உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Monday, July 30, 2007

கூகிள் எர்த்துக்கு சவால் விடும் இந்தியா


இந்திய சந்து பொந்துகளையும் அதிலிருக்கும் கடைகள், ஓட்டல்கள், பார்க்குகளையும் மேப்பாய் போடுவதொன்றும் கூகிளுக்கு எளிதாய் அமைந்திருக்கவில்லை. மேற்கத்திய நாடுகள் போல கட்டம் கட்டமாய் சட்டம் சட்டமாய் அமைந்தனவல்ல நம்மூர் தெருக்கள். மட்டுமின்றி மொத்த மேப்பையும் தாங்களே வரைய வேண்டியிருந்தது. அது போக இன்றைய சூழலில் இருக்கும் கோடிக்கணக்கான தெருக்கு தெரு விவரங்களை தங்கள் வரைபடத்தில் கொண்டு வர Geospatial crowdsourcing , அதாவது பொது மக்களிடமிருந்து உள்ளீடு பெறவேண்டியிருக்கின்றதாம். உங்கள் தெரு விவரங்கள், முனையிலுள்ள கசாப்பு கடை, வீட்டெதிரிலுள்ள சலூன் இவற்றையெல்லாம் அவர்கள் டேட்டாபேசில் நீங்களே உள்ளீடு செய்யலாமாம். இது போல் உள்ளூர்வாசிகள் உள்ளிடும் தகவல்கள் அதிகரிக்க அதிகரிக்க அது முழுமுதல் பக்கா மேப்பாக உருவாகிவிடும். அதுதான் அவர்களின் லட்சியம். (படத்தில் ஐதராபாத்தின் கலர்புல்லுக்கு இதுவே காரணம்).

சில நாடுகளில் Tele Atlas மற்றும் NAVTEQ போன்ற நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான பணியாளர்களை அமர்த்தி சந்து சந்தாய் போய் traffic signs, one-way streets, points of interest களை திரட்டி வர அனுப்புகின்றார்கள். இப்படி மனித வள வழி இந்த டேட்டாபேஸ்களை சிலர் நிரப்பிவர ஜப்பானியர் கொஞ்சம் முந்திப் போய் கொண்டிருக்கின்றார்கள். ஜாப்பானில் காண்டா சிவிக் 2006 (Honda Civic) காரில் நீங்கள் செல்லும் போது டிராபிக்கில் மாட்டிகொண்டால் அது மைய செர்வர் ஒன்றுக்கு தானாய் தகவல் அனுப்பி விடுமாம். அத்தகவல் அனைவருக்கும் கார் டேஷ் போர்டு (Dash Borad) வழி போய் சேர்ந்துவிடும். எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம்?

Related Post.
சென்னைத் தெருப் பெயர்கள் இப்போது கூகிள் மேப்பில்


Email PostDownload this post as PDF

Friday, July 27, 2007

வைரஸ்-க்கு வயது 25

சிலவற்றின் ஜனன நாட்களை மகிழ்வுடன் நினைவுகூறலாம். உதாரணத்திற்கு 1882-ல் சார்லஸ் பாபேஜ் கணிணியுகத்துக்கு பிள்ளையார் சுழி போட்டது, 1965 -ல் முதன்முதலாய் Fernando Corbato தன் சகாக்களுக்கு ஈமெயில் அனுப்பி கொண்டாடியது இப்படியாய் பல.
சமீபத்தில் ஒரு விஐபி தனது 25-ஆவது பிறந்த நாளை கொண்டாடியிருக்கின்றார். அவர் தாம் கனம் கணிணி வைரஸ் அவர்கள். 1982-ல் பிட்ஸ்பர்க்கை சேர்ந்த Richard Skrenta என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன் உருவாக்கிய Elk Cloner என்ற வைரஸ் தான் உலகின் முதல் கணிணி வைரஸாம். பெரிதாக அது ஒன்றும் சாதித்து விடவில்லை. போடப்படும் டிரைவுகளிலெல்லாம் காப்பியாகி கிண்டலான வரிகளை ஸ்கிரீனில் காட்டி எரிச்சலூட்டிப் போனது. இக்கொடுமை சிலகாலத்தில் மில்லியன்டாலர் வியாபாரமாக போகிறதென அப்போது யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்கமாட்டார்கள். பின்னர் அவாள் Worm, Trojan, Rootkit, Malware, Spyware, Phishing, Bots அப்படி இப்படியென விதவிதமான பிறவி எடுத்து களத்தை கலக்கிப்போனார். இன்றும் கலக்கிக்கொண்டிருக்கின்றார். அநேக கணிணிகாரர்களுக்கு சிம்ம சொப்பனமானார். இன்று ஓரளவு அமைதியாய் இருந்தாலும்
எங்கு எப்போது இவர் எவ்வடிவில் வருவாரென தெரியாததாதலால் மென்பொருள் சார் நிறுவனங்களெல்லாம் எதற்கும் எப்போதும் உஷாராவே இருக்கின்றனர்.
பின்னே Morris Worm, Michelangelo virus, SQL.Slammer, Code Red, Nimda, Concept , Melissa இவர்களையெல்லாம் மறந்துவிடமுடியுமா என்ன?


Email PostDownload this post as PDF

Wednesday, July 25, 2007

காலம் கெட்டு போச்சு டோய்

எதையெல்லாம் ஏலம் போட்டு கூவி கூவி விற்பதுவென வரைமுறையே இல்லாமல் போய் விட்டது. ஈபேயில் யாரோ ஒருவர் பனிக்கட்டியை விற்றாராம். இன்னொருவர் ப்ரிட்னி ஸ்பியர்ஸ் சவைத்து போட்ட பபுள்கம்மை விற்றாராம். இன்னொரு இளம்பெண் தான் பயன்படுத்திய உள்ளாடைகளை விற்றாராம். இப்படி கிரேஸியாய் போகும் இணையத்தில் அசாதாரணமெல்லாம் மிக சாதாரணம்.

சமீபத்தில் WabiSabiLabi (வாபிசாபிலாபி) வென ஒரு சுவிஸ் கம்பெனி மென்பொருள்களிலுள்ள security exploits களை விற்க தொடங்கியிருக்கிறார்கள். கஷ்டப்பட்டு நீண்ட நெடு ஆய்வில் கண்டறியபடும் பிரபல மென்பொருள்களிலுள்ள ஓட்டை உடைசல்களை கண்டறியும் வல்லுனர்கள், அதை சுட சுட சந்தையில் விற்கலாமாம். யார் அதை வாங்குவார்? அது எப்படி பயன்படுத்தப்படும்?. என்ன விலை போகும்? எல்லாம் ஆண்டவனுக்கு தான் வெளிச்சம். அணுகுண்டை (WMD) விற்பதற்கும் security exploits-யை விற்பதற்கும் வித்தியாசம் ஏது?. அணுகுண்டு உயிர்களை குடிக்கும்,பொருளாதாரத்தை குலைக்கும். அதுவே தான் மென் துளைகளும் செய்கின்றது. பொருளாதாரத்தை குலைக்கும்.முடிந்தால் உயிர்களையும் குடிக்கும். சமீபத்தில் அமெரிக்க மருத்துவமனைகளின் கணிணிகள் பல கேக்கர்களால் தாக்கப்பட்டு, FBI வலைவீசி சிலரை பிடித்தும் இருக்கிறார்கள்.
ஆமா காலம் கெட்டு போச்சு தான்

இங்கே ஏலத்தை பார்க்கலாம்

Wslabi Market


Email PostDownload this post as PDF

Friday, July 13, 2007

16 வயதினிலே

பதினாறு வயதினிலேயே இவன் ஒரு பள்ளி செல்லும் பருவ hacker. அப்படியே சமூகம் விட்டிருந்தால் இன்றைக்கு அவன் FBI -யில் மாட்டியிருப்பான். அல்லது FBI தேடிக்கொண்டிருக்கும். Firas Bushnaq என்பவர் இச்சிறுவனின் திறமையைகண்டு வியந்து தனது eCompany-யில் வேலைப்போட்டு கொடுத்தார். முடங்கி கிடந்த அவன் திறமைகள் ஆக்கப்பூர்வ வழியில் திருப்பிவிடப்பட்டன. டிஜிட்டலாய் இணையத்தில் பரந்து விரிந்து கிடக்கும் தகவல்களுக்கு இருக்கும் ஆபத்துகள் மற்றும் அதனை பாதுகாப்பதின் முக்கியத்துவம் ஆகியவை வரும் காலத்தில் அதிமுக்கிய துறையாக போகின்றதென அவர்கட்கு தோன்றியது. eeye நிறுவனமும் பிறந்தது.
http://www.eeye.com/

நான் சொன்னது தன்னை Chief Hacking Officer என சொல்லிகொள்ளும் 26 வயது Marc Maiffret பற்றி.

