முன்பு ஒரு முறை கணிணி ஹேக்கிங் அடிப்படைகளை பற்றி நாம் இந்த வலைத் தளத்தில் எழுதிய போது ஏன் இதையெல்லாம் எழுதி ஜனங்களை கெடுக்கின்றீர்கள் என்கிற ரீதியில் ஒருவர் கோபமாய் பின்னூட்டமிட்டு போயிருந்தார்.களவும் கற்று மற என்பது நம் ஊர் வாக்கு.திருடர்களின் தந்திரங்களை அறியாத போலீசாரால் என்ன பயன். போனால் போகட்டும் மக்களுக்கு பிடிக்கவில்லை ரூட்டை மாத்து என்றானது.
இன்றைக்கு இந்த ஹேக்கிங்குகளின் போக்கே மாறியிருக்கின்றது. திருட்டுத்தனமாய் இல்லாமல் நல்ல முறையில் ஹேக்கிங் செய்பவர்களை ஒயிட் ஹேட்ஸ் (White Hats) என்பார்கள்.இத்தகையோருக்கு இன்றைக்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்ப்பு. பேப்பர் பேப்பராக வேலை தேட வேண்டியதில்லை, பயோடேட்டாவெல்லாமல் எழுத வேண்டியதில்லை, பேஸ் டு பேஸ் இண்டர்வியூவெல்லாம் செல்லாமல் கூகிள்,ஆப்பிள் போன்ற பிரதான கம்பெனிகள் வேலை கொடுக்கின்றன ஹேக்கர்களுக்கு. ஆஸ்திரியாவை சேர்ந்த வலைப்பதிவர் பிளோரியன்.புதிதாக வந்துள்ள கூகிள் ப்ளசின் இண்டு இடுக்குகளில் நுழைந்து மோப்பமிட்டு கூகிள் ரகசியமாக டெவலப் செய்து கொண்டிருந்த பல புது கூகிள் பிளசின் வசதிகளை முன்கூட்டியே உலகுக்கு தனது வலைப்பதிவுகள் வழி அறிவித்துவிட கூகிளுக்கு பொத்துக்கொண்டு வந்தது டென்சனும் ஆச்சரியமும். கூகிளுக்கு தெரிந்த ஒரே ஈசி சொலூசன். இத்தனை புத்திசாலியை விட்டு வைக்கக்கூடாதுவென தன் நிறுவனத்தில் அவரை சேர்த்துக்கொண்டது.
இதே மாதிரி இன்னொரு கதை.பத்தொன்பதே வயதான நிக்கோலஸ் என்பவர் ஆப்பிள் ஐபோன்களை ஜெயில் பிரேக் பண்ணுவதில் படு கில்லாடி. www.jailbreakme.com-னு இதற்கென தனியாக ஒரு வலைத்தளமே வைத்திருக்கின்றார். பார்த்தது ஆப்பிள். தொல்லை தாங்க முடியாமல் அவருக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் அனுப்பி இருக்கின்றது. இப்படி இந்த மாதிரியான கதைகள் தொடர்கின்றது.
என் இனிய தமிழ் மாணவர்களே! ஹேக்கிங்கில் ஆர்வமா,இன்னும் வாய்ப்புகள் இருக்கின்றன. பேஸ்புக் இணையதளம் ”Security Bug Bounty” எனும் திட்டத்தை அறிவித்திருக்கின்றது. அதன் படி பேஸ்புக் வெப்சைட்டின் புரோகிராம் கோடில் நீங்கள் ஏதாவது பாதுகாப்பு குறைபாடுகளை கண்டுபிடித்து அறிவித்தால் $500 முதல் இன்னும் அதிகமான டாலர்கள் வரை சன்மானம் நீங்கள் கொடுக்கும் தகவலை பொறுத்து கொடுப்பதாக அறிவித்திருக்கின்றார்கள்.இதுவரை இந்த மாதிரி பக் ரிப்போர்ட் கொடுத்துள்ளவர்கள் லிஸ்டில் பல இந்திய பெயர்கள் இருக்கும் என நினைத்து ஓடிப்போய் பார்த்தால் இரண்டே இந்திய பெயர்கள் தான் தெரிந்தது.”நம் ஊர் காரர்களுக்கு சம்பளத்துக்கு தான் புரோகிராம் பண்ணத் தெரியும், ஹேக்கிங்குக்கு சீனர்களைத்தான் பிடிக்கனும்” என்று கோபப்பட்டான் கோபால். அதனால் என்ன பேஸ்புக்குக்கு போட்டியாக வந்து சக்கை போடு போடும் கூகிள் பிளஸ் புராஜெக்டின் லீடரே ஒரு இந்தியர் தான் என நாம் பெருமைபட்டுக்கொள்ளலாம். பெயர் Vic Gundotra.
On the Lighter Side

உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Thursday, September 01, 2011
பிடித்து போடு போடு.
Posted by
PKP
at
9/01/2011 11:57:00 AM
10
comments
Wednesday, July 27, 2011
அமெரிக்காவில் இந்தியர்கள்
- 2010 மக்கள்தொகை கணக்கெடுப்பு படி அமெரிக்காவிலுள்ள இந்தியர்களின் மொத்த எண்ணிக்கை
- 2,843,391 - அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வாழும் அமெரிக்க மாகாணம்
- கலிபோர்னியா,இங்கு 528176 இந்தியர்கள் வசிக்கிறார்கள். - அதிக சதவிகிதம் இந்தியர்கள் வாழும் அமெரிக்க மாகாணம்
- நியூஜெர்சி, இங்கு 3.3 சதவீதம் பேர் இந்தியர்கள். - அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வாழும் கவுண்டி
- சாண்ட கிளாரா கவுண்டி,கலிபோர்னியா,இங்கு 117596 இந்தியர்கள் வசிக்கிறார்கள். - அதிக சதவிகிதம் இந்தியர்கள் வாழும் கவுண்டி
- மிடில்செக்ஸ் கவுண்டி, நியூஜெர்சி,இங்கு 12.9 சதவீதம் பேர் இந்தியர்கள். - அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வாழும் அமெரிக்க நகரம்
- நியூயார்க்,இங்கு 192209 இந்தியர்கள் வசிக்கிறார்கள். - அதிக சதவிகிதம் இந்தியர்கள் வாழும் அமெரிக்க நகரம்
- ப்ரெமாண்ட்,கலிபோர்னியா இங்கு 18.1 சதவீதம் பேர் இந்தியர்கள். - அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வாழும் அமெரிக்க மெட்ரோ ஏரியா
- நியூயார்க் மெட்ரோ ஏரியா,இங்கு 526133 இந்தியர்கள் வசிக்கிறார்கள். - அதிக சதவிகிதம் இந்தியர்கள் வாழும் பகுதி
- லோடன் வேலி எஸ்டேட்ஸ்,வெர்ஜினியா,இங்கு 41.5 சதவீதம் பேர் இந்தியர்கள். - பொருளாதாரப் பின்னடைவைத் தொடர்ந்து கடந்த சில வருடங்களில் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிப்போன இந்தியர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ
- இரண்டு லட்சம்.Asian Indian Population By State 2010
State
Population
Percent
California
528176
1.4
New York
313620
1.6
New Jersey
292256
3.3
Texas
245981
1
Illinois
188328
1.5
Highest Proportion Of Asian Indians 2010
State
Percent
Population
New Jersey
3.3
292256
New York
1.6
313620
Illinois
1.5
188328
California
1.4
528176
Maryland
1.4
79051
Largest Asian Indian Counties
County
Population
Percent
Santa Clara County, California
117596
6.6
Queens County, New York
117550
5.3
Middlesex County, New Jersey
104705
12.9
Cook County, Illinois
93730
1.8
Los Angeles County, California
79169
0.8
Counties With Highest Proportion of Indians
County
Population
Percent
Middlesex County, New Jersey
104705
12.9
Sutter County, California
10513
11.1
Jefferson County, Iowa
1170
6.9
Somerset County, New Jersey
21625
6.7
Santa Clara County, California
117596
6.6
Places With Largest Population of Asian Indians 2010
Place
Population
Percent
New York city, New York
192209
2.4
San Jose city, California
43827
4.6
Fremont city, California
38711
18.1
Los Angeles city, California
32996
0.9
Chicago city, Illinois
29948
1.1
Largest Asian Indian Metros 2010
Metro
Number
Percent
New York-Northern New Jersey-Long Island, NY-NJ-PA Metro Area
526133
2.8
Chicago-Joliet-Naperville, IL-IN-WI Metro Area
171901
1.8
Washington-Arlington-Alexandria, DC-VA-MD-WV Metro Area
127963
2.3
Los Angeles-Long Beach-Santa Ana, CA Metro Area
119901
0.9
San Francisco-Oakland-Fremont, CA Metro Area
119854
2.8
Posted by
PKP
at
7/27/2011 02:26:00 PM
4
comments
Labels: America, Census, Indians, Population, Statistics
Thursday, June 30, 2011
பணம் கொத்திப் பறவைகள்
இந்தியர்கள் வேண்டுமானால் ஏழைகளாக இருக்கலாம், ஆனால் இந்தியா ஒன்றும் ஏழைநாடல்ல என ஒரு சுவிஸ் வங்கி இயக்குனர் கூறியிருந்தார்.இவர் கூறும் தகவல்கள் அடிப்படையில் பார்த்தால் எங்கோ இருக்க வேண்டிய இந்திய சமுதாயம், தனது சுய நல எண்ணங்களால் சிதைக்கப்பட்டு போயிருக்கின்றது என்பது தெளிவாகின்றது. அமெரிக்கர்கள் பணக்காரர்களாக இருக்கலாம். ஆனால் அமெரிக்க அரசாங்கம் ஒன்றும் பணக்கார அரசாங்கம் இல்லை. அது ஒரு ஏழை அரசாங்கமே.பட்டென ஒரு 150 பில்லியன் டாலர் கடன் கொடேன் எனக் கேட்டால் அதனால் கொடுக்க முடியாது. ஏற்கனவே 14 டிரில்லியன் கடன் வாங்கி தள்ளாடிக் கொண்டிருக்கும் அரசாங்கம் தான் அது.இதன் பல மாகாணங்கள் அதனதன் சொத்துக்களை பொதுமக்களுக்கு ஏலம் விட்டு தற்காலிகமாக காசு பார்த்துக் கொண்டிருக்கின்றது. இங்கிலாந்தின் லட்சணமும் இதுதான் 9 டிரில்லியன் டாலர்கள் கடன் பட்டு நிற்கின்றது.அப்படி பார்க்கப்போனால் உலகின் பணக்கார அரசாங்கம் சீனா தான்.$2,454,300,000,000 டாலர்கள் ரெடி கேஷாக வைத்திருகின்றது.இரண்டாவது இடம் ஜப்பான்.அதன் தேசிய கையிறுப்பு டாலர்கள் 1,019,000,000,000.
நமக்கு இடம் ஆறாவது வரும் Indian National reserves: $279,422,000,000. இது போக சுவிஸ் வங்கிகளில் தேங்கி இருக்கும் இந்தியர்களின் பணங்கள் ஏறக்குறைய 280 லட்சம் கோடி (280,00,000,000,0000) இந்திய ரூபாய்கள். பெரும்பாலும் கறுப்புப்பணங்கள் தாம்.இதை வைத்து மட்டும் 30 ஆண்டுகளுக்கு வரிகளே இல்லாத பட்ஜெட்டை இந்தியாவில் தாக்கல் செய்யலாம்.60 கோடி வேலை வாய்ப்புகளை இந்தியாவில் உருவாக்கலாம். எல்லா கிராமங்களிலிருந்தும் டெல்லிக்கு நான்குவழி சாலைகள் போடலாம். ஒவ்வொரு இந்தியனுக்கும் மாதம் 2000 ரூபாயென 60 வருடங்களுக்கு அரசிடமிருந்து பணம் கிடைக்க வழி செய்யலாம்.உலக வங்கியும் IMF-ம் கடன் தரவேண்டாம் ஒரு வெளிநாட்டு முதலீடும் நமக்கு தேவை இல்லை.இப்படி செல்வச் செழிப்பாய் இருக்க வேண்டிய இந்தியா, தன் குடும்பம், தன் வாரிசுக்கென கோடிக்கோடியாய் பணத்தை அள்ளி எங்கேயோ உனக்கும் பயனில்லாமல் ஊருக்கும் பயனில்லாமல் தேக்கி வைத்திருக்கிற பாழாப்போன அரசியல்வாதிகளாலும் செல்வந்தர்களாலும் மோசம் போயிருக்கின்றது.
