அவசரமாய் அமெரிக்காவிலுள்ள ஒரு நண்பரை தொடர்புகொள்ள வேண்டுமா? நீங்கள் ஒரு மின்னஞ்சல் செய்தால் போதும். அது அமெரிக்காவிலிருக்கும் உங்கள் நண்பரின் அலைபேசியில் குறுஞ்செய்தியாக கிடைக்கும்.அதற்கான வசதி நெடுநாட்களாகவே இருந்து வருகின்றது.ஆனாலும் உங்களில் தெரியாதோருக்கு மட்டும் இத்தகவல் இங்கே.
அதாவது நீங்கள் இலவசமாய் நண்பருக்கு மின்னஞ்சல் வழியாய் குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டிருப்பீர்கள். அதை பெறுவோரின் பில் மட்டும் எகிறிக் கொண்டேயிருக்கும்.
இப்படி SMS செய்ய, உங்களுக்கு தெரிய வேண்டியதெல்லாம் அந்நண்பரின் 10 இலக்க கைப்பேசி எண்ணும் அவருக்கு அலைச்சேவை வழங்கும் நிறுவனத்தின் பெயரும் மட்டுமே.
மின்னஞ்லைத் தட்டியதும் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிகளை பயன்படுத்துங்கள்.
AT&T: 10digitphonenumber@txt.att.net
Verizon: 10digitphonenumber@vtext.com
Sprint: 10digitphonenumber@messaging.sprintpcs.com
T-Mobile: 10digitphonenumber@tmomail.net
Nextel: 10digitphonenumber@messaging.nextel.com
Virgin Mobile: 10digitphonenumber@vmobl.com
Alltel: 10digitphonenumber@message.alltel.com
CellularOne: 10digitphonenumber@mobile.celloneusa.com
Omnipoint: 10digitphonenumber@omnipointpcs.com
Qwest: 10digitphonenumber@qwestmp.com
ஒருவேளை நண்பருக்கு அலைச்சேவை வழங்கும் நிறுவனத்தின் பெயர் தெரியாதிருந்தால் கீழ்கண்ட முகவரியை பயன்படுத்தலாம்.
10digitphonenumber@teleflip.com
கனடாவுக்கு இலவச குறுஞ்செய்தி அனுப்ப http://www.zemble.com
பிறபல ஐரோப்பிய நாடுகளுக்கு இலவச குறுஞ்செய்தி அனுப்ப http://mrtextmessage.com
இந்தியாவில் இலவசமாக குறுஞ்செய்தி அனுப்ப நண்பர்கள் V.Subramanian மற்றும் Bala chandran எனக்கு கீழ்கண்ட தளத்தை பரிந்துரைக்கின்றார்கள்.
http://indyarocks.com/sms/index.php
நன்றி.
படபடவென இருகர விரல்களாலும் கைப்பேசிவிசைகளை தட்டிக்கொண்டே சாலையில் நடக்கின்றீர்களா? அவ்வப்போது எதிரேயும் பார்த்தல் அது நம்மெல்லாருக்கும் நல்லது. :)
நண்பர்கள் பலர் அநேக கேள்விகளை எனக்கு சுட்டுத்தள்ளியிருக்கின்றார்கள். அதற்கான பதில்கள் நாளை.ஸர்வதாரி (2008-2009) வருஷ பரந்தாமன் பஞ்சாஞ்கம் தமிழ் வருட நாட்காட்டி. Tamil Year Calender in Tamil pdf format Download. Right click and Save.Download
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Wednesday, April 30, 2008
இலவச குறுஞ்செய்திகள்
Posted by
PKP
at
4/30/2008 09:05:00 PM
1
comments
Labels: Free Services, Websites
Monday, April 28, 2008
மீடியா பிளயரில் பாடல்வரிகள்
Eminem, Enrique, Eagles என்று ஆங்கில MP3 பாடல்களை அதிகமாய் கேட்கும் ரகமா நீங்கள்? உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. இனிமேல் இந்தப் பாடல்களை நீங்கள் உங்கள் கணிணியில் கேட்கும் போது கூடவே அந்த பாடல்களின் வரிகளையும் (Lyrics) காணலாம். அதாவது விண்டோஸ் மீடியா பிளயரானது தன் திரையில் அந்த பாடல் வரிகளை உங்களுக்கு காண்பிக்குமாறு செய்யலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கீழ் கண்ட சுட்டியில் சென்று Lyrics Plugin for Windows Media Player அல்லது Lyrics Plugin for Winamp-ஐ இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவினால் போதும். நீங்கள் ஒரு பாடலை ஓட விட்டால் அது தானாகவே அப்பாடலை புரிந்து கொண்டு அதற்கான வரிகளை இணையத்திலிருந்து இறக்கம் செய்து உங்களுக்கு காட்டி விடும். விருப்பப்பாடல்களின் வரிகளை இனி வலைதளங்களில் தேட வேண்டியதில்லை. உங்கள் மீடியாபிளயரின் திரையிலேயே பார்க்கலாம். என்ன நம்ம ஊரு பாடல்களையும் இது மாதிரி வரிகளோடு கேட்க இன்னும் கொஞ்சம் காலங்களாகும்.
http://www.lyricsplugin.com
நண்பர் RSK கேட்டிருந்தார்.
Hi pkp,
I need some nokia n70 sofwares for my mobile.When I went into search I found so many softwares , but I cannot trust them. (due to virus ) can u tell me some of the softwares for my n70 mobile.bye.
Smiles frm,
RSK.
நீங்கள் நோக்கியாவின் MOSH தளம் போயிருக்கின்றீர்களா? போய் பாருங்கள். பல அலைப்பேசி சம்பந்த பட்ட மென்பொருள்களை இங்கே நீங்கள் இலவசமாக இறக்கம் செய்து கொள்ளலாம். அருமையான தளம். அதன் சுட்டி இதோ.
http://mosh.nokia.com
இது நோக்கியாவின் சொந்த இணைய தளம். அவர்கள் வைரஸ் பற்றி சொல்லும் போது "All uploaded content and applications will be automatically screened for viruses before they are made available for download on MOSH. We cannot guarantee that all uploaded content is free from viruses, so please use good judgement when downloading"
என்கின்றார்கள்.இனி உங்கள் விருப்பம் :)
நிற்க.
நியூயார்க் மாகாணத்தில் வெச்செஸ்டர் கவுண்டியையும் ராக்லேண்ட் கவுண்டியையும் இணைக்கும் அந்த நீண்ட பாலத்தின் பெயர் டேப்பன்ஸீ. இது வழியாய் நீங்கள் ஹட்சன் ஆற்றைக் கடந்தால் ஒவ்வொரு சீசனிலும் அந்த மலைகள் ஒவ்வொரு நிறங்களில் உங்களுக்கு கண்ணுக்கினிய காட்சிகள் தரும். குளிர்காலத்தில் பனிக்கட்டி போல் சில்லுனு கிடக்கும் இந்த ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டோர் பலர், காரோடு சேர்ந்து குதித்தும் தற்கொலை செய்து கொண்டோர் பற்றி கேள்விபட்டிருக்கின்றேன். அதில் சமீபத்தில் சென்னையிலிருந்து வந்திருந்த ஒரு கணிணி மென்பொருள் வல்லுனரும் அடக்கம் என்பது மனதுக்கு மிகுந்த கஷ்டமாய் இருந்தது.வேலை கிடைக்காமல் கஷ்டபட்டதாக அந்த செய்தி சொல்லிற்று. இத்தனை வயதுவரை எத்தனை தடைகளைத் தாண்டி இவ்வளவு தூரம் வந்து கடைசியில் தற்கொலைசெய்யும் அளவுக்கு அந்த இளைஞர் கஷ்டப்பட்டிருக்கின்றார்.இன்றைய மோசமான வேலைவாய்ப்பு நிலவரங்கள், மந்தமான பொருளாதாரம், டாலரின் இறங்குமுகம், பெட்ரோல் மற்றும் அரிசி விலையின் ஏறுமுகம், கடுமையான போட்டிகள் இவைகள் தான் காரணமோ என்னமோ?
சட்டப்படி அமெரிக்காவில் இருக்கின்றீர்கள், கணிணித் துறையில் வேலை தேடிக் கொண்டிருக்கின்றீர்கள், உங்களுக்கு ஆட்சேபணையில்லை எனில் எனக்கும் தெரிவியுங்கள். தகுந்த வேலை உங்களுக்கு கிடைக்க என்னாலான உதவியை செய்ய நான் எப்போதும் தயார். தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளுக்கு உதவும் தி ராமன்ஸ் ஜெனரல் நாலெட்ஞ் பொது அறிவு புத்தகம் இங்கே ஆங்கிலத்தில் சிறு மென் புத்தகமாக. The Ramans Books General Knowledge in English for TNPSC (Tamil Nadu Public Service Commission) Exams pdf ebook Download. Right click and Save.Download
Posted by
PKP
at
4/28/2008 07:50:00 PM
5
comments
Labels: Tamil Lyrics
Sunday, April 27, 2008
ரொம்ப வருத்தம்
இப்படி ஒரு அடல்ட்ஸ் ஒன்லி பதிவை நான் வெளியிடுவேனென்று என்றுமே நான் நினைத்ததில்லை. சொல்லவேண்டிய சில காரியங்களை சொல்லியே ஆக வேண்டிய கட்டாயத்தால் இங்கு சொல்கின்றேன். அப்படி நான் ஒன்றும் புண்ணியவான் இல்லை. நமீதா 200ரூவா ஆபாசம் விசிடி பற்றி பதிவுகளில் கேள்விபட்ட உடனே அதிஷ்டமோ என்னமோ அதற்கான சுட்டியும் நம்மிடம் மாட்டிவிடுகின்றது.எல்லாம் 8 நிமிட கப்சா வீடியோக்கள்.
ஆனால் நிஜ கணவன்கள், நிஜ மனைவிகளின் ரகசிய விடியோக்கள் ரேப்பிட்ஷேர் சுட்டிகளாக வரும் போது தான் ரொம்ப வருத்தமாய் இருக்கின்றது. அதுவும் இந்திய தம்பதிகளின் அந்தரங்க விளையாட்டுக்கள். பெரும்பாலான வீடியோக்களில் அந்த மனைவியோ அல்லது அந்த பெண் நண்பியோ கேமராவை அணைக்க சண்டைபோடுவாள். அதையும் மீறி அவன் திமிராய் கேமராவை ஸ்டெடியாய் செட் செய்து வைத்திருப்பான். அல்லது அந்த ஒளிப்பட பெட்டியை மறைத்து வைத்திருப்பான். ஆண்கள் மேல் வெறுப்பையே வரவைக்கும் வக்கிர நாய்கள் அவன்கள். மற்றும் சில பெண்கள் அப்பாவியாய் விடயம் தெரியாது இருப்பர். அந்த ஆண் நாய் முடிந்த வரை தன் முகத்தை மறைக்க முயன்றுகொண்டே இருப்பான். தன் கூத்துக்களை வீடியோவில் பார்க்கும் சில நிமிட அற்ப சுகத்துக்காக ஆண் மிருகம் செய்யும் அந்த ஆபாச ரெக்கார்டிங் இணையத்தில் ஒரு முறை வந்து விட்டால். பன்னிக்குட்டி மாதிரி. தடுக்கவே முடியாது.சரமாரியாய் பரவிக்கொண்டே இருக்கும். இந்த இளம் தம்பதிகள் சுதந்திரமாய் வெளிஉலகம் வருவது எப்படி?.
ஏதோ ஒன்றோ இரண்டோ முறை ஞானி போல் இண்டர்நெட் சாட்டில் தன்னிடம் பேசிய , சில ஆறுதல் வார்த்தைகள் பேசிய அந்த தொலைதூர ஆணை நம்பி தன்னை முழுசாய் வெப்கேமில் காண்பிக்க அவள் மனம் வருகின்றது. உஷாராய் இவன் ரெக்கார்ட் செய்து அந்த காணொளொயை இணையேற்றம் செய்து விடுகின்றான் அவள் நம்பிக்கையில் மண்ணை வாரி போட்டு விட்டு. இவள் மானமும் இணையக் கப்பல் ஏறிவிடுகின்றது.
எந்த குடும்ப பெண்ணும் அதுவும் நம் நாட்டு குடும்ப பெண்கள் கணவன் அல்லது தனது பாய்பிரண்டு மகிழ்ச்சியாய் இருக்க எது வேண்டுமானாலும் செய்வாள், எதைவேண்டுமானாலும் அனுமதிப்பாள்- ஆனால் தன் உடம்பு இணையத்தில் காட்டிபொருளாய் இருக்க ஆசைப்படுவாளா என்பது சந்தேகமே.
ஸோ... இந்த நவீன உலகில் சில படுக்கையறை ஒழுக்கங்களை உங்கள் நலனுக்காக வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. வெப்கேம், கேமெரா, கேமரா உள்ள செல்போன் இதையெல்லாம் படுக்கையறைக்கு வெளியே மட்டும் கண்டிஷனாய் வைத்திருங்கள்.
மீறி வெப்கேமோ, கேமரா உள்ள செல்போனோ, அல்லது வேறெதாவதொரு கேமராவோ படுக்கையறைக்கு கொண்டுவரும் கணவன் எவனானாலும் அவனை செருப்பால் அடியுங்கள். அப்படியொரு ரசனை அவனுக்கு தேவையில்லை.
நம் பெண்கள் இதற்கெல்லாம் சளைத்தவர்களில்லை என்ற நம்பிக்கை இருக்கின்றது. செய்திகள் வரலாம்.
ஸாரி...நண்பர்களே! இப்படி ஒரு dirty பதிவு! :)இராஜன் முருகவேல் அவர்களின் தமிழ் நாவல் "ஐஸ்கிரீம் சிலையே நீதானோ?" இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Rajan Murugavel "Ice Cream Silaiye Neethano" Novel in Tamil pdf ebook Download. Right click and Save.Download
Posted by
PKP
at
4/27/2008 04:56:00 PM
11
comments
Labels: Security
Saturday, April 26, 2008
பிடிஎப் கோப்புகள் இணைப்பான்
கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய உலகத் தமிழர்களின் அபிமான நாவலான "பொன்னியின் செல்வன்" PDF வடிவத்தில் இணையத்தில் கிடைக்கின்றது. ஆனால் அதில் ஒரு சிக்கல். இந்த நாவல் Part 1,Part 2a,Part 3c அப்படி இப்படியென துண்டு துண்டாகவே பல Pdf கோப்புகளாக கிடைக்கின்றன. இந்த துண்டுகளையெல்லாம் ஒன்று சேர்த்து ஒரு கோர்வையில் ஒரே பிடிஎப் ஆக்க விரும்பினேன். அனைத்து பகுதிகளையும் இறக்கம் செய்தாயிற்று. இப்படி இறக்கம்
செய்த பல பிடிஎப்-கோப்புகளையும் ஒன்றிணைக்க ஏதாவது எளிய இலவச மென்பொருள் இணையத்தில் இருக்கின்றதாவென தேடியதில் ஏமாற்றமே மிஞ்சியது.கிடைத்த பெரும்பாலான மென்கருவிகள் கட்டளைகளை தட்டும் வகையாகவே இருந்தன சொடுக்கி சொடுக்கி எளிதாய் சாதிக்க விண்டோஸ் வகையாக அவை இல்லை.தேட்டத்திற்கு கடைசியில் பலன் கிடைத்தது. அதன் பெயர் PDFill PDF Tools. It does Merging Combining watermarking pdf files for free.
Product Home Page
http://www.pdfill.com/pdf_tools_free.html
நீங்கள் PDFill, GhostScript, Sun Java Virtual Machine இந்த மூன்றும் நிறுவ வேண்டும்.
Download Pdfill Link
http://www.pdfill.com/download/PDFill_Unicode.exe
Download GhostScript Link
http://www.pdfill.com/download/gs857w32.exe
Download Sun Java Virtual Machine Link
http://www.pdfill.com/download/j2re-1_4_1_07-windows-i586.exe
இதைவிட சிறந்த வேறொரு இலவச பிடிஎப் கோப்புகள் இணைப்பான் மென்பொருள் உங்களுக்கு தெரிந்தால் இந்த நண்பனுக்குத் தெரிவிக்கலாம்.
இப்படி பல கோப்புகளை ஒன்றாய் சேர்த்து இணைத்து உருவான கல்கியின் பொன்னியின் செல்வன் எங்கே என்கின்றீகளா? நீங்கள் கீழ்கண்ட சுட்டியிலிருந்து இறக்கம் செய்துகொள்ளலாம்.
Download Kalki Kirushnamoorthy Ponniyin Selvan Complete
இன்னொன்றையும் தேடிக்கொண்டிருக்கின்றேன்.
நண்பர் RI கேட்டிருந்தார்
Dear Sir, I would like to know the Tamil name of the product "FLAXSEED".Thank u.
சிறிய தேடலுக்கு பின் அது ஆளிவிதை (Aali vithai) எனத் தெரிந்து கொண்டேன்
சமீபத்தில் இன்னொன்றையும் கேட்டிருந்தார்.
Dear Sir, I would like to know the Tamil name of BANABA LEAF. Thank you.
ஆகா நல்ல சவால். முதலில் இவர் வாழை இலையை சொல்லுகின்றாரோ வென நினைத்தேன்.அவர் சொன்னார் Banana leaf இல்லை சார் அது Banaba leaf.It is something to do with Diabetic treatment.
கொஞ்சம் இணையத்தில் உலவிப்பார்த்ததில் Banaba-க்கு Kathali (கதலி) என்ற தமிழ் வார்த்தை இருப்பதாக சில சுட்டிகள் சொல்லிற்று.
மீன்களில் சிறியது நெத்தொலி போல் வாழைப்பழங்களில் சிறியது கதலி. அது தான் நான் அறிந்தது.மேலும் பக்கங்கள் புரட்டியதில் சில தகவல்கள் கிடைத்தன.
The `Queen`s Flower` tree, known as `Lagerstromia Speciosa` in science, is a very beautiful sight when in bloom. This is a member of the `Lythraceae` family and a common Indian tree. The Hindi speaking people call it as `Arjuna` or `Jarul`. It is known as `Jarul` in Bengali as well. The tree known as `Kadali` and `Pumarathu` in Tamil language. In Sinhalese, it is `Murutu` while it is named as `Bongor Raya` or `Sebokok` in Malayalam. The English people know it as `Queen`s Crepe Myrtle` or the `Pride of India`.
Pumarathu-வா? அப்படீன்னா? தமிழில் இப்படி கேட்டமாதிரியே இல்லையே.
இதைப் படிக்கும் நண்பர்களே! உங்களுக்கு Banaba Leaf -ன் தமிழ் பெயர் தெரிந்தால் சொல்வீர்களா? . நன்றி. (படத்தில் அந்த பனாபா)வைகோ எழுதிய "பெண்ணின் பெருமை" இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Vaiko - Pennin Perumai in Tamil pdf ebook Download. Right click and Save.Download
Posted by
PKP
at
4/26/2008 11:12:00 AM
2
comments
Labels: Freewares
Tuesday, April 22, 2008
பரிமளா போன பாதை
வெள்ளிக்கிழமை என்றாலே பக்கத்து வீட்டு பரிமளாவுக்கு ஏகத்துக்கும் குஷிதான்.ஏனென்றே எனக்கு தெரிந்ததில்லை. கார் சாவியை சுழற்றிச்சுழற்றி ஏதோ ஒரு பாடலை முணங்கிக்கொண்டே அலுவலகம் விட்டு வீட்டுக்கு வரும் அவள் அரைமணிநேரத்தில் ரெடியாகிவிடுவாள். கிளம்பி போனவள் போனவள் தான். திரும்பிவர நள்ளிரவும் தாண்டிவிடும்.இதையெல்லாம் இங்கு நான் கட்டாயம் சொல்லத்தான் வேண்டுமாவென நினைத்தேன். சொல்லிவிடுவதுதான் நல்லது.அதற்கான காரணத்தையும் அப்புறம் சொல்கின்றேன்.
எங்கு போகின்றாள் இவள்? மாலை முதல் நள்ளிரவுதாண்டியும் அப்படி எங்கே அவள்?
போன வாரம் கிளைமாக்ஸ் நடந்தது.
வெறும்(!) 230 டாலர்கள் தான். ஆன்லைனில் ஆர்டர்பண்ணியிருந்த LandAirSea GPS Tracking Key வந்துவிட்டிருந்தது. சிறுசா தீப்பட்டிமாதிரி. ஒரு USB கொக்கியும் இருந்தது. சில பேட்டரிகள் நாம் போடவேண்டும்.பரிமளாவுக்குத் தெரியாமல் அவள் டொயோட்டா கேம்ரி காரின் அடியில் அந்த டிராக்கிங் கீயை நச்சென ஒட்டவைத்தேன். அதிலிருந்த காந்தம் பரிமளாவின் காரை கெட்டியாகப் பிடித்துக்கொண்டது.
இனி இந்த கார் எங்கெல்லாம் போகுமோ அதெல்லாம் எனக்கு சந்து சந்தாக தெரிந்துவிடும். எவ்வளவு வேகமாக அவள் காரை ஓட்டினாள் (அவள் ஒரு பறக்கும் பாவை) எங்கெல்லாம் எவ்வளவு நேரம் அவள் நின்றாள் எல்லாம் இந்த கீ நோட் செய்து வைத்துக்கொள்ளும். அடுத்த நாள் அந்த Tracking Key-யை எடுத்து வந்து எனது கணிணியில் செருகி பார்த்தால் அத்தனையும் மேப் போட்டு துல்லிபமாய் எனக்கு காட்டிவிடும்.
இதுமாதிரி யாரை வேண்டுமானாலும் நீங்கள் கண்காணிக்கலாமாம் அதுவும் உலக அளவில். அதனால் இனிமேல் "ஒருமாதியான" இடங்களுக்கு போவதாய் இருந்தால் செல்லும்முன் காரை முழுசா சோதனை போட முடிவெடுத்திருக்கின்றேன்.
இன்றைய காலத்தில் தொழில்நுட்பத்தில் நீங்கள் ஆர்வமுள்ளவராய் இல்லாதவராயினும் நிகழ் கால தொழில்நுட்ப விசயங்களை கண்டிப்பாய் தெரிந்திருக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.எது தொழில் நுட்பத்தால் முடியும் எது முடியாது இதெல்லாம் சகலோர்க்கும் தெரிந்திருக்க வேண்டிய நிலை. ஒன்றும் தெரியாத அப்பாவியாய் இருந்தால் தெரிந்தவன் உங்களை கொள்ளை கொண்டு போய்விடுவான்.
சரி பரிமளாவின் கதையை நான் இப்போ எப்படி முடிக்கறது? ஒவ்வொரு மொழி பட இயக்குனர்களும் ஒவ்வொரு விதமாய் முடித்திருப்பார்கள். இல்லையா?
