உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, February 21, 2008

கொஞ்சம் சுயபுராணம்


என்னைப் போன்ற சராசரி தமிழ் பேசுபவனுக்கு தெரிந்த சில சமாசாரங்களை, இன்னொரு சாமானிய தமிழனுக்கு சொல்லத் தான் இந்த வலைப்பதிவு இதுவரை ஓட்டப்பட்டு வருகின்றது. வழக்கமாய் வந்து கேள்விகளை கேட்டு, பின்னூட்டங்களை இட்டு உற்சாகப்படுத்தும் அநேக நண்பர்களுக்கு இடையே திடீரென சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆனந்த அதிர்ச்சி. பிரபல பத்திரிகையாளரும் வெகுஜன எழுத்தாளருமான அன்பர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் இவ்வலைப்பதிவை தனது புத்தம் புதிய இணைய தளத்தில்(www.sramakrishnan.com) அறிமுகப்படுத்தியதோடு (படம்) இங்கு பின்னூட்டமும் இட்டு சென்றிருக்கின்றார்.அவருக்கு என் நன்றிகள் பல. இப்போது அவர் தனது தமிழ் வலைதளத்திலும் பிரத்தியேக பத்திகள் அவ்வப்போது எழுதிவருகின்றார்.

இவ்வலைப்பதிவை படித்த பலரும் என்னிடம் கேட்கும் ஒரு கேள்வி "நீங்கள் பட்டுக்கோட்டை பிரபாகரா?".ஏனெனில் தமிழ் எழுத்துலகில் எல்லோரும் அறிந்த பிகேபி "பட்டுக்கோட்டை பிரபாகர்" அவர்கள் தாம். இங்கு எனது வலைப்பதிவின் பெயரும் பிகேபி என அமைந்ததால் அக்கேள்வி கேட்கப்படுவதுண்டு. ஆனால் உண்மையில் அவருக்கும் இந்த வலைப்பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் ஒர் மலை. நான் மடு.

"சும்மாவா சொன்னாங்க பெரியவுங்க" என்ற மென்புத்தகத்தை படித்த துளசி கோபால் அக்கா "நீங்கதானே பட்டாபி? இன்னிக்குத்தான் உங்க 'சும்மாவா சொன்னாங்க பெரியவுங்க' படிச்சேன். எல்லாம் சூப்பர். மிகவும் ரசித்தேன். அநேக புதிய தகவல்கள் கிடைத்தன.ஒன்று மட்டும் சொல்லிக்கவா? வடக்கே தலைவச்சுப் படுக்கும் பகுதி: பூமத்திய ரேகைக்கு எட்டு டிகிரியில் இந்தியா ஆரம்பம் அது வடதுருவத்துக்குப் பக்கமுன்னு தாத்தா சொல்றாரே.....
அது சரியான்னு சொல்லுங்களேன்."
-ன்னு கேட்டிருந்தார். ஐயோ அக்கா நான் பட்டாபியும் இல்லை அந்த தாத்தாவும் இல்லை. உங்கள் பாராட்டுகளெல்லாம் அந்த "பட்டாபி" தாத்தாவையே போய் சேரட்டும்.
மற்றபடி பூகோளத்தை பார்க்கும் போது வடதுருவம் தென்துருவம் இரண்டில் இந்தியா வடதுருவத்தின் பக்கமாய் உள்ளது அல்லவா அதை தான் அப்படி சொன்னாரோவென சந்தேகிக்கின்றேன்.

P.G.Sayee Prackash அவர்கள் "I really like and stunned the works of PKP. The pdf format of life history of Chaplin and Marx are really good to read and preserve to our life. Nanrigal pala" என சொல்லியிருந்தார். இப்படி பலரும் பாராட்டிய அவ்விரு மென்புத்தகங்களின் ஆசிரியருக்கே அப்பாராட்டுகள் போயடையட்டும்.

பின்னூட்டமிடும் அல்லது மின்னஞ்சலிடும் நண்பர்கள் உங்களின் பெயர் இங்கு இப்பதிவுகளில் இடம் பெற விருப்பமில்லையெனில் தயவு செய்து அதை உங்கள் பின்னூட்டத்தில் அல்லது மின்னஞ்சலில் தெரிவிக்க வேண்டுகின்றேன்.

இவ்வலைப்பதிவை வாசிப்பதில் பெரும்பாலானோர் மின்னஞ்சல் வழியே வாசிப்பதால் தான் பின்னூட்டங்களுக்கான பதில்களையும் பதிவுகளாகவே பதிக்கின்றேன்.மற்றபடி வேறு இரகசியம் ஒன்றுமில்லை. பின்னூட்டத்தின் வழி பேசப்படும் பல நல்ல விசயங்கள் கூட அனைவரையும் சென்றடைய வேண்டுமல்லவா?