இதுமட்டுமா நாட்டிலுள்ள பல ஸ்ரீகளின், பாபாக்களின், சுவாமிஜிக்களின், போதகர்களின் இரகசிய அறைகளில் இருக்கும் பணக்கட்டுகள், தங்கக்கட்டிகள் எல்லாம் இன்னும் கோடிக் கோடி பெருமானம் வரும்.யாருக்கும் பயனின்றி சேர்த்தார் நீத்தார் பின் ஏதோ சில திருடர்கள் திருடிப்போய் மீண்டும் சுவிசில் கொண்டு போய் சேர்ப்பார்கள்.
இன்னும் அதிஷ்டமாக நம்முன்னோர்கள் முன்பு சேர்த்துவைத்திருந்த பொக்கிஷங்களும் இப்போது தோண்டி எடுக்கப்படுகின்றன.திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளில் தோண்ட தோண்ட தங்கக் குடங்களும் வைரங்களும் வைடூரியங்களும் எடுக்க்ப்படுகின்றன. மொத்த ஆறு அறைகளில் மூன்று அறைகளில் மட்டும் 400 கோடி மதிப்பிலான தங்க வைர நகைகள். ஆறு அறைகளையும் திறந்து மதிப்பிட்டால் 1000 கோடியையும் தாண்டும் என்கின்றார்கள்.யார் கொத்திக்கொண்டு போவார்களோ?
இந்திய மாலுமிகளை மீட்க பாகிஸ்தானிய படை வரவேண்டியிருக்கின்றது. இந்திய மீனவர்களை சாகடி அடிக்கிறான் வளரும் வல்லரசுக்கு கேட்க நாதியில்லை. கடமையை விட்டு விட்டு பணம் பணம் என்று அலைகின்றதே இந்தியா. மனிதனே! அதிகமாய்ப்போனால் நூறு ஆண்டுகள் தான் வாழ்வாய். எத்தனை கோடிகள் தான்வேண்டும் உனக்கு?
தள அறிமுகம்
தமிழ் இசைப் பாடல்களை கேட்க ஆர்ப்பாட்டமில்லாத அருமையான எளிமையான ஒரு தளம்
http://www.paadal.com
எனது சேகரிப்புக்காக
“நெஞ்சை அள்ளும் நெல்லை,தூத்துக்குடி சம்மர் டூர்” - Nellai Tuticorin Summer Tour Guide
Posted by
PKP
at
6/30/2011 03:38:00 PM
6
comments
Thursday, June 23, 2011
ஊர் வலம்
சிவ்நகர் ஒன்று ஸ்நேப்டீல்.காம் நகராகின்றது
உத்தரபிரதேச கிராமமொன்று தனது பெயரை சிவ்நகரிலிருந்து, ஸ்நாப்டீல்.காம் நகரென பெயர்மாற்றம் செய்திருக்கின்றது. காரணம் snapdeal.com வழங்கிய குடிநீர் தீர்வு தான்.குடிநீர் பிரச்சனையில் கிடந்த இக்கிராமத்தில் குழாய்க்கிணறுகளை தோண்டி அவர்களுக்கு கைப்பம்புகளையும் இலவசமாய் அமைத்துக் கொடுத்திருக்கின்றது இந்நிறுவனம். நன்றிக்கடனாக பஞ்சாயத்து கூடி அவர்கள் தங்கள் ஊருக்கு புதுநாமம் இட்டுவிட்டார்கள்.இங்கு நாம் ஸ்நேப் டீல்.காம் தளத்தின் நிறுவனர் குணால் பாஹலை பாராட்டியே ஆகவேண்டும்.உண்ட கையால் காக்கை கூட விரட்டாதவர்கள் மத்தியில் இவர்களெல்லாம் எவ்வளவோ மேல்.
சம்பந்தமில்லாத இன்னொரு சேதி
இந்தியாவின் இன்றைய தேவை, தன்னிடம் உள்ள செல்வத்தை சமூக நலனுக்காகவும் பயன்படுத்துபவர்களே. இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி பல கோடி மதிப்புள்ள 27 அடுக்கு மாளிகையில் வசிக்கிறார். இது மிகப்பெரிய தவறு. மற்றவர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய இவர், செல்வத்தை இப்படி வீணாக்கலாமா?" என்று கடுமையாக விமர்சித்துள்ளார் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா. பல் இருக்குது பக்கோடா சாப்பிடுறான் உங்களுக்கென்ன என்கின்றீர்களா?
அம்மா தயவில்
இலவச லேப்டாப்புகள் தமிழகமெங்கும் பள்ளிகளில் வரப்போகின்றது.இது எந்த மாதிரி புரட்சியை உண்டுபண்ணபோகுதோ தெரியவில்லை முந்தைய இலவச டிவி போலல்ல இது.குத்துக்கல்லாட்டம் ஒரு மூலையில் வைத்துக்கொள்ள. இதனால் இண்டர்நெட் இணைய தேவைகள் அதிகமாகும்,ஆக்சசரீஸ்கள் நிறைய போகும்,டிஜிட்டல் காமரா,ஐபாட் போன்ற கணிணி சார் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் சக்கை போடு போடும், இணையத்தின் நன்மை தீமைகள் இன்னும் வேகமாக தமிழகமெங்கும் பரவும், சைபர் கிரைம்ஸ் விர்ரென எகிறும். எகிப்தில் ஒருவர் தன் குழந்தைக்கு ”பேஸ்புக் ஜமால் இப்ராகிம்” என பெயர் வைத்தாராம். இந்த மாதிரியான தீவிர ரசிகர்கள் நம்மூரிலும்தோன்றுவார்கள்.
இனிப்பான கிரேசியிலும் கிரேசி செய்தி:
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்க்கும் கூகிளின் அமேசிங் சேவை துவங்கியிருக்கின்றது.கொஞ்சம் தத்தக்கு பித்தக்குவாக இருந்தாலும் அற்புதமான ஆரம்பம்.மிக முக்கியமான மைல் கல்லை இணையத்தமிழ் எட்டியிருக்கின்றது எனச் சொல்லலாம். நன்றி via ஜிஎஸ்ஆர்
http://translate.google.com/
கேள்வி: வெளிநாட்டு வேலை தரும் நிறுவனம் சரியானதா என கண்டுபிடிக்க மத்திய அரசின் இணையதளம் ஒன்று உள்ளதாமே? அது உண்மையா?