மேலும் அறிய
http://www.trackingkey.com
டிஸ்கிளைமர்: எனது பதிவுகளில் வரும் பக்கத்து வீட்டு பரிமளா முதல் பொன்னம்மா பாட்டி வரை அத்தனைபேரும் கற்பனை கதாபாத்திரங்களே Just In Case :)நெ.சி.தெய்வசிகாமணியின் மரியாதைராமன் கதைகள் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. N C Theiva Sigaamony Mariathai Raman Kathaikal in Tamil pdf ebook Download. Right click and Save.Download
Posted by
PKP
at
4/22/2008 11:42:00 PM
3
comments
Monday, April 21, 2008
போட்டோ ஸ்கிரீன்சேவர்
டிஜிட்டல் கேமரா மூலம் சுடப்பட்ட ஒளிப்படங்களை ஒரே சொடுக்கில் உங்கள் கணிணியின் வால்பேப்பராக்க இன்றைய கணிணிகள் வசதிகொண்டுள்ளன.எந்த படத்தையும் வலது சொடுக்கினால் "Set as Desktop Background" வசதி அப்படத்தை உங்கள் கணிணியின் பிண்ணணி (Wallpaper) படமாக்கும்.
ஆனால் உங்களின் கெனான் ஒளிப்படக்கருவி மின்னி மின்னி உள்வாங்கிய உங்கள் குழந்தையின் புன்னகை படங்களை உங்களின் ஸ்கிரீன்சேவராய் உங்கள் கணிணியில் ஓட விடுவது எப்படி?
கூகிள் வழங்கும் இலவச மென்பொருளான பிக்காசா உங்களிடம் இருந்தால் அது இதுமாதிரி தெரிவுசெய்யப்பட்ட படங்களை உங்கள் கணிணியில் ஸ்கிரீன்சேவராய் ஓட விட வசதியளிக்கின்றது. ஆனால் இன்னும் கொஞ்சம் அதிகமாய் வசதி வாய்ப்புகளோடு .scr வடிவில் உங்கள் குடும்ப படங்களை ஸ்கிரீன்சேவராக்க இதோ ஒரு இலவச மென்பொருள். அதன் பெயர் PhotoMeister. இதனைபயன் படுத்தி நீங்கள் உருவாக்கும் Screensaver-க்கு பலவித எஃபெக்ட்கள் கொடுக்கலாம், போட்டோ தலைப்புகள் போட்டுக்கொள்ளலாம், பிண்ணணியில் இசையை ஓட விடலாம், இப்படி பல கிமிக்ஸ்கள் செய்யலாம். கணிணியும் உங்கள் குதுகல குடும்பத்தை எதிரொளித்துக்கொண்டே இருக்கும்.
Product Home Page
http://www.photomeister.com
Direct Download Link
http://download2.paessler.com/download/photomeister.zipரமணிச்சந்திரன் அவர்களின் நாவல் "உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா..." இங்கே சிறு மென் புத்தகமாக. Ramani Chandran-Unnai thazhividilo,Kannamma...Novel in Tamil pdf ebook Download. Right click and Save.Download
Posted by
PKP
at
4/21/2008 11:48:00 PM
0
comments
Labels: Freewares
இந்தியா .in
இங்கு நீங்கள் பார்க்கும் உலக வரைபடம் சற்று வித்தியாசமானது. அதை சொடுக்கி நீங்கள் பெரிது படுத்திப் பார்த்தால் உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும் கொடுக்கப்பட்டுள்ள டொமைன் பெயரை அது காட்டும்.(இந்தியாவிற்கு .in போன்று)
சரி விஷயத்துக்கு வருவோம்.
எனது முந்தைய இணையவிலாஸ் பதிவினைத் தொடர்ந்து எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்கு இங்கு நான் பதிலளிக்கலாம் என்றிருக்கின்றேன்.
நண்பர் Thameem கேட்டிருந்தார்.
How can i get .com or .in website.
Can you post me the details (including the expences).
நண்பர் Shiva கேட்டிருந்தார்.
புதிதாக இனையதளம் ஆரம்பிக்க யாரிடம் பதிவு செய்வது நல்லது.ஆண்டொன்றுக்கு (தோராயமாக) எவ்வளவு கட்டணம் இருக்கும்.
.com போன்ற சர்வதேச டொமைன் பெயர்களை பதிவுசெய்ய www.godaddy.com போன்ற பேர்போன இணையதளங்களை அணுகலாம். டாலரில் காசு செலுத்த வேண்டும். வருடத்திற்கு ஒரு .com பெயருக்கு 10 டாலர்கள் வரை செலவுஆகும்.
.com மட்டுமல்லாது இந்திய டொமைன்பெயர்களான .in மற்றும் .co.in போன்ற பெயர்களையும் பதிவுசெய்ய www.hostindia.net என்ற இணைய தளத்தை அணுகலாம்.
ஒரு .com பெயருக்கு வருடத்திற்கு ரூ 349 செலவாகும்.
ஒரு .in பெயருக்கு வருடத்திற்கு ரூ 699 செலவாகும்.
மொத்தமாய் பல டொமைன் பெயர்களை வாங்கினாலோ அல்லது பலவருடங்களுக்கு ஒரு பெயரை பதிவுசெய்தாலோ அல்லது பிற சேவைகளையும் சேர்த்துவாங்கினாலோ இந்த விலைகளில் தள்ளுபடிகள் கிடைக்கும்.
நண்பர் Shiva கேட்டிருந்தார்.
நமது தளத்துக்கு யாராவது வருகை புரிந்தால் அதில் நமக்கு லாபம் ஏதாவது வருமா?
சிவா, அது முழுக்க முழுக்க உங்கள் தளத்தின் பயன்பாட்டை பொறுத்தது.
Sify Mall போன்ற நேரடியாக வர்த்தக நோக்கில் வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் எதாவது விற்றுக்கொண்டே இருக்க வேண்டும். காசு வரும்.
Tamil Matrimony போன்று மக்களுக்கு சேவைகள்/உதவிகள் செய்தும் காசுகள் சம்பாதிக்கலாம்.
இன்றைய அளவில் வெளிநாடுவாழ் இந்தியர்களையும், இந்திய பெருநகர மக்களையும் கருத்தில் கொண்டு முழுக்க முழுக்க புத்தம் புதிதாய் அவர்க்ளுக்கு எதாவது செய்தால் சூப்பர் ஹிட் ஆகலாம். உட்கார்ந்து யோசிக்கவேண்டும். அதை மென்பொருள் வடிவாக்க வேண்டும். நிறைய வேலை இருக்கிறது. காலப்போக்கில் பட்டி தொட்டிகள் வரைக்கும் இணைய இணைப்புகள் வரும் போது இதன் போக்கு இன்னும் வீரியமாகும்.
விளம்பரங்கள் வழியும் பணம் பண்ணலாம்.
அமித் அகர்வால் போல் முழுநேர வேலையாய் சீரியசாய் உட்கார்ந்து ஆங்கிலத்தில் பலருக்கும் பயனாகும் படி பிலாகினால் கூகிள் ஆட்சென்ஸ் உதவியால் ஹாண்டா சிஆர்வி வாங்கலாம்.
Html-கூட தெரிய வேண்டியதில்லை. அவ்வளவு எளிதாய் வலைபதிய மென்பொருள்கள் வந்துவிட்டன. பிரபலங்களெல்லாம் வலைப்பதிய வந்து விட்டார்கள். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிர்தாப்பாச்சன் கூட வலைபதிக்கிறாராம். குமுதம் அரசு பாணியில் பைத்தியம் என்றுவிடாதீர்கள். ரசிகர்கள் குஷியில் நூற்றுகணக்கில் பின்னூட்டமிட்டு இருக்கின்றார்கள்.bigb.Bigadda.Com
இல்லை xboard.us போன்ற மசாலா தளங்கள் நிறுவி அதில்வரும் விளம்பர வருவாய் மூலமும் லட்சங்கள் குவிக்கலாம்.
தமிழில் வலைப்பதிவி ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்.
நான் ஒரு மணிநேரத்தில் சம்பாதிப்பதை தர எனது வலைப்பதிவு விளம்பரங்கள் ஒரு மாதம் எடுக்கின்றன.
