உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, May 31, 2006

லோகோ ரகசியம்-பென்கியூ(BenQ )முன்பு ஏசர்-Acer என அறியப்பட்ட இந்நிறுவனம் 1984 -ல் Continental Systems Inc., என்ற பெயரில் தைவானில் துவக்கப்பட்டது.இன்று அதாவது டிசம்பர் 2001 முதல் BenQ - "Bringing Enjoyment and Quality to life" என்ற பெயரில் உலகெங்கும் கணிணி,தொலைதொடர்பு முதலான மிண்ணணு சாதனங்கள் தயாரிப்பில் கலக்கிக்கொண்டிருக்கிறது.
இதன் தலைமையகம் Taoyuan- Taiwan-னிலுள்ளது.

பின்குறிப்பு:உலகெங்குமுள்ள ஸீமென்ஸ் மொபைல் போன்கள் பென்கியூவிடமிருந்து தான் இப்போது வருகின்றன.அக்டோபர் 1, 2005 முதல் ஸீமென்ஸ் மொபைல்ஸ் பிரிவுக்கு சொந்தக்காரர்கள் BenQ-வே.

வகை:லோகோ ரகசியம்


Email PostDownload this post as PDF

போட்டோவைப் போடாதீர்!!!

உங்கள் படத்தை (Photo-வை) எப்போதுமே இணையத்தில் போடாதீர்-வெளியிடாதீர் என எச்சரிக்கிறது இந்த இணையம்.ஏன் என 33 காரணத்தையும் சொல்கிறார்கள்.ஒரு சிறுவனின் படம் படும் பாட்டை பாருங்கள் இங்கே.

http://www.33reasons.com/

வகை:நகைச்சுவை


Email PostDownload this post as PDF

Friday, May 26, 2006

அல்டிமேட் மெயில் அறிவிப்பாளர்GMail, Hotmai, Yahoo mail, RediffMail வைத்திருக்கிறீர்களா? அவ்வப்போது அந்தந்த இணையம் போய் மெயில் செக்பண்ணுவது பெரிய தொல்லையாக உள்ளதா?.இதோ ஒரு மென்போருள்.இனிமேல் ஒவ்வொரு வெப்சைட்டாக எதாவது மெயில் உங்களுக்கு வந்திருக்கிறதா என தேடி அலையவேண்டியதில்லை.உங்கள் அனைத்து வெப் மெயில்களையும் ஒரே இடத்தில் இம்மென்பொருள் தொகுத்தளிக்கிறது.புதுசாக மெயில் எதாவது வந்தால் அலர்ட்டும் செய்கிறது.Try it. முற்றிலும் இலவசம்கோ.(Click the picture to enlarge)

http://www.poppeeper.com/

வகை:தொழில் நுட்பம்.


Email PostDownload this post as PDF

Wednesday, May 24, 2006

நினைவிலிருத்த

கல்விக்கூடங்களில் மாணவர்கள் சில விஷயங்களை எளிதாக நினைவிலிருத்த short cut-கள் சொல்லிகொடுப்பார்கள்.
இதோ என் நினைவிலிருந்து சில short cut-கள்.

மின்தடை வண்ண குறிப்புகளை நினைவிலிருத்த:
To remember the following Resistor Colour Codes:

Black-Brown-Red-Orange-Yellow-Green-Blue-Violet-Grey-White-Gold-Silver

BB ROY of Great Britain has Very Good Wife
Richard Of York Gave Battle in Vain.
-------------------------------------------------------------------------------

ஏழு OSI லேயர்களை நினைவிலிருத்த:
To remember the following 7 OSI layers:

Application-Presentation-Session-Transport-Network-Data Link-Physical

All People Seems To Need Data Processing
Andra Pradesh State Trasport Never Drives Properly

Reverse order-Please Do Not Throw Special Piza Away

ஆர்.பிரபு-வினின் பரிந்துரை:
Please Do Not Touch Steve's Pet Alligator

-------------------------------------------------------------------------------
ஆறு வானவில்லின் வண்ணங்களை நினைவிலிருத்த:
To remember the following rainbow colors:

Red-Orange-Yellow-Green-Blue-Violet

Richard Of York Gave Battle In Vain
Rowntrees Of York Gave Best In Value
Ring Out Your Granny's Boots In Vinegar
Roy G. Biv

Reverse order-vibgyor விப்ஜிஆர்
-------------------------------------------------------------------------------
மாத நாட்களின் எண்ணிக்கையை நினைவிலிருத்த:
To remember number of days of month:


Thirty days hath September,
April, June, and November;
All the rest have thirty-one,---பொதுவாக இவ்வளவும் போதும்.இன்னும் வேண்டுமெனில் தொடருங்கள் முழு பாடலுக்கும்.
Excepting February alone,
And it has twenty-eight days time,
But in leap years, February has twenty-nine.

சீனிவாசனின் பரிந்துரை:
Remeber knuckles is 31
valley is 30
Here is a little trick to help you remember how many days are in each month. turn your right palm down and make a fist. Now, look at your knuckles and the valleys in between them. Start with the left most knuckle and call it January, the valley adjacent to it is February, the next knuckle is March and so on till july it will end again start from the first knukles down to December each knuckle is a high spot, it represents 31 days. Each valley is a low spot and therefore represents 30 days. The only exception is February, which has 28 days (29 if you are in a leap year).
-------------------------------------------------------------------------------
வகை:பொது அறிவு


Email PostDownload this post as PDF

Tuesday, May 23, 2006

அமெரிக்கா போறீங்களா? - டிப்ஸ் 15

American universities list
http://www.globalcomputing.com/universy.html

The Complete List: 1,200 Top U.S. Schools
http://www.msnbc.msn.com/id/12532678/site/newsweek/

USA all 50 states information
http://www.infoplease.com/states.html

USA Zipcode Distance Checker
http://www.orangehedgehog.com/zipcodes/?c=US

North American (NANPA) Telephone Code List
http://www.orangehedgehog.com/telephone_codes/nanpa_code_list.php?type=c

Spelling differences between American and British English
http://www2.gsu.edu/~wwwesl/egw/jones/differences.htm

Different Words in American and British English
http://www2.gsu.edu/~wwwesl/egw/jones/words.htm

All time 100 novels
http://www.time.com/time/2005/100books/the_complete_list.html

All time 100 movies
http://www.time.com/time/2005/100movies/the_complete_list.html

English grammer
http://www2.gsu.edu/~wwwesl/egw/grlists.htm


How To Speak American :
1 U don't open conversation (on telephone) with a "Hello", ......but with a "Hi" !
2.U never say "want to" /"going to" do it?? u say "wanna"/ "gonna" do it.
3. The telephone is never "engaged", ???.it's always "busy".
4. U don't "disconnect" a phone, ??.U simply "hang-up".
5. U never "mess-up" things, ????U only "screw them up".
6. U never have a "residence" tel. no., ???.U have a "home" no.
7. U never have a "office" tel. no., ???U have a "work" no.
8. U don't stop at the "signals", ???..but halt at the "lights".
9. U don't "accelerate", ??.U "step on the gas".
10 Your tyre never "punctures", ???.U may have a "flat".
11 The trains have "coaches" or "bogies' ;no more ! ..but "carriages" or "boxes".
12. There are no "petrol pumps", ???.but "gas stations"..
13 U no longer meet a "wonderful" person, ???U meet a "cool" guy
14 U don't pull the switch down to light a bulb. U rather flick it up.
15 U don't "turn on the heat", ???? U "turn on the juice".
16 There's no "Business Area" ... only "business districts", ???.and no "districts" but"counties".
17 No one stays "a stone's throw away", rather "a few blocks away".
18 There's no "Town Side", ???..it's "Down Town".
19 In hotel U no longer ask for "bill" and pay by "cheque", ??.rather ask for "check" and pay with "bills" (dollars).
20 There are no "soft drinks", ???.. only "sodas"/"pop".
21 Life's no longer "miserable", ??? it "stinks".
22 U don't have a "great" time, ???? U have a "ball".
23. U don't "sweat it out", ????U "work U'r butt off".
24. Never "post" a letter, ??always "mail" it and "glue" the stamps,?..don't "stick" them.
25. U no longer live in "flats" , ???..U live in "apartment".
26. U don't stand in a "queue", ???..you are in a "line".
27. U no longer "like" something, ??? U "appreciate" it.
28. "#" is not "hash", ???..it's "pound".
29. U R not "deaf", ???.U have "impaired hearing".
30. U R not "lunatic", ????U are just "mentally challenged".
31. U R not "disgusting", ???.. U R "sick".
32. U can't get "surprised", ???? U get "zapped".
33. U don't "schedule" a meeting, ????.. U "skejule" it.
34. U never "joke", ????U just "kid".
35. U never "increase" the pressure, ???U always "crank" it up.
36. U never ask for a pencil "rubber" U ask for an eraser.
37. U don't try to find a lift, ???..U find an elevator.
38. U no more ask for a route??? but for a "RAUT"
39. U don't ask somebody "How r u ?", ???.U say "What's up dude?" or U say "How U DOIN' "
40. U never go to "see" a game, ???? U go to "watch" a game.
41. If U see "World" champions(or Series), ????read "USA" champions (orSeries).
42. There's no "zero" but "O", ???.no "Z" but "zee".
43. There's no FULL STOP after a statement, ???. there's a PERIOD.
44. If someone gets angry at U, ???.U get "flamed".
45. U Drive Ur car on Parkways and ???..always park your car in the driveway!
46. You do not ask for" brinjal" .?.. ask for "eggplant "?? also there are no"lady's finger".its "Okra" !
47. In short U don't speak English, ????.U speak American.