பதில்: உண்மைதான்.கீழ்கண்ட சுட்டியில் Recruiting agent-ன் நிலையை தெரிந்துகொள்ளலாம்
http://www.poeonline.gov.in/
Posted by
PKP
at
6/23/2011 01:34:00 PM
5
comments
Friday, April 15, 2011
சக் தே இந்தியா
மரித்துக்கொண்டிருக்கும் அரக்கனுக்கு CPR கொடுத்துக்கொண்டிருக்கும் நிறுவனங்களாகத் தான் ஆப்பிள், பேஸ்புக், இண்டெல், கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களைக் காண்கின்றேன். தொழிற்சாலைகளெல்லாம் சைனாவுக்கும், பிறவேலைகளெல்லாம் BRIC-க்கும் போன பிறகும் இன்னும் அமெரிக்காவை ஜீவனோடு வைத்திருப்பது இது போன்ற இன்னோவேசன் தரும் நிறுவனங்களே.இந்த இன்னோ வேலைகளில் பெரும் பங்களிப்பு நம் ஊர்காரர்களுக்கும் இருக்கின்றது என்றால் அது கொஞ்சம் கூட மிகையில்லை.சமீபத்தில்கூட கூகிள் 25 மில்லியன்கள் கொடுத்து வாங்கிய PushLife.com-என்ற தளத்துக்கு சொந்தக்காரர் ஒரு இந்தியர்.ரே ரெட்டி பெயராம்(Ray Reddy).இவர் உருவாக்கிய PushLife என்ற மென்பொருள் கைப்பேசி டு கணினிக்கு பாடல்களை கடத்த/கையாள உதவுகின்றது. சீக்கிரத்தில் இதற்கு கூகிள் பெயிண்ட் அடிக்கப்பட்டு மார்கெட்டில் உலாத்தவிடப்படும். நாமெல்லாரும் பயன்படுத்துவோம்.
அது மாதிரியே ஸ்லிங் பாக்ஸ் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா?. இந்த Slingbox கொண்டு உங்கள் லிவிங் ஹால் டிவியை iPad,iPhone,iPod touch, Android, Windows Phone,BlackBerry,Palm OS,Symbian OS கைப்பேசியின் வழி எங்கிருந்து வேண்டுமானாலும் காணலாம் Wi-Fi அல்லது 3G துணையோடு. இதை உருவாக்கிய Sling Media, Inc என்ற நிறுவனத்தை நிறுவியதும் ஷா,ரகு என்னும் இந்தியர்கள் தானாம்.இவ்வளவும் ஏன், இன்றைக்கு இணையம் இத்தனை பிரபலமாய் உலகெங்கும் வேகமாய்ச் செல்ல வழி வந்திருக்கிறதென்றால் அது பைபர் ஆப்டிக் இழைகளாலேயே சாத்தியமாயிற்று. அந்த ஒளி இழைகளுக்கு தந்தை அதாவது ”The father of fibre optics” என அறியப்படுபவரே ஒரு இந்தியரென்றால் நமக்கெல்லாம் பெருமைத்தானே.அவர் பெயர் நரேந்தர் சிங் கபானி.(Narinder Singh Kapany). Fortune என்ற புகழ்பெற்ற பத்திரிகை நம் இருபதாம் நூற்றாண்டு வாழ்வை மிகவும் பாதித்த ஏழு unsung heroes-களில் இவரும் ஒருவர் என்றது. இந்த வ்ரிசை இது போல இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும். அதற்கு என்ன செய்யலாம்?
தமிழ் பற்றாகி சார்பற்ற மீளமை வட்டணி முறைமைகள்,காந்தலைப்பிகள், குறுக்குப்புல மிகைப்பிகள் அல்லது கம்பியில்லா மெய்நிலை என எஞ்சினியரிங்க் படிக்க தமிழில் வலைத்தளங்கள் உள்ளன.http://www.thozhilnutpam.com
அல்லது அணு உலைகளை அக்குவேர் ஆணிவேறாக்கி வேகப் பெருக்கி அணு உலைகள்,அணுஎரு,அழுத்தக் கனநீர்,மகா ஐக்கிய நியதி என தமிழில் அணு அறிவியல் பேசும் http://jayabarathan.wordpress.com போன்ற தளங்கள் போய் படிக்கலாம்.
ஆங்கிலத்தில் அல்ஜீப்ரா தொடங்கி அரித்மேட்டிக், பிசிக்ஸ், ஸ்டாடிஸ்டிக்ஸ் என பல உருப்படியான காரியங்களை இலவசமாக கற்றுக்கொள்ள educational videos கான் அகடெமியில்
கொட்டிக் கிடக்கின்றன. முன்னேற துடிக்கும் இளசுகள் இதையும் முயன்று பார்க்கலாம்.
http://www.khanacademy.org/
Chak De India....Go India Go....
இங்கே சில எஞ்சினியரிங் அனிமேசன்கள் என் சேகரிப்புக்காக.
Radial Engine Used In Aircraft
Oval Regulation
Sewing Machine
Malta Cross Movement - Controls Second Hand In A Clock
Automotive Transmission - Change File Mechanism
Automotive - Constant Velocity Universal Joint
Gun Ammunition Loading System
Internal Combustion Rotary Engine
Flat Opposed 4 Cylinder Engine (not an inline engine)
2 Stroke Engine & Expansion Chamber.
Napier Deltic engine
Opposed Piston 2 Stroke Diesel
Posted by
PKP
at
4/15/2011 03:10:00 PM
7
comments
Thursday, August 21, 2008
சிறு துளிகள்
இணையம் வந்தாலும் வந்தது இன்றைக்கு அங்கு பணம் சம்பாதிக்க பலமார்க்கங்கள் இருக்கின்றன. அதற்காக நாம் சும்மா இருந்தால் போதும் அது கொட்டிக்கொடுக்கும் கற்பகதரு என்றர்த்தமில்லை.விற்க உங்களிடம் ஏதாவது ஒரு சரக்கு இருக்கவேண்டும். வாங்குவதற்கு உலக அளவில் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். சமீபத்தில் நான் கண்ட ஒரு உதாரணத்தையே இங்கும் உங்களுக்கு எடுத்துக்காட்டாக்க விழைகின்றேன்.
மீண்டும் இந்த ஐபோனை பற்றியே இங்கு பேசுவதால் கோபித்துக்கொள்ள வேண்டாம். இந்த ஐபோனின் ஒரு மிகப்பெரிய பாஸிட்டிவ் பாயிண்ட் அதன் SDK அதாவது Software Developement Kit. இந்த மென்பொருள் கிட்டை வைத்து ஐபோனுக்கான பயன்பாட்டு மென்பொருள்கள் பலவற்றை மினி மினியாக ஒருவர் இஷ்டத்துக்கு தயார் செய்து கொள்ளலாம். என்ன, கொஞ்சம் Objective C மொழி தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஒரு Mac-OS X உள்ள கணிணிப்பொறி மற்றும் ஒரு ஐபோன் தேவைப்படும். அருமையான, பலருக்கும் பயன்படும் ஒரு சிறுபயன்பாட்டை படைத்து அதை ஆப்பிள் அப்ளிகேஷன் ஸ்டோரில் விலைக்கு வைத்தால் கூவிக் கூவி நாம் விற்கத்தேவையில்லை. இன்றைக்கு மில்லியன்கணக்கில் ஐபோன்கள் மார்கெட்டில் உள்ளன. இதில் ஒரு சொற்ப சதவீதத்தினருக்கு மட்டும் டாலர் ஒன்றுக்கு உங்கள் அப்ளிகேசனை விற்றாலும் கொடிகட்டிப் பறக்கலாம்.
அப்படியே Apple App Store-ல் மேய்ந்து வந்த போது ஒரு தமிழ் பெயர் அடிபட்டது. முத்து ஆறுமுகம் (Muthu Arumugam).திண்டுக்கல் அருகே காட்டுப்புதூர் என்ற குக்கிராமத்திலிருந்து படித்து வெளியேறியவர்.இவர் தானே டெவலப்செய்த TamilDaily எனும் ஒரு iPhone அப்ளிகேஷனை $0.99-க்கும் Upcoming Plus எனும் ஒரு அப்ளிகேஷனை $1.99-க்கும் அங்கு விற்றுவருகின்றார். மகிழ்ச்சியாய் இருந்தது. யாருக்குத் தெரியும் அந்த சிறு துளி சிறு துளிகள் சேர்ந்து பெரு வெள்ளமாகலாம். புரோகிராமிங் படிச்சு தொலச்சோமில்லையேனு வருத்தமாயிருந்தது. செம்மல் நபியைக் காணச்செல்வோம் எனும் இஸ்லாமிய தமிழ் மென்னூல் இங்கே உங்கள் இறக்கத்துக்காக. Chemmal Nabiyai Kaanach Selvoom Islamic Tamil ebook in pdf format Download. Right click and Save.Download
Posted by
PKP
at
8/21/2008 09:26:00 PM
3
comments
Tuesday, June 17, 2008
நடந்து பாருங்கள் உலகம் மிகப்பெரியது.
"தனது நடைபயணம் பற்றி சதீஷ்குமார் பெட்ரெண்ட் ரஸ்ஸலுக்கு ஒரு கடிதம் எழுதி தெரிவித்தார். உடனே ரஸ்ஸல் உலக அமைதிக்காக நடைபயணம் செய்யும் முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஆனால் எனக்கு 90 வயதாகிறது. உலகம் மிகப்பெரியது. எப்படியாவது என் சாவிற்கு முன்னால் உன்னை ஒரு முறை பார்த்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். வேகமாக நடந்து வா என்று பதில் எழுதியிருந்தார். அது சதீஷ்குமார் மனதில் இன்னும் ஆர்வத்தை அதிகமாக்கியது.
ஒன்றரை மாதங்களுக்கு பிறகு அவர்கள் பாகிஸ்தான் எல்லைக்கு வந்து சேர்ந்தார்கள். அவர் கையில் விசா, பாஸ்போர்ட் எதுவுமில்லை. அத்தோடு இந்தியா பாகிஸ்தான் இரண்டும் யுத்த நெருக்கடியில் இருந்த நாட்கள் அவை. பாகிஸ்தானுக்குள் பிரவேசிக்கும் முன்பாக அவரது நண்பர்களில் ஒருவர் நாலைந்து பொட்டலங்கள் சாப்பாடு தந்து நீங்கள் பாகிஸ்தானிற்குள் போகிறீர்கள். அது எதிரியின் தேசம் உங்களுக்கு சாப்பாடு கூட கிடைக்காது இதைக் கொண்டு செல்லுங்கள் என்று தந்திருக்கிறார்.
சதீஷ்குமார் அதை மறுத்தபடியே இந்த சாப்பாட்டை வாங்கிக் கொண்டால் இன்னொரு மனிதன் மீது நான் நம்பிக்கை வைக்கவில்லை என்றாகிவிடும். ஆகவே எனக்கு வேண்டாம். பட்டினியால் சாவதாக இருந்தால் கூட பரவாயில்லை பாகிஸ்தானில் செத்துப் போகிறேன் என்று நடக்கத் துவங்கினார்.
எல்லை காவலர்கள் அவரைப் பற்றி நாளிதழில் வெளியான செய்தியால் தடை செய்யாமல் அனுமதி தந்தார்கள். பயமும் தயக்கமுமாக பாகிஸ்தானினுள் நடக்க துவங்கிய போது ஒரு கார் அருகில் வந்து நின்று பாகிஸ்தானியர் ஒருவர் இறங்கி வந்து நீங்கள் தானா சதீஷ்குமார் என்று கேட்டிருக்கிறார்.
ஆமாம் என்றதும் உங்களைப் பற்றி ஒரு மாலை செய்தியேட்டில் வாசித்தேன். அப்போது இருந்து நீங்கள் பாகிஸ்தான் வருவதற்காக காத்திருந்தேன். மிக நியாயமான காரணத்திற்காக நடைபயணம் செல்கிறீர்கள். உங்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன். நீங்கள் என்னோடு காரில் வாருங்கள் என்று அழைத்தார்.
அறியாத உலகில் எதிர்படும் முதல்மனிதனே இவ்வளவு அன்பாக நடத்துகிறானே என்று வியந்தபடியே தாங்கள் காரில் வர முடியாது, முகவரியை தாருங்கள் வீட்டிற்கு வந்து சேர்கிறோம் என்றார்கள். அவரோ விடாப்பிடியாக, இல்லை வழியில் யாராவது அழைத்தால் போய்விடுவீர்கள் அதனால் உங்கள் பைகளை என்னிடம் தாருங்கள். அதை மட்டுமாவது நான் கொண்டு செல்கிறேன் என்று அவரது உடைமைகளை வாங்கி கொண்டு சென்றுவிட்டார்.