இக்கால உலக அரசியல் நிகழ்வுகள் தமிழில் கவிதைகளாக மு.பொன்னம்பலம் "பொறியில் அகப்பட்ட தேசம்" சிறு மென் புத்தகமாக. Mu.Ponnambalam "Poriyil Agappatta Thesam" in Tamil kavithaikal pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



6 comments:

வடுவூர் குமார் said...

நான் கூட திரு எஸ் ராமகிருஷ்ணனின் உனண்மையாக வலைப்பக்கம் தானா? என்ற சந்தேகம் வந்தது,நல்ல வேளை அது அவருடைய பக்கம் தானாம்.

வாழ்த்துக்கள் பி கே பி.

Tech Shankar said...

எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் அவருடைய தளத்தில் இணையத்தளபதியான உங்களைப்பற்றி அறிமுகப்படுத்தியதில் மிகையேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
உங்களது எழுத்தின் நடை ஒரு சிறந்த எழுத்தாளரின் நடைக்கு இணையானதாக இருப்பதைத்தான் இது உணர்த்துகிறது. வாழ்த்துக்கள். தொடர்ந்து சிறப்பாகப் பல புதிய தகவல்களை உங்களிடம் இருந்து பெறுவதற்கு ஆவலாக உள்ளோம்.
டி.ஆர். சிலம்பரசன் கூறுவாரே - 'அரைச்சமாவை அரைப்போமா?' என்று அந்த வழக்கத்தை அடியோடு ஒழித்து புதிது புதிதாகத் தகவல்கள் தருவதால்தான் தினம்தினம் உங்களது வலைப்பூவிற்கு வருகிற வாசகர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. தினமும் எங்களின் அறிவுப்பசிக்குத் தீனிகிடைக்காதா எனக் கணிணி முன்னால் தவம் கிடக்கும் வாசகர்களின் ஏக்கத்தை நீங்கள் போக்கிக்கொண்டு இருப்பதால்தானே உங்களுக்கு 'இணையத்தளபதி' பட்டத்தை - இன்றைய இணையர்கள் சார்பாக நான் வழங்கினேன்.

கலைஞர் என்ற பட்டத்தை மு. க. அவர்களுக்கு எம்.ஆர்.ராதா வழங்கினார். பெரிய மனிதர்கள் தான் பட்டம் வழங்க வேண்டுமா என்ன.

ஒரு வாசகன் தான் விரும்பும் வலைஞனுக்குப் பட்டம் கொடுக்கக்கூடாதா என்ன?
எனது வலைப்பூவில் 'இணையத்தளபதி' யைச் சொடுக்கினால் - உங்களது வலைப்பூவுக்கு வருமாறு செய்துள்ளேன். இதில் உங்களுக்கு ஆட்சேபணை இருந்தாலும், அதுபற்றி எனக்குக் கவலையில்லை.

வால்பையன் said...

//இவ்வலைப்பதிவை படித்த பலரும் என்னிடம் கேட்கும் ஒரு கேள்வி "நீங்கள் பட்டுக்கோட்டை பிரபாகரா?"//

எனக்கும் அந்த சந்தேகம் முதலில் இருந்தது!

வால்பையன்

M.Rishan Shareef said...

அன்பின் PKP,
உண்மையில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் வலைப்பக்கம் பார்த்துத் தான் உங்கள் பதிவுகளுக்கு வந்தேன்.
ஒவ்வொரு பதிவும் மிகப்பயனுள்ளவை.
தொடரட்டும் உங்கள் சேவை நண்பரே.
வாழ்த்துக்கள்.

ரௌத்ரன் said...

FIRST OF ALL I WISH TO THANK Mr.PANDITHURAI WHO WROTE ABOUT S.RAMAKRISHNAN WEBSITE AT 'ANBUDAN'(GOOGLE GROUPS)..THROUGH S.R I GOT TO SEE UR BLOG...WOW..WOW...I REALY WISH TO THANK U FOR UR FANTASTIC JOB...

ரௌத்ரன் said...

பி.கே.பி சார்..என்னுடைய pendrive மற்றும் moblie memory card-ல் china400 என்ற புதிய folder ஒன்று வந்து உட்கார்ந்துள்ளது அழித்தாலும் போக மாட்டேன் என அடம்பிடிக்கிறது..வைரசாக இருந்தால் என் கணிணி காட்டிக்கொடுக்கும்..இதை எப்படி ஒழிப்பது? மேலும் outlook express-ஐ எப்படி setup செய்வது என்று கூறுவீர்களா?நான் mobile airtel gprs பயன்படுத்துகிறேன்..

நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்