சமீபத்தில் இணையத்தில் படித்த வாசகம் ஒன்று என்னை சுள்ளென உருவக் குத்தியது போல் இருந்தது.
எதை வேண்டுமானாலும் செய். முயலு. முடி.
ஆனால் உனக்கு சோறு போடும் உன் கல்வி மற்றும் வேலையை மட்டும் மறந்து விடாதே.
அதில் முன்னேற ஏதாவது வாய்ப்புகள் உண்டோவென பார்த்துக்கொண்டே இரு.
ஏனெனில் அதனால் தான் நீ இவ்வளவு தூரமும் வந்திருக்கின்றாய்.
எத்தனை அருமை வாசகம்.
நண்பர் வால்பையன் கேட்டிருந்தார்.
தமிழர்களின் நண்பர் PKP அவர்களே!
கணினி மொழி எதுவுமே தெரியாத எனக்கு, நண்பர்களின் உதவியுடன் html கொஞ்சம் செய்து கொண்டிருக்கிறேன், சட்டம் மற்றும் அதற்குள் எழுத்துக்கள் போன்று செய்யவேண்டும்
எளிய தமிழில் html புத்தகம் கிடைக்குமா?
இங்கே "வலை வடிவாக்கம் ஒரு அறிமுகம்" அத்தியாயம் தமிழில் Pdf வடிவில்.Introduction to Web Design Chapter in Tamil pdf Download. Right click and Save.Download
Posted by
PKP
at
4/21/2008 01:04:00 AM
2
comments
Labels: Tips
Tuesday, April 15, 2008
வறட்சியான வளர்ச்சி
கடந்த இருபது ஆண்டுகளில் விஞ்ஞானம் கண்ட வளர்ச்சி எத்தனை பிரமாண்டம் எனச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. மேலே படத்தை பார்த்தாலே நன்கு புரியும். 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த 1GB ஹார்டுடிஸ்க்கை தூக்க குறைந்தது இருவர் வேண்டும். இன்றைய 1GB SD டிரைவ் விரல் நுனியில் நின்றுவிடுகின்றது. இது இப்படியேப் போனால் பத்துவருடம் கழித்து விரல் நுனியில் என்ன இருக்கும் என யோசித்துகூட பார்க்க இயலவில்லை. எங்கு போகின்றோம்னும் தெரியலை. எனக்கு அவ்வப்போது மின்னஞ்சல் செய்யும் வலையுலக நண்பர் MSK இப்படியாக எழுதுகின்றார்.
"அன்புள்ள பிகேபி ,
உங்களது வலைப்பதிவுகளை தொடர்ந்து வாசித்து வரும் வலையோடிகளில் நானும் ஒருவன்.சமீபகால உங்களது வலைப்பதிவுகளில் ஒரு எழுத்தாளரின் ஆழம்,வலையோடி வாசகர்களின் தேடல் என்ன,தேவை என்ன என்பதைத் தெளிவாக கண்ணூட்டம் காண்பவரின் கருத்தாழம் வெளிப்படுகிறது.வலைப்பின்னல் என்பதும்,வலைத்தேடல் என்பதும் பொழுதுபோக்கு என்ற நிலை மாறி,இப்பொழுது இன்றியமையாத ஒன்றாகி விட்டது. உணவு, காற்று, நீர்,ஒளி இவற்றுக்கு அடுத்தபடியாக இன்றைய மானுடப்பிறப்பின் ஒரு அங்கமாக மாறிப்போனது வலைப்பின்னல்.இன்றைய நாளிலிருந்து 20 அல்லது 25 வருடங்கள் பின்னோக்கிப் பார்க்கும் பொழுது அன்றைய மனிதனின் (வலைப் பின்னலற்ற)வாழ்க்கையில் இந்த உலகையும்,உறவுகளையும் தன்னோடு சார்புபடுத்திக் கொள்ள சிறிதளவேணும் காலம் கிடைத்திருக்கும்.ஆனால் இன்றைய சூழ்நிலையில் இதுவும் இயந்திரமயமாகிப் போனது. மெக்ஸிகோவில் இல்லறம் கொண்ட மகனுடன் வலைப்பின்னலில் முகம் பார்த்துப் பேசி, மனதில் பேரன்பும்,விழிகளில் வெள்ளத்தையும் ஒடவிடும் மதுரைத் தாய்.மலைக்கும் மடுவுக்கும் தொடர்பு கொள்ள இங்கு முடியும் என்றாலும் வலையோடலில் அன்பும்,பாசமும் ஒடமுடிவதில்லை.எங்கு முடியும் இந்த வறட்சியான வளர்ச்சி? உங்களுக்குத் தெரிந்து இருக்கலாம்,தெரிந்திருந்தால் தெரிவியுங்கள் எனக்கு."
என்னத்தை சொல்ல நான். விஞ்ஞானம் வளர வளர ஆயிரம் நன்மைகளை நாம் கண்டாலும் அதற்கேற்றார் போல் நாம் இழக்கும் இழப்புகளும் சொல்லிமாளாதனவே. அந்தகாலப் பெரியோர் சொன்ன வாக்கு் தான் நினைவுக்கு வருகின்றது.
வருந்தி அழைத்தாலும் வராதன வாரா.
பொருந்துவன போம் என்றால் போகா.
:)அட அத விடுங்க. இங்க வாங்க. வித்வான் விஜயசந்தரின் ராகு கேது பொதுப் பெயர்ச்சிபலன் 2008 பார்க்கலாம். Vijayasanthar Raagu Keathu Pearchi Palankal jothidam 2008 in Tamil pdf ebook Download. Right click and Save.Download
Posted by
PKP
at
4/15/2008 11:16:00 PM
3
comments
Labels: Science
அலைப்பேசியும் .jar கோப்புகளும்
முன்பு போல் அலைப்பேசிகள் இனிமேலும் பேசமட்டுமல்லாது இன்ன பிற காரியங்களையும் கையடக்கமாய் செய்ய உதவும் அளவிற்குவந்துவிட்டன. இணையத்தை மேயமுடிகின்றது, மின்னஞ்சல் பொட்டியை பார்க்கமுடிகின்றது, மென்புத்தகங்களை படிக்கமுடிகின்றது அப்படியே இஷ்ட விளையாட்டுகளை இறக்கம் செய்து பல ஆட்டங்களும் ஆடமுடிகின்றது. முன்பெல்லாம் கணிணிகளில் மட்டுமே முடிந்த பயன்பாடுகளையெல்லாம் இப்போது உள்ளங்கையிலேயே செய்ய முடிகின்றன.
உங்கள் அலைபேசியையும் இது மாதிரி முழுவீச்சில் பயன்படுத்தலாம். என்ன கொஞ்சம் ஒசர ரகமான ஃபோனாய் உங்கள் போன் இருத்தல் வேண்டும். அதிக போன் மெமரி இருந்தால் நல்லது. மைக்ரோ SD மெமரி கார்டு வசதி உங்கள் போனில் இருந்தால் நீங்கள் கலக்கலாம் போங்க.
மேல் நான் சொன்ன கைப்பேசி மென்பொருள்களெல்லாம் இணையத்தில் நிறையவே இறக்கத்துக்கு கிடைக்கின்றன. பெரும்பாலும் இவை jar,jad வடிவில் கிடைக்கும். இம்மென்பொருள்களை உங்கள் கைப்பேசிக்கு கடத்தி நிறுவலாம்.(கைப்பேசியிலிருந்து கணிணிக்கு) கைப்பேசியில் ஒரு மென்பொருளை நிறுவ அதன் .jar கோப்பும் அல்லது .jad எனப்படும் இன்னொரு கோப்பும் உங்களுக்குத் தேவைப்படலாம்.
ஒருவேளை .jar மட்டுமே இருந்தால் அதிலிருந்து .jad கோப்பை எளிதாய் jadMaker எனும் இலவச மென்பொருள் வழி உருவாக்கலாம்.