இன்று இவர்களின் சேவை மிகப் பிரபலம். 2001 -ல் சுனாமியாய் தாக்கிய Code Red மற்றும் Sasser பற்றி வரும்முன்னே எச்சரித்தவர்கள் இவர்கள்.
இன்றைக்கும் அபாயம் வாசலில் வருமுன்னே, பிரபல மென்பொருள்களில் இருக்கும் ஓட்டைகள், துளைகள் பற்றி மைக்ரோசாப்ட் முதலான கம்பெனிகளுக்கு இவர்கள் தெரிவிக்கின்றார்கள். இதனை zero day attacks என்கின்றார்கள். இதுபோல் வரும்முன் காக்கும் பணிக்காக பல ஆராய்சிகள் மேற்கொள்கின்றார்கள். இவர்களின் இலவச (ஓராண்டு) Blink மென்பொருளை உங்கள் கணிணியில் நிறுவினால் அது இருக்கும் தொல்லைகளையும், வரும் தொல்லைகளையும் போக்கிவிடுமாம். மைக்ரோசாப்ட் ஒவ்வொரு இரண்டாவது செவ்வாயும் தான் security patches வெளியிடுகின்றார்கள். அவர்களையும் முந்தி இவர்கள் விண்டோஸ்,IE போன்ற மென்பொருள்களிலுள்ள தவறுகளை கண்டறிந்து உடனடி தீர்வு patch-யையும் வெளியிடுகின்றார்கள். இண்டரெஸ்டிங் தான்.
இப்போது Marc Maiffret FBI க்கு ஆலோசனை சொல்லும் அளவுக்கு வளர்ந்திருக்கின்றார். இருமுறை அமெரிக்க காங்கிரஸில் IT security பற்றி உரையாற்றியிருக்கின்றார். இவர் தன்னை பற்றி சொல்லும் போது ஆச்சர்யமாய் சொல்கின்றார்."It's inspiring that some kid [who] didn't even finish high school actually worked hard enough and believed enough to get where I am today,"

(வெளிநாட்டில் சிறுவன் சாதித்தால் மெச்சுவீர்கள். உள்ளூரில் சிறுவன் சி-செக்ஸன் செய்தால் உள்ளே தூக்கிபோடுவீர்கள் என முனுமுனுக்கின்றீர்களா? ஆளைவிடுங்க சாமி :) )

Download Free Blink software Here
http://www.eeye.com/html/products/blink/personal/index.html


Email PostDownload this post as PDF

Wednesday, July 11, 2007

நோட்பேட் கிமிக்ஸ்கள்

சிறுசுகளுக்கு மேஜிக் காட்டி விளையாடலே ஒரு தனி அலாதிதான்.
நோட்பேடை திறவுங்கள்
.LOG என்று டைப்புங்கள்
ஏதாவது ஒரு பெயரில் அந்த கோப்பை சேமியுங்கள்.
நோட்பேடை மூடிவிட்டு மீண்டும் அந்த கோப்பை திறவுங்கள்.
ஊப்ஸ். மே...ஜிக்.
இது போன்ற கிமிக்ஸ்கள் ஆத்திர அவசரத்துக்கு உதவலாம். சிறுசுகளுக்கு மேஜிக் போல் காட்டலாம்.

அதையே இப்படியும் செய்யலாம்.
ஒரு சவாலென சொல்லுங்கள்.ஒரே ஒரு கீ மட்டும் அழுத்தி நோட்பேடில் இப்போதைய நேரம், நாள், மாதம், வருடம் என அனைத்தையும்
டைப்பமுடியுமா? வென கேளுங்கள். விழிப்பார்கள் (?)
விடை: F5-யை அழுத்தினால் அது கீழ்கண்டது போன்ற வெளியீடை கொடுக்கும்.
2:31 PM 7/11/2007

இன்றைய சிறுசுகள் பழம் தின்னு கொட்டைபோட்டவைகளென நீங்கள் முனங்குவது கேட்கின்றது.