அன்றிரவு அந்த பாகிஸ்தானியர் வீட்டில் சாப்பிட்டு விட்டு உறங்கியிருக்கிறார்கள். அப்போது சதீஷ்குமாருக்கு தோணியது. நண்பர் தன்மீதான அக்கறையில் தந்த பொட்டலத்தில் இருந்தது உணவு அல்ல பயம். அடுத்த மனிதனை நம்பமுடியாமல் போன பயம் தான் சாப்பாட்டை கட்டி கொண்டு போகச் செல்கிறது என்ற உண்மை புரிந்திருக்கிறது"
-இப்படியாகச் செல்லுகின்றது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய "நடையால் வென்ற உலகம்" என்ற கட்டுரை.அனைவரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய ஒரு பதிவு.முழுக்கட்டுரையையும் கீழ்கண்ட சுட்டியில் படிக்கலாம்.
நன்றி: http://sramakrishnan.com/deep_story.asp?id=88&page=
அந்த பெரிய மனிதர் சதீஸ்குமார் பற்றிய ஆவணப்படம் இங்கே வீடியோ வடிவில்
http://www.youtube.com/watch?v=m1Ho824PtM0
நன்றி:வேதன் (ஆனா நீங்க யாருனே இன்னும் புரியல ஆமா :))அ.முத்துலிங்கம் "மகாராஜாவின் ரயில் வண்டி" சிறுகதை தொகுப்பு இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. A.Muthulingam Maharajavin Rail Vandi tamil shortstories in pdf ebook Download. Right click and Save.Download
Posted by
PKP
at
6/17/2008 08:40:00 PM
5
comments
Labels: Indians
Tuesday, June 10, 2008
உலகின் முதல் இணையதளம்
செவ்வாய் கிரகத்தில் தெரியாது.ஆனால் பூமியில் டிசம்பர் 1990 கணக்குப்படி ஒரே ஒரு இணையதளம் தான் இருந்தது. அதன் விலாசம் info.cern.ch அதற்கு சொந்தக்காரர் www-வை அதாவது html-ஐ கண்டு பிடித்த Tim Berners-Lee ஆவார். இன்றைக்கு வெப் 2.0 வெப் 3.0 வென போய்கொண்டிருக்கின்றோம். ஆனாலும் அன்றைக்கு அவர் முதன்முதலாய் நெய்த அந்த வலைப்பக்கத்தை இன்றைக்கும் பத்திரமாய் வைத்திருக்கின்றார்கள். நீங்கள் கீழ்கண்ட சுட்டி போய் அதை பார்க்கலாம்.
http://www.w3.org/History/19921103-hypertext/hypertext/WWW/TheProject.html
1990-ல் இவ்வெளிய பக்கத்தை உருவாக்க உங்களுக்குத் தெரிந்திருந்தால் நீங்கள் தான் பூமிப்பந்தை இணைய வலையில் சிக்கவைத்த ஜீனியஸ் சிலந்தியாய் இருந்திருப்பீர்கள்.
இந்த மே மாத கணக்குப்படி இணைய உருண்டையின் மொத்த இணையதளங்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா? 168,408,112 அபாரமானமான வளர்ச்சிதான். இத்தனை வெப்தளங்கள் உருவாக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் ஒரு முக்கிய காரணமாய் அமைந்தது கூகிளின் அட்சென்ஸ் (Google Adsense) என்றால் மிகையாகாது.
தங்கள் இணையதளங்களில் ஓடும் விளம்பரங்களை கிளிக்கினால் மாதம் தோறும் காசோலை வீடு தேடி வரும் என்றதும் மெக்கானிக்கல், சிவில் மாணவன் கூட இணையதளம் தொடக்கினான். பல வெப்வித்தைகளை காட்டி சட்டம் சட்டமாய் விளம்பரங்களைப் போட்டு. இப்படி ஆடை அணிகலன்களோடும் நிர்வாணமாயும் ஆயிரம் ஆயிரம் தளங்கள்.
இத்தனை வெற்றிகரமான கூகிளின் ஆட்சென்ஸ் புராஜெக்ட்டை முன்னின்று நடத்தியவர் ஒரு இந்தியர் என்பது நமக்கெல்லாம் பெருமை. அவர் பெயர் கோகுல் ராஜாராம் (Gokul Rajaram). 2003-ல் கூகிளின் இந்த நுட்பம் வெளிவந்த பின்பு தான் கூகிளுக்கு காசு கொட்டோ கொட்டென கொட்டத் தொடங்கியது.அப்புறம் இணைய காட்டுக்கு இன்றுவரை கூகிள் தான் ராஜா.
ராஜாராம் கான்பூர் IIT யில் B.Tech முடித்து பின் MIT Sloan School of Management-ல் M.B.A-யும் M.S. in Computer Science-ம் முடித்தவர். ராஜாராம் பழைய நினைவுகளை சொலலும்போது “When we started adsense, it was just me and four engineers,” “The night before we launched, Sergey spent five hours with me testing the system and pointing out bugs.” என்கின்றார் மறக்க இயலாத நினைவுகளாக. இணையத்தின் போக்கையே மாற்றிய நாளல்லவா அது. இங்கு அவர் கூறும் "செர்ஜி" கூகிளை நிறுவிய நிறுவனர்களில் ஒருவர் ஆவார்.
ஆனாலும் கோகுல் ராஜாராம் இன்றைக்கு Xoogler ஆகிவிட்டார். அதாவது x-googler. மில்லியன்களை சம்பாதித்து விட்டு இனி தானே தனக்காக உழைக்கப்போவதாக chailabs.com தொடங்கியிருக்கிறார். அதன் விவரங்களெல்லாம் இப்போதைக்கு ரகசியமே. எதாவது வியப்பாய் சீக்கிரமாய் கொண்டு வருவார் என எல்லோரும் எதிர்பார்க்கின்றார்கள்.
இன்றைக்கு Google Adsense-ன் நிலமை அவ்வளவு பிரகாசமாய் இல்லை. மைஸ்பேஸ் சிறுவர்கள் கும்பலை நம்பி மில்லியன்களை கூகிள் செலவழித்து கையை தானே சுட்டுக் கொண்டிருக்கிறது. வருமானமும் கம்மி. கொஞ்ச காலமாய் இன்னோவேசனே இல்லை. இப்படி அநேக கம்ப்ளெயின்ட்கள். பல முக்கிய googler-கள் வேறு xoogler-கள் ஆகிக் கொண்டிருக்கின்றனர். இப்படி தொடர்ச்சியாய் மாற்றங்கள், உலகில் அது மட்டும்தானே மாறாதது.கந்தசஷ்டிகவசம் தமிழிலும் ஆங்கிலத்திலும் Kanda Shasti Kavasam pdf in Tamil and English ebook Download. Right click and Save.Tamil Download and English Download
Posted by
PKP
at
6/10/2008 08:59:00 PM
2
comments
Wednesday, October 03, 2007
முந்தி முந்தி நூயி
நாடாண்டு தான் ஒருவர் தன் சக்தியை நிரூபிக்க வேண்டும் என்றில்லை. தனியொருவராய் மாபெரும் தீர்வுகள் எடுத்து வியாபார சாம்ராஜ்யங்களை உருவாக்குதலும் மேய்த்தலும் பெரிய காரியமே. அப்படி வளர்ந்து... அன்றைய கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் வியாபாரக் கம்பெனியாய் பாரதத்தில் நுழைந்து பின் மொத்த பாரதத்தையும் ஆளவில்லையா?.
