உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, October 31, 2007

விற்பனைக்கு: அமெரிக்கா

பொருளாதார பாடத்தில் அவ்வளவாய் ஆர்வம் இல்லாதவர்களையும் ஆர்வமூட்டி விடும் வகையிலிருக்கின்றது இன்றைய உலக பொருளாதார நிலவரம். என்னமோ சென்செக்ஸ் ஏறுது ஏறுது என்கின்றார்கள். கூடவே தங்கம் விலையும் கச்சா எண்ணெய் விலையும் கிடு கிடு வென ஏறுது. அமெரிக்க டாலரும் அதை சார்ந்த கரன்சிகளும் விடாமல் சரிந்து கொண்டே இருக்க, பங்கு சந்தை உபயத்தால் பணம் குவிக்கும் ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி தான் ஒன்றும் உலக முதல் பணக்காரர் இல்லை என மறுக்க சுவாரஸ்யமாய் போய்கொண்டிருக்கிறது உலக எக்கனாமிக்ஸ். இந்திய பணம் மதிப்பு பலமாக பலமாக அது துபாய் கட்டுமான பணியாளர்கள் கையையும் கடிப்பதால் அவர்களும் வீதிக்கு வந்து போராட வேண்டிவந்துவிட்டது.

அமெரிக்க டாலர் மதிப்பு சரிய சரிய கனடியன் டாலர் மதிப்பு உயர உயர வீக்கெண்டுகளில் கனடியன் கார்கள் அமெரிக்கா வருகின்றனவாம் சாப்பிங் செய்ய. அவர்களுக்கு அமெரிக்காவில் பொருள்கள் சீப்பாய் கிடைக்கின்றன. பொருள்கள் மட்டுமல்ல அனைத்து வகையறாக்களும் மதிப்புகுறைந்து விட்டன. உதாரணமாய் கனடாவின் Toronto-Dominion Bank அமெரிக்காவின் Commerce Bancorp -யை வாங்கப்போகின்றது சீப்பாக. எப்படி? 2006-ல் வாங்கப்பட்டிருந்தால் 9.5 பில்லியன் கனடியன் டாலர்கள் அது அமெரிக்காவுக்கு கொடுத்திருக்க வேண்டும்.ஆனால் இப்போ அமெரிக்க டாலர் சரிந்ததால் 8.5 பில்லியன் கனடியன் டாலர்கள் கொடுத்தால் போதும். 1 பில்லியன் கனடியன் டாலர்கள் லாபம். இப்படி அமெரிக்க நிறுவனங்கள் பல அவசர அவசரமாய் சமயம் பார்த்து உலக நாடுகளால் சீப்பாய் வாங்கப்படுகின்றன. கூடவே அந்நிறுவனத்தின் பணம் காய்கும் பேடன்ட்களும். அமெரிக்கா முழுவதும் 2 மில்லியன் வீடுகள் காலியாய் கிடக்கின்றன வாங்க யாருமின்றி.

டாலர் சரிவால் மொத்த அமெரிக்காவும் விற்பனைக்கு இருக்கின்றது சீப்பாக. யாரெல்லாம் சமயத்தை பயன் படுத்தி கொள்ளப்போகிறார்களோ தெரியவில்லை. ரொம்பபேர் டாலர்களை தங்கமாக மாற்றிக்கொண்டிருக்க உலக பணக்காரர் வாரன் பப்பெட்டும் தன் டாலர் கரன்சிகளையெல்லாம் வேறு கரன்சிக்கு மாற்றிவிட்டதாக ரேடியோவில் சொன்னார்கள். நெசமாவா தாத்தா?


"குழந்தைகள் பாடல்கள்" தமிழில் நர்சரி மழலையர் ரைம்ஸ் மென்புத்தகம் Nursery rhymes for kids in Tamil song e-book Download. Right click and Save.http://static.scribd.com/docs/agyojotnizk2l.pdf


Email PostDownload this post as PDF

Friday, October 26, 2007

மீட்டிங் ஆத்திச்சூடி

பெரும்பாலான கார்ப்பரேட் வாசிகளுக்கு மீட்டிங் என்றாலே அலர்ஜி. சிலருக்கு அதுதான் வேலையே. போரடித்தால் மீட்டிங் போட்டு விடுவார்கள். ஸ்லைடுகளை போட்டு அவசியம் அனாவசியம் புரிந்தவை புரியாதவை எல்லாம் பேசுவார்கள். :) இங்கே மீட்டிங் பற்றிய ஆத்திச்சூடி ஆங்கிலத்தில்.

(Click the picture to enlarge)

ABC of Meetings

Ask do you need this meeting?
Before starting define GRPI
      Goal of the meeting
      Roles of the people present
      Process to be followed
      Interpersonal behaviors that are expected
Cut time Max of 2 hours,strive for 1
Decide Actions,Action parties and target dates
Expect Key behaviors.
அட! இதை வைத்தே ஒரு மீட்டிங் போடலாம் போலிருக்கின்றதே...


