மைக்ரோசாப்ட் எனும் மாபெரும் சாம்ராஜ்யம் கொஞ்சம் கொஞ்சமாய் மரணித்து கொண்டிருக்கின்றது என்கிறார் Paul Graham எனும் டெக் எழுத்தாளர்.
இதற்கு இவர் சொல்லும் காரணங்கள் நான்கு.
1.கூகிள்
2.ஏஜாக்ஸ்
3.அகலப்பட்டை இணைய இணைப்புகள்
4.ஆப்பிள்
கொக்ககோலா போன்ற மகா பிராண்டுகளையெல்லாம் தள்ளிவிட்டு இன்று உலகின் நம்பர் ஒன் பிராண்டாகியிருக்கின்றது கூகிள்.brandz.com சர்வே படி கூகிள் பிராண்ட் உலகில் முதலிடமும்,GE பிராண்ட் இரண்டாம் இடமும், மைக்ரோசாப்ட் பிராண்ட் மூன்றாம் இடமும் வருகின்றது.இன்றைய நிலைப்படி Information is power.அதை தன்னகத்தே கொண்டுள்ள கூகிளார் தான் இன்று முன்னுக்கு நிற்கின்றார்.
ஏஜாக்ஸ் போன்ற தொழில் நுட்பத்தால் இணையம் வழியே பெரும்பாலான கணிணித்தன வேலைகளை செய்யும் வசதி மெதுவாக உருவாகி வருகின்றதால் (உதாரணமாய் ஆன்லைனிலேயே ஆபீஸ்,போட்டோஷாப் பயன்பாடுகள்) இனி டெஸ்க்டாப் அப்ளிகேசன்களுக்கு முடிவுகாலமாம்.Simply desktop applications would be replaced by web applications. இதிலும் கூகிள் முந்திக்கொண்டு Docs and Spreadsheets முதலானவை ஆன்லைனிலேயே தருகின்றார்கள்.ஆகிலும் ரொம்ப தூரம் போக வேண்டியுள்ளது.
இதற்கெல்லாம் வசதியாய் அகலப்பட்டை இணைய இணைப்புகளும் பெருகி வருகின்றன.
ஆப்பிளும் முன்னெப்போதும் இல்லாதது போல் எதிரியின் எதிரி நண்பன் கணக்கில் முன்னுக்கேற கடும் போராட்டத்திலிருக்கிறார்கள்.
ஆக மைக்ரோசாப்ட்டுக்கு கஷ்டகாலம்.சொல்லும்படியாய் Windows,Office தவிர வேறு பிற பெரிதாய் தெரியவில்லை.அவைதான் இப்போதைக்கு bread and butter. அந்த காலத்தில் விலைகொடுத்து வாங்கிய Frontpage முதல் சமீபத்தில் விலைகொடுத்து வாங்கிய Softricity,Connectix PC,GreatPlains CRM போன்றவற்றை அழிக்கிறார்களே தவிர உருவாக்குவதாய் தெரியவில்லை.Redmond அயர்ந்த நித்திரையில்.
மீண்டெழ வாய்ப்புண்டாவெனில் இருக்கிறதாம்.Redmond-ஐ துண்டித்து விட்டு புது வெப்நுட்பங்களை வாங்கினால்/படைத்தால் பிழைக்கலாமாம்.
இதெல்லாம் பற்றி கவலையே இல்லாமல் $25மில்லியன் டிக்கெட்டில் பில்கேட்ஸ் விண்வெளிக்கு சுற்றுலா போகவிருக்கிறார் என்று ஒரு செய்தி சுற்றி வருகின்றது.
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Tuesday, April 24, 2007
மைக்ரோசாப்டின் மரணம்
Posted by
PKP
at
4/24/2007 02:54:00 PM
Labels: Google
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment