத்துகொள்ளலாம். அதற்கான வசதியை http://www.tumblr.com/ இலவசமாக செய்து தருகின்றது. இங்கே எனது சாம்பிள் மினி வலைப்பதிவைப் பார்க்கலாம். http://pkp.tumblr.com

வலைப்பதிவுக்கும்,மினி வலைப்பதிவுக்கும் இடையே எனக்கு தெரிந்த ஒரே வித்தியாசம் மினி வலைப்பதிவில் பின்னூட்ட வசதி (Comment) கிடையாது என்பது தான்.

இப்படியே வலைப்பதிவுகளின் பயணம் போய்க்கொண்டிருக்கின்றது.இதன் அடுத்த கட்டம்/பரிமாணம் என்ன என்பது தான் இந்த சின்ன மூளைக்கு இன்னும் புரியவில்லை.

(ஆமாம் தமிழில் blog -க்கு வலைப்பூ,வலைப்பதிவு என பெயரிட்டது யாரோ?)


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்