இன்போசிஸ்... இந்தியாவின் நம்பர் 2 சாப்ட்வேர் கம்பெனி.1981-ல் ஏழுபேரோடு துவக்கப்பட்ட இந்நிறுவத்தின் இன்றைய பலம் ஏறக்குறைய 70,000 பேர். இதன் ஆரம்ப காலங்களில் எடுக்கப்பட்ட ஒரு அபூர்வமான படம் தான் நீங்கள் மேலே பார்ப்பது.இது ஒரு கிளர்க்கினால் எடுக்கப்பட்டு அவர் ஆல்பத்தில் கண்டெடுக்கப்பட்டதாம்.அந்நபர் தனது பிறந்த நாளாய் அதுவும் உற்சாக மிகுதியில் உடன் பணிபுரிவோரை அழைத்து போட்டோ எடுக்க விளைந்தாராம். இரவல் வாங்கிய கேமராவால் தானே அந்த போட்டோவை எடுக்க நேரிட்டதால் அவர் இந்த படத்தில் மிஸ்ஸிங். இடதோரம் நிற்பவர் Mr.நாராயணமூர்த்தி.
சீக்கிர நாளையில் டெல்லி நொய்டாவில் அமையவிருக்கும் இன்போசிஸ் கேம்பஸ் தான் நீங்கள் கீழே பார்ப்பது. உயர உயர பறக்கலாம்.
ஆனால் Mr.நாராயணமூர்த்தி தனது சொத்தாக கூறுவது.
“Our assets walk out of the door each evening. We have to make sure that they come back the next morning.”
இன்றைய யுகத்தில் இது புரிந்தார் மட்டுமே வாழ்வர் போலும்.
(Click the pictures to enlarge)
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Monday, April 09, 2007
நேற்றும் நாளையும்
Posted by
PKP
at
4/09/2007 04:01:00 PM
Labels: Indians
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment