ஒரே ஒரு செர்வர் டப்பாவை வைத்துக்கொண்டு அதில் விண்டோஸ்,யூனிக்ஸ் என பல வித செர்வர் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை அல்லது பல விண்டோஸ்களை ஓட்டி பல பெருநிறுவனங்கள் காசு சேமித்துக்கொண்டிருக்கிறார்கள். குப்பையாய் கிடந்த அநேக டேட்டா சென்டர்கள் இதனால் சுத்தமாகி வருவதாய் தகவல்.இதற்கெல்லாம் காரணம் இன்றைக்கு சூடாக பேசப்படும் செர்வர் வெர்சுவலைசேசன் (Server Virtualization) அல்லது கைப்பர்வைசர் (Hypervisor) டெக்னாலஜி தான் காரணம். இத்தொழில் நுட்பத்தில் முன்ணணியிலுள்ள விஎம்வேர் (VMWare VMW)நிறுவனத்தின் பங்குகள் கடந்த வாரம் விற்பனைக்கு வர Subprime போன்ற சிக்கல்களில் நலிந்து கிடந்த வால் ஸ்டிரீட் சிறிது விழித்து அதென்ன "வெர்சுயலைஷேஷன்" என வியந்து பார்த்துகொண்டிருக்கிறது.கிடு கிடுவென ஏறுமுகத்தில் இருக்கும் இதன் பங்குகள் அடுத்து சில வார மாதங்களில் என்னவாகும் என தெரியாது. அடுத்த கூகிள் இதுதான் என சிலர் பீற்றிக் கொண்டு பங்குகளை வாங்கி குவிக்க, பலர் பங்கு வர்த்தக தந்திரங்களில் சிக்கிவிடாதிருக்க உஷாராய் எச்சரிக்கிறார்கள்.
சாலிடான விஎம்வேர் நிறுவனத்தின் ஈஎஸ்எக்ஸ் (ESX) மென்பொருள்,பல விதங்களில் பெரு நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் செலவு மிச்சப்படுத்துவதால் பெரிய நம்பிக்கை இருப்பதாக புதிதாய் பலரும், குறிப்பாய் I.T வல்லுநர்கள் இதன் பங்குகளை வாங்குகிறார்களாம்.
போகப் போகத்தான் தெரியும் மின்னுவது பொன்னாவென்று.
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Wednesday, August 22, 2007
வால் ஸ்டிரீட்டுக்கு வந்த வெர்சுயலைஷேஷன்
Monday, August 20, 2007
கூகிள் வழங்கும் பகுதி நேர வேலை வாய்ப்பு
ஒரு டிஜிட்டல் கேமராவோடு நகரத் தெருக்களில் ஒவ்வொரு கடையாய் ஏறி இறங்கி அதை படம் எடுத்து அக்கடை அல்லது வணிக நிறுவனம் பற்றிய தகவல்களை (such as hours of operation, types of payment accepted, etc.) சேகரித்து கூகிளுக்கு அனுப்பினால் ஒரு கடைக்கு 10 டாலர்கள் வரை தருகிறார்களாம்.இதற்கு Google Local Business Referrals (LBR) program என்று பெயர்.எப்படியாவது கூகிள் மேப்பை கட்டுக்கடங்கா தகவல்களால் நிரப்ப கூகிள் எடுக்கும் முயற்சியின் ஒரு பங்கு தான் இது. இன்றைய நிலையில் Knowlege is power.Knowledge is பணம் என அறிந்தவர்கள் அவர்கள்.
ஆதலால் இப்படி சேகரிக்கப்பட்ட தகவல்களால் அவர்கள் மேப்பிங் சிஸ்டத்தை நிரப்ப நிரம்ப அதன் விலைமதிப்பு கூடிக்கொண்டே போகும். கூகிளின் விளம்பர வருவாய் தெருவீதியிலிருந்தும் அவர்கட்கு வர அவர்கள் செய்யும் முதலீடுதான் இது. என்ன இப்படி பகுதி நேரத்தில் நீங்கள் கூகிளிடமிருந்து பணம் சம்பாதிக்க இப்போதைக்கு நீங்கள் அமெரிக்காவில் இருக்க வேண்டும்.
More details
http://www.google.com/services/local-business-referrals/repfaq.html
Friday, August 17, 2007
கார் பி.ஸி
காரில் போய் கொண்டிருக்கின்றீர்கள். யாரோ மொபைல்போனில் அழைத்து hypervisor பற்றி கேட்கின்றார்கள். ஒன்றும் புரியவில்லை.கூகிள் செய்தால் நன்றாயிருக்கும் போல் தோன்றுகின்றது.கணிணிக்கு எங்கே போக.கையறு நிலை.
அப்படியே உங்கள் பிளாக்பெரியை தீண்டாமல் மெயில் செக்செய்யவும் வசதியிருந்தால் எப்படியிருக்கும்.
அதற்கு உதவுகின்றது இந்த கார் பி.ஸி.(Car PC or Auto PC).இக்கணிணி உங்கள் காரின் டேஷ்போர்டின் ஒர் அங்கமாகிவிடும். கூடவே வயர்லெஸ் இணைப்பு வசதியும் இருப்பதால் இணையத்தோடு அதை இணைத்துவிடலாம்.இதை Carputer கார்பியூட்டர் என்கின்றார்கள்.இக்னீசியன் கொடுக்கும் போதே அது பூட்டாக தொடங்கிவிடுமாம். டச் ஸ்கிரீனுடன் மொத்த கணிணிவசதியோடு கூடவே ஆடியோ,வீடியோ,ஜிபிஎஸ்,காரை சோதிக்கும் மென்பொருள்கள்,சேட்டலைட் ரேடியோ இன்னும் பிற ஜிகினாக்களோடு இது வருவதால் பார்க்க நன்றாயிருக்கின்றது.
சீக்கிரத்தில் இதுவும் Builtin ஆக வாகனங்களில் வரலாம்.வந்திருக்கலாம்.
கூடவே நாம் தினமும் செய்யும் சில கணிணி சார் செயல்களை மின்னஞ்சல் பார்த்தல்,காலெண்டர் பார்த்தல்,சிஎன்என் போகுதல் போன்றவற்றை
ஸ்டடி செய்து அதை தானாகவே தினமும் செய்யும் மென்பொருள் ஒன்று இருந்தால் நன்றாயிருக்கும்.அவாள் எல்லா மவுஸ் நகர்தலையும்,கிளிக்குகளையும் செய்ய நாம் திரையை பார்த்து கொண்டே இருக்கலாமே. அப்படியே கூகிள் மெயில் போவென குரலால் கட்டளை கொடுத்தால் அது தானாவே கூகிள் மெயில் போய் மெயில் செக்பண்ணிணால் Carcomputing-க்கு இன்னும் சவுகரியம்.
எது வேண்டுமானாலும் நடக்கலாம் இவ்வுலகில்.
More Product Information
http://www.gnetcanada.com/vehiclepc-carpc-overview.asp
Wednesday, August 15, 2007
மனிதனிலிருந்து மின்சாரம்
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியாய் மனிதனையே கடித்த கதையாய் என்பார்கள்.மின்சார உற்பத்தி துறையில் அது சீக்கிரத்தில் நடந்தாலும் நடந்துவிடலாம் போல் இருக்கின்றது. இதுவரை எண்ணெயிலிருந்து, நிலக்கரியிலிருந்து, வேகமாய் விழும் தண்ணீரிலிருந்து,வீசும் காற்றிலிருந்து,கடல் அலைகளிலிருந்து தான் மின்சாரம் எடுத்தார்கள். இனி பாண்டிபஜாரில் வேகமாய் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருக்கும் பாதசாரிகளின் சிறு சிறு நடைஅதிர்வுகளிலிருந்தெல்லாம் மின்சாரம் தயாரிக்கப்படலாமாம் .இதை Crowd Farming System என்கின்றார்கள்.இதை MIT மாணவர்களான James Graham-ம் Thaddeus Jusczyk-ம் நிரூபித்திருக்கின்றார்கள்.இவர்கள் வடிவமைத்துள்ள ஒரு நாற்காலியில் யாராவது உற்கார்ந்தால் ஒரு சிறு மின்விளக்கு எரியுமாம். மேலும் இதை ஏற்கனவே காங்காங்கிலுள்ள ஒரு உடற்பயிற்சி நிலையகாரர்களும் நிரூபித்திருக்கின்றார்கள். சைக்ளிங் செய்யும் ஒவ்வொருவரும் அந்த உடற்பயிற்சி நிலையம் ஒளிர அங்குள்ள பாட்டரியை சார்ஜ் செய்கின்றார்களாம்."Powered by YOU" என்று வேறு பெருமையாய் சொல்லிக்கொள்கின்றார்கள்.