நம்மூர் பெண் ஒருவர் அமெரிக்க Fortune பத்திரிகையால் இந்த வருட உலகின் டாப் MOST POWERFUL WOMEN ஆக தேர்ந்தெடுக்க பட்டிருப்பது தமிழர்களாகிய நமக்கெல்லாம் பெருமைதான்.(Forbes-ல் 5 ஆவது இடம்).பெப்ஸி குளிர்பான(PepsiCo) கம்பெனியின் Chairman and CEO-வாக இருக்கும் இவர் பெயர் இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி (Indra Krishnamurthy Nooyi).1955-ல் சென்னையில் பிறந்த இவர் 1974-ல் தாம்பரம் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் சாதாரண ஒரு கல்லூரி மாணவியாய் BSc முடித்தார். பின் கொல்கொத்தா - Indian Institute of Management-ல் PGDBA படித்து முடித்தார்.மதுரா கோட்ஸில் (Madura Coats) வேலை செய்யும் போதே அமெரிக்க யேல் பல்கலைகழகத்தில் நிர்வாகம் படிக்க வாய்ப்பு கிடைக்க பறந்து போனவர் தான், இன்று அவர் உலகின் சக்திவாய்ந்த முதல் பிசினஸ் பெண்.
எல்லாமே எப்போதும் "பீஸ் ஆப் கேக்"காய் இருப்பதில்லை. நூயியும் கடக்க வேண்டிய தூரங்கள் ரொம்ப இருந்தன.Yale-ல் படிக்கும் போது தின செலவுக்காய் இரவு முழக்க விழித்து receptionist counter-ல் உட்கார்ந்து வேலை செய்ததுண்டாம். முதல் இன்டர்வியூக்கு 50 டாலர் கோட் சூட்டோடு போக வேலை கிடைக்கவில்லையாம். கடைசியில் இரண்டாவது இண்டர்வியூக்கு நம்மூர் சேலை கட்டி சென்றாராம்.உடனே வேலையும் கிடைத்தது.அதுவும் புகழ் பெற்ற Boston Consulting Group-ல். அவர் சொல்கிறார் "ஒரு பெண்ணாய் அதுவும் அயல்நாட்டில் பிறந்தவளாய் மற்றவர்களைவிட மிக புத்திசாலியாய் இருக்க வேண்டியிருந்தது." ("Being a woman, being foreign-born, you've got to be smarter than anyone else,")
நம் போன்ற வளரும் தலைமுறைக்கு அவர் சொல்வதெல்லாம்
"எத்தனை வயதானாலும் கற்றுக்கொள்வதை மட்டும் நிறுத்திவிடாதீர்கள்.அது தான் என் தாரக மந்திரம்.பள்ளிப்படிப்பை நான் சொல்லவில்லை.நிஜ உலக அறிவை சொல்கின்றேன்.நாட்டு நடப்பிலிருந்து கற்றுக்கொளலை சொல்கின்றேன்.உங்கள் தாகத்தில் தேடிக்கொண்டேயிருங்கள்"
"Never stop learning. Regardless of ones age. That is my golden rule. Im not talking about academic knowledge, but being street-smart and being aware of whats happening in the real world. Keep your natural curiosity alive."
தமிழ் குல பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்தும் வரிகள் அவை
திருவள்ளுவரின் திருக்குறள் உரையோடு மென்புத்தகம் Thiruvalluvar Thirukural with meaning Tamil ebook Download. Right click and Save.
http://static.scribd.com/docs/s1tocyicarkf.pdf
Posted by
PKP
at
10/03/2007 03:02:00 PM
2
comments
Wednesday, September 12, 2007
முருகவேல் ஒரு வெற்றிவேல்
ரோல்மாடல் ஒரு சமூகத்துக்கு எவ்வளவு முக்கியமென சமீபத்தில் பரவலாய் உணர தொடங்கியிருக்கின்றார்கள். சரியான ரோல்மாடல் இல்லாத காரணத்தால் உலகின் சில பகுதிகளில் இளைஞர்களுக்கு கேடிகளும், தாதாக்களுமே ரோல்மாடலாவதால் சீக்கிரமே அவர்கள் சீரழிய சாத்தியம் அதிகமாகின்றதாம்.நம்மூர் இதில் பரவாயில்லை.மலர்ந்து வரும் இளைஞர்களுக்கு மேலும் மேலும் நம்பிக்கையூட்ட பல நல்ல ரோல்மாடல்கள்.
முருகவேல் ஜானகிராமன் - நம் சென்னை பல்கலைகழகத்திலிருந்து கணிணியியலில் முதுகலை கற்று விட்டு சிங்கப்பூர், அமெரிக்காவென சாதாரண கணிணி வல்லுனராய் வேலை பார்க்கப்போனார்.ஏனோ இணையத்தில் ஆர்வம் மேலிட SysIndia.com எனும் இணைய விவாத தளத்தை தொடங்கினார்.
அதில் matrimony எனும் சொல் சூடான டாப்பிக்காகவே முருகவேலுக்கு ஒரு ஜோதி தோன்றியது.
நம்மூரின் மிகப் பெரிய மங்கள காரியமான இந்த கல்யாண விஷயத்துக்காக ஒரு தனித் தளம் தொடங்கினால் என்ன?
1997-ல் TamilMatrimony.com பிறந்தது.பிறந்ததிலிருந்தே அது மிகப்பெரிய சக்ஸஸ்.தி நகரில் 300 சதுர அடியில் 3 பேரோடு தொடங்கினார்கள்.இன்று அது 350 பேரோடு BharatMatrimony.com,HindiMatrimony.com என 14 இணைய தளங்களோடு மிகப்பெரிய நிறுவனமாக சென்னை அண்ணாசாலையில்.