------------------------------------------------------------------
... here's 1 more....
... U don't make a move..... U always get going...
------------------------------------------------------------------

வகை:அமெரிக்கா


Email PostDownload this post as PDF

Monday, May 22, 2006

மைக்ரோசாப்ட் வழங்கும் இலவச இணையதளம்

மைக்ரோசாப்ட் "மைக்ரோசாப்ட் ஆபீஸ் லைவ் பேசிக்ஸ் பீட்டா" என்கிற பெயரில் இலவச இணையதளம் அதுவும் நீங்கள் கேட்கும் டாட் காம் அல்லது டாட் ஆர்க் அல்லது டாட் நெட் டொமைன் பெயரிலேயே வழங்குகிறது.என்ன மார்க்கெட்டிங் கேட்ச் மறைந்திருக்கிறதோ தெரியவில்லை.அமெரிக்கா வாழ் மக்கட்கு மட்டுமாம். இப்பொதெல்லாம் ஜெனியூனிட்டி பார்க்க கூட க்ரெடிட் கார்டு நம்பர் கேட்கிறார்கள்.எங்கு போய் முடியுமோ?

http://officelive.microsoft.com/

வகை:இலவச சேவைகள்


Email PostDownload this post as PDF

Thursday, May 18, 2006

நினைவுகள் 36


ரூபவாகினி முதல் சன் வரை - சில மறவா நினைவுகள்
1.தெருக்கோடியிலுள்ள பெரியவரின் வீட்டில் கருப்பு வெள்ளை டீவியில் இலங்கையிலிருந்து வந்த ரூபவாகினி செய்திகள்.(ஏதோ ஒரு வகை பறவை லோகோவுடன்).
2.அந்த காலத்தில் அடிக்கடி வரும் வாசிங் பவுடர் நிர்மா விளம்பரம்.ஸ்கர்ட் பறக்க சிறுமி வந்து போவாள்.
3.அப்புறமா ஐ லவ் யூ ரஸ்னா சுட்டிப் பெண்.
4.கபில் தேவ் வரும் "பூஸ்ட் ஈஸ் தி சீக்ரட் ஆப் மை எனர்ஜி".
5.புதன் வரும் இந்திபாட்டுகள் சித்ரகார்.
6.ஞாயிறு World Of Sports-க்கு அப்புறமா வரும் விக்ரம்-விக்ரமாதித்யன் கதை.
7.அப்புறமாய் ஒளிபரப்பாகும் ஸ்பைடர்மான்,ஹீமான்,டார்சான் வகையறாகள்.
8.ஒன்டே மாட்சில் மன்மதன் ரவி சாஸ்திரியின் கொட்டோகொட்டு.
9.கட்ட குத்து கவாஸ்கரின் மெதுவான விளாசல்கள்.
10.படேடாவின் சிக்ஸர்கள்.
11.குண்டப்ப விஸ்வநாத்தை கின்னஸில் பார்த்தது.
12.அந்த கருப்பான கழுத்து குறுகிய துடுப்பான ஸ்மால் தென் ஆப்ரிக்க பீல்டர்.
13.Srikanth அப்பப்போ சூரியனை பார்ப்பது.
14.Skylab வானிலிருந்து விழப்போகுதுனு ஊரே பயந்தது.
15.நீ சிவாஜி கச்சியா? எம்ஜிஆர் கச்சியா?-னு கேட்க எம்ஜிஆர்-னு பதில் சொல்ல போடா டோப்பா தலையா என பெயர் வாங்கியது.
16.புதன்தோரும் தினமலரின் கதைமலர் வந்து போனது.
17.ஆர்வமாய் படித்த பூந்தளிர்,அம்புலிமாமா,கலைக்கதிர்.
18.ஸ்கூலில் கோனார்,வெற்றி,பாண்டியன்,கவ்சானல் கையேடுகள்.
19.துணிதோய்த்த 501 சோப்பு.இப்போ இருக்கா தெரியலை.
20.டையனோரா டிவி பிராண்ட்.இப்போ இருக்கா தெரியல.
21.அம்பாஸடர் போல் மொட்டையாய் இல்லாமல் சதுர வடிவில் வரும் பியட் கார்.
22.அந்த நீளமான பந்தாவான ஸ்டான்டர்ட் 2000 கார்
23.லைசென்ஸ் இல்லாம ஓட்டலாமே எலும்பும் தோலுமாய் இருந்த லூனா மொபட்
24.புதுசா லாம்பெர்டா ஸ்கூட்டரை பார்த்ததே இல்லை.
25.சைக்கிள் பின் டயரில் அச்சருகே மாட்டப்பட்டிருக்கும் வட்ட லைசென்ஸ் தகடு.
26.Bigfun bubblegum வாங்கியாந்து டிக்கட்டுகள் 1000 ரன் சேகரித்து டையரி வாங்கியது.
27.ஸ்டாம்ப் கலெக்டிங்னு ஒரு hobby இருந்தது.
28."மேடின் ஜப்பான்" ஒரு நாடென நினைத்தது.
29.கதிரவன்னு ஒரு நாளிதழ் தோன்றி மறைந்தது.
30.கிராமத்தில் நடு மைதானத்தில் சைக்கிளில் ஒருவரை ஏற்றி விட்டு அவர் இறங்காமலே ஒரு வாரமாய் வட்டம் வட்டமாய் சுற்றிவருவார்.என்ன கூத்தோ அது தெரியவில்லை.
31.ரேடியோ வச்சுக்க லைசென்ஸ் புக் வேணுங்கோ.
32.தினமலரில் வெளியான டார்சான் படக்கதை.
33.வாரமலரில் வெளியான ஒரு குட்டிச்சாத்தான் திகில் பேய் தொடர்கதை.
34.மெட்ராஸிக்கு போகும் கண்ணன் கண்ணன் பஸ்ஸி.
35.கன்னியாகுமரி கடல் உள் பாறையில் கட்டப்பட்டிருந்த கண்ணாடி ஓட்டல்.
36.நாகர்கோவில் நகராட்சி பூங்காவின் மான்கள், மட்டுமல்லாமல் கொட்டிகிடந்த நாவல் மற்றும் இலந்த பழங்கள்.

வகை:தமிழ்நாடு


Email PostDownload this post as PDF

Wednesday, May 17, 2006

முந்துவது யார்? தினமலரா? தினகரனா?

இணைய உலகில் அதிகமாய் தேடப்படுவது எந்த வார்த்தை,அவ்வார்த்தை எவ்வூரிலிருந்து அதிகமாய் தேடப்படுகிறது அல்லது எந்நாட்டிலிருந்து அதிகமாய் தேடப்படுகிறது, அந்த வார்த்தை hot or not போன்ற தேடப்படும் வார்த்தைகளின் தற்போதைய நிலையை படம்பிடித்து காட்டுகிறது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கூகுள் ட்ரெண்ட் எனப்படும் கூகுளின் புதிய சேவை.
இப்போதைக்கு சோதனை நிலையிலுள்ளது.
So போட்டி வார்த்தைகளை காமா போட்டு டைப்புங்கள்.கலர் கலரா உடனடியா ரெசல்டை பாருங்கள் ஜாலியா.(தலைப்பெல்லாம் சும்மாங்க.யாரையும் மூட்டிவிடும் ஐடியாவில் இல்லை.வாழ்க தமிழ்).

http://www.google.com/trends

வகை:தொழில் நுட்பம்.


Email PostDownload this post as PDF

Tuesday, May 16, 2006

தலைக்காட்டாமல் வலைமேய

பொதுவாக வலை மேயும் போது (அதாங்க Browse பண்ணும் போது) உங்களை பற்றிய சகல தகவல்களும் (உங்கள் ஐபி அட்ரஸ்,போய்விட்டு வந்த தளங்கள் etc) ஏதோ ஒரு செர்வரில் பதிவாகியிருக்கும் என்பது உண்மை.நீங்கள் எதாவது விளையாட்டு காட்டினால் மோப்பம் (trace back) பிடித்து ipaddress வைத்து குறிப்பிட்ட நபரை கண்டு பிடித்து விடலாம். இவ்வாறு மாட்டிக்காமல் தலையை மறைத்து தடம் காட்டாமல் வலை மேய்தல் தான் Anonymization எனப்படுகிறது.

இவ்வாறு ஒளிந்து வலைமேய ஹைடெக் மென்பொருள்கள் காசு கொடுத்து வாங்கலாம்.இல்லையேல் இலவசமாக கீழ்கண்ட மென்பொருள்களை பயன்படுத்தலாம்.கிவ் எ ட்ரை.

http://anon.inf.tu-dresden.de/index_en.html
http://tor.eff.org/

வகை:தொழில் நுட்பம்.


