இந்தியர்கள் வேண்டுமானால் ஏழைகளாக இருக்கலாம், ஆனால் இந்தியா ஒன்றும் ஏழைநாடல்ல என ஒரு சுவிஸ் வங்கி இயக்குனர் கூறியிருந்தார்.இவர் கூறும் தகவல்கள் அடிப்படையில் பார்த்தால் எங்கோ இருக்க வேண்டிய இந்திய சமுதாயம், தனது சுய நல எண்ணங்களால் சிதைக்கப்பட்டு போயிருக்கின்றது என்பது தெளிவாகின்றது. அமெரிக்கர்கள் பணக்காரர்களாக இருக்கலாம். ஆனால் அமெரிக்க அரசாங்கம் ஒன்றும் பணக்கார அரசாங்கம் இல்லை. அது ஒரு ஏழை அரசாங்கமே.பட்டென ஒரு 150 பில்லியன் டாலர் கடன் கொடேன் எனக் கேட்டால் அதனால் கொடுக்க முடியாது. ஏற்கனவே 14 டிரில்லியன் கடன் வாங்கி தள்ளாடிக் கொண்டிருக்கும் அரசாங்கம் தான் அது.இதன் பல மாகாணங்கள் அதனதன் சொத்துக்களை பொதுமக்களுக்கு ஏலம் விட்டு தற்காலிகமாக காசு பார்த்துக் கொண்டிருக்கின்றது. இங்கிலாந்தின் லட்சணமும் இதுதான் 9 டிரில்லியன் டாலர்கள் கடன் பட்டு நிற்கின்றது.அப்படி பார்க்கப்போனால் உலகின் பணக்கார அரசாங்கம் சீனா தான்.$2,454,300,000,000 டாலர்கள் ரெடி கேஷாக வைத்திருகின்றது.இரண்டாவது இடம் ஜப்பான்.அதன் தேசிய கையிறுப்பு டாலர்கள் 1,019,000,000,000.
நமக்கு இடம் ஆறாவது வரும் Indian National reserves: $279,422,000,000. இது போக சுவிஸ் வங்கிகளில் தேங்கி இருக்கும் இந்தியர்களின் பணங்கள் ஏறக்குறைய 280 லட்சம் கோடி (280,00,000,000,0000) இந்திய ரூபாய்கள். பெரும்பாலும் கறுப்புப்பணங்கள் தாம்.இதை வைத்து மட்டும் 30 ஆண்டுகளுக்கு வரிகளே இல்லாத பட்ஜெட்டை இந்தியாவில் தாக்கல் செய்யலாம்.60 கோடி வேலை வாய்ப்புகளை இந்தியாவில் உருவாக்கலாம். எல்லா கிராமங்களிலிருந்தும் டெல்லிக்கு நான்குவழி சாலைகள் போடலாம். ஒவ்வொரு இந்தியனுக்கும் மாதம் 2000 ரூபாயென 60 வருடங்களுக்கு அரசிடமிருந்து பணம் கிடைக்க வழி செய்யலாம்.உலக வங்கியும் IMF-ம் கடன் தரவேண்டாம் ஒரு வெளிநாட்டு முதலீடும் நமக்கு தேவை இல்லை.இப்படி செல்வச் செழிப்பாய் இருக்க வேண்டிய இந்தியா, தன் குடும்பம், தன் வாரிசுக்கென கோடிக்கோடியாய் பணத்தை அள்ளி எங்கேயோ உனக்கும் பயனில்லாமல் ஊருக்கும் பயனில்லாமல் தேக்கி வைத்திருக்கிற பாழாப்போன அரசியல்வாதிகளாலும் செல்வந்தர்களாலும் மோசம் போயிருக்கின்றது.
இதுமட்டுமா நாட்டிலுள்ள பல ஸ்ரீகளின், பாபாக்களின், சுவாமிஜிக்களின், போதகர்களின் இரகசிய அறைகளில் இருக்கும் பணக்கட்டுகள், தங்கக்கட்டிகள் எல்லாம் இன்னும் கோடிக் கோடி பெருமானம் வரும்.யாருக்கும் பயனின்றி சேர்த்தார் நீத்தார் பின் ஏதோ சில திருடர்கள் திருடிப்போய் மீண்டும் சுவிசில் கொண்டு போய் சேர்ப்பார்கள்.
இன்னும் அதிஷ்டமாக நம்முன்னோர்கள் முன்பு சேர்த்துவைத்திருந்த பொக்கிஷங்களும் இப்போது தோண்டி எடுக்கப்படுகின்றன.திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளில் தோண்ட தோண்ட தங்கக் குடங்களும் வைரங்களும் வைடூரியங்களும் எடுக்க்ப்படுகின்றன. மொத்த ஆறு அறைகளில் மூன்று அறைகளில் மட்டும் 400 கோடி மதிப்பிலான தங்க வைர நகைகள். ஆறு அறைகளையும் திறந்து மதிப்பிட்டால் 1000 கோடியையும் தாண்டும் என்கின்றார்கள்.யார் கொத்திக்கொண்டு போவார்களோ?
இந்திய மாலுமிகளை மீட்க பாகிஸ்தானிய படை வரவேண்டியிருக்கின்றது. இந்திய மீனவர்களை சாகடி அடிக்கிறான் வளரும் வல்லரசுக்கு கேட்க நாதியில்லை. கடமையை விட்டு விட்டு பணம் பணம் என்று அலைகின்றதே இந்தியா. மனிதனே! அதிகமாய்ப்போனால் நூறு ஆண்டுகள் தான் வாழ்வாய். எத்தனை கோடிகள் தான்வேண்டும் உனக்கு?
தள அறிமுகம்
தமிழ் இசைப் பாடல்களை கேட்க ஆர்ப்பாட்டமில்லாத அருமையான எளிமையான ஒரு தளம்
http://www.paadal.com
எனது சேகரிப்புக்காக
“நெஞ்சை அள்ளும் நெல்லை,தூத்துக்குடி சம்மர் டூர்” - Nellai Tuticorin Summer Tour Guide
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Thursday, June 30, 2011
பணம் கொத்திப் பறவைகள்
Posted by
PKP
at
6/30/2011 03:38:00 PM
6
comments
Thursday, June 23, 2011
ஊர் வலம்
சிவ்நகர் ஒன்று ஸ்நேப்டீல்.காம் நகராகின்றது
உத்தரபிரதேச கிராமமொன்று தனது பெயரை சிவ்நகரிலிருந்து, ஸ்நாப்டீல்.காம் நகரென பெயர்மாற்றம் செய்திருக்கின்றது. காரணம் snapdeal.com வழங்கிய குடிநீர் தீர்வு தான்.குடிநீர் பிரச்சனையில் கிடந்த இக்கிராமத்தில் குழாய்க்கிணறுகளை தோண்டி அவர்களுக்கு கைப்பம்புகளையும் இலவசமாய் அமைத்துக் கொடுத்திருக்கின்றது இந்நிறுவனம். நன்றிக்கடனாக பஞ்சாயத்து கூடி அவர்கள் தங்கள் ஊருக்கு புதுநாமம் இட்டுவிட்டார்கள்.இங்கு நாம் ஸ்நேப் டீல்.காம் தளத்தின் நிறுவனர் குணால் பாஹலை பாராட்டியே ஆகவேண்டும்.உண்ட கையால் காக்கை கூட விரட்டாதவர்கள் மத்தியில் இவர்களெல்லாம் எவ்வளவோ மேல்.
சம்பந்தமில்லாத இன்னொரு சேதி
இந்தியாவின் இன்றைய தேவை, தன்னிடம் உள்ள செல்வத்தை சமூக நலனுக்காகவும் பயன்படுத்துபவர்களே. இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி பல கோடி மதிப்புள்ள 27 அடுக்கு மாளிகையில் வசிக்கிறார். இது மிகப்பெரிய தவறு. மற்றவர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய இவர், செல்வத்தை இப்படி வீணாக்கலாமா?" என்று கடுமையாக விமர்சித்துள்ளார் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா. பல் இருக்குது பக்கோடா சாப்பிடுறான் உங்களுக்கென்ன என்கின்றீர்களா?
அம்மா தயவில்
இலவச லேப்டாப்புகள் தமிழகமெங்கும் பள்ளிகளில் வரப்போகின்றது.இது எந்த மாதிரி புரட்சியை உண்டுபண்ணபோகுதோ தெரியவில்லை முந்தைய இலவச டிவி போலல்ல இது.குத்துக்கல்லாட்டம் ஒரு மூலையில் வைத்துக்கொள்ள. இதனால் இண்டர்நெட் இணைய தேவைகள் அதிகமாகும்,ஆக்சசரீஸ்கள் நிறைய போகும்,டிஜிட்டல் காமரா,ஐபாட் போன்ற கணிணி சார் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் சக்கை போடு போடும், இணையத்தின் நன்மை தீமைகள் இன்னும் வேகமாக தமிழகமெங்கும் பரவும், சைபர் கிரைம்ஸ் விர்ரென எகிறும். எகிப்தில் ஒருவர் தன் குழந்தைக்கு ”பேஸ்புக் ஜமால் இப்ராகிம்” என பெயர் வைத்தாராம். இந்த மாதிரியான தீவிர ரசிகர்கள் நம்மூரிலும்தோன்றுவார்கள்.
இனிப்பான கிரேசியிலும் கிரேசி செய்தி:
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்க்கும் கூகிளின் அமேசிங் சேவை துவங்கியிருக்கின்றது.கொஞ்சம் தத்தக்கு பித்தக்குவாக இருந்தாலும் அற்புதமான ஆரம்பம்.மிக முக்கியமான மைல் கல்லை இணையத்தமிழ் எட்டியிருக்கின்றது எனச் சொல்லலாம். நன்றி via ஜிஎஸ்ஆர்
http://translate.google.com/
கேள்வி: வெளிநாட்டு வேலை தரும் நிறுவனம் சரியானதா என கண்டுபிடிக்க மத்திய அரசின் இணையதளம் ஒன்று உள்ளதாமே? அது உண்மையா?
பதில்: உண்மைதான்.கீழ்கண்ட சுட்டியில் Recruiting agent-ன் நிலையை தெரிந்துகொள்ளலாம்
http://www.poeonline.gov.in/
Posted by
PKP
at
6/23/2011 01:34:00 PM
5
comments
Wednesday, June 15, 2011
போலி பிளாஷ் டிரைவுகளை கண்டுபிடிப்பது எப்படி?
256GB, 512GB, 640GB என மிகப்பெரிய அளவுகளில் USB பிளாஷ் டிரைவுகள் மலிவான விலையில் சந்தையில் கிடைத்தால் நாம் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிவிடுகிறோம். கணிணியில் இணைத்துப் பார்த்தால் அதுவும் 640GB USB Flash drive detected என பெருமையாக கூறிவிடுகின்றது. ஆனால் பிரச்சனையே இனிதான் ஆரம்பிக்கிறது. கோப்புகளை காப்பி செய்ய ஆரம்பித்தால் 2GB அல்லது 4GB-க்கு மேல் காப்பியாக திணறும், கடைசியில் இருக்கின்ற கோப்புகளை கரப்ட் செய்துவிட்டு டிரைவும் செத்துவிடும்.இது தான் போலி பிளாஷ் டிரைவுகளின் குணாதிசயம். இந்த போலி டிரைவுகளில் மறைவாக ஏற்கனவே எழுதப்பட்டிருக்கும் ஒரு சிறிய புரோகிராம் அதை உங்கள் கணினிக்கு 640GB-யாக காண்பித்து பொய்சொல்லும்.ஆனால் நிஜத்தில் அங்கே 2GB-யோ அல்லது 4GB-யோ தான் இருக்கும். சீனாவிலிருந்து இது போன்ற போலி பிளாஷ் டிரைவுகள் உலகமெங்கும் இறக்குமதியாகின்றன. சோனி,கிங்ஸ்டன் என பிரபலமான பெயர்களில் இவை லோக்கல் சந்தைகளில் கிடைக்கின்றன. ஈபேயிலும் இவைகள் கொட்டிக் கிடக்கின்றன. நாம தான் உசாரா இருக்க வேண்டியுள்ளது.நம்பத்தகுந்த நபர்களிடமிருந்து அல்லது நிறுவனங்களிடமிருந்து மட்டுமே டிரைவுகளை வாங்குவது நல்லது. மேற்சொன்ன கதை மெமரிகார்டுகளுக்கும் பொருந்தும்.
