உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Monday, November 20, 2006

இந்த வீணைக்கு தெரியாது-A hit`s Profile

ராகம் - சகானா.(Sahana)
வெளியீடு-தூர்தர்ஸனின் ரயில் ஸ்நேகம் டிவி தொடர் (1990`s) (with 13 episodes)
இயக்கம்-கே.பாலசந்தர்
பாடியவர்-சித்ரா
நடிப்பு-நிழல்கள் ரவி, அமுதா
எழுதியவர் : வைரமுத்து
இசை அமைத்தவர் : வி.எஸ்.நரசிம்மன்.வரிகள்
இந்த வீணைக்கு தெரியாது
இதை செய்தவன் யாரென்று(2)

என் சொந்த பிள்ளையும் அறியாது
அதை தந்தவன் யாரென்று
எனக்குள் அழுது ரசிக்கின்றேன்
இரண்டையும் மடியில் சுமக்கின்றேன்

இந்த வீணைக்கு தெரியாது

மலையில் வழுக்கி விழுந்த நதிக்கு
அடைக்கலம் தந்தது கடல் தானே
தரையில் வழுக்கி விழந்த கொடிக்கு
அடைக்கலம் தந்தது கிளை தானே
எங்கோ அழுத கண்ணீர் துடைக்க
எங்கோ ஒரு விரல் இருக்கிறது
காகம் குருவிகள் தாகம் தீர
கங்கை இன்னும் நடக்கிறது

இந்த வீணைக்கு தெரியாது

சொந்தம் பந்தம் என்பது எல்லாம்
சொல்லித் திரிந்த முறை தானே
சொர்கம் நரகம் என்பது எல்லாம்
சூழ்நிலை கொடுத்த நிறம் தானே
உள்ளம் என்பது சரியாய் இருந்தால்
உலகம் முழுதும் இனிக்கிறது
உதிர போகும் பூவும் கூட
உயிர் வாழ்ந்திட தான் துடிக்கிறது

இந்த வீணைக்கு தெரியாது
என் சொந்த பிள்ளையும் அறியாது

MP3 download link is available on Link sharing forum.

More Rayil Snegam videos

Tamil Serial Song K Balachander Rayil Snegam Rail Sneham Chitra V.S.Narasimhan indhaa veenaiku teeriyadhu Intha veenaikku theriyaathu lyrics MP3 Video Doordarshan


Email PostDownload this post as PDF

Related Posts by Categories5 comments:

Sadish said...

நன்றி...
ரொம்ப நாட்களாக தேடிக் கொண்டிருந்தேன்...

ஒரு சின்ன திருத்தம்.
எழுதியவர் : வைரமுத்து
இசை அமைத்தவர் : வி.எஸ்.நரசிம்மன்.

-சதீஷ்

மலைநாடான் said...

அருமையான பாடல். இது குறித்த என் நினைவுகள் இங்கே

PKP said...

சதீஷ்!
தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி. :)
திருத்திக் கொண்டேன்.
நன்றி.

மலைநாடான்!
என்ன கவிதை!
அருமையாய் கொட்டிடீங்க. :)
அநேகரை கவர்ந்த பாடலிது.ஆமாம்.
வருகைக்கு நன்றி.

nagoreismail said...

செவிக்கு ஆரோக்கிய விருந்து இந்த பாடல்
மனதிற்கு இதமான மருந்து தான் இந்த பாடல்

இரயில் சிநேகம் எனும் தொலைகாட்சி படத்தில் இடம் பெற்ற பாடல் தொட்டில் சிநேகம் போல் நிலைத்து நிற்க கூடிய பாடல்

நாகூர் இஸ்மாயில்

nagoreismail said...

"இரயில் சிநேகம்" முழு படம் பார்க்க ஏதேனும் வலை உள்ளதா? - நாகூர் இஸ்மாயில்

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்