மேலும் 22 அலுவலகங்கள் இந்தியா முழுதும்.ஏறக்குறைய 75 லட்சம் அங்கத்தினர்கள்.இதுவரை சுமார் 7 லட்சம் திருமணங்கள்.அதாவது சராசரியாய் தினம் 30 முதல் 50 திருமணங்கள் இதன் வழி நடத்தப்படுகின்றதாம்.
முப்பத்திநான்கே வயதான முருகவேல் நம்பிக்கையாய் சொல்கின்றார் "செய்யும் செயலை முழுமனதாய் விரும்பி செய்தால் தோல்வி என்பதே சாத்தியமில்லை"
பின்குறிப்பு: முருகவேல் TamilMatrimony.com தொடங்கியபோது அவர் பாச்சிலராயிருந்தார். இரண்டு வருடம் கழித்து தனது மனைவியையும் அவர் இணையம் வழியே தான் தேடிபிடித்தாராம்.நானும் அப்படியே நன்றி சொல்லிக்க நல்ல தருணம் இது.
Chennai anniversary 368 Tamil ebook download.
சென்னை வயது 368 மென்புத்தகம் உங்கள் இறக்கத்துக்காக.Right click and Save.
http://static.scribd.com/docs/5wzxcm2pgrp4u.pdf
Posted by
PKP
at
9/12/2007 01:39:00 PM
1
comments
Tuesday, September 04, 2007
அங்கிள் பாலா
நம்ம ஊர் அநேக முத்துக்களை உலகுக்கு அளித்துள்ளது. அத்தகைய முத்துக்களை பற்றி அறிந்து கொளல், நிச்சயம் வளர்வோர்க்கும், வளர விளைவோர்க்கும் ஓர் உற்சாக மூட்டலாய் அமையும்.
சிங்காரச் சென்னையின் சைதாப்பேட்டையிலுள்ளது "Great Lakes Institute of Management". இங்கு நிர்வாகவியல்(Management) படித்து வெளியேறும் ஒவ்வொரு "Great Lakers" மாணவர்களுக்கும், அடுத்த நிமிடமே பெரும் பெரும் நிறுவனங்களில் கைநிறைய சம்பளத்தோடு பணிக்கமர வாய்ப்புகள் வருகிறனவாம்.இந்த வருட கணக்குப்படி இங்கிருந்து வெளியேறிய 100% மாணவர்களும் சராசரியாய் 9.3 லட்ச ரூபாய்கள் சம்பள ஆபர் லெட்டர்களோடு வெளியேறியிருக்கின்றார்கள். மற்ற பிஸினஸ் ஸ்கூல்களுக்கெல்லாம் பொறாமையாய் குறைந்த கால அளவில் வழங்கப்படும் தரமான கல்வியால் கடந்த மூன்று ஆண்டுகளில் அபாரமாய் வளர்ந்திருக்கிறது இந்த கல்வி நிறுவனம்.
இதை நிறுவிய பாலா வி பாலசந்திரன் (Bala V Balachandran) 1960-களில் அண்ணாமலை பல்கலைகழகத்தில் புள்ளியியல் படித்து அமெரிக்கா பறந்தவர். சீக்கிரத்தில் அமெரிக்காவில் புகழ்பெற்ற பிஸினஸ் ஸ்கூலான சிக்காகோவிலுள்ள கெல்லாகில் (Kellogg School of Management) ஆசிரியராக சேர்ந்தார். இன்று அவர் US Air Force உட்பட அநேக பெரு நிறுவனங்களுக்கு நிர்வாகவியல் சார்ந்த ஆலோசனைகளை வழங்கி வருகின்றார். நமக்கெல்லாம் பெருமை சேர்க்கும் ஒரு பிரிலியன்ட் அமெர்க்க இந்தியர். அநேக தொழில் அதிபர்கள் இவர் வார்த்தைகளில் அப்படி நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். மாணவர்கள் எல்லாம் அன்பாய் இவரை "அங்கிள் பாலா" வெனவே அழைக்கின்றனராம்.
"பணத்துக்காக இந்நிறுவனத்தை நான் துவக்க வில்லை,ஏன்னா எல்லோருக்கும் கடைசியில் மிச்சமாவது செத்துபோதலும்,பிணமாகுலும் தான்" என்கின்றார்.
பின்குறிப்பு:இங்கு பயிலும் எல்லா மாணவருக்கும் சீன மொழி கற்றல் கட்டாயமாம்.அங்கிள் பாலாவின் தூரப்பார்வை புரிகின்றதா?
More Details
http://www.glakes.org
Posted by
PKP
at
9/04/2007 03:50:00 PM
1
comments
Tuesday, July 03, 2007
உலக தரவரிசையில் இந்திய நிறுவனங்கள்
BusinessWeek எனும் அமெரிக்க வாரஇதழ் உலக முழுவதுமிருந்து இந்த வருட டாப் 100 தகவல் தொழில்நுட்பம் சார்ந்த மென்பொருள் நிறுவனங்களின் வரிசையை வெளியிட்டுள்ளது. அதில் சில இந்திய நிறுவனங்களும் அடக்கம். இங்கே அதன் சாரம்சம்.
14 ஆவது இடத்தில் வருவது Bharti Airtel (கடந்த வருடம் 10ம் இடம்.இறங்குமுகம்)
23 ஆவது இடத்தில் வருவது Tata Consultancy Services (கடந்த வருடம் 34ம் இடம்.ஏறுமுகம்)
30 ஆவது இடத்தில் வருவது Infosys (கடந்த வருடம் 42ம் இடம்.ஏறுமுகம்)
49 ஆவது இடத்தில் வருவது Wipro (கடந்த வருடம் 57ம் இடம்.ஏறுமுகம்)
73 ஆவது இடத்தில் வருவது Satyam Computer Services (கடந்த வருடம் 49ம் இடம்.இறங்குமுகம்)
HCL Technologies (புதுசாக இந்த வரிசையில் இந்த வருடம் நுழைந்துள்ளது)
பெரும்பாலான மென்பணிகள் இந்தியாவிலேயே நடைபெறும் அமெரிக்க நிறுவனம் Cognizant Technology Solutions 70 ஆவது இடத்தில் வருகிறது. (கடந்த வருடம் 84ம் இடம்.ஏறுமுகம்)
மென்பொருள் துறையில் ஜாம்பவானாக காட்டிகொள்ளும் நம் நிலம் "இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா?" வென இன்னும் கொஞ்சம்
வந்தால் நன்றாய் இருக்கும்.
Posted by
PKP
at
7/03/2007 02:15:00 PM
0
comments