அது சரி, உங்களிடம் ஏற்கனவே இருக்கும் USB பிளாஷ் டிரைவ் ஒரிஜினலா அல்லது போலியா என தெரிந்துகொள்வது எப்படி? H2testw என ஒரு இலவச மென்பொருளை நீங்கள் கீழ்கண்ட சுட்டியிலிருந்து இறக்கம் செய்துகொள்ளலாம். இதை உங்கள் கணிணியில் unzip செய்து டார்கெட்டாக உங்கள் USB பிளாஷ் டிரைவ் அல்லது மெமரிகார்டை காண்பித்து (உங்கள் டிரைவை empty ஆக்கினபின்) ஓடவிட்டால் அது சிறிது நேரம் கழித்து உங்கள் டிரைவின் லட்சணத்தை கூறிவிடும்.Test finished without errors என்றால் நீங்கள் ஏமாறவில்லை என அர்த்தம்.The media is likely to be defective எனச் சொன்னால் கண்ணன் ஏமாந்தான் என அர்த்தம்.
Download H2testw for free
Download link below
http://www.heise.de/ct/Redaktion/bo/downloads/h2testw_1.4.zip
Homepage link below
http://sosfakeflash.wordpress.com/2008/09/02/h2testw-14-gold-standard-in-detecting-usb-counterfeit-drives
கேள்வி: தமிழ்நாட்டில் மின்கட்டணத்தை இணையதளம் வழி ஆன்லைனில் செலுத்தலாமாமே.(Tamil Nadu Online Electricity Bill Payment) அது உண்மையா?
பதில்: உண்மைதான்.கீழ்கண்ட சுட்டியில் இணையதள மின் கட்டண சேவை தமிழகம் முழுவதும் உள்ளது .
https://www.tnebnet.org/awp/tneb/
On the Lighter Side
Posted by
PKP
at
6/15/2011 02:32:00 PM
3
comments
Labels: Hardware
Wednesday, June 08, 2011
அந்த கால தமிழகம்
அந்தக் கால தமிழக நகரங்கள் படங்களாகவும் ஓவியங்களாகவும்
1778-ல் தஞ்சை Tanjore (1778)
http://www.bl.uk/onlinegallery/onlineex/apac/other/019pzz000002468u00000000.html
1783-ல் மதுரை Madurai (1783)
http://www.bl.uk/onlinegallery/onlineex/apac/other/019wdz000004104u00000000.html
1784-ல் இராமநாதபுரம் Ramanadapuram (1784)
http://www.bl.uk/onlinegallery/onlineex/apac/other/019wdz000000631u00000000.html
http://www.bl.uk/onlinegallery/onlineex/apac/photocollr/019pho0000212s3u00034000.html
1797-ல் மதுரை Madurai (1797)
http://www.bl.uk/onlinegallery/onlineex/apac/other/019xzz000004322u00014000.html
1798-ல் மதுரை Madurai (1798)
http://www.bl.uk/onlinegallery/onlineex/apac/other/019xzz000004322u00016000.html
1804-ல் ஓசூர் Hosur (1804)
http://www.bl.uk/onlinegallery/onlineex/apac/other/019xzz000007682u00009000.html
1858-ல் தஞ்சை Tanjore (1858)
http://www.bl.uk/onlinegallery/onlineex/apac/photocollt/019pho000000955u00003000.html
1860-ல் மதுரை Madurai (c.1860)
1868-ல் தஞ்சைTanjore (1868)
http://www.bl.uk/onlinegallery/onlineex/apac/photocollt/019pho0000212s4u00032000.html