தமிழில் கவிதைகள் மென்புத்தகம் Tamil Kavithaikal e-book Download. Right click and Save.http://static.scribd.com/docs/p9zi9r814kok.pdf


Email PostDownload this post as PDF

போலி orkut வெப்தளம்

ஆர்குட் பயனர்கள் கொஞ்சம் உசாராய் இருக்க வேண்டிய நேரம் இது. அநேக போலி orkut வெப்தளங்கள் உலாவருகின்றன. இவற்றின் முக்கிய நோக்கம் உங்கள் Google Account பயனர் பாஸ்வேர்டை திருடுவதே. அது வழி பிரபலமாய் இருக்கும் பிற Google தளங்களில் உட்புகுந்து உங்கள் தகவல்களை திருடுவதோடு "Google Checkout" வழி உங்கள் பணமும் திருடு போக வாய்பிருக்கின்றது. முன்பெல்லாம் பெரிய பாங்க் வெப்சைட்டுகளுக்கு தான் இது போன்ற போலி தளங்கள் வைத்திருந்தார்கள். இப்போது இது போன்ற Social Networking தளங்களையும் ஹாக்கர்கள் குறிவைத்திருப்பது அவ்வளவு நல்ல நிலவரமாய் தெரியவில்லை. யாரெல்லாம் ஏமாறப்போகின்றார்களோ?. (மேலும் விவரங்களுக்கு நம் முந்தைய போலிவெப்சைட்கள் பதிவுக்கு செல்லவும்)

எப்படி போலி தளங்களை கண்டுபிடிப்பது:

ஒரிஜினல் தள விலாசம் இப்படியாய் போகும் (அதாவது நிஜ கூகிள்.காம் போகின்றீர்கள்)
https://www.google.com/accounts/ServiceLogin?service=orkut &continue=http%3A%2F%2Fwww.orkut.com%2

Picture of original Orkut website.Takes you to google.com page


போலி தள விலாசம் இப்படியாய் போகும் (அதாவது போலி 00bp.com க்கு போகின்றீர்கள்)
http://www.orkut.00bp.com/Community.aspx.cmm=2160605.html

Picture of fake Orkut website.Takes yo to hackers 00bp.com page


இன்னொரு விதம் போலியை கண்டுபிடித்தல் உங்கள் பிரவுசரின் கீழே ஒரு திண்டுக்கல் பூட்டின் படம் வரும். அதை இரட்டை கிளிக்கினால் அதில் Issued to www.google.com என எழுதி இருக்கும்.

When you visit original Orkut site a lock appears down right side of your browser.Double click to view the certificate.It should say Issued to www.google.com


திருட்டு பயலின் போலி தளத்தில் பூட்டு இருக்காது.இருந்தாலும் அதை இரட்டை கிளிக்கினால் Issued to www.google.com என இருக்காது.

When you visit fake Orkut web site you cannot find a lock


என்ன செய்ய? 30 நொடிக்கொருமுறை அடிக்கடி மாறும் பாஸ்வேர்டை தரும் SecureID dongle தீர்வுகள் வரும் வரை பக் பக்கென தான் வெப்பை பயன்படுத்த வேண்டியுள்ளது.


இளங்கோ சேரனின் "தமிழ் இலக்கணம் எளிய ஆங்கிலத்தில்" தமிழ் பாடநூல் மென்புத்தகம் Thamil Paadanool by Elango Cheran Tamil Grammar in Easy English e-book Download. Right click and Save.http://static.scribd.com/docs/2d7j4ncnvr077.pdf


Email PostDownload this post as PDF

Thursday, October 25, 2007

விக்கி மாஃபியா

விக்கி மாஃபியா என்றதும் "இது ரொம்ப முக்கியமோ? அடுத்தவன் கம்ப்யூட்டர கெடுக்க நல்ல வழி சொல்றீங்க"- என்று சொல்லும் படியான பதிவு அல்ல இது. இது விக்கிமேப்பியா (Wikimapia.org) பற்றிய பதிவு. :)

இந்தியாவில் இண்டர்நெட் எத்தனையாய் ஊடுருவியிருக்கின்றது என்பதற்கு இந்த விக்கிமேப்பியாவே சாட்சி. நம்மூரில் பிரபலமான இந்த மேப்பின் விசேஷம் என்னவென்றால் நீங்களே உங்கள் வீட்டை, உங்களுக்கு தெரிந்த இடங்களை பிறர் அறிய எழுதி அதில் குறித்து வைக்கலாம். நம்மூரில் எதோ ஒரு கோடியிலிருக்கும் குப்பன் மற்றும் சுப்பனின் வீடுகளும் அழகாக குறித்து வைக்கப்பட்டிருக்கின்றது. இப்படி இந்த தளத்திற்கு வருவோர்களாலேயே குறிக்கப்பட்டு இந்த மேப்பானது தகவல்களால் பெருகி வருகின்றது. மேலே படத்தில் மவுசை வைத்தால் சென்னை கடற்கரை மற்றும் சேப்பாக்கம் ஸ்டேடியத்தை பார்க்கலாம்.சென்னையில் மட்டும் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்கள் இப்படி வாசகர்களால் குறிக்கப்பட்டுள்ளனவாம்.

யாகூகாரர்களும் சும்மா இருக்கவில்லை. இப்போது இந்தியாவில் டிரைவிங் டைரக்ஷன்கள் கொடுக்க தொடங்கியிருக்கின்றார்கள். உதாரணமாய் From tnagar,chennai to ashoknagar,chennai என கொடுத்த போது அழகாய் எங்கே இடது பக்கம் திரும்பவேண்டும் எங்கே வலது பக்கம் திரும்பவேண்டும் என டிரைவிங் தகவல்களும் வரைபடமும் (மேலே) கொடுக்கின்றார்கள்.
திநகரிலிருந்து அசோக்நகர் செல்ல வரைபடம் பெற இங்கே சொடுக்குங்கள்.

கிடைத்த வழித்தடம் கீழே
Start-Raja Mannar St,L-Gopathi Narayanswami Chetty Rd,Prakasam Rd,1st L,R-Nageswaran St,L-Sir Mohammed Usman Rd,R-Duraisamy Rd,Brindavan St,L-Thamvaiah Rd,R-Veeraswamy St,R-Arya Gowda Rd,L-Brindavan Street Extension,L-4th Av,L-Jawaharlal Nehru Rd,1st L,Stop
(L stands for Left & R stands for Right)


மைக்ரோசாப்டின் லைவும் டிரைவிங் டைரக்ஷன்கள் கொடுக்கின்றார்கள்.ஆனால் பிரமாதமாய் ஒன்றும் தெரியவில்லை.இங்கே சொடுக்கி சென்னை டு மதுரை டிரைவிங் டைரக்ஷன் பாருங்கள்.