இந்த கைப்பேசி மென்பொருள்களை உங்கள் கணிணியில் சோதனைக்காக ஓட்ட, சரிபார்க்க ஒரு Cell Phone Emulator வேண்டுமாயின் நீங்கள் சன் ஜாவாவின் இலவச Sun Java Wireless Toolkit-ஐ முயன்று பார்க்கலாம்.
இப்போது ஆப்பிள் ஐபோனுக்கே சாப்ட்வேர் டெவலப்மென்ட் கிட் கிடைக்கின்றது.
கைப்பேசியில் பயன்படுத்தும் வடிவில் தமிழில் கீழ்கண்ட சுட்டியில் அநேக ஈபுத்தகங்கள் கிடைக்கின்றன.(Registration Required)http://www.thinnai.info
கைப்பேசியில் பயன்படுத்தும் வடிவில் தமிழில் குரான் கீழ்கண்ட சுட்டியில் கிடைக்கின்றது. (Registration Required)
http://www.mobango.com
கைப்பேசியில் பயன்படுத்தும் வடிவில் தமிழில் பைபிள் கீழ்கண்ட சுட்டியில் கிடைக்கின்றது. (Registration Required)
http://www.christiansmobile.com"பகவத்கீதையின் சாரம்" இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Essence of Bagavathu Gita in Tamil pdf ebook Download. Right click and Save.Download
Posted by
PKP
at
4/15/2008 09:04:00 PM
5
comments
Labels: History
Monday, April 14, 2008
இணைய விலாஸ்
சமீபத்தில் கடலூர் நண்பர் சிவாவிடமிருந்து ஒரு பின்குறிப்பு.
"திரு பிகேபி அவர்களே, உங்கள் பதிவுகள் பலருக்கு உபயோகமாய் இருக்கும். நான் கடலூரில் வெளியிடும் ஒரு விளம்பர இதழில் தங்களின் FREE HIDE FOLDER குறித்து செய்தி (பக்கம் 2ல்) வெளியிட்டுள்ளேன். கவனிக்கவும் -நன்றி, சிவா
http://tamilnadu-freead.blogspot.com
http://shiva-telecom.blogspot.com"
மகிழ்ச்சியாய் இருந்தது. எங்கோ ஒரு மூலையிலிருந்து எழுதப்படும் ஏதோ ஒரு விஷயம் எங்கெல்லாம் எதிரொலிக்கின்றதென பாருங்கள். அவரது "கடலூர் பார்வை" எனும் அந்த விளம்பர இதழை சிறிது நோட்டமிட்டபோது சில தகவல்களை எல்லாருக்கும் பொத்தாம் பொதுவாய் சொல்லலாம் போல் தோன்றியது.
அதில் முக்கியமானது Internet Presence-ஐ பற்றியது.அதாவது அவரவர் இணைய விலாசம். பிரபல தமிழிலக்கிய எழுத்தாளர்கள் முதல் சாதாரண தியாகராய நகர் நகைக்கடை வரை தங்கள் இணைய விலாசத்தை பிரசித்திப்படுத்திக் கொண்டு வரும் நேரம் இது.
இந்த நேரத்தில் நண்பர் இத்தனை சிரமெமெடுத்து வெளியிடும் தனது காகித இதழில் ஒரு blogspot.com முகவரியை தனது இணைய விலாசமாக அறிவித்திருப்பது கஷ்டமாயிருந்தது. நண்பரே உடனே ஒரு .com-மோ அல்லது .in பெயரோ இணையத்தில் பதிவு செய்யுங்கள். நீங்கள் நினைப்பது போல் ரொம்ப செலவெல்லாம் ஆகாது. ஆனால் It will pay you back in long run.
தயவுசெய்து பெயர் பதிவு செய்யும் போது நண்பர் தமிழ்நெஞ்சம் செய்தது போல் பெயர் தெரிவு செய்யவேண்டாம். அவரது முகவரி Tamil2000-ஆ Thamiz2000-ஆ Tamiz2000-ஆ அல்லது Thamil2000-ஆ என்று இன்றுவரை எனக்கு தெரியாது. ரொம்ப குழப்பம். ரொம்ப தேட வேண்டிவரும். எழுத்து பிழை உங்கள் தளம் தேடிவருவோரை வேறெங்காவது இழுத்துச் செல்லும்.எளிதாக ஒரு பெயர் வைங்க. Shivatelecom.com-இன்னும் பதிவுசெய்ய இருக்கே. யாராவது அப்பெயரை எடுத்துவிடும் முன் முந்திக்கொள்ளுங்கள்.
நண்பர் தமிழ் நெஞ்சம் மன்னிச்சுக்கோங்க.உங்கள் பெயரை இங்கு இழுக்கவேண்டி வந்தது. :)
அதுபோல் உங்கள் தளமுகவரியில் இப்போது உள்ள குறியான - (அதாங்க ஹைபன்)-ஐ தயவுசெய்து தவிர்க்கவும். பின் ஒருகாலத்தில் உங்கள் முகவரியை பிறருக்கு வாய்மொழியாய் சொல்லும் போது ரொம்ப கஷ்டமாயிருக்கும்.
நன்கு வளர்ந்த நிறுவனங்கள், பிரபலங்கள் கூட இன்னும் Yahoo mail, Gmail, Rediff mail பயன்படுத்துவது சோகமான விஷயம்.
suntvarattaiarangam@yahoo.com -இப்படி ஒரு நீண்ட முகவரி வைத்தால் ஸ்பெல்லிங் தவறில்லாமல் இந்த மின்னஞ்சல் முகவரியை எப்படி தட்டமுடியும்?
சன்டிவி நீங்கள் கேட்ட பாடல் nkp@sunnetwork.in- That is cute. அப்படி ஒரு நிகழ்ச்சி இப்போ இருக்குதா என்ன?
உதாரணத்திற்கு எனது முகவரியான admin@pkp.in-ஐ Gmail வழி பயன்படுத்தவும் வழி இருக்கின்றது. அதுதான் Gmail for Organizations. இதனால் பயன்:எனது மின்முகவரியோ எனது தளம்பெயர்சொல்லும், ஆனால் அதேவேளை நான் பயன்படுத்துவதோ என் அபிமான ஜிமெயில் மென்பொருளாய் இருக்கும்.
என்னைபோல் விளையாட்டாய் இணையத்தில் புகுவோர் ரொம்ப சிரத்தை எடுக்க தேவையில்லை.
ஆனால் உங்களைப்போல் வியாபாரரீதியில் இணையத்தில் புகும் போது இதெல்லாம் (Branding) ரொம்ப முக்கியம்.
எல்லாம் நண்பர் சிவாவுக்காக எழுதினேன். புதிதாக சாதிக்க கிளம்பியிருக்கிறாரே. பட்டையை கிளப்புங்க சிவா.வைகோவின் "தமிழ் இசைத்தேன்" இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Vaiko Tamil Isai Thean in Tamil pdf ebook Download. Right click and Save.Download
Sunday, April 13, 2008
விண்டோஸ் ஹீரோஸ்
பதிவுகள் போட்டு ரொம்ப நாளாயிற்று. இல்ல இணைய இணைப்பு மக்கர் பண்ணியதால் அதை சரிசெய்யும் வரை அமைதி காக்கவேண்டியிருந்தது. அலுவல் இடத்திலிருந்து பிலாகு பதிக்கும் பாவங்களை செய்யக்கூடாதுவென தனி பாலிசியே வைத்திருக்கின்றேன். மேய்வதோடு சரி. மின்னஞ்சல் வழி தொடர்புகொண்டோரிடம் மட்டும் பேச்சை நிறுத்தவில்லை.
இங்கு வருபவர்களில் பலரும் கணிணியையும் அலைபேசியையும் அக்குவேராய் ஆணிவேராய் பிரிப்பவர்கள் போலிருக்கின்றது. பலவாறாய் வினாக்கள் வருகின்றன. முடிந்தவரை பதில் மின்னஞ்சல் செய்கின்றேன்.
