கூகிள் எர்த் பற்றிய அறிமுகம் நம்மில் பலருக்கும் தேவைப்படாது. அது அவ்வளவாய் பிரபலம். ஆனால் கூகிள் எர்த் படங்களை விண்வெளியிலிருந்து சுட்டுத்தள்ளும் சேட்டலைட்கள் பற்றி கேள்விபட்டிருக்கின்றீர்களா?. அந்த சேட்டலைட்டின் பெயர் QuickBird (படத்தில் காண்பது). இவர் தான் மூத்த அண்ணா. இவர் விண்ணில் ஏவப்பட்ட நாள் முதல் (October 18, 2001) பூமியின் மூலை முடுக்குகளையெல்லாம் வானிலிருந்து படம் எடுத்து பிடித்து பூமிக்கு அனுப்பி வைக்கின்றார். அவற்றை தாம் நாம் கூகிள் எர்த்தில் அல்லது கூகிள் மேப் சேட்டலைட் வியூவில் பார்க்கின்றோம். இந்த சேட்டலைட் பூமிக்கு மேல் 450கிமீ தொலைவில் பூமியை சுற்றியவாறு உள்ளதாம். உண்மையில் இந்த சேட்டலைட் கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமானதல்ல. இது DigitalGlobe எனும் American remote sensing நிறுவனத்தினுடையது.
QuickBird-ன் தம்பி சேட்டலைட்டான WorldView I சமீபத்தில் தான் (September 18, 2007) விண்ணில் ஏவப்பட்டது. இப்போது இவரும் கலக்கலாய் தெளிவாய் லேட்டஸ்ட் டெக்னாலஜியோடு படங்களை சுட்டு வானிலிருந்து பூமிக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றார். QuickBird-ஐ விட தெளிவான படங்களாய் இவை இருக்கின்றன. விரைவில் இப்படங்கள் கூகிள் எர்த்தில் இடம்பிடிக்க தொடங்கிவிடும்.
WorldView I-னால் தினமும் 750,000 சதுரகிலோமீட்டர்களை படம்பிடிக்க இயலுமாம்.மேலும் அப்படங்களில் பூமியின் அரைமீட்டரே அளவான பொருள்களையும் காண இயலுமாம்.
WorldView I சேட்டலைட் பூமிக்கு அனுப்பிய சில சாம்பிள் படங்களை இங்கே காணலாம்.
http://www.digitalglobe.com/worldview-1_images.html
அடுத்ததாய் 2008-ல் Worldview II ஏவவிருக்கின்றார்கள். அது என்னமாயமெல்லாம் செய்யப்போகின்றதோ?.
இப்போதைக்கு DigitalGlobe-ன் ஒரே காம்பெடீட்டர் GeoEye Inc.இவர்கள் பணியும் விண் ஒடம் வழி படம் எடுத்து கொடுப்பதே.
கூகிள் எர்த்தை ரியல்டைமில் பார்க்க ஆசையா?.கொஞ்ச நாள் காத்திருக்க வேண்டும்.கிறித்தவர்களின் புனித நூலான வேதாகமத்தின் இரண்டாம் பகுதி "புதிய ஏற்பாடு" தமிழில் மென்புத்தகம் Christians Holy book Bible "New Testment" Tamil ebook Download. Right click and Save.http://static.scribd.com/docs/jvn4rhnx6u0zc.pdf
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Monday, November 12, 2007
கூகிள் எர்த் சேட்டலைட்கள்
Posted by
PKP
at
11/12/2007 04:35:00 PM
Labels: Google
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
கூகிள் எர்த், கூகிள் மேப் படங்கள் ரொம்ப பழசாக இருக்கிறதே கடைசியாக எப்பொது எடுத்திருப்பார்கள்?நேரடியாக காட்சிகளை காண வாய்ப்பு இருக்கிறதா?
Post a Comment