அமெரிக்க வாழ் நண்பரா நீங்கள்?. உங்கள் பூகோள அறிவுக்கு இங்கு கூலாய் ஓர் குவிஸ் மேப்.
http://jimspages.com/States.htm


சத்குரு ஜக்கி வாசுதேவ் "அத்தனைக்கும் ஆசைப்படு" தமிழில் மென்புத்தகம் "Aththanaikkum Aasaipadu" Sadhguru http://www.ishafoundation.org Tamil e-book Download. Right click and Save.http://static.scribd.com/docs/7g9sye5z7f1sx.pdf


Email PostDownload this post as PDF

Wednesday, October 24, 2007

பயனுள்ள சில Excel கோப்புகள்

India Related Excel sheets
Area of Mobile Number.xls
India ATM List.xls
India Baby Names.xls
India Best Websites.xls
India Hospitals.xls
India Radio Stations List.xls
India Service Providers.xls
India STD Codes.xls
India Toll Free Numbers.xls
India Trains.xls
India Univesities.xls
Mumbai Bus Routes.xls

Finance Calculators and Converters on Excel
BSE IndustryWise Classification Of The Company.xls
EMI Calculator.xls
Financial Calculator.xls
KharchaPani (Family Budget Planner).xls
Tax Calculator.xls
Unit conversion all in one.xls
Budget Planner.xls
Asia Pacific Budget Travel Planner Beta 1.02.xls
Index Calculations.xls
Margin Call Calculations.xls

Fun Games on Excel
Check Your concentration.xls
Color Test.xls
Frog Leap.xls
Logo Test Quiz.xls
Logo Test Quiz Answers.xls
Magic Spreadsheet.xls
Puzzle.xls
Sudoku Solver beta2 V0.31.xls
SuDoku.xls
Giant Sudoku.xls
Multiple Solution Sudoku.xls

Other Interesting Useful Excel sheets
Age Character Calculation.xls
Life Time Calendar.xls
Life Calculations.xls
Blood Group Diet.xls
Clock.xls
Nokia Ringtones.xls
SMS Message Abreviations.xls
Mobile Phone Models and Rates.xls
World Time.xls


"ஆங்கிலத்திலிருந்து தமிழ் டிக்ஷ்னரி" அகராதி மென்புத்தகம் English to Tamil Dictionary free ebook Download. Right click and Save.http://static.scribd.com/docs/kjk0ae5gnncc.pdf


Email PostDownload this post as PDF

Friday, October 19, 2007

Zip ஆயுதம்

மடியில் வெடிகுண்டை வைத்துக்கொண்டு அலையிறான் என்பார்கள். அதுபோல இந்த 42.zip(http://www.unforgettable.dk)(updated:நண்பர் SRI-யின் வேண்டுகோளுக்கிணங்க சுட்டி நீக்கப்பட்டது) கோப்பு உங்கள் கணிணியில் இருந்தால் வெடிகுண்டை உங்கள் கணிணியில் வைத்துக்கொண்டு அலைகின்றீர்கள் என்று அர்த்தம்.எப்படி?

இதை Zip bomb அல்லது Decompression Bomb என்பார்கள். இந்த சுருக்கப்பட்ட ஷிப் கோப்பை தப்பித்தவறி விரிக்கச்செய்தால் அவ்ளோதான். அதினுள் 16 zip கோப்புகள் இருக்கும்.அந்த 16 zip கோப்புகள் விரிவாகி ஒவ்வொன்றினுள்ளும் இன்னும் 16 zip கோப்புகள் இருக்கும்,அப்புறம் அந்த 16 zip கோப்புகளும் விரிவாகி அதனுள் இன்னும் 16 zip கோப்புகள் இருக்கும்.இப்படி விரிவாகி விரிவாகி இந்த 42.372 kb அளவேயான கோப்பு 281 டெர்ரா பைட்டுகளைவிட அதிகமாய் விரிவாகி அப்புறம் அது உங்கள் கணிணி டிரைவில் இருக்க இடமில்லாமல் போய் உங்கள் கணிணி ஸ்தம்பித்து கிராஷ் ஆகிவிடும்.

இது போன்ற ZIP-Crash Trojan களை இந்த காலத்து வைரஸ்கேனர்கள் கண்டுபிடித்து உடனே அந்த ZIP கோப்புகளை அழித்து விடும். வைரஸ்கேனர் உங்கள் கணிணியில் இல்லாவிட்டால் உங்கள் கணிணி அம்பேல் தான். Please do not try this with you or with your friends computer.This information is for educational purpose only.


"விசேஷ தின சமையல்கள்" தமிழில் சமையல் குறிப்புகள் மென்புத்தகம் "Tamil Festival Dishes" Free Tamil recipes e-book Download. Right click and Save.http://static.scribd.com/docs/e90zvlhkqodbd.pdf


Email PostDownload this post as PDF

Wednesday, October 17, 2007

மந்திர மென்பொருள்கள்

அடிப்படையில் புரோகிராமராய் இல்லாவிட்டாலும் சிலசமயங்களில் சில மென்பொருள்கள் வேலைசெய்யும் விதங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுவதுண்டு. பெரும்பாலான மென்பொருள்களை ஓட்டும் போது அது இந்த லாஜிக்கில் தான் வேலை செய்யுமாயிருக்கும் என மனதில் தோன்றும். ஆனால் சிலவற்றின் லாஜிக் புரிவதேயில்லை. அப்படி ஒரு மென்பொருள் சமீபத்தில் வலைமேயும் போது சிக்கியது.அதன் பெயர் eyedropper. இந்த இலவச மென்பொருள் Web designer மற்றும் DTP experts களுக்கு ஒரு வரப்பிரசாதம். பல விதங்களில் இது உதவினாலும் இதன் பிரதான பயன் கீழே.

வெப்டெவலபர்களுக்கு ஒரு தலைவலி வருவதுண்டு.ஒரு கலர் கொடுத்திருப்பார்கள். ஆனால் அதற்கு மேச்சான பக்கங்களை உருவாக்க அந்த கலரின் சரியான Html Color code RGB HEX CMYK -யை கண்டு பிடிப்பதற்குள் உயிர்போய்விடும்.இந்த மென்பொருளை நிறுவி மவுஸ் பாயிண்டரை கொண்டு போய் அந்த குறிப்பிட்ட நிறம் மேல் வைத்தால் போதும்.அது அந்த வண்ணத்தின் Html Color code தகவல்களை பிட்டு பிட்டு வைத்துவிடும்.

Product Home Page
http://www.inetia.com/en/eyedropper/

Download Here
http://www.inetia.com/en/eyedropper/download/

இதென்ன பெரிய மந்திரம், இப்போதெல்லாம் CAPTCHA எனப்படும் கோணல்மாணல் எழுத்துக்கள் வெரிபிக்கேசனை படிக்கவே மென்பொருள்கள் வந்து விட்டன என்கின்றீர்களா?. (completely automated public Turing test to tell computers and humans apart ....அப்பாடா என்னா பெரிய அப்ரிவியேசன்).கணிணிக்கு பலவழிகளில் கண் பார்வைகொடுக்கும் பணிவெற்றிபெற்றுவருவதாகவே தோன்றுகின்றது.

CAPTCHA decoder reader
http://sam.zoy.org/pwntcha/


கல்கியின் "பார்த்திபன் கனவு" தமிழ் நாவல் ஈபுக் Kalki Parthiban Kanavu Tamil Novel e book Download. Right click and Save.http://static.scribd.com/docs/eur7v9rc34zcp.pdf


Email PostDownload this post as PDF

Monday, October 15, 2007

Credit Card எண்ணில் ஒரு கணக்கு

அமெரிக்க Credit Crunch உலக பொருளா தாரத்தையே கொஞ்சம் அசைத்து
பார்த்திருக்கின்றது. அந்த குலுங்கல் ஆடி அடங்க இன்னும் சிறிது காலம் பிடிக்கலாம்.
அக்குறுகியகாலத்துக்குள் என்னவெல்லாம் நடக்கப்போகின்றதோ?. International Monetary
Fund தலைவர் இன்னும் கொஞ்சம் டாலர் விழும் என்கின்றார்.யூரோ ஓரளவுக்கு அதன் சரியான மதிப்பிற்கு வந்து விட்டதென்கின்றார்.நிலை தடுமாறினவன் நேராய் வர தன்னை சமநிலைப்படுத்துவது போல உலக எக்கனாமி தன்னை சமநிலைப்படுத்தி சரிபடுத்துகின்ற தருணம் இது.

முடியாதோரெல்லாம் ஆயிரக்கணக்கான டாலர்கள் கடனுக்கு வீடுவாங்கி பின் முடியாமல் போக ...இந்நிலை வந்தது.

நம்மூரிலும் இந்த கிரெடிட் (கடன் வழங்கப்படுதல்) தொல்லை அதிகமாகிக் கொண்டே வருகின்றது. தங்கள் தகுதிக்கும் மீறி கடன் வாங்குதல் எத்தனை அபாயம் என்பது எல்லா நாடுகளுக்கும் அமெரிக்கா வழி இது ஒரு பாடம்.

அது போகட்டும்,உங்கள் கிரெடிட் கார்ட் நம்பரில் ஒரு கணக்கு உள்ளது தெரியுமா?உங்கள் கிரெடிட் எண்ணை வைத்தே அது VISA-வா அல்லது MASTERCARD-டா என சொல்லலாம். மாஸ்டர்கார்டுகளின் எண்கள் பொதுவாக 51-55 எண்களில் தொடங்கும்.வீசா கார்டுகளின் எண்கள் பொதுவாக 4 என தொடங்கும்.

வழக்கமாக ஆன்லைனில் சாப்பிங் போகின்றீர்கள்.அங்கே அத்தளத்தில் ஈகாமெர்ஸ் வசதி அதாவது அங்கு வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வசதி செய்து வைத்திருப்பார்கள். நீங்கள் கொடுக்கும் கிரெடிட் கார்டை ஒரே பார்வையில் அந்த வெப்தளம் நோட்ட மிட்டு அக்கார்டு சரியானதா இல்லை போலியா என சொல்லிவிடும்.அதன் பின்பே அது கொடுக்கல் வாங்கலை ஆரம்பிக்கும்.எப்படி அது சாத்தியம் Check digit algorithm MOD 10 அதாவது LUHN
எனும் Formula அங்கே உதவிக்கு வருகின்றது.
நீங்களும் இக்கணக்கு பயனபடுத்தி ஒரு கிரெடிட் கார்டு எண் சரியானதா அல்லது போலியா என எளிதாய் கண்டறியலாம்.

பார்முலா இது தான்.

உங்கள் கிரெடிட் கார்ட் நம்பரில் வலது கோடி எண்ணை விட்டு விட்டு பின், வலமிருந்து இடமாக ஒன்று விட்ட எண்களை இரட்டிப்பாக்குங்கள்.
பின் எல்லா எண்களையும் கூட்டுங்கள்.அவ்ளோ தான்.அதன் விடை பூஜியத்தில் 30, 40, 50, etc முடிந்தால் அது உண்மையான கிரெடிட் கார்ட் எண்.

உதாரணத்துக்கு எண்ணிடம் உள்ள கார்டின் எண் 49927398716 என வைத்து கொள்வோம்.

4 9x2 9 2x2 7 3x2 9 8x2 7 1x2 6

இரட்டிப்பாக்கி கிடைத்த எண்கள்.

18 4 6 16 2

இவற்றை இனி கூட்டும் போது 18 என்ற இரு இலக்க எண் 1+8 ஆக பயன்படுத்தப்பட வேண்டும் .16 என்ற இரு இலக்க எண் 1+6 ஆக பயன்படுத்தப்பட வேண்டும்.


இப்போ எல்லா எண்களையும் கூட்டுங்கள்

4 +(1+8)+ 9 + (4) + 7 + (6) + 9 +(1+6) + 7 + (2) + 6

விடை 70 ஆக இது ஒரு சரியான கிரெடிட் கார்டு எண்தான்

இன்னொரு எடுத்துகாட்டை படத்தில் பாருங்கள்.அது ஒரு போலி கிரெடிட் கார்டு எண்.

இந்த கணக்கீடு Excel -ல் இங்கே http://www.beachnet.com/~hstiles/bin/luhn.zip
இந்த கணக்கீடு Java -ல் இங்கே https://www.azcode.com/Mod10/mod10.js
இந்த கணக்கீடு C# -ல் இங்கே http://www.csharphelp.com/archives/files/archive275/card.cs



மோகன் கிருட்டிணமூர்த்தியின் "நகைச்சுவை தொகுப்பு" தமிழில் ஜோக்ஸ் மென்புத்தகம் Tamil jokes Mohan Krishnamoorthy e-book Download. Right click and Save.http://static.scribd.com/docs/7beo3s5250dew.pdf


Email PostDownload this post as PDF

Friday, October 12, 2007

கார்ப்பரேட் பறவைகள் பலவிதம்

பலருக்கும் கார்ப்பரேட் அனுபவங்கள் மிக சுவாரஸ்ய மிக்கவையாய் அமைவதுண்டு. கார்ப்பரேட்டை ஒரு பறவைகள் சரணாலமாக பாவித்தால், அதில் வாழ வந்திருக்கும் பறவைகள் பலவிதங்கள்.

கறுப்பு வெள்ளை கோட் சூட்டில் டீக்காய் ஆடை அணிந்து குனிந்து நிமிராமல் நெடிய மீட்டிங்கள் மட்டும் போய் வரும் பென்குவின்கள்.

கலர் கலராய் வித விதமாய் படைக்கும் திறமைகள்,கற்பனை வளங்கள்,இன்னோவேசன் திறனோடு வலம் வரும் நம்மூர் மயில்கள்.

அப்பப்போ நிகழும் உள்குத்து அரசியல் சண்டைகளை சமரசபடுத்தி சம்மாளித்து ஓட்டும் பாவப்பட்ட புறாக்கள்.

பெரிது பெரிதாய் எதுவும் செய்ய துடிக்காமல் நாமுண்டு நம்வேலையுண்டு என "லோ ப்ரொபைல்" விரும்பும் அநேக காகங்கள்.

யாருக்கென்னவானால் எனக்கென்ன வென தலையை மண்ணில் புதைத்து கொண்டிருக்கும் தீக்கோழிகள்.

கீழே படங்களில் ஒரு வலம் வாருங்கள்.அப்படியே உங்கள் நிறுவனத்துக்கும் அவை பொருந்தும் போல் தோன்றும்.















Download this Peacock.pps presentation from here


"30 நாட்கள் 30 டிபன் வகைகள்" தமிழில் சமையல் குறிப்புகள் மென்புத்தகம் 30 Days 30 tiffins Tamil recipe e-book Download. Right click and Save.http://static.scribd.com/docs/49kt5vxrmidqh.pdf


Email PostDownload this post as PDF

Thursday, October 11, 2007

நிலவுக்கும் ஐபி

கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் "IP Addreess தட்டுப்பாடு - ஐபி அட்ரெஸ் பெறும் புது வடிவம் - IPv6" எனும் தலைப்பில் ஒரு பதிவிட்டிருந்தேன். அதாவது தற்கால IPv4-கள் (எகா:192.168.1.0) போதுமான அளவு ஐபி அட்ரஸ்கள் கொண்டிராததால் IPv6 (எகா:2016:0fe8::0000:0000:0000:1975:69bf)-க்கு நாம் போயாக வேண்டியுள்ளது என குறிப்பிட்டிருந்தேன்.

நண்பர் கூத்தாடி அவர்கள் NAT,CIDR,புராக்ஸி போன்ற விலாசம் மாற்றும் நுட்பங்கள் இப்போதைக்கு இருப்பதால் அப்படியெல்லாம் அவசரம் ஒன்று மில்லை என விரிவாக பின்னூட்டமும் இட்டிருந்தார்.அது முழுக்க முழுக்க உண்மையும் கூட.

இப்போது IPv6 பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்

பழைய IPv4-ஆனது 32 பிட் முறையாலானது.புதிய IPv6-ஆனது 128 பிட் முறையாலானது.

அப்போ IPv5-என்ன ஆனது என கேட்கிறீர்களா? 1970-களில் உருவாக்கப்பட்ட Internet Stream எனும் Protocol-க்கு பெயர் தான் IPv5.எனவே IPv4 க்கு அடுத்து TCPIP புரோட்டோகால் IPv6 ஆனது.

IPv6 -க்கு இன்னொரு பெயர் கூட உண்டு.IPng அதாவது அதன் விரிவாக்கம் Internet Protocol next generation.

அமெரிக்க அரசின் அனைத்து கணிணி வலைகளும் வரும் ஜுன் 30 2008-க்குள் முற்றிலும் IPv6 மயமாக்கப்பட திட்டம் போய்க்கொண்டிருக்கின்றது.

பழைய IPv4 மூலம் உலகின் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு ஐபிவிலாசம் கூட கொடுக்கமுடியாது.ஆனால் புதிய IPv6 மூலம் உலகின் ஒவ்வொரு மனிதனுக்கும் 50000000000000000000000000000 ஐபிவிலாசங்கள் கொடுக்கமுடியும்.

இந்த IPv6 மூலம் விண்ணிலுள்ள நம் மூளைக்கு எட்டியவரையுள்ள அனைத்து வான நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொன்றுக்கும் 7000000000000000 ஐபி அட்ரஸ் கொடுக்கலாமாம்.அடேங்கப்பா.

இனி கார், ஐபாட், ஃபிரிட்ஜ், டிவி, மணிபர்ஸ், போன், பேக், கீசெயின் என கண்ட கண்ட பொருள்களுக்கும் ஐபி அட்ரஸ்கொடுத்தாலும் மனிதகுலம் உள்ளவரை IPv6-தான் அரசாளும் போல் தெரிகின்றது.

உங்கள் கணிணியில் IPv6 நிறுவப்பட்டுள்ளதா என கீழே கிளிக்கி தெரிந்து கொள்ளுங்கள்.
Show My IPv6 Status

சுஜாதாவின்
"அனிதாவின் காதல்கள்" தமிழில் நாவல் மென்புத்தகம் Sujatha "Anithavin Kaathalgal" Tamil Novel e-book Download. Right click and Save.http://static.scribd.com/docs/edp9rnsneet4q.pdf


Email PostDownload this post as PDF

Wednesday, October 10, 2007

மாற்று மருந்துகள்

ஏற்கனவே நம்மிடையே வெறுப்பூட்டிகொண்டிருக்கும் சில அரசியல் கட்சிகளை விட்டால் வேறு நமக்கு மாற்று அரசியல் கட்சிகள் எதுவும் இல்லை.அதுவே தான் தலைவர்கள் நிலைமையும்.ஒன்றை விட்டால் இன்னொன்று என உருப்படியாய் மாற்று தலைவர் எவருமே இல்லை. நல்ல வேளையாய் மென்பொருள்களில் அப்படியில்லை.ஒன்றை விட்டால் இன்னொன்றுக்கு மாறிக்கொள்ளலாம்.அடிக்கடி IE sucks என்கின்றீர்களா? ரூட்டை மாத்து,Fire fox இருக்குது அல்லவா iTune sucks என்கின்றீர்களா? ரூட்டை மாத்து.Sharepod இருக்குதுல. இப்படி அநேக இலவச மென்பொருள்கள் மாற்றுக்கு உள்ளன. சொல்லப்போனால் போட்டிக்கு மாற்றாய் வரும் மென்பொருள்கள் தான் அட்டகாசமாயும் இருக்கின்றன. உங்களுக்காக இதோ சில

Internet explorer க்கு மாற்றாக Firefox

Adobe Acrobat Reader க்கு மாற்றாக Foxit Reader

Windows Media Player க்கு மாற்றாக VLC media player

iTune க்கு மாற்றாக Sharepod

Real Player க்கு மாற்றாக Real Alternative

QuickTime க்கு மாற்றாக QuickTime Alternative

Windows Picture and Fax Viewer க்கு மாற்றாக Irfan View

Windows zip க்கு மாற்றாக 7-zip


"30 ஷைட் டிஷ்கள்" தமிழில் சமையல் குறிப்புகள் மென்புத்தகம் 30 Side Dishes Tamil recipe e-book Download. Right click and Save.http://static.scribd.com/docs/cvvplkf680xia.pdf


Email PostDownload this post as PDF

Monday, October 08, 2007

வளர்வோரோடு வளர

சேது சமுத்திர திட்டம் பற்றிய காரசார விவாதங்கள், அமெரிக்க அணு சக்தி ஒப்பந்ததால் ஆட்சியே கவிழும் அபாயம், யோசிக்க கூட சமயமின்றி ஆளும் கட்சிகள், சுடச் சுட தினம் புதுப் புது விவகாரங்களுடன் எதிர்கட்சிகள் இத்தனைகள் மத்தியிலும் சந்தேகமே இல்லாமல் வளர்ந்து கொண்டிருக்கின்றாள் நம் பாரதத்தாய். இதற்குபெரிதும் துணையாய் இருப்பது தனியார் துறைகளே என அனைவரும் ஒத்துக்கொள்கின்றார்கள்.வளர்வோரோடு சேர்ந்து நீங்களும் வளர பங்குசந்தையில் நுழைவதை பற்றி முன்பு (அடிக்கும் ஷேர்மார்கெட் லாட்டரி) கூறியிருந்தோம்.சூடாய் இருக்கும் இப்போதைய பங்குசந்தையில் சிறு முதலீட்டார்கள் மிக எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என எச்சரித்திருக்கின்றார் நம் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள்.அதையேதான் நண்பர் SRI-யும் தனது பின்னூட்டத்தில் கூறியிருந்தார்.

தினம் தினம் ஷேர்மார்கெட்டை கண்காணித்து சமயத்துக்கேட்ப சரியான முடிவுகள் எடுக்க வசதி வாய்ப்புகள் இல்லாதோர் நம்பகமான மியூட்சுவல் பண்ட்களில் தங்கள் பணத்தை முதலீடு செய்யலாம்.மியூட்சுயல் பண்ட்டில் உங்கள் பணமானது விவரமறிந்தோர்களால் அநேக விதமான ஷேர்களில், முதலீடுகளில் முதலீடு செய்யப்படும். விதவிதமான மியூட்சுவல் பண்ட்கள் விதவிதமாக அதிக ரிஸ்க்கள் மற்றும் குறைந்த ரிஸ்க்களில் இருக்கின்றன.அதிக ரிஸ்க் அதிக லாபம்.குறைந்த ரிஸ்க் குறைந்த லாபம். நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு மியூட்சுவல் பண்ட் நல்லது.பட் பட்டென மௌஸ் கிளிக்கில் மணிக்கூருக்கொருதரம் ஒரு ஷேரிலிருந்து இன்னொரு ஷேருக்கு குதிப்போருக்கு இது சரிபட்டுவராது.ஆனால் டாலர் peg-கினால் மனம் நொந்திருக்கும் வளைகுடா வாழ் நண்பர்கள் இது போல் ஷேர்மார்கெட், மியுசுவல் பண்ட் ,ரியல் எஸ்டேடில் வளர்வோரோடு வளர பணம் போட்டு வைக்கலாம்.(பின்னே 1 துபாய் திரம்ஸ் மதிப்பு 12 யிலிருந்து 10.7ரூபாய்களாயிட்டுது,1 ஒமானி ரியால்ஸ் மதிப்பு 128 யிலிருந்து 102ரூபாய்களாயிட்டுது etc)

சில மியுசுவல் பண்ட்கள் கீழே
SBI Mutual Fund (SBI MF)
Principal Mutual Fund
Unit Trust of India (mutual fund)

அதுவும் பிடிக்கவில்லையா இருக்கவே இருக்கு பிக்ஸட் டெப்பாஸிட்.இப்போதெல்லாம் 9.00% வரை வட்டி கொடுக்கின்றார்கள்.
SBI SMART DEPOSIT
சும்மா பணத்தை சேமிப்பு கணக்கில் போட்டு வைக்காமல் தூக்கி பிக்ஸடில் போடுங்கள்.Its Worth it.


"அண்டத்தின் அற்புதங்கள்" பாகம் 2 தமிழில் அறிவியல் மென்புத்தகம் Andathin Arputhangal Part2 Tamil ebook Download. Right click and Save.
http://static.scribd.com/docs/eau4p0wid4g2v.pdf


Email PostDownload this post as PDF

Friday, October 05, 2007

போலி வெப்சைட்கள்


திநகர் லலிதா ஜீவல்லர்ஸ்-க்கு அடுத்துள்ள கனாராபாங்க் இப்போது கண்ணமாபேட்டையிலுள்ளது என யாரோ உங்களுக்கு ஈமெயில் அனுப்ப, உடனே அடுத்த நாள் கண்ணமாபேட்டை போய் அங்குள்ள ஒரு ஏமாற்று வங்கியில் உங்கள் பணத்தை போட்டுக்கொண்டிருப்பீர்களா?.நிஜ உலகில் மாட்டோம்.ஆனால் இணைய உலகில் அது தான் நடந்து கொண்டிருக்கின்றது.

தினம் தினம் ஆயிரம் ஆயிரம் பேர் சிடிபேங்க் அல்லது ICICI பாங்க் வெப்தளம் தான் போகின்றோம் என நினைத்து நம்பி வேறெதோ ஒரு ஹாக்கர் நிறுவிவைத்துள்ள சிடி பாங்க் போன்றே அல்லது ICICI பாங்க் போன்றே தோற்றமளிக்கும் ஒரு போலி வெப் தளம் போய் தங்கள் அக்கவுண்ட் எண்,மற்றும் பின் நம்பர்களை டைப்பி ஏமாறிக்கொண்டிருக்கின்றார்கள்.இதை பொதுவாக பிஷ்ஷிங் என்பார்கள்.Phishing அதாவது password harvesting fishing.இது போன்ற போலி தளங்களின் முக்கிய நோக்கம் உங்கள் பாங்க் அக்கவுண்ட் அல்லது பிற முக்கிய அக்கவுண்ட்களின் பாஸ்வேர்ட்களை திருடுவதே.பொதுவாக இத்தளங்கள் சில நாட்கள் மட்டுமே ஆன்லைனில் இருக்கும்.தேவையான அளவு அப்பாவி ஆட்களை ஏமாற்றி பாஸ்வேர்களை திருடி சுருட்டிக்கொண்டு போய் விடுவார்கள்.

So,எப்போதுமே பணபட்டுவாட விஷயங்களை ஆன்லைனில் செய்யும் போது மிக மிக கவனமாயிருங்கள்.சுட்டிகளை சொடுக்கும் போது கவனம் தேவை.அந்த சுட்டி சரியான இடங்களுக்கு உங்களை கொண்டு செல்கின்றதா வென பாருங்கள்.(படம்)

உதாரணமாய் கீழே பாருங்கள்.மேலே நான் யாகூக்கு உங்களை கூட்டி போகிறேன் என போர்டு வைத்து கொண்டு உங்களை ஏமாற்றி கூகிளுக்கு கொண்டு போகலாம்.

Click here to visit yahoo.com

எப்போதுமே நேரடியாக தளங்களுக்கு விலாசம் டைப்பி போகுல் நலம்.யாரோ அனுப்பிய ஈமெயிலிலுள்ள சுட்டியை கிளிக்கி குறிப்பிட்ட பணம் சம்பந்த பட்ட வெப் தளங்கள் செலல் எப்போதுமே ஆபத்து தான்.