விண்டோஸ் செர்வர் 2008-ஐ ஆங்காங்கே விழா வைத்து வெளியிட்டு வருகின்றார்கள்.கூடவே SQL Server 2008 மற்றும் Visual Studio 2008-ஐயும் வெளியிடுகின்றார்கள்.HHH அதாவது "heroes happen here" இதுதான் இந்த முறை மைக்ரோசாப்டின் பஞ்ச் டையலாக். வாடிக்கையாளர்களை ஹீரோக்கள் ஆக்குகின்றார்களாம். இந்த மாதிரி கவர்ச்சியாய் மார்கெட்டிங் செய்தே கவர்ச்சியாய் மென்பொருள் செய்தே இதுவரைக்கும் தப்பிபிழைத்திருக்கிறது. கவர்ச்சிக்குத் தானே எங்கும் முதலிடம்.
விண்டோஸ் செர்வர் 2008-ஐ பொருத்தவரை
VMware-ஐ துரத்த ஹைப்பர்-வி(Hyper-V),
விண்டோவே இல்லாமல் விண்டோஸ் ஓட்ட Server Core,
மொத்த டிஸ்கையும் என்கிரிப்ட் செய்து பாதுகாக்க Bitlocker,
எளிய ஸ்கிரிப்டிங்காக PowerShell
-ன்னு பல சமாச்சாரங்கள் உள்ளது. மற்றபடி மேலே படத்தில் நீங்கள் பார்ப்பது போல பிரம்மாண்டமாய் நம்ம ஷங்கரின் ரோபோ ஒன்றை போட்டு பயமுறுத்தும் அளவுக்கு அப்படி அதில் என்ன இருக்கின்றதுவென தெரியவில்லை. தேடிப் பார்க்கவேண்டும்.நண்பர் தமிழ் நெஞ்சம் கேட்டிருந்தார்.
Very very OLD MS-DOS based Game (DAVE).
For me, My system is not supporting this old game DAVE.
The screen is splitted.. and graphics is not supporting for my machine.
What to do? How can I play this MS-DOS based old DAVE game in my machine?
Can you please tell me the idea to get rid of this problem.
Thanks
by
TamilNenjam
ரொம்ப நன்றி தமிழ்நெஞ்சம்!!. பழைய நினைவுகளுக்கு கொண்டுபோய்விட்டீர்கள். :) அந்தகாலத்தில் (?) பாழாப்போன கணிணி லேப்-க்கு போனால் எல்லா கணிணியிலும் இந்த "டேவ்" தான் ஓடிக்கொண்டிருக்கும்.
துரதிஷ்டவசமாக என் இரண்டு windows XP கணிணியிலும் இந்த டேவ் நன்றாக வேலை செய்கின்றது.அதனால் உங்கள் தொல்லையை இங்கே என்னால் கொணன்று சோதிக்க இயலவில்லை.
ஆனாலும் ஒன்றை முயன்றுபார்க்கலாம்.
Right click Dave.exe, and choose "Properties".
Click the "Program" tab, and check the "Maximized" checkbox in the Run box.
Click the "Screen" tab, and click on the "Full-screen" radio button.
Click the "Compatibility" tab, and check the box beside "Run in compatibility mode", and choose "Windows 95" in the dropbox. Check the three other boxes:
"Run in 256 colors"
"Run in 640x480 screen resolution" ,
and "Disable visual themes".
Click "Apply" and then click "OK" to close the box.
இப்போ மூச்சை பிடித்துக்கொண்டு ஓட்டி பாருங்கள்.
Best of luck.நமது சித்திரை முதல்நாள் ஸ்பெஷல் சுஜாதாவின் "கடவுள் இருக்கிறாரா?" மென்புத்தகம் Sujatha Kadavul Irrukkirara Tamil e-book Download. Right click and Save.Download
Sunday, April 06, 2008
இப்படியும் ஒரு தமிழ் சேவை
பலரும் பலவிதமான வழிகளில் சமுதாயத்திற்கு பல சேவைகளையும், தேவையுள்ளவர்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகின்றார்கள். சேவைகளிலே சிறந்த சேவை எது என மகாகவி பாரதியாரை கேட்டால் அவர் சொல்லுவார் "அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கியொளிர நிறுத்தல் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" என்று.
மாறிவரும் உலகச் சூழலில் நம் வாழ்க்கை முறைகளும் வெகுவாய் மாறிவிட்டன. முன்பெல்லாம் வேலைக்காக வயக்காட்டுகளுக்கும், பண்ணை தோப்புகளுக்கும் போனார்கள். அதன் பின்னர் வேலைகளுக்காக மில்லுகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் போனார்கள். இப்போதெல்லாம் வேலைக்காக அடுக்குமாடி கட்டடங்களுக்கு விரைகின்றார்கள். உலகின் உற்பத்தி துறையை சீனா மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக்கொண்டாலும் சேவை மற்றும் கணிணி மென்பொருள் உருவாக்குவதில் நம்மவர்கள் உஷாராய் இருந்து பல லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை நம் ஊர் கொண்டுவந்தார்கள். இந்த கணிணி யுக பூம்மினால் நம்போன்ற நடுத்தர வர்க்கத்தினரால் கொஞ்சம் தலை நிமிர முடிந்தது.
இந்த வாய்ப்பில் எங்கோ சத்திரப்பட்டிகளிலும் ஆண்டிப்பட்டிகளிலும் அரசுபள்ளிகளில் தமிழில் படிக்கும் மாணவர்களும் பங்குபெறவேண்டும், ஜப்பானியர் போல் நாமும் தாய் மொழியில் படித்தால் இன்னும் அதிகம் சாதிக்க முடியும் என்ற நோக்கில் கணிணி தொழில் நுட்ப பாடங்களை எளிய தமிழில் மொழிமாற்றி அவற்றை இலவசமாக ஏழை மாணாக்கர்களுக்கு வழங்கும் அரியதொரு பணியை செய்து வருகின்றார் ஒரு மனிதர். அவர் பெயர் பாக்கியநாதன்.
இவர் ஏற்கனவே போட்டோஷாப், கோரல்டிரா, பேஜ்மேக்கர், எளிய தமிழில் VC++, எளிய தமிழில் ஜாவா, எளிய தமிழில் யூனிக்ஸ், எளிய தமிழில் ஆரக்கிள், ஆரக்கிள் கட்டளை குறிப்புகள், Ms-Word கேள்விப்பதில்,C Function quick Reference முதலான நூல்களை தமிழில் எழுதியுள்ளார். விரைவில் PHP5 & MySQL, Tally,E-Publishing,Excel-2007 Tips முதலான நூல்களும் தமிழில் வரவிருக்கின்றனவாம்.
திரு அப்துல் கலாம் ஐயா போல் அரசு பள்ளியிலேயே முழு படிப்பையும் தமிழிலேயே படித்து முன்னுக்கு வந்து இன்றைக்கு முன்ணணி நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொருவரும் சில டாலர்கள் இவருக்கு கொடையாக வழங்கினாலே இப்பணியை இவர் மென்மேலும் சிறப்பாக செய்ய அது நிச்சயம் உதவியாய் இருக்கும்.
நான் பயணித்து வந்த அந்த கடினமான பாதையை கொஞ்சம் திருப்பிப்பார்த்தேன். சொல்லவேண்டுமென தோன்றிற்று. சொல்லிவிட்டேன். :)
மேலும் விவரங்களுக்கு அவரது இணையதளம் பார்க்கவும்
http://www.tamilsoftwarebooks.org
அவரது விலாசம்
Bakkia Nathan
Bakkiam Consultancy Services
Old No: 60, New No: 127,
Angappa Naicken Street,
Parrys, Chennai-600 001.