Notepad tricks


Email PostDownload this post as PDF

Monday, July 09, 2007

"வெள்ளைத் தமிழன்" ஆக்கிய மென்பொருள்

அவ்வப்போது நம்மாட்கள் பிரமாண்டமாய் எதையாவது செய்து அசத்துவது வழக்கம். அவ்வரிசையில் லேட்டஸ்ட் "ஒரு கூடை சன்லைட்" சூப்பர் கிட் சிவாஜி திரைப்பட பாடலில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை வெள்ளையாக்கி காட்டி நம் மென்பொருள் வல்லுனர்கள் மகிழ்ந்திருக்கிறார்கள்.மேலும் படிக்க கீழே.Click the Pictures to Enlarge


சென்னை வடபழனியின் ஒரு கோடியில் உள்ள Indian Artists எனும் நிறுவனத்தின் 25 மென்பொருள் படைப்பாளிகள் பிக்ஸல் பிக்ஸலாய் ரஜினி சாரை இரவு பகலாய் செதுக்கி ஓராண்டாய் உழைத்து வெற்றியும் கண்டிருக்கிறார்கள். இதற்கு அவர்கள் பயன் படுத்திய மென்பொருளின் பெயர் Digital Fusion. இது eyeon Software Inc எனும் கனடியன் சாப்ட்வேர் நிறுவனத்தின் Visual Effects (VFX) க்கான சிறப்பு மென்பொருளாகும். இம்மென்பொருள் கொண்டு Final Destination II ,Sin City போன்ற படங்களும் எடிட்டப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது
Discreet (AutoDesk) நிறுவனத்தின் Combustion மென்பொருளும் Rising Sun Research நிறுவனத்தின் CineSpace மென்பொருளும் பயன்படுத்தபட்டுள்ளனவாம்.

Jacky எனும் அந்த வெள்ளைக்கார பெண்மணியை Digital Grafting க்காக ஸ்பெயினில் பயன்படுத்தியிருக்கிறார்கள். குளுகுளுவென ரோமமின்றி பளபளவென இருக்க அந்த பெண் ரஜினி சாருக்கு மாடலாக தேர்ந்தெடுக்கப்பட்டாராம்.
ஒவ்வொரு தேவையான முக பிக்ஸலும் Rotoscoping மூலம் அந்த பெண்மணியிடமிருந்து ரஜினி சார் முகத்துக்கு மாற்றப்பட்டதாம்.
இருவரையும் ஒரே வேகத்தில் இயக்கவைத்து ஒரே முகபாவனைகளை வரவைக்க Grid Wrapping முறை பயன்படுத்தப்பட்டதாம்.
அப்படி 80% ரஜினிகாந்த் முகமும் ஜாக்கியின் முகத்திலிருந்து பிய்த்துஒட்ட வைக்கப்பட்டதாம்.

ஆறரை நிமிட ஆட்டத்திற்கு இப்படி அட்டகாசமாய் கிராபிக்ஸ்பண்ணியது உலக அளவில் இதுவே முதல் முறையாம். அந்த கிராபிக்ஸ் டீமிற்கும் அதை வழி நடத்திய V.Srinivas M mohan மற்றும் T.K Jayakumar -க்கும் நம் வாழ்த்துக்கள்.
அதுசரி இப்படை தோற்க்கின் எப்படை வெல்லும்.


Email PostDownload this post as PDF

Friday, July 06, 2007

எளிமை வெல்லும்

படத்தில் நீங்கள் காணும் இந்த வழுக்கை மனிதரின் பெயர் கிரேயிக் நீயூமார்க் (Craig Newmark). சுத்தமான ஜாவா புரோகிராமர். பத்து வருடங்களுக்கு முன் இந்த மனுஷனுக்கு கொஞ்சம் போரடிக்க சான்பிராசின்கோ சுற்றுவட்டாரத்தில் நடக்கும் நிகழ்வுகளை நண்பர்களுக்கு மெயிலாக டைப்பி அனுப்பிக்கொண்டிருந்தாராம். நண்பர்களுக்கு அந்த தகவல்கள் பிடித்து போக அந்த நண்பர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக பெருகியது. 1995 வாக்கில் அவர் 240 பேர்களுக்கு மெயில் அனுப்பிக்கொண்டிருந்தார். உற்சாகம் கொண்ட சிலர் ஏன் சுற்று வட்டார நிகழ்வுகளோடு, அக்கம் பக்கத்தில் விலைக்கு இருக்கும் வீடுகளையும், வேலைவாய்ப்புகளையும் கூடவே சொல்ல கூடாது என தூண்டினர். மனிதர் பிஸியாகி விட்டார். உலகின் மிகப்பெரிய வரிவிளம்பர வலைப்பக்கம் http://www.craigslist.org பிறந்தது. அதற்கு sf-events என்றுதான் பெயரிடவிருந்தார். ஆனால் நண்பர்கள் அந்த வரிவிளம்பரங்களை ஏற்கனவே Craig`s List என அழைத்துக் கொண்டிருந்ததால் அப்பெயரே நிலைத்துப் போனது. தனக்கு தெரிந்த majordomo, Java,Perl,Linux,SPARC நுட்பங்களை ஒருங்கிணைத்து மாபெரும் வரிவிளம்பர இணைய பக்கம் உருவாக்கினார். வரிவிளம்பரங்களால் பிழைத்த காகித செய்திதாள்கள் படுத்து போயின.

இன்று மாதம் 20 மில்லியன் பேர் இவ்வலைப்பக்கம் வருகின்றார்கள். மாதம் 7 பில்லியன் பக்கங்கள் பார்வையிடப்படுகின்றது. பெரும்பாலான வரிவிளம்பரங்கள் இலவசமாகவே வெளியிட அனுமதிக்கப்படுகின்றது. அதிக வருமானஎதிர்பார்ப்பில்லாமல் சேவை நோக்கிலேயே இது நடத்தப்படுகின்றதாம். வருடம் 10 மில்லியன் வருவாய் இருக்கும் என யூகிக்கபடுகின்றது. மொத்தமாய் 24 பணியாளர்கள் தாம் கிரேய்க்லிஸ்ட் நிறுவனத்தில் பணிசெய்கின்றார்கள். தலைமையகம் சான்பிரான்சிஸ்கோவிலுள்ளது.

பொதுவான அந்தகால IBM-காரர்கள் போல இவரும் IBM-க்கு 17 ஆண்டுகள் வாழ்கைப்பட்டவர். பொழுது போக்காய் அவர் துவக்கிய லிஸ்ட், craigslist-டாக அவர் போக்கையே மாற்றியது. வாய்பிருந்தும் சேவையாகவே இன்றும் அந்த பணி தொடர்கின்றது. அவர் சொல்கிறார் "Our philosophy is that we’re basically making enough to pay the bills, with a little left."

படித்த உயர் நுட்பங்களை தேவைப்படும் சேவைகளை நிறைவுசெய்ய பயன்படுத்தியும் வாழ்வில் உயரலாம் என்பதற்கு இந்த மனிதர் ஒரு நல்ல எ.கா .


சென்னை கிரேய்க்லிஸ்ட்
http://chennai.craigslist.org/

பெங்களூர் கிரேய்க்லிஸ்ட்
http://bangalore.craigslist.org/


Email PostDownload this post as PDF

Thursday, July 05, 2007

எதிரும் புதிரும்

சந்தைகளிலும், விளம்பரங்களிலும், மீடியாக்களிலும் எதிரும் புதிருமாய் சித்தரிக்கப்படுவோர் சேர்ந்து அமர்ந்து பேசி சிரித்து பொழுது போக்கினால்... சமீபத்தில் அதுதான் நடந்தது. இடம் D: All Things Digital conference . மைக்ரோசாப்டை கடுமையாய் விமர்சித்து பேசி/விளம்பரமிடும் மேகின்டாஷ்/ஐபாடு/ஐபோன் புகழ் ஆப்பிள் தலைவர் ஸ்டீவ் ஜாப் கலகல வென பில்கேட்ஸீடம் பேசி அளவளாவி கொண்டிருந்தார். இங்கே எதிரும் புதிரும் Bill Gates and Steve Jobs ஒருங்கே.


உலகின் முதல் இரு பணக்காரர்கள் என முந்தி எண்ணப்பட்ட பில் கேட்ஸும் வாரன் பப்பெட்டும் கூட்டர்ஸ் பெண்களிடம் குழு போட்டோ எடுத்து கொண்டிருக்க

அவர்கள் இருவரையும் ஒரே மூச்சில் முந்தி அடித்து கொண்டுவிட்டு உலகின் முதல் பணக்காரராகிவிட்டார் மெக்ஸிகோவை சேர்ந்த கார்லோஸ் ஸ்லிம். அவரைக் கேட்டால் காலம் போடும் கோலம் என்பார். இங்கே எதிரும் புதிரும் Bill Gates and Carlos Slim ஒருங்கே.


இந்திய வம்சாவழி லோட்டஸ்123 புகழ் மிட்ச் கபூருடம் பில்கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் ஜாப்


பில்கேட்ஸும் அவர் சீடர் "Funny" ஸ்டீவ்பால்மரும்.


பில்கேட்ஸ், ஸ்டீவ்பால்மர் மற்றும் Wall Street Journal லின் டெக் எழுத்தாள பெரும்தலை Walter S. Mossberg


Email PostDownload this post as PDF

Tuesday, July 03, 2007

உலக தரவரிசையில் இந்திய நிறுவனங்கள்

BusinessWeek எனும் அமெரிக்க வாரஇதழ் உலக முழுவதுமிருந்து இந்த வருட டாப் 100 தகவல் தொழில்நுட்பம் சார்ந்த மென்பொருள் நிறுவனங்களின் வரிசையை வெளியிட்டுள்ளது. அதில் சில இந்திய நிறுவனங்களும் அடக்கம். இங்கே அதன் சாரம்சம்.

14 ஆவது இடத்தில் வருவது Bharti Airtel (கடந்த வருடம் 10ம் இடம்.இறங்குமுகம்)23 ஆவது இடத்தில் வருவது Tata Consultancy Services (கடந்த வருடம் 34ம் இடம்.ஏறுமுகம்)30 ஆவது இடத்தில் வருவது Infosys (கடந்த வருடம் 42ம் இடம்.ஏறுமுகம்)


49 ஆவது இடத்தில் வருவது Wipro (கடந்த வருடம் 57ம் இடம்.ஏறுமுகம்)

73 ஆவது இடத்தில் வருவது Satyam Computer Services (கடந்த வருடம் 49ம் இடம்.இறங்குமுகம்)HCL Technologies (புதுசாக இந்த வரிசையில் இந்த வருடம் நுழைந்துள்ளது)


பெரும்பாலான மென்பணிகள் இந்தியாவிலேயே நடைபெறும் அமெரிக்க நிறுவனம் Cognizant Technology Solutions 70 ஆவது இடத்தில் வருகிறது. (கடந்த வருடம் 84ம் இடம்.ஏறுமுகம்)

மென்பொருள் துறையில் ஜாம்பவானாக காட்டிகொள்ளும் நம் நிலம் "இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா?" வென இன்னும் கொஞ்சம்
வந்தால் நன்றாய் இருக்கும்.


Email PostDownload this post as PDF

Monday, July 02, 2007

நீங்கள் ஒரு ஹேக்கரா?

கூரையேறி குருவி பிடிக்க தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் காட்ட போறானாம் என்பார்கள். இங்கே ஒரு சவால்.
(ஏற்கனவே தெரிந்தோர் மன்னிக்கவும்). கீழ்கண்ட சுட்டியை சொடுக்கி அது வழிக்காட்டும்/கொடுக்கும் தகவல்களை கொண்டு ஒவ்வொரு பக்கமாக முன்னேறிப் பாருங்கள்.
கொஞ்சம் சிந்திக்க வேண்டும். லாஜிக்கலாய் சிந்திக்க வேண்டும். கூகிள் ஆ"சாமி" கைகொடுப்பான். எத்தனைப்பக்கங்கள் முன்னேறினீர்களென பார்க்கலாம்.
மொத்தமாய் ஹேக் செய்ய சாதாரணமாய் 10 நிமிடம் போதுமாம். நினைவிருக்கட்டும் அதிகபட்சமாய் 23 பக்கங்கள் வரை முன்னேறினால் மிஸன் வெற்றிகரமாய் கிட்டியதாகும். சமயம் கிடைக்கும் போது முயன்று பாருங்கள். மூளைக்கு நல்லதொரு பயிற்சி.

http://www.freestuffhotdeals.com/hacker/1.html


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்