1869-ல் தஞ்சாவூர் Tanjore (1869)
http://www.bl.uk/onlinegallery/onlineex/apac/photocolls/019pho000000011u00001000.html
1869-ல் தஞ்சாவூர் Tanjore (1869)
http://www.bl.uk/onlinegallery/onlineex/apac/photocolls/019pho000000011u00003000.html
http://www.bl.uk/onlinegallery/onlineex/apac/photocollt/019pho000000011u00004000.html
1869-ல் திருக்கழுங்குன்றம் Thirukazhikundram (1869)
1890-களில் திருச்சிராப்பள்ளி Thiruchirapally (1890s)
1895-ல் திருச்சிராப்பள்ளி Tiruchirapalli (1895)
http://www.bl.uk/onlinegallery/onlineex/apac/photocollv/019pho0000015s4u00032000.html
http://www.bl.uk/onlinegallery/onlineex/apac/photocollt/019pho0000015s4u00035000.html
Posted by
PKP
at
6/08/2011 04:14:00 PM
4
comments
Labels: Pictures
Wednesday, June 01, 2011
வாமுக : மெமரி கார்டுகள்
டிஜிட்டல் கேமரா அல்லது வீடியோ கேமரா வாங்கினால் கூடவே வாங்க வேண்டிய இன்னும் இரு ஐட்டங்கள் கேமரா கேஸ்(Case) மற்றும் மெமரி கார்டு (Memory card). உங்கள் படங்கள் மற்றும் வீடியோக்கள் இந்த மெமரி கார்டில் தான் தற்காலிகமாக சேமிக்கப்பட்டிருக்கும். பின்பு அவை உங்கள் கணிணிக்கு கடத்தப்படும். எனவே நல்ல தரமான மெமரி கார்டை வாங்குவது மிக அவசியமாகிறது.மெமரி கார்டு வாங்குமுன் கவனிக்க இங்கே ஐந்து குறிப்புகள்.
1.மெமரி கார்டு Type:
உங்கள் கேமரா எந்த விதமான மெமரி கார்டை சப்போர்ட்செய்கிறது என அறிதல் மிக அவசியம்.கேமராவில் மெமரிகார்டை போடும் ஸ்லாட்டோ அல்லது கேமராவோடு வரும் கையேடோ இதை தெரிவிக்கும்.
SD கார்டுகள் எனப்படும் Secure Digital கார்டுகள் மிகப்பிரபலமானவை.எனது கனான் டிஜிட்டல் கேமராவும் சாம்சங் கேம்கார்டரும் SD கார்டுகளையே சப்போர்ட் செய்கின்றன.பெரும்பாலான மடிக்கணிணிகளும் SD கார்டுகளை சப்போர்ட் செய்கின்றன. இதனால் படங்களை/வீடியோக்களை கணிணிக்கு கடத்துதல் மிக எளிதாகின்றது.
SD கார்டுகளின் அதிக பட்ச அளவு 2GB (Filesystem:FAT).
SD கார்டுகளில் 2GB-க்கும் அதிகமான அளவுகளில் கிடைக்கும் கார்டுகள் SDHC அல்லது Secure Digital High Capacity கார்டுகள் எனப்படுகின்றது (Filesystem:FAT32).
SD கார்டுகளில் 32GB-க்கும் அதிகமான அளவுகளில் கிடைக்கும் கார்டுகள் SDXC அல்லது Secure Digital eXtended Capacity கார்டுகள் எனப்படுகின்றது (Filesystem:exFAT).
miniSD/microSD கார்டுகள் எனப்படும் Mini Secure Digital கார்டுகள்,Micro Secure Digital
கார்டுகள் SD கார்டுகளைவிட சிறிதாக இருப்பதால் செல்போன்கள்,சிறிய கேமராக்கள்,MP3 பிளயர்களில் பயன்படுத்தப்படுகின்றன.