குளிர்ச்சியாய் பீர் ஊற்றிக்கொண்டு மகிழ்ச்சியாய் இளசுகள் பப்புகளில் ஆடிக்கொண்டிருக்க அவர்கள் எப்படி தங்களை அறியாமலே மின்சாரம் தயாரிக்க உதவுகிறார்களென வீடியோவை ஓட்டிப் பாருங்கள். எதிர்காலத்தில் இந்நுட்பம் என்னென்ன பரிமாணங்களெல்லாம் எடுக்கப்போகின்றனவோ?
கடவுளுக்கு தான் தெரியும்.அதென்ன ரோடுகளில் இடைவிடாமல் விர்விர்ரென ஓடும் கார்களின் அதிர்வகளை மட்டும் விட்டு வைத்திருக்கின்றார்கள்.
Monday, August 13, 2007
நவீன மகா யுத்தம்
டமால் டுமீலென குண்டுகளை வீசி போர் செய்த காலம் அக்காலம். இன்று நாடுகளெல்லாம் நாகரீகமாய் போர் செய்ய கற்று வருகின்றன.அதில் பண விளையாட்டே ஆயுதம். உலகின் நான்காவது பெரிய எண்ணெய் வள நாடு ஈரான். அங்கு பெட்ரோல் நிலையங்களில் மணிக்கணக்கில் வரிசையில் நின்று பெட்ரோல் போட வேண்டிய அவலம். எல்லாம் பொருளாதார திட்டமிடல் சரியில்லையாம்.
ஜிம்பாவே எனப்படும் அந்த கிரிக்கெட் புகழ் நாட்டில் பயங்கர குழப்பம்.இன்று பத்தாயிரம் ஜிம்பாவே பணங்கள் கொண்டு போனால் தான் ஒரு ரொட்டி துண்டு வாங்க முடியுமாம்.இத்தனை அவலங்களுக்கும் காரணம் பொருளாதாரம் அல்லது எக்கனாமிக் கணக்குகளோடு தவறாய் அந்த அரசு விளையாடிய விளையாட்டு தான் காரணம் என்கின்றார்கள்.
சிறிதாய் செய்யப்படும் மாற்றங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் பெரிய தாக்கங்களை முன்னேற்ற பாதையிலோ அல்லது அழிவுப்பாதையிலோ நடத்தி விடுகின்றது. அது பெரிய அணுவாயுதப்போரோடும் கொடுமை என்கின்றார்கள்.
இவ்வரிசையில் புதிது இன்றைய சீனா-அமெரிக்க வர்த்தப் போர். இந்தியா போலல்லாது சீனா தன் பண மதிப்பை மாற்றாது அப்படியே நெடுங்காலமாய் வைத்து டாலர் அட்வாண்டேஜை பெற்றுவருகின்றது.(இந்திய ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருவது அனைவருக்கும் தெரிந்ததே) இப்படியே undervalued-ஆக இருக்கும் சைனாவின் பணமதிப்பை மாற்ற அமெரிக்காவின் நிர்ப்பந்தம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகின்றது. சீனர்களுக்கோ இதில் சிறிதும் விருப்பமில்லை. ரொம்ப மிரட்டினால் தங்களிடமுள்ள $1.3 trillion அமெரிக்க டாலர் இருப்பை விற்று விடப்போவதாக மறைமுக மிரட்டல். அப்படியானால் அமெரிக்க எக்கனாமி மிகப்பெரிய கிராஷ்க்குள்ளாகும் என நம்பப்படுகின்றது. ஆனால் அப்படி ஒர் நிலைவந்தால் அது சீனாவையும் இந்தியாவையும் back fire-ம் செய்யும். ஆக கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. மாறி மாறி அடித்து பழிதீர்த்து கொண்டால் அனைவருக்கும் இன்னல்தான்.