Email PostDownload this post as PDF

Monday, May 15, 2006

msn.com இப்போது தமிழில்

கற்புக்கரசிக்கு கடற்கரையில் இடமில்லையா போன்ற செய்திகளுடன் மைக்ரோசாப்டின் கமர்சியல் போர்ட்டல் எம்.எஸ்.என் டாட் காம் இப்போது தமிழிலும் (பீட்டா வடிவம்) வழங்கப்படுகிறது.மைக்ரோசாப்டின் இன்னொரு ஊர்வயப்படுத்தல்.

http://content.msn.co.in/Tamil/Default.htm

And Hindi version is here.
http://content.msn.co.in/Hindi/Default

வகை:தமிழ்நாடு


Email PostDownload this post as PDF

Tuesday, May 09, 2006

வரிசைகளின் வரிசை

அனைத்து "Computer`s system File" -களும் அதன் Properties- உடன் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே. http://www.fileproperties.com/

அனைத்து File Extension-களும் அவற்றை எப்படி திறப்பது போன்ற விவரங்களுடன் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://filext.com/

அனைத்து DLL file-களும் இறக்கம் செய்யலாம் இங்கே. http://www.windll.com/

அனைத்து Linux RPM-களும் இறக்கம் செய்ய வசதியாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://rpm.sh-linux.org/rpm-index-2004/index.html

அனைத்து விண்டோஸ் Event Eiewer Event id-களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://www.eventid.net/

அனைத்து Microsoft Knowledge Base களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://www.kbalertz.com/

அனைத்து ISO Country Code களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://www.orangehedgehog.com/resources/content.php?show=iso_country_codes

அனைத்து ASCII Code-களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://www.good-stuff.co.uk/useful/ascii.php

அனைத்து RFC-களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://www.good-stuff.co.uk/useful/rfc.php

அனைத்து IEEE Standard-களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://www.ieee802.org/802info.html

அனைத்து Country based TLD-களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://www.iana.org/cctld/cctld-whois.htm

அனைத்து Generic TLD-களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://www.iana.org/gtld/gtld.htm

அனைத்து TLD-களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://data.iana.org/TLD/tlds-alpha-by-domain.txt

அனைத்து Resistor Color Code-களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://www.aikenamps.com/ResistorColorCode.htm

அனைத்து HTML Color Code-களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://www.orangehedgehog.com/color/

அனைத்து DOS Command-களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://www.easydos.com/dosindex.html

அனைத்து Linux Command-களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://www.linuxdevcenter.com/linux/cmd/

அனைத்து Solaris Command-களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://www.allcommands.com/index.php3?page=http%3A//www.allcommands.com/solaris%2520commands%2520list.html

அனைத்து SMTP Command களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://www.orangehedgehog.com/resources/content.php?show=smtp_commands

அனைத்து POP3 Command களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://www.orangehedgehog.com/resources/content.php?show=pop3_commands

அனைத்து Port/Protocol/Service number-களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://www.iana.org/assignments/port-numbers

அனைத்து Mineral-களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://www.galleries.com/minerals/byname.htm

அனைத்து IT Certifications-களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://www.infosyssec.com/infosyssec/itcert.htm

அனைத்து Google Service-களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://www.tipmonkies.com/2005/11/17/the-penultimate-guide-to-google-services

வகை:தொழில் நுட்பம்.
வகை:பொது அறிவு


Email PostDownload this post as PDF

Monday, May 08, 2006

லோகோ ரகசியம் - விப்ரோ1945-ல் மகாராஷ்டிராவில் அமல்னெர் எனும் நகரில் சூரியகாந்தி எண்ணெய்,வனஸ்பதி மற்றும் சோப்பு உற்பத்தி செய்யும் நோக்கில் துவக்கப்பட்டதுதான் Western India Products Limited.அஸிம் ப்ரீம்ஜி(Azim Premji)-வால் 1979-ல் -Wipro வாகி இன்று அது ஒரு ஹைடெக் கார்ப்பொரேட்டாகி நிற்கிறது.உலகெங்கும் 30 அலுவலக வளாகங்களுடன் 50,100 பேர் இந்நிறுவனத்துக்காக வேலைசெய்கிறார்கள்.இதன் வானவில்பூ ('Rainbow Flower') லோகோ 'Applying Thought' என்ற வாசகத்துடன் 1998-ல் உருவாக்கப்பட்டது. இதன் லோகோவிலுள்ள பிரகாசம் integrity-ஐயும், புயலுக்கு பின் வரும் வானவில் human values-ஐயும், மலரின் மத்திய பாகம் நுண் தொழில் நுட்ப innovative solutions-ஐயும் மற்றும் வானவில்லின் எளிமை,அபூர்வம் value for money -யையும் உணர்த்துகிறதாம்.மலர் பெண்ணியமாய் மென்மையாயினும் 'Applying Thought' என ஆண்மைத்தனமாய் மென் பொருள் தீர்வு வாடிக்கையாளருக்கு வழங்குகிறோம் என்கிறார்கள்.மேலே W என காண்பது விப்ரோவின் பழைய லோகோ.

டெயில்பீஸ்:1966-ல் தனது 21-வது வயதில் அஸிம் ப்ரீம்ஜி விப்ரோவின் தலைமையை ஏற்றார்.
இன்று விப்ரோதான் உலகின் முதல் PCMM Level 5 கம்பெனி என்பது ஒரு ஆச்சர்யமான உண்மை.

வகை:லோகோ ரகசியம்


Email PostDownload this post as PDF

Sunday, May 07, 2006

காசுக்கு எட்டு கேஸிவ்நட்டு

கொல்லாம்பழம்-ஓந்தாம்பழம்-கொல்லாங்கொட்டை-முந்திரிக்கொட்டை-அண்டி-அண்டிப்பருப்பு-முந்திரிப்பருப்பு இதெல்லாம் Cashew apple மற்றும் Cashew nut ன் நம்மூர் பெயர்கள்.
தான் சாப்பிடாமல் ஏழைநாடுகள் பணக்கார நாடுகளுக்கு அனுப்பிவைக்கும் ஒரு சுவையான பருப்பு இது.இன்று உலக அளவில் இந்தியாவின் கேரளா ஏற்றுமதியில் நம்பர் ஒன்னாம்.

இதன் பெயர்காரணம்-கேஸிவ்நட்-பற்றி பேச்சு வந்த போது ஒரு சுவையான கதையொன்றை கேள்விபட்டேன்.அந்த பெயர்க்காரணம் எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.

அந்த காலத்தில் இந்த அண்டிப்பருப்பை நம் ஆட்கள் அழகாக வறுத்து உப்பிட்டு சூடாக "காசுக்கு எட்டு...காசுக்கு எட்டு"என கூவி விற்பனை செய்தார்களாம்.இதைக் கேட்ட நம்மூர் வந்த மேற்க்கத்தியர் "வாட் இஸ் இட் காஸ்க்கெட்" என வினவினராம்.சுவைத்துப்பார்த்துவிட்டு "ஓ காஸ்கெட் இஸ் நைஸ்" என்றனராம். அதுவே படிப்படியாக மருவி காஸிவ்நெட் ஆகி விட்டதாம்.கதை எப்படி இருக்கு?

ஒருவேளை இருந்தாலும் இருக்கலாம்.யாருக்கு தெரியும்?.

இது போல் மாங்காயிலிருந்து mango-வும்,
இஞ்சிவேரிலிருந்து ginger-ரும் ,
பப்பாளியிலிருந்து papaaya-வும்,
சக்கவிலிருந்து jack-கும்,
தேக்குவிலிருந்து teak-கும்,
கொய்யாவிலிருந்து guava-வும்,
வெற்றிலயிலிருந்து betel-லும் வந்திருக்கும் போலும்.

வகை:தமிழ்நாடு


Email PostDownload this post as PDF

Saturday, May 06, 2006

எளிதாய் உங்கள் கணிணி பற்றிய in and out தகவல்கள்

உங்கள் கணிணியைப் பற்றிய அனைத்து தனிப்பட்ட தகவல்களையும் முழுவதுமாய் அறிந்து கொள்ள,அது குறித்த சகல மென் வண் தகவல்களையும் தெரிந்து கொள்ள ஒரு அருமையான மென்பொருள்.அதுவும் இலவசமாக.
இதை இயக்க இந்த மென்பொருளை உங்கள் கணிணியில் நிறுவ வேண்டிய தேவை இல்லை.Just download and run.இனி உங்கள் கணிணி மற்றும் கணிணி பாகங்களின் Brand,Model மற்றும் Configuration informations-ஐ தேடிக் கண்டுபிடிக்கவேண்டியதில்லை.முயன்றுபாருங்களேன்.

http://www3.sympatico.ca/gtopala/about_siw.html

வகை:தொழில் நுட்பம்.

UPDATED:
Belarc Advisor - The Belarc Advisor builds a detailed profile of your installed software and hardware, missing Microsoft hotfixes, anti-virus status, CIS (Center for Internet Security) benchmarks, and displays the results in your Web browser.
http://www.belarc.com/free_download.html

One more Free inventory tool even works with windows 95 98 ME NT etc
http://www.pxserver.com/WinAudit.htm


Email PostDownload this post as PDF

Wednesday, May 03, 2006

லோகோ ரகசியம்-சன் மைக்ரோசிஸ்டம்ஸ்.


1982-ல் துவக்கப்பட்டு, மென் மற்றும் வண் கணிணித் துறையில் கொடிகட்டிப் பறக்கும் சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனம் சான்டக்ளாரா,கலிபோர்னியாவை தலைமையகமாகக் கொண்டது.சோலாரிஸ் OS,ஜாவா மற்றும் இவர்கள் ஸ்பார்க் சர்வர்கள் உலகப் புகழ்பெற்றவை.பிண்ணிப்பிணைந்தவாறிருக்கும் நான்கு SUN வார்த்தைகள் தான் இவர்களின் லோகோ,இதை வடிவமைத்தவர் ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் வாகன்ப்ராட் (Vaughan Pratt) என்பவர்.

டெயில்பீஸ்:
SUN originally stood for Stanford University Network .
Founders: Vinod Khosla (Indian american), Scott McNealy, Bill Joy and Andy Bechtolsheim
2004 வாக்கில் மொத்தம் 35000 பேர் சன்னில் வேலை செய்கிறார்கள்.

வகை:லோகோ ரகசியம்


Email PostDownload this post as PDF

Tuesday, May 02, 2006

எங்களூர் தமிழ்(?)

கன்னியாகுமரி--திருநெல்வேலி-தூத்துக்குடி பகுதி வாழ்மக்கள் பயன்படுத்தும் பிரத்தியேக தமிழ்(?) வார்த்தைகளின் தொகுப்பு இங்கே

படக்கு - பட்டாசு
அய்யம் - கெட்டது (எகா.அய்யே அது அய்ய பழம்)
தல்லுதல் - பொடியாக்குதல்
சமுட்டுதல் - மிதித்தல்
ஏசுதல்-திட்டுதல்
பைதா - சக்கரம்
பிளசர்-கார்
குசினி - சமையலறை-ஆங்கில வார்த்தை Cuisine-யிலிருந்து வந்ததோ?.
அரங்குவீடு-சேமிப்பு அறை
கக்கூஸ் - கழிப்பறை
மட்டுப்பாவு வீடு - மாடி வீடு
அளி-பெரிய ஜன்னல் (அளிபோட்ட வீடு)
வீட்டு நடை-வீட்டு படி (நடைல உக்காரு)
தலவாணி-தலையணை
செட்டி-சோபா செட்-ஆங்கில வார்த்தை set-யிலிருந்து வந்ததோ?.
பத்தாயம்-அரிசி சேமித்துவைக்குமிடம்
துடைப்பம்-விளக்குமாறு
காய்ச்சல்-ஜூரம்
கடுதாசி,காயிதம்-கடிதம்
சோறு-சாதம்
கொக்கூஸ் - அச்சுமுறுக்கு
சக்கப் பழம் - பலாப்பழம்
சின்ன உள்ளி-சின்ன வெங்காயம்
பல்லாரி உள்ளி-பெரிய வெங்காயம்
சீனி-சக்கரை
சக்கரை-வெல்லம்
கருப்பட்டி-பனைவெல்லம்
மண்ணெண்ணெய்-கிருஸ்னாயில்-கெரசின் (kerosene)ஆயில்-சீமெயெண்ணை
வாத்தியார்,வாத்திச்சி- ஆசிரியர்,ஆசிரியை
வள்ளம்-சிறுபடகு
குட்டுவம்,குத்துப்போணி-பெரிய பாத்திரம்
சருவம்-சிறிய பாத்திரம்
சொளவு-அரிசியை வீசி சுத்தம் செய்ய உதவும் பொருள்
முடுக்கு-சந்து
விலக்கு-ஊரின்எல்லை
புட்டான் - பட்டாம்பூச்சி
பக்கி-வண்ணத்துப்பூச்சி
நாய்க்குடை-காளான்
ஓந்தான் - ஓணான்
பாச்சா-கரப்பான்பூச்சி
கொட்டு-ட்ரம்ஸ்
உளக்கு-அரிசி அளவை
சென்ட்-நில அளவை
நிக்கர்-அரைகால்சட்டை
சாப்பு-சட்டை பை
சாரம்-லுங்கி
கைலேஞ்சி-கர்சீப்பு
சென்னி-கன்னம் அல்லது தலை
சுண்டு- உதடு
சாணி-சாணம்
சாளை,வாளை,நெய்மீன்,துண்டுமீன்,துப்புவாளை,வெளமீன்,இறா,பாறைமீன்,நெத்திலி-மீன்வகைகள்
தெங்கு-தென்னைமரம்
பொத்தை-சிறுமலை,பாறை
சானல்-சிறுஆறு-ஆங்கில வார்த்தை Channel-யிலிருந்து வந்ததோ?.
பலசரக்குகடை-டிபார்ட்மென்டல் ஸ்டோர்
ஆக்கர்கடை-காயலான் கடை
சுள்ளி-காய்ந்த மரக்கிளை துண்டுகள்
கோயில்கொடை-கோயில் திருவிழா
சோலி-வேலை
வண்ணம்-குண்டு,பருத்த (அவள் என்னா வண்ணம்)
குண்டு-குழி (குப்பை குண்டு)
கட்டை-குள்ளம்
நெட்டை-உயரம்
ஈக்கல்-தென்னைஓலை நார்
ஓலைப்பிறை-தென்னைஓலையால் வேய்ந்த கூரை
தொந்தி-தொப்பை

அப்டேட்:

இன்னும் சில நினைவுகள்

எப்பாவு-செல்லமாய் எப்பா
எம்மாவு-செல்லமாய் எம்மா
மக்கா-செல்லமாய் மக்களே
மேனே-செல்லமாய் மகனே
மேளே-செல்லமாய் மகளே
மயினி-மச்சினி(மச்சினன்)-கொழுந்தி,கொழுந்தியாள்-மாப்பிளையின் தங்கை-"மதினி"யின் மரூஉ-மதினி-அத்த பொண்ணு, மாமன் பொண்ணு, மனைவியின் அக்கா
செமத்தியா-செமத்தியா அடிவாங்கினான் (செம்மையாய் -யின் மருவோ?)
மசுகுட்டி பூச்சி,மைக்குட்டி பூச்சி-கம்பளி பூச்சி
ஏல-சிறு பையனை அழைத்தல்
ஏட்டி-சிறு பெண்ணை அழைத்தல்
இன்னேருங்க-மனைவி கணவணை அழைத்தல்
ஆட்டும்-சரியென ஆமோதித்தல்- ஆகட்டும்
மரு-மச்சம்
மூஞ்சி-முகம்-மூஞ்சியும் மொகரக்கட்டையும்
முழித்தல்-விழித்தல்
வெள்ளனே-காலைநேரம்
அந்தி-சாயங்காலம்
உச்சி-உச்சை-மதியம்
நிசி-இரவு
வெளக்கு-பல் வெளக்கு-வெள்ளையாக்கோ?
கருக்கு-இளம்-இருளாகும் மாலை பொழுது,இளம் தேங்காய்
பயினி-பனை பதனீர்
எளனி-இளம் தேங்காய் நீர்
சொக்காய்-சட்டை
அதிரசம்,மோதகம்,பனியாரம்,கொழுக்கட்டை,முந்திரிகொத்து-பலகாரவகைகள்
சாரா-பூரான்
ஊத்து-பீப்பீ-இசைக்குழல்
மேனி-உடம்பு
பெடனி,பெடரி = பின்கழுத்து
குறுக்கு = பின் இடுப்பு (இடுப்போட முதுகுப்பக்கம்)
கொவுருதல்-குளிர்தல் ஈரமாதல்
மாய்ச்சல்-வருத்தம்
தெகையும்-பத்தும்-பற்றும்-போதும்
ஓர்மை-நினைவு-நியாபகம்-(ஓர்மை இருக்கா?)

வகை:தமிழ்நாடு


Email PostDownload this post as PDF

எளிதாக கணிணி திரையை படமாக்க

PrintScreen எனப்படும் "திரையைப் படமாக்கல்" அதாவது கணிணி மானிடர் திரையிலுள்ளதை அப்படியே படமாக்கி சேமிக்க அல்லது ஒரு குறிப்பிட்ட விண்டோவை மட்டும் படமாக்கி சேமிக்க இதோ ஒரு இலவச எளிய அருமையான மென்பொருள் உங்களுக்காக.இதை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவ வேண்டும்.பிடிக்கப்பட்ட Screen Shot-டை நேரடியாக சேமிக்கலாம் இல்லை பிரிண்டருக்கு அனுப்பலாம் இல்லை நேரடியாக மின்னஞ்சலே செய்யலாம்.

http://www.gadwin.com/download/ps_setup.exe

அப்டேட்:
நண்பர் கார்த்திகேயன் பரிந்துரைக்கும் இன்னொரு இதே பயன்பாட்டு மென்பொருள்.Looks like excellent.Give a try.
http://www.mirekw.com/winfreeware/mwsnap.html

வகை:தொழில் நுட்பம்.


Email PostDownload this post as PDF

Monday, May 01, 2006

துபாயும் தீபாவளி பட்டாசும்

இப்போதெல்லாம் எப்படி என தெரியவில்லை.2003 தீபாவளிவாக்கில் பர்-துபாயில் தங்கியிருந்தபோது நம் இந்தியர்கள் எப்படி தீபாவளியை துபாயில் பயங்கரமாய் பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர் என்பதை பார்க்க முடிந்தது.இந்தியாவில் இருந்து தீபாவளி கொண்டாடுவது போன்றே ஒரு பிரம்மை.அடுத்த நாள் அரேபிய நாளிதழ் ஒன்றில் ஒரு அரேபியர் கடிதம் எழுதியிருந்தார்."தீபாவளி பட்டாசு கொண்டாட்டம் ஒரு பப்ளிக் நியூசன்ஸ் (nuisance).அதை தடை செய்ய வேண்டும்" என்று.அடுத்த நாளே நம்மவர் ஒருவர் பதில் கடிதம் எழுதியிருந்தார்."விடிய விடிய வெடிகுண்டு சத்தங்களும் ,சூசைட்பாம் சத்தங்களும் ஆம்புலன்ஸ் சத்தங்களும் கேட்பதைவிட இந்தமாதிரி குழந்தைகள் பட்டாசு வெடித்து கொண்டாடும் சத்தம் கேட்பது எவ்வளவோ மேல்" என்று.


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்