CF எனப்படும் Compact Flash கார்டுகள் அதிக அளவு மெமரி தேவைப்படும் SLR போன்ற கேமராக்களில் பயன்படுத்தப்படுகின்றன.இதில் Type 1,Type 2 என இரு வகைகள் உண்டு.Type 1 மிக சன்னமானவை.Type 2 ஸ்லாட் கொண்ட கேமரக்களால் Type 1-ஐயும் ஏற்றுக்கொள்ளமுடியும்.Type 1 ஸ்லாட்கொண்ட கேமரக்களால் Type 2-ஐ ஏற்றுக்கொள்ளமுடியாது.அதிக பட்சமாக 128GB வரை அளவில்கிடைக்கின்றன.
MMc எனப்படும் MultiMedia கார்டுகள் SD கார்டுகளால் மறைந்து வருகின்றன. இவற்றில் SD கார்டு போல் locking tab இருப்பதில்லை.
Memory stick-க்குகள் சோனியால் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.இவற்றில் Memory stick Duo என சிறிய வகையும் உண்டு.
xD Picture Card-கள் Olympus மற்றும் Fuji
கேமராக்களால் பயன்படுத்தப்படும் மிகச்சிறிய மெமரி கார்டுகள்.
2.Capacity
குறைந்த பட்சமாக 128MB யிலிருந்து 1GB,2GB,4GB,8GB,16GB,32GB,64GB என அதிக பட்சமாக 128GB வரை அளவில் கிடைக்கின்றன.அளவு கூடக் கூட விலையும் கூடுகின்றது.
உங்கள் 8 Mega Pixel கேமராவில் 1GB கார்டு இருந்தால் அதில் கிட்டத்தட்ட 400 படங்கள் பிடிக்கலாம்.
அல்லது அதே 1GB கார்டில் ஒரு மணி நேர 640 x 480 ரெசலூசன் வீடியோ படம் பிடிக்கலாம்.
அதுவே MP3 பாடல்கள் எனில் 1GB கார்டில் 200 முதல் 250 பாடல்கள் வரை வைத்துக்கொள்ளலாம்.
3.Speed Class Rating
SD கார்டுகளின் குறைந்தபட்ச வேகம் Class என அறியப்படுகிறது.
Class 2, 2 MB/s
Class 4, 4 MB/s
Class 6, 6 MB/s
Class 10, 10 MB/s
4.பிராண்டு
SanDisk மற்றும் Lexar
பிராண்டு மெமரி கார்டுகள் நம்பகமானவையாக நம்பப்படுகின்றன.
5.சில டிப்ஸ்கள்
1.SD கார்டிலுள்ள locking tab அதில் எழுதுவதிலிருந்து, அதிலுள்ளவற்றை அழிப்பதிலிருந்து பாதுகாக்கின்றது.
2.உங்கள் மடிக்கணிணியில் மெமரி கார்டு ரீடர் இல்லாவிட்டால் தனியாக மெமரி கார்டு ரீடர் (Memory Card Reader)வாங்கி USB போர்ட்டில் இணைத்துக் கொள்ளலாம்.
3.தரமிக்க படங்களை அதிக அளவில் எடுத்து நீங்கள் தள்ளுபவராயின் கூடவே ஒரு பேக்கப் மெமரிகார்டும் வைத்திருப்பது நல்லது. சீக்கிரமே உங்கள் முதல் மெமரிகார்டு நிரம்பிவிடலாம்.
4.SD கார்டுகளை ஃபார்மேட் செய்ய SD Formatter என்ற மென்பொருளை பயன்படுத்துவது நல்லது.
Download the SD Formatter link below
http://www.sdcard.org/consumers/formatter_3