Phone: 044-43517072
Mobile: 9840324409
email: author@tamilsoftwarebooks.orgவளர்தமிழ் மன்றம் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை -யின் படைப்பு "கணிப்பொறி கலைச்சொல் அகராதி்" தமிழில் மென்புத்தகம் ValarTamil Mantram Anna University Chennai "English-Tamil Computer Technology Dictionary" in Tamil e-book Download. Right click and Save. Download
Posted by
PKP
at
4/06/2008 12:19:00 AM
10
comments
Labels: Tamil
Thursday, April 03, 2008
கணிணி மொழிகளின் நிலவரம்
தற்செயலாக இணையத்தில் நீங்கள் பக்கத்தில் காணும் வரைபடத்தை காண நேரிட்டது. இன்று மார்க்கெட்டில் சூடான கணிணி பாஷை எது? எந்த கணிணி புரோகிராமிங் மொழி முந்தி செல்கின்றது? எது பிந்துகின்றது என்பவற்றை இது அழகாய் காட்டுகின்றது. ஜாவா கொஞ்ச நாட்களாகவே சூப்பர்ஸ்டார் தான்.2005-ல் அதற்கு "பாபா" நேரம் போலும். அவ்வருடம் சி அதை முந்தி டாப்பிலிருந்தது. எனினும் பீனிக்சாய் எழும்பி அசைக்கமுடியா கணிணி மொழியாய் ஜாவா இன்று நிற்கின்றதாம். கடந்த வருடம் மூன்றாவது
இடத்திலிருந்த சி++-ஐ ஒரே அடியாய் அடித்து தள்ளிவிட்டு விசுவல்பேசிக் இந்த வருடம் மூன்றாம் இடத்திற்கு வந்துவிட்டது.
ஒரு வரிகூட எழுத தெரியாவிட்டாலும் என்னமோ எனது அபிமான கணிணிமொழியான பிஎச்பி-க்கு நாலாவது இடம் தான்.அது ரொம்ப ஏறுவதும் இல்லை.ரொம்ப இறங்குவதும் இல்லை.ஸ்டெடி பார்டி.அதற்கு அப்புறம் தான் பெர்ல், பைதான் -லாம் வருகின்றது. நோட்டம் விட்டதில் 100-க்கும் மேல் இது மாதிரி கணிணி மொழிகள் உள்ளனவாம்.உங்களுக்கும்
தெரியட்டுமேன்னு இங்கே பட்டியலிட்டேன்.
அநியாயம் என்னன்னா எனக்கு நன்னா தெரிந்த கணிணிமொழியான அதன் தாய்மொழியாம் பைனரியை இப்பட்டியலில் காணோம். ஜூட்.
மேலும் அறிய
TIOBE Programming Community index for March 2008
Java,C,(Visual) Basic, PHP,C++,Perl, Python,C#,Delphi,Ruby, JavaScript,D, PL/SQL,SAS, COBOL,Pascal, Ada,Lisp/Scheme,FoxPro/xBase,Lua,ActionScript,ColdFusion, Logo,Fortran, RPG , MATLAB,Prolog,Awk,ABAP,Transact-SQL, LabView,Groovy,PL/I, Smalltalk,Haskell, Bash, CL (OS/400),Euphoria,Ch ,Tcl/Tk,ML,Forth,Natural,Lingo,R,Objective-C,REXX, Factor, Erlang,VBScript ,ABC, Algol, Alpha, APL, Applescript, AspectJ, Beta, Boo, Caml, cg, Clean, Csh, cT, Curl, DC, Dylan, Eiffel, Felix, Focus, Fortress, Icon, IDL, Inform, Io, J#, MAD, Magic, Maple, Mathematica, Modula-2, MOO, MUMPS, Oberon, Occam, Oz, PILOT, Postscript, Powerbuilder, PowerShell, Progress, Q, REALbasic, Rebol, S-lang, Scala, SIGNAL, SPSS, Verilog, VHDL, XSLT
அதென்னங்க C,C++ மொழிகளையும் தாண்டி D மொழி வந்த பிறகும் C தான் இன்னும் நம்பர் ஒன்.ஏன்? ஒன்னுமே புரியலீங்க. :)நண்பர் Sen22 கேட்டிருந்தார்.Hi PKP,I Just joined the BCA direct 2nd year.. i need detail C++ book in tamil..Senthil Kumar Bangalore
Here you go.
"C++ தமிழில்" தமிழில் ஒரு தொழில் நுட்ப பாடநூல் மென்புத்தகம் "C++ in Tamil" A Technical Guide in Tamil e-book Download. Right click and Save.Download
Wednesday, April 02, 2008
ஒண்ணாய் இருக்க கத்துக்கனும்
மனிதனை ஒன்றாயிருக்க விட்டால் அவன் நம்மளையே கவுத்துடுவான்னு நினைச்சதாலோ என்னவோ கடவுள் ஊருக்கு ஊரு அவனிடையே பிரிவினைகளை விட்டு வைத்தான்.
ஜாதியால் அவர்களுக்குள் சண்டை போட விட்டான்,
மதத்தால் ஒன்றாய் இருந்தவர்களை பிரிய விட்டான்,
மொழியால் பிரியவிட்டு நன்றாக அவர்களை முட்டி மோத விட்டான்,
கலரால் துரைகள் அடிமைகளென பிரித்து அவர்களை வகைவகையாக்கினான்,
நிலத்தால் தங்களுக்குள்ளே எல்லைகளை பிரித்து மாறிமாறி சேற்றை வீச வைத்தான்.
மொத்த மனித இனமும் சேர்ந்திருந்தால் அது கடவுளுக்கு தான் ஆபத்து போலும்.
இன்னொரு கோணத்தில் பார்த்தால் இத்தனை பிளவுகளும் பிரிவுகளும் அவனிடையே இல்லாதிருந்தால் இத்தனை தூரம் அவன் வளந்திருப்பானா என்பதும் சந்தேகமே.
கடந்த வருடம் ஒரு குறிப்பிட்ட வாரத்தில் முழு இந்தியாவும் தீபாவளி கொண்டாடிக் கொண்டிருந்தது. அராபிய தேசங்களில் ஈட் தினம் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அமெரிக்கா ஹாலோயீன் கொண்டாடியது.
இந்த வருடம் ஒரு குறிப்பிட்ட நாளில் இந்துஉலகம் ஹோலி கொண்டாடிக்கொண்டிருந்தது, இஸ்லாமிய உலகம் இன்னொரு ஈட் கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். கிறிஸ்தவர்கள் ஈஸ்டரும் யூதர்கள் ஏதோ ஒரு தங்கள் பண்டிகை ஒன்றையும் கொண்டாடிக்கொண்டிருந்தார்கள்.
இப்படி ஒவ்வொரு வருடமும் ஒரு இடத்தில் கொண்டாடப்படும் பண்டிகையானது இன்னொரு இடத்திலும் இன்னொரு வடிவில் கொண்டப்படுகின்றது.என்ன ஒன்றிரண்டு நாள் வித்தியாசமிருக்கும், பெயர் வேறிருக்கும். அவ்வளவுதான்.
பாருங்கள் மனிதரையெல்லாம் அடையாளம் தெரியாத மெல்லிய கயிறொன்று தொட்டு செல்வது போலுள்ளது. யாருக்கும் அது கண்ணுக்கு தெரியவில்லை.
அக்கயிறால் பாவம் நம்மை கெட்டியாய் கட்டவும் முடியவில்லை.
"இமயச் சாரலில் ஒருவன் இருமினான்
குமரி வாழ்பவன் மருந்து கொண்டு ஓடினான்"-னு ஆசையாய் பாடினார் பாவேந்தர்.
கலியுகத்தில் ரொம்ப தான் ஆசைப்பட்டு விட்டாரோ??
"சரித்திரக் கதைகள்" தமிழில் வரலாற்றுச் சிறுகதைகளின் தொகுப்பு சிறு ஈப்புத்தகமாக Sariththira Kathaikal in Tamil, Historic Short Stories e-book Download. Right click and Save.Download