சமீபத்தில் சிடிபாங்க் "Important Notice" என சொல்லி எனக்கு வந்த ஏமாற்று மெயில் கீழ் கண்ட சுட்டிக்கு என்னைக் கொண்டு செல்கின்றது.
அங்கே ஒரு முழு போலி சிட்டி பாங்க் தளமே இயங்குகின்றது.(ஒருவேளை நீங்கள் சொடுக்கி செல்லும் போது அது காணாமலும் போயிருக்கலாம்).Do not enter your details on this fake citibank web site.

Fake citibank website


"அண்டத்தின் அற்புதங்கள்" பாகம் 1 தமிழில் அறிவியல் மென்புத்தகம் Andathin Arputhangal Part1 Tamil ebook Download. Right click and Save.
http://static.scribd.com/docs/bixmg9vceupf2.pdf


Email PostDownload this post as PDF

Wednesday, October 03, 2007

முந்தி முந்தி நூயி

நாடாண்டு தான் ஒருவர் தன் சக்தியை நிரூபிக்க வேண்டும் என்றில்லை. தனியொருவராய் மாபெரும் தீர்வுகள் எடுத்து வியாபார சாம்ராஜ்யங்களை உருவாக்குதலும் மேய்த்தலும் பெரிய காரியமே. அப்படி வளர்ந்து... அன்றைய கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் வியாபாரக் கம்பெனியாய் பாரதத்தில் நுழைந்து பின் மொத்த பாரதத்தையும் ஆளவில்லையா?.

நம்மூர் பெண் ஒருவர் அமெரிக்க Fortune பத்திரிகையால் இந்த வருட உலகின் டாப் MOST POWERFUL WOMEN ஆக தேர்ந்தெடுக்க பட்டிருப்பது தமிழர்களாகிய நமக்கெல்லாம் பெருமைதான்.(Forbes-ல் 5 ஆவது இடம்).பெப்ஸி குளிர்பான(PepsiCo) கம்பெனியின் Chairman and CEO-வாக இருக்கும் இவர் பெயர் இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி (Indra Krishnamurthy Nooyi).1955-ல் சென்னையில் பிறந்த இவர் 1974-ல் தாம்பரம் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் சாதாரண ஒரு கல்லூரி மாணவியாய் BSc முடித்தார். பின் கொல்கொத்தா - Indian Institute of Management-ல் PGDBA படித்து முடித்தார்.மதுரா கோட்ஸில் (Madura Coats) வேலை செய்யும் போதே அமெரிக்க யேல் பல்கலைகழகத்தில் நிர்வாகம் படிக்க வாய்ப்பு கிடைக்க பறந்து போனவர் தான், இன்று அவர் உலகின் சக்திவாய்ந்த முதல் பிசினஸ் பெண்.

எல்லாமே எப்போதும் "பீஸ் ஆப் கேக்"காய் இருப்பதில்லை. நூயியும் கடக்க வேண்டிய தூரங்கள் ரொம்ப இருந்தன.Yale-ல் படிக்கும் போது தின செலவுக்காய் இரவு முழக்க விழித்து receptionist counter-ல் உட்கார்ந்து வேலை செய்ததுண்டாம். முதல் இன்டர்வியூக்கு 50 டாலர் கோட் சூட்டோடு போக வேலை கிடைக்கவில்லையாம். கடைசியில் இரண்டாவது இண்டர்வியூக்கு நம்மூர் சேலை கட்டி சென்றாராம்.உடனே வேலையும் கிடைத்தது.அதுவும் புகழ் பெற்ற Boston Consulting Group-ல். அவர் சொல்கிறார் "ஒரு பெண்ணாய் அதுவும் அயல்நாட்டில் பிறந்தவளாய் மற்றவர்களைவிட மிக புத்திசாலியாய் இருக்க வேண்டியிருந்தது." ("Being a woman, being foreign-born, you've got to be smarter than anyone else,")

நம் போன்ற வளரும் தலைமுறைக்கு அவர் சொல்வதெல்லாம்
"எத்தனை வயதானாலும் கற்றுக்கொள்வதை மட்டும் நிறுத்திவிடாதீர்கள்.அது தான் என் தாரக மந்திரம்.பள்ளிப்படிப்பை நான் சொல்லவில்லை.நிஜ உலக அறிவை சொல்கின்றேன்.நாட்டு நடப்பிலிருந்து கற்றுக்கொளலை சொல்கின்றேன்.உங்கள் தாகத்தில் தேடிக்கொண்டேயிருங்கள்"
"Never stop learning. Regardless of ones age. That is my golden rule. Im not talking about academic knowledge, but being street-smart and being aware of whats happening in the real world. Keep your natural curiosity alive."

தமிழ் குல பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்தும் வரிகள் அவை



திருவள்ளுவரின் திருக்குறள் உரையோடு மென்புத்தகம் Thiruvalluvar Thirukural with meaning Tamil ebook Download. Right click and Save.
http://static.scribd.com/docs/s1tocyicarkf.pdf


Email PostDownload this post as PDF

Tuesday, October 02, 2007

தொடரும் கார்ப்பரேட் பாடங்கள்

ஏற்கனவே சில கார்ப்பரேட் பாடங்களை கடந்த கார்ப்பரேட் பாடங்கள் பதிவில் பார்த்திருக்கின்றோம்.இங்கே அதன் தொடர்ச்சி.








எங்கேயோ பார்த்தது போல இருக்கின்றதா?
Download this CORPORATE LESSONS ppt here CORPORATE LESSONS.ppt


கவியரசு வைரமுத்துவின் "தண்ணீர் தேசம்" மென்புத்தகம் Kaviyarasu Vaira Muthu Thaneer Desam Tamil ebook Download. Right click and Save.
http://static.scribd.com/docs/7lwpejg77c17a.pdf


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்